அன்பு நண்பர்களே,
மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த நொடியில் மனதினுள் உதிக்கும் என்னுடைய சிந்தனைகளை இவ்விழையில் பரிமாற விழைகின்றேன். எப்பொழுதெல்லாம் எழுத அவகாசம் கிடைக்கின்றதோ, அந்த காலத்தினை இந்த இழையில் கிறுக்கல்களாக வெளிப்படுத்துகின்றேன். பாடு பொருள் இதுதான் என எதையும் நிர்ணயிக்கவில்லை.
நாம் அனைவருமே எந்த ஒரு காரியத்தினையும் மிகவும் நளினமாகவும் சிறப்பாகவும் செய்ய ஆசைப்படுவது இயல்பு. அனைவருமே செய்யும் காரியத்தின் இறுதி விளைவு மிகவும் சிறப்பாக அமைய கடுமையாக உழைக்கின்றோம். ஆனால் நாம் எதிர்பார்ப்பது போல் அதன் விளைவுகள் சிறப்புற இருப்பதில்லை.
இது ஏன் இப்படி …?
நாம் செய்யும் எந்த ஒரு செயலுமே மேன்மையுறச்(Excellence) செய்வது எப்படி ?
எந்த ஒரு சிறு செயலையுமே நாம் செயல்படுத்த விழையும்பொழுது மனம் அசெளகரிய நிலையை உணர்கின்றது. அதாவது தான் இருக்கும் நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறத் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது. இது மனநிலைமம் (Mind Inertia) எனப்படும். இங்கே மன ஆற்றலானது வலிவிழந்து காணப்படுகின்றது. ஏறக்குறைய 90 % மன ஆற்றலானது ஒரு குவியத்தில் குவியாது இச்செயலினைச் செய்ய விளைந்ததனால் எண்ணிய விளைவு விளையவில்லை.
இங்கே எதோ ஒரு இணைவு ஒன்று துண்டிக்கப்பட்டிருக்கின்றது.
அகத்திற்கும் புறத்திற்கும் முரண். ஒத்திசைவு இல்லை. அதனால் மனம் தன்னுடைய பழைய நிலையையில் இருக்க முனைகின்றது. இதுவே மனதின் Comfort Zone எனப்படுகின்றது. இங்கே செயல்களைச் செய்யாமல் ஒத்திப்போடும் மனோபாவம் புன்னகையுடன் முளைக்கின்றது.
நாம் அன்றாடம் பல வேலைகளை ஒத்திப்போடுகின்றோம்.
ஏன் ஒத்திப்போடும் மனோபாவம் நம்மில் பிறக்கின்றது...?
பல காரணிகள்....
1. ஒரு செயலினைச் செய்ய முறையான பயிற்சியும் நம்பிக்கையும் இல்லாதபொழுத
2. செயல் செய்ய ஆர்வமில்லாதபொழுது
3.ஆர்வம் இருந்தாலும் கூட சில நேரங்களில், நாம் செயல் செய்ய விழையும்பொழுது மனம் கொடுக்கும் எதிர்விசை (Repulsive Force RF). அங்கே உள்ளுறை விலக்கு விசை இருப்பது கட்புலனாகும்.
எப்பொழுது ஒரு செயல் இலகுவாகும்... ?
இயல்பாய் செயல்புரிதல் வேண்டும்... ஒரு புல் இயல்பாய் முளைப்பது போல்... ஒரு மலர் இயல்பாய் மலர்வதுபோல்...
ஒரு செயலினை லகுவாய் செயல்படுத்துவது என்பது, உள்ளுறை ஈர்ப்பாற்றலானது உள்ளுறை விலக்காற்றலினை விட அதிகமாய் இருக்கும்பொழுது சாத்தியமாகின்றது.
உள்ளுறை விலக்காற்றலை (Repulsive Force) உள்ளுறை ஈர்ப்பாற்றலாக (Attractive Force) மாற்றுவது எப்படி...?
என்னுடைய ஆராய்ச்சியின்படி,
ஒரு செயல்/குறிக்கோளை புறமாகப் பரிணமிக்க கீழ்க்கண்ட சமன்பாட்டின்படி சமனாகின்றது Gm =
இங்கே
என்பது ஒத்ததிர்வு மாறிலி (Resonant Constant)
என்பது செயலிற்குத் தேவையான ஆற்றல்
என்பது மனதின் சக்தி
D என்பது அகத்திற்கும் புறத்திற்கும் இடைப்பட்ட தூரம்
எந்த சூழ்நிலையிலும் மற்றும் ஆகிய காரணிகளை நாம் மாற்ற இயலாது.
ஆனால் செயலிற்குத் தேவையான மனோ ஆற்றலை நாம் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு நம் கையில் உள்ளது.
இவ்விதமாக நாம் விலக்குவிசையை ஈர்ப்பு விசையாக மாற்றிடும் வித்தை நம் கையில் உள்ளது என்பதை அறிவோம்.
நன்றி:
“Mind Engineering” By Raveendran Krishnasamy ,
"How to increase mindon energy towards your goal..?” By Raveendran Krishnasamy
RK Column By Raveendran Krishnasamy
"Relationship between inner and outer ” by Raveendran Krishnasamy.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
மேலே வானம்... கீழே நியூயார்க்....
வானம்-5 நியூயார்க்-1 .. (6-April-2009)
எங்கள் கிராம வாசக சாலையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தனர். வாக்கெடுப்பில் 72 வாக்குகளைக் குவித்து அறுதிப் பெரும்பான்மையாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Margaret Cohee ஒரு புதன் காலையில் ஜனவரி 21ல் பதவியேற்ற அந்த நொடியிலிருந்து எங்கள் நூலகம் புதிதாக இரத்தம் பாய்ந்த உற்சாகத்தில் புதிய புதிய மாற்றங்கள். நான் விரும்பிய வண்ணம் செயல்பட ஆரம்பித்திருந்ததை எண்ணி மகிழ்ச்சி. அழைப்பின் காரணம்....?
தேசிய கவிதை மாதத்தினை(ஏப்ரல்) முன்னிட்டு, எங்கள் தாலுகாவினைச் சேர்ந்த Julie Sheehan என்ற இளங்கவிதாயினி சமீபத்தில் Barnard Women Poets Prize, Paris Review Bernard F.Conners Prize for Poetry, Poetry Society of America Robert H.Winner Memorial Award ஆகிய விருதுகளை அள்ளிக்குவித்த மகிழ்ச்சியில் அவர் தன்னுடைய Thaw மற்றும் Orient Point என்ற கவிதைத் தொகுதிகளிலிருந்து சில கவிதைகளை வாசிக்க வந்திருந்தார். புதிதாக இலக்கிய வட்டம் ஒன்றினை ஏற்படுத்தி இந்த பகுதியில் வசிக்கும் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட ஆயத்த பணிகள் நடந்துகொண்டிருந்தன.
எங்கள் நூலகம் சற்றே பெரிய நூலகம். விழா நடக்கும் இடம் நூலகத்தில் ஒரு வாசிப்பு அறையை ஒதுக்கியிருந்தனர். மாலை 2 மணி விழாவிற்கு சரியாக 1:40க்கு நுழைந்து எனக்குத் தேவையான தலையணைப் புத்தகங்களை என் கணக்கில் பதிவிட்டு அள்ளிக்கொண்டு நேர நிர்வாகம் பற்றிய தொடர் எழுதுவதன் விழிப்பின் காரணமாக சரியாக 1:58ல் விழா நடக்கும் இட்த்திற்கு விரைந்தேன்.
நான் கற்பனையில் நம் ஊர் கவியரங்கங்களை மனதினுள் கற்பனை செய்து வைத்திருக்க.... பெருத்த ஏமாற்றம்... ஒரு மைக்... ஒரு பத்துப் பதினைந்து நபர்கள்; அதுவும் வயதானவர்கள்... பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியோர்கள்... விழாவிற்கு வந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்மணிகள். அவர்களுடன் சில வாண்டுகள்.
நான் என் கையில் ஒரு மஞ்சள் பையுடனும் தொள தொளவென்ற தாத்தாவின் முழுக்கைச் சட்டையை முழங்கைவரை மடித்தும், ஜீன்ஸ் அணிந்து தலைநிறைய வடிய..வடிய எண்ணெய் தேய்த்து நெற்றியில் குன்னக்குடி வைத்தியநாதன் ஸ்டைலில் விபூதியும் குங்குமமும் அணிந்துகொண்டு கரங்களில் தலையணைப் புத்தகங்களைத் தூக்கமுடியாமல் சுமந்துகொண்டும் “ஙே” என விழித்துக் கொண்டே தயங்கித் தயங்கி நுழைந்தேன். என் தயக்கத்திற்குக் காரணம் யாரும் பரிச்சயம் இல்லை. ஒரு இந்தியர்கூட இல்லை. எல்லாம் அமெரிக்கர்கள். அதுவும் அமெரிக்க ஆங்கிலத்தில் தஸ்ஸூ...புஸ்ஸூ என அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.
எனக்கு ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. அமெரிக்கா வந்தால் ஆங்கில அறிவு வளரும் என நான் தவறாக எண்ணியிருந்தேன். ஆங்கிலத்தில் மற்றவர்களைப் போல் இனி சரளமாகப் பேசலாம் என்றெல்லாம் தவறாக்க் கணித்திருந்தேன். இங்கு வந்தபின் வளர்ந்த்தென்னவோ தமிழும் தெலுங்கும் மட்டுமே. திருடனுக்குத் தேள் கொட்டியது போல் “அட கெரகமே” என விழிக்க வேண்டிய நிலை...!
ஒரு முறை நான் ஐந்தாம் வகுப்பு பயிலும் பொழுது விஜயா டீச்சர் பாடம் நட்த்திக்கொண்டிருக்க நானோ விட்ட்த்தினைப் பார்த்துக்கொண்டு வேறேதோ நினைவினில் அமிழ... திடீரென சரியாக என்னை நோக்கி வினா எழுப்ப.... வழக்கம் போல் தேமே என விழிக்க.... அப்படியே அருகிலிருக்கும் மாணவனிடம் கேட்க... ”அங்க மட்டும் என்ன வாழுதாம்...?” என நான் எண்ணியவாறே அவனும் விழிக்க... கடைசி பெஞ்ச் மாணவர்கள் கொல்லென சிரிக்க... டீச்சருக்குக் கோபம் வந்து, “”Last bench get out…” எனச் சொல்ல.... கடைசி பெஞ்ச் மாணவர்கள் அமைதியாக நிற்க, நான் என் அருகிலிருந்த் மாணவனை அழைத்து கடைசி பெஞ்ச்சினைத் தூக்கி வகுப்பறைக்கு வெளியே இருக்கும் வராண்டாவில் கொண்டு போய் போட்டுவிட்டு வகுப்பறைக்குள் நுழைய.... வகுப்பறையே கொல்லென சிரிக்க.... “இந்தப் பயபுள்ளக எதுக்கு இப்டி சிரிக்றாய்ங்க...”ன்னு “ஙே”...ன்னு விழிக்க......இப்படித்தாம்யா இருந்துச்சி.. இப்பவும் இருக்குது நம்ம இங்கிலீபீஷூ...!
பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் வழக்கமாய் அமரும் கடைசி பெஞ்ச்சில் சென்று அமர்வதைப்போல் இங்கும் அமர... எனக்கு முன்னாலிருந்த ஒரு அழகிய இளம்பெண் என்னைத் தன்னருகே காலியாக இருக்கும் இருக்கையில் அமர வரும்படி அழைத்தார்.
“சே... இந்த பெண்மணி ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே...”ன்னு நினைத்துக்கொண்டேன். வடிவேலு ஒரு பட்த்தில் பார்த்திபனுடன் வங்கிக்கு ஜாமீன் கையெழுத்துப் போடச் செல்லும்பொழுது எதிரே வரும் ஒரு பலியாட்டினைப் பார்த்து வடிவேலுவிற்கு ஒரு உள்ளுணர்வு வருமே...? அது எனக்கு அப்பொழுது மிஸ்ஸிங்காகியிருந்த்து....!
வாண்டுகள் அமைதியாக சேட்டைகள் செய்துகொண்டிருந்தனர். அவர்களும் ஆங்கிலத்தில் உரையாட்... எனக்குள் பெருவியப்பு... “அட... இம்புட்டு கோணி சின்ன சின்னப் பசங்கள்ளாம் எப்பிட்றா இம்புட்டு அழகா இங்கிலீபீஷூ பேசுறாய்ங்க...”ன்னு ஒரே ஆச்சர்யமா இருந்துச்சி.
சரியாக 2 மணி ஆனவுடன் என்னருகே அமர்ந்திருந்த அந்த இளம்பெண் சரேலென எழுந்து மைக்கை நோக்கிச் சென்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்தான் அந்த கவிதாயினியாம். அடக் கெரகமே...! முன்னாடியே சொல்லக்கூடாதா...? முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவங்க கூப்ட்ட அந்தப் பக்கம் தலைவச்சாச்சும் படுத்திருப்பேனா...? ”போச்... போச்.... இனி அந்த பெண் நம்மளதான் கேள்வி கேட்கப்போறாங்க.....” எனக்கு அப்பவே விளங்கிடுச்சி. ம்ம்ம்... ஒரு மனுஷனுக்கு எம்புட்டு கஷ்டம்தான் வர்ரது ஆண்டவா...!
அந்தம்மா ஆங்கிலத்துல சொன்னதால் நமக்கு எதுவும் மண்டையில ஏறல. கையில ஐஸ் டீ எடுத்துட்டு கண்ணை மூடிட்டி ஒவ்வொரு துளியா ரசிச்சிக் குடிச்சிட்டு இருந்தேன். அது நாக்கில் அதன் சுவையை நிறுவி தொண்டையில் சுவையுணர்ந்து அப்படியே ரசித்து ஒவ்வொரு மடக்காக விழுங்கினேன். இடையிடையே அந்தம்மா சொல்லும் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் விழுந்த்து. அதுல LOVEன்ற வார்த்தை மட்டும் நல்லா தெரிஞ்சது. அந்தம்மா ரொம்ப உணர்ச்சிகளோட கவிதை படிச்சுட்ருந்தாங்க.
இங்கேயும் அந்தம்மா நிலாவினைப் பற்றிதான் கவி சொல்லிட்ருந்தாங்க. உலகத்துல எல்லா பயபுள்ளகளும் நிலாவினை விட்டுவைக்க மாட்டாய்ங்களோ....?ன்னு நெனச்சிக்கிட்டேன். கர்நாடக சங்கீதக் கச்சேரியில் நமக்கு ராகம் தாளம் ஸ்வரம் இப்படி எதுவுமே தெரியாட்டின்னாக்கூட நமக்கு அதெல்லாம் தெரியும்ன்ற மாதிரி தலையை அசைத்து அசைத்து ஒரு பாவ்லா பண்ணுவோமே....? அது மாதிரி அப்ப்ப்ப புரியறமாதிரி தலையை ஆட்டி வைச்சேன். அந்தம்மாவுக்கு ஒரே சந்தோஷம் நான் அவங்க கவிதையை நல்லா ரசிக்றேன்னு...!
அப்றம் ஒரு வழியா 4 ம்ணிக்கு கூட்டம் முடிஞ்சது. அப்பாடா... தப்பிச்சோம்ன்னு நெனச்சி எஸ்கேப் ஆகிறப்ப அந்தம்மா என்னைக் கூப்ட்டாங்க. எனக்கு எப்டி இருக்கும்...? சின்ன வயசுன்னா நான் வரமாட்டேன்... போ...........ன்னுட்டு ஓடிடலாம்..ஆனா காம்ப்ளான் குடிச்சி பெரிய பையனா ஆனபிறகு இப்ப அப்டி ஓட முடியுமா...?
வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு என்னவோ ஏதோன்னு போனேன். ”Hey…. Are you a writer…..?” அப்டீன்னு கேட்டார். அட கெரகமே...ன்னு நெனச்சிகிட்டேன். “I can read your mind….” அப்டீன்னார். எனக்கு பக்குன்னு ஆய்டிச்சி. ”அப்டியெல்லாம் இல்லைம்மா.... நான் கிறுக்கனா இருக்றதால நம்பிக்கை, முத்தமிழ் இதுமாதிரி கூகிள் குழுமங்கள்ல அப்பப்ப எனக்கு மூடு வர்ரப்ப தமிழ்ல்ல ஒன்னு ரெண்டு..கிறுக்குவேன்... அம்புட்டுதான். தாயி..! “
“ஆங்கிலத்தில் எதுவும் முயற்சிக்கவில்லையா....?”
“Mind Engineering, The Art of Excellence, The Art of Studying” அப்டீன்னு முயற்சி மட்டுமே பண்ணினேன். அதுக்கப்றம் மூடு வர்ல. ஏறக்குறைய ரொம்ப வருஷங்கள் கழிச்சி இப்போ திரும்பவும் டெக்னிக்கல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றேன்...”
“எழுது...எழுது...இலக்கியத்தில் நீ எழுது... தொடர்ந்து எழுது... வானம் ஒரு நாள் வசப்படும்... கண்டிப்பாக ஒரு நாள் நோபெல், புலிட்சர் போன்ற உயர் பரிசு கிடைக்கும்...”
“அட... நீங்க எப்டி சொல்றீங்க....? ரொம்ப ஆச்சர்யமா இருக்கே..!”
“நீ டீ குடிச்ச ஸ்டைலேருந்தே கண்டுபிடிச்சேன்.... எல்லாமே உணர்கின்றாய்.... ரசிக்கின்றாய்... இதுதான் ஒரு எழுத்தாளனுக்குத் தேவை...”
“இல்லையம்மா... .நான் டீ குடித்தது ஜென் மெடிட்டேஷன்... அது ஒரு தவம்.... நான் எதையுமே அப்படித்தானம்மா செய்வது வழக்கம்....உங்கள் கணிப்பு தவறாகிவிட்ட்தே....”
இப்பொழுது கவிதாயினி “ஙே” என விழித்துக்கொண்டிருந்தார்.
பை சொல்லிவிட்டு இட்த்தைக் காலிசெய்தேன்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
மேலே வானம்…. கீழே நியூயார்க்…..
பகலில் தூங்கி எழும்பொழுது ஒரு
மென்சோகம் நம்மைக் கவ்விக்கொள்கின்றதே அது ஏன்...?
இன்னதென்று புரிபடா ஒரு
மென்சோகம். ஆனாலும் அதன் சுவை பிடிக்கின்றது. வலியும் இன்பமும் கலந்த
ஒரு வித்தியாசமான கலவை. அது எதோ நமக்கு சொல்ல விழைகின்றது. என்னவென்றே
புரிபடாமல் ஒவ்வொரு வார இறுதி பகல்களிலும் இது நிகழ்கின்றது...
அப்படி ஒரு வார விடுமுறை நாளில்
தூங்கியெழுந்ததும் ஏற்பட்ட அந்த மென்சோகத்திலிருந்து விடுபட கிச்சன் சென்று
மைக்ரோவேவில் ஏலக்காய் + இஞ்சி கலந்த டீ கலந்து (ஃபில்டர் காஃபி என்னாச்சின்னு யாரும்
குறுக்காலக் கேக்கப்படாது... குறிப்பா ஷைலஜாக்கா...!!!)
துளித்துளியாய் ரசித்து நாக்கின் மொட்டுக்களில் நனைத்து தொண்டை வழியே அதன்
தித்திப்பை நனைத்து வயிற்றிற்குள் இறங்க மூளையிலுள்ள நியூரான்கள்
சுறுசுறுப்பானது.
மணி பார்த்தேன். என் பிறந்தநாளுக்குப்
பரிசாக மைக்ரோசாஃப்ட் அண்ணன் பில்கேட்ஸ் அனுப்பிய லேட்டஸ்ட் விண்டோஸ் மொபைல் 3:00 PM என்று உணர்த்தியது. (உண்மைதான்…!)
வாக்
போகலாமா...? அருகிலிருக்கும் டைட்டானிக்கை ரசிக்கலாமா...? குயில்களின் இன்னிசையை
ரசிக்கலாமா...? Starbuckல் ஒரு காஃபி
குடிக்கலாமா...? மனதில் சலனங்களாய்
அலைகள்.
ச்ச்சடேரென ISKCON( International Society for Krishna
Consciousness) என் மெமரி டேட்டாபேஸிலிருந்து ட்ரிக்கர் ஆனது.
இது நியூயார்க்கில் Schermerhorn St, Brooklyn, NY 11217 ல் உள்ளது. நண்பனிடம் GPSஐ சுட்டுக்கொண்டு நானும் இன்னொரு நண்பனும் காரில் ISKCON ஐ நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
முதலில்
எனக்கும் இந்த ISKCONக்கும் என்ன தொடர்பு....?
எனக்கு போதிய
அளவு முதிர்ச்சியில்லாததால், பிரபுபாதா அவர்களின்
நூட்களை நான்
படிக்கும்பொழுது மிகவும் கடினமாக
உணர்ந்திருக்கின்றேன். முயற்சி செய்திருக்கின்றேன். மேலும் எனக்கு அதில் போதிய அளவு Convincing கிடைக்காததால் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்.அதன்
பின் எனக்கும்
ISKCONற்கும் அறவே தொடர்பற்றுப்
போனது.
இங்கே
நியூயார்க் வந்தபின் திரும்பவும் ISKCON னுடன் பரிச்சயம் ஏற்பட்டது. இங்கே கோயில்
என்றால் அது ஃபிளசிங்கிலிருக்கும் பிள்ளையார் கோயிலோ, Baldwynலிருக்கும் சீரடி ஷாய்
மந்திரோ அல்லது அருகில் நாயன்மார் வசிக்கும் நியூ ஜெர்சியிலிருக்கும் வெங்கடேஸ்வரையோதான்
தரிசிப்பது வழக்கம். யோகா...? இன்னும் கூட்டம் சேரவில்லை. நியூ ஜெர்சியில் மட்டும்
தவ மையம் இருக்கின்றது. நியூ யார்க்கில் இல்லை. அதனால் கோவில்
மட்டுமே.
காரினை பார்க்கிங் செய்ய மிகவும்
சிரமப்பட்டோம். நியூ யார்க்கில் கார் வைத்திருப்பது மிகப்பெரிய தலைவலியே....! கார்
பார்க்கிங் செய்யும்பொழுது அங்கே இரண்டு கறுப்பினர்கள் நின்றிருந்தனர். எங்களையே நோட்டம்விட்டுக் கொண்டிருந்தனர்.
மனம் பக்கென்றது.
(ஏனெனில் சமீபத்தில் நடந்த ஒரு துயர சம்பவம். என் நண்பன் ஒருவன் இரவு 9 மணி இருக்கும். ஊர்
அடங்கிய வேளை. ரெஸ்ட்டாரெண்ட்டில் சாப்பிட்டுவிட்டு அலைபேசியில்
யாருடனோ கதைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.
அவனைப் பின்பற்றி இரு
நீக்ரோக்கள். அவன் அணிந்திருந்த ஜாக்கட்டில் கத்தியால் குத்தி
நிறுத்தினர். அவனிடம் இருந்த செல்ஃபோனைப் பிடிங்கினர். பர்ஸ், கிரெடிட் கார்ட் என
அனைத்தையும் அபேஸ் பண்ணிவிட்டு ஓங்கி முகத்தில் குத்த, அவன் கதறிக்கொண்டே கீழே
விழ முதுகில் காலால் ஃபுட் பால் ஆடி, 'யூ ....பிளடி இண்டியன்ஸ்...'
என கோபம் கோபமாக கால்களால்
முதுகிலும் அடிவயிற்றிலும் நடனமாட.... நண்பன் ஒரு மாதகாலம் பெட்
ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை. இப்பொழுது எங்கள் கைகளில் ஒரு டாலர்கூட இல்லை.
அட்லீஸ்ட் கொஞ்சம் டாலர்களாவது கைவசம் வைத்திருப்பது நலம் உயிர் பிழைக்க…)
இப்பொழுதும் அது போல் நடக்குமோ
என பயத்தில் என்னுடல் நடுங்க ஆரம்பித்தது. அப்றம் தைரியம் வரவழைத்துக்கொண்டு
அவர்களிடமே சென்று இஸ்கானிற்கு வழிகேட்டோம். ஒரு தினுசாகப்
பார்த்துவிட்டு வழி சொன்னார்கள். திரும்பி வரும்பொழுது நம் கார் அங்கே இருக்குமா...? காரை காந்தி கணக்கினில் சேர்த்துவிடவேண்டியதுதான்
என்ற பயம்.
ISKCONனுள் சென்றால் நாம் இருப்பது இந்தியாவோ...? என பிரமிப்பினைத்
தருகின்றது.
அமெரிக்க வெள்ளையர்கள். ஸ்படிகமாக
வைணவர்களாய். நெற்றியில் U வடிவ நாமம். நடுவே மஞ்சள் வண்ணத்தில் ஒரு
நீண்ட கோடு. எனக்குள் நீண்ட நாட்களாய் ஒரு ஐயம்.
சைவர்கள ஏன் விபூதியை
கிடைமட்டமாகவும் வைணவர்கள் ஏன் நாமத்தினை
செங்குத்தாகவும்
இட்டுக்கொள்கின்றனர்....? நானும் இதுபற்றி ஒருமுறை என் குரு வேதாத்திரியிடம்
உரையாடியிருக்கின்றேன்.
குண்டலினி யோகாவில் ஆக்கினையிலிருந்து
துரியத்திற்கு தவ ஆற்றலை மாற்றியமைக்கலாம். ஆக்கினையிலிருந்து
துரியத்திற்கு ஒரு நுண்ணிய நரம்பும் அதனருகே மற்றுமிரு நரம்புகளும் துரியம்
என்ற பிரம்மரந்திரம் அடைந்து துவாதசாங்கம் ஏற்பட வழிவகுக்கின்றது.
இங்குதான் விஞ்ஞானிகளுக்கு புதிய புதிய ஐடியாக்களும் ஆர்க்கிமிடிஸிற்குத்
திடீரென ஐடியா ஃப்ளாசியது போல் பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொண்டு நம் பிரச்சினைகளுக்கு வழிகாட்டுகின்றது.
அமெரிக்க
வெள்ளையர்களும் அப்படித்தான். பஞ்சகச்சம் அணிந்து,
குடுமி வைத்துக்கொண்டு, கழுத்தில்
ருத்ராட்சங்கள், காவி உடை....
இதையெல்லாவற்றையும் விட அவர்கள்
ப்யூர் வெஜிட்டேரியன்களாக இருப்பது என்னை
இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
கருப்பின நீக்ரோக்கள் அங்கே
அழகாய் வைணவர்களாய் கிருஷ்ண பக்தர்களாய் பஞ்சகச்சம் கட்டி நெற்றியில்
நாமமிட்டு.... அட போட வைக்கின்றது.
ஒரு கருப்பின ஐந்தாறு
வயதுள்ள சிறுவன். வியப்பாய் இருந்தது. பஞ்சகச்ச வேஷ்டி. நெற்றியில் நாமம். அவன்
வாயிலிருந்து, 'அழே..... கிஷுண்ணா... அழே கிஷூண்ணா... கிஷூண்ண
கிஷூண்ணா அழே... அழே...' என பாடிக்கொண்டிருந்தான்.
வெள்ளைப் பெண்மணிகளும்
அங்கிருக்கும் ராதா - கிருஷ்ணா வை மனமுருகி வழிபட்டனர். மெழுவர்த்தி
ஏற்றி வழிபட்டனர். நம் ஊரில் நெய்தீபம்
ஏற்றுவதற்குப் பதிலாக இங்கே
மெழுகுவர்த்தியோ....? ஊருக்கு ஊர் அவரவர் செளகர்யத்திற்கேற்ப
தீபம் ஏற்றுகின்றனரோ....?
பஜனை ஆரம்பம்.
மைலாப்பூர் முதியவர் அந்த தள்ளாத வயதிலும் டான்ஸ் ஆடினார். விஜய்யெல்லாம் ஆடுவது ஒரு டான்ஸா...? என சொல்லுமளவிற்கு மிக அற்புதமாக நடனமாடினார்.
டான்ஸ் பஜனை
நடந்துகொண்டிருந்தது. என் சின்ன வயது ஞாபகங்கள். ஊரிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும்
இரவினில் கிருஷ்ணன் கோவிலில் லாந்தர் விளக்கின்(மின்சாரம் இல்லாத
காலங்கள்...!) வெளிச்சத்தில்
குத்துவிளக்கு மையமாக எரிய
அதனைச் சுற்றி வட்டமாக நின்றுகொண்டு,
"ஆஞ்சநேய ஜீரா.. அனுமந்த
சூரா...வாயு குமாரா.. வானர வீரா..." என்றோ...
"நம்மாழ்வாரடி பணிவாய்... நம்மனமே
இனி நம்மாழ்வாரடி பணிவாய்.." என்று
அனைவருக்கும் பிடித்த அந்தப்
பாடலையோ அல்லது , "எந்த்த தூரம் ....போத்திவ்விரா..." என்ற ஒரு தியாகராஜ
கீர்த்தனையோ.... பார்வையாளனையும் நடனமாடுபவனையும் ஒருவித பரவசத்தில் ஆழ்த்தி லயத்தில்
லயித்து அந்த இரவு முழுதும் இன்னதென்று சொல்லொணா உணர்வுகள் உடலிலும்
உயிரிலும் நிரம்பி வழியும்... பேரானந்தப் பரவச நிலை.
இங்கேயும் அதே நிகழ்ந்து
கொண்டிருந்தது. மிருதங்கம் வாசிப்பவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்.
அவரின் இயல்பே அதுதான். பலமுறை அவரைப்
பார்த்திருக்கின்றேன் இங்கே.
எப்பொழுதும் ஒரு புன்முறுவல். உற்சாகமாய்... மிகவும் உற்சாகமாய்…
நான் தனியே நின்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
அவர்களின் நடனத்தினையும் இசையையும்
அந்த நீக்ரோ சிறுவனின் நடனத்திலும் அவன்
பாடமுயலும் அந்த மழலை மொழியும்
என்னை வெகுவாய் கவர்ந்தது. அந்த சிறுவனின்
வடிவில் இறைவன் இருப்பானோ....? அவனின் அந்த
கள்ளங்கபடமற்ற மனதினில் இறைவனோ...?
ஏன் மனிதனுக்கு மட்டும் இத்தனை
சிக்கல்கள்...? ஒன்று கிடைத்தால் அதில் திருப்தியில்லை.
"அது இப்படி இல்லையே....? நான் எதிர்பார்த்தது வேறு; ஆனால் நடந்தது வேறு... இதைவிட
பெட்டராய் இருந்தால் நல்லது..." என ஒப்புமை.
இதுதான் மனித இயல்போ…?
இவர்கள் அனைவருக்கும் அப்படி ஒரு பிரச்சினையில்தான் இறைவனை நாடி வந்திருக்கின்றனரோ....? அதோ அங்கே ஒரு பிரசங்கி; அவரின் வாழ்க்கையில்கூட இப்படி ஒரு அடிவிழுந்திருக்குமோ....? அப்படியாயின் இது பொருள் சார்ந்த புற விஷயமன்றோ...? இது நிறைவேறினால் அவர்களின் அபிலாஷை பூர்த்தியாகிவிடுமன்றோ....? எதில் உண்மையான நிறைவு....?
என் மனம் விரிந்தது.
பிரசங்கி உபநிசத்திலிருந்து ஒரு ஸ்லோகம் சொன்னார். அற்புதமான விளக்கமும் சொன்னார். அதனையே பலமுறை இனிமையாய் பாடிக்காட்டினர்.
நான் மெய்மறந்து அமர்ந்திருந்தேன்.
எல்லாம் முடிந்து அங்கே சிலையாய்
வீற்றிருந்த பிரபுபாதாவிற்கும் ஒரு பை
சொல்லிவிட்டு அந்த அமெரிக்கப்
பிரசங்கியிடம் சில சந்தேகங்களைக் கேட்டுவிட்டு பஜனை ஹாலிற்கு வெளியே வந்தேன்.
அங்கேயும் ஒரு அமெரிக்க சாமியார்
காவி உடையிலிருந்தார். என்னை அழைத்தார். வலுக்கட்டாயமாய் நமஸ்தே சொன்னார் நான்
சொல்லும்முன்பாகவே...
“ஆர் யூ ஃப்ரம் இண்டியா….?”
"யெஸ்"
"ஐயாம்.............. (எதோ
வாய்க்கு நுழையாத ஒரு சம்ஸ்க்ருதப் பெயரைச் சொன்னார்.)'
"ஐயாம் ரவீந்திரன் கிருஷ்ணசாமி....எ
சாஃப்ட்வேர் இண்ஜினியர்...."
இன்னும் அவரது புருவங்கள்
உயர்ந்தன.
“ஓ…. கிருஷ்ணசாமி…. கிருஷ்ணசாமி….?” என மகிழ்ச்சியும் ஆச்சர்யத்தினையும் வெளிப்படுத்தினார்.
“நீங்கள் ஒரு ஆன்மீகவாதியோ…?”
நான் நாயகன் ஸ்டைலில் கண்கலங்கி "தெரியலியேப்பா.... தெரியலியே......" என்றேன். ஏன் என்று கேட்டேன்.
"இல்லை.... உன் முகம் மிகவும் அமைதியாகவும்.... கொஞ்சம் தேஜஸாகவும் இருக்கின்றதே. அதனால்தான் கேட்டேன்…”
தான் இந்தியாவில்
பிறக்கவில்லையே என்ற வருத்தம் தன்னை மிகவும் வாட்டுவதாயும் தான் ஒரு ஹிந்து
குடும்பத்தில் பிறக்கவில்லையே என்று வருந்துவதாயும் இந்தியாவில்
பிறப்பதற்கும் ஒரு வரம் வேண்டும் என்றும் அது அனைவருக்கும் வாய்ப்பதில்லை என்றும்
மிகவும் உருக்கமாகக் கூறினார்.
நான் கைபிசைந்து நின்றேன். மனம்
நெகிழ்ச்சியாய் இருந்தது.
பின்னர் இன்னொரு அமெரிக்கர்
ஸ்டாலில் பேசினார். அவர் ஒரு பேக்கரி கடை
வைத்திருப்பதாயும் பாரதத்தில்
பிறப்பது ஒரு மிகப்பெரிய புண்ணியமென்றும்
"தாங்கள் என்னுடைய பேக்கரிக்கு
வரமுடியுமா....?" எனவும் கேட்டார்.
மணி இரவு 9 ஆகியிருந்தது. இன்னும் 2 மணிதூரம் காரில்
பயணிக்கவேண்டும். இன்னொரு நாள் கண்டிப்பாக வருகின்றோம் எனக்கூறிவிட்டு
ப்ரசாதம் வாங்கச் சென்றோம்.
அது டின்னர். ப்ரசாதமல்ல.
இத்தனைபேர்களா ப்யூர் வெஜிட்டேரியன்கள்....? ஆச்சர்யப்பட்டுப்போனேன். நம் இந்திய சைவ உணவுகளே பரிமாறப்பட்டன.
கார் பத்திரமாகவே இருந்தது.
காரில் இஸ்கான் பாடல்களை ஒலித்துக்கொண்டே அந்த இரவினில் ட்ரைவ் செய்தது மிகவும் இனிமையாக இருந்தது.
ஏனோ தெரியவில்லை....
இனம்புரியா ஒரு இன்பமும் ஆச்சரியமும் ஆற்றலும் கலந்த ஒரு உணர்வு
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரை அலைஅலையாய் பாய்ந்து படர்வதை உணர்கின்றேன்.
மேலே வானம்…. கீழே நியூயார்க்….( 6-July-2008.)
பகலில் தூங்கி எழும்பொழுது ஒரு
மென்சோகம் நம்மைக் கவ்விக்கொள்கின்றதே அது ஏன்...?
இன்னதென்று புரிபடா ஒரு
மென்சோகம். ஆனாலும் அதன் சுவை பிடிக்கின்றது. வலியும் இன்பமும் கலந்த
ஒரு வித்தியாசமான கலவை. அது எதோ நமக்கு சொல்ல விழைகின்றது. என்னவென்றே
புரிபடாமல் ஒவ்வொரு வார இறுதி பகல்களிலும் இது நிகழ்கின்றது...
அப்படி ஒரு வார விடுமுறை நாளில்
தூங்கியெழுந்ததும் ஏற்பட்ட அந்த மென்சோகத்திலிருந்து விடுபட கிச்சன் சென்று
மைக்ரோவேவில் ஏலக்காய் + இஞ்சி கலந்த டீ கலந்து (ஃபில்டர் காஃபி என்னாச்சின்னு யாரும்
குறுக்காலக் கேக்கப்படாது... குறிப்பா ஷைலஜாக்கா...!!!)
துளித்துளியாய் ரசித்து நாக்கின் மொட்டுக்களில் நனைத்து தொண்டை வழியே அதன்
தித்திப்பை நனைத்து வயிற்றிற்குள் இறங்க மூளையிலுள்ள நியூரான்கள்
சுறுசுறுப்பானது.
மணி பார்த்தேன். என் பிறந்தநாளுக்குப்
பரிசாக மைக்ரோசாஃப்ட் அண்ணன் பில்கேட்ஸ் அனுப்பிய லேட்டஸ்ட் விண்டோஸ் மொபைல் 3:00 PM என்று உணர்த்தியது. (உண்மைதான்…!)
