சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்"என்று வள்ளுவர் எழுதிய
"சமன் செய்து" என்ற சொற்றொடர் சமைத்தல் அதாவது சாப்பிடுவதற்கு சமமானதாக ஆக்குதல் பக்குவப்படுத்தல் என்ற பொருளில் தான் வருகிறது.தராசு தட்டுகளில் ஒன்று வெறும் அரிசி என்றும் இன்னொன்று சோறு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.வேத மொழி ஒலி வடிவில் இருந்ததை வரி வடிவில் சமப்படுத்தி என்பதே இங்கு பொருள்.ஸ்ருதியை சப்தம்(சொல்)ஆக்குவது என்றால் அது ஸ்ருதிசப்தம் என்றே அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.ஒலி சொல் என்ற இரண்டும் ஒரே "சப்தம்" என்று இருப்பதால் சப்தகிருதம் என்று கூட அழைக்கப்பட்டிருக்கலாம்.
சமன் அல்லது சமம் என்பதே நமக்கு "சமயம்"(மதம்)
ஆயிற்று.இது மனப்பக்குவம் அடைவதை விளக்குகிறது.மேலும் சமயம் என்பதற்கு காலம் என்ற சொல்லும் பயன் படுத்துகிறோம்.காலம் ஒரு புள்ளியில் சமன் செய்து கணிக்கப்படுகிறது.தூரத்து விண்மீன் இடனிலையும் பூமியின் இட நிலையும் சமன்செய்து கணிக்கப்படுவதே சமயம் ஆகும்.
சகடம் (பீலி பெய்ச் சாகாடும்..) சங்கு சருகு சமர் (போர்) போன்ற சொற்களும் சங்கத்தமிழில் புழங்கி வந்துள்ளனவே.தொல்காப்பியம் எனும் இலக்கண நூல் தோன்றிய பிறகா எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் வந்திருக்கும்?
கீழே வரும் "பதிற்றுப்பத்து (9 ஆம் பத்து 82 ஆம் பாட்டு)
பாடினோர் : பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்டோ ர் : குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
பகை பெருமையின், தெய்வம் செப்ப,
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்,
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, 5
......
புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை, 15
நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே.
இதில் சமம் என்ற சொல்லே வருகிறது.
இலக்கியம் தோன்றிய பின்னரே அதை முறைப்படுத்த இலக்கணம் வந்திருக்கலாம்.
வடமொழி தமிழ்மொழி மயக்கத்தில் பல சொற்கள் இடம்பெயர்ந்து உள்ளன. இங்கிருந்து (தமிழ்)அங்கு (வடமொழி)போய் மறுபடியும் இங்கு வந்த சொற்கள்
மிக மிக அதிகம்.சான்றாக இலங்கு என்றால் விளங்கு என்று பொருள்.பெரும்பாணாற்றுப்படையில் "இலங்கை" என்ற சொல் (திண்டிவனம் பகுதியை ஒட்டி)அருவி காடு மலை உள்ள இடத்தை குறித்து வருகிறது.இலங்கைத்தீவு வடமொழி வடிவில் "லங்கா" ஆனாது.
சகரக்கிளவிக்கும் வழுவமைதி இருக்கலாம்.
=================================================================ருத்ரா