வள்ளுவர்: சடங்கு, வேதம்

325 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 18, 2016, 11:59:00 PM1/18/16
to vallamai, Megala Ramamourty
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்ற குறளில் வரும் ‘தென்புலத்தார்’ எனும் சொல்லுக்கு முன்னோர் அல்லது வாழ்ந்து மறைந்தோர் எனக்கொண்டு அவர்களை நினைவுகூர்தலை இல்வாழ்வான் கடனாக வள்ளுவர் கூறியுள்ளார் என்ற அளவில் பொருள்கொள்வதே போதுமானது. அதையும் தாண்டி, அவர்களுக்குப் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும், எள்ளும் நீரும் வாரியிறைக்கவேண்டும், வீட்டில் ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டிக் கிடா வெட்டிப் பொங்கல் வைக்கவேண்டும் என்றெல்லாம் அந்தச் சொல்லின் பொருளை நம்மால் இயன்ற அளவு நீட்டிக்கொண்டே போவது டூ மச்!  :-))  

நினைவு கூர்வதே போதுமானது என்பது எப்படி இதற்கான பொருளாக இருக்கமுடியும்? மேலும் இறந்தாரை தென்புலத்தோர் என கூறுவதே பித்ருலோகத்தின் இருப்பிடம் தெந்திசை என்பதையே சுட்டுகிறது."ஓம்பல் தலை" என்றால் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய அறநெறியை தவறாமல் செய்யவேண்டும் என்பதே பொருள். குறளுக்கு உரை எழுதிய முக்கியமான உரை ஆசிரியர்கள் இக்கருத்தையே கூறுகிறார்கள்.

பரிமேலழகர் உரை
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)

******************************************************************
ஞா. தேவநேயப் பாவாணர்
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - இறந்த முன்னோர் வழிபடுதெய்வம் விருந்தினர் ஏழையுறவினர் தன் குடும்பம் என்று சொல்லப்படும்; ஆங்கு ஐம்புலத்து ஆறு ஒம்பல் - அவ் வைந்திடத்தும் செய்யவேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல்; தலை - இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்.

முதற்காலத் தமிழகமாகிய குமரிநாடு பல்வேறு கடல்கோள்களால் மூழ்கிப் போனமையால், அது இருந்த தென்றிசை கூற்றுவன்திசையாகவும் இறந்தோரின் இருப்பிடமாகவும் கொள்ளப்பட்டது. தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாவது, அவர் ஆவி ஆறுதலும் மகிழ்வும் அடைதற்பொருட்டு, அவர் இறந்த நாளில் தெய்வத்திற்குப் படைப்பது போல் அடையாள முறையிற் சில வுண்டிகளை அவர்க்கும் படைத்து, அவர் பெயரால் துறவியர்க்கும் இரப்போர்க்கும் சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல். தெய்வம் என்றது அவரவர் உளநிலைக் கேற்றவாறு சிறுதெய்வமும் பெருந்தேவனும் கடவுளுமாகிய மூவகைத் தேவுகளை. கோயிற்கும் அடியார்க்கும் செய்யும் தானங்களும் தெய்வ வழிபாட்டின் பாற்படும் விருந்து என்றது புதிதாக வரும் மதிப்புள்ள அயலாரை. அவரை வரவேற்றுச் சிறந்த உணவளிப்பது இக்காலத்து வழக்கற்றது. அயலுரினின்று வந்த உறவினர்க்குச் சிறந்த வுணவளிப்பது கைம்மாறு கருதிய கடமையேயன்றி அறமாகாது. தன் என்றது தன்னையுந்தன் குடும்பத்தையும் "உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" (புறம் - 18). "உடம்பாரழியின் உயிரா ரழிவர்" ( திருமந்திரம், 724 ). ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும் "தனக்கு மிஞ்சித் தானம்". ஆதலால், ஒருவன் தன் குடும்பத்தைக் கவனியாது பிறரைப் பேணுதலும் அறமாகாது.

இங்குக் குறிக்கப்பட்ட ஐந்திட வினைகளும் அறவினையாகவே ஆறாவது இடமாகிய அரசிற்குச் செலுத்தவேண்டிய வரி கட்டாய வினையாகிய கடமையாயிற்று. ஆறிலொரு கடமையிறுத்தல் என்னும் பண்டை வழக்கும், உழவனையே இல்லறத்தாருட் சிறந்தவனாகக் காட்டும். பிறதொழிலார் எல்லாரும் பெரும்பாலும் குறிப்பிட்ட சிறுதொகைப் பணத்தையே வரியாகச் செலுத்திவந்தனர்.

"பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்".

என்று திருவள்ளுவரும்,

"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்".

(சிலப். 10: 149.150)
என்று இளங்கோவடிகளும், கூறுதல் காண்க.

******************************************************************

விருந்தினர்க்கு உணவு படைத்தலால் வரும் பயன் இவ்வளவினது என்று குறிப்பிட்டுச்சொல்ல இயலாது; அது அந்த விருந்தினரின் தன்மைக்குத் தக்க அளவில் அமையும் என்பது இதன் பொருள். இங்கே வேள்வி என்பது யாகத்தைக்குறிக்கவில்லை; விருப்பத்தைக் குறிக்கிறது. 

இங்கேயும் பல உரையாசிரியர்களுடன் முரண்படுகிறீர்கள் :-)

குறளில் குறிக்கப்படும் திருமால் இலக்குமி யாருமே நான்மறை போற்றும் கடவுளர் அல்லர். வேதங்கள் துதிப்பது தேவர் தலைவனான இந்திரன், பிரஜாபதி, வருணன், அக்னி போன்றோரையே. அங்கே திருமால் சிவன், இலக்குமி யாரும் முதன்மைப்படுத்தப்படவில்லை. இவர்களெல்லாம் வேதத்திற்கு வெகுகாலத்திற்குப் பின் தோன்றிய புராணங்கள் போற்றிய கடவுளர் ஆவர். எனவே இவர்களைத் திருக்குறள் குறிப்பிடுவதால் அது வேதச்சார்புடையது என்று கருதுவதும் மிகத்தவறு. 

ரிக் வேதத்திலேயே விஷ்ணு,. இலக்குமி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர்கள் ஆதியில் வேத கடவுளரா, தமிழில் இருந்து அங்கே போனார்கள என வேண்டுமானால் விவாதிக்கலாமே ஒழிய வேதத்தில் அவர்கள் குறிப்பிடபடுகிரார்கள் என்பது உலகறிந்த உண்மை

திருக்குறள், வேதத்தைப் போற்றும் நூல், அதன் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் நூலென்றால் அது இந்திரனையும் அவனையொத்த தேவர்களையும்தான் வானளாவப் போற்றியிருக்கவேண்டும். குறள் அவ்வாறு செய்கிறதா? இல்லையே!

மாறாக, வள்ளுவர் இந்திரனின் ஒழுக்கக்கேட்டை வன்மையாகக் கண்டிக்கின்றார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி.

இந்திரனின் ஒழுக்ககேடு பல புராணங்களிலும், ராமாயணத்திலும் விரிவாக எடுத்துரைக்காப்ட்டு அவன் சாபம் பெற்ற வரலாறு கூறபடுகிறது. முனிவர்களின் தவத்தை இந்திரன் ரம்பை, மேனகையை அனுப்பி கெடுக்கும் கதை பல புராணங்கள், காமிக்ஸ்கள், சினிமாக்களில் கூட உள்ளது. குறளிலும் உள்ளது. 

இன்னொரு இடத்தில், வேதங்கள் உச்சிமேல் வைத்துக்கொண்டாடும் தேவர்கள் அனைவரையும் ‘கயவர்’ என்று விளிக்கிறார்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய் தொழுகலான்.

தவறான பொருள்..தேவர்களை கயவர்கள் என இக்குறளில் கூறவில்லை. இது தவறான பொருள்.

கயவர்கள் தேவர்களை பொன்றவர்கள். ஏனெனில் தேவர்களை போல அவர்களும் தாம் மனம் விரும்புவதை செய்து வருகிறார்கள் என அங்கதம் செய்கிறார் வள்ளுவர். 

தேவர் அனையர் கயவர் என்பதற்கும்

கயவர் அனையர் தேவர் என்பதற்கும் இடையே உள்ல வித்தியாசம் உங்களுக்கு நிச்சயமாக தெரியும் என நம்புகிறேன் :-)

இதற்குமேலும், திருக்குறள் நான்மறையின் தமிழ்வடிவம், திருவள்ளுவர் சடங்குகள் வேள்விகள் முதலியவற்றை ஆதரிப்பவர்,  பித்ரு தர்ப்பணம் செய்யச்சொல்லிருக்கிறார் என்றெல்லாம் நாம் (விதண்டா)வாதம் செய்வோமானால் வள்ளுவத்தை நாம் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்றே பொருளாகும்.  :-)

திருக்குறள் நான்மறையின் தமிழ் வடிவம் அல்ல.

அது ஒரு நீதிநூல் மற்றும் வாழ்வியல் நூல். அதன் அறங்கள் பலவும் தமிழ் மண் சார்ந்தவை. அதே சமயம் அதில் உள்ல சடங்குகள், சாத்திரங்கள், ஆன்மிக கருத்து போன்ரவை வேதம், ஸ்மிரிதியில் சொல்லபடுபவை. வள்ளுவரே வேதம், வேள்விகள், ஆகியவற்றை பின்பற்ற சொல்லி குறளில் கூறியுள்ல நிலையில் அதை இல்லை என்பது எப்படி என எனக்கு புரியவில்லை

Megala Ramamourty

unread,
Jan 19, 2016, 9:48:46 PM1/19/16
to செல்வன், vallamai
தனியிழை தொடங்கியதற்கு நன்றி செல்வன்!  :-)

//இறந்தாரை தென்புலத்தோர் என கூறுவதே பித்ருலோகத்தின் இருப்பிடம் தெந்திசை என்பதையே சுட்டுகிறது."ஓம்பல் தலை" என்றால் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய அறநெறியை தவறாமல் செய்யவேண்டும் என்பதே பொருள்.//

செல்வன்,

ஓம்புதல்/ஓம்பல் என்பதற்குப் ’போற்றுதல்’ என்ற பொருளும் உண்டல்லவா? அந்த அடிப்படையில் இறந்தவர்களை/முன்னோர்களை நினைவுகூர்ந்து போற்றுதலும் ’ஓம்பல்’தானே?   
 
திருக்குறள் தோன்றிப் பல நூற்றாண்டுகள் கழிந்தபின், வைதீக சமயத்தின் செல்வாக்கு தமிழகத்தில் ஓங்கியிருந்த காலத்தில் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) வாழ்ந்தவரும், திருக்குறளின் தலையாய உரையாசிரியர் (Supreme Commentator of Thirukkural) என்று போற்றப்படுபவருமான பரிமேலழகர், திருக்குறளுக்கு மிகச்சிறந்த உரைவரைந்திருக்கிறார் என்பதை எவருமே மறுக்கமுடியாது. அவர் தமிழறிஞர் மட்டுமன்று; வடமொழியிலும் பெரும் வல்லுநர். அதனால், திருக்குறளில் சிலஇடங்களில் வடஆரியச் சம்பிரதாயங்கள், சடங்குகள் முதலியவற்றைத் தன் உரைவிளக்கத்தில் புகுத்தியிருக்கின்றார். அதுபோன்ற இடங்களில் இதுவும் ஒன்று என்பதையே “தென்புலத்தார் என்பார் பித்ருலோகத்தார்; அவர்கள் அயனால் படைக்கப்பட்ட கடவுட்சாதியார்", என்றெல்லாம் உரைத்திருப்பது உணர்த்துகிறது.  தர்ப்பணம் செய்வதெல்லாம் தமிழ் மரபே அன்று; ஆரியவழக்கத்தால் நம்மிடம் ஏற்பட்ட புதிய பழக்கங்களே அவை!

திருவள்ளுவரோ,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற எனும் எண்ணம் கொண்டவர். ஆதலால், ஆரவாரம் மிகுந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அவர் ஆதரித்திருக்க வாய்ப்பேயில்லை. சடங்குகள் மட்டுமல்லாது, மழித்தல் நீட்டல் போன்ற வெளிவேடங்களையும் வெறுத்து, உலகம் பழிப்பதைச் செய்யாமல் ஒழியுங்கள் போதும்; வேறு ஒன்றும் நீங்கள் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அப்படிப்பட்டவர், முன்னோர்களைத் தூயநெஞ்சோடு நினைவுகூர்ந்து போற்றுவதை ’மனத்துக்கண் மாசில்லாத அறச்செயல்’ என்று  நிச்சயம் ஒத்துக்கொள்வார்.  :-)

இதனை உணர்ந்தே கலைஞர் கருணாநிதி அவர்கள் தன் உரையில்,

”வாழ்ந்து  மறைந்தோரை  நினைவுகூர்தல், வாழ்வாங்கு  வாழ்வோரைப்
போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம்பேணல் ஆகிய கடமைகளை
நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக் குரியனவாம் என்று ’சிம்பிளாக’க் குறிப்பிட்டுவிட்டார்.” 

இவ்விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. :-)

***

//தேவர் அனையர் கயவர் என்பதற்கும்
கயவர் அனையர் தேவர் என்பதற்கும் இடையே உள்ல வித்தியாசம் உங்களுக்கு நிச்சயமாக தெரியும் என நம்புகிறேன் :-)//

பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை செல்வன். இரண்டுபேருமே அயோக்கியர்கள்; மனம்போனபடி ஒழுக்கமின்றித் திரிபவர்கள் என்றுதான் (சொல்லை எப்படி மாற்றிப்போட்டாலும்) பொருள் வருகிறது. I guess, that' what the couplet intended to say here!     :-))

***

’விருந்தோம்பல்’ அதிகாரத்தில் வரும் ’வேள்வி’  எனும் சொல்லுக்கு உரையாசிரியர்களோடு முரண்பட்டு நான் விளக்கம் தந்துள்ளேன் எனும் தங்கள் கூற்று ஆதாரமற்றது.

