தமிழின் திரிபே வடமொழி
முனைவர் கி. லோகநாதன் 17-3-13
அன்பர்களே
என்று சுமேருத் தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து நலமே முடிந்த வரையில் கற்று அது தொல்தமிழே, கடைச் சங்கத் தமிழ் போன்ற தமிழ் மொழி அதிலிருந்து கூர்ந்து வளர்ந்த ஒன்றே என்று அறிய வந்தேனோ அப்பொழுதே செங்கிருதமாகிய வடமொழியும் அந்த மொழியின் ஓர் திரிபே என்று நினைக்கத் தோன்றிற்று. சுமேரு இலக்கியத்தில் மிகப் பரவலாக இன்று வடமொழியில் பயினும் பல சொற்களும் இலக்கணக் கூறுகளும் காணக்கிடக்க இத்தகைய ஓர் உணர்வு தோன்றிற்று. பிற்காலத்தில் இந்த உள்ளுணர்வு தக்க ஆய்வு மூலம் உறுதி செய்ய வடமொழியை ஓரளவு கற்று இருக்குவேதம் ஆங்கில மொழிபெயர்ப்பு போன்ற நூற்களின் உதவியோடு இந்த ஆய்வினையும் மேற்கொண்டு சுமேரு மொழியாகிய தொல்தமிழின் ஓர் பண்டையத் திரிபே வடமொழி என்று நிறுத்தி பல கட்டுரைகளை வரைந்துள்ளேன், அவற்றில் சில மரபு விக்கியில் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான கட்டுரைகளை கீழே வரும் வலைபக்கத்தில் அன்பர்கள் காணலாம்
https://sites.google.com/site/vedictamil/
இங்கு இந்த ஆய்வினை தமிழ் மொழியில் தந்து தமிழ் அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்,
முதலில் இருக்கு வேதத்தின் முதல் சில சுலோகங்களிலிருந்து தொடங்குவோம்,
குறிப்பு:
I shall now take up for an intensive study the First Hymn of Rig Veda and for this I rely on the English translation by Svami Satya Prakash Sarasvati and Satyakam Vidyalankar and published by Veda Pratishthana , New Delhi, 1977. My rendering of the verses just using the ordinary fonts will not be very accurate and hence those who wish to have a more accurate transcription are advised to consult the original which is given both in Devanagri Script as well as English . The authors have the meanings along with semantic and other considerations in the notes where the opinions of Sayana (say) , Dayananda ( day), Arobindo (aro) and so forth are also given. These notes have been very useful but I shall also give my own by tracing the words and their meanings to their Sumerian and tamil occurrences .
Hymn 1:1
Agnim iile purohitam yajjnasya devam ritvijam / hotaram ratnadhaatamam
We worship the adorable God, the high priest of cosmic activities, the divine , the one who works through the eternal laws, and who feeds and sustains all that is divine and luminous.
அக்நிம் ஈலே புரோஹிதம் யாஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜம்/ ஹோதாரம் ரத்னதாதமம்
(வட எழுத்துக்கள் முற்றிலும் தமிழில் இயலாத நிலையில் தமிழில் தந்துள்ளது பல குறைபாடுகள் உள்ள ஓர் எழுத்துப் பெயர்ப்பே. இந்த குறைகளை மனதில் கொண்டே இந்த ஆய்வு செல்கின்றது)
தரப்பட்டுள்ள பொருள்கள்
agnim: the foremost leader, makes everything part of himself, drying agent; (Day) : Supreme Lord who is venerable adorable , is available everywhere etc. Also master of tejas, brilliance etc.; (aro) fiery light , mystic fire; God-will
iile : to worship, to adore, to love, to embrace, to praise , and even to desire and yearn for
சுமேருத் தமிழில் வரும் ஒத்த சொற்கள்
உக்நிம்: போர் வீரர்கள் (கொல்பவர்கள், அழிப்பவர்கள்)
தமிழ்: உக்கு, அக்கு: கொல்தல் அழித்தல். உக்ரம்: கொடூரம்
Sirbiyam
99. sir-ku-ga-ke-es i-ug-ge-de-es ( At( the sound of ) my sacred song they are ready to die
* Ta. ciir kokakee-isu ii ukkidu-isu ( ")
சீர் கோகக்கேயிசு ஈ உக்கிடுயிசு
46. ugnim-bi ni-bi-a ma-ra- ab-si-il-e ( It disbands its regiments before you of its own accord)
* Ta. ukkunam-bi niibiya maa(nRa) ab cillee ( The band of warriors disband themselves on your behave on their own accord)
உக்நிம்பி நீபிய மா(ன்)ற அவ் சில்லே
Sk iilee தமிழ்: எல், எல்லு
‘எல்லே இலக்கம்’ என்பார் தொல்காப்பியர். இச்சொல் அக்ககாடிய மொழியில் ‘எல்லு”(ellu) என்றும் சுமேரிய ‘கோ’ (<சூ) என்ற சொல்லிற்கு ஈடாக கொடுக்கப்படும் ஓர் சொல்லாகும். ஆனால் இதுவும் சுமேரிய ‘எரி, ரி” (நெருப்பு) என்ற சொல்லின் திரிபு என்றேத் தெரிகின்றது. காண்க
சூருப்பாக்கின் நெறி(நரி) (கி.மு 3000)
1. [u]ri-a u sud-ra
ri-a ( In those distant days, in those far remote days)
ஊ எரிய ஊ சூத்திர எரிய
uu eriya uu cuuttira eriya
இங்கு ரி> எரி என்றாகி பின் ‘எல்லு’ என்றாகி இருக்க வேண்டும். இங்கு ‘சூத்திர’ என்பது ‘தொலைவு’ ‘தூரம்’ என்றெல்லாம் பொருள் படும். ‘தொல்’ என்றும் பொருந்தி வரும்.
ஆக சுமேருவின் ‘உக்நிம் எல்லே” அதாவது கொல்கின்ற அக்குகின்ற நெருப்பு என்ற பொருள் உடையதாக விளங்க அதன் திரிபே ‘அக்நிம் ஈலே” என்று தெரிகின்றது. பிற்காலத்தில் ‘எல்லு’ மறைய ‘அக்நிம்’ என்ற சொல்லே அக்நி என்றாகி தமிழில் அங்கி என்றும் ஆகி இருக்கலாம்.