வாக்
போகலாமா...? அருகிலிருக்கும் டைட்டானிக்கை ரசிக்கலாமா...? குயில்களின் இன்னிசையை
ரசிக்கலாமா...? Starbuckல் ஒரு காஃபி
குடிக்கலாமா...? மனதில் சலனங்களாய்
அலைகள்.
ச்ச்சடேரென ISKCON( International Society for Krishna
Consciousness) என் மெமரி டேட்டாபேஸிலிருந்து ட்ரிக்கர் ஆனது.
இது நியூயார்க்கில் Schermerhorn St, Brooklyn, NY 11217 ல் உள்ளது. நண்பனிடம் GPSஐ சுட்டுக்கொண்டு நானும் இன்னொரு நண்பனும் காரில் ISKCON ஐ நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
முதலில்
எனக்கும் இந்த ISKCONக்கும் என்ன தொடர்பு....?
எனக்கு போதிய
அளவு முதிர்ச்சியில்லாததால், பிரபுபாதா அவர்களின்
நூட்களை நான்
படிக்கும்பொழுது மிகவும் கடினமாக
உணர்ந்திருக்கின்றேன். முயற்சி செய்திருக்கின்றேன். மேலும் எனக்கு அதில் போதிய அளவு Convincing கிடைக்காததால் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்.அதன்
பின் எனக்கும்
ISKCONற்கும் அறவே தொடர்பற்றுப்
போனது.
இங்கே
நியூயார்க் வந்தபின் திரும்பவும் ISKCON னுடன் பரிச்சயம் ஏற்பட்டது. இங்கே கோயில்
என்றால் அது ஃபிளசிங்கிலிருக்கும் பிள்ளையார் கோயிலோ, Baldwynலிருக்கும் சீரடி ஷாய்
மந்திரோ அல்லது அருகில் நாயன்மார் வசிக்கும் நியூ ஜெர்சியிலிருக்கும் வெங்கடேஸ்வரையோதான்
தரிசிப்பது வழக்கம். யோகா...? இன்னும் கூட்டம் சேரவில்லை. நியூ ஜெர்சியில் மட்டும்
தவ மையம் இருக்கின்றது. நியூ யார்க்கில் இல்லை. அதனால் கோவில்
மட்டுமே.
காரினை பார்க்கிங் செய்ய மிகவும்
சிரமப்பட்டோம். நியூ யார்க்கில் கார் வைத்திருப்பது மிகப்பெரிய தலைவலியே....! கார்
பார்க்கிங் செய்யும்பொழுது அங்கே இரண்டு கறுப்பினர்கள் நின்றிருந்தனர். எங்களையே நோட்டம்விட்டுக் கொண்டிருந்தனர்.
மனம் பக்கென்றது.
(ஏனெனில் சமீபத்தில் நடந்த ஒரு துயர சம்பவம். என் நண்பன் ஒருவன் இரவு 9 மணி இருக்கும். ஊர்
அடங்கிய வேளை. ரெஸ்ட்டாரெண்ட்டில் சாப்பிட்டுவிட்டு அலைபேசியில்
யாருடனோ கதைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.
அவனைப் பின்பற்றி இரு
நீக்ரோக்கள். அவன் அணிந்திருந்த ஜாக்கட்டில் கத்தியால் குத்தி
நிறுத்தினர். அவனிடம் இருந்த செல்ஃபோனைப் பிடிங்கினர். பர்ஸ், கிரெடிட் கார்ட் என
அனைத்தையும் அபேஸ் பண்ணிவிட்டு ஓங்கி முகத்தில் குத்த, அவன் கதறிக்கொண்டே கீழே
விழ முதுகில் காலால் ஃபுட் பால் ஆடி, 'யூ ....பிளடி இண்டியன்ஸ்...'
என கோபம் கோபமாக கால்களால்
முதுகிலும் அடிவயிற்றிலும் நடனமாட.... நண்பன் ஒரு மாதகாலம் பெட்
ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை. இப்பொழுது எங்கள் கைகளில் ஒரு டாலர்கூட இல்லை.
அட்லீஸ்ட் கொஞ்சம் டாலர்களாவது கைவசம் வைத்திருப்பது நலம் உயிர் பிழைக்க…)
இப்பொழுதும் அது போல் நடக்குமோ
என பயத்தில் என்னுடல் நடுங்க ஆரம்பித்தது. அப்றம் தைரியம் வரவழைத்துக்கொண்டு
அவர்களிடமே சென்று இஸ்கானிற்கு வழிகேட்டோம். ஒரு தினுசாகப்
பார்த்துவிட்டு வழி சொன்னார்கள். திரும்பி வரும்பொழுது நம் கார் அங்கே இருக்குமா...? காரை காந்தி கணக்கினில் சேர்த்துவிடவேண்டியதுதான்
என்ற பயம்.
ISKCONனுள் சென்றால் நாம் இருப்பது இந்தியாவோ...? என பிரமிப்பினைத்
தருகின்றது.
அமெரிக்க வெள்ளையர்கள். ஸ்படிகமாக
வைணவர்களாய். நெற்றியில் U வடிவ நாமம். நடுவே மஞ்சள் வண்ணத்தில் ஒரு
நீண்ட கோடு. எனக்குள் நீண்ட நாட்களாய் ஒரு ஐயம்.
சைவர்கள ஏன் விபூதியை
கிடைமட்டமாகவும் வைணவர்கள் ஏன் நாமத்தினை
செங்குத்தாகவும்
இட்டுக்கொள்கின்றனர்....? நானும் இதுபற்றி ஒருமுறை என் குரு வேதாத்திரியிடம்
உரையாடியிருக்கின்றேன்.
குண்டலினி யோகாவில் ஆக்கினையிலிருந்து
துரியத்திற்கு தவ ஆற்றலை மாற்றியமைக்கலாம். ஆக்கினையிலிருந்து
துரியத்திற்கு ஒரு நுண்ணிய நரம்பும் அதனருகே மற்றுமிரு நரம்புகளும் துரியம்
என்ற பிரம்மரந்திரம் அடைந்து துவாதசாங்கம் ஏற்பட வழிவகுக்கின்றது.
இங்குதான் விஞ்ஞானிகளுக்கு புதிய புதிய ஐடியாக்களும் ஆர்க்கிமிடிஸிற்குத்
திடீரென ஐடியா ஃப்ளாசியது போல் பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொண்டு நம் பிரச்சினைகளுக்கு வழிகாட்டுகின்றது.
அமெரிக்க
வெள்ளையர்களும் அப்படித்தான். பஞ்சகச்சம் அணிந்து,
குடுமி வைத்துக்கொண்டு, கழுத்தில்
ருத்ராட்சங்கள், காவி உடை....
இதையெல்லாவற்றையும் விட அவர்கள்
ப்யூர் வெஜிட்டேரியன்களாக இருப்பது என்னை
இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
கருப்பின நீக்ரோக்கள் அங்கே
அழகாய் வைணவர்களாய் கிருஷ்ண பக்தர்களாய் பஞ்சகச்சம் கட்டி நெற்றியில்
நாமமிட்டு.... அட போட வைக்கின்றது.
ஒரு கருப்பின ஐந்தாறு
வயதுள்ள சிறுவன். வியப்பாய் இருந்தது. பஞ்சகச்ச வேஷ்டி. நெற்றியில் நாமம். அவன்
வாயிலிருந்து, 'அழே..... கிஷுண்ணா... அழே கிஷூண்ணா... கிஷூண்ண
கிஷூண்ணா அழே... அழே...' என பாடிக்கொண்டிருந்தான்.
https://plus.google.com/u/0/photos/116741673478425730602/albums/5777826158806137809
மேலே வானம்…. கீழே நியூயார்க்….( 6-July-2008.)
பகலில் தூங்கி எழும்பொழுது ஒரு
மென்சோகம் நம்மைக் கவ்விக்கொள்கின்றதே அது ஏன்...?
இன்னதென்று புரிபடா ஒரு
மென்சோகம். ஆனாலும் அதன் சுவை பிடிக்கின்றது. வலியும் இன்பமும் கலந்த
ஒரு வித்தியாசமான கலவை. அது எதோ நமக்கு சொல்ல விழைகின்றது. என்னவென்றே
புரிபடாமல் ஒவ்வொரு வார இறுதி பகல்களிலும் இது நிகழ்கின்றது...
அப்படி ஒரு வார விடுமுறை நாளில்
தூங்கியெழுந்ததும் ஏற்பட்ட அந்த மென்சோகத்திலிருந்து விடுபட கிச்சன் சென்று
மைக்ரோவேவில் ஏலக்காய் + இஞ்சி கலந்த டீ கலந்து (ஃபில்டர் காஃபி என்னாச்சின்னு யாரும்
குறுக்காலக் கேக்கப்படாது... குறிப்பா ஷைலஜாக்கா...!!!)
துளித்துளியாய் ரசித்து நாக்கின் மொட்டுக்களில் நனைத்து தொண்டை வழியே அதன்
தித்திப்பை நனைத்து வயிற்றிற்குள் இறங்க மூளையிலுள்ள நியூரான்கள்
சுறுசுறுப்பானது.
மணி பார்த்தேன். என் பிறந்தநாளுக்குப்
பரிசாக மைக்ரோசாஃப்ட் அண்ணன் பில்கேட்ஸ் அனுப்பிய லேட்டஸ்ட் விண்டோஸ் மொபைல் 3:00 PM என்று உணர்த்தியது. (உண்மைதான்…!)
வாக்
போகலாமா...? அருகிலிருக்கும் டைட்டானிக்கை ரசிக்கலாமா...? குயில்களின் இன்னிசையை
ரசிக்கலாமா...? Starbuckல் ஒரு காஃபி
குடிக்கலாமா...? மனதில் சலனங்களாய்
அலைகள்.
ச்ச்சடேரென ISKCON( International Society for Krishna
Consciousness) என் மெமரி டேட்டாபேஸிலிருந்து ட்ரிக்கர் ஆனது.
இது நியூயார்க்கில் Schermerhorn St, Brooklyn, NY 11217 ல் உள்ளது. நண்பனிடம் GPSஐ சுட்டுக்கொண்டு நானும் இன்னொரு நண்பனும் காரில் ISKCON ஐ நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
முதலில்
எனக்கும் இந்த ISKCONக்கும் என்ன தொடர்பு....?
எனக்கு போதிய
அளவு முதிர்ச்சியில்லாததால், பிரபுபாதா அவர்களின்
நூட்களை நான்
படிக்கும்பொழுது மிகவும் கடினமாக
உணர்ந்திருக்கின்றேன். முயற்சி செய்திருக்கின்றேன். மேலும் எனக்கு அதில் போதிய அளவு Convincing கிடைக்காததால் அத்துடன் நிறுத்திக்கொண்டேன்.அதன்
பின் எனக்கும்
ISKCONற்கும் அறவே தொடர்பற்றுப்
போனது.
இங்கே
நியூயார்க் வந்தபின் திரும்பவும் ISKCON னுடன் பரிச்சயம் ஏற்பட்டது. இங்கே கோயில்
என்றால் அது ஃபிளசிங்கிலிருக்கும் பிள்ளையார் கோயிலோ, Baldwynலிருக்கும் சீரடி ஷாய்
மந்திரோ அல்லது அருகில் நாயன்மார் வசிக்கும் நியூ ஜெர்சியிலிருக்கும் வெங்கடேஸ்வரையோதான்
தரிசிப்பது வழக்கம். யோகா...? இன்னும் கூட்டம் சேரவில்லை. நியூ ஜெர்சியில் மட்டும்
தவ மையம் இருக்கின்றது. நியூ யார்க்கில் இல்லை. அதனால் கோவில்
மட்டுமே.
காரினை பார்க்கிங் செய்ய மிகவும்
சிரமப்பட்டோம். நியூ யார்க்கில் கார் வைத்திருப்பது மிகப்பெரிய தலைவலியே....! கார்
பார்க்கிங் செய்யும்பொழுது அங்கே இரண்டு கறுப்பினர்கள் நின்றிருந்தனர். எங்களையே நோட்டம்விட்டுக் கொண்டிருந்தனர்.
மனம் பக்கென்றது.
(ஏனெனில் சமீபத்தில் நடந்த ஒரு துயர சம்பவம். என் நண்பன் ஒருவன் இரவு 9 மணி இருக்கும். ஊர்
அடங்கிய வேளை. ரெஸ்ட்டாரெண்ட்டில் சாப்பிட்டுவிட்டு அலைபேசியில்
யாருடனோ கதைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.
அவனைப் பின்பற்றி இரு
நீக்ரோக்கள். அவன் அணிந்திருந்த ஜாக்கட்டில் கத்தியால் குத்தி
நிறுத்தினர். அவனிடம் இருந்த செல்ஃபோனைப் பிடிங்கினர். பர்ஸ், கிரெடிட் கார்ட் என
அனைத்தையும் அபேஸ் பண்ணிவிட்டு ஓங்கி முகத்தில் குத்த, அவன் கதறிக்கொண்டே கீழே
விழ முதுகில் காலால் ஃபுட் பால் ஆடி, 'யூ ....பிளடி இண்டியன்ஸ்...'
என கோபம் கோபமாக கால்களால்
முதுகிலும் அடிவயிற்றிலும் நடனமாட.... நண்பன் ஒரு மாதகாலம் பெட்
ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை. இப்பொழுது எங்கள் கைகளில் ஒரு டாலர்கூட இல்லை.
அட்லீஸ்ட் கொஞ்சம் டாலர்களாவது கைவசம் வைத்திருப்பது நலம் உயிர் பிழைக்க…)
இப்பொழுதும் அது போல் நடக்குமோ
என பயத்தில் என்னுடல் நடுங்க ஆரம்பித்தது. அப்றம் தைரியம் வரவழைத்துக்கொண்டு
அவர்களிடமே சென்று இஸ்கானிற்கு வழிகேட்டோம். ஒரு தினுசாகப்
பார்த்துவிட்டு வழி சொன்னார்கள். திரும்பி வரும்பொழுது நம் கார் அங்கே இருக்குமா...? காரை காந்தி கணக்கினில் சேர்த்துவிடவேண்டியதுதான்
என்ற பயம்.
ISKCONனுள் சென்றால் நாம் இருப்பது இந்தியாவோ...? என பிரமிப்பினைத்
தருகின்றது.
அமெரிக்க வெள்ளையர்கள். ஸ்படிகமாக
வைணவர்களாய். நெற்றியில் U வடிவ நாமம். நடுவே மஞ்சள் வண்ணத்தில் ஒரு
நீண்ட கோடு. எனக்குள் நீண்ட நாட்களாய் ஒரு ஐயம்.
சைவர்கள ஏன் விபூதியை
கிடைமட்டமாகவும் வைணவர்கள் ஏன் நாமத்தினை
செங்குத்தாகவும்
இட்டுக்கொள்கின்றனர்....? நானும் இதுபற்றி ஒருமுறை என் குரு வேதாத்திரியிடம்
உரையாடியிருக்கின்றேன்.
குண்டலினி யோகாவில் ஆக்கினையிலிருந்து
துரியத்திற்கு தவ ஆற்றலை மாற்றியமைக்கலாம். ஆக்கினையிலிருந்து
துரியத்திற்கு ஒரு நுண்ணிய நரம்பும் அதனருகே மற்றுமிரு நரம்புகளும் துரியம்
என்ற பிரம்மரந்திரம் அடைந்து துவாதசாங்கம் ஏற்பட வழிவகுக்கின்றது.
இங்குதான் விஞ்ஞானிகளுக்கு புதிய புதிய ஐடியாக்களும் ஆர்க்கிமிடிஸிற்குத்
திடீரென ஐடியா ஃப்ளாசியது போல் பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொண்டு நம் பிரச்சினைகளுக்கு வழிகாட்டுகின்றது.
அமெரிக்க
வெள்ளையர்களும் அப்படித்தான். பஞ்சகச்சம் அணிந்து,
குடுமி வைத்துக்கொண்டு, கழுத்தில்
ருத்ராட்சங்கள், காவி உடை....
இதையெல்லாவற்றையும் விட அவர்கள்
ப்யூர் வெஜிட்டேரியன்களாக இருப்பது என்னை
இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
கருப்பின நீக்ரோக்கள் அங்கே
அழகாய் வைணவர்களாய் கிருஷ்ண பக்தர்களாய் பஞ்சகச்சம் கட்டி நெற்றியில்
நாமமிட்டு.... அட போட வைக்கின்றது.
ஒரு கருப்பின ஐந்தாறு
வயதுள்ள சிறுவன். வியப்பாய் இருந்தது. பஞ்சகச்ச வேஷ்டி. நெற்றியில் நாமம். அவன்
வாயிலிருந்து, 'அழே..... கிஷுண்ணா... அழே கிஷூண்ணா... கிஷூண்ண
கிஷூண்ணா அழே... அழே...' என பாடிக்கொண்டிருந்தான்.

ரிஷி என்பது இவருக்குக் காரணப் பெயர்.நல்ல விவரணை. இனிய பதிவு. நயமிகு அனுபவம்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
Follow my blogs on http://tnelango.blogspot.com/
மேலே வானம்...கீழே நியூ யார்க்...
வானம்-4 யார்க்-1 (9-July-2008)
Joe Ann. இந்தப் பெண்மணி என்னுடன் பணிபுரியும் ஒரு அமெரிக்க மூதாட்டி. இவர் அலுவலக நிர்வாகப் பொறுப்புக்களைக் கவனித்துக் கொள்கின்றார்.
இவர் ஒரு சுவாரசியமானவர். என்னைக் கண்டால் கேலியும் கிண்டலும் உற்சாகமாய் தொற்றிக்கொள்ளும். செல்லமாக அடிப்பார். இன்னும் அன்பு அதிகமானால் என் தாடையைப் பிடித்து, 'My dear Sweet Boy…. You resemble my son…' என வசனங்கள் நீளும். நான் கூச்சத்தினால் நெளிவேன்.
'ஒரு நாள் என் மகனை உன்னிடம் அறிமுகப்படுத்துகின்றேன். அவனும் உன்போல்தான். நீ என் பேரக் குழந்தைகளை அவ்வப்பொழுது நினைவுபடுத்துகின்றாய்......'
அவர் என்னை இப்படித் தன் பேரக்குழந்தைகளுடன் ஒப்பிடுவது எனக்கு மிகவும் வருதத்தையே கொடுக்கும். ஏனெனில் அக்குழந்தைகள் இரண்டாம் வகுப்பும் ஒன்றாம் வகுப்பும் பயிலும் சின்னஞ்சிறார்கள். எனக்கு அறிவு வளர்ச்சி குறைவு என்பதினை இப்படி சொல்கின்றாரா...? அல்லது என் உருவம் கண்டு அப்படி சொல்கின்றாரா...? அல்லது நான் கெரகமே என 'ஙே' என விழிப்பதைக் கண்டு சொல்கின்றாரா...? எனப் புரியாமல் நான் குழம்புவதைக் கண்டு அவர் மகிழ்வார்.
அவர் அடிக்கடி, 'என்ன ஒரு கஷ்டமான வேலை...! தலைவலிக்கின்றது....' எனத் தன் வேலையினை சலித்துக்கொள்வார். ஆனாலும் கடமையினைச் சரியாக முடித்துவிடுவார். நான்சி என்ற பெண்மணி. இரு குழந்தைகளுக்குத் தாயான இவர், ஜோ ஆனுடன் சேர்ந்து கொண்டு என்னைக் கலாய்ப்பதில் ஒரு சந்தோஷம். நான்சியின் மூத்த புதல்வன் ஸ்டோனிப்ரூக் யுனிவர்சிடியில் ஒரு சிறந்த கால்பந்தாட்டவீரன்.
நான் அவ்வப்பொழுது அலுவலகத்திற்கு வெளியே யாரும் வராத ஒரு இடத்திற்குச் சென்று சில மணித்துளிகள் மட்டுமே விரைவாகக் கண்களை
மூடி தவமியற்றுவது வழக்கம். மின்கலம் மீண்டும் மின்சக்தி தேக்கப்பட்ட ஒரு நிறைவு.
அங்கே புகைபிடிப்பவர்களும் இடையிடையே வந்து புண்பட்ட மனதினை புகைவிட்டு ஆற்றிச் செல்வர். சொல்லிவைத்தது போல் அனைவருமே பெண்கள்.
நான் நான்சியிடம் கூட வினவியிருக்கின்றேன், 'புகை பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானதே... நீங்கள் இப்படி புகைபிடிப்பதை உங்கள் அம்மா, அப்பா திட்டியதில்லையா....?'
அவர்கள் நான் ஏதோ சொல்லக்கூடாததை சொல்லியது போல் இடி இடியெனச் சிரித்தனர்.
'அவர்கள் பரலோகத்திலிருந்து வந்தா திட்டுவார்கள்...? சரிதான்... நீ ஒரு மாங்கா மடையன்...'
ஒருமுறை நான்சியும் அவரது கணவரும், ஜோ ஆன்னும் அவரது கணவரும் ஒரு நண்பரின் பிறந்த நாள் விழாவிற்கு அந்த மிகப்பெரிய ஹோட்டலுக்குக் கொண்டாட எங்களுடன் வந்திருந்தனர். அங்கு நிகழ்ந்த அந்த சந்திப்பிலும் விழாவினிலும் அனைவரும் (என்னைத் தவிர...!) மது எடுத்துக் கொள்வதும் விதவிதமான விலங்கின உணவுகளை எடுத்துக்கொள்வதும் இங்கே வழக்கம். அப்பொழுது ஜோ ஆன்னின் கணவரைச் சந்தித்திருக்கின்றேன்.
நம் மும்பை பட உலகில் பப்பு வர்மா என்றொரு சண்டைப் பயிற்சி நிபுணர் நினைவிருக்கின்றதா...? அந்த பப்பு இவரின் மினியேச்சரோ என எண்ணத் தோன்றியது. பப்புவினைவிட அதிக உயரம்; அதிக உடல் எடை; முறுக்கேறிய உடல். மாதமொருமுறை இரண்டு மூன்று நாட்கள் கடலில் மிதக்கும் குடியிருப்பில் சொகுசான வாழ்வு; மீன் பிடி படகுகள் என சற்றே வசதியாக அவர்களது வாழ்க்கை பயணித்துக் கொண்டிருந்தது.
ஒரு முறை உற்சாகமான ஒரு வார இறுதியின் வெள்ளிக்கிழமையின் காலைப் பொழுதினில் காலைச் சிற்றுண்டியாக Dunkin Donutsலிருந்து வரவழைக்கப்பட்ட உணவுகளை அனைவரும் கொரித்துக்கொண்டிருந்த வேளையில் ஜோ ஆன் தன் புதல்வனையும் தன் பேரக்குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். என்னிடம் அறிமுகப்படுத்தினார்.
அவரது புதல்வரின் உருவ அமைப்பும் என்னுடைய உருவ அமைப்பும் துளிக்கூட தொடர்பில்லை. நானோ ஆசியக் கண்டத்தினைச் சார்ந்த 200 % தென்கோடி தமிழ்நாட்டினைச் சார்ந்த ஒரு கிராமவாசி. அவரது புதல்வனோ மிகவும் உயரமாய் அமானுஷ்ய உருவம் கொண்ட ஒரு அமெரிக்கன்.
'ஆஹா.... அவர் உருவத்தினை ஒப்பிட்டு கேலி செய்கின்றாரோ....?' என பின்னர்தான் என் மரமண்டைக்குப் புரிய வந்தது. அவரது பேரக்குழந்தைகள் மட்டும் என்னுடன் நட்புக்கரம் நீட்டிவிளையாடினர். எல்லா குழந்தைகளுமே ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்டவராகவே இருக்கின்றனர். இந்தக் குழந்தைகளும் நம் குழந்தைகள் போன்றே சாக்லெட்டிற்கு ஆசைப்படுகின்றனர்...! (எலேய்.... குழந்தைன்னா சாக்லேட் பிடிக்கும்னு தெரியாதா...?ன்னு நீங்கள் என்னை அடிக்க வருவதற்குள் நான் தப்பியோடிவிடவேண்டும். ஆண்டவா என்னைக் காப்பாத்து...!)
அண்மைக் காலங்களில் ஜோ ஆன் சற்றே கலங்கியவராகக் காணப்பட்டார். அவரது கேலியும் கிண்டலும் இப்பொழுது விடைபெற்றிருந்தது. மெளனமாகத் தன் கடமையிலேயே குறியாக இருந்தார்.
அவ்வப்பொழுது அலுவலகத்திற்கு, பாடசாலை செல்லும் சிறுவர்கள் மட்டம் போடுவது போன்று காணாமல் போக ஆரம்பித்திருந்தார். அவரது முகத்திலும் உரையாடல்களிலும் ஒரு மென்சோகம்; எதையோ இழக்கப்போகும் ஒரு அமானுஷ்ய பயம். என் மூளையின் நியூரான்களில் ஒரு அபாய மணி ஒலித்துக்கொண்டிருந்தது.
ஒரு நாள் நான் யாருமில்லா ஒரு தனிமையான தருணத்தில் கேட்டுவிட்டேன்.
'உங்களின் அந்த உற்சாகம் என்னவாயிற்று...? இப்பொழுதெல்லாம் நீங்கள் ஏன் என்னைக் கேலியும் கிண்டலும் செய்வதில்லை....?'
ஆழ்ந்த மெளனமாக இருந்தார். எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். 'இவனிடம் சொல்லி என்ன பயன்...? ' என்ற ஒரு எண்ணவோட்டம் அவரது மனதினில் ஓடிக்கொண்டிருந்த்தை என்னால் வெகு எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆழ்ந்த பெருமூச்சிற்குப் பின்னர் தன் சோகத்தினைக் கொட்டினார்.
அவரது கணவருக்கு அண்மைக் காலங்களில் உடல்நிலை சரியில்லாமல் போனதாயும் பரிசோதனைகளின் முடிவு புற்றுநோய் எனக் காட்டுவதாயும் சொன்னார்.
சொல்லிவிட்டுத் தன் காரைக் கிளப்பிச்சென்றார்.
அவரது கார் என் கண்களிலிருந்து புள்ளி புள்ளியாகிப் பின்னர் மறைந்து போனது.
ஆமாம்.... இந்த மாதிரி நீளமாக இடுகைகள் எழுதுவது என் ஒருவனுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்று
17 ஆகஸ்ட், 2012 10:12 pm அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:
ஆமாம்.... இந்த மாதிரி நீளமாக இடுகைகள் எழுதுவது என் ஒருவனுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்று
ஈண்டு ஒரு திசைக்களவு முயலப்படுது
மேலே வானம்.... கீழே நியூ யார்க்...
வானம்-4 நியூ யார்க் -1 (10-August-2008 Sunday)
இன்னும் மதிய உணவு சாப்பிடவில்லை. இன்றும் நேற்றுமாதிரி கிரிக்கெட் விளையாடலாமா...? என யோசித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் பந்து ஆசையுடன் என்னை முத்தமிடும்பொழுது எனக்குள் எத்தனை காயங்கள்....?. என் மாணவப் பருவத்தில் முன்பு ஒரு முறை என் மூக்கையும் நெற்றியையும் பதம் பார்த்தது.
சென்ற வருடமும் இங்கே நியூயார்க்கில் கிரிக்கெட் விளையாடும்பொழுது ஒரு சின்ன விபத்து. ஒவ்வொருமுறை பந்து விழும்பொழுதெல்லாம் உலகமே இருண்டுவிட்டது போன்ற ஒரு உணர்வு. இனிமேல் கிரிக்கெட்டை மூட்டை கட்டி வைத்துவிடவேண்டும் என ஒவ்வொருமுறையும் நினைப்பதுண்டு. நேற்றும் இரவு 8 மணி வரை கிரிக்கெட் விளையாடியதில் வேகமாக வந்த பந்தினைத் தடுக்க, அது சரியாக என் கால்களின் முட்டியால் தடுக்க… முட்டி, பந்தினால் முத்தமிடப்பட்டு வலியால் துடித்தது. வீட்டுப் பெரியவர்கள் ஃபோன் பண்ணி, இனிமேல் கிரிக்கெட் மட்டையே பிடிக்கக்கூடாது என தடா போட்டதினால் ஒரு இரண்டொரு நாட்களுக்கு (மட்டுமே...!) நல்ல பையனாய் இருந்தாக வேண்டிய சூழல்.
கிரிக்கெட்டிற்காகத் தேர்வுகளையே ஒத்திவைத்த சரித்திரம் எங்கள் யுனிவர்சிடியில் நடந்தது. அப்பொழுது உலகக் கிரிக்கெட். நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம். எனவே யுனிவர்சிடி துணைவேந்தருடன் பேசி பல்கலைத் தேர்வுகளை கிரிக்கெட் ஜூரம் முடிந்தவுடன் நடத்தும்படிக் கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்று கிரிக்கெட்டைக் கண்டு மகிழ்ந்தோம். இறுதியாண்டில் பல்கலைபோட்டியில் எதிர்பாராவிதமாகக் கடைசி பந்தில் நான் அடித்த ஒரு சிக்சர் எங்கள் கிரிக்கெட் அணி வெற்றிபெற காரணமாகிப்போனது என்னாலேயே அந்த நொடியில் நம்பமுடியவில்லை. ஏனெனில் நான் கிரிக்கெட்டினை என்றுமே நேர்த்தியாக விளையாடியதில்லை. அதனை கிட்டி என அழைக்கப்படும் கில்லி போன்றே எங்கள் கிராமத்து ஸ்டைலில் விளையாடக்கூடியவன்.
அப்பொழுது கவாஸ்கர் புகழின் உச்சியிலிருந்தார். ஆனாலும் எனக்கு கபில் மிகப்பெரிய ஹீரோவாகத் திகழ்ந்தார். அதற்குப் பல காரணங்கள். முதன்மையான காரணம் அவரது தன்னம்பிக்கை கலந்த அந்த ஆளுமை. என் வாழ்வின் ஒவ்வொரு கடினமான பொழுதுகளிலும் கபில் பந்துவீசுவதையும் உலகக்கோப்பைக்காக தனியொரு ஆளாகவே நின்று ஜிம்பாப்வேயை வெளுத்துக் கட்டியதும் மட்டுமே அடிக்கடி என் மனதினில் படமாய் விரிவடையும்.(இத்தனைக்கும் அந்த உலகக்கோப்பையின்பொழுது எனக்கு கிரிக்கெட் அவ்வளவு பரிச்சயம் இல்லை. மேலும் டிவிகள் வராத காலகட்டங்கள். எல்லாம் பத்திரிகைகளின் உதவியால்...) உடனே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
எங்கள் யுனிவர்சிடியில் பெளதிகத்தில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வெளியுலகிற்கு ஒளிவீசிய விஞ்ஞானி்கள் பலர். எனவே வருடத்திற்கு இருவர் அல்லது மூவர் மட்டுமே தேர்ச்சியடையவேண்டும் என்பது அன்றைய காலகட்டங்களில் எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்தது. வைவா என்றொரு சடங்கு ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு மூன்று மணிநேரம் நிகழும். ஐஐடி,ஐஐஎஸ்சி மொசைக் தலை பேராசான்களும் பிஹெச்யு, புனே யுனிவர்சிடி என பல்வேறு பல்கலைக்கழகப் பேராசான்கள் இரையை விரட்டும் புலி போல ஒரு குழுவாக அமர்ந்திருப்பர். எங்கள் யுனிவர்சிடியில் எங்கள் துறையில் முதுநிலை இறுதியாண்டில் ஒரு 12 மாணவர்களும் ஒரே ஒரு மாணவியும் இருந்தோம் எங்கள் 13 மாணவர்களுக்கும் வைவா மட்டும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும். முதல் பலியாடு சாட்சாத் நானேதான்.
Millman Halkias, JD Ryder, J.Brophy, C.Kittel, Ritz & Milfred, Malvino Leach, Irving Kaplan, John Benedict, Eugen Merzbacher, Robert D Evans இன்னும் பல ஜாம்பவான்களின் தலையணைப் புத்தகங்களைத் தலைகீழாய் கரைத்துகுடித்துவிட்டும் ஐஐஎஸ்சி யிலிருந்து வெளிவரும் ஜர்னல்களையும் படித்துவிட்டு வைவாவிற்குச் சென்றால் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க இயலாது. எல்லாம் நம் மூளையைப் பயன்படுத்தி பதிலளிக்கும்படியாய் இருக்கும்.(அதுதான் நமக்கு இல்லாத ஒன்றாயிற்றே...!) பாதி பயத்தில் நாக்கு குழறி உடலெல்லாம் வேர்த்துக் கொட்டும்.
அப்பொழுதெல்லாம் கபில்தேவின் அந்த தன்னம்ப்பிகையினையே நான் மானசீகமாக உருவகிப்பேன். நானும் இப்பொழுது ஒரு கபில்தேவ். வினாக்கள் என்ற பந்துகளை பவுண்டரிகளுக்கும் சிக்சர்களுக்கு விளாசுவதைப்போல் கற்பனை செய்துகொள்வேன். ஸ்ரீகாந்தின் அதிரடி ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். வெங்சர்க்கார் நிதானமாய் விளையாடி 50 ரன்களை சேர்த்துவிட்டு தன் கடமை முடிந்தது என்று போய்விடுவார். ரவி சாஸ்திரியை 'கட்டை போட்றான்' என கமெண்ட் அடிப்போம். சில (பல) வேளைகளில் பொறுப்பில்லாமல் ஆடுவார். மணிந்தர் சிங்கை முனி மணிந்தர் என்போம். கவாஸ்கர் உலகத் தரத்திலிருந்தாலும் அவர் ஒரு நாள் ஆட்டத்தில் 1987 ல் ஜிம்பாப்வேக்கு (சரிதானே...? ) எதிராக முதன் முறையாக சதம் அடித்தார். அவரது ஆட்டம் என்னை ஏனோ கவரவில்லை.
வைவாவில் இந்த உத்தி எனக்கு கைகொடுத்தது. Linear ICயும் Non-Linear ICயும் எப்படி வேறுபடுகின்றது என ஒரு ஐஐடி புரபசர் கேட்க அன்று அதிகாலை 6 மணிக்குத்தான் நூலகத்தில் அன்றைய லேட்டஸ்ட் ஆராய்ச்சி நிலவரம்(Integrated Circuit) ஐஐஎஸ் சி மாகசினைப் படித்துவிட்டிருந்தேன். காலை 7 மணிக்கு எனக்கு வைவா. நான் முதல் மாணவன் என்பதால் அது மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்டு கொண்டிருந்தது. கபில்தேவ் மாதிரி தன்னம்பிக்கையுடன் விளாசித்தள்ளினேன். ஆனாலும் அந்த ஐஐடி புரபசர் நம்ப மறுத்தார். நான் அந்த மாகசினில் இந்த பக்கத்தில் இப்படித்தான் அதனது I-V Features Curve இருக்கின்றது என ஒரு குறிப்பிட்ட IC யினை மையமாக வைத்து Derivation னெல்லாம் கரும்பலகையில் derive பண்ணி சரியென வாதிட்டேன். அதற்குக் காரணம் கபில்தேவின் அந்த தன்னம்பிக்கை மனோபாவமே. வைவாவில் பாசான அந்த மூன்று மாணர்களுள் அடியேனும் ஒருவன்....! மற்ற அனைவரும் கடின உழைப்பாளிகள் + (Born Genius) எனப்படும் அறிவாளிகள். நான் ஒருவனே ஒன்றாம் வாய்ப்பாடு கூடத் தெரியாத ஒரு மக்குப் பையனாய் கடைசி பென்ச்சில் பாடங்கள் புரியாமல் தூங்கி வழிவேன்.
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தென்கோடியில் ஒரு குக் கிராமம். கில்லி, பேந்தான், கபடி, நீச்சலடித்து விளையாடுதல், காக்கா குஞ்சு, கள்ளம்போலீஸ், ஐஸ்ப்ளே, பேங்க்கர், பாவக்கூத்து, நாடகம், நடனம்ன்ன்னு இப்படித்தான் எங்களோட விளையாட்டுக்களிருக்கும். கிரிக்கெட்டுன்னா என்னன்னே எனக்குத் தெரியாம இருந்துச்சி பள்ளி இறுதிவரை. பள்ளியில் Soft Ball என்ற விளையாட்டினை நாங்கள் விரும்பி விளையாடுவோம். அதுவும் ஏறக்குறைய கிரிக்கெட்டைப் போன்றே இருக்கும். ஆனால் அதிக வித்தியாசங்கள்.