விருந்தோம்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள வேள்வி என்ற சொல் விருப்பத்தோடு விருந்தினரை உபசரித்தல் என்ற பொருளிலேயே அனைத்து உரையாசிரியர்களாலும் எடுத்தாளப்பட்டுள்ளது. இதில் எனக்கு உரையாசிரியர்கள் அனைவரோடும் முழு உடன்பாடே! No controversies indeed!  :-)

செல்வனாரை ’யாகம்’ என்று பொருள்கொள்ளவைத்த  ’வேள்வி’ எனும் சொல் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் விரிவான விளக்கமளிக்கிறார் கீழே... படியுங்கள்!

வேள்வி என்னும் தூய தென்சொல்லாகிய தொழிலாகுபெயர் (ம, தெ. வேள்வி; க. பேளுவெ) விரும்பு என்று பொருள்படும் வேள் என்னும் முதனிலையடிப் பிறந்து, பின்வருமாறு, விரும்பிச் செய்யும் பல்வேறு வினைகளைக் குறிக்கும்.

1. திருமணம் "நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127).

2. விருந்தினர்க்குப் படைப்பு. வேள்வி தலைப்படாதார் (குறள். 88).

3. தெய்வத்திற்குப் படைப்பு, பூசனை ( பிங் ) வேள்வியி னழகியல் விளம்புவோரும் (பரிபா. 19 : 43).

4. பேய்கட்குப் படைப்பு, களவேள்வி, "பண்ணிதைஇய பயங்கெழு வேள்வியின்" ( அகம். 13: 11)

5. கொடை (பிங்.).

ஆரியர் தம் ஆரியக் கொள்கைகளைத் தமிழ்நாட்டிற் பரப்புதற்கும் 'யாகம்' என்னும் கொலை வேள்வியைத் தமிழரிடை எதிர்ப்பின்றிச் செய்தற்கும், தம் கொலை வேள்விக்குக் கடவுள் வேள்வி யென்றும் வேதக்கல்விக்குப் பிரம வேள்வியென்றும் பெயரிட்டு அவற்றொடு பேய்ப்படையலாகிய பூதவேள்வியையும் விருந்தோம்பலாகிய மாந்தன் வேள்வியையும் இறந்த முன்னோர்க்குப் படைத்தலாகிய தென்புலத்தார் வேள்வியையுஞ் சேர்த்து, ஐவகை வேள்வி யென்று தொகுத்துக்கூறி, வேள்வியென்று வருமிடமெல்லாம் ஆரிய வேள்வியை நினைக்குமாறு செய்துவிட்டனர் என்கிறார் பாவாணர்.

எனவே, வேள்வி என்ற சொல்... திருமணம், விருந்தோம்பல், தெய்வத்திற்குப் படைத்தல், பேய்கட்குப் படைத்தல், பிறருக்குக் கொடுக்கும் ’கொடை’ எனும் பல வினைகளைக்குறிக்கும் ஒருசொல்லாக அன்று இருந்திருக்கிறது. அதன் விரிந்த எல்லையை ‘யாகம்’ என்று மட்டும் நம்மைச் சுருக்கிப் பொருள்கொள்ளவைத்தது ஆரிய மாயையே!   :-)

***

//ரிக் வேதத்திலேயே விஷ்ணு,. இலக்குமி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர்கள் ஆதியில் வேத கடவுளரா, தமிழில் இருந்து அங்கே போனார்கள என வேண்டுமானால் விவாதிக்கலாமே ஒழிய வேதத்தில் அவர்கள் குறிப்பிடபடுகிரார்கள் என்பது உலகறிந்த உண்மை//

ரிக் வேதத்தில் (நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல்) தேவர் தலைவனான இந்திரன், பிரஜைகளின் தலைவனான பிரஜாபதி, அங்கியக்கடவுள், மழைக்குரிய வருணன் போன்ற தேவர்களே பிரதானமாகத் துதிக்கப்பட்டவர்கள்; அவர்களை நோக்கித்தான் வேதங்கள் யாகமியற்றின; பலியிட்டன; விரும்பிய பலனைக் கேட்டன. 

விஷ்ணு இலக்குமி போன்றோரையெல்லாம் புராணங்களும், செல்வனும் கொண்டாடுகின்ற அளவிற்கு வேதங்கள் கொண்டாடவில்லை என்றுதான் எனக்கு வேதமறிந்த சிலர் சொன்னார்கள். வேதத்தில் கரைகண்டவர்கள் இதுகுறித்து மேலதிகத் தகவலளித்தால் தெளிவு கிடைக்கும்!   :-))

***

//வள்ளுவரே வேதம், வேள்விகள், ஆகியவற்றை பின்பற்ற சொல்லி குறளில் கூறியுள்ல நிலையில் அதை இல்லை என்பது எப்படி என எனக்கு புரியவில்லை//

இப்பதிவிலேயே 'வேள்வி' என்பதன் உண்மைப்பொருளை பாவாணர் வழிநின்று விளக்கிவிட்டேன். விருந்தோம்பல் அதிகாரத்தில் அது முழுக்க முழுக்க மக்கள் ’விருப்பத்தோடு செய்யும் செயல்’ எனும் பொருளிலேயே வருகிறது என்பதையும் தெளிவுபடுத்திவிட்டேன்.  :-)

திருக்குறளில் வேள்வி குறித்துப் பேசும் மற்றொரு குறள், ’புலால் மறுத்தல்’ அதிகாரத்தில் வரும்  ”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்...” எனும் குறளாகும். அதில் திருவள்ளுவர் மக்களைப்பார்த்து, ”நெய் வார்த்து வேள்வி செய்வது ஏராளமான நன்மைகளைத்தரும் என்ற எண்ணம்கொண்ட மக்களே! அதைவிட அதிக நன்மையும் புண்ணியமும் தருகின்ற செயல் ஒன்றை நான் சொல்கிறேன் செய்வீர்களா?” என்று வினவி, ”ஆயிரம் யாகங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களோ... அதைவிட அதிகப்பலன் ஒரே ஒரு உயிரினை நீங்கள் கொன்று தின்னாமல் இருப்பதால் கிடைக்கும்!” என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

இவரைப்போய்... யாகவேள்விகளை வேட்பவர் (விரும்புபவர்), சடங்குகளை ஆதரிப்பவர் என்று முத்திரை குத்துவது... தகுமோ? இது முறையோ? இது தருமம்தானோ?   :-))

அன்புடன்,
மேகலா

செல்வன்

unread,
Jan 19, 2016, 11:14:48 PM1/19/16
to Megala Ramamourty, vallamai
2016-01-19 20:48 GMT-06:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
தனியிழை தொடங்கியதற்கு நன்றி செல்வன்!  :-)

//இறந்தாரை தென்புலத்தோர் என கூறுவதே பித்ருலோகத்தின் இருப்பிடம் தெந்திசை என்பதையே சுட்டுகிறது."ஓம்பல் தலை" என்றால் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய அறநெறியை தவறாமல் செய்யவேண்டும் என்பதே பொருள்.//

செல்வன்,

ஓம்புதல்/ஓம்பல் என்பதற்குப் ’போற்றுதல்’ என்ற பொருளும் உண்டல்லவா? அந்த அடிப்படையில் இறந்தவர்களை/முன்னோர்களை நினைவுகூர்ந்து போற்றுதலும் ’ஓம்பல்’தானே?   

அதுதான் பொருள் எனில் முன்னோர் என்றே சொல்லியிருக்கலாமே? தென்புலத்தார் என சொல்லகாரணம் என்ன? முன்னோர் அனைவரும் தென் திசையில் உள்ள பிதுருலோகத்தில் வசிக்கிரார்கள் என வள்ளூவர் கருதியதையே இது சுட்டுகிறது. 

மேலும் புறநானூற்றில் நெட்டிமையார் பாடலை காண்க. குறளில் இருப்பது போலவே தென்புலத்தாரான முன்னோருக்கு ஈமகடன் செய்வது பிள்ளைகளின் கடமை என வலியுறுத்துகிறார்

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் 
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் 
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் 
பொன்போற் புதல்வர்ப்
பெறாஅ தீரும் 
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்......

தென்புலம் வாழும் பித்ருக்கள் என இறந்தவர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு ஈமக்கடன் செய்வது புதல்வரின் கடமை என நெட்டிமையார் தெளிவாக கூறுகிறார். குறளும் அதே போன்ற கருத்தையே கூறுகிறது. 
 
திருக்குறள் தோன்றிப் பல நூற்றாண்டுகள் கழிந்தபின், வைதீக சமயத்தின் செல்வாக்கு தமிழகத்தில் ஓங்கியிருந்த காலத்தில் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) வாழ்ந்தவரும், திருக்குறளின் தலையாய உரையாசிரியர் (Supreme Commentator of Thirukkural) என்று போற்றப்படுபவருமான பரிமேலழகர், திருக்குறளுக்கு மிகச்சிறந்த உரைவரைந்திருக்கிறார் என்பதை எவருமே மறுக்கமுடியாது. அவர் தமிழறிஞர் மட்டுமன்று; வடமொழியிலும் பெரும் வல்லுநர். அதனால், திருக்குறளில் சிலஇடங்களில் வடஆரியச் சம்பிரதாயங்கள், சடங்குகள் முதலியவற்றைத் தன் உரைவிளக்கத்தில் புகுத்தியிருக்கின்றார். அதுபோன்ற இடங்களில் இதுவும் ஒன்று என்பதையே “தென்புலத்தார் என்பார் பித்ருலோகத்தார்; அவர்கள் அயனால் படைக்கப்பட்ட கடவுட்சாதியார்", என்றெல்லாம் உரைத்திருப்பது உணர்த்துகிறது.  தர்ப்பணம் செய்வதெல்லாம் தமிழ் மரபே அன்று; ஆரியவழக்கத்தால் நம்மிடம் ஏற்பட்ட புதிய பழக்கங்களே அவை!

ஈமக்கடன் செய்வதை எல்லாம் இன்னொரு இனத்தார் தான் நமக்கு கற்றுகொடுத்தார்கள் என்பது வேடிக்கையானது. ஏன் தமிழனுக்கு ஈமக்கடன் செய்வதெல்லாம் ஆரியர் இல்லையெனில் தெரிந்திருக்காதா?

தொல்காப்பியம் முதலான எந்த சங்க இலக்கிய நூல்களை எடுத்தாலும் அதில் பிரமணர், வேதம், யாகம், எல்லாமே இருக்கிறது. அதற்கு முந்தைய நூல்கள் எதுவும் நமமிடம் இல்லை. ஆக தொல்காப்பியம், குறள், புறநானூறு, அகநானூறில் "தமிழர் பகுதி, ஆரியர் பகுதி" என பிரித்து பார்ப்பது பலனற்ற முயற்சி

திருவள்ளுவரோ,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற எனும் எண்ணம் கொண்டவர். ஆதலால், ஆரவாரம் மிகுந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அவர் ஆதரித்திருக்க வாய்ப்பேயில்லை. சடங்குகள் மட்டுமல்லாது, மழித்தல் நீட்டல் போன்ற வெளிவேடங்களையும் வெறுத்து, உலகம் பழிப்பதைச் செய்யாமல் ஒழியுங்கள் போதும்; வேறு ஒன்றும் நீங்கள் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அப்படிப்பட்டவர், முன்னோர்களைத் தூயநெஞ்சோடு நினைவுகூர்ந்து போற்றுவதை ’மனத்துக்கண் மாசில்லாத அறச்செயல்’ என்று  நிச்சயம் ஒத்துக்கொள்வார்.  :-)

முன்னோர்களை போற்றுவதை யார் வேண்டாம் என்பார்கள்? ஆனால் அவர்களுக்கு செய்யவேண்டிய திதி, சிரார்த்தம், சடங்கு எல்லாம் செய்வதை செய்தே ஆகவேண்டும் என்பதாலேயே தென்புலத்தார் என பித்ருலோகத்தை நினைவுறுத்தும் வகையில் எழுதினார்.சடங்குகள் வேண்டாம், சம்பிரதாயம் வேண்டாம் என எந்த குறளில் வள்ளுவர் கூறியிருக்கிறார்? சொல்லியிருந்தால் எடுத்து காட்டுக :-)

இதனை உணர்ந்தே கலைஞர் கருணாநிதி அவர்கள் தன் உரையில்,

”வாழ்ந்து  மறைந்தோரை  நினைவுகூர்தல், வாழ்வாங்கு  வாழ்வோரைப்
போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம்பேணல் ஆகிய கடமைகளை
நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக் குரியனவாம் என்று ’சிம்பிளாக’க் குறிப்பிட்டுவிட்டார்.” 

இவ்விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. :-)

பல குறள்களுக்கு சரியான பொருளை அவர் கூறவில்லை. அதில் இதுவும் ஒன்று

***

//தேவர் அனையர் கயவர் என்பதற்கும்
கயவர் அனையர் தேவர் என்பதற்கும் இடையே உள்ல வித்தியாசம் உங்களுக்கு நிச்சயமாக தெரியும் என நம்புகிறேன் :-)//

பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை செல்வன். இரண்டுபேருமே அயோக்கியர்கள்; மனம்போனபடி ஒழுக்கமின்றித் திரிபவர்கள் என்றுதான் (சொல்லை எப்படி மாற்றிப்போட்டாலும்) பொருள் வருகிறது. I guess, that' what the couplet intended to say here!     :-))

தேவர்கள் மனம்போன போக்கில் நடந்து சாபம் பெற்ற கதை புராணங்களில் நிறைய உள்ளது. அவர்கள் நல்லதும் செய்வார்கள், கெட்டதும் செய்வார்கள். புராண, இதிகாசங்களில் உதாரணங்கள் ஏராளம்.

இதே வள்ளுவர் இன்னொரு குறளில் தேவர்களை என்னவென சொல்கிரார் என காண்க
 
செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் 
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

(அதிகாரம்:கேள்வி குறள் எண்:413

பொழிப்பு: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர். 

மணக்குடவர் உரை: செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.

பரிமேலழகர் உரை: செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.
(செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: செவியுணவாகிய கேள்வியுடையவர் இவ்வுலகத்தவராயினும் அவியுணவினைக் கொள்ளும் தேவரோடு ஒப்பர்.

தேவர்களை வெறுக்கும் ஒருவர் ஏன் அவர்களை "அவியுணவின் ஆன்றோர்" என அழைக்கிறார்?

ரிக் வேதத்தில் (நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல்) தேவர் தலைவனான இந்திரன், பிரஜைகளின் தலைவனான பிரஜாபதி, அங்கியக்கடவுள், மழைக்குரிய வருணன் போன்ற தேவர்களே பிரதானமாகத் துதிக்கப்பட்டவர்கள்; அவர்களை நோக்கித்தான் வேதங்கள் யாகமியற்றின; பலியிட்டன; விரும்பிய பலனைக் கேட்டன. 