தொடரும்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்பரேஉக்நிம் (ugnim) என்பதே மூலம். இது தமிழ் உக்கு, அக்கு என்பன போன்ற சொற்களோடு தொடர்புபுடைய தொல்தமிழ் அதாவது சுமேருத் தமிழ் சொல் ஆகும். ஆக மூலம் தொல்தமிழ் எனும் தமிழ் தானே!உலகன்
யுகாநின்ற மேனியும் (திருநூற். 45). 6. To fall down, fig. to die; சாதல். உக்கார் தலைபிடித்து (தேவா. 641, 4). 7. To melt, pine, languish, wither; கரைந்து தேய் தல். உக்கு விடுமென் னுயிர் (கலித். 138). 8. To set, as heavenly bodies; அஸ்தமித்தல். உத யக்குன்றி னின்றுகு குன்றில் (கம்பரா. இராவணன்றா. 39). 9. To
சுமேரிய 'உக்நிம்' 'உக்கு'(கொல்லல் சாதல்) என்பவற்றோடு இது ஒத்thu வருகிண்றது என்றே நினைக்கின்றேன்
உலகன்
--
purohitam
அடுத்து ‘purohitam’ என்ற சொல்லின் தொல்தமிழ் வடிவைக் காண்போம். இங்கு தமிழின் ‘புரோசு; அப்பர் பெருமானின் புரோதயம் (அப்பர்: நாம் யார்க்கும் குடி அல்லோம் எனும் பதிகத்தில் “நீராண்ட புரோதயம் ஆடப் பெற்றோம்’ என்று வருகின்றது). இங்கு புர்-உதயம் எனும் போது ‘புர்’ எனும் சொல் அதிகாலை அல்லது பண்டு என்றெல்லாம் பொருள் தரும் . பூர்-வீகம்’ என்பது இதனின்று வந்த ஓர் சொல்லாக இருக்கலாம். ‘புர்-ஆணம்’ ‘புர்-ஆதனம் என்ற சொற்களிலும் இச்சொல் பயில்வதாகத் தெரிகின்றது
அடுத்து ‘புர்’ என்றால் ‘புரம், புரி என்பன போன்ற சொற்களின் மூலம் எனக் கொண்டு ஓர் இடம் என்றும் ஊர் என்றும் கொள்ளலாம். சுமேருத் தமிழில் இவ்வாறு pur, par என்ற சொல் வருகின்றது. சுமேருவின் gi-par என்ற சொல் mi-par என்றும் வாசிக்கப்பட்டு ஓர் கோயிலின் கரு-அறையைச் சுட்டும் gi=mi என்றாகும் தமிழ் மை: கரி என்றுதான் பொருள் படும் ஆக purohitam என்ற சொல்லை pur-uu-ki-dam’ என்று எடுத்துக் கொண்டால் பூர்வத்தில்(pur) இருளைக் கடியும் ஒளியை(uu) உலகெங்கும்( Su ki, ku: place, world land etc) தந்துள்ளது ( dam, tam? Su tar , Ta. taa?)
ஆக இங்கு ‘அக்நிம் எல்லே” எனும் கடுமையான ஒளி, ஞாலத்தில் தொல் இருளை ஒளி பாய்ச்சிக் கடிகின்றது என்று ‘அக்நிம் எல்லே புரோஹிதம்’ என்ற தொடரின் பொருளை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
Su. u (uu. O?) : radiant light
காண்க (ஈnaன்னை சீர்பியம்)
1. nin-me-sar-ra
u-dalla-e-a
Lady of all the me's resplendent light
நின் மெய் சர்வ உள் தெள்ளிய
சில சுமேரு அறிஞர்கள் ‘u’ என்று வாசிக்கப்படுவதை ‘ஒ’ என்றும் வாசிக்கலாம் என்கின்றனர். தமிழில் ஊ . உள் > ஒள்> ஒளி என்றாகியுள்ளது என்று தெரிகின்றது. உகாரம் எனும் அக்கரம் ஒளியைக் குறிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இங்கு ‘உள்’ என்பது ‘உண்-மை; என்றுமாகி எது ஒளியாகி வெளிப்பட்டு நிற்கின்றது அதுவே ‘உண்மை’ என்று ‘உள், உண்’ ஆகிய சொற்களின் வேர்ப்பொருளைத் தருகின்றது.
இன்னொர் இடத்தில் Su u (ul, ul-li) தமிழின் ‘ஊழ், ஊழி’ என்றும் ஆகும் காண்க
சூருப்பாக்கின் நெறி(நரி)
மேலே காட்டபட்டது மீண்டும்
1. [u]ri-a u sud-ra
ri-a ( In those distant days, in those far remote days)
ஊ எரிய ஊ சூத்திர எரிய
uu eriya uu cuuttira eriya
இங்கு ‘u’ ‘ஊழி’ என்று வருவதைக் காண்க. இந்த சுமேரிய ‘ஊழி எரி” அல்லது ஊழித் தீயே இருக்கு வேதத்தில் ‘அக்நிம் எல்லே’ யாக சொல் அளவில் மருவி வந்திருப்பதாகத் தெரிகின்றது.
புரோகிதர் யார்? மூலப் பொருள் என்ன?
