2. ஸ்த பு(வ)ன விக்யாத வீர
3. ர வீரஸாஸன அனேக கு
4. ன கனாலம்க்ரித ஸ்த்ய ஸே
5. ஸா ஸாரி ஸாரித்ரய ஸமை
6. சம்புன்ன வளஞ்சிய ஸ்ரீ
7. மர்ஹதாரி மக்களாகிய எ
8. யிநாட்டு திருப்பெறு மாடப்ப
9. ள்ளித் தளத்தை ஞூற்றுவரோம் அ
10. ய்ங்குன்றத்து அய்கமநான மும்
11முறி தன்மசெட்டிக்கு வீரதாவள
12. மாக வைத்தபடி, இவன் இருந்த ஊ
13. ரில் நமக்கள் வீரபெரு நிரவிமா
14. ரும் நாட்டு செட்டிகளும் வந்தவன
15. றுமெய் கண்டு சோறு உண்பதாக
16. வும் பணமென்றும் பாவாடை
17. கொங்கவாரெழுநூறும் கண்டழி
18. மூலபத்திரரும் ஐய்யன்பொய்
19. களமடக்கி கீழ் மேற் காக்கை
பின்பக்கம்
20. நாநாதேசியும்
21. கொற்றக்குடைப் படை முன்
22. நூறும்
23. யென்றும் கொள்ளப் பெறு
24. தார்களாகவும் இப்பரிசல்ல
25. து செய்வார்கெங்கை இடை
26. குமரியிடைப்பட மாப்ப
27. ட்ட பாவத்தில் படுவார் இவ
28. ந் சிறிய தம்பபநு தமைய
29. நும் தொறுமீட்டுப்பட்ட
30. நன்மை கண்டு வைத்
31. தோம். இவன் பரியுடைமை
32. கண்டு வைத்தோம் தி
33 ருப்பெறுமாடப்பள்ளித் தளதை
34. ஞூற்றுவரோம். பதிலழிவாந்
35. நமில் வே
36. ரு வந்
37. ந்
38. பழவரி இவீர
39.நும் அப்பி
40. த் தம்பலமும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து இப்பகுதியின் பல்வேறு வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்து வெளிப்படுத்திவருகிறது. இவ்வகையில் அண்மையில் ஐகுந்தம் சதாம் என்பவர் அளித்த தகவலின்பேரில் அவ்வூரில் உள்ள தனியார் கொல்லையில் கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டுவரும் கல்வெட்டினை ஆய்வு செய்தனர்.
இக்கல்வெட்டு குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும்போது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ள முதலாவது முழு வணிகக்குழு கல்வெட்டு இதுவாகும். 7 அடிக்கு 4 அடி அளவுள்ள கற்பலகையின் இரண்டு பக்கமும் கோடுகள் வரைந்து அதனுள் எழுத்துக்களை 40 வரிகளில் அழகாக வெட்டியுள்ளனர். 12ம் நூற்றாண்டின் எழுத்தமைதியைக் கொண்ட கல்வெட்டின் முடிவில் சாமரம், பூர்ணகும்பம், குத்துவிளக்கு, பசுவும் கன்றும் ஆகிய உருவங்களை செதுக்கியுள்ளனர்.
வணிகக்குழுவினரின் ஒரு பிரிவினரான வளஞ்சியரின் வடமொழி மெய்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகிறது. திருப்பெறு மாடப்பளித் தளத்தைச் சேர்ந்த ஐநூற்றுவர் என்னும் வணிகக் குழுவினர் அய்ங்குன்றத்து மும்முரி தன்மசெட்டி என்பவன் பெயரில் வீரதாவளத்தை உருவாக்குகின்றனர். வீரதாவளம் என்பது வணிகர்களைக் காக்கும் படைவீரர்கள் தங்கும் இடமாகும். பெருநிரவியார், நாட்டு செட்டிகள், கொங்கவார் எழுநூறு, கண்டழி, மூலபத்திரர், ஐம்பொழில், களமடக்கி, கீழ்மேற்காக்கை, நானாதேசி ஆகிய வணிகக் குழுக்கள் குறிப்பிடப்படுகின்றனர். அரசர்கள் வைத்துக்கொள்ளும் கொற்றக்கொடை, முன்னூறு படைவீரர்கள் ஆகியவற்றை இவர்கள் என்றும் வைத்துக்கொள்ள உரிமைப் பெற்றவர்கள்.