விஷ்ணு இலக்குமி போன்றோரையெல்லாம் புராணங்களும், செல்வனும் கொண்டாடுகின்ற அளவிற்கு வேதங்கள் கொண்டாடவில்லை என்றுதான் எனக்கு வேதமறிந்த சிலர் சொன்னார்கள். வேதத்தில் கரைகண்டவர்கள் இதுகுறித்து மேலதிகத் தகவலளித்தால் தெளிவு கிடைக்கும்!   :-))

ஆக உங்களுக்கே தெளிவாக தெரியாத தகவலை சொல்லிகொண்டிருக்கிறீர்கள் :-) தெளிவாக தெரிந்த விசயத்தை சொன்னால் தானே அதை ஆமோதிக்கவோ, மறுக்கவோ முடியும்?

அதனால் விஷ்ணு, இலக்குமி எல்லாரும் வேதங்களில் போற்றபடும் தெய்வங்களா இல்லையா என்பதை பற்றி உறுதியாக தெரிந்தபின் கருத்து சொன்னால் அதை ஆதரிக்கவோ, மறுக்கவோ செய்யலாம் :-)

***

//வள்ளுவரே வேதம், வேள்விகள், ஆகியவற்றை பின்பற்ற சொல்லி குறளில் கூறியுள்ல நிலையில் அதை இல்லை என்பது எப்படி என எனக்கு புரியவில்லை//

இப்பதிவிலேயே 'வேள்வி' என்பதன் உண்மைப்பொருளை பாவாணர் வழிநின்று விளக்கிவிட்டேன். விருந்தோம்பல் அதிகாரத்தில் அது முழுக்க முழுக்க மக்கள் ’விருப்பத்தோடு செய்யும் செயல்’ எனும் பொருளிலேயே வருகிறது என்பதையும் தெளிவுபடுத்திவிட்டேன்.  :-)

திருக்குறளில் வேள்வி குறித்துப் பேசும் மற்றொரு குறள், ’புலால் மறுத்தல்’ அதிகாரத்தில் வரும்  ”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்...” எனும் குறளாகும். அதில் திருவள்ளுவர் மக்களைப்பார்த்து, ”நெய் வார்த்து வேள்வி செய்வது ஏராளமான நன்மைகளைத்தரும் என்ற எண்ணம்கொண்ட மக்களே! அதைவிட அதிக நன்மையும் புண்ணியமும் தருகின்ற செயல் ஒன்றை நான் சொல்கிறேன் செய்வீர்களா?” என்று வினவி, ”ஆயிரம் யாகங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களோ... அதைவிட அதிகப்பலன் ஒரே ஒரு உயிரினை நீங்கள் கொன்று தின்னாமல் இருப்பதால் கிடைக்கும்!” என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

சரி..இதனால் ஒரு உயிரை கொன்று உண்ணாமல் இருப்பது மேலானது என வள்ளுவர் கருதுகிறார் என்பதுதான் விளங்குகிரதே ஒழிய வேள்விகளை அவர் வெறுத்தார் என்பது எப்படி பொருளாகிறது என புரியவில்லை.

குகன் பரதனை பார்த்து கீழ்க்கண்டவாறு கம்பராமாயணத்தில் கூறுகிரான்

"..ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியன் அம்மா!’.."

ஆயிரம் ராமர் உனக்கு நிகராவாரோ, எனக்கு தெரியவில்லை என குகன் கூறுவதால் குகனுக்கு ராமனை கண்டாலே பிடிக்காது, ராமன் மோசமானவன் என பொருளாகுமா?

இவரைப்போய்... யாகவேள்விகளை வேட்பவர் (விரும்புபவர்), சடங்குகளை ஆதரிப்பவர் என்று முத்திரை குத்துவது... தகுமோ? இது முறையோ? இது தருமம்தானோ?   :-))

அன்புடன்,
மேகலா

அவியுணவின் ஆன்றோர் எனும் குறளிலேயே யாகத்தில் வழங்கபடும் அவியுணவை வள்ளுவர் சிறப்பிக்கிறார் அல்லவா? யாகத்தை, சடங்கை நம்பாதவர் அதில் கொடுக்கபடும் அவியுனவை உண்ணும் தேவரை ஏன் சான்றோர் என போற்றுகிறார்?

--

வேந்தன் அரசு

unread,
Jan 20, 2016, 8:52:48 PM1/20/16
to vallamai, Megala Ramamourty
>>ஈமக்கடன் செய்வதை எல்லாம் இன்னொரு இனத்தார் தான் நமக்கு கற்றுகொடுத்தார்கள் என்பது வேடிக்கையானது. ஏன் தமிழனுக்கு ஈமக்கடன் செய்வதெல்லாம் ஆரியர் இல்லையெனில் தெரிந்திருக்காதா?

அவங்க மந்திரம் மட்டும் இயற்றிஇருப்பார்கள்.

நடுகல் அன்றி, நெல் உகுத்து பரவும் கடவுளும் இல்லை”

நெல் உகுத்தல் சடங்குதானே.

விருப்பத்துடன் செய்வதே வேள்வி.

நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம்
மனைவரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட”

19 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:14 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Jan 20, 2016, 9:22:56 PM1/20/16
to vallamai, Megala Ramamourty

2016-01-20 19:52 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அவங்க மந்திரம் மட்டும் இயற்றிஇருப்பார்கள்.

நடுகல் அன்றி, நெல் உகுத்து பரவும் கடவுளும் இல்லை”

நெல் உகுத்தல் சடங்குதானே.

இப்படி பாடல் வரிகள் இருப்பதால் "நெல் உகுத்து பரப்பி வணங்கும் வழக்கம் இருந்ததாகதானே" தெரியவருகிறது?

இல்லாத வழக்கை ஏன் பாடலில் எழுதி கண்டிக்கிறார்கள்?

கள்ளுண்டவர்கள் நிறைய இருந்ததால் தானே வள்ளுவர் கள்ளுண்ணமை அதிகாரத்தை எழுதினார்?

--

வேந்தன் அரசு

unread,
Jan 20, 2016, 9:31:32 PM1/20/16
to vallamai, Megala Ramamourty

20 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:22 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

2016-01-20 19:52 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அவங்க மந்திரம் மட்டும் இயற்றிஇருப்பார்கள்.

நடுகல் அன்றி, நெல் உகுத்து பரவும் கடவுளும் இல்லை”

நெல் உகுத்தல் சடங்குதானே.

இப்படி பாடல் வரிகள் இருப்பதால் "நெல் உகுத்து பரப்பி வணங்கும் வழக்கம் இருந்ததாகதானே" தெரியவருகிறது?

ஆம். ஆனால் வடமொழி மந்திரம் சொல்லியிருப்பாரா? 

இல்லாத வழக்கை ஏன் பாடலில் எழுதி கண்டிக்கிறார்கள்?

கள்ளுண்டவர்கள் நிறைய இருந்ததால் தானே வள்ளுவர் கள்ளுண்ணமை அதிகாரத்தை எழுதினார்?

--

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 21, 2016, 2:20:10 AM1/21/16
to வல்லமை, megala.r...@gmail.com, mintamil

On Wednesday, January 20, 2016 at 6:31:32 PM UTC-8, வேந்தன் அரசு wrote:

20 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:22 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

2016-01-20 19:52 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அவங்க மந்திரம் மட்டும் இயற்றிஇருப்பார்கள்.

நடுகல் அன்றி, நெல் உகுத்து பரவும் கடவுளும் இல்லை”

நெல் உகுத்தல் சடங்குதானே.

இப்படி பாடல் வரிகள் இருப்பதால் "நெல் உகுத்து பரப்பி வணங்கும் வழக்கம் இருந்ததாகதானே" தெரியவருகிறது?

ஆம். ஆனால் வடமொழி மந்திரம் சொல்லியிருப்பாரா? 

பல நடுகற்கள் நடும்போது வடமொழி மந்திரம் இருந்திருக்காது. ஆனால், மன்னர்கள் போன்றவர்களுக்கு
வடமொழி மந்திரம் இருந்திருக்கும். சங்ககால ஈமச் சின்னங்களை தோண்டி எடுக்கும் போது கிடைக்கும்
பிராமி எழுத்துக்களில் வடசொற்கள், வடமொழிப் பெயர்கள் உள்ளன. குதிரை, வேளிர், இரும்பு, நெல்
நாகரீகம் எல்லாம் வடக்கே இருந்து தென்னகம் பரவுகின்ர ஒன்று என தொல்லியல் காட்டுகிறது.
பின்னர், வேதம், சமணம், பௌத்தம் பரவலும். தொல்காப்பியத்தின் இந்திரன், வருணன், ... 

தென்புலத்தார் என்பது தலையை வடக்கே பார்த்து வைக்கப்படும் பிணங்கள். அதனால் தான்
வடக்கே தலைவைக்காதே, உட்கார்ந்து உணவுண்ணாதே என்ற நடைமுறை.
ஈமச் சின்னங்களின் அருகே தெற்குப் பார்த்து நிற்கும் பெரிய விடங்கர்,
”மழுவாள் நெடியோனாய்” (மதுரைக் காஞ்சி) பல உள்ளன. முதலில் விடங்கர் என்னும் வருணன்.
பின் இறப்புக்குக் கடவுளான சுடலையாடி சிவனாக.

இந்தியாவின் மிகப் பழய சமயம் சமணசமயம் என இந்திய அறிஞர் கூறுவர். 
சவங்கள் (< சாவு < சா(ய்)வு. சவம் வடமொழியில் உள்ள தமிழ்வார்த்தை என்பர் வடமொழிப்பேராசிரியர்கள்,
உ-ம்: மைக் விட்சல். சிந்துவெளியிலே கூட சவங்கள் வடக்குப் பார்த்து வைத்துப் புதைத்தனர்
என்பதை தொல்லியல் அகழ்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதே சமயம் மழுவாள் நெடியோன்
எனப்படும் Anthropomorphic Axe பெருங்கற்காலப் பெருஞ்சிற்பம்  தெற்கே பார்த்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் பிதிரர்க்கு தென்புலத்தார் எனப் பெயருண்டு.

இதனால், தென்திசை யமதிசை என பண்டைக் காலத்தில் இந்தியர்கள் எண்ணினார்கள்.
ரத்னேஷ் 2008-ல் அ. கி. பரந்தாமனார் கட்டுரை தட்டச்சினார். அப்போதும் பேசினோம்,
” தமிழர்கள் வடதிசையைப் புண்ணிய திசையாகவும், தென்திசையைத் தீய யம திசையாகவும் கருதினார்கள்.

கீழ்வரும் நாலடியார்ச் செய்யுளைக் காண்க:

‘எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்குஆகா
தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்’

“தென்னாட்டவர் கூட முயற்சி செய்தால் சுவர்க்கம் போக முடிகிறது; வடநாட்டவராயிருந்தும் முயற்சி செய்யாமல் அதனை இழப்பவரும் இருக்கிறார்களே” என்கிற பொருளின் அடிப்படை அளவுகோலைப் பாருங்கள். “ (பேரா. அ.கி.ப.)

மழுவாள் நெடியோன் வழிபாட்டை ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வாக்கில் கொண்டுசென்றுள்ளது.
வடக்கிருத்தல் சமணர்கள் 2000, 2500 வருடமாய்ச் செய்துவருகின்றனர். சுப்ரீம் கோர்ர்ட்டில்
சதி தடை செய்யப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவில் கூட சல்லேகனைக்குத் தடையில்லை எனக் கூறியுள்ளனர்.

தென்புலத்தார்க்கு தென்முகமாக நிறுத்தப்படும் “மழுவாள் நெடியோன்”
- தென்னிந்தியாவின் முதல் கற்சிற்பம் - 10-15 அடி உயரத்தில்: சில மாதிரிகள்.

நா. கணேசன்

Megala Ramamourty

unread,
Jan 22, 2016, 9:20:40 AM1/22/16
to செல்வன், vallamai
தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் ’தென்திசையைச் சேர்ந்தவர்கள்/வாழ்பவர்கள் என்பது. அது தென்புல வாழ்நரான பித்ருக்களைக் குறிக்குமென்று அறிஞர் சிலரும், தென்திசைக்கண் இருந்து கடல்கோளால் அழிந்த குமரிக்கண்டத்தைச் சார்ந்தவர்களைக் குறிக்கும் என்று பாவாணர் போன்ற அறிஞர் பெருமக்களும் கூறுகின்றனர். அதைத்தாண்டி அந்த சொல்லுக்கு வேறுபொருள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.   :-)

//குமரிக்கண்டம் அறிவியலுக்கு முரண்பட்ட கருத்து.//

அப்படி ஒரேயடியாக மறுத்துவிடுவதற்கில்லை. நீங்கள் எடுத்துக்காட்டியிருந்த நெட்டிமையாரின், ஆவும் ஆனியற் பார்ப்பான மாக்களும்’ எனும் அதே பாடல் குமரிக்கண்டத்தில் பாய்ந்த பஃறுளி ஆறு குறித்துப் பேசுவதைக் காண்க. 

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நும்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!  (புறம்: 9)

சிலப்பதிகாரமும் இதே செய்தியை உறுதிப்படுத்துகின்றது.

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி  (சிலப். 11:17-22)

”தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் எனும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க” என்றொரு விரிவான விளக்கம் தந்து குமரிக்கண்டம் எனும் பகுதி இருந்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்துகிறார். 

குமரிக்கண்டம் இருந்ததற்கான ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக விளக்கும் பதிவொன்றையும் உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன்.

குமரிக்கண்டம் உண்மையா?