இறைவன் பண்டே உலகெல்லாம் பரவி இருந்த துன்னிருளை தனது ஒளி வடிவ சிவ வடிவில் வெளிப்பட்டுத் தோன்றி கடுந்திறலின் ஒளி பாய்ச்சி இருளைக் கடிந்து உலகு தோன்றி நிற்க அருள் புரிந்தான் என்பது சூருப்பாக்கின் நெறி நமக்குக் காட்டு பிரபஞ்சவியல். திருமுருகாற்றுப்படையிலும் இன்னும் பல செங்கிருத தமிழ் இலக்கியங்களிலும் வரும் கருத்தாகும். இதனை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கோயிலில் தீப ஆராதனை செய்து காட்டுகின்றவரே புரோசு, புரோகிதர் என்படுவோர் என்று நினைக்கின்றேன்
மேலும் ஊழி எரியாகிய ஊழித் தீயை நினைவு படுத்தும் வகையில் வேள்விதீ வளர்ப்பார் எரி ஒம்புவார் என்றும் பொருள் படும் என்று நினைக்கின்றேன
தொடரும்
--
அதேபோல் சாதம் என்னும் சொல்லில் த என்னும் எழுத்து dha என்று தான் உச்சரிக்கப்படுகிறதுவேகம் என்னும் சொல்லில் க என்னும் எழுத்து ga என்றுதான் உச்சரிக்கப்படுகிறதுஅன்றாடம் நாம் உபயோகிக்கும் பல சொற்களில் ஸ்மஸ்கிருதம் கலக்காத சொற்களே மிகவும் குறைவுசங்(க)ம், அங்(க)ம் வ(கி)க்கிறதுவரு(கி)றேன்தண்ணீர் கு(டி)ப்பது போன்ற எழுத்துக்கள் எல்லாமே சமஸ்கிருத உச்சரிப்பே
அன்பரே
இதேக் கேள்வியைய்த்தான் நான் பல தமிழ் அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டு
இருக்கின்றேன் 'கஷ்டம்; 'நஷ்டம்' 'துஷ்டன்' என்றெல்லாம் வழக்கில்
சொல்கின்றோம், சுமேருத் தமிழில் 'நிஷபா' என்ற சொல் 'நிடபா' என்றும்
எழுதப்படுகின்றது., 'ஷ்' எனும் எழுத்டு 'ட்' ஆகின்றது
இதனால் தான் என் கேள்வி: தமிழின் எழுத்துக்கள்தாம் யாவை? தொல்காப்பியர்
தானே இந்த எழுத்துக்கள 'வட எழுதது' என்று சொல்லி அவற்றை விலக்க வேண்டும்
என்றார்? அதற்கு முன்பு?
தமிழ் அறிஞர்கள் தான் தக்க விளக்கம் தர்வேண்டும்
அன்பரே
நியாயந்தான். ஆனால் கூர்தல் முறையில் வளர்தல் என்றும் இருக்கின்றது.
இப்பொழுது நமக்குக் கிடைக்கின்ற சுமேருத் தமிழ் இலக்கியங்கள் கி.மு
2000க்கு முற்பட்டவை. ஆக இப்போதுள்ள வளர்ச்சியை அங்கு எத்ர்பார்ப்பது
நியாயமாகுமா?
அங்கு குழந்தைப் பருவ நிலை. இப்போது 5000 ஆண்டுகளைக் கடந்த முதிய நிலை.
இந்த முதிய நிலையில் உள்ள வளர்ச்சி நிலையை குழந்தை பருவ நிலையில்
எதிர்ப்பார்க்க முடியுமா? நியாயமா?
அன்பரே இதனை நான் ஓரளவு செய்துள்ளேன், உயிர் எழுத்துக்களைப் பற்றிய ஓர்
ஆய்வில் இருந்து ஓர் சிறிய பகுதி கீழே , முழு கட்டுரை மரபு விக்கியில்:
Sumerian; Tamil of the First Sangkam என்பதைப் பாருங்கள். இன்னும் பல
உள்ளன, பிறகு காட்டுகிnReen,
அன்பின் கண்ணன்
கண்களில் ஆநந்த கண்ணீர் மல்கத்தான் தங்கள் மடலை வாசித்தேன். அதில் வரும்
புரிந்துணர்வு அப்படி என்னைத் தாக்கி விட்டது, தமிழனின் சுயச் சிந்தனை
எங்கே போய்விட்டது என்று நேற்றும் என் நண்பர் ஒருவரிடம் மன்ம் நொந்து
பேசிக்கொண்டிருந்தேன்.
ஏறக்குறைய முப்பது ஆண்டு கால போராட்டம் இது. இதுவரை
வெள்ளையர்களிடமிருந்து வடநாட்டினர்களிடமிருந்து இன்னும் பல
தமிழர்களிடமிருந்தும் ஏளனம் எதிர்ப்பு என்று சந்தித்தவாறே இருந்த எனக்கு
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.--
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இனி அடுத்ததாக இச் சுலோகத்தின் கடைசிச் சொல்:
ratnadhaatamam
எனும் சொல்லாகும். முதலில் நாம் கவனிக்க வேண்டியது இது பல சொற்களை ஒட்டி ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள ஓர் தொகைச் சொல்லாகும். இதுபோன்ற சொல்லாக்கங்கள் தமிழ் மற்றும் ஏனைய திராவிட மொழிகட்கு மற்றும் பொதுவாக ஒட்டுமொழி குடும்பதிற்கு (agglutinative languages) உரிய ஓர் சொல்லாக்க முறையாகும். வடமொழியில் இது வெகுவாக இருக்கின்றது. தமிழில் இருப்பதைப் போலவே வடமொழியிலும் இத்தகைய தொகைச் சொற்கள் உண்டென்பர் ‘பிரயோக விவேகம் (17ஆம் நூற்றாண்டு) எழுதிய சுப்ரமணிய தீட்சிதர் போன்றோர்.
இந்த சொல்லை நாம் ‘ரத்தினம்+தாது+தமம்’ என்று எடுத்துக்கொண்டு இம்மூன்று சொற்களின் ஒட்டே இந்த தொகைச் சொல் என்று எடுத்துக்கொள்ளலாம் இந்த வேர்கள் மூன்றும் சுமேருத் தமிழே யாகும்.
‘ரத்தினம்” என்பது ri-a> ra : சுடர்வது என்ற கருத்தில் ‘ஒளி பிரகாசப் பொருள்’ என்று பொருள் படும். ‘தாது’ என்பது சுமேரு ‘தார்-அ( tar-ra) என்பதில் இருக்கும் ‘தா’ தான் என்று நினைக்கின்றேன் இந்த வேரிலிருந்து ‘தருவது” என்ற கருத்தில் வரும் சொல்லாக எடுத்துக்கொள்ளலாம். ‘tamam’(தமம்) என்பதை ‘தர்மம்’ என்ற சொல் இடைகுறைந்து விளங்கும் ஓர் சொல் என்றும் எடுத்துக்கொள்ளலாம்
இச்சொல்லில் ‘அக்நிம் எல்லே’ செய்யும் பிறிதோர் உபகாரத்தை போற்றுவதாக அமைகின்றது. இந்த இருளைக் கிழித்து தொல்லிருளை விரட்டும் அக்நி எல்லு, இரத்தினம் போன்ற ஒளிப் பிரகாச வைர, வைடூரியம் போன்ற ஒளிக் கற்களை உபகரிக்கும் பொருளுமாகும் என்று இங்கு பகரப்படுகின்றது.