கவர்ந்து சென்ற கால்நடைகளை மீட்கும்போரில் தன்மசெட்டி, சிறியதம்பப்பன் மற்றும் இவனது தமையனும் இறந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில் இவ்வீரதாவளம் திருப்பெறு மாடப்பள்ளித் தளத்து ஐநூற்றுவர் என்ற வணிகக் குழுவினரால் உருவாக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் வாயிலாக ஐகுந்தம் என தற்போது அழைக்கப்படும் ஊர் அய்ங்குன்றம் என அழைக்கபட்டது என அறிகிறோம். மேலும் இது வணிகர்கள் பயணம் மேற்கொள்ளும் பண்டைய பெருவழியில் அமைந்துள்ளது என்பதையும் அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் வணிகர்களின் தங்கும் இடமாகவும் இருந்துள்ளதையும் அறிகிறோம். அவ்வாறு தங்கியிருப்போரின் செல்வத்தை காக்கும் போர் வீரர்களும் உடன் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருக்கும்போது அவர்களின் கால்நடைகளை கள்வர்கள் கவர்ந்து சென்றுவிட அதனை மீட்கும் போரில் வீரர்களில் சிலர் இறந்துவிட அவர்களது நினைவாக வீரர்கள் தங்கும் இடத்தை இவ்வணிகக் குழுவினர் உருவாக்கியுள்ள செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. தமிழக வணிகக்குழுக் கல்வெட்டுக்களில் அய்குந்தம் வணிகக்குழுக் கல்வெட்டு சிறப்பிடம் பெறும் ஒன்றாக உள்ளது எனத் தெரிவித்தார். இது இம்மாவட்டத்துக்கு கிடைத்த மற்றுமொரு சிறப்பாகும்.
தருமபுரி அகழ்வைப்பக தொல்லியல் அலுவலர் பரந்தாமன், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் மற்றும்...ஆகியோர் இக்கள ஆய்வின்போது உடனிருந்தனர்.
300 படைவீரர்கள் அந்த வணிகர்களுக்குபாதுகாப்பாக இருந்தனர். அவர்கள் தங்க இடம் உணவு…………. – இப்படி பட்ட ஒரு கல்வெட்டு ஐகுந்தம் சதாம்உசேன், அண்ணாச்சி ஆகியோரால் கண்டறியப்பட்டு படிக்கப்பட்டது.
பொருள்: சமஸ்த பு(வ)ன- அனைத்து உலகும்: விக்யாத - அறிந்த; வீரஸாஸன - வீரர் ஆவணம்; அனேக குண கனாலம்க்ரித - எல்லா ஒழுக்கமும் நிரம்பி அழகுறுத்தும் கூட்டம்; ஸத்ய ஸேஸா ஸாரி - வாய்மை, சிறப்பு, ஒழுக்கம் ; ஸாரித்ரய - ஒழுக்கம் மூன்றும்; ஸமை - பொறையுடைமை, forgiveness; சம்புன்ன - திறமை; மர்ஹதாரி- புகழ்மிக்க; தளத்தை - படைக்குழு உள்ள இடம், military base; ஞூற்றுவரோம் - நூற்றுவர்; அய்கமநான - தலைவனான (ஐ - தலைமை, கமனம் - செலுத்தல்), high commander, மும்முறி - மூன்றுமுறை முறியடித்த; வீர தாவளமாக - வீரர்க்குரிய ஆதரவாக, army support; வைத்தபடி - கொடுத்தபடி , நிரவிமார் - மதிப்பீட்டாளர்; அறுமெய் கண்டு - நன்மை (goodness) கண்டு; பாவாடை - மதிப்புறு ஆடை; வார் -கயிறு; ஐய்யன் போய் - short duration, விரைந்து சென்று, களமடக்கி - போர்முடித்து; காக்கை - காப்பதற்கு; பரிசு - நற்செயல்; பரியுடைமை - இரங்குகை, பாதுகாப்பு