ஒரு முறை வானொலியில் ஒரு வர்ணனை கேட்க நேரிட்டது. அப்பொழுது அது எதோ ஒரு விளையாட்டு என்று மட்டும் எனக்குப் புரிந்தது. அதில் அந்த வர்ணனையாளர், 'பந்து இப்பொழுது பெளரிடமிருந்து (இதுக்கு தமிழ்ல்ல என்னன்னு தெரியல. ஆனா அந்த வர்ணனையாளர் தூய தமிழ்ல்லதான் சொன்னார்.) மட்டையாளரை நோக்க்சிச் செல்கின்றது..... மட்டை மீது பட்டு தெறித்துச் செல்கின்றது... தடுப்பாளர் அதனை எக்கிப் பிடிக்க முயல்கின்றார்.... மழுமழுவென சேவிங் செய்யப்பட்ட மீசையிலிருக்கும் அந்த மீசைமுடி அளவு இம்மியின் தொலைவில் பந்து நழுவிச்செல்கின்றது...' என்ற பொருள் பட வர்ணித்தார். இந்த வர்ணனை என்னை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. முதலில் அது Soft Ball லோ என நினைத்தேன். பின்னர் அது கிரிக்கெட் எனத் தெரிந்தது. இப்படித்தான் எனக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்பொழுது அந்த வர்ணனையாளர் வர்ணனை செய்த விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவரது பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் அது 1980 அல்லது 1981 (வருடம் கூட நினைவிலில்லை) களில் சேப்பாக்கத்தில் நடந்தது. இந்தியாவிற்கும் இன்னொரு அணிக்கும். கிரிக்கெட்டில் அப்பொழுது எனக்கு பரிச்சயமில்லாததால் இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. பின்னால் இந்த வர்ணனையாளர் என் எழுத்துக்களுக்கு விசிறியாகி நண்பரானார். இது என் வாழ்வில் நம்ப முடியா ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. எல்லாம் இறைவனின் விளையாட்டோ என எண்ணிக்கொள்வதுண்டு.
1996 கோப்பையில் இல்ங்கை அணி ஒரு புதிய பாடம் சொல்லிக்கொடுத்தது. ஒரு பந்திற்கு ஒரு ஓட்டம் என 300 பந்துகளில் 300 ஓட்டங்களை எடுக்கவேண்டும் என. அதுவரை கிரிக்கெட்டில் யாருமே அப்படி சிந்திக்கவில்லை. முதல் பத்து பதினைந்து ஓவர்களில் கட்டை போட்டு அவுட்டாகாமல் நிற்பது; பின்னர் கடைசி பத்து ஓவர்களில் அடித்து அதிரடி ஆட்டம் ஆடுவது என ஒரு 200 ஓட்டங்கள் எடுத்தாலே மகிழ்ச்சியாகிவிடும் காலமது. இலங்கை அணியே அதனை உடைத்தெறிந்தது. ஆரம்பம் முதலே அடித்து ஆடி ஒரு பந்து - ஒரு ஓட்டம் அதில் குறியாக இருந்தனர். காலம் கைகூடும்பொழுதெல்லாம் சிக்சரும் ஃபோருமாக வெளுத்து சர்வசாதாரணமாக 300 ஓட்டங்களை எவ்வித சிரமமுன்றி எடுக்க முடிந்தது. மேலும் அவ்வணியின் தலைவர் அவ்வணியை மிகவும் கட்டுக்கோப்பாக நடத்திச் சென்றார். சில சமயங்களில் ஜெயசூர்யா தன் வெற்றிக்களிப்பு மமதையில் கொஞ்சம் துள்ளும்பொழுதெல்லாம் விழிப்பு நிலைக்கு கொண்டு வந்து அனைவரையும் அடக்க ஒடுக்கமாய் நடக்க வழிவகுத்தார் அணித்தலைவர். எதிரணியினர் கூட இவ்வணியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தது. எங்கு விளையாடுகின்றனரோ அந்த ஊர் மக்களும் ஆதரவளித்தனர். ஆட்டம் முடிந்ததும் ஒரு பிரார்த்தனை. பெளத்த மதத்திலிருந்த ஜென் தவத்தினை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்தினர். தன்னிலை இழக்காது நடுநிலை பிசகாது அளவற்ற பொறுமையுடன் நடந்துகொண்டனர். மிகவும் பொறுப்பான தலைமை.
இப்படி கிரிக்கெட் இந்த நொடிவரை என் வாழ்வில் என்னையறியாமலேயே பின்னிப் பிணைந்துவிட்டது
சரி மெய்ன் கதைக்கு வருவோம்....
பக்கத்து அபார்ட்மெண்ட் நண்பர்கள் வருகை. வெளியே எங்காவது கிளம்பலாம். இரண்டு தக்காளிகளை ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் கூழாகும் வரை வதக்கி அதன்பின்னர் அதனுடன் தட்டிய இஞ்சி+ பூண்டுத் துண்டுகள், ஒரு தேக்கரண்டி சீரகம், அரைத் தேக்கரண்டி மிளகு, மஞ்சள் பொடி, ரசப்பொடி, உப்பு, மல்லித் தழை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கினால் இதுவரை இல்லாத ஒரு புதிய தொரு வடிவம் பெற்றது. ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து, புளியை மைக்ரோவேவ்வில் சூடுபடுத்தி கரைத்து அந்த தக்காளிக் கலவையில் கலந்து கொதிக்கவைதது,. மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தாளிதம் செய்து இறக்கினால் அருமையான ரசம் தயாரானது. சாப்பிடப்போவது நண்பர்கள்தானே என நினைத்து 'அப்பாடா... அது அவர்களின் தலைவிதி....! விதி அப்படி இருக்கும்பொழுது நான் என்ன செய்துவிடமுடியும்....?' என்னை நான் சிறிது ஆற்றுப்படுத்திக்கொண்டேன்.
முக்தமயி சர்க்கார். இந்தப்பெண் சுவீடனில் MS Computer Science முடித்தகையுடன் சென்றவருடம் இங்கே வந்துவிட்டார். Md.Mulla Khairul Bhasar இந்தப் பையனும் Swedan MS. இருவரும் பங்களாதேஷில் டாக்கா. ஏறக்குறைய நம் பெங்காலிகளின் வாழ்க்கை முறையையொத்து இருக்கின்றது பங்களாதேஷ் மக்களின் வாழ்க்கை முறை. இவர்களிருவரும் என் சமையலின் தீவிர ரசிகர்கள்.
சாப்பிட்டு முடித்ததும் நடையை ஆரம்பித்தோம்.
எங்கு செல்லலாம்....?
நான் வசிக்கும் இந்தக் கிராமத்தினைப் பற்றி...
Port Jefferson. இதுதான் நான் வசிக்கும் ஒரு அழகிய கிராமம். இந்த கிராமம் பணக்காரர்கள் தங்களது வாழ்க்கையை அனுபவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கிராமம். விலைவாசிகள் நியூ யார்க்கில் மன்ஹாட்டன் போலவே இங்கும் அதிகம். ஆனால் நியூ யார்க் போன்று ஜன நெருக்கடி இருப்பதில்லை. இங்கே தொழில்கள் என்றால் எதுவும் மிகப்பெரிய அளவில் இல்லை. மீன்பிடி உண்டு. துறைமுகம் உண்டு. மற்ற தொழில்களெல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்களில். இந்த கிராமம் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான அமைதியான வாழ்க்கை வாழ்வதற்காகவே அமைக்கப்பட்டது....என் பெரும்பாலான ஓய்வு நேரங்கள் இங்கிருக்கும் நூலகத்தில் செலவழியும்.
துறைமுகம் நோக்கி நடைபயின்றோம்.
வழியில் ஒரு ஐஸ்க்ரீம் பார்லருக்குள் நுழைந்தோம். ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் ஒரு குறிப்பிட்ட ஐஸ்க்ரீம்தான் வேண்டும் என அடம்பிடித்தான். தன் கோபத்தினை தன் முக பாவங்களில் காட்டினான். கை கால்களை உதறி கத்த ஆரம்பித்தான். குழந்தைகள் கோபப்படும்பொழுதும் கூட எவ்வளவு அழகாய் இருக்கின்றனர்....? குழந்தைகள் எவ்வளவு மென்மையானவர்கள்....? ...
ஒரு ஆறுமாதக் குழந்தையைப் பாருங்கள்...! பஞ்சுபோலிருக்கும் அந்தப் பிஞ்சுக் கரங்கள்.... ! தன் கண்களை இடுக்கி, 'ஆர்ரா இவன்....?' எனப் பார்க்கும் அந்த பார்வை... நாம் குழந்தையின் கரங்களைப் பற்றினால் தன் பிஞ்சுக் கரங்களினால் நம்மை இறுகப் பற்றிக்கொள்கின்றதே... அந்த பிடிப்பில், 'நீ என்னைக் கைவிட்டாலும் நான் உன்னைக் கைவிடமாட்டேன்....? ' என்ற தகவலைச் சொல்கின்றதா அல்லது ' நான் இப்பொழுதுதான் உங்கள் புவி கோளிற்கு வந்திருக்கின்றேன்...என்னைக் கைவிட்டுவிடாதே.. உன்னைத்தான் நம்பியிருக்கின்றேன்....' என்கின்றதா...? தன் பாதுகாப்பின்மையை உணர்த்துகின்றதா...? அல்லது 'நீ நல்லவன் ...உன்னுடன் நட்புகொள்ள விரும்புகின்றேன்...' எனத் தகவல் சொல்கின்றதா....?
ஏன் எல்லா குழந்தைகளும் அழகாய் இருக்கின்றனர்....? குழந்தையின் ஜீவகாந்தமே காரணம். ஒரு மலரினைப் பார்க்கும்பொழுது மனம் எப்படி மகிழ்கின்றதோ... அதே போல்...! ஜீவகாந்தம் அதிகத் திணிவிருந்தால் குழந்தையின் அந்த காந்த வசீகரம் கிட்டுமோ....? அப்படியெனில் யோகாவில் பெரிய பெரிய மகான்களிடம்கூட அந்த காந்த கவர்ச்சி இல்லையே...? அது ஏன்...? எண்ணங்களோ....? கள்ளங்கபடமில்லா எண்ணங்களோ..?
குழந்தைகளைப் பார்க்கும்பொழுதெல்லாம் மனம் சொல்லொணா ஒருவிதப் பரவச நிலையையடைகின்றதே அது ஏன்...? குழந்தை சிரிக்கும் சிரிப்பில் மனம் சொக்கி நம் கவலைகளெல்லாம் காணாமல் கரைந்து போகின்றதே அது ஏன்...? 'ம்ம்ம்மா....' என தன் பேச்சு வராத மழலை பாஷையில் என்னவோ சொல்கின்றதே...!
ஏன் உலகினில் எல்லா குழந்தைகளுமே 'ம்ம்ம்மா...' என்றே முதன் முதலில் குரல் கொடுக்கின்றதே அது எப்படி...? அனைவரையுமே நம்புகின்றதே...! அனைவரிடமும் கள்ளங்கபடம் பாராட்டது ஞானியைப் போல் எப்படி நட்பு கொள்ள முடிகின்றது....? கோபத்தில் அம்மா அடித்தாலும் மீண்டும் அம்மாவைச் சுற்றியே அன்பாய் வலம் வருகின்றதே... எவ்வித கோபமுமின்றி.. அது எப்படி...?
அழும் குழந்தையை அம்மா வாஞ்சையாய் முதுகில் தடவிட குழந்தை சிறிது நேரத்தில் இயல்பாகின்றதே அது எப்படி...? இவ்வளவு நியூட்டன் விசையில் இத்தனை வேகத்தில் இத்தனை பரப்பளவுள்ள ஒரு கை இத்தனை சதுர பரப்புள்ள குழந்தையின் முதுகில் இத்தனை நொடிகள் தடவினால் குழந்தை சமாதானமாகிவிடும் என்று நான் படித்த இயற்பியலில் நியூட்டனும், ஐன்ஸ்டினும் சொல்லித்தரவே இல்லையே...? இங்கே என்ன நடக்கின்றது...? கண்களுக்குப் புலனாகா எதோ ஒரு சக்தி அம்மாவிடமிருந்து குழந்தைக்கு பரிமாற்றமடைகின்றதோ...? என்ன அது...? அன்புதானோ...? அன்பிற்கு அவ்வளவு வலிமையா....? அதனால்தான் அன்பே சிவம் என்கின்றனரோ...?
ஏன் அழும் குழந்தைகள் சிறிது நேரத்தில் தூங்கிவிடுகின்றனர்....? அழுகைக்கும் தூக்கத்திற்கும் தொடர்புண்டோ...? அவர்களின் இதயம் நொடிக்கு 148 தடவை அடிக்கின்றது....? தலையின் மையப் பகுதியில் துரியம் அவர்களுக்கு மட்டும் எப்படித் துடிக்கின்றது...? இதுதானே பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கின்றது. ..? Seed of souls ... அதனால்தானோ குழந்தைகள் கடவுளுக்குச் சமம் என்கின்றனரோ...? குழந்தை தன் தேவைகளை வெளியுலகிற்கு அழுகையின் மூலம் வெளிப்படுத்துகின்றதே...அறிமுகமில்லா எந்தக் குழந்தை அழுதாலும் நம் மனம் பதைபதைக்கின்றதே அது ஏன்...? அது தன் மழலை பாஷையில் 'ங்கா...ங்கா...' என எதையோ சொல்லிச் சிரிக்கின்றதே... நமக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாவற்றையுமே குழந்தை எப்படி ஆர்வமாய் புதுமையாய் பார்க்கின்றது....? உடனே அதனை ஆராய்ச்சி பண்ணும் வேலையில் இறங்கிவிடுகின்றதே...? குழந்தைகள் மிகப் பெரிய விஞ்ஞானிகளோ....? ஏன் எதற்கு எப்படி...? என சதா ஆராய்ந்து கொண்டேயிருக்கின்றதே...! இது பாம்பு இது நாய் என்ற பாகுபாடின்றி அனைத்து ஜீவராசிகளிடமும் சிரிக்கின்றதே...? அதேபோல் பாதுகாப்பின்மையும் பயத்தினையும் உணர்கின்றதே...? குழந்தையின் உற்சாகம் மகிழ்ச்சியளிப்பது ஏன்..?
குழந்தைகள் சிலரின் அருகாமையை விரும்புகின்றதே...! சிலரின் அருகாமையை வெறுக்கின்றதே...! எப்படி இதெல்லாம் சாத்தியம்...? நம் உணர்வுகளையும் எண்ண அதிர்வுகளையும் குழந்தைகள் உணர்கின்றனவோ....? அதனால் எளிதில் எப்படி உணர முடிகின்றது....? அங்கே மொழியில்லை; சைகை இல்லை...ஆனாலும் எப்படி குழந்தைகள் இவ்வளவு நுட்பமாக இருக்கின்றனர்...?
குழந்தையின் குதூகலமும் அதன் சேட்டைகளும் அனைவரும் விரும்பி ரசிக்கின்றனரே...அது ஏன்...? அதே குழந்தை கொஞ்சம் பெரியவனானால், 'எருமை...தண்டம்...சனியன்...' என ஏன் பெரியவர்கள் அர்ச்சிக்கின்றனர்....? என என் மனதினில் ஒழுங்கின்றி சிந்தனையோட்டங்கள் தாறுமாறாக எங்கெங்கோ சுழன்றன.
எனக்குப் பிடித்த வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக்கொண்டு நகர்ந்தோம். கடல் பார்ப்பதற்கு எங்கள் ஊர் கண்மாயினை விட கொஞ்சம் பெரிதாகத் தென்பட்டது. இதனையா கடல் என்கின்றனர்...? என எனக்குள் வியப்பே மேலிட்டது. தலைக்கு மேலே பெயர் தெரியா சில கடல் பறவைகள் வட்டமடித்தன. ஒரு கப்பல் டைட்டானிக்கினை இமிடேட் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தது. அருகேயிருக்கும் கனக்ட்டிகட் என்ற மாநிலத்திற்கு இந்தக் கப்பலில் பயணிக்கலாம். தினமும் இங்கிருந்து சிலர் அந்த மாநிலத்திற்கு வேலைக்குச் சென்று திரும்பிவருகின்றனர். காரினை கப்பலிலேயே கொண்டு செல்கின்றனர்.
சில கலாசாலை இளைஞிகளும் இளைஞர்களும் ஒரு படகினை தயார் செய்துகொண்டிருந்தனர். நடுத்தர வயதுள்ள ஒரு மாமி கடற்கரையிலிருந்த பாதுகாப்பு வளையத்தின் விளிம்பில் பதைபதைப்புடன் நின்றுகொண்டிருந்தார். அவர்கள் படகினைச் செலுத்தி கடலுக்குள் கண்ணின் பார்வையிலிருந்து காணாமல் போயினர். இந்த மாமி ஒவ்வொரு நொடியும் பதைபதைத்துக்கொண்டிருந்தார். பின்னர்தான் தெரிந்தது... அந்த இளைஞிகள் இவரது குழந்தைகள் என.
வேந்தன் அவர்கள் என்னைப் பலமுறை எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்ட அந்த முத்த நிகழ்வுகளை இளைஞர்களும் சரி வயதான மூதாதையர்களும் சரி வஞ்சகமின்றி நிகழ்த்திக்கொண்டிருந்தனர். இந்த ஊர் கலாச்சாரத்தினைப் பற்றியும் இந்த ஊர் குழந்தைகளைப் பற்றியும் எங்கள் பேச்சுத் திரும்பியது. எனக்குத் தமிழ் தவிர வேறு எந்த ஒரு மொழியும் சரியாகத் தெரியாததால் அந்த பங்களாதேஷி நண்பனும் நண்பியும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதினை மிகவும் புரிந்தது போல் தஞ்சாவூர் பொம்மை போல் 'யெஸ்....யெஸ்.... ஐ நோ...' எனத் தலையாட்டிக்கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் எனக்கும் கூட கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் புரிய ஆரம்பிக்கின்றது.வழக்கம்போல் ங்க்கு,ங்க் எனச் சேர்த்துக்கொண்டே சமாளித்துவிடுகின்றேன்.
இரவு எட்டரை மணியானாலும் இன்னும் சூரியன் தூங்கச் செல்லாமல் சுட்டெரித்துக்கொண்டுதானிருக்கின்றான்.
அவர்கள் தங்களது பங்களாதேஷ் நாட்டினைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தனர். அந்நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிக்கொண்டே வருவதாயும் முன்னேற்றப் பாதையில் சிறு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் இருப்பதாயும் மிகவும் வருந்தினர். இந்தியா நல்ல ஒரு முன்னேறிய நாடு என்றனர்.
என் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடியது.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
Flushing பிள்ளையார் in New York. ...( 07-Oct-2007 Sunday 4:32 PM EST)
நேற்று நியூ யார்க் அருகேயுள்ள Flushing ல் வீற்றிருக்கும் விநாயகரைத் தரிசிக்கும் வாய்ப்புகிட்டியது. இது இக்கோவிலுக்கு இரண்டாவது விஜயம்.
முதலில் விநாயகனுக்கும் எனக்குமுள்ள உறவு என்ன....?
விநாயகனை விநாயகன் என்பதைவிட பிள்ளையார் என அழைக்க எனக்குப் பிடிக்கும். பிள்ளையாரை எனக்கு அதிகமாய் பிடிக்க ஒரே ஒரு காரணம்-
நான் என்றுமே பிள்ளையாரை ஒரு முக்கியமான தெய்வமாய் பார்ப்பதில்லை.
என் சின்ன வயதில் பிள்ளையார் என்னுடன் விளையாடுவதாய் மனதில் சினிமா ஓடும்.
அதில்-
1. அவருடைய தொந்தியில் நான் கிள்ளிவிட்டு ஓடிவிட.... அவர் தன் தும்பிக்கையால் தலையில் அடித்துக்கொண்டு குய்யோ...முறையோ என என்னைத் துரத்திக்கொண்டு ஓடி வர....
2 அவருடைய தொந்தியில் உட்கார்ந்துகொண்டால் அனந்தமாய் இருக்கும். அவர் மூச்சினை உள்ளிழுக்கும்பொழுது நான் வெளியே.... மூச்சினை வெளிவிடும்பொழுது நான் உள்ளிழுக்கப்படுவேன்... ஆஹா... என்ன ஒரு சுகம்....! அப்பொழுதே அவருக்கு abdominal breathing தெரிந்திருக்கின்றதே என எனக்கு ஒரே ஆச்சர்யம்...
3. நான் மரங்களில் ஏறி விளையாடும்பொழுது கீழே விழுந்து காயங்கள் ஏற்படும்பொழுது கண்டிப்பாக பிள்ளையார் தன் துதிக்கையால் காயப்பட்ட இடங்களில் மருந்திடுவார்...(குறிப்பாக அது ஒரு கனாக்காலத்தில்... அந்த முள்ளுமுனி அடிச்ச கதைப்பாகம்...)
4. பரீட்சை காலங்களில் எங்களுக்கோ ஒரே திருவிழாவாக இருக்கும். பொதுவாக பரீட்சை என்றால் மாணவர்களுக்குப் பயமும் படிக்கவேண்டுமே என்ற கவலையும் இருக்கும். ஆனால் எங்கள் கிராமத்தில் நானும் என் நண்பர்களும் அந்த சின்ன வயதில்(3,4,5,6,7 ஆம் வகுப்புகளில்...) பரீட்சையை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்வோம்...புது சட்டை, புது பேனா, புது அட்டை... என மகிழ்ச்சியாய் இருப்போம்... (படிக்க மட்டும் மாட்டோம்...I Love School...when it is closed....!) 9 மணி பரீட்சைக்கு.... 8:55 வரை ஊரிலிருக்கும் எல்லா கோவில்களுக்கும் பயபக்தியாய் ஒரு விசிட்...! ஊதுபத்தி...சூடம் என அநியாயத்திற்கு மிகவும் நல்ல பையன்களாய் மாறியிருப்போம்...! ஆனால் விநாயகருக்கு மட்டும் நான் கும்பிட மாட்டேன்... மாறாக ஒரு நண்பனிடம் அரட்டுவது போல், "ஒழுங்கா எனக்குத் தெரிஞ்ச கேள்விய மட்டும் கேக்கனும் எக்ஸாம்ல.... இல்லென்னா... படவா நடக்றதே வேறே...." என்று மிரட்டல் தொணியில் வேண்டுதல் இருக்கும்...
5. விநாயகனுக்கென செய்யும் கொழுக்கட்டைகளில் அவருக்குப் படைக்கும் முன்பே சில காணாமல் போய்விடும். பிள்ளையாரே தின்னுட்டார் னு சொல்லிடுவேன்...!
இப்படித்தான் இருக்கும் விநாயகருக்கும் எனக்கும்...! அவருடைய அந்த உருவம் என்னுள் சிரிப்பை வரவழைக்கும் அந்த சின்ன வயதில். அதனாலோ என்னவோ மற்ற சாமிகளிடம் இருக்கும் அந்த பயமும் மரியாதையும் இவரிடம் இருப்பதில்லை. மாறாக நல்ல நட்பிருந்தது....!
என்னை வளர்த்த பெரியவர் தீவிர வைஷ்ணவர். அதனால் என்னுள் பலமுறை கேள்வி எழும். இந்த சாமி பூதம் இதெல்லாம் சும்மா... நம்மை ஏமாத்துறாங்கடா ன்னு... சரி இயேசு அல்லா புத்தா இவங்கள்ளாம் என்ன சொல்றாங்கன்னு அந்தந்த இயக்கத்தில் அப்ப அவங்க பின்னாடி அலைஞ்சதை( எங்கள் கிராமத்தில் கிறித்தவர்கள் கிறித்தவ மதப்பிரச்சாரம் செய்ய வருவார்கள்...அவர்கள் பின்னால் திரிவேன்...அவர்கள் பாடும் அந்த கீதங்களுக்காக....அவர்கள் கொடுக்கும் புத்தகங்களை இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று ஆசையாய் கேட்டுவாங்குவேன்... அவர்களோ மிகவும் மகிழ்ச்சியாக புதுப்புது புத்தகங்களைக் கொடுப்பார்கள்... அதை வீட்டிற்குக் கொண்டுவராமல் அப்படியே ரொம்ப பொறுப்பா நம்ம புளுகாண்டி கடையில் எடைக்கு எடை போட்டு காசு வாங்கிடுவேனுங்கோ...! )
பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டா பிள்ளையாரே உனக்கு மொட்டைபோட்டுக்கறேன்..(ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளின் அடிவாரத்தில் ஒரு மிகப்பெரிய பிள்ளையார் இருப்பார்... பெருமாள் என்பதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மற்றும் திருவண்ணாமலை பெருமாள், திருத்தங்கல்லில் வீற்றிருக்கும் பெருமாள்(இது தென்திருப்பதி என்று போற்றப்பட்ட தலம்...சிவகாசியருகேயுள்ளது...) விஜயம் அடிக்கடி நிகழ்வதுண்டு... ) என்று திருவண்ணாமலை பிள்ளையாருக்கு வேண்டிக்குவேன். பாஸாகுறதுக்கெல்லாம் ஒரு வேண்டுதல்னா நான் எப்படி படிச்சிருப்பேன் னு உங்களுக்கே நல்லா தெரியும்...!
ம்ம்ம்... சரி மெயின் கதைய விட்டுட்டு எங்கனயோ ட்ராக் மாறுதே...!
ம்ம்... சரி மெய்ன் கதைக்கு போலாம்
இந்தக் கோயிலோட சரிதம் சொல்லத் தேவையில்லை...(ஏன்னா உனக்குத் தெரியாது ன்னு எனக்குத் தெரியும் னு நீங்க சொல்றது காதுல விழுதுங்கோ...வ்... கூகிள் ஆண்டவர் இருக்றப்ப இப்பல்லாம் இது தேவையில்லைன்னு ஆயிடுத்தோன்னோ ல்லியோ... ஷைலக்கா சொல்றமாதிரி நம்ம அகராதி புரட்டும் அறிஞர் தேவைப்பட்டா சொல்வாருங்கோ...!)
அந்தக் கோயில்ல உள்ளே நுழைஞ்சா....
என்ன கடவுள் தரிசனம் தந்து எதுவும் அற்புதம் பண்ணிட்டாரான்னா கேக்குறீங்க...?
ஊஹூம்...
நம்ம மைலாப்பூரே இடம் பெயர்ந்து இங்கன வந்திடுச்சோன்னு ஒரு மஹா ப்ரஹ்மை ஏற்பட்டுச்சுங்கோ...ஆமா எல்லோரும் அச்சரம் பிசகாம நம்ம தமிழ்ல்ல பேசினாங்க....
அட இங்கன இம்புட்டு தமிழ் காரவுக இருக்காகளேன்னு எனக்கு ஒரே ஆச்சர்யம்... மனசு உச்சிக்குப் பறக்றது... சாமிய பாக்குறத விட நம்ம ஊரு மனுஷாளை இங்கன பாக்குறது நெம்ப (கோயம்புத்தூர் காரங்களா பாஷை சரியா...? ) சந்தோஷமா இருந்துச்சு...
கோயிலுக்குள்ளே நுழைஞ்ச உடனே நான் பாத்தது...
ஒரு கோஷ்டி ஐயப்ப சாமி பஜனை பாடிட்ருந்துச்சு... அதுவும் தமிழ் ல்ல ... அப்பவே எனக்குப் புரிஞ்சுடுச்சி... ஆஹா இன்னிக்கு ப்ரசாதம் மஹா ப்ரசாதமாத்தான் இருக்கும் ன்னு...! :):):)
நவக்ரகங்களை எல்லோரும் 9 தடவை சுத்துனாங்க....
அது ஏன் நவக்கிரகங்களை சுத்தணும்...? அதுவும் 9 தடவை...? ன்னு ஒரு கேள்வி வந்துச்சு...? நம்ம கோளறு பதிகத்திலும் சரி தவத்திலும் சரி இந்த கிரகங்களுக்குத் தனியா ஒரு இடம் கொடுத்ருக்காங்களே...? அதுவும் சனி ன்னா எல்லா சாமிகளும் கூட பயப்படுறாங்களே.... ஆஞ்சநேயர் மட்டும் exception ...எப்டி ஆனார்...? னு எனக்கு ஒரே மண்டைக் குடைச்சல் வந்துச்சு.
சரி நாமளும் சுத்துவோம்.. எதுனாச்சும் நம்ம மரமண்டைக்கு புரியுதான்னு பாப்போம் னு சுத்துனோம் ...
கோள்கள் ரொம்ப தூரம்... அது எப்படி நம்ம வாழ்க்கையை கட்டுப்படுத்தும்...? நான் படிக்ற காலத்துல Physics Association க்கு நான் தான் அப்ப President. அப்ப நாங்க பெரிய பெரிய Physics ஜாம்பவான்களை அழைச்சிட்டு வந்து எங்க பெளதிக மன்றத்துல பேச வைப்போம்....அப்ப அவங்ககிட்ட...'அப்பல்லாம் நெப்டுயூன் ப்ளூட்டோ ன்னு கெரகங்களே கண்டுபிடிக்கலியே... எப்டி 9 கிரகங்கள் னு சித்தர்கள் சொன்னாக ன்னு ஒரே கேள்வி கேட்டு வர்ர புரபசர்களை டார்ச்சர் பண்ணிடுவேன்... அப்புறம் இப்ப ரீஜண்ட்டாத்தான் நம்ம நாசா அண்ணாச்சிக அந்த ரெண்டு கெரகங்களும் கெரகமே இல்லைன்னு டெக்ளேர் பண்றாள்.... இதானுங்க நம்ம கெரகம் ன்றது.... !அமெரிக்காகாரன் சொன்னானே ன்னு நாம பாடம் படிச்சோம் ... இப்ப அதே அண்ணாச்சி அதுக ரெண்டும் கெரகமே இல்லைன்னு சொல்றா... அறிவியல்ல ராகு கேது இல்லை...
ஆனா இங்கன கோயில்ல ராகு கேது இருக்கே... அப்றம் ஒவ்வொரு கெரகமும் ஒவ்வொரு தெசையில இருக்கே...ஒவ்வொரு நெறத்துல இம்புட்டுக்கோணி துணியக்கட்டி வச்சிருக்காங்களே...? வெளக்கு ஏத்திவைக்கிறாங்களே ன்னு ஒரே கேள்விதாங்க.... யார்கிட்டேன்னு தானே...?
வேற யாருக்கிட்டங்க கேக்கமுடியும்...? அங்கன இருக்ற அர்ச்சகருகிட்டயா கேக்கமுடியும்...?
வழக்கம்போல் நம்ம பிள்ளையார்ட்டதானுங்க...
அப்றம் அங்கன ஒரு திருப்பதி வெங்கடேஸ்வர் இருந்தார். அங்கன யாரும் கூட்டமா இல்லை... எல்லாரும் விநாயகரும் ஐயப்பாவையும் கிரகங்களையும் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.
நான் சரசர ன்னு அந்த வெங்கடேஷ்கிட்ட போயி, "ஹாய் வெங்கி... ஹெள ஆர் யூ....? ஆர் யூ ஓகே..? ஒனக்கு வேளா வேளைக்கு ஒழுங்கா வெஜிட்டேரியன் உணவு கிடைக்குதா....? சொல்லுப்பா... எனக்கும் அந்த உபாயம் சொல்லு... " ன்னு கேட்டேன்...
பரவாயில்லைப்பா... உன்னை திருப்பதியில நான் எவ்ளோ கஷ்டப்பட்டு பாக்க வேண்டியிருக்கு.... பேசாம இனிமே நான் நேரா இங்கனயே வந்திட்றேன்...
நல்ல தரிசனம்...
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அருட்பேராற்றல் அலைஅலையாய் பாய்ந்து படர்வதை என்னால் உணரமுடிந்தது.... குண்டலினி தானாகவே சகஸ்ரதளத்தில் வந்தமர்ந்தது....புருவமத்தியில் ஆக்கினையில் அனந்தமயமான அதிர்வுகள்.... தண்டுவடத்தில் குண்டலினி சக்தியானது எறும்பு ஊர்வது போல் முதலில் மெதுவாயும் பின்னர் ஒரு ஊற்று நீர் மேலேறுவது போன்றும் ஒருவித பரவச நிலை....! சிறிது நேரத்தில் மன அலைச்சுழல் தீட்டா அல்லது டெல்டாவிற்குச் சென்றிருக்கவேண்டும்.... நீண்ட நேரம் இருக்கும். பின்னர் தீர்த்தம் கொடுக்கும்பொழுது அந்த அர்ச்சகர் என் நினைவினைக் கலைத்தார்.
ராதா, சிவன், அங்கிருந்த ஒரு சிறிய நந்தியின் காதில் நம் கோரிக்கை வைத்தல்...பின்னர் முருகன் சன்னதி...(நம்ம ஊர் முருகன் .... இங்கேயும் உள்ளது.... நம் முருகனுக்குத் தமிழ் நாட்டில் தவிர மற்ற மாநிலங்களில் கோவில் இருக்குமா எனத் தெரியவில்லை...! கேரளாவில் இருக்கலாம்...ஆந்திரத்தில் அரிதாக இருக்கலாம்.. .வடநாட்டில் இருக்குமா எனத் தெரியவில்லை...)
பின்னர் நம்ம ஹீரோ விநாயகன்...
அப்றம் பக்கத்துல ஒரு ஐயப்ப பஜனை நடந்தது. அங்கேயே உட்கார்ந்துவிட்டோம்... பாடப்பாட என் சிறுவயது ஞாபகங்கள் நினைவிற்கு வந்தது. நேற்றும் சனிக்கிழமை.... என் சின்ன வயதில் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் கிருஷ்ணன் கோவிலில் லாந்தர் விளக்கு வெளிச்சத்திலும் குத்துவிளக்கு வெளிச்சத்திலும் பஜனைகள் பாடும்பொழுது மெய்மறந்திருப்போம்.... பஜனை நடனம் வேறு...! அதே நினைவுகள்.... !
'ஏன் மாமி இப்பல்லாம் நீங்க எங்காத்துக்கு வர்ரதே இல்லை...' என இரண்டு மைலாப்பூர் மாமிகள் என் கவனத்தினை கொசுவர்த்திச் சுருள் சுற்றிமுடித்து ஃப்ளாஷ் பேக்கிலிருந்து மீட்டுக் கொண்டுவந்தனர்.
ப்ரசாதம் நிஜமாகவே மஹா ப்ரசாதம்... நம்ம தமிழ்நாட்டு ப்ரசாதம்தான்...! கேசரி நன்றாக இருந்தது...சாதம் பாயாசம் என எனக்கு ப்ரசாதமே வயிறு ஃபுல்...
அப்புறம் நம் சக நண்பர்கள் வந்ததே வந்துட்டோம்.... அப்டியே கேண்டீன்ல ஒரு கட்டுகட்டீட்டுப் போயிடுவோம் னாங்க... நம்ம மெட்ராஸ் காஃபியும் இருந்துச்சு... டிபன் பண்ணிட்டு... அட நம்ம ஊர் தோசைங்க... நம்ம சட்னி சாம்பார்... நம்ம மெட்ராஸ் காஃபி....
ஆஹா அந்த பில்டர் காஃபி துளித்துளியாய் ரசித்துக் குடிக்க முடிந்தது... நாக்கின் நுனி மொட்டுக்களில் ஆரம்பித்து அது ஒவ்வொரு செல்லாக பயணித்து தொண்டைக் குழியில் அதன் தித்திப்பையும் கசப்பையும் அழுத்தமாய் நிறுவிவிட்டு... உணவுக்குழல் வழியிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் அதன் ருசியையை சேர்த்துவிட்டு இரைப்பையை அடைய அதிக நேரமானது... கண்மூடி ரசித்து லயமாயிருந்தது... காஃபி குடிப்பதுவும் ஒரு தவம்தானோ...? இதுதான் ஜென் மெடிட்டேஷனோ....?
மனம் அமைதியாய் ஒருவித லயமாய் இருந்தது... இருக்கின்றது இந்த நொடிவரை...!( 07-Oct-2007 Sunday 4:32 PM EST)
மேலே வானம்.... கீழே நியூ யார்க்....22-செப்டம்பர்-2008
வானம்-6 நியூ யார்க்-1
சென்ற வார இறுதிநாளில் Theresa Schilizzi என்ற என் நண்பியிடமிருந்து ஒரு தொலைபேசி. 20,21 செப்டம்பரில், தான் நியூ யார்க்கில் ஒரு தவப் பயிலரங்கம் நடத்தப் போவதாயும் அதில் என்னை கலந்துகொண்டு எனக்குத் தெரிந்த தவக் கலைகளைப் பகிர்ந்துகொள்ள இயலுமா எனக் கேட்டுக்கொண்டார்.
முதலில் யார் இந்த Theresa Schilizzi............? என
சொல்லிவிடுகின்றேன்.
சென்ற ஆண்டு, இங்கே எங்கள் கிராமத்தில் வசிக்கும் டாக்டர் ஜென்னா
அவர்கள், தான்
நடத்தவிருக்கும் தொலையாடல் சந்திக் கருத்தரங்கில் (Teleconference) கலந்துகொண்டு
Mind
Engineering (அப்பொழுது நான் சில ஆங்கிலக் குழுமங்களில் Mind Engineering என்ற
ஒரு தொடர் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன்.) பற்றிய என்னுடைய
கருத்துக்களைப் பகிரச் சொல்லியிருந்தார். அந்நிகழ்ச்சியானது மாதத்திற்கொருமுறை
வாழ்வியல் பிரச்சினைகளைப் பற்றி அமெரிக்கர்கள் அலசும் ஒரு
மனோவியல் கருத்தரங்கம். அதுதான் நான் இங்கே முதன் முதலாகக் கலந்துகொண்ட
கருத்தரங்கம். எல்லாமே ஆங்கிலத்தில். அதுவும் அமெரிக்க ஆங்கிலத்தில்.
அவர்கள் பேசும் மொழி எனக்கு சுத்தமாகப் பிடிபடவில்லை.