இனி இச்சுலோகத்த்தின் தொல்தமிழ் மூலத்தை இவ்வாறு தொகுத்துக் காணலாம்
Hymn 1:1
Agnim iile purohitam yajjnasya devam ritvijam / hotaram ratnadhaatamam
We worship the adorable God, the high priest of cosmic activities, the divine , the one who works through the eternal laws, and who feeds and sustains all that is divine and luminous.
அக்நிம் ஈலே புரோஹிதம் யாஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜம்/ ஹோதாரம் ரத்னதாதமம்
சுமேருத் தமிழ் மூலம்:
உக்நிம் எல்லே புர்-ஊ-கி-தம் எஜென்அஸ்-ய தேவர் (எ)ரித்துபீஜியம்/ ஊதாரம் ரத்தின தாது தர்மம்
இதன் பொருள்
அழிக்கும் கடுந்திறல் உக்னிம் எல்லு எனும் ஊழித் தீ, தொல்லிருளை கிழித்து ஒளி பரப்புவதோடு, யாகத்தீயில் வெளிப்படும் தெய்வமாகவும், உலகில் நெருப்பு தோன்றுதற்கு மூலமாகவும், உணவு தரும் செடிகட்கு ஆதாரமாகவும் மேலும் இரத்தினம் போன்ற அரிய கற்களைத் தருவதாகவும் விளங்குகின்றது.
இங்கு நாம் இரண்டையும் ஆராயும்போது, சில அடிப்படை உண்மைகள் தெளிவாகின்றன,
1.
இந்த சுலோகத்தின் ஒவ்வொறு சொல்லும் சுமேருத் தமிழ் வேர்களைக் கொண்டதாகவே இருக்கின்றது. இந்த தொல்தமிழ் வேர்கள் இல்லையென்றால், இந்த இருக்கு வேத சுலோகமே இல்லை, இது இன்னும் பல சுலோகங்கட்கும் பொருந்தும் என்பதால், தமிழின் வேரின்றி வடமொழி இயங்காது என்றும் தெரிகின்றது
2.
இனி இச்சுலோகத்தின் பொருளை நோக்க, தொல்தமிழ் மூலத்தை நாம் கொண்டு வந்த முறையில் சில பிழைகள் இருந்தாலும், பொருள் கொள்ளல் ஓர் ஊகிப்புத் தன்மையில் பெறப்படுவதல்ல. வேர்ச் சொற்களை அடையாளங் கண்டு அதன் வழி உண்மையான பொருள் விளக்கம் தரப்படுகின்றது.
3.
இந்த சுலோகம் இவ்வாறு சுமேருத் தமிழ் மூலத்தைக் கண்டு பொருள் காணும்போது, அற்புதமான அறிவியல் கருத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதையும் காணலாம்.
இவ்வாறே இன்னும் பல சுலோகங்களையும் காணவிருக்கின்றோம்
உலகன்
இனி இதேப் பதிகத்தில் அடுத்ததாக வரும் சுலோகம் கீழ்வருமாறு:
Hymn 1:1.2
I shall now consider the second sloka in the first hymn that contains words that show that Sanskrit is later because less archaic than SumeroTamil.
agnih puurvebhir rishibhir idyo nuutanair uta/ sa devam eha vakshati
May the adorable God, eternally adorned by the seers of times, past and present, be a source of inspiration to wise men of all ages.
இங்கு சுலோகத்தின் பொருள் சொல்லுக்குச் சொல் ஒத்துவருமாறு இல்லை என்பதொடு ஓர் ஊகமாகவே இருகின்றது. ஆக சொற்களைத் தனித் தனியாக ஆய்ந்து மூலப் பொருளைத் தெளியவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றோம்
இங்கு மேலே முதல் சுலோகத்தில் வந்துவிட்ட ‘agnih’ ‘devam’ ‘pur’ போன்ற சொற்களை விட்டு விடுவோம்.
முதலில் நாம் ஆயவிருப்பது ஓர் இலக்கணக் கூறு- உயர்திணைப் பண்மைச் சுட்டும் பெயர்சொற்களுக்கு ஈற்றில் ஓர் பின்னொட்டாக வரும் ‘bhir’ ‘nair’ போன்ற உருபுகளை ஆராய்வோம்
இங்கு ‘bhir’ என்பது இப்பொழுது தமிழில் விளங்கும் ‘பேர்’ என்ற சொல்தான்.’மூன்றுபேர், நான்குபேர்’ என்றெல்லாம் இன்று இச்சொல் வழங்குகின்றது. உள்ளபடியே இதன் மூலம் சுமேருத் தமிழ் ‘ba-e-re’ என்றும் தெரிகின்றது. காண்க
Sir
21. ni-me-lam u-lu-da nam-lu-u-lu ( When mankind comes before you)
22. ni-me -gar-hus-bi u-mu-re-gin (In fear and trembling at (your ) tempestuous radiance)
23. me-ta me-hus-bi su ba-e-re-ti (They receive from you their just deserts)
* Ta. nii meLLam vizuta uLuuLunam
நீ மெள்ளம் உலகிட நம்.உளு.உளு
* Ta. nooy mey kaal ush(Na)bi uu maar kan(al)
நோய் மெய் கால் உஷ்(ண)பி ஊ மார். ஏகின்
· Ta. meyttu mey ush(Na)bi cuur ba-yiree ti(ti)
மெய்த்து மெய் உஷ்(ண)பி சூர் பாயிரே தி(தி)
இங்கு ‘ba-e-re’ என்பது , ‘ba’ ‘e-re’ என்ற இரண்டு சொற்களின் ஒட்டாகும். இங்கு ‘ப, பா’ என்பது உயர்திணை சுட்டுபோல் தெரிகின்றது. தொல்காப்பிய காலத்தில் ‘ப’ எனும் தனிச் சொல்லே ‘ உயர்திணைப் பன்மை’ காட்டும் விகுதியாக வழங்குகின்றது. ‘என்ப’ ‘சொல்ப’ என்றெல்லாம் வினைச் சொற்கள் பயில்வதைக் காண்க
e-re> இரே, ஈரே என்பது ‘பலர்’ என்ற கருத்தின் பன்மைச் சுட்டு. இது சுமேருத் தமிழின் ‘e-ne> இனம் என்ற சொல்லின் ஓர் திர்பு ஆகும். (e-ne> இன(ம்) என்பது குலம் குழு என்பன போன்ற சொற்களில் ஒன்று, ஓர் மக்கள் தொகுதியைக் குறிப்பது. இப்பொழுது இது ‘ஆர், அர் ஓர்’ என்றெல்லாம் திரிந்து திகழ்கின்றது
e-ne > இனம்
இச்சொல் வெகுவாகப் பயிலும் ஓர் சொல்லாகும். காட்டாக இங்கு ஓர் கிளவி
Sulgi Hymn B
141. inim-dingir-re-e-ne nig kal-kal-la-am The word (will) of the gods is then most precious ...