பழவரி - பழைய எழுத்துப்படி தம்பலம் - வெற்றிலை பாக்கு
விளக்கம்: எல்லா உலகும் அறிந்த வீரர்தம் வீரஆவணமாவது பல குணம் கொண்ட கணத்தால் அணி செய்யப்பட்டு வாய்மை, சிறப்பு. நல்லொழுக்கம் என மூன்று ஒழுக்கமும் பொறைமையும் திறமையும் அமையப்பெற்ற வளஞ்சிய வணிகக் குழு என்று மெய்க்கீர்த்தி சொல்கிறது. வளஞ்சிய வணிகக் குழுவின் புகழ்மிக்க மக்களாகிய எயிநாட்டு திருப்பெறு மாடப்பள்ளி படைத்தளத்தை சேர்ந்த நூற்றுவர் நாம் ஒன்றுகூடி ஐங்குன்றத்து படைத்தலைவரும் மும்முறை எதிரிகளின் தாக்குதலை முறியடித்தவரும் ஆன தன்மசெட்டிக்கு வீரர்க்குரிய ஆதரவு (support) கொடுத்தபடியாவது இவன் இருந்த ஊரில் நம்மக்களான வீரபெரு மதிப்பீட்டாளரும் நாட்டு செட்டிகளும் வருபவர் நன்மை கருதி சோறு உண்பதற்கு பணமாகவும் மதிப்புறு ஆடையாகவும் கொங்குநாட்டின் கயிறு எழுநூறும் கொடுத்தனர். கண்டழி மூலபத்திரரும் விரைந்து போய் போர் முடித்து கிழக்கு மேற்கு திசை காப்பதற்கு நாநாதேசி குழு வணிகரும் கொற்றக் குடைப் படைமுந்நூறு எண்ணிக்கையை கொள்ளப் பெறுவார்களாக என்று ஏற்பாடு செய்கின்றனர். இந்த நற்செயலை இல்லாமல் அழிப்பவர் கங்கை இடை குமரியிடை வாழ்பவர் செய்த பாவத்தில் வீழ்வார். இவனுடைய சிறிய தம்பியும் தமையனும் கால்நடை மீட்டு இறந்த நற்செயல் கண்டு இதை கொடுத்தோம். இவனுடைய பெருமை கண்டு இதை கொடுத்தோம் திருப்பெறு மாடப்பள்ளித் படைத்தள நூற்றுவராகிய நாம். பதிலழிவாந் கொண்டு நம்மில் வேறொருவன் பழைய எழுத்து விதிப்படி இவ்வீரனும் அப்பித் தம்பலமும்
வணிகர் தம்மை நெடுவழியில் ஆரலைக் கள்வர் தாக்கி தம் பொருளை கவர்ந்து செல்லா வண்ணம் வணிகர் தமக்குத் தாமே ஒரு படை அமைத்துப் பேணி தம்மையும் தம்பொருளையும் காத்துக் கொண்டனர். அவ்வாறு ஒரு நிகழ்வில் வளஞ்சிய வணிகர் தன்மசெட்டியின் போர்ச்செயலை கேள்வியுற்று அவனை பாராட்டி அவனுக்கு மேலும் படை ஆதரவை கூட்டி வழங்கினர். இறுதி வரி விளங்க வில்லை.
வணிகக்குழுவினரின் ஒரு பிரிவினரான வளஞ்சியரின் வடமொழி மெய்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகிறது. திருப்பெறு மாடப்பளித் தளத்தைச் சேர்ந்த ஐநூற்றுவர் என்னும் வணிகக் குழுவினர் அய்ங்குன்றத்து மும்முரி தன்மசெட்டி என்பவன் பெயரில் வீரதாவளத்தை உருவாக்குகின்றனர். வீரதாவளம் என்பது வணிகர்களைக் காக்கும் படைவீரர்கள் தங்கும் இடமாகும். பெருநிரவியார், நாட்டு செட்டிகள், கொங்கவார் எழுநூறு, கண்டழி, மூலபத்திரர், ஐம்பொழில், களமடக்கி, கீழ்மேற்காக்கை, நானாதேசி ஆகிய வணிகக் குழுக்கள் குறிப்பிடப்படுகின்றனர். அரசர்கள் வைத்துக்கொள்ளும் கொற்றக்கொடை, முன்னூறு படைவீரர்கள் ஆகியவற்றை இவர்கள் என்றும் வைத்துக்கொள்ள உரிமைப் பெற்றவர்கள்.