***

//இப்படி 2000 ஆன்டுக்கு முன் கண்ணகி திருமணம் செய்துகொன்ட முறை "தடம் மாறுதல்" என்றால் நீங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் ஆன்டு பின்னோக்கி செல்ல சொல்கிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது :-)

மாமுது பார்ப்பன் தமிழன் தான் என்பதை என்று ஒப்புகொள்வீர்கள் என்பது அடுத்த சந்தேகம்//

தமிழகத்தில் வடவர் வருகைக்குப்பின் ஏற்பட்ட வாழ்வியல்சார் மாற்றங்களை எடுத்துக்காட்டுவதே என் நோக்கம். அதற்குத்தான் அந்த flashback! 
மற்றபடி, பின்னோக்கிச் சென்று அதே நடைமுறைகளை இன்றும் பின்பற்றுங்கள் என்று யாரையும் வலியுறுத்துவது என் நோக்கமில்லை. அதனைச் செயற்படுத்துவது சாத்தியமுமில்லை என்பதை நான் நன்கறிவேன்!    :-)

’மாமுது பார்ப்பார்’ அனைவரும் தமிழரல்லர். அந்நாளில் நம்மிடையே தமிழ்ப் பார்ப்பனரும் இருந்தனர் (கபிலர் போன்று); இங்கு வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனரும் இருந்தனர். எனவே, சிலம்பில் கண்ணகி திருமணத்தை நடத்திவைத்தது தமிழ்ப் பார்ப்பானா இல்லை ஆரியப் பார்ப்பானா என்பதை நானறியேன்.   :-)

***

’அவிசொரிந்தாயிரம்’ பாடலில் வள்ளுவர் வேதவேள்விகளையே எதிர்க்கிறார் என்பதற்குச் சான்று காட்டி மறைமலையடிகளின் விளக்கத்தைக் கொடுத்திருந்தேன். அதில் அவர் யாகங்களில் உயிர்ப்பலி இடுவதைக் கண்டித்தே தெய்வப்புலவர் இக்குறளை இயற்றியுள்ளார் எனத் தெளிவாகக் கூறியுள்ளார். ’கடுந்தமிழ் நடை’யில் அவர் விளக்கங்கள் இருந்ததால் செல்வனுக்கு அது புரியவில்லையோ?   :-)

//மவுரியர் காலத்தில் (கிமு 300) யாகங்களில் உயிர்பலியிடுவது தடுத்து நிறுத்தபட்டுவிட்டது. வள்ளுவர் ஆண்டு கிமு 31 என்கிறார்கள். வள்ளுவர் காலத்தில் யாகங்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கு நின்று 200 ஆண்டுகள் ஆகியிருந்தன//

வள்ளுவர் ஆண்டை கணக்கிடுவதில் இன்னமும் குழப்பம் நீங்கியபாடில்லை. அது ஒருபுறமிருக்கட்டும்!

நீங்கள் சொல்வதுபோல் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட அசோகரின் ஆணை, யாகங்களில் உயிர்ப்பலி இடுதலைத் தடைசெய்தது என்றே வைத்துக்கொண்டாலும், மவுரிய அரசரும், பவுத்த மத ஆதரவாளருமான அவருடைய ஆணையைத் தமிழகத்தினர், குறிப்பாக, பவுத்தத்தைத் தம் பரம எதிரியாகக் கருதிய வைதீக பிராமணர்கள் எவ்வாறு தங்கள் வேள்விகளில் நடைமுறைப்படுத்தியிருப்பர்? 

தமிழகம் அசோகரின் கட்டுப்பாட்டில் என்றுமே இருந்ததில்லை; அவருடைய ஆணை இங்கே எப்படிச் செல்லும்?  எனவே வள்ளுவர் காலத்திய யாகங்களில் உயிர்ப்பலி இடப்படவில்லை என்ற கருத்து ஆதாரமற்றது.

(ஏன்...வள்ளுவர் மறைந்து 2000 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போதும்கூட இன்னும் பல கோயில்களில் விலங்குகள் பலியிடப்படுகின்றன. சமீபத்தில் தன் சென்னை விஜயத்தில் அய்யனார்/முனீசுவரர்(?) கோயிலில் ஆடுவெட்டிப் பலியிடப்பட்டிருந்ததைக் கண்டதாகத் தோழி சுபா தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன்.) 

***

//அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என எழுதியதால் பாரதி "அன்னசத்திரம் வைப்பதை வெறுத்தானா?" என்ற கேள்விக்கு நீங்கள் பதிலே கொடுக்கவில்லை. ஏனோ? :-)

செல்வன் அந்தப் பாடலை நீங்கள் முழுமையாகக் கொடுக்கவில்லை.
 
அதில் முக்கியமான ’பஞ்சே’ நீங்கள் கொடுக்காமல் விட்ட வரிகளில்தான் அடங்கியிருக்கிறது.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

இப்பாடல் குறித்த பாரதியின் கருத்து இதுதான்:

”எனதருமை மக்களே! நீங்க புண்ணியம் கெடைக்கும்னு கோயில் கட்றீங்க; அன்னசத்திரம் வக்கிறீங்க! இதெல்லாம் வேறும் பப்ளிசிட்டிக்காகச் செய்யற வேலைகளாத்தான் எனக்குத் தெரியுது(பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல்). இதுக்கெல்லாம்போய் மெனக்கெடாதீங்கப்பா! நோ யூஸ்!

படிக்க வசதியில்லாத ’ஒரு ஏழைப்பிள்ளைக்காவது’ படிப்புசொல்லிக்கொடுங்கப்பா...ப்ளீஸ்! வண்டி வண்டியா உங்களுக்குப் புண்ணியம் கெடைக்கும்பா!”  அதவிட்டுட்டுக் கோயில் கட்றாங்களாம் கோயில்!  :-))

(எல்லாத்தையும் நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டு ‘தவறான புரிதல்னு’ எங்களுக்கு விளக்கம் தர்றீங்க பாஸ்!)    :-))

அன்புடன்,
மேகலா

2016-01-20 22:19 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:

2016-01-20 20:40 GMT-06:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//ஏன் தமிழனுக்கு ஈமக்கடன் செய்வதெல்லாம் ஆரியர் இல்லையெனில் தெரிந்திருக்காதா?//

தமிழர்களுக்கான ஈமக்கடன் இறந்தாரைப் புதைப்பது; அவர்கள் நினைவாக நடுகல் எடுப்பது; அதற்குப் பூவும் புகையும் காட்டி வழிபடுவது போன்றவையே. நீர்க்கடன் செய்வதெல்லாம்  நாம் ஆரியரிடம் இருந்த கற்றுக்கொண்டவையே என்பதில் ’எள்’ளளவும் ஐயமில்லை.   :-)

ம்ம்ம்...வடநாட்டில் கடுகு எண்ணெய்தான். தமிழ்நாட்டில் தான் எள்ளிலிருந்து எடுக்கும் நல்லெண்ணெய் "நல்ல எண்ணை" என பாராட்டபடுகிறது. ஆக எள்ளை இறைத்து வழிபடும் முறை ஆரியர் நமக்கு கற்றுதந்தது என்பது நம்பும்படி இல்லை. அதிலும் தென்புலத்தாருக்கு பிள்ளைகள் சடங்கு செய்யும் வழக்கம் இருப்பதை புறநானூறும் உறுதி செய்கிறது. தமிழ் மந்திரத்துக்கு பதில் சமஸ்கிருத மந்திரங்கள் பின்னாளில் புகுந்திருக்கலாம். ஆனால் அந்த வழக்கமே ஆரியர் கற்றுதந்தது என்றால் சாரி...ஏற்க முடியவில்லை

//தென்புலத்தார் என சொல்லகாரணம் என்ன? முன்னோர் அனைவரும் தென் திசையில் உள்ள பிதுருலோகத்தில் வசிக்கிரார்கள் என வள்ளூவர் கருதியதையே இது சுட்டுகிறது. //

தென்புலத்தார் குறித்த பாவாணர் கருத்து:

 தமிழகத்தின் தென்பகுதி ’குமரிக்கண்டம்’ என்று அழைக்கப்பட்டது; அது கடல்கோளால் அழிந்ததனாலேயே நம்மவர் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வடபகுதிகளில் குடியேறினர். ஆகவே, கடல்கோளால் அழிந்த தென்புலத்தவரையே ’தென்புலத்தார்’ என்று வள்ளுவர் சுட்டுகிறார். 

குமரிக்கண்டம் அறிவியலுக்கு முரண்பட்ட கருத்து.

எத்தனையோ ஆயிரமாண்டுக்கு முன்பு அழிந்த குமரிக்கண்ட தமிழரை நினைவுகூர்தலை வள்ளுவர் முக்கிய கடமையாக முன்வைத்தார் என்பது பொருந்தும்படி இல்லை. வேறு விளக்கத்தை "தென்புலத்தார்" என்பவருக்கு கொடுக்கமுயலவும் :-)
 
இந்தத் தென்புலத்தாரை ஓம்புதலில் உரையாசிரியர்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள.  பரிமேலழகர், தன் காலத்து வழக்கத்தை அல்லது தன் விருப்பத்தை இவ்வுரையில் புகுத்தியுள்ளார். ஆனால், 'தென்புலத்தார் ஓம்புதலை' திருவள்ளுவர் என்ன பொருளில் சொன்னார் என்பதை அவரேதான் வந்து விளக்கவேண்டும்.   

அவர் வந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் வரப்போவது இல்லையே? :-)

***

தொல்காப்பியர் காலத்திலேயே ஆரியர்களின் தாக்கம் நம்மிடம் ஏற்பட்டுவிட்டது என்பது உண்மையே. அதனால்தான் அவர்,

”வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்று வடசொற்களைத் தமிழில் பயன்படுத்துவது எப்படி என்று விளக்கவேண்டிய சூழல் வந்தது.

இது உண்மையானால் தொல்காப்பிய காலத்தில் இருப்பதை தமிழ்மரபு என ஏற்க நாம் ஏன் தயங்கவேண்டும்? 2500 ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் ஒன்றை "நம் மரபல்ல" என்பது வேடிக்கை. வரலாற்றில் இன்னமும் எத்தனை ஆயிரமாண்டுகளுக்கு முன் சென்று அன்றைக்கு இருந்த சமூகம் தான் "ஒரிஜினல் தமிழ் சமூகம்" எனும் தூய்மைவாதத்தை நாம் முன்வைக்க போகிறோம்? அது சரியான அணுகுமுறை அல்ல.

அதுபோல் சங்க இலக்கிய நூல்கள் அனைத்திலும் ஆரியர் வழக்கங்கள் நம்மிடையே கலந்துபோனதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட நெட்டிமையாரின் பாடல். அவர் அந்தப்பாடலில் அவர் போற்றியிருப்பது பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை. அவனோ ஆரியர்களை வைத்து யாகசாலைகள் அமைத்து யாகங்கள் செய்வதையே தொழிலாகக்கொண்டவன். அவனுடைய போர்முறையே நீங்கள் சுட்டிய பாடலில் இருப்பது. அந்தப்பாடல், ஆவுக்கும், பார்ப்பன மக்களுக்கும், அவர்களின் நம்பிக்கைகளுக்கும் சார்பாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?   :-))

வழக்கம் எங்கே இருந்து வந்தது, எப்படி வந்தது என்பதல்ல பிரச்சனை.

வள்ளுவர் காலத்தில் தென்புலத்தாருக்கு தர்ப்பணம் செய்யும் முறை இருந்ததா இல்லையா என்பதே விவாதம். தொல்கபபியர் காலத்திலேயே ஆரியர் தாக்கம் புகுந்ததாக கூறுகிறீர்கள். அப்புறம் தொல்கபபியருக்கு பிற்பட்ட வள்ளுவர் காலத்தில் ஏன் யாகம், வேள்வி, அவி, தர்ப்பணம் எல்லாம் இருந்திருக்காது? அதே சங்க இலக்கிய காலகட்ட பாடலில் தென்புலத்தார் என் பிதுருக்களே அடையாளம் காட்டபடுகிறார்கள். அப்புறம் குறளில் வரும் தென்புலத்தார் என்பது லெமூரியர் என்பது பொருத்தமான வாதம் தானா?

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் ஆரியக்கலப்பில்லாத தூய தமிழ்மரபினைப் பேசும் பாடல்களும் நம் இலக்கியங்களில் இருக்கவே செய்கின்றன. இவை ஆரியர் வருகைக்குமுன் எழுதப்பட்ட பாடல்களாக இருக்கலாம். அவற்றில் ஒன்றைக் கீழே தந்துள்ளேன். (இதன் வரிகளை வேந்தரும் குறிப்பிட்டுள்ளார்)

....துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியு மில்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே. ( மாங்குடி கிழார்)

 துடியன்குடி, பாணன்குடி, பறையன்குடி, கடம்பன்குடி யென்று சொல்லப்பட்ட இந் நால்வகைக் குடிகளன்றி வேறு குடிகள் இல்லை (இக்குடியினர்தாம் சிறந்தோர் என்பது புலவர் கருத்து); மனம் ஒன்றாத பகைவர் முன்னே அஞ்சாது நின்று அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்துவிளங்குகின்ற உயர்ந்த கோட்டினையடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு வீழ்ந்திறந்தாராக, அவர் பெயரும் பீடும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதல்லது நெல்லைச் சொரிந்து வழிபடும் கடவுள் வேறேயில்லை.

தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை

என்ற குறள் இருப்பதால் கணவனே தெய்வம். வேறு தெய்வம் ஏதும் சங்ககாலத்தில் இல்லை என முடிவுகட்ட இயலுமா?

பத்தினிக்கு கணவனே தெய்வம். வீரனுக்கு இறந்த வீரனே தெய்வம். பத்தினி கணவனை தொழுதெழுதலையன்றி வேறு எவ்வழிபாடும் செய்ய அவசியமில்லை. வீரன் நடுகல்லையன்றி வேறெதையும் வழிபடும் அவசியமில்லை. அந்த கண்ணோட்டத்திலேயே இதை புரிந்து கொள்லவேண்டும்.

ஈதொப்ப, ஆரியத்தாக்கமில்லா நம் தமிழர் திருமணத்தில் உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவையே திருமண விருந்தாக வந்தோர்க்கு வழங்கப்பட்டது. மங்கலமகளிர் நீராட்டிக் கற்புநெறிவழாது வாழ்வாயாக என வாழ்த்துதலோடு திருமணம் இனிதே நிறைவுற்றது. பின்னர் ஆரியர் வரவால் ’மாமுதுபார்ப்பான் மறைவழி காட்ட’த் தமிழர் திருமணம் ’தடம்மாறி’ நடந்தேறியதையும் அறிகின்றோம். இப்படியே  நம் பழமரபுகளை நாம் ஒவ்வொன்றாகத்தொலைத்துவந்ததைச் சங்கப்பாடல்கள், காப்பியங்கள் மூலம் அறியமுடிகின்றது. 