எனெம் திங்கிர்-இனே நிக கல்கல்.ஆம் (“)
இங்கு ‘இனே’ என்ற சொல் இனம் என்ற பொருளில் தெய்வங்களின் பன்மையைச் சுட்டி நிற்பதைக் காண்க. இந்த ‘இனே’ தான் திரிந்து ‘இரே’ ஆகி பின் இப்பொழுது பயிலும் உயர்திணைப் பன்மை சுட்டும் உருபாக ‘அர், ஆர்’ என்றெல்லாம் ஆகி இருக்கின்றது போலும்.
ஆக ba-e-ne என்ற சொல்லே சுமேருத் தமிழில் ‘ba-e-re’ ஆகி பின் இருக்கு வேத காலத்தில் ‘bhir’ ஆகி பின் தமிழில் இன்னும் திரிந்து ‘பேர்’ ஆகிவிட்டது போலும்
இங்கு ஓர் கால நியதியைக் காண்கின்றோம்
Ba-e-ne> ba-e-re > Sk bhir> Ta peer
இந்த நியதி அல்லது வரலாற்றுப் போக்கு எதைக் காட்டுகின்றது? சுமேருத் தமிழ் இருக்கிருதற்கு வடமொழிக்கு முற்பட்ட ஒன்று என்பதை நலமேக் காட்டுகின்றது என்று நினைக்கின்றேன்
தொடரும்
உலகன்
க
மேலே பல ஆதாரங்களோடு எவ்வாறு சுமேரு ‘ba-e-re’ என்ற பன்மை படர்க்கை உயர்திணை சுட்டுப்பெயர் இருக்கிருதத்தில் bhir என்றும் அதுவே தமிழில் ‘பேர்’ என்றும் திரிந்துள்ளது என்று கண்டோம்.
இது போலவே nuutanair என்பதில் வரும் உயர்திணை பன்மைச் சுட்டாக வரும் ‘nair” என்பதையும் ‘na-e-re> nayir> nair என்று கொள்ளலாம என்றும் நினைக்கின்றேன். பழந்தமிழில் இதுவே ‘நீயிர்’ என்றாக பின் ‘நீர்’ என்று ஆனால முன்னிலைப் பன்மையாக விளங்கி உள்ளது என்றும் நினைக்கின்றேன்.
இங்கு தமிழில் இருக்கும் ஆனால் வடமொழியில் நான் இதுவரைக் காணாத ‘மார்’ எனும் பன்மை உயர்திணை சுட்டையும் இவ்வாறே கண்டுகொள்ளலாம்
மேலே காட்டப்பட்ட கிளவியில் இது வருகின்றது. காண்க
22. ni-me -gar-hus-bi u-mu-re-gin (In fear and trembling at (your ) tempestuous radiance)
இங்கு ‘mu-e-re> mu-re ஆகி பின் கடைச்சங்கத் தமிழில் ‘மார்’ என் கிளவி ஆகியுள்ளது.
Rishi . ரிஷி
சுமேருத் தமிழில் மிகப் பரவலாக விளங்கும் ஓர் சொல் ‘ரி’ என்பது,. இதனைத் தான் ‘எரி’ என்று நாம் கொண்டுள்ளோம். பல சுமேருத் தமிழ் சொற்கள் இவ்வாறு உயிரெழுத்துக்களை முதலாக கொண்டிராதே இருந்து பொருள் மலைவினை உண்டாக்குகின்றன. ‘ri’ எனப்படுவதை எரி என்றும் உரி என்றும் அரி என்றும் நாம் சூழலிற்கு ஏற்ப கொள்ளவேண்டி இருக்கின்றது. மேலே உதாரணங்களைக் காட்டியுள்ளோம்
இங்கு ‘ரி-ஷி’ என்பதை ‘ரி-ஜி; என்று அதாவது ‘எரி-ஜி’ என்ற சொல்லின் திரிபாகக் கொண்டால், எரி ஓம்பி ஞானம் வளர்ப்பாரைக் காட்டும். இவர்களே பிறகாலத்தில் வேதியர்கள் எனப்பட்டனர் போலும்
அடுத்து
idyo nuutanair uta
என்ற தொடரை அலசுவோம்
இதனை ‘ஈடிய நூதநயிர் உதிய : தொடர்ந்து ஓர் நதியைப் போல உதிக்கும் புதியோர்கள்” என்று பொருள் கொள்ளலாம என்று நினைக்கின்றேன்.
இங்கு ‘idyo’ சுமேரிய ‘ii, id” அதாவது ‘ஓடை” என்ற சொல்லோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது, தமிழில் ‘ஈடு’ என்றவோர் சொல்லும் இருக்கின்றது. திருவாய்மொழி போன்ற திவ்விய பிரபங்கக்ட்கு எழுதப் பட்ட நெடிய விரிவான விளக்கங்கள் ‘ஈடு’ என்ப்படுகின்றன. ‘நெடிய, ஓடை போல் ஓடும் உரை; என்பதால் இப்படி இருக்கலாம்
Nuuta> நூத (நூதனம் : புதுமை)
இதன் மூலம் “நுதி: project’ என்றே தெரிகின்றது. இல்லாதிருந்து புதிதாக நுதிக்கப்படுவது நூதனம், புதுமையானது. இதன் சுமேரு தோற்றம் தெற்றெனத் தெரியவில்லை, ஆயினும் ‘உயர்ந்த’ என்ற பொருளில் “ni, nim” என்ற சொற்கள் இருக்கின்றன. இதன் ஓர் திரிபாக ‘நுதி’ தோன்றி இருக்கலாம்
Uta: ஊத(எதிர்காலம்) அல்லது உதிய(தோன்றுதல்)
சுமேரு மொழியில் பல இடங்களில் ‘u’ எனும் சொல் ‘நாள் = உவா என்ற பொருளிலும் ‘காலம்” என்ற பொருளிலும் வந்துள்ளது
136. u-buru-se u kal-kal-la-am ( At the time of harvest, the days are precious)
Ta. uu.pari-see uu kalkallaam ( “)
ஊ பரிசே உவா கல்கல் ஆம்
ஆக ‘idyo nuutanair uta’ என்ற தொடரின் பொருளை “ எதிர்காலத்தில் தொடர்ந்து வரும் புதியவர்கள், நூதனர்” என்று எடுத்துக்கொள்ளலாம்.