டாக்டர் ஜென்னா என்னை
தெரசாவிடம் அறிமுகப்படுத்திவைத்தார். இப்படித்தான் எங்களது
அறிமுகம் ஆரம்பமாயிற்று. தெரசாவின் Profileஐக் கண்டவுடன் தலைசுற்றி
மயக்கமாகி விழுந்தேன்.
இவரது வேலை Wall Streetல்
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் Financial Analyst. பங்குச்
சந்தையின் வளர்ச்சியையும் அதன் நிலையையும் நிறுவனத்தின்
பொருளாதார நிலையையும் நொடிக்கு நொடி கவனித்து மாற்றங்களைச்
செய்யும் ஒரு பிரம்மா.
அது மட்டுமல்ல. தவக் கலைகளில் இவர் தலைசிறந்தவர். உலகிலுள்ள பெரும்பாலான தவக் கலைகளையும் கற்றவர், இந்தியாவிலுள்ள சித்தர்கள்-குண்டலினி தவமுறைகளைத் தவிர. தெரஸா Reverendஆகவும் Church ல் Minister ஆகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். வானொலியில் இவரது நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். அடிக்கடி இவர் தன்னுடைய கிறித்தவ ஆலயத்திற்கு அழைப்பார்.
எனக்கும்
கிறித்தவத்திற்கும் என்ன தொடர்பு....? என் சிறுவயதில் எங்கள் கிராமத்தில்
கிறித்தவர்கள் தங்களது மதம் பரப்புவதற்காக ஆர்மோனியப் பெட்டி மாதிரியான ஒரு இசைக்
கருவியினை இசைத்துக்கொண்டே கிறித்தவப் பாடல்களை இனிமையாகப் பாடிக்கொண்டு வலம்
வருவர். அந்தப் பாடல்கள் என்னைக் கவரும். அவர்களுக்குப் பின்னால்
திரிந்துகொண்டிருப்பேன்.
அவர்கள் இலவசமாய் சில
புத்தகங்களை அன்பளிப்பர். இன்னும் வேண்டும் இன்னமும் அதிகமாய் தேவை எனக் கூறி
அவர்களிடம் அதிகமான புத்தகங்களை வாங்கி அதனை அப்படியே புளுகாண்டி அண்ணாச்சி
அவர்களின் கடையில் போட்டு காசாக்கிவிடும் குறும்புத் தனத்தில்தான் ஐந்தாம்
வகுப்பிலிருந்த அறிவு வேலை செய்தது.
இந்துவிற்கும் கிறித்தவத்திற்கும் என்ன வித்தியாசம் என யோசிப்பேன். கிருஷ்ணன் மாடுகளை மேய்த்துக்கொண்டே பெருங்கருத்துக்களை இயம்பினார், இயேசு ஆடுகளை மேய்த்துக்கொண்டு அற்புத விஷயங்களைச் சொன்னார். ஆக ஒன்று புரிகின்றது. பெரிய கருத்துக்களைக் கூற வேண்டுமானால் ஆடுகளையோ அல்லது மாடுகளையோ மேய்க்கத் தெரிந்திருக்கவேண்டும் என்ற உண்மை.
பயிலரங்கம் நியூ யார்க்கின்
முதன்மை வீதியான மாடிசன் சதுரத்திற்கருகே 32-ஆவது தெருவில் ஒரு பிரம்மாண்டமான
கட்டிட்த்தின் பதினோறாவது தளத்தில். பயிலரங்கத்தில் நானும் தெரசா மட்டுமே
சிறுவர்கள். மற்றனைவரும் வயதில், அறிவில், அனுபவங்களில் என அனைத்து வகையிலும்
பெரியோர்களாயிருந்தனர்.
ஒரு அம்மா (கொள்ளுப் பேரக் குழந்தைகளைக் கொண்ட மிகப்பெரியவர்.) மிகவும் கனிவாக கருணை நிரம்பியிருந்தார். அவர் சிரிக்கும்பொழுது ஒரு பச்சிளங்குழந்தை சிரிப்பதைப் போன்ற ஒரு காந்தப் புன்னகை இதயத்தினாழத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. ஏனோ அவர் என்னை வளர்த்த எங்கள் பெரியம்மாவின் சாயலில் இருப்பதாய் தோன்றினார். இன்னொரு அம்மா உக்ரைன் நாட்டினைச் சேர்ந்தவராம். இன்னொரு அம்மா Massachusettesலிருந்து வந்திருந்தார். ஊஹூம் மருந்திற்குக் கூட ஒரு ஆண் தென்படவில்லை. தவம் என்றாலே ஒரு வெறுப்பாய் உணர்கின்றனர்.
உக்ரைன் நாட்டினைச் சேர்ந்த
அம்மா, தான் இளநிலை மருத்துவமேலாண்மை படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார். தன்
மகனின் வயதினையொத்த தன்னுடைய பேராசிரியர் இந்த சனி ஞாயிறில் ஒரு Project செய்யப்
பணித்ததாயும், தான் மறுத்துவிட்டு இந்த தவப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட்தாயும்
கூறினார். இந்த வயதிலும் அந்த அம்மா இளநிலை படிப்பினை அதுவும் முழுநேர மாணவனாய்
பயின்றுகொண்டிருந்தது எனக்குள் மிகப்பெரும் வியப்பினை நல்கியது.
என்னைப் பற்றி தெரஸா அறிமுகப்படுத்தினார். மற்ற மூவரும், 'என்ன சின்ன வயதிலிருந்தே தவமா....? ஐயோ..அப்படியானால் நாங்கள் என்ன செய்ய.....? இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள மிகவும் அச்சமாயிருக்கின்றது....' என்றனர். 'சத்தியமாய் எனக்கு எதுவும் தெரியாது என்பதே உண்மை....இதோ இந்த மேஜையைக் காட்டி இதுதான் தவம் என்றால் நம்பும் நிலையிலிருக்கின்றேன்.....தெரஸாவிடம் கற்றுக்கொள்ளவே வந்தேன்....' என்றேன்.
உக்ரைன் நாட்டினைச் சேர்ந்த
அம்மா, தான் சில நேரங்களில் சந்திக்கும் சில நிகழ்வுகளை ஏற்கெனவே அது
நிகழ்ந்திருப்பதைப் போல் தான் உணர்வதாயும் அது எதற்கு எனவும் வினவினார். அதைத்தான்
மனோவியலில் 'தேஜா வூ' என்கின்றனர்.
உதாரணத்திற்கு, நான் சென்னையிலிருக்கும் ஸ்பென்ஷர் பிளாசா அருகே வரும்பொழுது என் ஈருருளியின் மோட்டார் இயந்திரம் நின்றுவிடுகின்றது. ஒரு காலினால் ஆரம்பிப்பானை உதைத்துக்கொண்டே முடுக்கிவிப்பானைத் திருகிக்கொண்டிருக்கின்றேன். கட்டங்கள் போன்ற அமைப்பினைக் கொண்ட சிவப்புச் சட்டைக்கார இளைஞன் என்னைக் கடந்து செல்கின்றான். இந்த சம்பவங்கள் ஏற்கெனவே இதற்கு முன்பே நிகழ்ந்துவிட்ட்தாய் என் மூளையிலுள்ள நியூரான்கள் பறைசாற்றுகின்றன. இம்மாதிரி நிகழ்வினை தேஜா வூ என்கின்றனர். இதற்கு அறிவியல் ரீதியாக இன்னமும் சரியான விளக்கம் கிட்டவில்லை என அந்த அம்மையாருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன்.
தெரஸா, 'நம்மால் இயன்ற
அளவிற்கு ஒரு நாலு பேருக்கு நன்மை செய்யவேண்டும்' என்றார்.
நாயகனின் , 'நாலு பேருக்கு நல்லது செஞ்சா அது எந்தத் தொழிலா இருந்தாலும்
தப்பில்லை........ ' ட்டொண்ட்டொய்ங்க்
என்ற வசனமும் பின்னிசையும் என் செவிகளில் ரீங்கரித்தது.
'PAY IT FORWARD' என்ற ஒரு திரைப்பட்த்தில் அந்தக் கருத்து மிகவும் அற்புதமாய் படம் பிடித்துக் காண்பித்திருப்பதாய் தெரஸா சொன்னார். அத்திரைப்பட்த்தில் லாஸ் வேகாஸ்சினைச் சேர்ந்த ஒரு பாடசாலைச் சிறுவன் இந்நிகழ்வினைத் துவக்கி வைப்பான். அதனால் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுவான் என்பதே கதை. தான் ஒருவருக்கு நன்மை செய்துவிட்டு அதற்கு இணையாக அந்த நன்மையடைந்தவர் அவருக்கு முன்பின் அறிமுகமில்லா மற்ற நான்குபேர்களுக்கு நன்மை செய்யவேண்டும். அந்த நான்கு மானிடர்களும் இதே போல் திருப்பிச் செய்யவேண்டும். இதுதான் திரைப்பட்த்தின் கதை. இக்கதை 2000த்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றார்.
மேலே வானம்.... கீழே நியூ யார்க்....(19-Oct-2008)
வானம்-6 நியூ யார்க்-2
தவம் ஆரம்பித்திருப்பதற்கு
முன்னர் சில விஞ்ஞான விளக்கங்கள் சொல்லிக்கொண்டிருந்தார் தெரஸா. மனதின் தன்மைகளைப்
பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன கருத்துக்கள் அனைத்துமே அனைவருக்குமே
தெரிந்த கருத்துக்களே.
மனதின் அலைச் சுழல்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
Beta Wave Frequency – 14 to 40 Cycles per second
Alpha Wave Frequency – 8 to 13 Cycles per Second
Theta Wave Frequency – 4 to 7 Cycles per Second
Delta Wave Frequency 1 to 3 Cycles per Second
இதனை EEG(Electro Encephalogram) என்ற கருவியின் மூலம் அளக்க இயல்கின்றது.
ஒருமுறை வேதாத்திரி மகரிஷியவர்களை தவம் இயற்றச்சொல்லி இந்த EEG என்ற கருவியின் மூலம் அளந்தபொழுது துரியாதீதத்தவம் செய்யும்பொழுது அவரது மன அலைச்சுழல் டெல்டாவிலிருந்தது. பின்னர் பெங்களூரிலிருக்கும் ஒரு ஆராய்ச்சி மையத்தில் திண்டுக்கல் மனவளக்கலை பேராசிரிய நண்பரொருவர் ஆராய்ந்தபொழுதும் அதே அலை....அதன் வரைபடங்களை அவர் வெளியிட்டிருந்தார். இம்மாதிரியான மன அலைச்சுழல்களை தெரஸா Silva Mind Control Systemல் விளக்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் Jose Silvaவின்
அடிநிலை தவம் இயற்றினோம். Jose Silva…. யாரிந்த Jose Silva….? இவர்
எனக்கு எப்படி அறிமுகமானார்.....? மிகவும் சுவாரசியமான கதை.
ஒருமுறை நான் சென்னையில்
ஒரு கல்லூரியில் துறைத்தலைவனாயிருந்தபொழுது அடங்காத மாணாக்கர்களை
வழிக்குக்கொண்டுவருவது எப்படி....? என யோசித்துக்கொண்டிருந்தேன். தினசரி புதிய
புதிய பிரச்சினைகள்.... பாடங்கள் நடத்துவதைவிட அவர்களைக் கட்டி மேய்ப்பது
மிகப்பெரிய வேலையாகியிருந்தது. ஏனெனில் எல்லா மாணவர்களும் பணம் கட்டி படிக்கும்
மாணவர்கள். இவர்களிடம் மரியாதை எதிர்பார்க்க இயலவில்லை.
அருப்புக்கோட்டையில் கல்லூரி பேராசானாக இருந்தபொழுது மாணவர்களிடம் கிடைத்த அந்த மரியாதை...நல்ல பெயர்.... உற்சாகப்படுத்தி குறிக்கோளை நோக்கி வழிகாட்டியதால் மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் செய்த சாதனைகள்... MIT…IIT என படைத்த வரலாறு... இதெல்லாம் சென்னையில் எடுபடவேயில்லை....! இந்த சென்னை மாணவர்கள்தான் ஆசிரியர் தொழிலுக்கு குட்பை சொல்லி நான் கணிப்பானியலுக்குத் தாவிட மறைமுகமாக வித்திட்டனர். ...!!!
அப்படி ஒரு நாள்
பிரச்சினைகளை சுமந்துகொண்டு கத்திப்பாராவிலிருந்து கிண்டி இரயில்நிலையம் நோக்கி
நடைபயின்றபொழுது தூரத்திலிருந்த ஒரு நடைபாதையோரக் கடையில் Blue Colour அட்டையில்
Silva Mind
Control Techniques என்ற புத்தகம் கண்ணில் பளிச்சென பட்ட்து.
இத்தனைக்கும் அந்த ரோடு மிகப்பெரிய பிஸியான ரோடு.... நிறைய புத்தகங்கள்
அடுக்கப்பட்டிருந்தாலும் என் கண்ணிற்கு இப்புத்தகம் மட்டுமே தெரிந்த்து.
ஒருமுறை டெல்லியிலிருந்து
வந்த என் சகோதரியை ஊருக்கு அனுப்ப எக்மோர் இரயில் நிலையத்திற்கு வழியனுப்பச்
சென்றிருந்தேன். இரயிலில் ஏறி அமர்ந்தாகிவிட்ட்து. பேசிக்கொண்டிருந்தோம்.
பிளாட்பாரம் பிஸியாக இருந்தது. தூரத்திலிருந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடையில் 'The Meditation' என்ற
புத்தகம் என் கண்களில் பட்டது.
நானோ அப்பொழுது சோடாபுட்டி
கண்ணாடி அணிந்திருந்தேன். அவ்வளவு தூரத்திலிருக்கும் பொருட்கள்.... அதுவும்
அவ்வளவு சின்ன எழுத்தில் சத்தியமாய் என்னால் வாசிக்கவே இயலாது. பிளாட்பாரம்
முழுதும் மக்கள் பரபரப்பு. நானோ இரயிலில் உட்கார்ந்திருக்கின்றேன். இரயில் ஜன்னல்
வழியாக என் பார்வை என்னையறியாமலேயே புத்தகக் கடையிலிருக்கும் அந்த குறிப்பிட்ட
புத்தகம் மட்டும் என் கண்களில் படுகின்றது. அதுவும் வாசிக்க முடிகின்றது.
கடையில் கொட்டை எழுத்துக்களில் அச்சிடப்பட்டு தொங்கிக்கொண்டிருந்த விகடன் குமுதம் மற்ற பத்திரிகைகளின் வால்போஸ்டர்கள் எதுவும் என் கண்களில் படவில்லை. அந்த ஒரே ஒரு புத்தகம் அதுவும் கடைக்குள்ளே வெகு உள்ளே அடுக்கி அவ்வளவு எளிதாக நம் பார்வையில் படாத ஒரு புத்தகம் என் கண்களில் பட்ட அந்த நொடியில் என்னையறியாது இரயில் பெட்டியிலிருந்து நேரே அக்கடைக்கு ஓட... என் சகோதரி என்னவோ எதுவோ என பயப்பட...... நான் அப்புத்தகத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் ரயிலுக்கு வர இதெல்லாம் என்னையறியாது அனிச்சையாக நடந்தேறியது.....
அப்புத்தகத்தினை ராமகிருஷ்ண மட்த்திலிருந்து ஒரு சுவாமிஜி எழுதியிருந்தார், அப்புத்தகத்தினை இரயிலிலேயே படிக்க ஆரம்பித்து... அது கிளம்பும்பொழுது இரண்டொரு அத்தியாயங்களை முடித்துவிட்டு...சகோதரிக்கு டாட்டா சொல்லிவிட்டு ஆட்டோவிலமர்ந்து சென்னை போக்குவரத்து நெருக்கடிக்கிடையே என் வசிப்பிடம் பயணிக்கக்கிடைத்த அந்த ஒரு மணிநேர பயணத்தில் அந்த 250 பக்க புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்துவிடமுடிந்தது. ஆழ்மனம் நமக்குத் தேவையான விஷயங்களை எப்படியெல்லாம் நமக்கு உதவுகின்றன... Materialisation பண்ணுகின்றன என நான் இப்படி நடந்த நிகழ்வுகளைக் கண்டு பலமுறை வியப்புற்றிருக்கின்றேன்.
அட எங்கோ ட்ராக் மாறுகின்றேனே....
அந்த Silva புத்தகத்தினை வாங்கிய அடுத்த நொடியில் பரபரவென படித்துமுடித்துவிட்டுத்தான் அடுத்த சுவாசமே ஆரம்பிக்கமுடிந்தது. அத்தனையும் சுவாரசியமாய் இருந்தது. சில விஷயங்கள் புரிவதற்காக அப்புத்தகத்தினை பலமுறை படித்து ஆராய்ச்சி பண்ண வேண்டியிருந்த்து. கல்லூரிக்கு பயணிக்கும் அந்த பயண நேரத்தில் அப்புத்தகம் எனது தினசரி ஆராய்ச்சியானது. அப்பொழுதெல்லாம் வேதாத்திரியுடன் நெருங்கி உரையாடியதுபோல் Silva என்ற அந்த மாமனிதரையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் எழுந்த்து.
Silva வேதாத்திரி
மகரிஷியைவிட 4 வயது இளையவர். இவர் சொல்லும் உத்திகள் அப்பொழுது எனக்கு மிகவும்
பிடித்திருந்தன. Silva வேதாத்திரியின் மறைவுக்கு முன்னரே மறைந்துவிட்டார்.
சில்வாவும் நம் இந்திய தவக் கலையை மிகவம் போற்றிச் சொல்லியிருக்கின்றார்,
அப்பொழுதெல்லாம்(1995 களில்) டாக்டர் கல்பனா தேசாய் என்ற மகப்பேறு மருத்துவத்
துறையைச் சார்ந்த அம்மையார் சில்வாவின் பயிலரங்கங்களை இந்தியாவில்
நடத்திக்கொண்டிருந்தார். சென்னைக்கு வரும்பொழுது அவரைச் சந்தித்து பல வினாக்களைக்
கேட்டிருக்கின்றேன். என் ஆர்வத்தினை அவர் வெகுவாய் பாராட்டினாலும் அப்பயிலரங்கம்
அன்றைய காலகட்ட்த்தில் 5000 ரூபாயாக இருந்ததால் என்னால் பயில இயலவில்லை.
வேதாத்திரியின் முறைமைக்கும் சில்வாவின் முறைமைக்கும் என்னென்ன ஒற்றுமைகள் என்னென்ன வேற்றுமைகள் என ஆராய்வேன். அதனை வேதாத்திரியிடமே அவர் சென்னைக்கு வரும்பொழுது விவாதிப்பேன். அவர் சிரித்துக்கொண்டே இறைநிலையைப் பற்றி விளக்குவார். ஆனாலும் ஏனோ அப்பொழுது வேதாத்திரி மகரிஷி சொல்வதைவிட சில்வா முறைமையின் மீது அதிக மோகம் ஏற்பட்ட்து. Materialisation பண்ணுவதற்கு எதெதெல்லாம் எளிதான வழிமுறைகளோ அதிலெல்லாம் (Silva, Self-Hynosis, NLP, Auto-Commands இப்படி மேற்கத்திய முறைமைகளின் மீது) மோகம் ஏற்பட்டது...... வேதாத்திரியின் இறைநிலை விளக்கம் சரியாகப் புரியும்வரை...!
Dr.Ryne என்ற பேராசான் Duke பல்கலைக்கழகத்தில் ஒரு 25 வருட காலமாக ஆராய்ந்து சித்திரக் காட்சிகள் (Visualisation Techniques) என்ற உத்திகளைக் கண்டறிந்தார். அதாவது மனம் எதைப் படமாகக் காண்கின்றதோ அதை வெகு எளிதாக அடைகின்றது என்ற உண்மையை உணர்ந்தார். அவரது ஆராய்ச்சியின் முடிவுகளை அடிப்படையாக வைத்து எழுந்ததே இன்று அனைவராலும் பரவலாக Visualisation Techniquesஐ தங்களது பயிலரங்கங்களில் வடிவமைக்கின்றனர். Silvaவும் அவரது ஆராய்ச்சிகளை தன் சொந்த வாழ்வில் பயன்படுத்தியபொழுது சில சாதனைகளைப் படைக்கமுடிந்தது. தன் குழந்தைகளின் கல்விக்காக இந்த மனச்சித்திர உத்திகளை முதலில் வடிவமைத்திட்ட்தில் நல்ல விளைவுகள் கிட்டவே அதனை ஆராய்ந்து பலப்பல புதிய புதிய உத்திகளை வடிவமைத்திட்டார்.
இவைகளையே நம் முன்னோர்கள்,
யத் பாவம் தத் பவதி :| (நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே மாறுகின்றாய்....)
யாத்ரு ஸீ பாவனாய ஸித்திர்பவ தாத்ருஸீ :| (நீ எதை அகத்தால் காண்கின்றாயோ... அது புறமாகப் பரிணமிக்கின்றது....)
ய மதிஹி.... ஸா கதிஹி :| (உன் மனதே....(உன் எண்ணங்களே...) நீ அடையும் இடம்.....!)
எனவும்,
நம் திருவள்ளுவர்,
உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்
என மிகவும் ஆழமாய் அழகாய்
எளிமையாய் சொல்லியிருக்கின்றார்.
தவம் முடிந்து பின்னர்
உரையாடிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் தங்களுக்கு யார் யாரெல்லாம்
இன்ஸ்பிரேஷன்... ஏன் என விளக்கவேண்டும் என்று தெரஸா கூறிவிட்டு தனக்கு ஜீசஸ்
மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிவிட்டு காரணம் சொல்லிவிட்டு அடுத்தவரை
நோக்கினார். பெரியம்மா தன் குழந்தைபோன்ற காந்தப் புன்னைகையில் புன்னகைத்துவிட்டு
அவரும் ஜீசஸையே சொன்னார். உக்ரைன் அம்மா ரெய்கி மாஸ்டரைச் சொன்னார், என் முறை வந்தது.
எனக்கு மிகவும் பிடித்தவரும் முதன் முதலில் என் வாழ்க்கையில் அவர் யாரென்றே தெரியாமல் இன்ஸ்பிரேஷன் ஆனேன் என்றும் சொன்னேன். அனைவரும் புருவம் உயர்த்தினர். நான் தொடர்ந்தேன்.
ஒரு நாள் உச்சிவெயிலில் மூன்றாம் வகுப்புப் பாடம் வேப்பமரத்துக்கடியில் நிகழ.... ராமசாமி வாத்தியார் வழக்கம்போல் போர்டில் எதையோ எழுதுவதில் முனைப்பாய் இருக்க.... நான் எங்கள் வரலாறு பாடப் புத்தகத்தினை பொழுதுபோகாமல் புரட்ட.... அதில் ஒருவர் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு... கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு முகத்தில் ஒருவித அமைதியுடனும் அமர்ந்திருந்த அந்த மனிதரைப் பார்த்தவுடன் என்னுள் எதேதோ எண்ணங்கள்.... சொல்லத் தெரியவில்லை...
நேராக அப்புத்தகத்தினை வாத்தியாரிடம் காட்டி.... இவர் யார்....? இவர் ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறார்....? இவங்க அம்மா அப்பா அடிச்சிட்டாங்களா.....? யார் மேலயாச்சும் கோவமா....? ஒழுங்கா படிக்காத்தாலா வாத்தியார் இப்படி ஒக்கார வச்சுட்டாரா....?ன்னு ஒரே கேள்வி மேல கேள்வியா கேட்டுவைக்க......
ராமசாமி வாத்தியார் எப்பவும்போல ரொம்ப அன்பா... கனிவா....எளிமையா.... மனசக் கவரும்படியா பதில் சொன்னார். அவர் பேர்தான் புத்தர்ன்னு சொன்னார். 'அவர் ஒரு நாட்டோட ராஜாவாம். ஒரு சின்ன எறும்பைக் கூட கொல்ல மாட்டார். பொய் சொல்லமாட்டார். தவம் செய்வார்....பிற உயிர்களைக் கொல்லக்கூடாதுன்னு சொன்னார்....' அப்டீன்னு நிறைய சொல்லச் சொல்ல ஆழமா பதிஞ்சு போய் புத்தர் மாதிரி சம்மணங்கால் போட்டு உட்கார ஆரம்பிச்சேன். முதன் முதலில் என்னைக் கவர்ந்தவர் புத்தர். அவரோட கொள்கைகள் அப்பவே என்னையறியாமல் ராமசாமி வாத்தியார் ஆழமா பதிச்சிட்டார்.
அப்றம் விவரம்
தெரிஞ்சபின்னால் என்னைக் கவர்ந்தவர் வளர்த்த பெரியவர்.
அவர் தன்னுடைய
நிலங்களையெல்லாம் விநோபாவின் பூதான் இயக்கத்திற்கு நன்கொடையாக அளித்திட்டார்,
விநோபாவின் நண்பர். காந்தியடிகளின் அஹிம்சை கொள்கையைத் தன் வாழ்நாள் முழுதும்
கடைபிடித்தவர். இரவில் அகல் விளக்கில் எண்ணெய் தீரும்வரை ராமாயணமோ நாலாயிரதிவ்விய
பிரபந்தமோ படித்துவிட்டு சாமி திண்ணையிலேயே உறங்கிவிடுவார்.
எளிமையான கதராடைகள்.
பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் கால்நடையாகவே பயணம்..... யோகநெறிகளில் தன்னை
இணைத்துக்கொண்டு இறுதிவரை அறவாழ்வில். அவரைப்போன்று வருங்காலத்தில் ஒரு மிகப்பெரிய
சுவாமிஜியாக வேண்டும் என்றும் அதன்பின்னர் கோபால்ஜி என்ற சுவாமிஜியின் சிநேகம்
கிட்டி அவரது கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு அவர் போல் ஒரு மிகப்பெரிய சுவாமிஜியாக
வேண்டும் எனவும் அதன் பின்னர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பரிச்சயம் ஏற்பட்டு
அவர்போல் மிகப்பெரிய சுவாமிஜி ஆகவேண்டும் எனவும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருமாதிரி
ஆக வேண்டும் என ஆசைகள் இன்றுவரை விரிந்துகொண்டே செல்கின்றது எனவும் கூறினேன்.
மேலே வானம்… கீழே நியூயார்க்…
வானம் -6. நியூயார்க்-3 10-Sep-2012, Monday
ஒரு அம்மா தனக்கு இரவினில் தூக்கம் வரவில்லை எனவும் என்ன செய்தால் விரைவினில் தூங்க இயலும் எனவும் தன் பிரச்சினைக்குத் தீர்வு கோரினார்.
தெரஸா Sleep Control என்றொரு உத்தியைச் சொல்லிக் கொடுத்திட்டார். அந்த உத்தி ஆழமான அமைதியான உறக்கத்தினைத் தர வல்லது. காலையில் துயிலெழும்பொழுது அன்று மலர்ந்த ஒரு மலரினைப் போன்ற புத்துணர்ச்சி.
நான் கடைபிடிக்கும் ஒரு எளிமையான வழியைச் சொன்னேன். 1000 லிருந்து 1 வரை மெதுவாக இறங்குவரிசையில் எண்ணத் தொடங்கினால் தூக்கம் கண்களைச் சுழற்றும் என்றேன். இதில் எண்ணங்களால் அலைபாயும் மனதினை swtich-off செய்கின்றோம். அதனால் தூக்கம் விரைவில் வரவழைக்கின்றோம் என்றேன்.
பின்னர் அனைவருக்கும் டெல்டா நிலைக்கு அழைத்துச் செல்லும் இன்னொரு தவப் பயிற்சியினை பயிற்றுவித்தார். அந்த தவம் பயின்ற பின் 6 வெவ்வேறு உலோகத் துண்டங்களை ஒவ்வொருக்கும் கொடுத்து தவத்தின் உதவியால் மனதினை அந்த உலோகத்தினுள்ளே உட்செலுத்திப் பயணித்து அதன் மூலக்கூறுகளையும் கட்டமைப்பையும் விவரிக்கும்படிக் கூறினார். சிலர் கனவு நிலைகளில் எதேதோ சொல்லினர். சிலர் ஏறக்குறைய அறிவியலுக்கு ஒத்த உட்கூறமைப்புகளைக் கூறினர்.
பின்னர் இருவர் கொண்ட குழுக்களாக பயிலுபவர்களைப் பிரித்தார். A மற்றும் B என நாமகரணம் சூட்டினார். A தவத்தினுள் சென்று B யின் வீட்டில் என்ன இருக்கின்றது என விவரிக்க வேண்டும். பின்னர் அதே போல் B யும் A யின் வீட்டினுள் தவத்தின் மூலம் நுழைந்து அங்கே என்னென்ன இருக்கின்றது எனப் பார்த்துச் சொல்லவேண்டும்.
ஒருவர் ஆழமாய் தவத்தினுள் சென்றவுடன் தான் பார்க்கும் பொருட்களை, நிகழ்வுகளை, உணரும் உணர்வுகளை, வீட்டின் கட்டமைப்பு இப்படி ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். எதிராளி ஒரு காகிதத்தில் அவர் சொன்னத் தகவல்களைப் பதிந்து கொள்வார். தவம் கலைந்து நனவு நிலைக்குத் திரும்பியபின் அவர் கூறியதில் எத்தனை சரி என ஒவ்வொன்றாய் டிக் அடிக்க வேண்டும்.
சிலர் 50 சதம் சரியாகக் கூறினர். இன்னும் சிலருக்கு 60 லிருந்து 70 சதம் சரியாக இருந்தது.
என் முறை வந்தது. தெரஸா, என்னைத் தன்னுடைய வீட்டினுள் தவத்தினுள் வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆராய்ச்சிக்காகவும் இந்திய தவமுறைகள் எப்படி இருக்கும் எனத் தான் அறிய விரும்புவதாயும் கேட்டுக்கொண்டார்.
அப்படியெல்லாம் என்னால் செய்ய இயலாது; நீங்கள் நினைப்பது போல் நான் ஒரு யோகியோ அல்லது சுவாமிஜியோ அல்ல; நான் எல்லோரையும் போல் ஆசாபாசங்கள் கொண்ட ஒரு சாதாரண மனிதனே.
‘உங்கள் அமைதியான முகம் நீங்கள் தவத்தில் ஒரு நிபுணர் எனவும் உங்களுக்கு Power இருக்கும் என நினைத்தேன்’ என்றார்.
‘யார் சொன்னது எனக்கு Power இல்லை என ?... சிறு வயதிலேயே பவர் வந்துவிட்டது…..இதோ இருக்கின்றதே…” என என் மூக்குக் கண்ணாடியைச் சுட்டிக் காட்டினேன்.
அனைவரும் கொல்லெனச் சிரித்தனர்.
அன்னையொருவர் Telekinematics பற்றிக் கேட்டார். டெலிகைனமெட்டிக்ஸ் என்பது எந்த ஒரு விசையும் இன்றி பொருட்கள் தானாக நகர்தல் அல்லது உருமாற்றம் கொள்ளல். எடுத்துக்காட்டாக ஒரு டேபிள் ஸ்பூனை எந்த ஒரு விசையும் இன்றி மனதினால் வளைத்தல்.
ஒரு முறை உலகக் குத்துச்சண்டை வீரர் முகமது அலி தரையிலிருந்து ஓரடி உயர்ந்து காட்டியதை ஆனந்த விகடன் 1989களில் பிரசுரித்திருந்தது. இந்தத் துறையில் யூரி கெல்லர் என்பவர் ஒரு நிபுணர். நகர மையத்தில் இருக்கும் மணிக்கூண்டினில் இருக்கும் ஓடும் கடிகாரத்தினை நிறுத்திக் காட்டினார். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களின் இல்லத்திலிருக்கும் கடிகாரங்களை நிறுத்துவது என மிகவும் பிரபலமாகியிருந்தார்.
”நான் படித்த பெளதிக சாஸ்திரத்தின்படி நியூட்டனின் விதிகளுக்குட்டிருக்கவேண்டும். விஞ்ஞான விதிகளின் படி இதனை நிறுவ இயலுமா எனத் தெரியவில்லை. எனவே எந்த ஒரு பொருளுமே தன் நிலையை மாற்றிக்கொள்ளவேண்டுமானால் ஒரு விசை தேவை. 1940களில் ருஷ்ய நாட்டில் இதைப் பற்றிய ஆய்வு நடந்தேறியது. Mindon Energy எனக் கண்களுக்குப் புலனாகா எதோ ஒரு சக்தியானது அங்கே செயல்படுவதாய் ஒரு ஊகத்திற்கு வந்தனர். Auro Energyஐ அந்தக் குறிப்பிட்ட பொருளின் மீது குவிப்பதாயும் அதனால் அந்தப் பொருள் வளையவோ அல்லது தன் நிலையை மாற்றிக்கொள்ளவோ இயல்வதாய் ஊகித்தனர். ஆனாலும் இதற்கு விஞ்ஞானப் பூர்வ நிரூபணம் தர இயலவில்லை என்பதே நிஜம்..” என்றேன்.
தொடரும்....
On Sep 13, 3:50 pm, Rishi Raveendran <rishiraveend...@gmail.com>
wrote:
> *மேலே வானம்**… கீழே நியூயார்க்…*
>
> *வானம்** -6. நியூயார்க்-3 10-Sep-2012, Monday*
>
> *
> *
--
தெரசா உள்பட பலரும் நம்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள், நீங்கள் தவச் சீலர், யோகி என்று. நீங்கள் முயன்றால் அப்படியே ஆக முடியும். ஆனால், ஏனோ விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்.
--
தம்பதியர் நட்பு நலம்
ஒருமுறை நான் TIDEL PARK ல் பணியிலிருந்தபொழுது
என் சக ஊழியர்கள் பலர் காதலர்களாக இருந்தனர். சிலர் தங்களது காதல்களுக்காக நிறைய
தியாகங்களைச் செய்தனர். சிலர் வீட்டின் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களில் ஒருவர், என் குழுவில் என் கீழ்
பணியிலிருந்த திருவாளர் எக்ஸ்.
அவரது காதலானது தெய்வீகமானது என்பார். காதலிக்காக உருகுவார். என்னென்னவோ செய்வார். அவர்களின் காதலுக்கு
மொழியும் இனமும் தடையாக இருந்தது.
பெரும்பாலான
திரைப்படங்களில் வருவது போல் வாடகை வீட்டில் குடியமர்ந்த பொழுது அந்த வீட்டிலுள்ள
பெண்ணையே காதலித்திருக்கின்றார். காதலுக்குக் கண் இல்லை என்பது எவ்வளவு
நிதர்சனம் என்பது அங்கே மெய்யாகிக்கொண்டிருந்தது.
ஒரு முறை நான் ஒரு தமிழ்நாடு
அரசு் நிறுவனத்தின் ப்ராஜக்ட் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன். அது அப்பொழுது
தமிழக முதல்வரின் நேரடிக் கண்காணிப்பிலிருந்தது. ப்ராஜக்ட்டிலிருக்கும்
தடைகளைவிட அங்கே நிலவிய உட்குழுக்களின் போரும், அரசியலும் இமாயலத் தடையாக
அமைந்தது. எனவே கடுமையான உழைப்புடனும் மனிதர்களின் மனோபாவங்களையும் மேலாண் செய்ய
வேண்டியிருந்தது. இது என் இயல்பிற்கு ஒவ்வாததாகவே
அமைந்திட்டது. அப்படிப்பட்ட ஒரு இறுக்கமான காலைப் பொழுதினில் வாடிக்கையாளரின்
இடத்தில் நானிருந்திட்டபொழுது மிஸ்டர் எக்ஸிடமிருந்து எனக்கு ஒரு
அலைபேசியழைப்பு.
தான் அவசரமாய்
இருவீட்டுப் பெற்றோர்களையும் எதிர்த்து ரகசியத் திருமணம் செய்து கொள்ளப்போவதாயும் என்னால்
தன் திருமணத்திற்கு பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து சாட்சிக்
கையொப்பமிட இயலுமா எனவும் கோரினான். அப்பொழுது பணி பளுவினால் அவனுக்கு உதவ
இயலா நிலையிலிருந்தேன்.
எங்கள் பொது மேலாளரிடம் உரையாடினேன். அவர் ஐந்தாறு என் சக
ஊழிய நண்பர்களுக்கு 2 மணிநேரம் மட்டும் அவசர விடுப்பு வாங்கிக்கொடுத்து பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து அந்தப் பையனுக்கு உதவிட்டார்.
மிஸ்டர் எக்ஸூம் திருமணம் முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அலுவலகம் வந்துவிட்டார். அந்தப்பெண்ணும் (அவர் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை) அதே போல் அவரது அலுவலகம் சென்றுவிட்டார். எல்லாம் அலைபாயுதே திரைப்படம் செய்த லீலை..!
மாலையில் அலுவலகம் முடிந்ததும் எக்ஸ், தான் குடியிருக்கும் அந்த சேவல் பண்ணைக்கும்(திருவல்லிக்கேணி மேன்ஷன்), அவரது மனைவி எப்பொழுதும் வழக்கமாய் செல்வதைப்போல் தன் வீட்டிற்கும் சென்றுவிட்டார். சில நாட்களில் சொற்ப வாடகையில் வீடு அமர்த்திக்கொண்டார். ஆனாலும் அப்பெண் தன் தாய் வீட்டில்; இவர் இங்கே. சனி, ஞாயிறுகளின் பகல்வேளைகளில் மட்டுமே அவர்கள் திருட்டுத்தனமாகக் குடித்தனம் நடத்த முடிந்தது. சிறிது நாட்களில் பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு அப்பெண் இவருடனேயே தங்கிவிட்டார்.