இப்படி 2000 ஆன்டுக்கு முன் கண்ணகி திருமணம் செய்துகொன்ட முறை "தடம் மாறுதல்" என்றால் நீங்கள் இன்னும் எத்தனை ஆயிரம் ஆன்டு பின்னோக்கி செல்ல சொல்கிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது :-)

மாமுது பார்ப்பன் தமிழன் தான் என்பதை என்று ஒப்புகொள்வீர்கள் என்பது அடுத்த சந்தேகம் 

ஆதலால், என்னைப்பொறுத்தவரை  நம் வழக்கவொழுக்கங்களில் ஆரியப் பகுதி எது? தமிழ்ப்பகுதி எது? என்று  ஆராய்ந்தறிவது பயனுள்ள முயற்சியும் இன்றைய தேவையுமாகும். அதுவே நம் வேர்களைநோக்கி நம்மை இட்டுச்செல்லும். அப்படி ஆராய்ந்தால்தான் முல்லைக்கலியில் அன்று இயல்பாக நிகழ்ந்துவந்த ’ஏறுதழுவுதல்’ இன்று ’மிருகவதை’ என்றுமுத்திரை குத்தப்பட்டுத் தடைசெய்யப்பட்டிருப்பது எத்துணைத் தவறானது என்பதை நாம் நம் மரபறியாதோர்க்கு விளக்கமுடியும். ஏறுதழுவுதலை ஆதரிக்கும் நீங்கள் தொல்தமிழனின் பிற மரபுகளை ஏற்க மறுத்து அவற்றை ஆராய்வது அவசியமற்றது என்றுரைப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது!!!

கண்ணகியும், நெட்டிமையாரும் பின்பற்றிய சங்ககால வழக்கை ஒதுக்க கூறூவதை மரபை போற்றும் என்னால் எப்படி ஏற்கமுடியும்? யாராலும் ஏற்க முடியாது.

உயிர்ப்பலியை மையமாகக்கொண்டதுதான் அன்றைய வேதவேள்வி. விலங்குகளைப் பலியிட்டு வானோர்க்கு அவியுணவாக அளித்துவிட்டு (அவிஷ்),  பின்பு அதனையே பிரசாதமாகவும் உண்டனர் வேள்விசெய்தோர்.  :-(

கொல்லாமை, புலால் மறுத்தல், இன்னாசெய்யாமை போன்ற உயிரிரக்கக் கோட்பாடுகளை ஒல்லும் வாயெல்லாம் திருக்குறளில் வலியுறுத்தும் வள்ளுவர் இதனை எப்படி ஆதரித்திருப்பார் என்று சற்றே சிந்தியுங்கள்!

மவுரியர் காலத்தில் (கிமு 300) யாகங்களில் உயிர்பலியிடுவது தடுத்து நிறுத்தபட்டுவிட்டது. வள்ளுவர் ஆண்டு கிமு 31 என்கிறார்கள். வள்ளுவர் காலத்தில் யாகங்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கு நின்று 200 ஆண்டுகள் ஆகியிருந்தன. உயிர்ப்பலியிடும் வழக்கம் இன்றைக்கும் யாகங்கலில் இல்லை. மாவால் பசுவை பிரதிஷ்டை செய்தே யாகநெருப்பில் இடுவது வழக்கம்

எனவே, அவர் உயிர்ப்பலியிடும் வேள்விகளுக்கு முற்றிலும் எதிரானவர் என்பதில் உங்களுக்கு ஐயமே வேண்டாம். அதைத்தான் ’அவிசொரிந்தாயிரம் வேட்டலின்’ குறளும் வலியுறுத்துகிறது.   :-)

தவறான புரிதல்

ஒரு மன்னனை புகழவேண்டும் என வைத்துகொள்ளுங்கள்.

" ஒசாமாபின்லாடனை விட நீ உயர்ந்தவன்" என்போமா

அல்லது

" ராஜராஜ சோழனை விட நீ சிறந்தவன்" என்போமா?

ஒன்றை இன்னொன்றை விட சிறந்தது என புகழ்கையில் உயர்ந்ததாக நாம் கருதும் பொருளை கூறியே புகழ்வோம். நமக்கு பிடிக்காத பொருளை விட நீ உயர்ந்தவன் என்பது தவறான உவமை
 
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என எழுதியதால் பாரதி "அன்னசத்திரம் வைப்பதை வெறுத்தானா?" என்ற கேள்விக்கு நீங்கள் பதிலே கொடுக்கவில்லை. ஏனோ? :-)

--

செல்வன்

unread,
Jan 22, 2016, 11:46:07 AM1/22/16
to Megala Ramamourty, vallamai

2016-01-22 8:20 GMT-06:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் ’தென்திசையைச் சேர்ந்தவர்கள்/வாழ்பவர்கள் என்பது. அது தென்புல வாழ்நரான பித்ருக்களைக் குறிக்குமென்று அறிஞர் சிலரும், தென்திசைக்கண் இருந்து கடல்கோளால் அழிந்த குமரிக்கண்டத்தைச் சார்ந்தவர்களைக் குறிக்கும் என்று பாவாணர் போன்ற அறிஞர் பெருமக்களும் கூறுகின்றனர். அதைத்தாண்டி அந்த சொல்லுக்கு வேறுபொருள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.   :-)

இதில்

தென்புலத்தவர் என்ற நேரடி சொல்லுக்கு பொருள் எதுவும் கிடையாது...மயிலாபூரில் இருப்பவர்கள் மதுரையில் இருப்பவர்களை ஓம்பல் தலை என்ற பொருளில் வள்ளுவர் எழுதியிருக்க போவது கிடையாது. ஆக அது ரூல்ட் அவுட்

அடுத்து குமரிக்கண்டம். அறிவியல் ஆதாரமற்ற கற்பனை. சிலப்பதிகாரத்தில் இல்லாத குமரிக்கண்டத்தை எப்படி குறிப்பிட்டிருப்பார்கள்? பின்னாளில் அதற்கு தவறாக உரை எழுதியதை ஆதாரமாக வைத்து "குமரிக்கண்டத்து மக்களை ஓம்புதல் தலை" என வள்ளுவர் சொன்னார் என சொல்கையில் உங்களுக்கே சிரிப்பு வராமல் இருந்தால் சரிதான் :-)

ஆக மீதமிருப்பது தென்புலத்தார் என்றால் நம் முன்னோர் என்ற பொருள் தான். அந்த பொருளில் நம் பிதுருக்களை குறிக்கும் சங்கபாடல் உதாரணமும் கொடுத்துள்ளேன். இதன்பின்னும் அது லெமூரியா தான் என நீங்கள் நம்புவது உங்கள் உரிமை :-)

நீங்கள் சொல்வதுபோல் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட அசோகரின் ஆணை, யாகங்களில் உயிர்ப்பலி இடுதலைத் தடைசெய்தது என்றே வைத்துக்கொண்டாலும், மவுரிய அரசரும், பவுத்த மத ஆதரவாளருமான அவருடைய ஆணையைத் தமிழகத்தினர், குறிப்பாக, பவுத்தத்தைத் தம் பரம எதிரியாகக் கருதிய வைதீக பிராமணர்கள் எவ்வாறு தங்கள் வேள்விகளில் நடைமுறைப்படுத்தியிருப்பர்?

ஏனெனில் சங்க இலக்கியம்  எதிலும் யாகங்களில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டதாக குறிப்பு இல்லை. கிமு 31 என்கையில் இந்தியாவெங்கும் யாகங்களில் உயிர்ப்பலி இடும் வழக்கம் நின்றுவிட்டது. அசோகர் சேர, சோழ, பாண்டிய தேசங்கள் எம் நட்பு நாடுகள் என்றே குறித்துள்ளார். பவுத்தம், சமணம் அனைத்தின் தாக்கமும் அன்றைய தமிழகத்தில் வலுவாக இருந்தது. அதனால் அன்றைய யாகங்களில் உயிர்ப்பலி வழக்கம் இருந்தது, இல்லை என்பதை நாம் உறுதியாக மறுக்கவோ, கூறவோ முடியாத நிலையில் "யாகங்களில் உயிர்ப்பலி இருந்தது. அதை எப்படி வள்ளுவர் ஏற்பார்?" என்பது அதனால் ஒத்துக்கொள்ளதக்க வாதம் அல்ல.மேலும் கிறிஸ்துவனான ப்ரிட்டிஷ்காரன் உடன்கட்டை வழக்கை தடை செய்தான். சாரதா திருமண சட்டத்தை அமுல்படுத்தினான். அது ஒரு 20, 30 ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் ஏற்கப்படவில்லையா? இன்றைய தலைமுறைக்கு நூறான்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு வழக்கம் இருந்ததே தெரியாது.

குமரிக்கண்டம் இருந்ததற்கான ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக விளக்கும் பதிவொன்றையும் உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன்.

குமரிக்கண்டம் உண்மையா?

அறிவியல் ஆய்வுகட்டுரைகள் எல்லாம் வலைபதிவுகளில் தான் எழுதபடுகிறதா? சொல்லவே இல்லையே? :-)

சரி....

தற்போது உயிருடன் இருக்கும்
அறிவியல் துறையில் (நிலவியல், ஜியாக்ரபி போன்ற) முனைவர் பட்டம் பெற்ற
தமிழர் அல்லாத

ஒரே ஒரு விஞ்ஞானி குமரிக்கண்டத்தை ஒப்புகொள்கிறாரா? ஆம் எனில் பெயரை குறிப்பிடுங்கள்.

இப்பாடல் குறித்த பாரதியின் கருத்து இதுதான்:

”எனதருமை மக்களே! நீங்க புண்ணியம் கெடைக்கும்னு கோயில் கட்றீங்க; அன்னசத்திரம் வக்கிறீங்க! இதெல்லாம் வேறும் பப்ளிசிட்டிக்காகச் செய்யற வேலைகளாத்தான் எனக்குத் தெரியுது(பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல்). இதுக்கெல்லாம்போய் மெனக்கெடாதீங்கப்பா! நோ யூஸ்!

படிக்க வசதியில்லாத ’ஒரு ஏழைப்பிள்ளைக்காவது’ படிப்புசொல்லிக்கொடுங்கப்பா...
ப்ளீஸ்! வண்டி வண்டியா உங்களுக்குப் புண்ணியம் கெடைக்கும்பா!”  அதவிட்டுட்டுக் கோயில் கட்றாங்களாம் கோயில்!  :-))

அன்னசத்திரம் வைப்பது பப்ளிசிடிக்கு செய்யும் வேலையா?

தினமும் திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலுக்கு போன பாரதி கோயில் பப்ளிசிடிக்கானது என கருதினானா?

அன்னசத்திரம் ஆயிரம் அமைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இவை எல்லாமே நம் பெயரை ஒளிர வைக்கும் தருமங்கள்
இவற்றை விட புண்ணியகாரியம் எது எனில்
அது ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பதே

அன்னயாவினும் புண்ணியம் கோடி எனில் "இதை விட கோடி மடங்கு புண்ணீயம்" என்பதே.

ஆக அன்னசத்திரம் நாட்டுதலும், ஆலயம் பதினாயிரம் நாட்டலும் தருமம், புண்ணீயகாரியம் என பாரதி கருதியே இருக்கிறான். அவை கேவலமானவை என பாரதி கருதவில்லை. அவை தருமங்களே. ஆனால் அவற்றையும் விட உயர்ந்த தருமம் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

"ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா" என பரதனின் உயர்ந்த மனதுடன் ஒப்பிட குகன் தெய்வமாக நினைத்த ராமனே பயன்பட்டுள்ளான்.

ஏழைக்கு கல்வியறிவு முக்கியம். அதே சமயம் சத்துணவு கொடுப்பதால் தான் பல்ளிகளுக்கு மாணவர்கள் வருகிறார்கள். ஆக அன்னசத்திரம் இல்லையெனில் கல்வியும் நின்றுவிடும். அனைத்து தருமங்களையும் தொடர்ந்து செய்துகொண்டெ வரவேண்டும்.

--

Megala Ramamourty

unread,
Jan 22, 2016, 12:59:19 PM1/22/16
to செல்வன், vallamai

ஆக மீதமிருப்பது தென்புலத்தார் என்றால் நம் முன்னோர் என்ற பொருள் தான். அந்த பொருளில் நம் பிதுருக்களை குறிக்கும் சங்கபாடல் உதாரணமும் கொடுத்துள்ளேன். இதன்பின்னும் அது லெமூரியா தான் என நீங்கள் நம்புவது உங்கள் உரிமை 

நீங்கள் கொடுத்த பாடலிலேதான் லெமுரியா/குமரிக் கண்டத்தில் பாய்ந்த பஃறுளி ஆறு பற்றிய செய்தியும் வருகிறது. பாடலின் ஒருபாதியை ஒத்துக்கொள்ளும் நீங்கள் மறுபாதியை மறுப்பது ஏன்?   :-)

செல்வன்,

தென்புலத்தார் என்ற சொல் முன்னோரைக் குறிக்கிறது என்பதில் எனக்கும் ஐயமில்லை. அது பித்ருலோகமாகவோ குமரிக்கண்டமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ’ஓம்பல்’ என்ற சொல்லில்தான் உங்களுக்கும் எனக்கும் கருத்து மாறுபாடு. நீங்கள் அச்சொல், நீர்க்கடனைக் குறிக்கும் என்கிறீர்கள். நான் அதனை ’நினைவுகூர்ந்து போற்றுதல்’ என்ற அளவில் பொருள்கொண்டால் போதும் என்கிறேன். 

இது குறித்த உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். அதேநேரம் என் கொள்கையிலும் எனக்கு மாற்றமில்லை.  :-)

*****

அன்றைய யாகங்களில் உயிர்ப்பலி வழக்கம் இருந்தது, இல்லை என்பதை நாம் உறுதியாக மறுக்கவோ, கூறவோ முடியாத நிலையில் "யாகங்களில் உயிர்ப்பலி இருந்தது. அதை எப்படி வள்ளுவர் ஏற்பார்?" என்பது அதனால் ஒத்துக்கொள்ளதக்க வாதம் அல்ல.