தொடரும்
உலகன்
இனி எஞ்சி இருப்பது
sa devam eha vakshati
எனும் கிளவிதான். இதன் பொருள் தெற்றென விளங்கவில்லை,
“sa devam “ என்பது மேலே ஆராயப்படுள்ளது. ‘sa’ என்பது சுமேரு மொழியில் ‘sa, sag’ என்று வந்து ‘ஒருவன், ஒன்று” என்ற கருத்தில் வரும். இங்கு ‘ஒர் தெய்வம்’ என்ற கருத்தில் வருவதாக இருக்கலாம்.
Eha என்பதை ‘e-a” என்று கொண்டு ‘என’ அல்லது ‘ஏய” என்று பொருள் கொள்ளலாம்
‘sa devam eha” என்பதை ‘அந்த தெய்வம் என’ என்று கொண்டு அடுத்துவரும் சொல்லை நாம் ஆய வேண்டும்
Vakshati எனும் சொல்லிற்கு குறிப்புகளில் கூட தெளிவான விளக்கம் இல்லை. இதனால சொற் சூழலை வைத்து நாம் பொருள் காண வேண்டிய நிலையில் இருக்கின்றோம், இதனை ‘ba-ku-si-a-ti” என்று கொண்டால். என்றும் (சி) வாழும்படியாக (ti,til) அருள்பாலிக்க (ba-ku) வேண்டும் என்பதாகக் கொள்ளலாம்.
Ba-ku-si-a-ti> vakshati
ஆக இந்த இரண்டாவது சுலோகத்தின் மூல சுமேருத் தமிழ் வடிவை இவ்வாறு காணலாம்
*Ta. angki-a: puurvee-ba-ere (e)ri-ji-ba-ere iidiyoo nuuta-na-ere uuta/ saa teyvam e-a vaku-si-ati
அங்கிய(அக்நிJ பூர்வேபாயிரே (எ)ரி-ஜி-பாயிரே ஈடியோ நூத-ந-யிரே ஊதா/ சா தெய்வம் என பகு-சீய-தி(ல்)
பொருள்
அக்நியே! தொல்லோர் (பூர்வபாயிரே) இன்றுள்ள எரி ஓம்புவோர்( (எ)ரிஜிபாயிரே) நதிபோன்று தோன்றும் புதியவர்கள் ( ஈடியோ நூதநயிரே) ஆகியோரை அந்த தெய்வமே என நலமே வாழ அருள்பாலிக்க வேண்டும்( சா தெய்வம் என பகு-சீய-தில்)
குறிப்பு
இங்கு படர்க்கை உயர்திணை பன்மை உருபாகிய “பாயிரே’ திரிந்து bhir என்று நிற்பதும் இவ்வாறே ‘na-ere’ திரிந்து ‘நாயிர்+ நீயிர்’ என நிற்பதும் இலக்கணக் கூறுகள் என்பதின், இவை சாதாரன சொற்கள் போல கடன் வாங்கப் பட்டவை அல்ல. இவை இருக்கிருதத்தின் இயல்பாக நிற்கின்றன மேலும் இவை சுமேருத் தமிழின் திரிபே என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்க, இருக்கிருதமாகிய பழைய வடமொழி தொல்தமிழாகிய சுமேருத் தமிழின் திரிபே என்பது உறுதியாகின்றது என்றே நினைக்கின்றேன்
தொடரும்
உலகன்
இடுகை 9
இதுவரை இருக்குவேதத்தில் முதல் பதிகத்தின் முதல் இரண்டு சுலோங்களில் விளங்கும் சொற்களையும் இலக்கணக் கூறுகளையும் ஆய்ந்து அவை சுமேருத் தமிழின் திரிபுகளே என்று விளக்கியுள்ளோம். இனி இம்முயற்சியில் அடுத்ததாக மூன்றாவது சுலோகத்தை ஆய்வுவிற்கு ஆட்படுத்தி அதுவும் எவ்வாறு மூல சுமேருத் தமிழின் திரிபே என்று விளக்குவம் .இந்த சுலோகம் கீழ்வருமாறு
Hymn 1:1-3
agninaa rayim asnavat puusham eva dive-dive/ yasasam viiravattamam
May the inspiration derived from the adorable God be a source of ever increasing affluence, vitality and prosperity
இங்கு முதலில் நம்மை கவர்ந்து இதுவும் ஓர் வகையான பழந்தமிழே என்று உணர்த்துவது ‘தினம் தினம்’ என்னும் இரட்டைக்கிளவின் இன்னொரு வடிவமாகிய ‘திவே திவே” என்பதுதான். ஆனால் மொழி பெயர்ப்பில் இது விடப்பட்டுள்ளது வியப்பாக இருக்கின்றது. எனினும் நம் ஆய்வை தொடங்கி செவ்வே செய்து இதன் மூல வடிவத்தையும் மூலப் பொருளையும் கண்டு பிடிக்க முயல்வோம்
agninaa rayim
முதலில் “agninaa rayim’ எனும் தொடரை எடுத்துக்கொள்வோம். இதன் பொருளை ‘அக்னியுடைய பிரகாசம்’ என்றோ அருள் என்றோ எடுத்துக்கொள்ளலாம்
‘அக்நினா’ என்பதில் வரும் அகர ஈறு சுமேருத் தமிழிற்கும் வடமொழிக்கும் கடைச்சங்கத் தமிழிற்கும் பொதுவாக விளங்கும் ஆறாம் வேற்றுமை உருபாகும். முதல் சுலோகத்தில் வரும் ‘யாஜ்னஸ்ய தேவம்’ என்பதுபோல இங்கும். ‘அஸ்’ என்றும் ‘அத்து’ என்றும் வரும் சாரியைகட்குப் பதிலாக இங்கு ‘அன்’ சாரியை வருவதாகக் கொள்ளலாம். ‘காலன கழல் < கால்-அன்.-அ கழல்’ என்பது போல.