காதலுக்குத்தான் எத்தனை சக்தி...! என் நான் நினைத்துக்கொண்டேன். அவர்களின் காதலில் உயிர் இருந்தது; தியாகம் இருந்தது; உறுதி இருந்தது. மிகப் பெருமையாகவே இருந்தது. பாரதிராஜாவின் படங்களில் வருவதைப் போல் ஊ..லலலா....ஊ... லலலா.... என தேவதைகள் நடனமாட அவர்களின் வாழ்வு இனிமையாகவே ஆரம்பமாயிற்று.
சில நாட்களிலேயே அங்கே விரிசல் ஏற்பட்டது…!
ஒவ்வொருவரும் மாறி மாறி புகார்களை மற்றவர் மீது சரமாரியாக வீசினர். அவர்களின் விரிசல்களை சரி செய்ய நினைத்தேன். அவர்கள் எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என விரும்பினேன்.
அவர்களின் வாதங்களை அலசிய பொழுது அந்தப் பெண் அடிக்கடி சொல்வது இதுதான். அவர் தன் மீது உண்மையான காதல் செலுத்தவில்லை. தான் ஏமாற்றப்பட்டதாயும் அவன் தன் மீது முன்பு போல் உண்மையான காதலைச் செலுத்தவில்லை எனவும் புகார் கொடுத்தார்.
'நோ...நோ....ஹி இஸ் நாட் த ப்ரிவியஸ் ............. (மிஸ்டர் எக்ஸின் பெயர்). கல்யாணத்திற்குப் பிறகுதான் அவனது சுயரூபம் தெரியுது….’
'தோ... பார்.... போன வாரம்தான் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உனக்கு விருந்தளித்தேன்....ஏன் உங்கப்பன் கூட அப்படி பண்ணியிருப்பானா என்பது டவுட்டே.... அதுக்கு முந்தின வாரம்தான் உன்னை ஊட்டிக்கு அழைத்துச் சென்றேன்...xxxxxx ரூபாய் செலவழித்தேன்.... உன் மீது அன்பில்லாவிட்டால் செலவு செய்திருப்பேனா...? அதற்கு முந்தைய வாரம்தான் லலிதா ஜுவல்லர்ஸில் லேட்டஸ்ட்டா வந்த அந்த நெக்லஸை xxxxx ரூபாய் கொடுத்து வாங்கிக்கொடுத்தேன்.... உன் மீது அன்பில்லாமலா....?'
அப்பெண் வெடி மலையென வெடித்தேவிட்டார்.
"லவ் இருந்தா இப்டி கரெக்ட்ட்டா கணக்கெல்லாம் வச்சிருப்பீங்களா....? இவ்வளவு செலவு பண்ணினேன்னு சொல்லி என்னைக் கேவலப்படுத்தறீங்களே..."
“நான் என்ன செய்யணும்…..?”
"இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி இல்லை...." என தன்
வேதனையைக் கொட்டினாள்.
எனக்கு பளிச் சென
பிரச்சினையின் தீவிரமும் அதற்குண்டான தீர்வும் என் மூளையின் நியூரான்களில்
உடனே ஒளிரியது. அடிப்படை மனோதத்துவம் புரிபட ஆரம்பித்தது.
மனிதர்கள் தங்களது Communicationஐ மூன்று விதமாக வெளிப்படுத்துவர்.
1. 1. Auditory எனப்படும் ஒலிவடிவினில் தகவல் பரிமாற்றம்.
2. 2. Visionary எனப்படும் காட்சிவடிவினில் தகவல் பரிமாற்றம்
3. 3. Kinesthetic எனப்படும் உணர்ச்சிவடிவினில் தகவல் பரிமாற்றம்.
இங்கே இந்தப் பெண் Auditory Type Communication. இவர் எதையுமே ஒலிவடிவாகவே communicate செய்வது இவரது இயல்பு எனப்பட்டது. அந்தப் பையன் Visionary Type Communication. அவனது எண்ணம் சொல் செயல் எல்லாம் காட்சி வடிவாகவே இருந்தது.
Communication Mismatch எனப் புரிந்தது.
இதனால்தான் அவன் அவனது பாணியில் அன்பை அவளுக்கு நகை வாங்கி அழகு பார்த்ததன் மூலம் வெளிப்படுத்தினான். வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று அன்பினை வெளிப்படுத்தினான். அன்பை காட்சி வடிவினில் வெளிப்படுத்தியிருக்கின்றான்.
ஆனால் அந்தப் பெண்ணோ எதையாவது பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுடன் Kinesthetic என்ற உணர்ச்சிவடிவமும் கலந்த டைப்.
காதலில் அவன் தினமும் ஓராயிரம் முறை ஐ லவ் யூ சொல்லியிருக்கின்றான். திருமணமானபின் அது விடைபெற்றிருந்தது்.
அவன் தினமும் காலையில் எழுந்தவுடன் ஐ
லவ் யூ சொல்லிவிட்டு அலுவலகம் வந்தவுடன் அவசரமாகத் தன் மனைவிக்கு தொலைபேசியில் ஐ லவ் யூ
சொல்லிவிட்டு தேனீர் இடைவேளையில் ஒரு ஐ லவ் யூ... மதியம்... இப்படி
சொல்லிக்கொண்டிருந்தால் லலிதா ஜுவல்லர்ஸுக்கும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கும், ஊட்டிக்கும் போக வேண்டியிருந்திருக்காது; கணிசமாய் அவனது
பணப்பையில் பணம் மிச்சப்பட்டிருக்கும். உபாயம் தெரியவில்லை.
அதன் பின்னர் அவர்களது Communicationல் இருக்கும் இயல்பினை உணர வைத்து தற்பொழுது நல்விதமாக
இனிமையாக தங்களது வாழ்வினை மேற்கொண்டுவருகின்றனர்.
இனிமையான இல்லறம் அமைய
என் மூளையின் நியூரான்களில் உதித்த சில ஆலோசனைகள்:
தம்பதியருக்கிடையே நட்பு நலம் சிறக்க
1. காலையில் எழுந்ததும் தங்களது வாழ்க்கைத் துணையினை
ஆழ்மனதிலிருந்து, 'வாழ்க வளமுடன்...' என்று வாழ்த்துங்கள்.
2. உண்மையான நேசமும் அன்பும் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கட்டும். நான் அன்பாக இருப்பது அவளுக்கு/அவனுக்குத் தெரியாதா…? என அலட்சியமாக இருக்க வேண்டாம்.
3. சினம் தவிர்த்தல் நலம். இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
4. ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொள்வதும் பாராட்டிக்கொள்வதும் அவசியம்.
5. தியாகமும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்க்கைத் துணைக்காக விட்டுக்கொடுத்தலும் (கற்பினைத் தவிர) அழகான தாம்பத்யம் அமைய வழிவகுக்கும்.
6. காலையிலும் மாலையிலும் இருவரும் சேர்ந்தே கூட்டுத்தவம் அல்லது இறைவழிபாடு இவற்றினில் ஈடுபடுவது இருவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும்; நட்பு நலம் வலுக்கும்.
7. தினமும் இரவினில் துயிலும் முன்னர் தம்பதியர் தங்களது வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டுப் பேசிவிட்டுத் தூங்கலாம். அதில் அன்பும் அக்கரையும் கரிசனமும் இருக்க வேண்டும்.
8. எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களின் முன் உங்களது வாழ்க்கைத் துணையை மனம் நோகும்படி பேச வேண்டாம். தவறிருப்பின் அவரைத் தனியே அழைத்துச் சென்று பக்குவமாகச் சொல்லிப் புரியவைக்கலாம்.
9. வாழ்க்கைத் துணையிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம். உங்களது எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகியிருக்கலாம். ஆனாலும் மனம் விட்டுப் பேசி நடுநிலையில் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து எது சரியோ அதை எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவம் வந்திருந்தால் வெளியுலகப் பிரச்சினைகள் என்ன செய்துவிடமுடியும்…?
10. ஒரு நாள் முழுதும் மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அந்த வேலை முழுதும் கணவன் அன்பாக செய்தால் அந்த மனைவியின் மனம் எப்படி குளிர்ந்து போகும் எனப் பரீட்சித்துப் பார்த்துத் தெளிவுறலாமே ?
அன்பே ஆணிவேர், அது இதயத்தின் ஆழத்திலிருந்து பிறக்கட்டும். அனைத்து உயிர்களிலும் உயிரற்றவைகளிலும் கடவுள் துகளைப் பார்க்கலாம்.
வனத்தில் வாழும் விலங்கினங்களே அன்பிற்கு அடிபணியும்பொழுது மனிதர்கள் அதுவும் வாழ்க்கைத் துணை எம்மாத்திரம் ? சினம் தவிர்த்து காதலுடனும் அன்புடனும் பண்புடனும் ஒவ்வொரு தம்பதியரும் வள்ளுவர் – வாசுகி போல் வாழ்வது 200 % சதவீதம் சாத்தியமே.
அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன்,
தம்பதியர் நட்பு நலம்
ஒருமுறை நான் TIDEL PARK ல் பணியிலிருந்தபொழுது என் சக ஊழியர்கள் பலர் காதலர்களாக இருந்தனர். சிலர் தங்களது காதல்களுக்காக நிறைய தியாகங்களைச் செய்தனர். சிலர் வீட்டின் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களில் ஒருவர், என் குழுவில் என் கீழ் பணியிலிருந்த திருவாளர் எக்ஸ்.
அவரது காதலானது தெய்வீகமானது என்பார். காதலிக்காக உருகுவார். என்னென்னவோ செய்வார். அவர்களின் காதலுக்கு மொழியும் இனமும் தடையாக இருந்தது.
பெரும்பாலான திரைப்படங்களில் வருவது போல் வாடகை வீட்டில் குடியமர்ந்த பொழுது அந்த வீட்டிலுள்ள பெண்ணையே காதலித்திருக்கின்றார். காதலுக்குக் கண் இல்லை என்பது எவ்வளவு நிதர்சனம் என்பது அங்கே மெய்யாகிக்கொண்டிருந்தது.
ஒரு முறை நான் ஒரு தமிழ்நாடு அரசு் நிறுவனத்தின் ப்ராஜக்ட் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன். அது அப்பொழுது தமிழக முதல்வரின் நேரடிக் கண்காணிப்பிலிருந்தது. ப்ராஜக்ட்டிலிருக்கும் தடைகளைவிட அங்கே நிலவிய உட்குழுக்களின் போரும், அரசியலும் இமாயலத் தடையாக அமைந்தது. எனவே கடுமையான உழைப்புடனும் மனிதர்களின் மனோபாவங்களையும் மேலாண் செய்ய வேண்டியிருந்தது. இது என் இயல்பிற்கு ஒவ்வாததாகவே அமைந்திட்டது. அப்படிப்பட்ட ஒரு இறுக்கமான காலைப் பொழுதினில் வாடிக்கையாளரின் இடத்தில் நானிருந்திட்டபொழுது மிஸ்டர் எக்ஸிடமிருந்து எனக்கு ஒரு அலைபேசியழைப்பு.
தான் அவசரமாய் இருவீட்டுப் பெற்றோர்களையும் எதிர்த்து ரகசியத் திருமணம் செய்து கொள்ளப்போவதாயும் என்னால் தன் திருமணத்திற்கு பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து சாட்சிக் கையொப்பமிட இயலுமா எனவும் கோரினான். அப்பொழுது பணி பளுவினால் அவனுக்கு உதவ இயலா நிலையிலிருந்தேன்.
எங்கள் பொது மேலாளரிடம் உரையாடினேன். அவர் ஐந்தாறு என் சக ஊழிய நண்பர்களுக்கு 2 மணிநேரம் மட்டும் அவசர விடுப்பு வாங்கிக்கொடுத்து பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து அந்தப் பையனுக்கு உதவிட்டார்.
மிஸ்டர் எக்ஸூம் திருமணம் முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அலுவலகம் வந்துவிட்டார். அந்தப்பெண்ணும் (அவர் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை) அதே போல் அவரது அலுவலகம் சென்றுவிட்டார். எல்லாம் அலைபாயுதே திரைப்படம் செய்த லீலை..!
மாலையில் அலுவலகம் முடிந்ததும் எக்ஸ், தான் குடியிருக்கும் அந்த சேவல் பண்ணைக்கும்(திருவல்லிக்கேணி மேன்ஷன்), அவரது மனைவி எப்பொழுதும் வழக்கமாய் செல்வதைப்போல் தன் வீட்டிற்கும் சென்றுவிட்டார். சில நாட்களில் சொற்ப வாடகையில் வீடு அமர்த்திக்கொண்டார். ஆனாலும் அப்பெண் தன் தாய் வீட்டில்; இவர் இங்கே. சனி, ஞாயிறுகளின் பகல்வேளைகளில் மட்டுமே அவர்கள் திருட்டுத்தனமாகக் குடித்தனம் நடத்த முடிந்தது. சிறிது நாட்களில் பெற்றோர்களை எதிர்த்துக்கொண்டு அப்பெண் இவருடனேயே தங்கிவிட்டார்.
காதலுக்குத்தான் எத்தனை சக்தி...! என் நான் நினைத்துக்கொண்டேன். அவர்களின் காதலில் உயிர் இருந்தது; தியாகம் இருந்தது; உறுதி இருந்தது. மிகப் பெருமையாகவே இருந்தது. பாரதிராஜாவின் படங்களில் வருவதைப் போல் ஊ..லலலா....ஊ... லலலா.... என தேவதைகள் நடனமாட அவர்களின் வாழ்வு இனிமையாகவே ஆரம்பமாயிற்று.
சில நாட்களிலேயே அங்கே விரிசல் ஏற்பட்டது…!
ஒவ்வொருவரும் மாறி மாறி புகார்களை மற்றவர் மீது சரமாரியாக வீசினர். அவர்களின் விரிசல்களை சரி செய்ய நினைத்தேன். அவர்கள் எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என விரும்பினேன்.
அவர்களின் வாதங்களை அலசிய பொழுது அந்தப் பெண் அடிக்கடி சொல்வது இதுதான். அவர் தன் மீது உண்மையான காதல் செலுத்தவில்லை. தான் ஏமாற்றப்பட்டதாயும் அவன் தன் மீது முன்பு போல் உண்மையான காதலைச் செலுத்தவில்லை எனவும் புகார் கொடுத்தார்.
'நோ...நோ....ஹி இஸ் நாட் த ப்ரிவியஸ் ............. (மிஸ்டர் எக்ஸின் பெயர்). கல்யாணத்திற்குப் பிறகுதான் அவனது சுயரூபம் தெரியுது….’
'தோ... பார்.... போன வாரம்தான் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உனக்கு விருந்தளித்தேன்....ஏன் உங்கப்பன் கூட அப்படி பண்ணியிருப்பானா என்பது டவுட்டே.... அதுக்கு முந்தின வாரம்தான் உன்னை ஊட்டிக்கு அழைத்துச் சென்றேன்...xxxxxx ரூபாய் செலவழித்தேன்.... உன் மீது அன்பில்லாவிட்டால் செலவு செய்திருப்பேனா...? அதற்கு முந்தைய வாரம்தான் லலிதா ஜுவல்லர்ஸில் லேட்டஸ்ட்டா வந்த அந்த நெக்லஸை xxxxx ரூபாய் கொடுத்து வாங்கிக்கொடுத்தேன்.... உன் மீது அன்பில்லாமலா....?'
அப்பெண் வெடி மலையென வெடித்தேவிட்டார்.
"லவ் இருந்தா இப்டி கரெக்ட்ட்டா கணக்கெல்லாம் வச்சிருப்பீங்களா....? இவ்வளவு செலவு பண்ணினேன்னு சொல்லி என்னைக் கேவலப்படுத்தறீங்களே..."
“நான் என்ன செய்யணும்…..?”
"இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி இல்லை...." என தன் வேதனையைக் கொட்டினாள்.
எனக்கு பளிச் சென பிரச்சினையின் தீவிரமும் அதற்குண்டான தீர்வும் என் மூளையின் நியூரான்களில் உடனே ஒளிரியது. அடிப்படை மனோதத்துவம் புரிபட ஆரம்பித்தது.
மனிதர்கள் தங்களது Communicationஐ மூன்று விதமாக வெளிப்படுத்துவர்.
1. 1. Auditory எனப்படும் ஒலிவடிவினில் தகவல் பரிமாற்றம்.
2. 2. Visionary எனப்படும் காட்சிவடிவினில் தகவல் பரிமாற்றம்
3. 3. Kinesthetic எனப்படும் உணர்ச்சிவடிவினில் தகவல் பரிமாற்றம்.
இங்கே இந்தப் பெண் Auditory Type Communication. இவர் எதையுமே ஒலிவடிவாகவே communicate செய்வது இவரது இயல்பு எனப்பட்டது. அந்தப் பையன் Visionary Type Communication. அவனது எண்ணம் சொல் செயல் எல்லாம் காட்சி வடிவாகவே இருந்தது.
Communication Mismatch எனப் புரிந்தது.
இதனால்தான் அவன் அவனது பாணியில் அன்பை அவளுக்கு நகை வாங்கி அழகு பார்த்ததன் மூலம் வெளிப்படுத்தினான். வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று அன்பினை வெளிப்படுத்தினான். அன்பை காட்சி வடிவினில் வெளிப்படுத்தியிருக்கின்றான்.
ஆனால் அந்தப் பெண்ணோ எதையாவது பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுடன் Kinesthetic என்ற உணர்ச்சிவடிவமும் கலந்த டைப்.
காதலில் அவன் தினமும் ஓராயிரம் முறை ஐ லவ் யூ சொல்லியிருக்கின்றான். திருமணமானபின் அது விடைபெற்றிருந்தது்.
அவன் தினமும் காலையில் எழுந்தவுடன் ஐ லவ் யூ சொல்லிவிட்டு அலுவலகம் வந்தவுடன் அவசரமாகத் தன் மனைவிக்கு தொலைபேசியில் ஐ லவ் யூ சொல்லிவிட்டு தேனீர் இடைவேளையில் ஒரு ஐ லவ் யூ... மதியம்... இப்படி சொல்லிக்கொண்டிருந்தால் லலிதா ஜுவல்லர்ஸுக்கும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கும், ஊட்டிக்கும் போக வேண்டியிருந்திருக்காது; கணிசமாய் அவனது பணப்பையில் பணம் மிச்சப்பட்டிருக்கும். உபாயம் தெரியவில்லை.
அதன் பின்னர் அவர்களது Communicationல் இருக்கும் இயல்பினை உணர வைத்து தற்பொழுது நல்விதமாக இனிமையாக தங்களது வாழ்வினை மேற்கொண்டுவருகின்றனர்.
இனிமையான இல்லறம் அமைய என் மூளையின் நியூரான்களில் உதித்த சில ஆலோசனைகள்:
தம்பதியருக்கிடையே நட்பு நலம் சிறக்க
1. காலையில் எழுந்ததும் தங்களது வாழ்க்கைத் துணையினை ஆழ்மனதிலிருந்து, 'வாழ்க வளமுடன்...' என்று வாழ்த்துங்கள்.
2. உண்மையான நேசமும் அன்பும் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கட்டும். நான் அன்பாக இருப்பது அவளுக்கு/அவனுக்குத் தெரியாதா…? என அலட்சியமாக இருக்க வேண்டாம்.
3. சினம் தவிர்த்தல் நலம். இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
4. ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொள்வதும் பாராட்டிக்கொள்வதும் அவசியம்.
5. தியாகமும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்க்கைத் துணைக்காக விட்டுக்கொடுத்தலும் (கற்பினைத் தவிர) அழகான தாம்பத்யம் அமைய வழிவகுக்கும்.
6. காலையிலும் மாலையிலும் இருவரும் சேர்ந்தே கூட்டுத்தவம் அல்லது இறைவழிபாடு இவற்றினில் ஈடுபடுவது இருவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும்; நட்பு நலம் வலுக்கும்.
7. தினமும் இரவினில் துயிலும் முன்னர் தம்பதியர் தங்களது வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டுப் பேசிவிட்டுத் தூங்கலாம். அதில் அன்பும் அக்கரையும் கரிசனமும் இருக்க வேண்டும்.
8. எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களின் முன் உங்களது வாழ்க்கைத் துணையை மனம் நோகும்படி பேச வேண்டாம். தவறிருப்பின் அவரைத் தனியே அழைத்துச் சென்று பக்குவமாகச் சொல்லிப் புரியவைக்கலாம்.
9. வாழ்க்கைத் துணையிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம். உங்களது எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகியிருக்கலாம். ஆனாலும் மனம் விட்டுப் பேசி நடுநிலையில் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து எது சரியோ அதை எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவம் வந்திருந்தால் வெளியுலகப் பிரச்சினைகள் என்ன செய்துவிடமுடியும்…?
10. ஒரு நாள் முழுதும் மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அந்த வேலை முழுதும் கணவன் அன்பாக செய்தால் அந்த மனைவியின் மனம் எப்படி குளிர்ந்து போகும் எனப் பரீட்சித்துப் பார்த்துத் தெளிவுறலாமே ?
அன்பே ஆணிவேர், அது இதயத்தின் ஆழத்திலிருந்து பிறக்கட்டும். அனைத்து உயிர்களிலும் உயிரற்றவைகளிலும் கடவுள் துகளைப் பார்க்கலாம்.
வனத்தில் வாழும் விலங்கினங்களே அன்பிற்கு அடிபணியும்பொழுது மனிதர்கள் அதுவும் வாழ்க்கைத் துணை எம்மாத்திரம் ? சினம் தவிர்த்து காதலுடனும் அன்புடனும் பண்புடனும் ஒவ்வொரு தம்பதியரும் வள்ளுவர் – வாசுகி போல் வாழ்வது 200 % சதவீதம் சாத்தியமே.
அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன்,
--
அன்புடன்
சக பயணி
இரவீந்திரன்
"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."
--
--
--

" ஒரு நாள் முழுதும் மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அந்த வேலை முழுதும் கணவன் அன்பாக செய்தால் அந்த மனைவியின் மனம் எப்படி குளிர்ந்து போகும் எனப் பரீட்சித்துப் பார்த்துத் தெளிவுறலாமே ?
--
அது ஒரு கனாக் காலம் -3 2006
எங்கள் வீடு குழந்தைச் சோற்றிற்கு பிரபலம்...
எங்கள் வீட்டில் குழந்தைகளுக்காகவே தனியாக குழைய சாதம் வடித்து, பருப்பும் வீட்டில் கறந்த பசும்பாலில் செய்த நெய்யும், பிசைந்து குழந்தைகளுக்காகவென பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும். எங்கள் தெருவிலிருக்கும் குழந்தைகளும், தூரத்து தெருக்குழந்தைகளும் இந்த சாதம்தான் ஊட்டவேண்டும் என அடம் பிடிக்கும் அளவிற்கு பிரபலம். எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு கதை சொல்லி விளையாட்டு காட்டி ஒவ்வொரு அன்னையரும் தத்தமது குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவது வழக்கம்.
என்னை வளர்த்த பெரியன்னை அவர்கள் கூட, "நாம் செய்யும் நல்ல செயல்கள்தான் அடுத்த தலைமுறையை நல்ல நிலைக்கு உயர்த்தும். " என்று அடிக்கடி சொல்வார்கள்... ஏழ்மையான விவசாயத்தை நம்பியே ஜீவிக்க வேண்டிய நிலை...
ஒரு முறை ஒரு அன்னை அவர்கள் எங்கள் வீட்டில் வந்து தன் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார்.
அந்தக் குழந்தை சாப்பிட அடம் பிடித்தது....
நான் 'சிவனே' னு அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்தேன்....
"அதோ அந்த மாமாகிட்ட சொல்லி உன்னை பூச்சாண்டிகிட்ட பிடிச்சிக்கொடுக்கச் சொல்லிடிவேன்.. ஒழுங்கா சாப்பிடு..." என்று அந்த அன்னை குழந்தைக்கு பயம் ஊட்டினார்.
எனக்குள் ஒரே மகிழ்ச்சி....
"அட நாலாப்பு படிக்றப்பவே நாம் நிஜமாகவே பெரிய ஆளாகி விட்டோமா என்ன...? " என மனம் சிலிர்த்தது.....
உடனே குழந்தையின் அருகே சென்றேன்...
"ஒழுங்கா சாப்பிடு... இல்லே உன்ன பூச்சாண்டிகிட்டே பிடிச்சிகொடுத்ருவேன்..." என்று மிரட்டல் தொனியில் சொன்னேன்...
குழந்தை என்னையே சிறிது நேரம் உற்றுப்பார்த்த்து...
பின்னர் 'ஓ' வென அழ ஆரம்பித்தது....
எனக்கோ ஒரே மகிழ்ச்சி... அட என்னைப்பார்த்துகூட பயப்படுகின்றனர்...நிஜமாகவே நான் பெரிய பையன்தான்... நாளை ஸ்கூலில் நம் வேலையை இனி தைரியமாய் ஆரம்பிக்கலாம் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது....
" எனக்கு வெளயாட இப்பவே பூச்சாண்டி புடிச்சி கொடு..." என குழந்தை அழ ஆரம்பித்தது...
நானோ திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் திருதிருவென விழிக்கலானேன்...
இதேதடா புது வம்பு... பிள்ளையார் பிடிக்க போய் ஏதோ வந்த கதயாவுள்ள இருக்கு....
பூச்சாண்டி என்றால் குழந்தை பயப்பட வேண்டாமா...? அதுவும் என்னைப் பார்த்துதானா அந்தக் குழந்தை இப்படி கேட்கவேண்டும்...?
குழந்தையின் அடம் அதிகமானது. பூச்சாண்டி இல்லாமல் சாப்பிடமாட்டேன் என்றது...
"நீ சும்மா போகவேண்டியதுதானே... நாம்பாட்ல அத சமாதானப்படுத்தி சாப்பிடவெச்சிருப்பேன்ல... இப்டி பண்ணிட்டியே...." என கோபமாக என்னை அடிக்க விரட்டினார் அந்த அன்னை.
நானோ பின்னங்கால்கள் பிடரியில் பட, "குய்யோ... முறையோ..." என ஓடலானேன்....
கனவு தொடரும்.....
" எனக்கு வெளயாட இப்பவே பூச்சாண்டி புடிச்சி கொடு..."~ அந்த குழந்தை அரசியல்வாதியாகி விட்டதா?இ
--





--
--
ஒளிப் பூக்கள் மின்னும் ஊர், அதில் ஒயில் பூக்க நிற்கும் நீர்.
--
--





அங்கேயும் தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா ரிஷி?:-)
--






--
கொஞ்சமில்லை; நிறையவே பழைய நினைவுகளைக் கிளறிட்டீங்க! நானும் ஆங்கிலம் கத்துக்கப் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமில்லை. அப்பாலிக்கா வந்து நம்ம எக்ஸ்பீரியன்ஸையும் அவுத்து வுடுறேன். இப்போதைக்கு ஒரு சபாஷ் மட்டும் சொல்லிக்கிட்டு ஜூட் வுடுறேன்.
Sent from my PII desktop computer "ஆரவல்லி’. Don't own an IPhone yet.
சேட்டைக்காரன்
உட்கார்ந்து யோசிப்போமில்லே?
http://settaikkaran.blogspot.in
--
--
--





உன்னை நீ நம்பு… -2
வாசகர்களே….
மகிழ்ச்சி ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
நம்மில் பலர் மன ஓட்டத்தில் ஒருவித தடை ஏற்பட்டு மேலே நகராமல் தேங்கிவிடுகின்றோம். டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் பாணியில், இது முடக்கப்பட்ட மனம். தேங்கிய நீர் நாற்றமடித்துவிடும். துருப்பிடித்த மனதினால் என்ன சாதித்துவிடமுடியும்…?
மனம் உற்சாகமாய்
இருக்கும்பொழுது அங்கே ஒரு வித நேர்மறையான மனோசக்தி நிலவுகின்றது. மனதின் ஆற்றல்கள்
அபரிமிதமாய் வளரப் பெறுகின்றன.
மனம் எப்பொழுது தேங்கி நிற்கின்றது….?
தினமும் ஒரே மாதிரியான செயல்களை செய்யும்பொழுது. மனதிற்குப் பிடிக்காத செயல்களைத் திரும்பத் திரும்ப செய்யும்பொழுது.
நம்மில் எத்தனைபேரின் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் தொழில் நமக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஆற்றலையும் தருகின்றது…..? ”எப்படா இந்த ஆபீஸ் முடியும்…?” என்று ஒரு அலுவலருக்கும், மாணவனுக்கோ, “I Love School…..When it is Closed….” என்றும் இப்படி ஒவ்வொருவருக்கும் தன் துறை சார்ந்த ஒருவித வெறுப்பு ஏற்படுகின்றதே இது எதனால்…?
இந்த வெறுப்பு மனோநிலையினால்
நாம் ஈடுபடும் நம் துறையில் ஈடுபாடின்றி அப்படி என்ன நாம் சாதித்துவிடமுடியும்….? மொத்தத்தில்
நம் கண்ட்ரோல் நம்மிடம் இல்லை. நாம் சமநிலையில் இல்லை.
தனக்குப் பிடித்த எந்த ஒரு வேலையையும் எவரும் மிகவும் எளிதாக முடிப்பர். ஆனால் எந்த ஒரு வேலையையும் தனக்குப் பிடித்ததாக மாற்றிக் கொண்டால் சாதனைகள் நமதன்றோ….?
வேப்பங்காயாய் இருக்கும் கணிதத்தினை மனதால் விரும்பப்படுவது எப்படி….?
இங்கே ஒரு மனப் பயிற்சி.
அமைதியாக கண்களை மூடி அமரவும்
நீங்கள் இதற்கு
முன்னால் வெற்றி பெற்ற ஒரு நிகழ்வினை மனத் திரையில் ஓடவிடுங்கள்.
அதன் மகிழ்ச்சியை சுவையுங்கள்.
அப்பொழுது யார் யாரெல்லாம் பாராட்டினார்களோ… அதனை செவியுறுங்கள்..
கைத்தட்டல்களை செவியுறுங்கள்.
அதே சக்தியினை இப்பொழுது நீங்கள் மேற்கொள்ளும் பணியுடன் இணைத்துவிடுங்கள்.
இப்படி ஒரு 15 முறை மனப் பயிற்சி செய்யுங்கள். மிகவும் குறுகிய காலத்தில் இப்பயிற்சியை முடித்திருக்கவேண்டும். இப்பயிற்சியில் வேகம் வேண்டும். அதிக நேரம் எடுத்தல் கூடாது. இப்படியான 15 முறை பயிற்சி ஒரு செட்.. இது போல் ஒரு 3 செட் பயிற்சிக்கவும்.
இப்பொழுது நீங்கள் உற்சாகமாய் பணியினை மேற்கொண்டு சிறப்புற நடத்தி முடிப்பீர்கள்.
இது எதனால்….?
உங்களின் ஆழ் மனதினை நீங்கள் நம்ப வைத்ததனாலன்றோ….?
அது ஒரு கனாக்காலம்.....!
கனவு-13..... காலம்-2.
அப்ப அஞ்சாப்பு படிச்சிட்ருந்தோம். சேது, ஜனகராஜ், லட்சுமணன் நாங்கெல்லாம் ஒரு கோஷ்டி. எங்க பள்ளிக்கொடத்துல நாங்க எப்பவுமே கோஷ்டி கோஷ்டியா பிரிஞ்சிதான் இருப்போம். ஒரு கோஷ்டிக்கும் இன்னொரு கோஷ்டிக்கும் அடிக்கடி அடிதடி நடக்கும். காரணம், ‘என்னோட பென்சிலத் திருடிட்டான்.......’ ‘என்னோட நோட்ல பேப்பரக் கிழிச்சிட்டான்... என்னத் திட்டிட்டான்.....’னு... இப்டி ரொம்ப சிரிப்பு சிரிப்பா வரும்.
ஒரு நா(ள்) ராத்திரி நாங்க புளுகாண்டி அண்ணாச்சி கடைக்குப் பக்கத்துல இருக்ற ஒரு தண்ணிக்கொழா திண்டு மேல ஒக்காந்து பேசிட்ருந்தோம். அப்ப பேய் பத்தி பேச்சித் திரும்பிச்சி. பேய்க்கதைகள் நெறய சொன்னாங்க நம்ம பசங்க. அங்கன ஒரு பேயப் பாத்தோம். இங்கன ஒரு பேயப்பாத்தோம். மாயாண்டி அண்ணனை முனி அடிச்சி அந்த அஞ்சு விரலும் அவரோட முதுகுல தடமா இருந்துச்சி.... நம்ம ராசண்ணன கொள்ளிவாய்ப் பிசாசு கொன்னுடுச்சி. நம்ம மொக்கப் பயலயும் காத்து கருப்பு அடிச்சி கொன்னுடுச்சி... இப்டி ஏகப்பட்ட கதைகள சொன்னாங்க.
மொதல்ல இந்தப் பேய்னா என்ன....? அது எப்டி இருக்கும்...? அதுல ஏன் பேய், பிசாசு, கொள்ளி- வாய்ப் பிசாசு, முனி, மோகினி,னு இம்புட்டு வகை இருக்குது....? அது எதுக்கு நம்மள கொல்லனும்...? நாம என்ன அது திங்கற சோத்துல மண்ணயா அள்ளிப்போட்டோம்...? பெறகு எதுக்கு இப்டி நம்பள பழிவாங்கனும்னு கேட்டேன்.
‘எலே நாகேஷு....! ஒனக்கு எல்லாமே எகடாசிதாண்டா.... ஒரு நா(ள்) ஒன்னய பேயி பிடிச்சி புதூரு ஆண்டாளு பேயாட்றது மாதிரி ஆடினா அப்ப தெரியும்டா சங்கதி. ஒவ்வொருத்தனும் தனக்கு வயித்து வலி வர்ர வரைக்கும் எவனும் நம்பமாட்டாண்டா...’ அப்டீனு மண்டகாப்படி நடத்துனாங்க.
அட கெரகமே...!னு நான் எப்பவும் போல ‘ஙே’ன்னு முழிச்சிட்ருந்தேன்.
எங்க கிராமத்ல பால் ஊத்துற அண்ணே விடிகாத்தால வெள்ளென ஒரு மூணு நாலு மணிக்கெல்லாம் சைக்கிள்ல பால்கேனக் கட்டிக்கிட்டு பக்கத்து டெவுனு திருத்தங்கல்லு, செவாசி(சிவகாசி)ன்னு போயி பால ஊத்திட்டு வரும். அப்ப புதூருக்கும் எங்க ஊருக்கும் நடுவே ஒரு பாலம். அங்கன இருட்டிடிச்சின்னா யாருமே ஒக்காரமாட்டாங்க. எங்களுக்கு மட்டும் அந்தப் பாலம் ரொம்ப பிடிச்சிப்போச்சி. ராத்திரி பூரா அங்கனதான் ஒக்காந்து பேசிட்ருப்போம். ஒரு நா(ள்) ஒரு பொழுதாச்சும் பேயப் பாத்துடுனும்னு ஆசை.
ஒரு நா(ள்) நம்ம சேதுப்பயலுக்கு நடு ஜாமத்துல ரெண்டுக்கு வந்துடுச்சி. அவங்க வீடு ஊருக்குள்ள இருக்கு. எங்க வீடு ஊருக்கு கடைசியில பள்ளிக்கொட்த்துக்குப் பக்கத்துல இருக்கு. அவன் ஒரு வெள்ள வேட்டிய தலையிலருந்து கால்வரைக்கும் குளுருக்குப் போத்திட்டு நேரா புதூர் பாலத்துக்குப் பக்கத்துல வந்து ரெண்டுக்குப் போக ஆரம்பிச்சா(ன்).
அந்த பால்கார அண்ணாச்சி அந்த சாமத்துல சீட்டியடிச்சிட்டு அந்தப் பாலத்துமேட்டுல (அப்ப காண்ட்ராட்டு எடுத்த அண்ணாச்சி கொஞ்சம் மண்ணுபோட்டு மேடாக்கியிருந்தாங்க.) சைக்கிள் சீட்லருந்து எந்திரிச்சி நின்னுட்ட்டு மிதிக்க நம்ம சேதுப்பயலுக்கு தூரத்லருந்து பாக்க கருப்பா ஒரு முனி வர்ர மாதிரி தெரிய....
பால்கார அண்ணாச்சிக்கு பாலத்துக்கு சைடுல வேட்டியச்சுத்துகிட்டு நடுங்கிகிட்டு இருக்ற சேதுவப் பாத்து ஒரு பிசாசு பம்மி பம்மி வர்ரது மாதிரி தெரிய ஆரம்பிக்க ....