கவர்ந்து சென்ற கால்நடைகளை மீட்கும்போரில் தன்மசெட்டி, சிறியதம்பப்பன் மற்றும் இவனது தமையனும் இறந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில் இவ்வீரதாவளம் திருப்பெறு மாடப்பள்ளித் தளத்து ஐநூற்றுவர் என்ற வணிகக் குழுவினரால் உருவாக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் வாயிலாக ஐகுந்தம் என தற்போது அழைக்கப்படும் ஊர் அய்ங்குன்றம் என அழைக்கபட்டது என அறிகிறோம். மேலும் இது வணிகர்கள் பயணம் மேற்கொள்ளும் பண்டைய பெருவழியில் அமைந்துள்ளது என்பதையும் அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் வணிகர்களின் தங்கும் இடமாகவும் இருந்துள்ளதையும் அறிகிறோம். அவ்வாறு தங்கியிருப்போரின் செல்வத்தை காக்கும் போர் வீரர்களும் உடன் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருக்கும்போது அவர்களின் கால்நடைகளை கள்வர்கள் கவர்ந்து சென்றுவிட அதனை மீட்கும் போரில் வீரர்களில் சிலர் இறந்துவிட அவர்களது நினைவாக வீரர்கள் தங்கும் இடத்தை இவ்வணிகக் குழுவினர் உருவாக்கியுள்ள செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. தமிழக வணிகக்குழுக் கல்வெட்டுக்களில் அய்குந்தம் வணிகக்குழுக் கல்வெட்டு சிறப்பிடம் பெறும் ஒன்றாக உள்ளது எனத் தெரிவித்தார். இது இம்மாவட்டத்துக்கு கிடைத்த மற்றுமொரு சிறப்பாகும்.
300 படைவீரர்கள் அந்த வணிகர்களுக்குபாதுகாப்பாக இருந்தனர். அவர்கள் தங்க இடம் உணவு…………. – இப்படி பட்ட ஒரு கல்வெட்டு
பொருள்: சமஸ்த பு(வ)ன- அனைத்து உலகும்: விக்யாத - அறிந்த; வீரஸாஸன - வீரர் ஆவணம்; அனேக குண கனாலம்க்ரித - எல்லா ஒழுக்கமும் நிரம்பி அழகுறுத்தும் கூட்டம்; ஸத்ய ஸேஸா ஸாரி - வாய்மை, சிறப்பு, ஒழுக்கம் ; ஸாரித்ரய - ஒழுக்கம் மூன்றும்; ஸமை - பொறையுடைமை, forgiveness; சம்புன்ன - திறமை; மர்ஹதாரி- புகழ்மிக்க; தளத்தை - படைக்குழு உள்ள இடம், military base; ஞூற்றுவரோம் - நூற்றுவர்; அய்கமநான - தலைவனான (ஐ - தலைமை, கமனம் - செலுத்தல்), high commander, மும்முறி - மூன்றுமுறை முறியடித்த; வீர தாவளமாக - வீரர்க்குரிய ஆதரவாக, army support; வைத்தபடி - கொடுத்தபடி , நிரவிமார் - மதிப்பீட்டாளர்; அறுமெய் கண்டு - நன்மை (goodness) கண்டு; பாவாடை - மதிப்புறு ஆடை; வார் -கயிறு; ஐய்யன் போய் - short duration, விரைந்து சென்று, களமடக்கி - போர்முடித்து; காக்கை - காப்பதற்கு; பரிசு - நற்செயல்; பரியுடைமை - இரங்குகை, பாதுகாப்பு. பழவரி - பழைய எழுத்துப்படி தம்பலம் - வெற்றிலை பாக்கு