இங்கு அகர ஈற்று வேற்றுமை உருபு கிழமைப் பொருளிலும் இடப்பொருளிலும் வருகின்றது என்று கொள்ளலாம்
‘rayim’ என்பது சுமேரு ‘லா’ விலிருந்து வரும் ‘ரா’ எனும் வேரினை மூலமாக்கொண்டு ‘வருதல்’ என்ற பொருளில் பயில்வதாக இருக்கலாம. சுமேரிய ‘லா’ தமிழில் ‘அலை’ என்றாகி நிற்க தெலுங்கில் ‘ரா’ என்றாகி ‘வருதல்’ கருத்தில் பயில்கின்றது போலும்.
மேலும் இதனை ‘’(எ)ரியும்’ என்பதின் திரிபாகக் கொண்டு அக்நியின் ஒளி விகசிப்பு என்றும் கொள்ளலாம.
asnavat puusham
இனி இத்தொடரில் ‘பூஷம்’ என்பது சுமேரு puu என்றும் தமிழில் ‘பூ’ என்றும் வரும் சொல்தான் என்று தெரிகின்றது, பூப்பது, மலர்வது தோன்றுவது என்றெல்லாம் பொருள்படும் என்று தெரிகின்றது.
‘அஸ்னாவத்’ என்பதில் ‘ஆஸ்’ எனும் சொல் சுமேருவில் ‘as” என்று பயில்கின்றது. As-im-babbar> ஆதிபார்ப்பான்” என்ற சொல் ‘ஆஸ்’ என்பது இப்பொழுது ‘ஆதி’ என்று மருவி இருப்பதாகத் தெரிகின்றது
மேலும் இச்சொல்லை ‘ஆஸ்-னி.அ-ஆபது> ஆஸ்னாவத் ‘ஆதியில் ஆவது என்று பொருள்படுவதாகக்கொண்டு இத்தொடரின் பொருளை ‘ஆதியில் ஆவதாகிய மலர்ச்சி’ என்று அர்த்தப்படுவதாக கொள்ளலாம்
ஆக இரண்டையும் இணைத்து ‘agninaa rayim asnavat puusham’ என்ற கிளவியின் பொருளை ‘அக்நியின் அருள் ஆதியில் மலரும் ஒளி’ என்று கொள்வது பொருந்தும் என்றே நினைக்கின்றேன்
தொடரும்
உலகன்
இடுகை 10 இரட்டைக் கிளவிகள்
Eva : இவ்வே, அவ்வே: இவ்வாறு? அவ்வாறு? அல்லது ஈவே?
இனி அடுத்ததாக ‘eva’ என்ற இடைச்சொல் வருகின்றது. இதனை ஓர் வகையான ஏகாம என்ற கொள்ள இடமில்லை என்றே நினைக்கின்றேனெ. இந்த பிரிநிலை ஏகாரம் தேற்ற ஏகாரம் போன்ற ஏகாராங்கள் சுமேருத் தமிழிற்கும் வடமொழிக்கும் தென்தமிழிற்கும் பொது என்ற போதிலும் இங்கு அவ்வாறு கொள்ள முடியவில்லை. மாறாக சுட்டுச் சொல்லாகிய ‘இவ்வே, அவ்வே’ என்று கொள்வதே சிறப்பு என்று தெரிகின்றது, சுமேருத் தமிழில் இது ‘ib, ib-ba, ab-ba’ என்றெல்லாம் வரும் இடைச் சொற்கலோடு தொடர்புடையதாகக் கொள்ளலாம்
மேலும் இதனை ‘ஈவே” என்று கொண்டு தருதல் கொடுத்தல் என்ற பொருளில் விளங்குகின்றது என்றும் கொள்ளலாம். இது சுமேரு சீ> ஈ என்ற சொல்லோடு தொடர்பு படுத்தவும் செய்யலாம. இச்சொல் ‘ஈன்.அன்னா” (in-anna) என்ற சொல்லிலும் அடங்கி கிடக்கின்றது.
Dive-dive: திவே திவே: தினம் தினம்
இங்கு குழப்பம் யாதுமில்லை, இது சுமேருத் தமிழ் dib-be >dive தான். காண்க
10.
kin-gal kin ki-du u nu-dib-be ( The great . . . the . .
the beautiful place, light enters not)
Ta. kaNkaL kaaNkidu uu naa tiiyppee ( For eyes to see light did not brighten
it.)
கண்கள் காண்கிடு ஊ நா தீப்பே
ஏறக்குறைய சங்கத் தமிழாகவே தோன்றும் இக்கிளவியில் ‘ஊ தீ(ய்)ப்பு” என்பது ஊவாகிய ஒளி தீய்த்தல் அதாவது விகசித்தல் என்ற பொருள் விளங்குவதை காண்க. இது ‘தீ’ என்ற வேரினைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் சொல்லாகத் தெரிகின்றது. தீ-பா: தீயாகிய ஒளியைத் தருவதல் ஆகவே ‘தீபம்’ என்பது போன்று இங்கு ஆனால் ‘தி-னம்’ என்ற கருத்தில் வருவதாகக் கொள்ளலாம்.
‘தீ’ என்ற
சொல்லும் சுமேருத் தமிழில் உண்டு. காண்க:
Sirbiyam
44. ka-gal-a-be de mu-ni-in-dal ( Its grand entrance you have reduced to ashes)
*Ta. kaa kaLLabiyee tii munnin taL ( You have pushed into fire the great entrance gates)
கா கள்ளபே தீ முன்னின் தள்
இக்கிளவி மிகத் தெளிவாக உடன் தமிழ் என்றே புரிந்துகொள்ளும் வகையில் இருப்பதைக் காண்க.
ஆக ‘தீ’ என்ற வேர்ச்சொல்லிலிருந்தும் இரட்டித்தல் எனும் வகையாலும் வடமொழியில் ‘திவே திவே’ வர தென்தமிழில் ‘தினம் தினம்’ எனூம் இரட்டைக் கிளவி உருவாகியுள்ளது.
இவ்வாறான இரட்டைக் கிளவிகள் திராவிட மொழிகளிலேயே காணப்படும் ஓர் கூறு என்றும் நினைக்கின்றேன். சுமேருத் தமிழில் இது பரக்கப் பரக்கக் காணப்படும் ஓர் கூறுமாகும், கீழே சில சான்றுகள்.
