ஓசி என்ற சொல் எப்படி வந்தது?

9 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Feb 27, 2026, 8:22:02 PM (11 days ago) Feb 27
to vallamai

/// நமக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஓசியில் கிடைத்தது என்கிறோம். ஓசி என்ற சொல் எப்படி வந்தது?

முதன் முதலாக 1764 இல் சென்னை, மும்பை மற்றும் கல்கத்தாவில் அப்போதைய கவர்னர் வாரன் ஹேஸ்டிங் என்பவரால் தபால் நிலையங்கள் தொடங்கப்பட்டன.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து அரசாங்கக் கடிதங்களும் ஆவணங்களும் மற்ற கோப்புகளும் தபால் மூலமாக கப்பலில் அனுப்பப்பட்டு வந்தன. இதில் ஒவ்வொரு கடிதத்திலும் தபால்தலைகளை கடிதத்தின் எடைக்கேற்ப மதிப்பீடு செய்யப்பட்டு ஒட்டப்பட்டது.

இங்கே இருக்கும் ஆங்கிலேய அரசிடமிருந்து இங்கிலாந்தில் இருக்கும் தலைமை அரசாங்கத்திற்கு எதற்காக வீண் செலவு என்று யோசித்த ஆங்கில அரசு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. அதாவது அரசாங்கம் சம்பந்தப்பட்ட கடிதப் போக்குவரத்துகளில்  தபால்தலைகளை ஒட்டி வீண் செலவு செய்வதை தவிர்ப்பதற்காக அக்கடிதங்களில் OCS (on company service) என்று அச்சிட்டுக் கட்டணமின்றி அனுப்பப்பட்டது.

அதாவது OCS என்றால் பணம் செலவு செய்யாமல் கடிதங்களை அனுப்புதல் என்று பின்னாட்களில் தெரியவந்ததைத் தொடர்ந்து 
ஓசிஎஸ் என்ற வார்த்தை மக்களிடையே பிரபலமடைந்தது. காலப்போக்கில் ஓசிஎஸ் என்ற வார்த்தை ஓசி என சுருங்கியது அதன் பிறகு எவரேனும் இலவசமாக பணம் ஏதும் கொடுக்காமல் பொருட்களை வாங்கினால் அவரை ஓசி என்று அழைக்கும் பழக்கம் வந்தது.

OCS இன்றும் இந்திய அரசுத் துறைகளில் இருந்து அனுப்பப்படும் தபாலில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இப்போது அதன் பெயர் IGS Only (Indian government service only)///


தெரிவு: சக
Reply all
Reply to author
Forward
0 new messages