இங்கே நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். யாகங்களில் உயிர்ப்பலி கூடாது என்பது பவுத்தக் கொள்கை. யாகங்களில் உயிர்ப்பலி இடுவதே உகந்தது; உயர்ந்தது; அப்போதுதான் தேவர்களின் ப்ரீதிக்குப் பாத்திரமாகலாம் என்பது வைதீக சமயத்தின் நம்பிக்கை. இவ்விஷயத்தில் எப்போதும் பவுத்தத்துக்கும் வைதீக சமயத்துக்கும் இடையே மோதல் இருந்துகொண்டே இருந்திருக்கின்றது.அவரவர் கொள்கையில் அவரவர் உறுதியுடையவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

அதனால், அசோகருக்குப்  பயந்துகொண்டு வேதவேள்விகளில் உயிர்ப்பலி இடுவதைத் தமிழக வைதீக சமயத்தார் நிறுத்தியிருக்கமாட்டார்கள் என்பதே என் திடமான நம்பிக்கை. அதைத்தான் ’அவிசொரிந்தாயிரம்’ குறளும் பிரதிபலிக்கிறது என்று மறைலையடிகளும் நானும் நம்புகிறோம்.   :-) 

//அசோகர் சேர, சோழ, பாண்டிய தேசங்கள் எம் நட்பு நாடுகள் என்றே குறித்துள்ளார். பவுத்தம், சமணம் அனைத்தின் தாக்கமும் அன்றைய தமிழகத்தில் வலுவாக இருந்தது//

நட்பு என்பது வேறு... அவரவர் நம்பிக்கை, கொள்கை என்பது வேறு. நண்பர்களாக இருப்பதற்கு ஒருவர் கொள்கையை மற்றவர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. ஏன்..நீங்களும் நானும்கூடத்தான் நண்பர்கள். என் கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா என்ன?    :-))

அதுபோல், சமண பவுத்தத் தாக்கம் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தாலும், வைதீக சமயத்தார் அவ்வளவு சுலபத்தில் அக்கொள்கைகளுடன் உடன்பாடு கொள்ளவில்லை. வெகுகாலத்திற்குப் பின்னரே (கி.பி. 6, 7 நூற்றாண்டுகளுக்குப் பின்பு) ஒருவாறு, சமண பவுத்தக் கொள்கைகளை வைதீக மதம் மெதுவாய் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. அதுவே இந்நாளில் இந்துமதமாய்க் காட்சியளிக்கிறது.   :-)

அறிவியல் ஆய்வுகட்டுரைகள் எல்லாம் வலைபதிவுகளில் தான் எழுதபடுகிறதா? சொல்லவே இல்லையே? அறிவியல் துறையில் (நிலவியல், ஜியாக்ரபி போன்ற) முனைவர் பட்டம் பெற்ற தமிழர் அல்லாதஒரே ஒரு விஞ்ஞானி குமரிக்கண்டத்தை ஒப்புகொள்கிறாரா? ஆம் எனில் பெயரை குறிப்பிடுங்கள்//

ஏதேது... நீங்கள் இப்படி ஆச்சரியப்படுவதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பொங்கல் பண்டிகையின் நாயகர்கள் கண்ணனும் அவன் அண்ணனும்தான் என்றொரு ஆச்சரியமான உண்மையை வெளியிட்டு நீங்கள் கட்டுரை எழுதினீர்களே; அதற்கான ஆதாரங்களை எங்கிருந்து எடுத்தீர்கள்...? சங்கப் பாடல்களிலிருந்தா... இல்லை சரித்திரக் கல்வெட்டுக்களிலிருந்தா?  நெட்டிலிருந்துதானே?  :-)

நீங்கள் மட்டும் நெட்டில் சுட்டுப் படையல் போடலாம்...அது ஆதாரபூர்வமான உண்மை; நாங்கள் செய்தால் மட்டும் அது ஆதாரமற்றது; அறிவியலுக்கு எதிரானது என்ற மறுப்பா? பேஷ்... நன்றாக இருக்கிறது நியாயம்!       :-))

குமரிக்கண்டம் இருந்த வரலாற்றைப் புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற சங்க நூல்களும், சிலம்பின் உரையாசிரியர் அடியார்க்குநல்லார், தமிழறிஞர்களான பாவாணர், பரிதிமாற்கலைஞர் போன்றோரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அதுபோதாதா? எல்லாவற்றையும் தமிழரல்லாத வெளிநாட்டுக்காரர் வந்துசொன்னால்தான் ஒத்துக்கொள்வீர்களா? 

 என்று மடியும் இந்த அடிமையின் மோகம்????    :-)

***

//ஏழைக்கு கல்வியறிவு முக்கியம். அதே சமயம் சத்துணவு கொடுப்பதால் தான் பல்ளிகளுக்கு மாணவர்கள் வருகிறார்கள். ஆக அன்னசத்திரம் இல்லையெனில் கல்வியும் நின்றுவிடும். அனைத்து தருமங்களையும் தொடர்ந்து செய்துகொண்டெ வரவேண்டும்.//

பள்ளிகளில் மாணவர்களுக்குச் சோறுபோடுவது வேறு; பப்ளிசிட்டிக்கு வெளியில் சோறுபோடுவது வேறு. அதன் வேற்றுமையை நாங்களும் உணர்ந்துதான் இருக்கிறோம்.  

சமூகத்தில் தருமகாரியங்கள் என்ற பெயரில் மக்கள் செய்யும் படாடோபங்களில் வெறுத்துப்போய்தான் பாரதி, பெயர் விளங்கி ஒளிர நிறுத்தும் காரியங்களில் முனைப்புக்காட்டாமல், ”ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள்’;  அதுவே தலையாய தர்மம் என்றார்.

எழுத்தறிவித்தலே அனைத்தினும் சிறந்த தர்மம் என்று காட்டவே பிற  so-called தருமங்களை ஒப்புமைக்கு எடுத்துக்கொண்டுள்ளார் அவர். நீங்கள் பாரதி சொல்லவந்த பாயிண்டைவிட்டுவிட்டு முக்கியமல்லாத பிறவற்றையே பிடித்துக்கொண்டிருப்பது ஏன்? 

(இதுக்குத்தான் நடிகர் பாக்கியராஜ் படித்த பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடாது என்பது!)    :-))

***

முடிவாக நான் கூறு விரும்புவது:

திருவள்ளுவர் சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவைகளில் ஈடுபாடு உடையவர் அல்லர்; வெளிவேடங்களையும், வஞ்சமனத்தையும் வெறுத்தவர் அவர். ஆரவாரத் தன்மையுடைய எவற்றையும் அவர் ஆதரிக்காது, ’மனத்துக்கண் மாசிலனாக வாழ்தலே அறம்’ என்று அடித்துச்சொல்லியிருக்கிறார்.

அதுபோல், திருக்குறளைத் தமிழ்மறை என்று கூறுவதும் பொருந்தாது. வேதங்களின் கொள்கைகளுக்கு, குறிப்பாக, உயிர்ப்பலிக்கு மிக மிக எதிரானது திருக்குறள். அதுவேண்டும்... இதுவேண்டும்... என்று வெறிபிடித்து அலைந்து வேள்வி நடத்திய வேதங்கள் எங்கே? 

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில் என்று அவாஅறுத்தலை விதந்தோதிய வள்ளுவர் எங்கே?

திருக்குறள் சிறந்த வாழ்வியல் நூல்; உளவியல் நூல்; அறநூல்!

எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லை. 

எனவே திருக்குறளைக் கற்போம்! வாழ்வில் உயர்வோம்! 

நன்றி! வணக்கம்!   

செல்வன்

unread,
Jan 22, 2016, 1:48:43 PM1/22/16
to Megala Ramamourty, vallamai

2016-01-22 11:59 GMT-06:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
நீங்கள் கொடுத்த பாடலிலேதான் லெமுரியா/குமரிக் கண்டத்தில் பாய்ந்த பஃறுளி ஆறு பற்றிய செய்தியும் வருகிறது. பாடலின் ஒருபாதியை ஒத்துக்கொள்ளும் நீங்கள் மறுபாதியை மறுப்பது ஏன்?   :-)

ஏனெனில் பாடலில் "குமரிக்கண்டம்" என்ற வார்த்தை இல்லை.

பஃறுளியாறு குமரிக்கண்டத்தில் ஓடவில்லை. கன்யாகுமரியில் தற்போதும் ஓடும் பறளியாறு தான் பஃறுளியாறு என சில ஆய்வுகள் கூறுகின்றன. மற்றபடி

குமரி என்ற கண்டம் இருந்ததும்
மிகப்பெரும் அளவில் அங்கே வெள்ளம் ஏற்பட்டு மிகப்பெரும் நாகரிகம் அழிந்ததும்

எல்லாம் உண்மை அல்ல. உண்மையாக இருந்தால் அதற்கு இப்பாடல் ஆதாரமும் அல்ல.

நட்பு என்பது வேறு... அவரவர் நம்பிக்கை, கொள்கை என்பது வேறு. நண்பர்களாக இருப்பதற்கு ஒருவர் கொள்கையை மற்றவர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. ஏன்..நீங்களும் நானும்கூடத்தான் நண்பர்கள். என் கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா என்ன?    :-))

அதுபோல், சமண பவுத்தத் தாக்கம் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தாலும், வைதீக சமயத்தார் அவ்வளவு சுலபத்தில் அக்கொள்கைகளுடன் உடன்பாடு கொள்ளவில்லை. வெகுகாலத்திற்குப் பின்னரே (கி.பி. 6, 7 நூற்றாண்டுகளுக்குப் பின்பு) ஒருவாறு, சமண பவுத்தக் கொள்கைகளை வைதீக மதம் மெதுவாய் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. அதுவே இந்நாளில் இந்துமதமாய்க் காட்சியளிக்கிறது.   :-)

ஆக 6- 7ம் நூற்றாண்டில் நண்பர்களின் கொள்கைகளை இந்துமதம் ஏற்க துவங்குகிறது என்கிறீர்கள் :-). நான் வள்ளுவர் காலத்திலேயே நிகழ்ந்திருக்கலாம் என்கிறேன். இல்லையெனில் சங்கபாடல்களில் யாகங்களில் உயிர்ப்பலி கொடுக்கபட்டதை கண்டித்து எதாவது சமனரோ, பவுத்தரோ எழுதியிருப்பார்., அப்படி குறிப்பு எங்குமே இல்லையே?

ஏதேது... நீங்கள் இப்படி ஆச்சரியப்படுவதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பொங்கல் பண்டிகையின் நாயகர்கள் கண்ணனும் அவன் அண்ணனும்தான் என்றொரு ஆச்சரியமான உண்மையை வெளியிட்டு நீங்கள் கட்டுரை எழுதினீர்களே; அதற்கான ஆதாரங்களை எங்கிருந்து எடுத்தீர்கள்...? சங்கப் பாடல்களிலிருந்தா... இல்லை சரித்திரக் கல்வெட்டுக்களிலிருந்தா?  நெட்டிலிருந்துதானே?  :-)

நான் எழுதும் மொக்கை பதிவு எல்லாம் ஏதோ மிகப்பெரும் ஆய்வுகட்டுரை என நீங்கள் கருதுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது :-)

நான் எழுதுவது மொக்கை. குமரிக்கண்ட வலைபதிவு அதைவிட பெரிய மொக்கை பதிவு. ஒரு மொக்கை பதிவை காட்டி இன்னொன்றை நியாயபடுத்தலாமா? அதிலும் குமரிக்கண்டம் மாதிரி மிகப்பெரும் நிலபரப்பு கடலில் மூழ்கிய செய்திக்கு நிலவியல், ஜியாலஜி, ஜியாக்ரபி மாதிரி தொல்லியல் துறை ஜர்னல்கள், அகழ்வாராய்ச்சி ரிசல்டுகளை கொடுத்தால் தான் ஏற்கமுடியும். இம்மாதிரி வலைதள பதிவுகளை என்னவென ஏற்பது?

நீங்கள் மட்டும் நெட்டில் சுட்டுப் படையல் போடலாம்...அது ஆதாரபூர்வமான உண்மை; நாங்கள் செய்தால் மட்டும் அது ஆதாரமற்றது; அறிவியலுக்கு எதிரானது என்ற மறுப்பா? பேஷ்... நன்றாக இருக்கிறது நியாயம்!       :-))

நான் எழுதுவது ஆதாரபூர்வ உண்மை என நான் எப்ப, எங்கே சொன்னேன்?

யூகம், இருக்கலாம் என எத்தனையோ டிஸ்கி போட்டுதான் அக்கட்டுரைகளை எழுதுகிறேன்

குமரிக்கண்டம் இருந்த வரலாற்றைப் புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற சங்க நூல்களும், சிலம்பின் உரையாசிரியர் அடியார்க்குநல்லார், தமிழறிஞர்களான பாவாணர், பரிதிமாற்கலைஞர் போன்றோரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அதுபோதாதா?

போதாது. ஏனெனில் இவர்கள் யாரும் நிலவியல் துறை ஆய்வாலர்கள் அல்ல. 

எல்லாவற்றையும் தமிழரல்லாத வெளிநாட்டுக்காரர் வந்துசொன்னால்தான் ஒத்துக்கொள்வீர்களா? 

 என்று மடியும் இந்த அடிமையின் மோகம்????    :-)

தமிழரல்லாதவர் என்றால் உடனே வெளிநாட்டுகாரரா?

இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து என கோபால் பல்பொடி விற்கும் நாடுகள் அனைத்திலிருந்தும் ஒரு அறிஞர் கூடவா குமரிக்கண்டம் இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை? ஒப்புகொள்ளவில்லையெனில் அதன் காரணம் என்ன? ஒரு கண்டம் மூழ்கினால் அதை உலகிலுள்ள விஞ்ஞானிகள் யாருமே கண்டுபிடிக்கமலாஅ இருப்பார்கள்?

பள்ளிகளில் மாணவர்களுக்குச் சோறுபோடுவது வேறு; பப்ளிசிட்டிக்கு வெளியில் சோறுபோடுவது வேறு. அதன் வேற்றுமையை நாங்களும் உணர்ந்துதான் இருக்கிறோம்.  

சமூகத்தில் தருமகாரியங்கள் என்ற பெயரில் மக்கள் செய்யும் படாடோபங்களில் வெறுத்துப்போய்தான் பாரதி, பெயர் விளங்கி ஒளிர நிறுத்தும் காரியங்களில் முனைப்புக்காட்டாமல், ”ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள்’;  அதுவே தலையாய தர்மம் என்றார்.