இந்த அண்ணாச்சி ‘வீல்...’னு கத்த... நம்ம சேதுப்பயலும் பயத்துல வீல்...னு கத்த... பால்கார அண்ணாச்சி சைக்கிள்ல விட்டுக் கீழே விழ... நம்ம சேதுப்பய கால்கள் பிடரியில் பட ,’குய்யோ...முறையோ..’ன்னு ஓட....
பால்கார அண்ணாச்சியும் பயத்துல குய்யோ...முறையோன்னு கால்கள் பிடரியில் பட எதிர்த்திசையில் ஓட......
தொடரும்....
மேலே வானம்... கீழே நியூயார்க்....
வானம்-8 நியூயார்க்-1 3-July-09
மாலை 8 மணிக்கு சூரியன், ”இன்று இனி நாம் உறங்கப்போகலாமா...?” என சிந்தித்து மெல்ல மெல்ல அந்தியை நெருங்க முயற்சித்துக் கொண்டிருக்க.... கடலின் மையத்தில் அமைக்கப்பட்ட மர இருப்பின் மீது அமர்ந்துகொண்டு கால்களை ஆழமான கடலின் நீரில் நீட்டியபடி அருகிலிருந்த கப்பலினை வேடிக்கை பார்த்துக்கொண்டே ஒரு கையில் இருந்த Dunkin Donuts Coffeeயை எப்பொழுதும் போல் துளித்துளியாய் ஒவ்வொருத் துளியையும் ரசித்து ருசித்து குடித்துக்கொண்டே கடலினலைகளையும் ஆகாயத்தினையும் லயமாய் ஒரு தவம் செய்வதைப் போல் செய்துகொண்டிருக்க, பில்கேட்ஸ் அண்ணன் எனக்குப் பரிசளித்த அந்த Balckjack-II செல்ஃபோன் செல்லமாய் சிணுங்க, “ஆர்ரா இது இந்நேரத்துல.....? ” என சோம்பலாய் செல்ஃபோனை உயிர்ப்பிக்க, எதிர்முனையில் சாகித்யமும் ஞானபீடமும் புலிட்சரும் நோபெல்லும் என அனைத்துப் பரிசுகளையும் வெல்லும் வீரிய வித்துக்களைத் தன்னுள்ளே கருவாய் சுமந்து இசைக்கும் கவிஞன் நிலாரசிகன்....!!!
“ஐயா... நாளை சுவாதியக்கா அவர்களின் வீட்டில் ஜமா ... ” என அழைப்பு விடுத்தார்.
“சரி வருகின்றேன்....” எனக்கூறிவிட்டு தினமும் கடலிடம் பேசிவிட்டு வருவதால் இன்று அவசரமாக ஒரு ”பை” மட்டும் சொல்ல்விட்டு நடையைக் கட்டினேன்.
வழியில் ஒரு 60 அல்லது 70 வயதுப் பெரியவர்.
“தம்பி.... நான் சொல்றேன்னேன்னு தப்பா நெனச்சிக்க மாட்டியே....?”
“ஊஹூம்... சொல்லுங்க....’
“உங்க ஜீன்ஸின் பின்பாக்கெட் கிழிந்திருக்கின்றது.... வாலட் கீழே விழப்போகின்றது.... ஜாக்கிரதை....”
“அடக் கெரகமே....! உங்களுக்கு விஷயமே தெரியாதா....? ”
“..........” என்ன என்பதினைப் போல் ஆர்வமாய் தன் புருவத்தினை உயர்த்தினார்.
“இந்த ஜீன்ஸை நான் விலைக்குவாங்கும்பொழுது என்னோட நண்பர்கள்தான் இதனைத் தேர்ந்தெடுத்தனர் கிபி 2007ல். அப்பொழுதே இந்த பின்பகுதி நைந்திருந்த்து. அப்பொழுதே அவர்களிடம் சண்டைக்குப் போனேன், “ஏம்ப்பா இப்டி கிழிஞ்ச துணியை விலைக்கு வாங்கணும்”னு....?. அதுக்கு அவங்க சொன்னாங்க, “என்ன சார் இன்னும் நீங்க சின்னப்பையனாவே இருக்கீங்க.... இப்டி நைஞ்சியிருந்தாத்தான் சார் ஃபேஷன்....! ஊஹூம் நீங்கள்ளால் முன்னேற இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும் சார்”.... அப்டீன்னாங்க.... ” என்று அந்த பெரியவரிடம் சொன்னேன்.
“என்ன கெரகமோ போ....!” என சலித்துக்கொண்டார். அவருக்கு மரியாதை செலுத்தும்வகையில் அவர்கூற்றின்படியே என்னுடைய பணப்பையை இடம் மாற்றினேன்.
வீட்டிற்கு வந்தால் ஆன்லைனில் சுவாதி...! எனக்குள் ஒரே மகிழ்ச்சி. ஏனெனில் இவர் ஒரு முறைகூட தங்கள் வீட்டில் சாப்பிட அழைக்கவில்லை. நானும் என்றாவதொரு நாள் இவர்களின் வீட்டிற்குச் சென்று டிநகர் கனகதுர்கா என்ற ஆந்திர மெஸ்ஸில் நண்பர்களுடன் ஒரு ”கட்டு” கட்டுவதைப் போல் கட்டிவிட்டுவரவேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன். அது நாளை நனவாகப்போகின்றது என்பதில் மிக்க மகிழ்ச்சி.
சுவாதியக்கா அவர்களின் வீட்டிற்கு வழிகேட்டேன்.
“என்னப்பா இது...? ஸ்டேடன் ஐலேண்டில் இறங்கி என் பெயர் சொன்னால் போதாதா....?” என்றார்.
”இல்லை, எனக்கு முன்பின் தனியாகச் சென்றுபழக்கமில்லை. மிகவும் பயப்படுவேன்.”
“ஹேய்.... பொய் சொல்லாதே... சென்றவாரம்தான் நீ நியூயார்க்கில் 30வது வீதிக்கும் 29வீதிக்குமிடைப்பட்ட ஒரு கட்டிட்த்தில் 16 ஆவது மாடியில் தவப்பயிலரங்கம் நடத்தச்சென்றாயே...! நினைவிருக்கின்றதா....?”
“தெரஸா என்ற சிஷ்யை நேரடியாகவே ரயிலடிக்கு வந்து என்னைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச்சொல்லி அழைத்துச்சென்றார்...! அதனால் என்னால் எளிதாகச் செல்லமுடிந்த்து...! ”
“அடக்கெரகமே....! என்ன...கட்டிப்பிடிச்சாங்களா...? ம்ம்ம்ம் தவம் நடந்த மாதிரிதான்....? உங்கள் வீட்டில் சொல்லிவிட்டீர்களா....?”
“ஐயோ...இல்லை...இல்லை....நீங்கள் நினைப்பது போல் அல்ல... அவர் ஒரு ரெவரெண்ட்., சர்ச்சில் ஒரு மினிஸ்டர், தவத்தில் சிறந்த நிபுணர், வால் ஸ்ட்ரீட்டில் பொருளாதாரவிதிகளை நிர்ணயிக்கும் ஒரு சிருஷ்டி. தங்களது அன்பினை இந்த தேசத்துப் பண்பாட்டினில் வெளிப்படுத்துகின்றார். என்னை அன்பாக ”சகோதரனே” என்றே விளித்தார்கள். என்னுடைய நட்பின் காரணமாக இப்பொழுது Beefஐயும் Porkஐயும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். படிப்படியாய் சுத்த சைவமாக மாறிவிடமுயல்வதாய் வாக்களித்திருக்கின்றார்... ”
நிலா சரியாக 1:30க்கு நியூயார்க் பெண்ஸ்டேஷன் வந்துவிடுவதாய் சொன்னார்.
மறுநாள் சனிக்கிழமை விடிகாலை. என்னுடைய ரயில் காலையில் 11:41. 1:39க்கு பெண்ஸ்டேஷனை அடையும். காலையில் 10 மணிக்கு கிளம்ப ஆயத்தமானால் போதும் என்றே நினைத்திருந்தேன். 11 மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறி ஜாக்கிங் செய்தபடியே ஓடினால் ஒரு அரைமணி நேரத்தில் இரயில்நிலையத்தினை அடைந்துவிடலாம்.
என்ன சட்டை போடலாம்...? நேற்றைய ஜீன்ஸையே அணிந்துகொண்டேன். ஜீன்ஸைத் துவைக்கத்தேவையில்லை. என் நண்பன் என் கோலத்தினைப் பார்த்து ”தயவுசெய்து இந்த ஜீன்ஸைப் போடாதே...” என்றான். அவன் சொல்லும்பொழுது என் திட்டப்படி நான் கிளம்ப ஆயத்தமான நிலையிலிருந்தேன். அப்பொழுது மணி 11.
ஹேங்கரில் தூக்குப்போட்டுத் தொங்கிக்கொண்டிருந்த சென்றவார அலுவலக உடைகளில் கொஞ்சம் சுமாரான அழுக்குச் சட்டையையும் முழுக்கால்சட்டையையும் தேடி எடுத்தேன். ஊஹூம். அதை அணியமுடியாது. இஸ்திரி கலைந்திருந்தது. கொஞ்சம் அழுக்காயும் இருந்தது.
அவசர அவசரமாய் இஸ்திரி பெட்டியை எடுத்து உடைகளின் மீது அழுக்கு இருக்கும் பகுதிகளில் கொஞ்சம் நீர்த் தெளித்து இன்னொரு துணியினால் துடைத்து கொஞ்சம் துவைத்த உடையென நம்பவைக்கப் பிரயத்தனப்பட்டு இஸ்திரியும் செய்து அணிந்து காலணிகளை அணியச்சென்றால் பயங்கர ஷாக்.
ஜீன்ஸ் அணிவதால் கேன்வாஸ்/ஸ்போர்ட்ஸ் சூ அணியத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ அலுவல் உடை. எனவே அலுவல் காலணிதான் அணியவேண்டும். காலுறை தேடிஎடுக்க எல்லா பெட்டிகளையும் உருட்ட... தூங்கிக்கொண்டிருந்த என் அறை நண்பன் 100 டிகிரி செல்ஸியஸில் பொரிக்க ஆரம்பிக்க... ஒரு வழியாய் தேடிக்கண்டுபிடித்து காலணி அணிந்து.... காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் எதாவது சாப்பிடவேண்டுமே..? நேற்றுதான் நிலாவிற்கு அட்வைஸினேன். ”எக்காரணத்தைமுன்னிட்டும் ப்ரேக்ஃபாஸ்ட்டை நிறுத்திவிடாதே... காலையில் வெறும் வயிற்றில் இந்த ஊர் ஜூஸ் குடிக்காதே...” வேறு வழியின்றி அதே ஆரஞ்சு ஜூஸை ஒரு தம்பளரில் ஊற்றிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த இன்னொரு நண்பனை எழுப்பி காரில் ஸ்டேஷனில் இறக்கிவிடச் சொல்ல அவசர அவசரமாய் காரில் ஏறிப்பயணிக்கும்பொழுதான்(அப்பொழுது மணி 11:30) கவனித்தேன் காலுறைகள் இரண்டும் வெவ்வேறான நிறத்தில்...! அடக் கெரகமே...! என “ஙே” என விழித்தேன். அவசர கோலத்தில் பேக் பண்ணியதால் என் பேக் நிறைமாத கர்பிணியாகியிருந்தது.
வழிநெடுக ட்ராஃபிக்ஜாம். பச்சைவிளக்கு எரிந்துகொண்டிருந்தபொழுதும்கூட கார்கள் சாரைப்பாம்புகளாய் நீண்டிருந்தன. மணி பார்த்தேன். 11:35. என் இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிப்பதற்குப் பதிலாக ஒரு நொடிக்கு 72 முறை துடிக்க ஆரம்பித்தது. உடனே ஆழ் தவநிலைக்குச் சென்று ட்ராஃபிக் க்ளியர் ஆகி அனைவரும் அவரவர் செல்லுமிடங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சேர இந்த அருட்பேராற்றல் அருள்புரியட்டும் என துரியாதீத நிலையில் சங்கற்பம் செய்யச் செய்ய உடனே ட்ராஃபிக் வேகமாக நகர ஆரம்பித்தது.
ஸ்டேஷனை அடையும்பொழுது 11:41. இரயில் நின்றுகொண்டு பயணிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த்து. “ஙீ...ஙீ....” என டிஜிட்டலில் துல்லியமாய் இரயில் பெட்டிகளின் கதவுகள் அடைபடும் சப்தம்.
என் இரத்த அழுத்தம் எகிற ஆரம்பித்தது. அவசர அவசரமாய் டிக்கட் இயந்திரத்தில் கடனட்டையைச் செருகினால், “insert other Credit Card….” என்ற தகவலை உமிழ்ந்தது.
என் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன. நிலாவிற்குக் கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற இயலாத சூழல். இனி ஆண்டவனே நினைத்தாலும்கூட இரயிலினைப் பிடிக்க முடியாது என்ற நிலை....
உடனே மீண்டும் துரிய தவநிலையினில் உயிராற்றலினைச் செலுத்தி, “இதே ரயிலில் பயணிக்க வேண்டும்... ”என சங்கற்பம் செய்து கொண்டு டிக்கட் கவுண்ட்டருக்கு ஓட.... அந்தப் பெண் வேகவேகமாய் டிக்கட்டினைக் கொடுத்து என் க்ரடிட்கார்டினை ஸ்வாப் செய்து ஓகே ஆக... அவசரமாய் கையெழுத்திட்டுவிட்டு... ப்ளாட்ஃபாரத்தினை நோக்கி தட்... தட்... என ஓட.... அந்தப் பக்கம் ச்செக்பண்ண வந்துகொண்டிருந்த ஒரு அதிகாரி தன் கையிலிருந்த சாவியினால் பெட்டியைத் திறந்துவிட.... உள்ளே ஒரே பாய்ச்சலாக மின்னலென பாய.... என் செல்ஃப்போனில் மணி பார்க்க... அது 11:44 என்றது. அடுத்த நொடி இரயில் நகர ஆரம்பித்தது....
தொடரும்....
மேலே வானம்... கீழே நியூயார்க்... தேதி: 4-July-09
வானம்-8 நியூயார்க்-2
என் இதயப்படபடப்பு குறையவில்லை....பதட்டம் தணியவில்லை.
இரயில் பெட்டி முழுதும் வாண்டுகள் நிரம்பி வழிந்தனர். இந்த தேசத்து ஊர் வாண்டுகள் அவர்களுக்கேயுரிய குறும்புகளைச் செய்துகொண்டிருந்தனர். எனக்குள் மீண்டும் வாண்டுகளுக்கான வால் முளைத்திருக்க ஆரம்பித்திருந்தது.
குழந்தைகள் ஏன் குறும்புகள் செய்கின்றன....? குழந்தைகளை ஏன் அனைவருக்கும் பிடிக்கின்றன....? குழந்தைகளுடன் விளையாடும்பொழுது ஏன் மனம் லேசாகின்றது...? குழந்தைகளின் சிரிப்பில் மனம் லேசாவதன் மர்மம் என்ன....? பிஞ்சுக் கைகள். நம்மை பற்றுவது எதனால்...? ”என்னைக் கைவிட்டுவிடாதே...!” எனச் சொல்கின்றதோ...? ”நீ என்னைக் கைவிட்டாலும்... நான் உன்னை விடேன்...” என கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றதோ...!
குழந்தையின் உயிராற்றல் திணிவு அதிகம். ஜீவகாந்தம் அதிகம். ஜீவகாந்தம் அதிகமுள்ள முகம் எப்பொழுதுமே தேஜஸாகவே இருக்கின்றதே...! ஜீவகாந்தம் குறையும்பொழுது உடலில் முதுமையின் கோடுகள்...!
பொதுவாக்வே என்னைச் சுற்றிலும் எப்பொழுதும் வாண்டுகள் பட்டாளம் உண்டு. ”வாண்டு மாமா” எனச் செல்லமாக ஒரு செல்லப்பெயர்கூட உண்டு. தெனாலிராமா கதைகள் சொல்லி சொல்லி சிரிக்கவைப்பது வழக்கம். மேலும் மனதிற்கு அந்தந்த நொடிகளில் தோன்றும் கற்பனைகளை வைத்து சுவைபட அதை ஒரு விஞ்ஞானப் புனைவாக்கி குழந்தைகளை அசர வைக்கும் வழக்கம் உண்டு. என் அருகாமை வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்தியாவில் அதிகம். அவ்வளவு அட்டாச்மெண்ட்.
நேற்றுதான் நிலா சொன்னார், இந்த ஊரில் குழந்தைகளைக் கொஞ்சக்கூடாது எனவும் சில நேரங்களில் சிறை தண்டனையில்போய் அது முடியும் எனவும் தொலைபேசியில் தொலையாடியது, “டிண்ட்டி..டிண்ட்டி.....டாய்ங்.... ஊஊஊஊ.... தென்பாண்டிச்சீமையிலே.. தேரோடும் வீதியிலே....” என நாயகன் ஸ்டைலில் என் காதில் ரீங்கரித்தது.
ஆனாலும் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் குபீர் குபீரென சிரிக்க ஆரம்பித்தனர். குழந்தைகள் பெரியவர்களைப் போல் பாசாங்கு பண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு குழந்தை இப்படிச்சொன்னது, “அடுத்தவருவது எனது நிறுத்தம்... நான் இறங்கப்போகின்றேன்...” என ஒரு 80 வயது தாத்தாவின் தொணியில் குட்டி குட்டியாய் இருந்த அக்குழந்தை சொல்லி அபிநயத்தபொழுது என்னால் சிரிப்பினை அடக்கமுடியவில்லை.
Huntingtonல் இன்னொரு இரயில் மாறவேண்டும். ஒரு காஃபியை வாங்கிக்கொண்டு அடுத்த 3 நிமிடங்களில் ரெடியான இன்னொரு இரயிலில் அமர்ந்தேன். ஏறி அமர்ந்ததும் இரயில் கிளம்பிற்று. கிளம்பியபின்தான் ஞாபகம் வந்தது, “இது New York Penn Station போகும் இரயில்தானா...?” என்ற ஐயம். ஆங்கிலத்தில் ஏதேதோ அறிவிப்புகள். ஊஹூம் துளிக்கூட எனக்கு ஆங்கிலம் புரியவில்லை. ஆங்கிலம் படிக்காமல் போனதற்குக் காரணம் பாலாஜி பதிப்பகத்தார் 30 நாட்களில் ஆங்கில பாஷை என்ற் புத்தகத்தினை இன்னும் வெளியிடவில்லை.
பயணச்சீட்டு நடத்துனர் ஒரு கறுப்பினப் பெண்மணி. அவரிடம், “ஆண்ட்டி... ஆண்ட்டி... இந்த ட்ரைய்ன் பெண் ஸ்டேஷன் போகுமா....?”ன்னு.
”ட்ரைய்ன் கெளம்புறதுக்கு முன்னாடி இதைக் கேட்றுக்கணும். இப்பக் கேட்டு என்ன ப்ரயோஜனம்...? ” என்று சொல்லிவிட்டு “ஊஹூம்” என உதடுகளைப் பிதுக்கினார்.
”ச்சே நம்ம ட்டைம்மே சரியில்லே...” என நினைக்கும்பொழுது , “This is the train to PENN STATION, The Next Station is Cold Spring Harbour… ” என்று ஆங்கிலத்தில் ஒலிவிப்பும் சிவப்பு நியான் டிஜிட்டல் LEDயில் எழுத்துக்களிலும் ஒளிவிப்பும் நடந்தது கண்டு நிம்மதியானபொழுது நிலாவிடமிருந்து ஃபோன். ”ஐயா நான் உங்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது....?”
“இதென்ன கேள்வி....? எத்தனை தமிழ் சினிமாக்கள் பார்த்திருக்கின்றோம்...! ஒரு குடும்பப்பாடலைப் பாடினால் எளிதாக அடையாளம் கண்டு இணைந்துவிடலாமே...? ”
“என்ன பாட்டு பாட....?”
“எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை.... ஹூஹூஹூ... ” என நீங்கள் பாடும்பொழுது நான் எசப்பாட்டுப் பாடினால் நான் ரிஷி நீங்கள் நிலா என அடையாளம் கண்டுகொள்ளலாம்.
“இல்லை ஐயா.... நியூயார்க் பரபரப்பான ஊர்... அப்படியெல்லாம் பாட்டுப்பாடமுடியாது...”
“அச்சு முச்சு கிச்சியா....?”ன்னு Code Wordல கேளுங்க.... பதிலுக்கு நான், “கிச்சு முச்சு அச்சியா...?”ன்னு Code Wordல கேட்டா நான் ரிஷி, நீங்கள் நிலா.
”அப்டீன்னா என்னய்யா அர்த்தம்....?”
“அர்த்தம் புரிஞ்சா Assembly Languageம் Microprosessorரும் கம்ப்யூட்டரும் படிச்சோம்...? எதுல அர்த்தம் புரியலியோ... அதுவே நம்ம வாழ்க்கையா மாறிடலையா...? இதெல்லாம் ச்சின்ன சின்ன விஷயங்கள்... ”
“ஐயா... வெளக்கெண்ணெய் குடிச்சவன் மாதிரி பேந்தப் பேந்த விழிச்சா நான் தான் நிலா...”
ஒரு வழியாக நியூயார்க் பெண் ஸ்டேஷன் வந்து சேர, நிலாவிடமிருந்து மீண்டும் ஃபோன். தான் சுவாதியக்காவிடம் பேசிவிட்ட்தாயும் நேரே Subway trainஏறி South Ferryக்கு வந்துவிடும்படியும் கூறியதாய்ச் சொன்னார். தான் இப்பொழுது 33வது வீதியில் Subway 1ல் இருப்பதாய்ச் சொன்னார். நானோ ஸ்டேஷனுக்குள்ளிருக்கும் 32வது வீதி Subway 1ல் இருப்பதாய்ச் சொன்னேன். தேடோ தேடு....
விளக்கெண்ணெய் குடிச்சாமாதிரி யாராவது இருக்காங்களான்னு நான் நிலாவைத் தேட..... “இரயில் இஞ்சின் தின்ன குரங்குமாதிரி யாராச்சும் இருக்காங்களா....?”ன்னு நிலா அந்த முனையில் என்னைத் தேட.... ஊஹூம் கண்டுபிடிக்கமுடியல.
மீண்டும் ஃபோன் பண்ணி Pennsylvania Station Entranceக்கு வரும்படிச் சொன்னேன். தான் இப்பொழுது Madison Garden Squareல் இருப்பதாய் சொன்னார்.
நானும் அங்கே தான். Chase Bank முன்னாடி நிக்கிறேன் பாருங்க...
ஐயா தெரியல....
நிலா நான் இங்க இருக்கேன்...
ஒரு வழியா செல்பேசிக்கொண்டே யாரையோ தேடிக்கொண்டிருந்த ஒரு இந்திய இளைஞன் மீது எனக்கு சந்தேகம் வந்து பார்வையைப் பதிக்க...
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் சலவை செய்த நீலநிற ஜீன்ஸும் ஒரு வெள்ளைநிறத்தில் முழுக்கை சட்டையுடனும் 6 அடி உயரத்தில் அக்மார்க் தென் தமிழ் நாட்டு அடையாளமாக என்னைத் தேடிக்கொண்டிருக்க...
”நிலா.... இதோ நான்....”
மகிழ்ச்சிப் பிரவாகத்தில் ஆறடி இருந்த நிலா ஒரு எம்பு எம்பி ஏழடியாகி ஹைஃபை சொல்ல.... தெருவில் அனைவரும் எங்களை விநோதமாகப் பார்க்க ஆரம்பிக்க இடத்தைக் காலி செய்தோம்.
டிக்கட் எப்படி எடுப்பது...? எப்படி செல்வது...? எந்த இரயிலில் ஏறவேண்டும்...? எங்கே இறங்க வேண்டும்...? .நமக்கோ நம் ஊர் பாணியில் ”சாப்பாடு ஆச்சா...? ” என்பதிலிருந்து எல்லாம் விசாரிக்கவேண்டும் டிக்கட் கொடுப்பவரிடம். ஆனால் இங்கே எல்லாம் மெஷின் மயம்...!
ஒரு கவுண்ட்டரில் டிக்கட் கொடுக்க... நமக்கோ விசாரணை முக்கியம்... நானும் நிலாவும் வரிசையில் நிற்க. எனக்குள் ஒரு பகீர். ஏனெனில் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. இப்பொழுது மணி 2. சாப்பாடு இனி எப்போ...? என்ற வலியில் வயிறு கிள்ளியது. பேக்கிலிருந்த ஓட்மீல் பார் இரண்டினை எடுத்து நிலாவுக்கு ஒன்றினைக் கொடுத்துவிட்டு சந்தடி சாக்கில் நிலாவினை வரிசையில் எனக்கு முன்னே நிற்கவைத்துவிட்டு (நமக்குத்தான் ஆங்கிலம் வராதே...! ) பின்னர் டிக்கட் எடுத்துவிட்டு ட்ரைனில் பயணித்தோம்.
ஒரு வழியாக South Ferry வந்து சேர்ந்தோம்.
ஸ்டேடன் ஐலேண்டிற்கு இங்கிருந்து ஓடம் இலவசமாக சேவை. வரிசையில் நின்றோம். ஓடம் 3 மணிக்கு இருந்தது. நிலா அருகிலிருந்த கடையில் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா...? எனக் கேட்க... நான் ஒரு பெரிய நோ சொன்னேன். இப்பொழுது ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் பின்னர் சுவாதியக்கா வீட்டில் ஒரு கட்டு கட்டமுடியாமல் போய்விடும். எனவே ஐஸ்க்ரீமிற்குத் தடாவிதித்தேன்.
ஓடத்தில் ஏறி சிறுவர்கள் அடம்பிடிப்பது போல் ஜன்னலோரமாய் அமர்ந்தோம். இரயிலில் இருப்பது போல் எதிரெதிர் இருக்கைகளில் ஜன்னலோரம். ஓடம் மெல்ல மெல்ல நகர ஆரம்பிக்க....
இளையராஜா உச்சஸ்தாயியில்...”நிலா அது வானத்து மேலே... பலானது ஓடத்து மேலே.. ஹொய்யா...ஹோய்.... அது என்னஹோய்..... ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும்.....ட்டும்..ட்டும்...” எனத் தன் இசைப்பரிவாரங்களுடன் இசைத்துக்கொண்டிருக்க...
நிலாவும் நானும் ஃபிலிம் இல்லாத (நிலாவின் கேமராவில் பேட்டரியும் இல்லையாம்...பாவம்....!) கேமராக்களில் படங்களைச் சுட்டுக்கொண்டிருக்க... ஒரு வழியாய் Staten Island வந்து சேர்ந்தோம்.
நாங்கள் ஏற்கெனவே சுவாதியக்காவைத் தனித்தனியாகப் பார்த்திருந்த்தால் எங்களுக்கு அடையாளம் தெரியும். கூட்டம் எல்லாம் கலைந்தாயிற்று. ஆனால் வந்து அழைத்துச்செல்வதாய் உறுதியளித்த சுவாதியக்காவைக் காணவில்லை. இப்பொழுது ஓடமியங்கும் அத்துறைமுகத்தில் எங்களிருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.
ஒரு காவல் அதிகாரி எங்களைச் சந்தேகப்படும்படிப் பார்க்க.... அவரிடமே சென்று, “அங்க்க்கிள்...அங்க்க்கிள்.... இந்த சுவாதியக்கா அவங்க வீட்டுக்கு எப்டிப் போகணும்....?”அப்புறம் இரண்டொருமுறை கம்பீரமாய் இந்த கோடிக்கும் அந்தக் கோடிக்கும்
நடக்க........”பிள்ளையாரப்பா...நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டா ஒனக்கு
மொட்டை போட்டுக்கறேன்....”ன்னு வேண்டுவோமே... அது மாதிரி வேண்டிக்கறதா
ஆச்சு. அப்றம் ஒரு வழியா சுவாதியக்கா வந்துட்டாங்க.....!
தொடரும்.....
மேலே வானம்... கீழே நியூயார்க்... தேதி: 5-July-2009
வானம்-8 நியூயார்க்-3
நேரே தன் கார் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். உள்ளிருந்து ஒரு
வாண்டு தன் தலையை நீட்டியது. “ஆர்ரா இவிங்க......?” என்று ஒரு முறைப்பு.
சுவாதியக்காவின் இளையமகன் அச்சுதானந்தன். அச்சு...அச்சு...என்று செல்லமாக
அழைப்பதினால் அச்சுதானந்தன் என்ற பெயரே அனைவருக்கும் மறந்துவிட்டது. நம்
ஊர் மண்பானை கருப்பு நிற மூடியைத் தலையில் கவிழ்த்ததுபோன்ற
சிகையலங்காரத்திலிருந்தார். அதுதான் ஃபேஷனாம்...!!!!
என்னை அடையாளம் கண்டுகொள்ள நேரமானது. சென்றமுறை சிவசிவா ஐயா அவர்களின்
வீட்டிற்குச் சென்றபொழுது, எப்பொழுதும் குழந்தைகளிடம் கேட்கும் வழக்கமான
“தம்பி உன்ன்க்க்க்கு என்ன பிடிக்க்க்கும்...?” என்ற கேள்வியினைக்
கேட்க....
“அங்க்க்க்கிள்... அங்க்க்க்கிள்... என்க்க்க்கு என்ன்ன்க்க்கு
என்ன்க்க்கு ச்ச்ச்சளி பிடிக்கும்....!!! ஹாஹ்ஹ்ஹ்ஹா...!” என்று இரு
கைகளையும் கொட்டிச் சிரித்துவிட்டு....ஒரு ஆழமான ஊடுருவிய பார்வை.
நான் “ஙே” என விழிக்க...
”அங்க்க்க்கிள்....அங்க்க்க்கிள்.... என்க்க்க்க்கு கதை பிடிக்க்க்க்க்க்கும்....”
“குட்.... என்ன கதை பிடிக்கும்....? பாட்டி வடைசுட்ட கதை சொல்லட்டுமா...?”
“நோப்....”
“அப்றம்.....?”
“என்ன்க்க்க்கு....என்க்க்க்கு..... புலிக்கதை பிடிக்கும்....!!!
ஹாஹ்ஹ்ஹா......” என இரு கைகளையும் கொட்டிச் சிரித்துவிட்டு, “புலிக்கதை
சொன்னால்தான் ஆயிற்று.... இல்லேன்னா நடக்றதே வேற.....” என்று மிரட்டிய
அதே வாண்டு...! இன்று என்னென்ன செய்யப்போகின்றானோ...? அடி மனதினில் பயம்
உருட்டியது....!
இப்பொழுது வளர்ந்திருந்தான். இந்த 9 மாதத்தில் அசாத்திய வளர்ச்சி.
தெளிவாகப் பேசுகின்றான்.
சுவாதியக்கா, கார் ஓட்டுநர் இருக்கையிலிருந்த தன் கடைத் தம்பியை அறிமுகம்
செய்து வைத்தார். சுவாதியக்காவும் அச்சுவும் நானும் பின் சீட்டில் அமர,
நிலா முன் இருக்கையிலமர கார் மெல்ல மெல்ல வேகம் பிடித்து மரம் செடி
கொடிகளைப் பின்னோக்கித் தள்ளி முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.
அச்சு சடேரென இருக்கையிலிருந்து எழ, “அதோ அந்த போலீஸ் அங்க்கிள்ட்ட
உன்னைப் பிடிச்சிக் கொடுத்துடுவேன்... ஒழுங்கா சேட்டை பண்ணாம இரு....” என
சுவாதியக்கா பயமுறுத்தினார்.
”இந்த தேசத்திற்கு வந்தும் நம் ஊரில் குழந்தைகளை பயமுறுத்தும் அதே
போலீஸ்...பூச்சாண்டி...தானா....?” என்று கேட்டேன்.
“சும்மா இருங்க ரிஷி.... யாருக்காச்சும் பசங்க பயப்படணும்.. இல்லேன்னா
இவன்களை எப்டி கட்டி மேய்க்கறது....?”
“நோ...நோ... ச்சின்னக் குழந்தைங்கன்னா சேட்டைகள் செய்யத்தான்
செய்வார்கள்.... அப்படித்தான் இருக்கவேண்டும்....உங்கள் குழந்தைகள்
ரொம்பவும் சாதுவாக இருக்கின்றனர். குறும்புகள் ரொம்ப ரொம்ப குறைவு...”
“சின்னப்பசங்கன்னா சேட்டைகள் செய்யணுமா....ஏன்...?” – சுவாதி
“குழந்தைகளிடம் நிறைய நிலையாற்றல்(Potential Energy) பொதிந்து
கிடக்கின்றது. அது இயக்க ஆற்றலாக ( Kinetic Energy) தொடர்ந்து
உருமாற்றம் அடைந்துகொண்டேயிருக்கின்றது. உடல் வளர்ச்சியானது நிற்கும்வரை
இந்த நிகழ்வுகள் நிகழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குழந்தைகளிடம்
இந்த இயக்க ஆற்றல் மாற்றம் மிகவும் துரிதமாக நடைபெறும்பொழுது அதிக
குறும்புகள் பண்ணுவர். ஆற்றல் சமநிலையடையும் பொழுது அவர்கள் ஓரளவு நல்ல
பக்குவமடைந்திருப்பர். இதுதான் நியதி. மேலும் ஒரு குழந்தையிடத்தில்
தசாவதாரங்களையும் நாம் காணலாம். நீச்சலடிப்பது தவழ்வது பறக்க முயல்வது
நடப்பது என அத்தனையும் நாம் காணலாம். இவைகளெல்லாம் பரிணாம வளர்ச்சியின்
இயல்புகள் நம் ஜீன்களில் தொடர்ந்து த்கவல்களாகக்
கட்த்தப்படுவதினாலேயே....!”
”என்னவோப்பா.... இந்த கெரகமெல்லாம் நமக்குத் தெரியாது....!”
நடுநடுவே நிலாவின் கவிதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டே வந்தார்.
நிலாவிற்கு நிறைய இரசிகர்கள். குறிப்பாக இரசிகைகள் அதிகம். அவருடைய
கவிதைகள் மிகவும் பிரபல்யம்.
கார் இப்பொழுது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டது. வீட்டிற்குள் நுழைந்தோம்....!!!
இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிர்வும் ஒரு மணமும் உண்டு.
வீட்டினுள் நுழைந்ததும் ஒரு பாரம்பர்ய தமிழ்வீட்டில் நுழைந்த ஆனந்தம்.
அதே அதிர்வுகள், அதே மணம் என்னால் உணர முடிந்தது. நீண்ட வருடங்களுக்குப்
பின் ஒரு வீட்டினுள்... அதுவும் ஒரு தமிழ் வீட்டினுள்... நுழைந்த
பேரானந்தம்....!
ஒரு பெரிய LCD திரைகொண்ட தொலைக்காட்சிப் பெட்டியிருந்தது. அங்கே
சன்டிவியில் விஜயும் ஜோதிகாவும் “குஷி”யாக சண்டைபோட்டுக்கொண்டிருந்தனர்.
சுவாதியக்கா தங்களது அம்மா அவர்களை அறிமுகம் செய்துவைத்தார். மிகவும்
எளிமையாக இருந்தார். வாழ்க்கை அனுபவங்கள் முகத்தில் தென்பட்டன. பெரியவர்.
கரம் கூப்பி வணக்கம் செய்தோம்.
எங்கோ வெளியே கிளம்பிக்கொண்டிருந்த இன்னொரு தம்பியை அறிமுகம்
செய்துவைத்தார். அவர் ஒரு வாலிபால் விளையாட்டு வீரர்.
சிறிது நேரத்தில் சுவாதியக்கா அவர்களின் பிராணநாதன்(சென்றமுறை சிவசிவா
ஐயா அவர்களின் வீட்டிற்குச்சென்றபொழுது இப்படித்தான்
அறிமுகப்படுத்தினார்...) சிநேகன் வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்.
இந்தப் பூனையும் பால் குடிக்குமா...? என்ற ஒரு அப்பாவியான தோற்றம். கடின
உழைப்பாளி, உழைப்பைத் தவிர வேறெதுவும் அறியா அப்பாவி. இரவுப்பணிமுடிந்து
திரும்பியபின் நாளை(5-ஜூலை-2009, ஞாயிறு) எங்களுடன் நேரம்
செலவழிப்பதாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
நானும் நிலாவும் இலக்கியத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தோம். ஜெயமோகனின்
தற்போதைய விமர்சன்ங்ளும் சாரு நிவேதிதாவின் பதிலுரைகளும் பேசினோம்.
ஜெயகாந்தன், லா.ச.ரா, கி.ரா., மேலாண்மை பொன்னுச்சாமி என சகலரையும்
சுவாசித்தோம்.
நிலா தன்னுடைய இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும் அகம் புறம் என்ற
வண்ணதாசனின் புத்தகத்தையும் பரிசளித்தார். மு.மேத்தா ஒரு
பட்டாம்பூச்சியின் கனவுகள் என்ற கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரை
அளித்திருந்தார். உடனே எங்கள் பேச்சு மு.மேத்தாவின் பக்கம் திரும்பியது.
