தோப்பி < தோய்ப்பி (தோய்ப்பு-தல் :: நொதிக்கச் செய்தல்)
----------------------------------------
தோப்பி - சொல்வரலாறு
--------------------
On Wednesday, January 20, 2016 at 9:10:58 PM UTC-8, Neander Selvan wrote:
> மாடுகளுக்கு அரிசி ஒயினான சேக்கில் மசாஜ் செய்கிறர்கள். இப்படி செய்வதால் இரைச்சி மிருதுவாக இருக்குமாம்
சாக்கே என்னும் அரிசி பீர் (beer) -
https://www.youtube.com/watch?v=rf1AU2XWiyIhttps://en.wikipedia.org/wiki/Sakeசாக்கே பீரை பல அழகான மட்கலயங்களில் சூடு செய்து பரிமாறுகின்றனர்.
சூடாக அரிசிக்கள்ளை தமிழரும் குடித்ததற்கான குறிப்புகள் உள்ளன.
பலவகையான சாராயம் காய்ச்சப்பட்டாலும், சூடாகக் குடிப்பதை “அடுநறா” என்றார்கள் போலும்.
மடுத்தல் > அடுத்தல் (cf. மலர் > அலர்). அடுநறா = தீமடுத்து (சூட்டில் சமைத்து) அருந்தும் நறவு (கள்வகை).
ஜப்பானின் ஸாக்கே போன்ற அடுநறா (ஊறுகாய் போலும் ஓர் வினைத்தொகை) திருவள்ளுவரும்
குறிப்பிடுகிறார்.
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
------------------------------------------------------------
அரிசிக்கள்ளுக்கு “தோப்பி” என்பது சங்க இலக்கியப் பெயர். தோய்ப்பது என்னும் fermentation குறித்த
சொல்லைத் தரும் சொல்: தோய்ப்பி > தோப்பி. மது அருந்தினால் மூளை இருளும்.
எனவே, மைப்பு = மய்ப்பு = மப்பு. மப்பும்,மந்தாரமும். மப்பு, தோப்பி, ... - இவற்றில் ய் மெய் ஒளிந்துள்ளது.
தோப்பி = தோய்ப்பி. தோய்குதல் என்னும் வினையை தோய்தயிர், தோசை போன்றவர்றிலும் காணலாம்.
தோய்கு = தோகு > தகி (dahi vaDaa என இந்தியில் தயிர்). தோப்பி இன்றும் தயாரிக்கப்படுகிறது.
முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளில் கலசங்களில் தென்னம்பாளை செருகி, அரிக்கள்ளான தோப்பி
ஊர்வலங்களில் படையல்கள் செல்கின்றன.
ஃபெர்மெண்ட்டேஷனுக்கான தோய்தல் உள்ள சொல் தோய்ப்பி. தோப்பி என சங்க இலக்கியத்திலும், இன்றும்
வழங்கும் சொல். இந்திய உணவறிஞர் அச்சய்யா எழுதாத செய்தியிது:
https://groups.google.com/forum/#!msg/mintamil/x8hNCc7sndo/wKxh3kwIDQAJநா. கணேசன்