இது எதுவுமே பாரதி சொன்னதல்ல.

பாரதி காலத்தில் பஞ்சம், பட்டினி கடுமையாக நிலவியது. பாரதியே உணவின்றி பலகாலம் கொடிய வறுமையில் வாழ்ந்தவன்.

இத்தகைய காலகட்டத்தில் அன்னசத்திரம் கட்டுவது அவசியமற்றது,. பப்ளிசிட்டி என பாரதி எப்படி கருதியிருப்பான்? 

அன்னசத்திரம் கட்டுவது தருமம் ..தருமம் என்றாலே உயர்ந்தது என தான் பொருள்.
அதில் உங்கள் பெயர் ஒளிரும்

ஆனால் அதை விட கோடிபுண்ணீயம் தருவது ஏழைக்கு எழுத்தற்வித்தல் என கூறூவதை

"அன்னசத்திரம் கட்டுவது பாரதிக்கு பிடிக்காது, பெயர் ஒளிரும் என சொன்னால் உடனே அது நெகட்டிவ் பப்ளிசிட்டியை தான் குறிக்கும்" என வாதாடுவது மிக சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் உண்மையாக படவில்லை :-)

ஒருவரது பெயர் ஒளிர்ந்தால் அது தவறான விசயமா? பாரதி அப்படி சொன்னானா?

தருமம் என குறிப்பிட்டுள்ள விசயம் எப்படி மோசமானதாக ஆகும்?

பாக்கியராஜ் பள்ளியில் படித்ததால் தான் இப்படி விவரமாக சிந்திக்க முடிகிறது என்பதை சொல்லிகொள்கிறேன் :-)

முடிவாக நான் கூறு விரும்புவது:

திருவள்ளுவர் சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவைகளில் ஈடுபாடு உடையவர் அல்லர்; 

தவறு. அப்படி அவர் சொல்லவில்லை :-)

வெளிவேடங்களையும், வஞ்சமனத்தையும் வெறுத்தவர் அவர். ஆரவாரத் தன்மையுடைய எவற்றையும் அவர் ஆதரிக்காது, ’மனத்துக்கண் மாசிலனாக வாழ்தலே அறம்’ என்று அடித்துச்சொல்லியிருக்கிறார்.

யாரை அடித்தார்? :-)

முன்னோருக்கு நீர்க்கடன் செய்வது ஆடம்பரம் என்றா வள்ளுவர் கருதினார்?

அதை ஏழை, எளியவர் கூடதான் செய்கிறார்கள்.

அதுபோல், திருக்குறளைத் தமிழ்மறை என்று கூறுவதும் பொருந்தாது. வேதங்களின் கொள்கைகளுக்கு, குறிப்பாக, உயிர்ப்பலிக்கு மிக மிக எதிரானது திருக்குறள். அதுவேண்டும்... இதுவேண்டும்... என்று வெறிபிடித்து அலைந்து வேள்வி நடத்திய வேதங்கள் எங்கே? 

யாகங்களில் பிள்ளை வேண்டும் என்பதற்கான செய்யபடும் புத்திரகாமேஷ்டி யாகம் முதல் பல நல்ல யாகங்கள், மழை வருவதற்கான யாகங்கள் ஆகியவை எல்லாம் உள்ளன. போருக்கான யாகங்களும் உள்ளன.

ஆனால் கலியுகத்தில் யாகங்கள் அவசியமில்லை. திருமாலின் திருப்பெயர் ஒன்றே அனைத்து வினைகளை போக்கும் சக்தி வாய்ந்தது என்பதே என் நம்பிக்கை.

ஆனால் வள்ளுவர் நாடு வளம் பெற அரசன் யாகங்களை செய்யவேன்டியது அவசியம் என கருதி யாகங்களை போற்றியுள்ளார். அவியுணவின் ஆன்றோர், அவிசொரிந்தாயிரம் என்பது போன்ற குறள்கள் அதை உறுதிபடுத்துகின்றன்.

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பலனில்லை
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை
மாதவா, மதுசூதனா 
என்ற மனதில் துயரமில்லை

என்பதே என் கொள்கை.

மத்தபடி ஆடு,மாடு, பன்றியை எல்லாம் ஒரே போடா போட்டு யாக நெருப்பில் பார்பக்யூ செய்து சாப்பிடிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என யோசிக்தால் புத்தர் மேல கடுப்பா வருது.

:-)

திருக்குறள் சிறந்த வாழ்வியல் நூல்; உளவியல் நூல்; அறநூல்!

எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லை. 

எனவே திருக்குறளைக் கற்போம்! வாழ்வில் உயர்வோம்! 

நன்றி! வணக்கம்!   

கட்டாயமா திருக்குறளை கற்போம்.

நன்றி வணக்கம்

(புத்தரை மட்டும் மன்னிக்க மாட்டேன் :-)

--

தேமொழி

unread,
Jan 22, 2016, 2:14:10 PM1/22/16
to வல்லமை

On Friday, January 22, 2016 at 10:48:43 AM UTC-8, Neander Selvan wrote:

மத்தபடி ஆடு,மாடு, பன்றியை எல்லாம் ஒரே போடா போட்டு யாக நெருப்பில் பார்பக்யூ செய்து சாப்பிடிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என யோசிக்தால் புத்தர் மேல கடுப்பா வருது.

(புத்தரை மட்டும் மன்னிக்க மாட்டேன் :-)

பௌத்தம் ஏன் இந்தியாவில் காணாமல் போனது என்பதற்கு இன்றியமையாத சான்று கொடுத்த செல்வன் வாழ்க..

ஆனால் நீங்கள் எழுதுவதெல்லாம் மொக்கை என்று தன்னிலை விளக்கம் கொடுத்த பிறகு, இதனை நான் பிற இடங்களில் மேற்கோள் காண்பிக்க நினைத்தால் அது உதவுமா எனத் தெரியவில்லை.

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 23, 2016, 1:11:40 AM1/23/16
to vallamai
2016-01-22 13:14 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Friday, January 22, 2016 at 10:48:43 AM UTC-8, Neander Selvan wrote:

மத்தபடி ஆடு,மாடு, பன்றியை எல்லாம் ஒரே போடா போட்டு யாக நெருப்பில் பார்பக்யூ செய்து சாப்பிடிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என யோசிக்தால் புத்தர் மேல கடுப்பா வருது.

(புத்தரை மட்டும் மன்னிக்க மாட்டேன் :-)

பௌத்தம் ஏன் இந்தியாவில் காணாமல் போனது என்பதற்கு இன்றியமையாத சான்று கொடுத்த செல்வன் வாழ்க..

சமணத்துக்கும் அதே காரணம் தான் :-)

ஆனால் நீங்கள் எழுதுவதெல்லாம் மொக்கை என்று தன்னிலை விளக்கம் கொடுத்த பிறகு, இதனை நான் பிற இடங்களில் மேற்கோள் காண்பிக்க நினைத்தால் அது உதவுமா எனத் தெரியவில்லை.

 "இப்படி எல்லாம் இணையத்தில் ஒரு கருத்து இருக்கு" என்ற அளவில் மேற்கோள் காட்டலாம் :-)

Theetharappan R

unread,
Jan 24, 2016, 4:01:24 AM1/24/16
to vall...@googlegroups.com
தென்புலத்தார் என்பது நமக்குத் தெற்கே இருந்த குமரிக் கண்டம் என்பது தான் உண்மை.
அது முதல் மனிதன் தோன்றிய இடம், முதல் மனிதன் பேசிய மொழி அதாவது தமிழ். அதனைக் 
கடல் கொண்டதால் அம்மக்களைப் போற்றும் விதமாக தென்புலத்தார் என்றார்.புறநானூற்றிலும் 
சிலப்பதிகாரத்திலும் செய்திகள் உள்ளன. மதுரையிலிருந்து தென் பகுதியை பாண்டியர்கள் 
ஆண்டார்கள். ஆனால் பாண்டியன் நெடுஞ்செழியன் " மன்பதை காக்கும் தென் புலம் காவல் 
என்முதல் பிழைத்தது " என்று கூறுவதாக இளங்கோவடிகள் காவியம் யாத்திருப்பது 
"அந்தத் தென்புலம் கடல் கொண்டு விட்டது. மீதம் இருக்கும் தென் புலத்தை காக்கும் காவல் 
தன்னால் கெட்டு விட்டதாக பாண்டியன் வருந்துவதாக  அமைத்துள்ளார்.நம் முன்னோர்களைக் 
கடல் கொண்டுவிட்டதை நம் தமிழ் அறிஞர்களால் மறக்க முடியவில்லை. வள்ளுவரும் 
நம் முன்னோர்களை நினைவு படுத்திக் கொள்ள வேண்டி "தென் புலத்தார் " என்றார்.

N. Ganesan

unread,
Jan 24, 2016, 10:05:54 AM1/24/16
to வல்லமை, மின்தமிழ், housto...@googlegroups.com

மேகலை ராமமூர்த்தியும், செல்வனும் உரையாடும் இழை சுவையானது.

தமிழில் இன்னும் https://en.wikipedia.org/wiki/Demythologization அறிவியல் வழியாக நூல்களை ஆராயும்முறை
பெருகவில்லை. அதனால்தான், பழைய தமிழிலே எங்கும் இல்லாத குமரிக்கண்டம் (= லெமூரியாக் கண்டம்)
போன்ற கற்பனைகள் இணையத்தில் வளர்ந்துவருகின்றன. பஜனை மடங்களாக வாட்ஸாப், ஃபேஸ்புக்
முனைவர்கள் பிரமிடு என்பது பெருமிடு என்னும் தமிழ். தமிழர் எகிப்தை ஆண்டனர், ஜப்பானை ஆண்டனர்,
அருகே உள்ள நாடுகள், மற்றும் எத்தியோப்பியா ஆட்சி தமிழரிடம் இருந்தது என்பன போன்ற கற்பனைகள்
காண்கிறோம். த்ராவிடம் என்ற சொல்லில் தமிழ்ச்சொல் திரை என்பது இல்லை என்பதும்,
திரைவிடம் என்பது புதுச்சொல் எனவும் கவிஞர் ருத்ரா அவர்களுக்கு விளக்கி மடலெழுதினேன்.

திரு. ஹரிகி, திரு. ருத்ரா மடல்களைப் படிக்கிறபோது கதாகலாக்ஷேபம் பற்றிய செய்திகள் சில
உணரமுடிகிறது: திரு. சேசாத்திரி கொடுத்துள்ள ஃபேஸ்புக் முனைவர் ஆராய்ச்சி:

கவிஞர் ருத்ரா மடல்:
” மிக வியப்பூட்டும் மேற்கோள்களுடன் தமிழனின் தொன்மை நிறுவப்பட்டுள்ளது கண்டு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
அன்புள்ள திரு.நங்கன் அவர்களே இது போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைய உங்கள் மூலம் மின் தமிழில் இடம்பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்;பாராட்டுகிறேன். அன்புடன் ருத்ரா “

ஹரிகி பதில்கள், ருத்ரா மறுமொழி காண
”ஹரிகி அவர்களிடமிருந்து தமிழ் அமுதம்  இப்படித்தான் இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.தமிழின் தொன்மை
கிண்டலுக்கும் கொச்சைப்படுத்தலுக்கும் உரியது அல்ல. தாய்க்குத் தான் தன் குஞ்சு பொன்குஞ்சாக இருக்கும். மாற்றாந்தாய்களுக்கு அல்ல.அவர் ஆத்திகத்தில் நெய் வழிய தேன் வழிய பொழியலாம்.தமிழ் மொழியின் தொன்மை மீது காமெடி போர்வையில் சேறு அள்ளி வீச இப்படி கழுத்து நரம்பு புடைக்க கதாகாலட்சேபம் செய்ய வேண்டிய அவசியமில்லையே.

===========================================ருத்ரா”

------------------------------

 https://en.wikipedia.org/wiki/Demythologization பழந்தமிழில் இல்லாதது குமரிக்கண்டம்.

குமரிகோடு, பஃறுளி ஆறு இன்றும் கன்யாகுமரி மாவட்டத்தில் உண்டு.
அஃது - அது, அஃதை எடு - அதை எடு என்னுமாப்போல் பஃறுளி ஆறு, பறுளி ஆறு ஆகி, பறளி ஆறு எனப்படுகிறது.
இந்த ஆறு கடலில் கலக்குமிடத்தில் கிடைக்கும் மீன் பறளா (மாஹிமாஹி) ஆகலாம்.

குமரிக்கோடு என கொங்குநாட்டு வஞ்சி - சேரர் தலைநகர் - இளங்கோ அடிகள்
தன் தமிழ் தேசிய நாவலில் கொற்றிக்கோடு என்னும் இயற்பெயரைச் சற்றே மாற்றியமைக்கிறார்.
இயற்கையழகு கொஞ்சும் கொற்றிகோடு (=குமரிக்கோடு), அருகே ஓடும் பறுளி ஆறு (பஃறுளி ஆறு)
நாவல் புதினத்திற்காக பயன்பட்டன. அதைவைத்து ஆஸ்திரேலியா அருகே குமரிக்கண்டம் தலைநகர்
தென்மதுரை மேப் போடுவது விஞ்ஞானத்துக்கு எதிரானது.

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்  திசை ஆண்ட தென்னவன் வாழி! - சிலம்பு

தமிழ்ச் சமணர்களின் இலக்கண இலக்கியக் கொடைகளை மறையவைக்க ஏற்பட்ட
கற்பனை: சைவர்கள் செய்தது அகத்தியர் தமிழின் முதல் இலக்கணம் தந்தார்,
மூணு சங்கம், முதற் சங்கம் தாபித்தவர் அகத்தியர். இவையெல்லாம் இடைக்கால
கதைகள் - இறையனார் களவியல், ... - என முதலில் அறிவித்தவர் பேரா. கா. நமச்சிவாய முதலியார்
1920களில். பின்னர் பலர் எழுதிவிட்டார்கள்.  அண்மையில் ஃழான் - லுய்க் எழுதிய அகத்தியர் கட்டுரை
படிக்கவும். 

பாவாணர் ஐயாவின் தமிழ் உலக மொழிகள் எல்லாவற்றையும் ஈந்தது, குமரிக்கண்டம்
போன்ற ஆய்வுகளை விட்டு இணைய உலகம் மீள வேண்டும்.