அவரது “கண்ணீர்ப்பூக்கள்” என்ற கவிதைத் தொகுதியிலிருந்த என் கல்லூரிக்
காலங்களில் மிகவும் பிரபல்யமாகியிருந்த “தேசப்பிதாவிற்கு ஒரு
தெருப்பாடகனின் அஞ்சலி”யை என் நினைவகத்திலிருந்து நிலாவிடம் பரிமாறினேன்.
மேத்தாவை நேரடியாகச் சந்திக்கவில்லை. ஆயினும் நாங்கள் ஓரிருமுறை
தொலைபேசியிருக்கின்றோம். என்னுடைய வள்ளுவம் சார்ந்த கருத்துக்களை அவர்
பெரிதும் வரவேற்றிருக்கின்றார்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணனை நிலா, முனைவர் இரவா மற்றும் நம் சில நண்பர்கள்
பாண்டிச்சேரியில் சந்தித்ததாய்ச் சொன்னார். ”இவர் நம்ம ஊருக்கருகேதான்.
கோவில்பட்டிக்கு அருகே செவல்பட்டி...”
“ஆம் நிலா. இவர் ஒரு நிலச்சுவான்தார் வீட்டில் பிறந்த செல்லப்பிள்ளை.
விவசாயக் குடும்பம். இவரது கோபல்லபுரத்து மக்கள் என்ற கதை விகடனில்
தொடராக வெளிவந்த பொழுது படித்திருக்கின்றேன். பின்னர் சாகத்திய அகாடமி
விருது வாங்கியது
சா.கந்தசாமியின் சாயாவனம் என்ற புதினமும் அந்தக்கால கட்ட்த்தில் இலக்கிய
உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரபஞ்சனின் எழுத்துக்களும்
எனக்கு மிகவும் பிடிக்கும். இவரைப் பலமுறை மகுடம் பத்திரிகை அலுவலகத்தில்
சந்தித்திருக்கின்றேன். அன்று மணிரத்னத்தின் “ரோஜா” என்ற படம்
வெளிவந்து அனைத்து ஊடகமும் வானளாவப் புகழ்ந்து எழுதிக்கொண்டிருந்தன.
தற்செயலாய் மகுடம் பத்திரிகை அலுவலகம் சென்றபொழுது பிரபஞ்சனும்
சுப.வீரபாண்டியனும் வருகைபுரிந்திருந்தனர். ரோஜா படத்தினை அக்குவேறு
ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து விமர்சனம் எழுதினர்.
பிரபஞ்சன் பாண்டிச்சேரியில் ஒரு செல்வந்தர் வீட்டில் பிறந்து எழுத்தையே
சுவாசமாய் கொண்டு ஏழ்மையில் சிக்குண்டுவிட்டார். அவர், “தம்பி, எழுத்தில்
பொருள் சேர்க்க இயலாது. எழுத்தே வாழ்க்கை என முடிவெடுப்பது ஏறக்குறைய
தற்கொலைக்குச் சம்ம். ” என்று எனக்கு அறிவுரை வழங்கினார். அப்பொழுது
சாகித்திய அகாடமி விருது வாங்கிய அவரது “வானம் வசப்படும்” எனற புதினம்
வெளிவராத காலகட்டம். அதனால் மீண்டும் IIT M.Tech கனவுகளுக்குத்
தள்ளப்பட்டேன். பிரபஞ்சனை என்னால் மறக்க இயலாது. ”
“சுப்ரபாரதி மணியன் தெரியுமா...? அவரது எழுத்துக்களை நீங்கள்
வாசித்திருக்கின்றீர்களா....?”
“ஓ... தெரியுமே...! அவரும் ஜெயமோகன் போன்றே தொலைபேசித்துறையில்
திருப்பூரில் பணிபுரிகின்றார். அவர்களது கனவு என்ற பத்திரிகையும் SAVE
என்ற அமைப்பும் இணைந்து நடத்திய குழந்தைத் தொழிலாளர்கள் விழிப்புணர்வு
சிறுகதைப் போட்டியில் என்னுடைய “பிஞ்சு” என்ற சிறுகதையும் 16 கதைகளுள்
ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
நூல் வெளியீட்டுவிழாவிற்கு அனைத்து எழுத்தாளர்களையும் அழைத்திருந்தனர்.
அப்பொழுதுதான் சுப்ரபாரதிமணியன், சா.கந்தசாமி, துனுஷ்கோடி ராமசாமி,
தோப்பில் முகமது மீரான், மேலாண்மை பொன்னுச்சாமி(இவர் ஏற்கெனவே என்
நண்பர்.) மோகமுள் படத்தினை இயக்கிய இயக்குநர் ஞானராஜசேகரன் என அனைவரையும்
சந்தித்து ஒரு பட்டரையாக இரண்டு நாட்கள் அந்த நிகழ்வு நடந்தேறியது. அவை
மிகவும் இனிமையான நாட்கள்.
ஹைதராபாத்தினைச் சேர்ந்த சாந்தா தத் என்ற எழுத்தாளர் என் எழுத்துக்களில்
ஜீவன் இருப்பதாயும் பார்க்கும் எதையுமே உணர்ச்சிகளாய் அப்படியே
உணர்வதாயும் வாழ்த்தினார். இவர் அப்பொழுதைய கல்கி இதழ்களில நட்சத்திர
எழுத்தாளர்.”
கூத்துப்பட்டறை பிரளயன் பக்கம் எங்கள் பேச்சுத் திரும்பியது. ”வெண்மணி”
என்ற ஆவணப் பட இயக்குனர் பாலாஜி கிருஷ்ணகுமார்(இப்பொழுது பாரதி
கிருஷ்ணகுமார் எனத் தன் பெயரினை மாற்றி வைத்துக்கொண்டார்.) மீது
திரும்பியது. இவர்கள் அனைவருமே எனது தமுஎச நண்பர்கள். தமிழ்நாடு
அறிவியல் இயக்கத்தினில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தபொழுதுதான் இத்தனை
நண்பர்கள்....
மேலாண்மை பொன்னுச்சாமி 1989ல் கல்கியில் “அரும்பு” என்ற சிறுகதைக்கான
முதல் பரிசினைப் பெற்றிருந்தார். எங்கள் கல்லூரியில் சமூக நற்பணி
மன்றத்திற்கு நான்தான் பொறுப்பு. மேலாண்மையை அழைத்து பலமுறை உரையாற்றப்
பணித்திருக்கின்றோம். நான் அவரது பல நிகழ்ச்சிகளுக்குத்
தலைமைதாங்கியிருக்கின்றேன்.... இன்று அவர் பிரமாண்டமாய் வளர்ந்து
அரசமரமாய் நின்று சாகத்தியமும் சாதித்துவிட்டார்...
சிவகாசிக்கருகே மேலாண்மறை நாடு என்ற கிராமம். ஏழ்மையான விவசாயி.
வருமானத்திற்கு ஒரு பெட்டிக்கடை. இவரது வீட்டிற்குச் சென்றிருக்கின்றேன்.
எங்களூருக்கருகேதான்.
ஒரு சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு மணிக்கணக்கில் இலக்கியங்களைப்
பேசித்திரிந்துகொண்டிருப்போம்... பாலாஜி கிருஷ்ணகுமார் சாத்தூரில்
பாண்டியன் கிராம வங்கியில் பணியிலிருந்தார், பின்னர் பணியை இராஜினாமா
செய்துவிட்டு முழுநேர இலக்கியத்திற்குத் தாவிவிட்டார். இவர் இயக்கிய
”வெண்மணி” என்ற ஆவணப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
நினைவிருக்கலாம்.
தமுஎச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ) சார்பில் எத்தனை
ஊரில் கலைஇரவு நட்த்தியிருக்கின்றோம்...? எத்தனை பட்டிமன்றங்கள்...?
ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்.... இங்கு பெற்ற பயிற்சியே என் நாடகங்கள்
பல்கலைகழக அளவில் முதல் பரிசினையும் பின்னர் சென்னைத் தொலைக்காட்சியில்
தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சியில் (1995) குழந்தைகளை வைத்து இயக்கிய, “ஒரு
டைரக்டர் படம் எடுக்கிறார்...”, “ஒன் மோர் டாக்டர்....” ஆகிய இரு
நாடகங்களும் பெரும் வரவேற்பினையும் சென்னை வானொலியில் இளையபாரதத்தில்
நிலாமுற்றம் நிகழ்ச்சியில் “வாழ்க்கைக்கு வள்ளுவம்” என்ற விவாத
அரங்கிலும் பங்கேற்க பெரும் காரணம். மேலும் நம் குழுமத்தில் விழியனின்
தந்தை மதுரையில் ஒரு அறிவியல் முகாமில் நண்பரானாதாய் நினைவு....
“அப்றம் ஏன் நீங்க இலக்கியத்தை தொடரவே இல்லை ஐயா.....?”
“என்னவோ தெரியவில்லை நிலா.... எப்பொழுதாவது என் சக நண்பர்களை நினைத்தால்
அந்த நினைவு வாட்டும். இலக்கியத்தில் இன்று பேர்
சொல்லிக்கொள்ளும்படியாய்த் திகழும் சோ.தர்மனும் நானும் சமகாலத்தில்
இலக்கியத்தில் நுழைந்தவர்கள். குமுதம் நட்த்திய சிறுகதைப்போட்டியில்
பங்கேற்க செங்கல்பட்டு சென்றபொழுது சோ,தர்மன் பரிச்சயமானார்.
அதன்பின்னர் ”இலக்கியவீதி” இனியவனின் நட்பு... எழுத்தாளர் திலகவதி
அவர்களின் அறிமுகம்...எழுத்தாளர் சு.சமுத்திரம், வில்லிசை வேந்தர் சுப்பு
ஆறுமுகம், நாகேஷ் என நட்பு வட்டம் நீண்டது.... சில இரவுகளில் தூக்கம்
வராது... எதையோ இழந்துவிட்டோம்....என எண்ணி கண்ணீர்த் துளிகள்
அவ்வப்பொழுது ஜனிக்கும்....”
”ஐயா... உங்களுக்கு ரிஷி என்று எப்படிப் பெயர் வந்தது....உங்களின்
உண்மையான பெயர் என்ன....?”
“என்னுடைய இயற்பெயர் இரவீந்திரநாத் தாகூர். இலக்கியத்திற்காக நோபெல்
பரிசு வாங்கிய மறைந்த வங்க எழுத்தாளரின் நினைவாக எங்கள்
பெரியப்பா(அப்பாவின் அண்ணா) வைத்த பெயர் அது. (நல்லவேளை அவர் மட்டும்
எனக்கு இப்படியொரு பெயர் வைக்காதிருந்தால் என் பெயர் குலவழக்கப்படி ஒரு
ராஜகோபாலன் என்றோ அல்லது கோபாலகிருஷ்ணன் என்றோ அல்லது நாராயணன் என்றோ
அமைந்திருக்கும்.)
அவரது ஆசை நானும் தாகூர் போல் இலக்கியத்தில் நோபெல் பரிசு வாங்கவேண்டும்
என ஆசைப்பட்டார். மிகவும் பேராசை. என்னுடைய எழுத்துக்களை மிகவும்
பாராட்டுவார். ஆனால் எனக்குத்தான் தெரியும் எனக்கு எழுதவே வராது என்ற
விடயஞானம்.
இந்தப் பெயர், எங்கள் கிராமபாடசாலையில் என்னை சேர்த்தபொழுது அங்கிருந்த
உபாத்தியாயர் நம் ஊர் சம்பிரதாய மரபின்படி தாகூரை நீக்கிவிட்டு
“இரவீந்திரன் ” என சுருக்கினார். பின்னர் நம்பிக்கை ராமா நம்பிக்கை
குழுமத்தில் சேர விடுத்திருந்த அழைப்பினை ஏற்று ஜிமெயிலி ஒரு கணக்கினைத்
துவக்க... என் பெயரில் ஏற்கெனவே கணக்கு இருப்பதாய்த் தகவலை உமிழ நானும்
பல்வேறு நிகழ்தகவினில் முயற்சித்து இறுதியில் ரிஷிரவீந்திரன் ஆனேன்....
நீங்கள் நினைப்பது போல் நான் ஆன்மீகவாதியல்ல. சாதாரணமாய் கேள்விகளைக்
கேட்கும் விஞ்ஞான மனோபாவம் நிறைந்த ஒரு சிறுவனே....! ”
“உங்கள் ஊர் எது ஐயா.....உங்கள் குடும்பம்...உங்கள் சிறுபிராயம்...?”
“என்ன சொல்ல....? எந்த ஊர் என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. நான்
பிறந்தது விருதுநகரின் நகராட்சி மருத்துவமனையில். அப்பாவின் ஊர்
விருதுநகர்க்கருகே கூத்திப்பாறை என்ற ஒரு கிராமம். அம்மா அப்பா இருவருமே
ஆசிரியர்கள்.
ஆசிரியரின் மகன் மக்கு என்பது போல் எனக்கு பாடங்கள் சுத்தமாக மண்டையில்
ஏறவே இல்லை. மிகவும் நோஞ்சானாக இருந்திருக்கின்றேனாம். எங்கள் அம்மாவின்
மூத்த சகோதரி என்னை இரண்டு மாதக் குழந்தையாக இருந்தபொழுதே தத்து
எடுத்துச் சென்றுவிட்டனர். எனவே எனக்கு என் பெற்றொர்களை நான் எட்டாம்
வகுப்புப்படிக்குவரை அவ்வளவாகத்தெரியாது.... அம்மாவை சித்தி என்றே
நினைத்திருந்தேன்.
எங்கள் பெரியப்பா ஒரு தீவிர வைஷ்ணவர். இவர்களிருவரும் உறவுமுறைகளில்தான்
பெரியம்மா-பெரியப்பாவே தவிர... வயதினில் மிகப் பெரியவர்கள்.... எங்கள்
அம்மாவையே வளர்த்தவர்கள் இவர்கள்தானாம்.
பெரியப்பா ஒரு சுதந்திரப்போராட்ட வீரர். காந்தியடிகளின் சீடர்.
விநோபாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். விநோபாவின் பூதான் இயக்கத்தில்
தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்டு தன்னுடைய எல்லா நிலங்களையும் பூதான்
இயக்கத்திற்குத் தாரை வார்த்துவிட்டார். விநோபா எங்கள் வீட்டிற்கு வருகை
புரிந்திருக்கின்றாராம்.
வீட்டு நூலகத்தில் காந்தியடிகளின் புத்தகங்களும் விநோபாவின்
புத்தகங்களுமே நிரம்பியிருக்கும். வ.உ.சி, பாரதியும் உண்டு. அவரை மையமாக
வைத்து எழுதியதுதான் முத்தமிழில் பரிசு பெற்ற “லயம்” என்ற இலக்கியச்
சிறுகதை.
அங்கே வாழ்க்கை எனக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. பால்யகாலம்
மிகவும் இனிமையானவை. நிறைய குறும்புகள். சனிக்கிழமை, ஏகாதசிதோறும்
விரதங்கள்... தினமும் கிருஷ்ணன் கோவிலில் ஆஜராகிவிடுவார். அந்தக் கோயிலை
நிர்வகித்தார். அவர் ஒரு யோகி. பிரம்மச்சரியம் கடைபிடித்த தம்பதியர்.
”ஓ அதனால்தானோ உங்களுக்கு யோகா இளம் பிராயத்திலேயே கைகூடியிருக்கின்றது......? ”
அவர் ஒரு யோகிதான். ஆனால் நான் வளரும் காலங்களில் அவர் யோகா செய்வதை
முற்றிலும் நிறுத்தியிருந்தார். ஆனால் தவம் மட்டும் அவ்வப்பொழுது
செய்வார். நான் யோகாவிற்கு வந்த கதை மக்கு மாணவன் புத்திசாலியாய் மாறுவது
எப்படி...? என்ற ஆராய்ச்சியில் இறங்கி என்னையறியாமலேயே யோகாவில் தடம்
பதிக்கக் காரணமாயிற்று. குறிப்பாக விவேகாநந்தர்.
சொல்லப்போனால் நான் யோகாவும் தவமும் கற்றுக்கொண்ட்து அவரிடத்தில் அல்ல.
ஆனால் மிகவும் சிறு வயதிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கைகூடிவந்தது.
கோபால்ஜி என்ற சுவாமிஜி, ராமகிருஷ்ண மடம், விவேகாநந்தா கேந்திரம், சுவாமி
கமலானந்தா, ஸஹஜானந்தா.... இறுதியில் வேதாத்திரி மகிரிஷி... இவரிடம்
மட்டுமே என் அனைத்து வினாக்களுக்கும் விடை அதுவும் நான் படித்த
பெளதிகத்திலேயே கிடைத்தது....”
“சரி நிலா... நீங்கள் எங்கே....?”
“ஐயா நான் தூத்துக்குடிக்கருகே சாயர்புரம் என்ற கிராமம். B.Sc Computer
Science தூத்துக்குடியிலிருக்கும் காமராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு
MCA சத்யபாமா பல்கலையில் முடித்தேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா....?”
என்று கேட்டுவிட்டு கண்களை உருட்டி ஆச்சர்யமாகப் பார்த்தார்.
நானும் “என்ன....?” என்பதினைப்போல் ஆர்வமாய் இருந்தேன். நான் இப்பொழுது
நுனி நாற்காலிக்கு நகர்ந்திருந்தேன்.
“நான் படிக்கும் காலத்தில் தமிழில் மிகவும் பின் தங்கியிருந்தேன்.
தமிழில்தான் நான் தோல்வியடைந்தேன்...!”
எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
“உங்களின் கவிதைகளைப் படித்தபொழுது நான் உங்களை தமிழில் இன்னொரு
வைரமுத்து என்றல்லவா நினைத்திருந்தேன்...?”
“பயிற்சியினாலும் வாசிப்பினாலும் பின்னர் எளிதாகிப்போனது....”
சுவாதியக்கா, “ஜூஸ் சாப்பிடறீங்களா.....?” என்றார்.
மணி பார்த்தேன். கடிகாரத்தில் இரு முட்களுமே ஏறக்குறைய நான்கினை நோக்கி
முத்தமிடமுயற்சித்துக்கொண்டிருந்தன....
“ஜூஸ் வேண்டாம்” என்றோம். மனதிற்குள் “எப்போ சுவாதியக்கா சாப்புடு..ன்னு
ஒரு வார்த்தை சொல்லுவீங்க....?”ன்னு கேட்டுட்ருந்தோம்.
ஒரு வழியா சுவாதிக்கா சாப்பிடக்கூப்பிட்ட அடுத்த நொடியில் சரேலென டைனிங்
டேபிளிக்குக் குட்டிக் கரணம் போட்டு சென்றமர்ந்தோம்.
தொடரும்.....
--
அன்புடன்
சக பயணி
இரவீந்திரன்
"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."
--
--
ரிஷியின் பக்கம்
*வேந்தன் ஐயா அவர்களுடன் என் அனுபவம்...*
முன் குறிப்பு:
(வித்தியாசமா முன்குறிப்புன்னு இருக்றதுல ஒண்ணும் தப்பு இல்லையே...?)
இது என் நிஜ அனுபவம்... இதுவும் ஒரு காமெடியாகவே அமைந்துவிட்டது... என்ன செய்ய...?...
அப்பத்தான் நான் நம்பிக்கை குழுமத்தில் சேர்ந்திருந்தேன்...
ஆசைக்கோளாறுல மனசுல என்னென்ன தோணுச்சோ அத எல்லாம் எழுத ஆரம்பிச்சேன்.
அப்ப எனக்கு ராமா வ மட்டுந்தான் தெரியும்...
ராமா தான் நம்பிக்கை; நம்பிக்கை தான் ராமா அப்டீன்னு நெனச்சிக்கிட்ருந்தேன்...
வேந்தன் ஐயா அவுகளும் பின்னூட்டம் இடுவார் என்னோட உளறலுக்கு...அப்பல்லாம் நான் இப்டித்தான் நெனச்சிக்குவேன்...
"ஐயோ... யாரு பெத்த புள்ளயோ... நம்ம கடுதாசிக்கு பதிலு போடுதே.. மாரியாத்தா இந்த தம்பிக்கு கை, காலு சொகம் கொடு தாயி" அப்டீன்னு நெனச்சிக்குவேன்...
அப்றம் அவரோட கடுதாசில கீழ "வள்ளுவம் என் சமயம்" அப்டீன்னு போட்ருப்பாரா... ஆஹா இந்த தம்பிக்கும் நம்மள மாதிரியே வள்ளுவர பிடிச்சிருக்கே...னு எனக்கு ஒரே ஆச்சர்யம்...!!
அங்கன சின்சின்னாட்டி ன்னு போட்ருப்பார்...
ஆஹா இந்தத் தம்பி எம்புட்டு அழகா நம்ம "சின்னக்காம்பட்டிய..." இங்கிலீஷுல சொல்லுது...னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்...
(எங்க கிராமத்துக்கு பக்கத்ல "சின்னக்காமன்பட்டி" ன்னு ஒரு ஊரு இருக்குங்க...) (அப்டி நெனச்சதுக்கு ஒரு காரணம் இருக்கு...அத பின் குறிப்புல படிச்சுக்கோங்கோ...)
ம்ம்... நமக்குத்தான் இந்த பாழாப்போன இங்கிலீபீசு மர மண்டையில ஏறல...
ஒரு நாளாச்சும் இந்த தம்பிய சிநேகம் பிடிச்சி நம்ம ஊரு பசங்ககிட்ட இண்டரூஸ்ட் (Introduce) பண்ணனும் னு நெனச்சேன்...
அப்றம் இந்த ஊருக்கு வந்தப்ப தான் தெரிஞ்சது... வேந்தன் ஐயாவப் பத்தி...அவரு பெரியவருன்னு.....அவரும் இந்த தேசத்ல தான் இருக்காருன்னு ஒரு தடவ ராமா சொன்னார் அப்றமா...
இன்னொரு தேசத்ல ஒரு தமிழ்க்காரவுகளோட காண்டாட்டு (Contact) கெடச்சா எம்புட்டு ஒத்தாசய இருக்கும்...?னு நெனச்சி அவுகளுக்கே ஒரு மடல் போட்டேன்..
ஐயா... நீங்க எங்கன இருக்கீங்க...? அப்டீன்னு
வள்ளுவம் என் சமயம் னு எழுதியிருக்குல்ல... அதுக்கு மேல எழுதியிருக்கோம்ல பாக்கலியா அப்டீன்னு சொல்லிட்டார்...
அப்றமாத்தான் தெரிஞ்சது ஆஹா அது சின்னக்காம்பட்டி(சின்னக்காமன் பட்டி) இல்லடா .. னு..
இங்கன விசாரிச்சப்ப சின்சின்னாட்டி...அப்டின்னு ஒரு ஊரு நெசமாவே இருக்காம்... அடி ஆத்தி இம்புட்டு விஷயம் இருக்கா...?
விளி : ஒண்ணு ரெண்டு மூணு அப்டின்னு எதோ நெம்பரா (NUMBER) எழுதியிருந்தாக... சரி நாம ஒழுங்கா படிக்கல... அதான் ஒண்ணாப்ல இருந்து சொல்லிக்கொடுறார் போல ன்னு நெனச்சேனுங்க...
அப்றமா இப்ப (14-Dec-2006, Thursday Night) தூங்கிட்ருக்றப்ப தான் திடீர்னு புத்தருக்கு போதியில் எப்டி ஞானம் வந்துச்சோ அது மாதிரி ஒரு ஃபிளாஸ் வந்திச்சுங்க...
எங்கூர்ல சின்ன செங்கல்ல நெம்பர்(NUMBER) ஊஸ் (USE) பண்ணி காதுல வச்சி பேசுவாங்கல்ல ஒரு வேளை அதுவா இருக்குமோ ன்னு பட்டுச்சு ங்க...
சரி ன்னு அந்த பழய மடல எல்லாம் தேடோ தேடு ன்னு தேடிட்டேனுங்க...ராத்திரி தூக்கம் இல்லாம தேடினேனுங்க... கெடைக்கல... என்ன கெரகமோ ன்னு பாத்தா, "Wireless Network Connection Not Connected.." அப்டீன்னு ஒரு சின்ன சதுர ட்ப்பாவுக்குள்ள சொல்லிச்சு நம்ம மடிக்கணினி.
எப்பவும் போல "ஙே" ன்னு முழிச்சிட்ருந்தேன்...!
அப்றம் ரவுட்டர தாஜா பண்ணி இப்ப அனுப்றேனுங்க...கடைசி வர்ல இப்பக்கூட அந்த கடுதாசி ஜீமெயில்ல காணோம்ங்க...
பின் குறிப்பு:
கூத்திப்பாறை ன்னு ஒரு கிராமத்ல பஸ்சுக்காக நின்னுக்கிட்ருந்தேன்...அப்ப ஒரு தாத்தா வந்தார். அப்ப நான் ஐ ஸ்கூல் (High School) படிச்சிட்ருந்தேன்... கால்ல கொழாயி(PHANT) மாட்டிருப்பேன்...அப்ப அதுக்கு தனி மவுசு. படிச்சவகதான் கொழாயி போடுவாக...
அந்த தாத்தா, "ஏந்தம்பி... இம்புட்டு பெரிய படிப்பு படிக்றியே... "கூத்திப்பாறைக்கு இங்கிலீஷ்ல என்னன்னு சொல்லு...?" அப்டீன்னார்...
இங்கிலீஷ்லயும் அதே தான் தாத்தா...
"ஓ...அப்ப நீ பெயிலு விழுந்து பெயிலு விழுந்து படிச்சிட்ருக்கியோ...?"
அவரு அங்கன இருந்த எல்லார் கிட்டயும், "நான் இந்த தம்பிகிட்ட ஒரே ஒரு சின்னக் கேள்விதான் கேட்டேன்...பதிலு தெரியாம பேக்கு பேக்குன்னு முழிக்குது..." னு சொல்லி மானத்த வாங்கிட்ருந்தார்...
இதென்னடா கெரகம் னு நெனச்சேன்.
எங்கூட இன்னொரு பயபுள்ள நின்னுட்ருந்தான்... அவனோ, "என்ன தாத்தா கேட்டீக..?. கூத்திப்பாறைக்கு இங்கிலீஷ்லயா...? அது "க்குட்ட்ப்பா..."(KKUTTPPA)" என்று நீட்டி ஒரு ஸ்டைலா சொன்னான்.
பரவாயில்லியே... கெட்டிக்காரத்தம்பி... இந்தத் தம்பி மாதிரி படிக்கணும் னு எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டார்...
என்ன செய்ய நம்ம கெரகம் அப்படி...?!
எப்பவும் போல 'ஙே' ன்னு முழிச்சிட்ருந்தேன்...!
சக பயணி
Life Of Pie – ஒரு மீள்பார்வை

நேற்று நான் என் சக நண்பர்களுடன் அருகிலிருக்கும் திரையரங்கிற்குச் சென்று Life Of Pie காணச்சென்றேன். இதோ என் மீள்பார்வை.
சமீப காலங்களில் என் அபிமான இயக்குனர் அகிர குரசவாவின் பல உத்திகளை பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் கையாண்டு தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டேவருவது அகிர குரசவாவின் வெற்றியே. Life of Pie என்ற இந்தத் திரைப்படத்திலும் அகிர குரசவாவின் Circular Techniqueஐப் பயன்படுத்தியிருக்கின்றார் இயக்குனர் ஆங் லீ.
படம், கதை சொல்லியின் பார்வையிலிருந்து நகர ஆரம்பிக்கின்றது.
‘கண்ணே ! கண்மணியே !’ என்ற பாடலுடன் தொடங்குகின்றது. Mychael Dannaவின் இசை லயமாய் இருக்கின்றது. கடல் பயணம் ஆரம்பிக்கும் வரை நிகழும் நிகழ்வுகள் பாண்டிச்சேரியில். ஆனால் அதுவரை நம் கலாச்சாரத்தினை முடிந்த அளவிற்கு இயக்குனர் படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார்.
கதாநாயகனின் பால்யபருவம். புதுச்சேரியில் வாசம். தந்தை மிருகக்காட்சி சாலை ஒன்றினை சொந்தமாக நிறுவினார். அவனது இயற்பெயரான Piscine Molitor Patel ஐ சக மாணவர்கள் கேலியும் கிண்டலுமாக அழைக்க தன் பெயரினை Pi என்றே அனைவரிடமும் விளிக்கிறான்.
சிறுவனுக்கு ஆன்மீகத்தில் நாட்டம். இந்துமதம் பிடிக்கின்றது. ஒரு முறை கிறித்தவ மதம். இன்னொரு முறை இஸ்லாம் என அனைத்து மதங்களுமே அவனைக் கவர்கின்றது. சிறுவனின் தந்தை, ‘நீ அப்படி எல்லா மதங்களையும் பின்பற்ற முடியாது…”
“ஏன்…..?” பை.
“நீ ஒரு மதத்தினைப் பின்பற்றிக்கொண்டு இன்னொரு மதத்தினையும் பின்பற்றினால் முதலில் பின்பற்றிய மதத்தின் மீது நீ கொண்டிருக்கும் நம்பிக்கையையே அது சந்தேகப்படும்படியாகும்…”
“அவன் சிறுவன்தானே…? அவனது தேடல் இப்பொழுதுதானே ஆரம்பித்திருக்கின்றது… தேடட்டும் இப்பொழுது அவனை சாப்பிட விடுங்கள்….” சிறுவனின் தாய் தபு.
ஒரு முறை தன் மிருகக்காட்சி சாலையில் புலிக்குத் தன் கையாலேயே உணவு தர முயற்சிக்கின்றான். சுவர்க்கூண்டிற்குள் அடைபட்டிருக்கும் புலி மெல்ல மெல்ல சிறுவனை நோக்கி வருகின்றது. சிறுவனின் அண்ணன் எச்சரிக்கின்றான். புலியிடமும் அன்பு காட்ட முயல்கின்றான் சிறுவன். அண்ணன் அவ்விடத்தைவிட்டு அகன்று தந்தையை அழைத்துவருகின்றான்.
புலி இவனை எதோ ஒருவித கரிசனத்தில் பார்க்கின்றது. கம்பிகளின் வழியே சிறுவனின் கரத்திலிருக்கும் இறைச்சித் துண்டினை வாங்க முயலும்பொழுது தந்தை ஓடிவந்து புலியை விரட்டுகின்றார்.
’புலியின் அடிப்படை குணம் கொல்வது… அது கார்னிவெல்...உன் அன்பு அதற்குப் புரியாது… ’
’ஆனால் அதன் கண்களின் அதன் ஆத்மாவைக் கண்டேனே டாடி….’ இந்த வசனம் க்ளாசிக்கலாக இருந்தது.
’இதோ பார்…’ என ஒரு ஆட்டினைக் அங்கே கட்டிவைக்க… புலி ஆட்டினை ஒரே பாய்ச்சலாகக் கவ்வி ….
சிறுவன் இந்து மதத்தைச் சார்ந்தவன். சிறுவனுக்கு ஜீவகாருண்யத்தின் பால் அதிக நாட்டம். சுத்த மரக்கறி உண்பவனாய் இருக்கின்றான். தன் பதினாறாவது வயதினில் Shravanthi Sainath என்ற தன் வயதொத்த பெண்ணுடன் காதல் உணர்வுகள்.
சாப்பிடும்பொழுது தந்தை, மிருகக்காட்சி சாலையை நிரந்தரமாய் மூடிவிட்டு இந்த ஊரைக் காலிசெய்துவிட்டு வேறு நாட்டிற்குச் சென்று குடும்பத்துடன் வசிக்கப்போவதாய் அறிவிக்கின்றார்.
‘ஏன்…?’ என சிறுவன்.
”கொலம்பஸ் போல வேற நாட்டைக் காணக் கெளம்பறோம்…”
“கொலம்பஸ்ஸே இந்தியாவைத்தானே தேடினார்….?” சிறுவனின் இந்த பதில் செம்மட்டியாய் விழுந்தது.
கடல் பயணம் ஆரம்பம். கடல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளாகின்றது. இங்குதான் கதையே ஆரம்பிக்கின்றது. படம் முழுதும் தனியொரு மனிதனாய் எப்படி உயிர் பிழைக்கின்றான் என்ற போராட்டமே கதை. இவனுக்குத் துணையாக இவனுடன் நான்கு விலங்குகளும் உயிர்காக்கும் படகில் பயணிக்கின்றன. இறுதியில் ’பெங்கால் டைகரும்’ நம் கதாநாயகன் மட்டுமே உயிருடன்.
புலிக்கும் இவனுக்கும் ஒருவிதப் புரிதல். புலியுடன் தகவல் பரிமாற்றம் செய்யக் கற்றுக்கொள்கின்றான். எப்படியும் உயிர் பிழைப்போம் எனத் தனக்குத்தானே நம்பிக்கை ஊட்டிக்கொள்கின்றான். மீன் பிடிக்கும் கலையைக் கற்கின்றான். பசி ஒரு வெஜிட்டேரியனை நான் – வெஜிட்டேரியனாய் மாற்றும் அந்தத் தருணம் அருமை. ஒவ்வொரு வெஜிட்டேரியனின் மனதினையும் மனதினுள் நடக்கும் போராட்டங்களையும் அழகாய் படம் பிடித்துக்காட்டுகின்றார்.
சோர்வில் தூங்கிவிடுகின்றான். படகும் இவன் தூங்கும் மரப்பலகைப் படுகையும் ஒரு தீவில் தட்டி நிற்கின்றது. அது ஒரு மிதக்கும் தீவு, அங்கே தாவர உணவினை உண்கின்றான். சுத்தமான குடிநீருள்ள சிறிதாக ஒரு குளம். பாலூட்டி வகையைச் சேர்ந்த Mangoose குடும்பத்தைச் சேர்ந்த Meerkat வகை சின்ன சின்ன உயிரினங்கள். இரவினில் நீர் அமிலமாக மாறி, மீண்டும் பகலில் சுத்த நீராக மாறும் விந்தை. ஒரு முறை மனிதப் பல்லினைக் கண்ணுறுகின்றான். அங்கிருக்கும் சில தாவரங்கள் விலங்கின்ங்களை உண்ணக்கூடிய ட்ரொஸீரா வகைத் தாவரங்கள் என அறிகின்றான். உடனே அந்தத் தீவைவிட்டு அகல்கின்றான் தன் புலியுடன்.
உயிர்காக்கும் படகு மெக்ஸிகோ கடற்கரையில் ஒதுங்குகின்றது. புலி இறங்கி அருகிலிருக்கும் காட்டிற்குள் நுழைகின்றது. சிறுவன் சோர்வாகக் கரையிலேயே விழுந்து கிடக்கின்றான். பொதுமக்கள் அவனைத் தூக்கிக்கொண்டுச் செல்கின்றனர். அவன் ஓ…வென அழ ஆரம்பிக்கின்றான். புலியைவிட்டுப் பிரியும் அந்த வலி யாருக்கும் புரிபடவில்லை.
காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் இவனை விசாரிக்கின்றனர். இவன் நடந்த உண்மைகளைச் சொல்கின்றான். அதிகாரிகள் நம்ப மறுக்கின்றனர். மிரட்டும் தொணியில் பேசுகின்றனர்.
சிறுவன் அவர்கள் நம்பும்விதமாக இதே சம்பவங்களை வைத்து இன்னொரு கதையைச் சித்தரிக்கின்றான். அதிகாரிகள் இப்பொழுது நம்புகின்றனர்.
இந்தப் படம் 2000ல் வெளிவந்த CAST AWAY என்ற திரைப்படத்தினை ஏனோ நினைவுபடுத்துகின்றது.
Life Of Pie – ஒரு மீள்பார்வை
நேற்று நான் என் சக நண்பர்களுடன் அருகிலிருக்கும் திரையரங்கிற்குச் சென்று Life Of Pie காணச்சென்றேன். இதோ என் மீள்பார்வை.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
//வாழ்க ஐயா... பல துறைகளிலும் முன்னிலையில் இருக்கின்றீர்கள் //
பார்த்த படத்தினைப் பற்றி எழுதுவதில் என்ன முன்னிலை இருக்கின்றது ஐயா ...? எவர் வேண்டுமானாலும் தான் பார்த்தப் படத்தினைப் பற்றி கதை சொல்வார்கள்தானே ...?
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பால்ய காலத்தில் மழையில் நனைந்து ரசிப்பது மிகவும் பிடிக்கும்..
கல்லூரிக்காலங்களில் எங்கள் கிராமத்திலிருந்து கல்லூரிக்கு சைக்கிளில் பயணிப்பது வழக்கம்.பெருமழைக் காலங்களில் சிலசமயம் சைக்கிளை மேற்செலுத்த இயலாமல் பேய்மழை கண்களை மறைக்கும். ஒரு புறம் மழையில் நனைவதென்பது மற்றவர்கள் நினைப்பது போல் எதோ ஷவர் பாத்தில் தூவாளையாகக் குளிப்பது போலன்று.
எங்கள் கிராமங்களில் பெய்யும் மழையானது பேய்மழை ! கன்னத்திலும் உடலிலும் பொளேர் பொளேர் என அறையும். அதிக திசைவேகத்துடன் புவியீர்ப்பு முடுக்கத்தினால் வேகமாய் நம் மீது வந்தறையும். அறைதலின் வலி அனுபவித்தவர்களுக்கே புரியும். ஒரு புறம் புத்தகப் பை முழுதும் நனைந்து பேனா மசியினால் எழுதிய த்துக்களெல்லாம் மறைந்து போகும்.
