இந்த வார வல்லமையாளர்: கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப.

2 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 30, 2018, 8:32:36 AM7/30/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, Gopalan Balachandhran, Dr.Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Caldwell Velnambi, Chitra Mahesh
http://www.vallamai.com/?p=86573

இந்த வார வல்லமையாளர் (272)

நா. கணேசன்

இந்த வார வல்லமையாளராகத்  திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப.  அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் பெட்னா திருவிழா கோலாகலமாக நிகழ்ந்தது. பல முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டில் இருந்துவந்து கலந்துகொண்டனர். என்றுமில்லா வகையில் 5000 பேர்கள் பங்கேற்பு.

இந்திய வரலாற்றில் தமிழின் ஆழமான பங்கு வியத்தற்குரியது. இந்தியப் பல்கலைகளில் மட்டுமன்றி மேலை உலகத்திலும், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் உயராய்வுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை ஊக்குவிக்குமுகமாக, பேராசிரியர் பதவிகள் நல்ல பல்கலைகளில் ஏற்பட்டுவருகின்றன. பெர்க்கிலியிலும், ஹார்வர்டிலும் நிறுவப்பட்ட தமிழ்ப் பீடம் போல, தென் மாநிலம் ஆகிய டெக்சாஸின் பெருநகர் ஹூஸ்டன் பல்கலையிலும் தமிழ்ப்பீடம் அமைக்க இருப்பதற்கான முயற்சித் தொடக்கத்தை ‘சாம்’ சொ. கண்ணப்பன் அறிவித்தார். முனைவர் நா. கணேசன் “தமிழ்த்தாய் கொலுவிருக்கும் கல்விச்சாலைகள் எங்குமிருக்கலாம். ஆனால் அவ்வன்னையின் திசை தென்திசை. அங்கே ஹூஸ்டனில் தமிழ்த்தாய் அமர்ந்து ஆய்வுகளை அலங்கரிக்க உதவுங்கள்” என்றார்.

மேலைநாடுகளில் 20+ தமிழ்ப் பீடங்கள் உயர்பல்கலைக் கழகங்களில் அமையும்போழ்து தமிழகப் பேராசிரியன்மார் வந்து ஆய்வுகளைக் கற்பிக்கவும், கற்கவும் வாய்ப்பு ஏற்படும்; அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் பிறக்கும் தமிழ் வமிசாவளியினர் தமிழ், திராவிட மொழியியல், கலாச்சாரம், தொல்லியல், கலைவரலாறு, மாந்தவியல், சமூகவியல், நிகழ்த்துகலைகள்… எனப் பல்வேறு துறைகளில் பேராசிரியர்களாய் புதிய பார்வை தரும் நூல்களை வாழையடி வாழையென வருங்காலத் தலைமுறையினர் எழுதத் துணை செய்யும். அமெரிக்க இளந்தமிழர்:

இவற்றை எல்லாம் உணர்ந்தே மனோன்மணீயம் பெ. சுந்தரனார் மேற்குலக – கிழக்குலக ஆய்வுகள் காரணமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் தந்தார். இன்று தமிழ்நாட்டிலும், அரசாங்க விழாக்களிலும் உலகெங்கும் தமிழ்ப் பள்ளிகளிலும், தமிழ் மன்றங்களிலும் எந்த நிகழ்ச்சி ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தொடங்குகிறது.

பெட்னா திருவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து:

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

இந்த வார வல்லமையாளர்: திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப (I.A.S)

ஃபெட்னா விழாவில் அனைவர் மனத்தையும் கவர்ந்தது இந்திய ஆட்சியாளர் பதவியில் மேற்கு வங்கத்தில் பணியாற்றிய கோ. பாலச்சந்திரன். இனிமையாகப் பழகும் அவர் தமிழ்மரபில் ஆழங்கால் பட்டவர்.  சிவகாசியைச் சார்ந்த இவர் ஹார்வர்ட் தமிழ்ப்பீடத்திற்கு அமெரிக்க டாலர் 50000-க்கு மேல் நன்கொடை அளித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பாலச்சந்திரன் சொற்பொழிவுகளை யுட்யூப் போன்ற தளங்களில் கேட்டு மகிழலாம். https://www.youtube.com/watch?v=ciS3Rg3XI5A&

ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்துக்குச் சிறப்பு விருந்தினராக இந்த வாரம் திரு. பாலச்சந்திரனை அழைத்தோம். “அற்றைத் தமிழர் நோக்கும், இற்றைத் தமிழர் போக்கும்” என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார். பின்னர், ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் $-ல் தமிழ்ப் பல்கலை அமைக்கும் பூர்வாங்கக் கூட்டத்தில் பல்கலை உயர் அதிகாரிகள், Academic Dean Dr. Tillis போன்றவர்களோடு பேசக் கலந்துகொண்டார். பியர்லாந்து நகர மேயர், டாம் ரீட் கலந்துகொண்டு பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ் தொடர்பான, அதன் ஆய்வுகள் கல்வி உலகிலும், இணைய உலகிலும் வேரூன்ற திரு கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப. என்றும் உதவ வேண்டும் என வாழ்த்தி அன்னாரை இந்த வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை மின்னிதழ் பெருமை அடைகிறது.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.g...@gmail.com vallama...@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

Share

About the Author

முனைவர் நா.கணேசன்

முனைவர் நா.கணேசன் has written 8 stories on this site.

முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html

AnnaKannan K

unread,
Jul 30, 2018, 9:13:57 AM7/30/18
to Vallamai, மின்தமிழ், jeeb...@gmail.com, Dr.Krishnaswamy Nachimuthu, Sirpi Balasubramaniam, cald...@gmail.com, chitrara...@gmail.com
வல்லமையாளர்  கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப.  அவர்களுக்குப் பாராட்டுகள்.  “அற்றைத் தமிழர் நோக்கும், இற்றைத் தமிழர் போக்கும்” என்ற தலைப்பிலான  அவரது உரையைக் கேட்டேன். நல்ல குரலும் உச்சரிப்பும் பேச்சாற்றலும் வெளிப்படப் பேசியுள்ளார். 

திருக்குறளை உலகப் பொது மறை எனக் கூற வேண்டாம். உலகப் பொது முறை என்போம். அது, மறைக்க வேண்டியது இல்லை எனப் பேசியுள்ளார். வேதம் என்ற பொருளில் மறை என்றனர். கோ. பாலச்சந்திரன், மறைப்பு என்ற பொருளைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவருடன் தொடர்பில் உள்ளோர், அவரது கவனத்திற்கு இதனை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன். 

தமிழால் ஒன்றுபட வேண்டும் என்ற அவரது கருத்து, வலிமை மிக்கது. பற்பல இலக்கியங்களையும் இலக்கிய ஆசிரியர்களையும் மேற்கோள் காட்டி, ஆற்றொழுக்காகப் பேசியுள்ளார். திருவள்ளுவருக்கான அவரது புகழ் மொழிகள், மிக அழகு.

திங்., 30 ஜூலை, 2018, பிற்பகல் 6:02 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pavala

unread,
Jul 30, 2018, 9:26:51 AM7/30/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, Gopalan Balachandhran, Dr.Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Caldwell Velnambi, Chitra Mahesh
அருமையான தேர்விற்கு உளமார்ந்த வாழ்த்துகள் ஐயா. ஃபெட்னா நிகழ்வில் நேரில் பங்கு பெறும் வாய்ப்பும், எமது ‘தமிழ் புத்தமும் கிழக்காசிய வணிகமும்’ என்ற நூலை வெளியிடவும் வாய்ப்பமைந்ததில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த சகோ.கால்டுவெல் அவர்களும் அவர்தம் குழுவினரும் போற்றுதலுக்குரியவர்கள். அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள். அயலகத்தில் அன்னை தமிழ் மென்மேலும் வளம் பெற அரும் பணியாற்றும் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்! வாழ்க வளமுடன்!

அன்புடன்
பவள சங்கரி

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

Share

About the Author

முனைவர் நா.கணேசன்

முனைவர் நா.கணேசன் has written 8 stories on this site.

முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari

Erode.
Tamil Nadu.
Reply all
Reply to author
Forward
0 new messages