ஒழி > ஒழு - ஒய்வு, leisure; வய - வழி, via; நசரர் - கண்காணிப்பாளர், உயர் பொறுப்பு அதிகாரி( நல்/ நய் > நச் - வெண்மை கருத்து வழி ஒளி, காட்சி கருத்துக்கு வேரானது. காண்க > நளி - வெள்ளைச் சாரணை. நய் > நயனம் - ஒளிபடைத்த கண். யகர சகர திரிபில் இந்த நய > நச ஆகி இந்தி, உருது போன்ற மொழிகளில் நசர் என்று பார்வையை குறிக்கிறது. ஆக நயனம் என்பதும் தமிழ் வேர் உடையது என்பது இக்கல்வெட்டால் அறிய முடிகிறது; அத்தி - நெடுமைக் கருத்தில் யானை, மரம், மலையை குறித்தது; ஹஸ்தி என்ற சமசுகிருத சொல் அத்தி என்று ஆகவில்லை என்பதை கருத்தில் கொள்க. அத்தி தூய தமிழ்ச் சொல்லே. கோசத்தார் - போர்க்களத்தில் யானைக்கு ஊறு நேராமல் கவசமாக இருந்து பேணுவோர்; வீரக்கை - வீரச்செயல்