என் கல்லூரிக் காலங்களில் எங்கள் கிராமத்திலிருந்து அந்தக் கல்லூரிக்கு தினமும் ஒரு 21 + 21 கிலோமீட்டர்கள் காட்டுப் பாதையில் சைக்கிள் பயணம். அப்பொழுதெல்லாம் நான் பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. நோட்டீஸ்களின் பின்புறம் வெறுமையாய் இருக்கும். அப்பக்கங்களை இணைத்து நானே ஒரு நோட்டுப் புத்தகம் தயாரித்துக்கொள்வேன். அதில்தான் பாடங்கள் எழுதிவைப்பேன். இந்த மழையினால் பேனா மைய்யும் கறைந்து அத்துடன் அந்த நோட்டீஸிலுள்ள வண்ணங்களும் கறைந்து ….. புத்தகப் பை ஒருவித புது வண்ணத்தில் நிறம் மாறியிருக்கும்.
மழையினால் காட்டுப் பாதை சகதியாயிருக்கும். கரிசல் நிலங்கள். மேற்கொண்டு சைக்கிளைச் செலுத்த இயலாது. மெல்ல உருட்டிக்கொண்டே நடைபயிலவேண்டும். மழை வலுக்கும். நிலம் வழுக்கும். மரங்களின் கீழே ங்கலாமாவென்றால், மரங்கள் இடி, மின்னல்களை வெகுவாய் ஈர்க்கும் என்ற என் பெளதிக அறிவு தடுக்கும். மேற்கொண்டு பாம்புகள் நம்மை எப்பொழுதும் அன்பாய் ஓட ஓட விரட்டும், குறிப்பாக இந்த மழைக் காலங்களில்…!
நோட்டுக் குறிப்புக்கள் காணாமல் போவதில் எனக்கு சிறிதும் வருத்தமே ஏற்படுவதில்லை. என் சைக்கிள் பயணத்திலேயே நியூட்டனும், ஐன்ஸ்டீனும், ரூதர்ஃபோர்டும் ஆசானாய் பெளதிகப் பாடங்கள் வெகு ஆர்வமாய் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பர்.
நோட்டுப் புத்தகத்தில் அழிந்து போனவைகளை மீண்டுமொருமுறை என் நினைவுப் பெட்டகத்திலிருந்து மீட்டெடுத்துவிடுவேன். பெளதிகமும் கணக்கும் தவிர மற்ற பாடங்களனைத்தும் வேப்பங்காயாகியிருந்தது. குறிப்பாக வேதியியல் மற்றும் ஆங்கிலம்.
மழையினால் பலமுறை பாடசாலைகளும் கல்லூரிகளும் விடுப்பாகிவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.(I Love School, When it is closed….!) ஒருமுறை நான் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்க ஒரு பெரும் புயல் ஒன்று வீசியது. புயல் ஒருவார காலம் நீண்டது. இதனால் நடக்கவிருந்த எங்களது பல்கலைக் கழகத் தேர்வுகள் ரத்தானது கண்டு எனக்கு சொல்லொணா இன்பம் ஏற்பட்டு அந்த புயலிலும் என் அறையிலிருந்து வெளியே ஓடிவந்து மொட்டை மாடிக்குச் சென்று அப்பொழுது பெய்த மழையில் நனைந்து நடனமாடியது ஒரே உற்சாகமாயிருந்தது.
நடுக்காடுகளில் மழைபொழியும் பொழுது நனைவதில் எனக்கு வெகு ஆனந்தம். நம்மைச் சுற்றி யாரும் இருப்பதில்லை. மக்களின் பார்வை இல்லை. சர்வ சுதந்திரம். அங்கே நனைந்து கொண்டே நடனமாடுவது, தொடர்ந்து மழையில் நனைந்து அதன் லயத்துடன் நம் லயத்தினையும் ஒன்றிணைப்பது ஏறக்குறைய ஒரு நெடுந்தவம் செய்த பரம திருப்தி கிடைக்கும்.
மழைக்காலங்களின் சைக்கிள் பயணத்தில்
தவறாமல் ஒரு கொங்காணி( கொங்காணி என்பது கோணிப்பையில் செய்யப்படும் மழைத்
தடுப்பு்) எடுத்துச் செல்லப் பணிக்கப்படுவேன் வீட்டினரால். ஆனாலும் இந்தப்
பெருமழையில்
கொங்காணிகளினால் ஒரு பயனும் விளைவதில்லை. மாறாக மழையில் அதுவும் நனைவதால் அதனது எடை கூடி நமக்கு அது ஒரு சுமையாகிப் போய்விடுவதுண்டு
நெடும்பயணத்தில். குடை மழைக்காற்றில் அடித்துச் செல்லப்படும். பல குடைகளை நான் மழைக்காற்றினால் இழந்ததுண்டு. சில குடைகள் வளைந்து நெளிந்து உருக்குலைந்து போனதுமுண்டு. குடை பிடித்துக்கொண்டு காட்டுவழியே நெடும் சைக்கிள் பயணம் அந்தப் பெரும் மழையுடன் கூடிய பேய்க்காற்றில் சிரமமே. சில நேரங்களில் பனிக்கட்டி மழை விழுவதுண்டு. பனிக்கட்டிகள் என்பது எங்கள் பால்ய காலத்தில் அரிதான ஒன்றே.
அப்பொழுதெல்லாம் எங்கள் சுற்றுவட்டாரங்களில் சிவகாசி போன்ற நகர்களில் மட்டுமே உயர்குடிகளிடம் செயற்கை பனிக்கட்டிகளின் பயன்பாடு இருந்தது. ஜன்னலை ஊடுருவி பனிக்கட்டி மழை வீட்டினுள்ளும் வருகை புரியும். நான் வீட்டின் பரந்து விரிந்து கிடக்கும் நிலவெளிக்கு ஓடிச்சென்று பனிக்கட்டிகளைப் பொறுக்கி ஒரு எவர்சில்வர் தூக்கிவாளியில் போட்டு அதன் வெளிப்புறம் சிறிது நேரத்தில் நீர்த்திவலைகள் ஜனிப்பதைக் கண்டு ரசிப்பேன். அது வியர்வை போல் வியர்த்திருப்பதைப் போல் எனக்குள் ஒரு வித பிரமிப்பு ஏற்படுத்தும்.
அப்பொழுதெல்லாம் எனக்குள் ஆழ் சிந்தனை ஏற்படும். இது எப்படி நீர்த்திவலைகள் எவர்சில்வர் தூக்குவாளியின் பின்புறத்தில் பிறப்பிக்கின்றது ? என ஆச்சர்ய அலைகளை அது ஏற்படுத்தும். அப்பொழுதெல்லாம்Properties of Matterஐ சரியாகப் புரிந்துகொள்ளாத பால்ய காலப் பிராயம்.
ஆனாலும் ஒன்று மட்டும் புரிந்தது. ஒன்று
இன்னொறாக மாறுகின்றதோ….? என ஆச்சரியப்படுவேன். அந்த நீர்த்திவலைகள தொட்டுப்
பார்ப்பேன். அதனது சில்லென்ற வெப்பம் எனக்குள் பரவசமேற்படுத்தும். மழை
பெய்யும் சிறிது நேரத்திற்கெல்லாம் இயற்கையே நீரானது ஒரு ஆறு போன்ற
அமைப்பினை ஏற்படுத்திவிடுவது எனக்குள் மிகப் பெரிய ஆச்சர்யம் விளைவிக்கும்.
மழை நீரானது ஓடிக்கொண்டிருக்கும் அதன் அழகு அபாரம். அந்த
நீரில் மழைத் துளிகள் விழும்பொழுது நீர் மேற்பரப்பில் அது ஏற்படுத்தும் ஒரு
வித அழகான வட்டவடிவ அமைப்பும் அதன் கடைசி துளி நீருடன் சங்கமிக்கும் அந்த
அழகும் ஆயிரம் ஃபில்டர் காஃபிகளை ரசித்து ருசித்துக் குடிப்பதைவிட ஒரு
படிமேலான லயமான ஒருவித சுகானுபவம். அது ஏற்படுத்தும் ஒலியானது
ஆயிரக்கணக்கான இளையராஜாக்களைத் தன்னுள் ஒளித்துவைத்திருக்கின்றதோ என
பிரமிப்பேன்.
மழையில் நனையும்பொழுது மேலே அண்ணாந்து பார்ப்பேன். சில சமயங்களில் சூரிய ஒளியானது வானில் நீர்த்திவலைகளில் பட்டு நிறப்பிரிகைகளை ஏற்படுத்தி வானவிற்களை ஜனிக்க வைத்திருப்பதை (எங்கள் கிராமங்களில், ‘ராமர் வில் விட்ருக்கார்…’ என்போம்) பலமுறை ரசித்திருக்கின்றேன். மழை நீர்த் திவலைகள் இலைகளிலிருந்து சொட்டுச் சொட்டாக விழுவதைக் கவனித்தாலே ஆயிரம் தவங்களுக்குச் சமம். அதன் அழகே அழகு. ஒரே சீராக ஒருவித லயத்துடன் இலைகளிலிருந்து நீர்த்திவலைகளானது புவியினை நோக்கிவிழுவது, அடடா… எத்தனை அழகு….!
மழைபொழிந்த சில சமயங்களில் நீரினால்
பாம்புகள் அடித்துச் செல்லப்படுவதுண்டு. அது நீரினில் துள்ளிக்கொண்டே
செல்லும். மீன்களும் மழைநீரினால் அடித்துச் செல்லப்படுவதுண்டு. சில மீன்கள்
நீரின்
மேற்பரப்பில் துள்ளித் துள்ளி நடனமாடித் தங்களது மகிழ்ச்சியைத்
தெரிவிக்கும். எனக்கென்னவோ அந்த மீன்களும் என்னைப் போல் மழையினில் நனைய
ஆசைப்படுவதாய்த்தான் நான் நினைப்பதுண்டு. அவைகள் அதிக உற்சாகமாய் நீரின்
மேற்பரப்பில் துள்ளிக்கொண்டிருக்கும். ச்ச்ச்சடேரென கொக்குகள் மிக
லாவகமாகத் தங்களது அலகினால் அவைகளைக் கவர்ந்து செல்லும். அலகுகளினிடையே
மாட்டிக்கொண்டும் மீன்கள் துள்ளி நெளியும். நான் அப்பொழுதெல்லாம் அது
மழையில் மகிழ்ச்சியாக நடனமாடுகின்றதோ என எண்ணிக்கொண்டாலும் அதன் மரணபயமும்
என்னை பயமுறுத்தும். சில நேரங்களில் பாம்புகள் அவைகளை நீர்ப்பயணத்திலேயே
விழுங்குவதும் எனக்குள் கிலியினை ஏற்படுத்தும்.என்னையொத்த பல சிறார்களும்
பல பெரியோர்களும் நீரினை லாவகமாக
நீர்பரப்பிற்கு வெளியேத் தட்டிவிட அதிலிருந்து சில கெண்டை,அயிரை,கெளுத்தி
ரக மீன்கள் தரையில் நடனமாடுவதைக் கண்டு ரசிப்பதைவிட உடனே அதனை எடுத்து
சூட்டான் போட்டு சாப்பிடுபவர்களே திகமாகியிருந்தனர். அந்த மீன்களானது எதையோ
சொல்ல முயல்கின்றது. என்னை ஏன் நீரிலிருந்து பிரித்தாய்….?
உனக்கு இது அதர்மமாய் படவில்லையா…..? என்பதைப் போலிருக்கும்.
நீரினால் அடித்துச் செல்லப்படும் சில பாம்புகள் நீரின் மேற்பரப்பில் துள்ளி விளையாடிக்கொண்டே செல்லும் சில மீன்களை லாவகமாய்த் தன் வாய்க்குள் தள்ளுவதைக் கண்டு இயற்கையின் கோட்பாடே இதுதானோ என எண்ணிக்கொள்வேன்.
வலிமைவாய்ந்தவை வாழ்கின்றன. போராட்டத்தில் வெற்றி பெறுபவை வாழ்கின்றன. மற்றவை சாகின்றன என டார்வினின் தியரி ஃப்ளாஷ் ஆக அவ்வப்பொழுது மனதினில் வந்து மறையும்.ஒருமுறை நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் படிக்கும்பொழுது ஒரு பெருத்த மழை, புயலின் காரணமாக எங்கெங்கும் ஒரே வெள்ளம், இடிபாடுகளும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன. மழை நின்றவுடன் நாங்கள் வழக்கமாய் ஒன்று சேரும் தோப்பிற்குச் சென்றால் அங்கே அந்த பிரமாண்டமான ஆலமரம் சாய்ந்துகிடந்தது. எங்களனைவருக்கும் சோகம் கப்பிக்கொண்டது. ஏனெனில் அம்மரத்திற்கென ஒரு சரித்திரம் உண்டு.
எங்கள் கிராமத்தில் நாச்சியாரம்மாள் என்ற பெண் கடவுளர் பிறந்ததாய் ஒரு சரித்திரம் உண்டு. நாராயணசாமி எங்கள் கிராமத்திற்கு வந்து நாச்சியாரம்மாள் அவர்களைக் க்ரம்பிடித்ததாய் ஒரு வரலாறு. இதன் நிமித்தமாக ஆண்டிற்கொருமுறை நாராயணசாமியும் நாச்சியாரம்மாளும் தம்பதி சமேதரராய் எங்கள் கிராமத்திற்குத் திருத்தங்கல்லிலிருந்து ஒவ்வொரு பங்குனி மாதத்திலும் வருகை புரிவர். அவர்களின் வருகை மற்றெல்லா பண்டிகைகளையும்விட வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே நாங்கள் தயாராகிக்கொண்டிருப்போம்.
இத்திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் முறுக்கு சுடுவது என்பது ஒரு வழக்கம். காலப்போக்கில் ‘முறுக்குச்சாமி’ என மறுவிப்போனது. இன்றும் இந்த விழா கொண்டாடப்படுகின்றது.
நாராயணசாமியும் நாச்சியாரம்மாளும் திருத்தங்கல்லிலிருந்து பல்லக்கில் வருகை புரியும்பொழுது எங்கள் ஊர் கிருஷ்ணன் கோவிலின் எல்கைக்கு வெளியே இரண்டு ஆலமரங்கள் இருந்தன. இவை பறவைகளின் சரணாலயமாகத் திகழ்ந்தன. ஒரு மரம் நாச்சியாரம்மாள் இளைப்பாற; இன்னொரு மரம் நாராயணசாமி இளைப்பாற.
சாமிகள் கிருஷ்ணன் கோவிலுக்கெதிரே கூரைப்பள்ளியில்தான் தங்குவது வழக்கம். ஊர் மக்கள் அங்கு தரிசனம் செய்து இரவினில் நடக்கும் நாடகங்களோ வில்லிசைகளையோ கண்டு ரசிப்பர். இப்பொழுது இந்த மழையின் காரணமாக நாராயணசாமியின் மரம் வீழ்ந்து கிடந்தது எங்களுக்குள் ஒரு மிகப்பெரிய வலியினை ஏற்படுத்தியது. எங்கள் கிருஷ்ணன் கோவில் அம்பி எதேதோ சாத்திரங்கள் சொன்னார். அதெல்லாம் எனக்குப் புரியவில்லை.
அவ்வொப்பொழுது நான் அந்த வயதினில்
நாத்திகம் பேசிப் பிதற்றித் திரிந்துகொண்டிருந்தாலும் கூட மரம் செடி
கொடிகள் என வரும்பொழுது அது எனக்குள் மிகப்பெரும் வலியையே தந்தது. மரங்கள்
காற்றினில் ஆடும்பொழுது
அதில் பூக்கும் பூக்களும் இலைகளும் காய் கனிகளும் எப்பொழுதும் என்னுடன் பேசி சிநேகிப்பதாகவே இருக்கும்.
அதன் பாஷையில் எதேதோ சொல்லி அழகாய்ச் சிரிப்பதாகவே எனக்குத் தெரியும். அதன் மீது ஏறும்பொழுதுகூட அதற்கு வலிக்குமோ என நினைப்பதுண்டு. பாவம் என நினைப்பதுண்டு. நம் பயன்பாடுகளுக்காக அதிலிருந்து காய் கனிகளைப் பறிக்கும் பொழுது அதன் வலி என்னுள் பாய்வதை உணர்வேன்.
உண்மையில் செடிகொடிகள் குழந்தைகளைப் போன்றே வெண்மையான மனம் கொண்டவையாய் இருப்பதைக் கண்டு ஆனந்தித்திருக்கின்றேன். எங்கள் தோட்டங்களில் பயிருடும்பொழுது அதற்கு நீர்ப்பாய்ச்சும்பொழுதெல்லாம் ஒரு குழந்தைக்கு உணவளிப்பது போன்று அகமகிழ்ந்திருக்கின்றேன்.
சில கால வெளியில் அவைகள் பளிச்சென வளரும்பொழுது என்னுள் அளப்பறியா ஒரு மகிழ்ச்சி. அது பூ பூக்கும்பொழுது நான் வானில் பறப்பேன். பிஞ்சு விடும்பொழுதெல்லாம் நான் அதனை ஆசை ஆசையாய் வாஞ்சையாய் அன்பால் கோதிவிடுவேன். அது நிஜமாகவே என்னுடன் பேசுவது போலும் எனக்குள் அது எதையோ பரிமாறிக்கொள்வது போன்றுமே இருக்கும். ஒரு இனம் புரியா அன்பால் பிணைக்கப்பட்டிருப்பேன். காய் காய்ப்பது, பழமாவது என அதன் இறுதி நொடிவரை அதனுடன் உறவு. அறுவடைசெய்யும்பொழுது மட்டும் மனம் கனத்துப்போகும். ஒரு வார காலத்திற்கு யாருடனும் பேசாமல் தனியாய் புலிப்பாறைகளுக்குச் சென்று அமர்ந்துகொண்டு மிகவும் யோசிப்பேன்.
இத்தனை காலம் அன்பாய் உறவாடிய செடி கொடிகள் இப்பொழுது நம் சுய நலத்திற்காக அதனை அழிக்கின்றோமே….? என்ன தர்மமிது….? ஒரு குழந்தையை வளர்த்து அதனை அந்தத் தாயே கொல்வது எத்தனை கொடூரம்…..? அந்த குழந்தை அந்த தாயின் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தது…..? கொல்லும்பொழுது கூட குழந்தை ‘அம்மா….’ என்றுதானே அழைக்கும்….? ஆயிரம் சிந்தனைகள் மனதினுள் அலை அலையாய் ஆர்ப்பரித்து உணர்வுகள் பீரிட்டு கண்களில் நீர்த் திவலைகள் ஓடும். என் உணர்வுகள் எவருக்கும் புரியவில்லை. பெரியவர்கள் என்னை எள்ளி நகையாடியது எனக்குள் இன்னமும் , ‘நன்றியற்ற பிணந்தின்னிக் கழுகுகள்……’ என கோபம் கோபமாய் வரும்.
அடச் சே…. நான் எங்கோ ட்ராக் மாறுகின்றேனே….! மழையில் நனைவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்…..? ஒன்றிலிருந்து மனம் எங்கெங்கோ ஓடுகின்றதே…! இதுதான் என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம். ம்ம்ம்….சரி எங்க விட்டேன்….? இருங்க ஒரு முறை ஸ்க்ரோல் அப் பண்ணி பாத்துட்டுவர்ரேன்….
என் நினைவலைகளைக் கிளர்ந்தெழ இக்கட்டுரை காரணமாகிவிட்டதே….! காட்டாற்று வெள்ளமென அதன் திசையில் என் எண்ண அலைகள் பயணிப்பதால் இத்துடன் நிறுத்திவிட்டு மீண்டும் வருகின்றேன்.
5-ஜூலை-2013, வெள்ளி.
வானம்-9 நியூயார்க்-1
பகலில் தூங்கி எழுந்ததும் நம்மை ஒரு மென்சோகம் கவ்விக் கொள்கின்றதே..? அது ஏன் ? இதே போல் ஒவ்வொரு பயணத்தின் பொழுதும் ஒருவித மென்சோகம் நம்மை அறியாது கவ்வி இழுப்பது ஏன் ? தற்சமயம் இருக்கும் இடத்திலிருந்து நன்கு அறிந்த இன்னொரு இடத்திற்குச் சென்றாலும் சரி அல்லது பழக்கப்படாத புது இடத்திற்குச் சென்றாலும் ஒருவித மென்சோகம் நம்மையறியாதே நம்மைக் கவ்விக்கொள்கின்றதே !
ஒவ்வொருவரும் பயணிக்கும்பொழுது ஒரு வித பாதுகாப்பின்மையை உணர்கின்றோமே ஏன் ? ஏன் மனிதன் புதியன கண்டு பயப்படுகின்றான் ? தெரியாததை/ அறியாததைக் கண்டு பயம். பாம்பினைக் கண்டு பயம். நாகராஜன் என தேவதையாக்கி வணங்கினான். நெருப்பைக் கண்டு பயம். அக்னி பகவான். மழையைக் கண்டு பயம். வருண பகவான். மனிதன் இப்படி எதைக் கண்டெல்லாம் பயப்படுகின்றானோ அவற்றையெல்லாம் தெய்வமாக்கினான்.
கனக்ட்டிக்கட் மாநிலத்திலிருக்கும் ப்ரிட்ஜ்போர்ட்டிலிருக்கும் நண்பர்கள் அழைப்பின் பேரில் அங்கு பயணப்பட முயற்சித்தேன். வழக்கமாய் செல்லும் வழிமுறையானால் நியூயார்க் பென்ஸ்டேஷன் சென்று அங்கிருந்து கனக்ட்டிக்கட்டிற்கு ரயிலேற வேண்டும். அதிகப் பணமும் நேரமும் விரயம். நான் தற்சமயம் வசிக்கும் நியூயார்க்கிலிருக்கும் இந்த ஹிக்ஸ்வில் கிராமத்திலிருந்து ஒரு குறுக்குப் பாதை உண்டு. டிக்கட் எடுக்காமல் திருட்டு ரயில் ஏறினால் 1:14 மணி நேரத்தில் 5 வருடங்கள் வசித்த போர்ட் ஜெஃபர்சன் என்ற கிராமத்தில் இறங்கிக்கொள்ளலாம். இங்கிருந்து ஒரு டைட்டானிக். இது நம்மை ப்ரிட்ஜ்போர்ட்டிற்கு அழைத்துச் செல்லும்.
இந்த தேசத்தில் (அமெரிக்கா) எத்தனையோ ஊர்களைச் சுற்றியிருந்தாலும் நியூயார்க்கில் இருக்கும் LIRR ரயில் நிர்வாகத்தினைப் போன்று எங்குமே நான் கண்டதில்லை.
மிக நேர்த்தியான நிர்வாகம். துல்லியமான நேரத்திற்கு ரயில் வருகை. ”சுத்தம் சோறு போடும்” என்பதை இவர்கள் நான் படித்த எங்கள் கிராமப் பாடசாலையில் விஜயா டீச்சரிடம் மணிக்கட்டில் பிரம்படி வாங்கிப் படித்திருக்கவேண்டுமோ என எண்ண வைத்தது. கொளுத்தும் இந்த வெயிலிலும் வண்டியினுள் சில்லென்ற குளிர் ! ஒவ்வொரு நிறுத்தம் வரும் முன்னரே சிவப்பு நியான் எல்.ஈ.டிக்களிலும் ஒலிவிப்பானிலும் துல்லிய அறிவிப்பு !
அமெரிக்கா வந்தால் இனி நுனி நாக்கில் ஆங்கிலம் வந்துவிடும் எனவும் இனிமேல் யோகா தவம் போன்ற அசட்டைகளை மூட்டை கட்டிவிட்டு ஒரு புது மனிதனாய் வலம் வருவாய் எனவும் அனைவராலும் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டேன். இங்கு வந்து இறங்கினால் எல்லாம் தலை கீழாய்ப் போனது !
இந்தியாவிலிருந்ததைவிட இங்கு வந்த பின்னர் வளர்ந்ததெல்லாம் தமிழும் தெலுங்கும் கொஞ்சம் ஹிந்தியும். யோகா மற்றும் தவம் இவற்றின் தொடர்புகள் இந்தியாவினைவிட இங்கு வந்தபின் இன்னும் அதிகரித்தன.
ஒன்று புரிகின்றது. சுற்றுப் புறச் சூழ்நிலைக் காரணிகள் ஒரு மனிதனை முற்றிலும் மாற்றிட இயலவில்லை. அதே தயிர்ச்சாதம். அதே வாழ்க்கை முறை. ஒவ்வொரு மனிதனும் இயல்பிலேயே அவனிடம் என்ன நிரல்கள் இருக்கின்றனவோ அதற்கேற்பவே அவனின் வாழ்வு அமைகின்றது.
போர்ட் ஜெஃபர்சன் என்ற கிராமத்தினை அடைந்தேன். ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு மணம் உண்டு. ஒவ்வொரு அதிர்வலைகள் உண்டு. இந்த கிராமம் பணக்காரர்கள் நிம்மதியாக வசிக்கும் ஒரு கிராமம். அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத ஒரு கிராமம். ஆனால் இங்கு வசிக்க Cost of Living அதிகம். சூரியன் மறையும் வரை இரவு 9:30 மணிவரை கிரிக்கெட் விளையாடி விழுப்புண்கள் வாங்கிய மறக்க இயலாத ஊர். 2010 வரை இந்த ஊரில்தான் வசித்திருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று செல்லும்பொழுது சொல்லொணா ஒரு வித உணர்வலைகள். நிறைய மாறியிருக்கின்றது. புதிய கடைகள் முளைத்திருக்கின்றன. பழைய பல கடைகள் காணாமல் போயிருந்தன.
Suffolk தாலுகாவில் அமைந்த அழகியலான கிராமம். அழகான சாலைகள். அடர் மரங்கள். கவித்துவமான உட்கட்டமைப்புகள். இந்த கிராமத்திலிருக்கும் அமைதியான கடல். 7750 மனிதர்கள் வசிக்கும் சிற்றூர். மீன்பிடித் தொழில்களும் , படகு வீடுகளும் இங்கு பிரபல்யம். தற்சமயம் இது சுற்றுலாத் தலமாகும் வெவ்வேறு வித உணவகங்கள் கொண்ட ஒரு ஸ்தலமாகவும் தன்னை உருமாற்றம் செய்து கொண்டிருக்கின்றது.
17 ஆம் நூற்றாண்டில் Setauket indiansகளிடமிருந்து இந்த நிலமானது ஆக்ரமிப்பு செய்யப்பட்டது. இதன் பாரம்பரியப் பெயர் Sowassett அல்லது Souwassett என Long Islandன் வரலாற்றில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றது. Souwassett எனில் small pines என்று பொருள்படும். இந்த மரங்கள் இங்கே நிறைய இருக்கின்றன.
Jhon Roe என்ற ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு காலணி உற்பத்தியாளர் 1682ல் இதனை Drowned Meadow எனப் பெயர் மாற்றம் செய்திட்டார். முதன் முதலில் ஐந்தே ஐந்து வீடுகளை மட்டும் கொண்ட ஒரு சின்னக் குழுமமாக இந்த கிராமம் அமைந்திருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் சிறு சிறு கப்பல் கட்டும் தொழிலை இந்த கிராமம் மேற்கொண்டது. இந்த கிராமத்தின் பெயர் கப்பல் கட்டும் தொழிலுக்கேற்றாற் போல் அமையவில்லை எனக் கருதிய அந்தக் குழுமத் தலைவர்கள் அப்பொழுது 1836ல் 3 ஆம் அமெரிக்க ஜனாதிபதி அதிகாரத்திலிருந்த Thomas Jefferson என்பவரது பெயரினை இணைத்து Port Jefferson என மாற்றியமைக்கப்பட்டது.
சரி....
ஒரு பிரபல சர்க்கஸ்காரர் ஒருவருக்கும் இந்த கிராமத்திற்கும் ஒரு தொடர்புண்டு.
இவர் பெயர் P.T.Barnum. இவர் 1824 முதல் 54 வரை Democratic கட்சியிலும் பின்னர் 1865 ல் கனக்ட்டிக்கட் மாகாண அரசியலில் Republican கட்சியிலும் அரசியலில் இருந்து பணியாற்றினார்..
இவரின் முக்கிய நோக்கம் Port Jeffersonஐ தன் சர்க்கஸ் கம்பெனியின் ஒரு நிரந்தர இடமாக மாற்ற நினைத்தார். பொதுமக்கள் அதற்கு அப்பொழுது எதிர்ப்புத் தெரிவித்ததால் இன்று அது P.T.Barnum Ferry Port Jefferson - Bridgeport என்பதாய் பரிணமித்திருக்கின்றது.
தொடரும்....
யோகா….
அநேகர் யோகா எனில் உடலினை வில் போல வளைத்து பலப்படுத்துவது என்றும் எதிரியை ஒரே அடியில் சட்னியாக்கிவிடுவது என்றும் நம்பினால் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சும்.
யோகா பண்ணினால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய மற்றும் இன்னபிற நோய்கள் அண்டாது என எண்ணினால் அது மீப்பெரும் மாயையே !
சிலர் யோகா அப்பியசிப்பதன் மூலம் ஸ்ரீராமபிரான் போன்ற ஆலிலை வயிற்றினை அடையலாம் என எண்ணினால், உலகிற்கு யோகா கற்றுக் கொடுத்த எத்தனையோ பிரபல யோகாசிரியர்களின் படங்களை நாம் உற்று நோக்கின் அவர்களின் Waist / Hip Ratio அசாதாரண நிலையிலிருப்பதை நாம் கண்கூடாக அறியலாம். இன்னும் சில யோகியர் மாரடைப்பில் மரணித்ததையும் நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.
பின்னர் எங்கே பிழைகள் நிகழ்ந்திருக்கும் ? யோகா தவறா ?
தினசரி நம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியில் யோகாசனங்களைச் சொல்லித் தருகின்ற அப் பயிற்றுனர் ஒரு யோகியரா ?
ஒருவரை யோகியர் என எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?
அவரது முகம் எப்பொழுது அமைதியாகவும் தேஜஸாகவும் இருக்கும். உடல் தொந்தி தொப்பையின்றி சீராக இருக்கும். முகத்தில் வரட்சி இன்றி பொலிவுடன் சாந்தத்துடன் கூடிய தேஜஸ் குடிகொண்டிருக்கும். எண்ணம் சொல் செயலில் வேற்றுமை இரா. அளவற்ற பொறுமை, அசையாத நடுநிலை, நிஷ்காம்ய கர்மம் கைக்கொண்டு அனைத்து உயிரையும் உயிரற்றவைகளையும் தன்னுயிராய் கருதும் மேன்மை குடிகொண்டிருக்கும். குரலில் கனிவு குடியிருக்கும்.
சரி யோகா என்றால் என்ன ?
யோகா என்பது உடல், உயிர், மனம், வான்காந்தம், ஜீவகாந்தம் என அனைத்தையும் ஒரே நோர்கோட்டில் அமைப்பதாகும். அது ஒரு வாழ்வியல் நெறிமுறை. வெறும் உடற்பயிற்சி யோகா அல்ல.
இன்னொரு நாள் சந்திக்கலாமா ?
எழுத்து என்னவெல்லாம் செய்யும்….?
பல்லாண்டுகளுக்கு (2006 என நினைக்கின்றேன்) முன்னர் முத்தமிழ் குழுமத்தில் ”தீபாவளியும் நானும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தேன். http://rishiraveendran.blogspot.com/2013/01/blog-post.html. பின்னர் இதனை கடந்த ஆண்டு (2012) தீபாவளியன்று வல்லமை குழுமத்திலும் பிரசுரத்திருந்தேன்.
நான் வளர்ந்த அந்த கிராமத்தினை விட்டகன்று சற்றேறக்குறைய 35 வருடங்கள் ஆகிவிட்டன. அவ்வப்பொழுது கொஞ்சம் தொடர்பு இருந்துகொண்டே இருந்தது. அத்தொடர்பும் சரியாக 2000ற்குப் பின்னர் முற்றிலும் நின்று போனது.
மேற்படிப்பு, வேலை நிமித்தம், யோகா நிமித்தம் என ஊர்கள் பல, யோகியர்கள் பல, மாநிலங்கள் பல, இறுதியில் ”கெட்டும் அமெரிக்கா போய்ச் சேர்” என்ற ஆகம விதிப்படி ஒரு வழியாக இங்கேயே பல்லாண்டுகளாக வசித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது என் பால்ய பருவம் மனத்திரையில் திரைப்படமாக எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும். அதன் அடி நாதத்திலிருந்து வருபவைகளே என்னுடைய கதைகள் மற்ற படைப்புகள்.
தினமும் எதாவது ஒரு விதத்தில் பால்ய பருவத்துடன் நிகழ்வுகளை இன்றளவும் ஒப்பிட்டு மகிழ்கின்றது மனம். இனிமையான நாட்கள். இப்படி தினசரி அதே பால்ய நினைவுகளுடன் வாழ்வதால் மனது இன்னமும் அதே பால்ய கால வயதாகவே இருக்கின்றது.
திரு.கணேசன் என்ற இளைஞர், தான் வசிக்கும் அந்த கிராமத்தினை கூகிளிடும்பொழுது, தேடிபொறியில் எதோ ஒரு குழுமத்தில் “தீபாவளியும் நானும்” என்ற இக்கட்டுரை கிடைக்க, உடனே எனக்கு மின்னஞ்சலிட்டார்.
பேசினோம்.
இரண்டு தலைமுறை ஓடியிருந்திருக்கின்றது. இந்தப் பையர் யாரென்று விசாரித்தேன்.
இவரது (கணேசன்) பாட்டி ”காளியம்மா” எங்கள் வீட்டில்தான் பணிவிடை செய்தார். மிகவும் நல்லவர். என் மீது அபரிமிதமான அன்பைச் செலுத்தியவர். பளிச் சலவை. செய்யும் தொழிலில் செய் நேர்த்தி. ஒரு நேர்மை. ஒரு கர்ம யோகி போல் சலவைத் தொழிலைச் செய்திட்டவர். இவரிடம் கர்ம யோகம் கற்றுக்கொண்டேன். எந்த ஒரு தொழிலையும் எப்படி சிறப்பாக செய்வது என இவரிடம் கற்றுக்கொள்ள அநேக விஷயங்கள் இருந்தன. இவரிடம் சிறுவயதிலிருந்தே கூர்ந்து கவனித்துக் கற்றுக் கொண்ட ஒரு மிகப் பெரிய விஷயம் பொறுமையும் அமைதியும். இவை மட்டும் நம்மிடம் இருந்தால் அனைவரின் இதயத்தையும் வெல்லலாம் என்ற மீப்பெரு உண்மையைக் கற்றுக் கொண்டேன். இந்த கர்ம யோகியிடம் கற்றுக்கொண்டது ஏராளம் ! சுற்றி நிகழும் நிகழ்வுகள், மனிதர்கள் என அனைவரிடமும் ஒருவித யோகம் கண்டேன்; காண்கின்றேன்.
கிராமம் இப்பொழுது கிராமமாக இல்லை என்றும் சிவகாசிக்கும் இந்த கிராமத்திற்கும் இப்பொழுதெல்லாம் சிறிதும் வித்தியாசமே இல்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களைப் பற்றி விசாரித்தேன். பலர். ஓய்வடைந்துவிட்டனராம்.
நான் விளையாடிய அந்த தோப்பு இப்பொழுது இல்லை. அந்தக் கூரைப்பள்ளிக்கூடம் இல்லை, ‘அது ஒரு கனாக்காலம்…’ என்ற தொடரில் வந்த அந்த இடங்கள், நிகழ்வுகள், நண்பர்கள் எல்லாம் இப்பொழுது ஒரு கனவோ என எண்ணத் தோன்றுகின்றது.
அம்மா அப்பா சகோதர சகோதிரிகள் நண்பர்கள் ஆசிரியர்கள் என யாருடனும் வெகுவாக ஈர்ப்போ அல்லது அதிக தொடர்போ என்றுமே இருந்ததில்லை. நாடோடியாக ஓடிக்கொண்டே இருக்கின்றேன். அவ்வப்பொழுது கிடைக்கும் போதி மரங்களின் கீழ் கொஞ்சமே கொஞ்சம் ஞானத் தேடல்.
அந்தப் பையர் என்னுடன் பேசியதில் மிகவும் உற்சாகமாகிவிட்டார்.
நான் எதையாவது கிறுக்க, முன்பின் முகமறியா எத்தனையோ நல்லுள்ளங்கள் இன்னும் என்னை இப்படி நம்பிக்கொண்டிருக்கின்றனரே என மனதினுள் நினைத்துக் கொள்வேன்.
நான் சந்திக்கும் அனைவரும் ஒரே ரயிலில் ஒரே கூபேயில் என்னுடன் பயணிக்கும் சகபயணிகள்தானே? என் நிறுத்தம் வந்தவுடன் இறங்கி இன்னொரு ரயிலைப் பிடித்துப் பயணித்துக்கொண்டே இன்னொரு பயணத்தில் இருக்கின்றேன்.
எழுத்து என்னவெல்லாம் செய்யும் ?
எழுத்து என்னவெல்லாம் செய்யும்….?
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ HOW TO REDUCE WEIGHT....?
http://www.vallamai.com/english/24454/