விரிக்கிற் பெருகும்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 24, 2016, 10:28:48 AM1/24/16
to வல்லமை, மின்தமிழ், Theodore Baskaran

On Sunday, January 24, 2016 at 1:01:24 AM UTC-8, THEETHARAPPAN R wrote:
தென்புலத்தார் என்பது நமக்குத் தெற்கே இருந்த குமரிக் கண்டம் என்பது தான் உண்மை.
அது முதல் மனிதன் தோன்றிய இடம், முதல் மனிதன் பேசிய மொழி அதாவது தமிழ். அதனைக் 
கடல் கொண்டதால் அம்மக்களைப் போற்றும் விதமாக தென்புலத்தார் என்றார்.புறநானூற்றிலும் 
சிலப்பதிகாரத்திலும் செய்திகள் உள்ளன. மதுரையிலிருந்து தென் பகுதியை பாண்டியர்கள் 
ஆண்டார்கள். ஆனால் பாண்டியன் நெடுஞ்செழியன் " மன்பதை காக்கும் தென் புலம் காவல் 
என்முதல் பிழைத்தது " என்று கூறுவதாக இளங்கோவடிகள் காவியம் யாத்திருப்பது 
"அந்தத் தென்புலம் கடல் கொண்டு விட்டது. மீதம் இருக்கும் தென் புலத்தை காக்கும் காவல் 
தன்னால் கெட்டு விட்டதாக பாண்டியன் வருந்துவதாக  அமைத்துள்ளார்.நம் முன்னோர்களைக் 
கடல் கொண்டுவிட்டதை நம் தமிழ் அறிஞர்களால் மறக்க முடியவில்லை. வள்ளுவரும் 
நம் முன்னோர்களை நினைவு படுத்திக் கொள்ள வேண்டி "தென் புலத்தார் " என்றார்.

நீங்கள் குறிப்பிடும் குமரிக்கண்டம் எங்காவது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறதா?
உண்டெனில் எங்கே என்று தெரிவியுங்கள். நான் படிக்காத, கேள்விப்படாத நூலாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

திரு. செல்வன் கூற்றும் சிந்திக்கலாம்:
”அறிவியல் துறையில் (நிலவியல், ஜியாக்ரபி போன்ற) முனைவர் பட்டம் பெற்ற தமிழர் அல்லாத ஒரே ஒரு விஞ்ஞானி குமரிக்கண்டத்தை ஒப்புகொள்கிறாரா? ஆம் எனில் பெயரை குறிப்பிடுங்கள்.”

யாரும் இல்லை. சுமதி ராமசாமியின் மிச்சிகன் பல்கலை புஸ்தகம், நிலவியலாளர் ஜெயகரனின் நூல் (ஊர்: தாராபுரம், தியடோர் பாஸ்கரனின் தம்பி)
படித்து செல்வனோ, மேகலையோ, தேமொழியோ கட்டுரை எழுத வேண்டுகோள்.

நா. கணேசன்

மேகலை ராமமூர்த்தியும், செல்வனும் உரையாடும் இழை சுவையானது.

தமிழில் இன்னும் https://en.wikipedia.org/wiki/Demythologization அறிவியல் வழியாக நூல்களை ஆராயும்முறை
பெருகவில்லை. அதனால்தான், பழைய தமிழிலே எங்கும் இல்லாத குமரிக்கண்டம் (= லெமூரியாக் கண்டம்)
போன்ற கற்பனைகள் இணையத்தில் வளர்ந்துவருகின்றன. பஜனை மடங்களாக வாட்ஸாப், ஃபேஸ்புக்
முனைவர்கள் பிரமிடு என்பது பெருமிடு என்னும் தமிழ். தமிழர் எகிப்தை ஆண்டனர், ஜப்பானை ஆண்டனர்,
அருகே உள்ள நாடுகள், மற்றும் எத்தியோப்பியா ஆட்சி தமிழரிடம் இருந்தது என்பன போன்ற கற்பனைகள்
காண்கிறோம். த்ராவிடம் என்ற சொல்லில் தமிழ்ச்சொல் திரை என்பது இல்லை என்பதும்,
திரைவிடம் என்பது புதுச்சொல் எனவும் கவிஞர் ருத்ரா அவர்களுக்கு விளக்கி மடலெழுதினேன்.

திரு. ஹரிகி, திரு. ருத்ரா மடல்களைப் படிக்கிறபோது கதாகலாக்ஷேபம் பற்றிய செய்திகள் சில
உணரமுடிகிறது: திரு. சேசாத்திரி கொடுத்துள்ள ஃபேஸ்புக் முனைவர் ஆராய்ச்சி:

கவிஞர் ருத்ரா மடல்:
” மிக வியப்பூட்டும் மேற்கோள்களுடன் தமிழனின் தொன்மை நிறுவப்பட்டுள்ளது கண்டு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
அன்புள்ள திரு.நங்கன் அவர்களே இது போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிறைய உங்கள் மூலம் மின் தமிழில் இடம்பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்;பாராட்டுகிறேன். அன்புடன் ருத்ரா “

ஹரிகி பதில்கள், ருத்ரா மறுமொழி காண
”ஹரிகி அவர்களிடமிருந்து தமிழ் அமுதம்  இப்படித்தான் இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.தமிழின் தொன்மை
கிண்டலுக்கும் கொச்சைப்படுத்தலுக்கும் உரியது அல்ல. தாய்க்குத் தான் தன் குஞ்சு பொன்குஞ்சாக இருக்கும். மாற்றாந்தாய்களுக்கு அல்ல.அவர் ஆத்திகத்தில் நெய் வழிய தேன் வழிய பொழியலாம்.தமிழ் மொழியின் தொன்மை மீது காமெடி போர்வையில் சேறு அள்ளி வீச இப்படி கழுத்து நரம்பு புடைக்க கதாகாலட்சேபம் செய்ய வேண்டிய அவசியமில்லையே.

===========================================ருத்ரா”

------------------------------

 https://en.wikipedia.org/wiki/Demythologization பழந்தமிழில் இல்லாதது குமரிக்கண்டம்.

குமரிகோடு, பஃறுளி ஆறு இன்றும் கன்யாகுமரி மாவட்டத்தில் உண்டு.
அஃது - அது, அஃதை எடு - அதை எடு என்னுமாப்போல் பஃறுளி ஆறு, பறுளி ஆறு ஆகி, பறளி ஆறு எனப்படுகிறது.
இந்த ஆறு கடலில் கலக்குமிடத்தில் கிடைக்கும் மீன் பறளா (மாஹிமாஹி) ஆகலாம்.

குமரிக்கோடு என கொங்குநாட்டு வஞ்சி - சேரர் தலைநகர் - இளங்கோ அடிகள்
தன் தமிழ் தேசிய நாவலில் கொற்றிக்கோடு என்னும் இயற்பெயரைச் சற்றே மாற்றியமைக்கிறார்.
இயற்கையழகு கொஞ்சும் கொற்றிகோடு (=குமரிக்கோடு), அருகே ஓடும் பறுளி ஆறு (பஃறுளி ஆறு)
நாவல் புதினத்திற்காக பயன்பட்டன. அதைவைத்து ஆஸ்திரேலியா அருகே குமரிக்கண்டம் தலைநகர்
தென்மதுரை மேப் போடுவது விஞ்ஞானத்துக்கு எதிரானது.

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்  திசை ஆண்ட தென்னவன் வாழி! - சிலம்பு

Jaisankar Jaganathan

unread,
Jan 24, 2016, 10:31:23 AM1/24/16
to vall...@googlegroups.com
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் 47 நாடுகளை கடல் கொண்டது என்று எழுதியிருக்காரு

Anna Kannan

unread,
Jan 24, 2016, 11:51:20 AM1/24/16
to Vallamai

கடல்கோள் தமிழகத்தில் ஏற்பட்டது குறித்த செய்திகளைத் திரட்டினால், குமரிக் கண்டம் குறித்த செய்திகளும் வெளிவரும்.

ஒரிசா பாலு, ஓரீராண்டுகளுக்கு முன், கடலடியில் இதற்கான சுவடுகள் உள்ளதாக எழுதியிருந்தார்.

ஆழ்கடலில் நவீன கருவிகளுடன் ஆராய்ந்தால், பண்டைய வரலாற்றின் முக்கிய சான்றுகள் கிடைக்கும். இதற்கான ஆய்வுத் திட்டங்களை நேஷனல் ஜியாகிரபிக், டிஸ்கவரி உள்ளிட்ட தொலைக்காட்சிகளுக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளுக்கும் சமர்ப்பிக்கலாம் என அவருக்குப் பரிந்துரைத்தேன்.

இவை ஒரு புறம் இருக்க, மேகலா - செல்வன் வாதங்கள் மிகச் சிறப்பாக வளர்ந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். சட்டென்று மின்னிய கீற்றாக, ஒன்று கண்டேன். வல்லமைக் குழுமத்தின் வலுவான கலந்துரையாடல்கள் பலவற்றிலும் அமெரிக்க - கனடா வாழ் தமிழர்களின் பங்களிப்பு இருக்கிறது.

செல்வன், தேமொழி, மேகலா, பழமைபேசி, ராஜம், வேந்தன் அரசு, ஜெயபாரதன், செல்வகுமார் உள்ளிட்டோரின் வாதங்களில் துணிச்சலும் கூர்மையும் பளிச்சிடுகின்றன. இதற்கு அமெரிக்க வளமும் வாழ்வியலும் காரணங்களா என்றும் சிந்தித்தேன்.

உங்களால் தமிழரின் கருத்து வளம் கூடுகிறது. நண்பர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்.

செல்வன்

unread,
Jan 24, 2016, 8:03:17 PM1/24/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
நன்றி கணேசர் ஐயா

தென்புலத்தார் என்பது குமரிக்கண்டத்தினர் (!) என்பது போன்ற விளக்கங்களை படிக்கையில் செம்மல் அவர்கள் ஏன் கோபப்படுகிறார் என்பதை உணர முடிகிறது :-)

குமரிக்கண்டம் போன்ற ஒரு விசயத்தை நிலவியல், புவியியல், அறிவியல், இலக்கியம் என பலதரப்பிலும் அணுகினால் தான் தெளிவு கிடைக்கும். அப்படி அணுகி பதிலும் தெளிவாக வரலாற்று ஆசிரியர்களால் கூறப்பட்டு உள்ளது. ஜெயகரன், சுமதி ராமசாமி போன்றோரின் கட்டுரைகளில் இதை தெளீவாக எழுதியே உள்ளார்கள் (ஜெயகரனின் கட்டுரையில் எனக்கு கொஞ்சம் மாற்றுகருத்து உள்ளது. அது பிறிதொரு இழையில் பேசுவோம்). அவை அதிகமாக மக்களை சென்று சேரவேண்டும் என்பதை இந்த எபிசோடின் மூலமாக தெரிந்துகொள்கிறேன்.

செல்வன்

unread,
Jan 24, 2016, 8:04:29 PM1/24/16
to vallamai
நன்றி அண்ணாகண்ணன் அவர்களே. தொடர்ந்து உங்கள் மடலில் உள்ளதுபோல நல்ல பங்களிப்பை அளிக்க விழைகிறேன்

coral shree

unread,
Jan 24, 2016, 8:57:59 PM1/24/16
to vallamai
அசத்துகிறீர்கள் நண்பர்களே. வாழ்த்துகள். தொடருங்கள்.பயனுள்ள பல தகவல்கள்!  நன்றி.

அன்புடன்
பவளா

2016-01-24 17:04 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:
நன்றி அண்ணாகண்ணன் அவர்களே. தொடர்ந்து உங்கள் மடலில் உள்ளதுபோல நல்ல பங்களிப்பை அளிக்க விழைகிறேன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Hari Krishnan

unread,
Jan 24, 2016, 11:11:06 PM1/24/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com

2016-01-24 20:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
திரு. ஹரிகி, திரு. ருத்ரா மடல்களைப் படிக்கிறபோது கதாகலாக்ஷேபம் பற்றிய செய்திகள் சில
உணரமுடிகிறது: திரு. சேசாத்திரி கொடுத்துள்ள ஃபேஸ்புக் முனைவர் ஆராய்ச்சி:

உயர்திரு நாசா கணேசன் அவர்களுடைய மடலைப் படிக்கிறபோது சகுனியில் கொஞ்சம், கோயபல்சை மிஞ்சும் பல செய்திகளை உணரமுடிகிறது.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Jan 25, 2016, 7:08:10 AM1/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com

On Sunday, January 24, 2016 at 5:03:19 PM UTC-8, செல்வன் wrote:
நன்றி கணேசர் ஐயா

தென்புலத்தார் என்பது குமரிக்கண்டத்தினர் (!) என்பது போன்ற விளக்கங்களை படிக்கையில் செம்மல் அவர்கள் ஏன் கோபப்படுகிறார் என்பதை உணர முடிகிறது :-)

மரு. செம்மல் எழுதிய மடல்களை நான் படிக்கவில்லை. நிலவியல் விஞ்ஞானி ஜெயகரன், தமிழ்வரலாற்று பேரா. சுமதி ராமசாமி (19,20 நூற்றாண்டு) நூல்களை அவர் படிக்கவேண்டும். அகத்தியர் பற்றி கா. நமச்சிவாயர், காஞ்சி அனந்தநாத நயினார், கே. என். சீனிவாசபிள்ளை, .... சுவலெபில், ஃழான் கட்டுரை தெளிவு தரும்.

நா. கணேசன்
 
குமரிக்கண்டம் போன்ற ஒரு விசயத்தை நிலவியல், புவியியல், அறிவியல், இலக்கியம் என பலதரப்பிலும் அணுகினால் தான் தெளிவு கிடைக்கும். அப்படி அணுகி பதிலும் தெளிவாக வரலாற்று ஆசிரியர்களால் கூறப்பட்டு உள்ளது. ஜெயகரன், சுமதி ராமசாமி போன்றோரின் கட்டுரைகளில் இதை தெளீவாக எழுதியே உள்ளார்கள் (ஜெயகரனின் கட்டுரையில் எனக்கு கொஞ்சம் மாற்றுகருத்து உள்ளது. அது பிறிதொரு இழையில் பேசுவோம்). அவை அதிகமாக மக்களை சென்று சேரவேண்டும் என்பதை இந்த எபிசோடின் மூலமாக தெரிந்துகொள்கிறேன்.

Reply all
Reply to author
Forward
0 new messages