Temple Hymn 1.
17. su-su : to cook?
gir ninda ili u-su-su-ja ( Where the oven brings bread, (good) to eat)
Ta. kiir niiNda ilai uy.suur-suurja ( It is also a place where greens with long
leaves are cooked)
கீர்
நீண்ட இலை உசூர்சூர்ஜிய
su-su >
suur-suur : to heat up, cook?
Hymn 2. :
5. te-te-en< te-en-te-en: cool
e-en-lil-la sa-zu te-te-en bar-zu nam-tar-ra ( House of Enlil, your interior is
cool, your back determines destiny)
Ta. il eeNliilla saayju taNtaN puRaju tarunam ( O temple of EnLiil ! Your heart
is cool and your exterior is generous)
இல்
ஏண்லீல்ல சாய்ஜு தண்தண் புறஜு தருநம்.
இந்த te-en> தண் என்ற சொல் சுமேருத் தமிழில் பல இடங்களில் வரும் ஓர் சொல்லாகும். இன்றைய தமிழில் விளங்கும் தண், தணி என்றவாறே அங்கும்.
மேலும் தனித் தனி> தத்தனி என்றாகி நிற்பதுபோல தண்.தண். தத்தண் என்று ஆகி இருப்பதைக் காண்க.. இவ்வாறு இன்னும் பல சொற்கள் இருக்கின்றன
இதுபோன்ற இரட்டைக் கிளவிகள் பலவற்றை கீழ் வரும் வலைப் பக்கத்தில் காணலாம
https://sites.google.com/site/sumerutamiltex/echo-words-in-temple-hymns-1-10
இத்தகைய இரட்டைக் கிளவிகள் வடமொழியிலும் அதிலும் குறிப்பாக இருக்குவேதத்திலும் பல இடங்களில் உண்டு. இக்கூறு தனியாகவும் விரிவாகவும் ஆராயப்பட வேண்டிய ஓர் கூறாகவும் இருக்கின்றது. வடமொழியும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியே என்பதை ஐயம் திரிபற இத்தகைய ஆய்வுகள் நிறுத்தும்
தொடரும்
உலகன்
--
இடுகை 11
இனி இந்த சுலோகத்தில் எஞ்சி இருப்பதாக இரண்டு சொற்கள் தாம் இருக்கின்றன “ yasasam viiravattamam”
இவையும் தமிழ் சொற்களேயாம
Yasasam: ஆசாசம்> ஆயாசம்? : களைப்பு?
இச்சொல் வழக்குத் தமிழில் இன்றும் பயில்கின்ற ஓர் சொல்லாகும் இதன் மூலம் ஆல்.நாசம் அதாவது ஆற்றலில் நாசம் ஆகவே களைப்பு என்றாகி பிறகு இதுவே நகரம் கெட்டு (இது பரவலாக நேரும் ஒன்று) ஆல்.ஆசம் என்றாகி பின் ஆயாசம் என்றாகி இருக்கலாம.
இது தினம் தினம் கடுமையான வெயிலின் தாக்கத்தால் வரும் ஓர் வகையான களைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.
இதனோடு தொடர்புடையதே அடுத்து வரும் சொல் என்று நினைக்கின்றேன்
Viiravattamam : வீர வத்தமம்: வீர வறுத்தம்? வீரவுணர்வு காய வைத்தல்?
Suம் bi-ra> வீரா?
From Kes temple hymn we have
19. ur-sag-bi (d) as-sir-gin rib-ba ama si-in-ga-u-tu ( One great as its hero Assir -- has any mother ever borne him?)
*Ta. oorsaan (d) acuurngin biira ammaa utu-icinka ? ( ")
ஓர்சான் (தெய்) அச்சூர்ங்இன் பீர(>வீர) அம்மா இசிங்க உது?
Sulgi Hymn B.
105 nig bi-ra-a-a-mu ki-bi gu nu-zi-zi-i ( Whatever I hit , did not raise its head from the spot)
*Ta. nika biira aala moo ki-bi kavvu na jiji-i ( Because of bravery and immense strength , whatever fell down the ground never lived again)
நிக பீராஅல மூ கீபி கூவ் நா ஜிஜி.இ
இவ்வரிகளில் எரிப்ப > பீர என்றும் பீர> வீர என்றும் வந்திருப்பதைக் காண்க. கடுந் திறல் என்று பொருள் படுகின்றது.
Vattamam> வத்தமம்< வறுத்தமம்,? காய வைத்தல், தீய்த்தல், வறுத்தல்
ஆக ஆயாசம் போல் ‘வீர வத்தமம்’ என்பதும் வீரவுணர்வை காயவைத்தல் வத்திடச் செய்தல் என்றாகின்றது.
ஆக நாம் இப்பொழுது இச்சுலோகத்தின் மூல சுமேருத் தமிழ் வடிவை ஒருவாறு ஊகித்துப் பெற்று அதன வழி மூலப் பொருளையும் காண முடியும் நிலையில் இருக்கின்றோம்
Hymn 1:1-3
Now we shall consider the Third Sloka of the first hymn that goes as follows:
agninaa rayim asnavat puusham eva dive-dive/ yasasam viiravattamam
May the inspiration derived from the adorable God be a source of ever increasing affluence, vitality and prosperity.
இதன் மூல சுமேருத் தமிழ் வடிவம்:
அக்நின எரியம் ஆஸ்வத்து பூஷ்யம் ஏவே திவே திவே/ ஆயாசம் வீரவத்தமம்
தினம தினம் (திவே திவே) அக்நி ஈயும் எரியும் ( அக்நின எரியும்) ஆதிய ஒளி மலர்ச்சியும் ( ஆச்னவத்து பூஷம்) மக்களிடையே களைப்பாகிய ஆயாசத்தையும்( ஆயாசம்) வீரம் வற்றிப்போதலையும் ( வீரவத்தமம்) தரும்
இங்கு விதந்தெடுத்து ஓதப் படும் எரியும் கடுந்திறல் ஒளியும் உடம்பில் இருக்கின்ற சத்தியை வற்றச்செய்துவிடும் பண்புடைய என்று அனுபவத்திற்கு ஒத்டு வருகின்ற ஓர் உண்மையே பகரப் படுவதாக தெரிகின்றது.
தொடரும்
உலகன்