முரண்கள்

203 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Apr 16, 2025, 2:38:43 PMApr 16
to vallamai
நம் கொள்கைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும் இடையில் தான் எத்தனை முரண்பாடுகள்...

///நாம் என்னதான் வடவர்களைத்  திட்டினாலும் அவர்கள் மொழியை வெறுத்தாலும் அவர்களுடைய கலாச்சாரம் இங்கு வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. 
பஞ்சாபி சுடிதார் இங்கு வெகு இயல்பான உடையாக மாறி ரொம்ப நாள் ஆச்சு. 
பானி பூரி, போண்டா வடையை மிஞ்சி இப்போது பாப்புலர் ஸ்நாக்ஸ். 
 வீரத் தமிழ்த் திருமணங்கள் முழுக்க முழுக்க வட இந்திய பாணிக்கு மாறிவிட்டன. மார்வாடி உடையலங்காரங்கள், ஹல்தி, மெஹந்தி , சங்கீத் எல்லாம் கட்டாயம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான ஒத்திகைகள், உடையலங்காரத் திட்டங்கள், வீடியோ செலெக்ஷன் அனைத்தும் மாதக்கணக்கில் நடக்கின்றன ரிசப்ஷன் மெனுவில் ரூமாலி ரோட்டி, ஸ்வீட்ஸ் தொடங்கி இட்லி தோசையை தவிர அனைத்தும் வட இந்திய உணவுகள்தான்.
பாராத் இன்னொரு கட்டாயம். கோஷ்டியாக ஆடிக்கொண்டே உள்ளே வருவதும், ஒரு பந்தலை தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு நடப்பதும், மேடையில் மணமக்கள் மற்றும் அவர்கள் தாத்தா பாட்டி உட்பட அனைவரும் குரூப் டான்ஸ் ஆடுவதும் , கிட்டத்தட்ட 'ஹம் ஆப்கே ஹை கவுன்' படத்தை மீண்டும் பார்ப்பது போல இருக்கிறது !!!

படித்ததில் பகிர்வது///


தெரிவு: சக 

Raju Rajendran

unread,
Apr 16, 2025, 11:47:10 PMApr 16
to vall...@googlegroups.com
மருதாணி,நலங்கு பாடல் ஏற்கனவே உண்டு.  புட்டகம் உடுத்தி நீர் விளையாட்டு செய்வார். இன்று ஈராழிகளை இயக்க பெண்களுக்கு  சுடிதார் வசதியானது.

வியா., 17 ஏப்., 2025, 12:08 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv5LDXc4%2BEv5v_UC7CEm5cKQjsQ7Jaguhpy%3D2z%3DzHRD3w%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Apr 17, 2025, 12:50:50 AMApr 17
to vallamai
On Thu, 17 Apr 2025, 9:17 am Raju Rajendran, <raju.ra...@gmail.com> wrote:
///மருதாணி, நலங்கு பாடல் ஏற்கனவே உண்டு./// 

மருதாணி வைக்கும் வழக்கம் பண்டு தொட்டுத் தமிழகத்தில் இருந்து வரும் பழக்கம் தான் எனினும்; திருமணத்தின் போது அதை ஒரு தனிப்பட்ட விழாக் கூறாகக் கொண்டாடும் வழக்கம் இன்றைய புதுப் போக்கு என்பதை மறுக்க இயலாது.

///புட்டகம் உடுத்தி நீர் விளையாட்டு செய்வார். இன்று ஈராழிகளை இயக்க பெண்களுக்கு  சுடிதார் வசதியானது.///

சத்தியமாகப் புரியவில்லை ஐயா... ஒருவேளை எங்கள் பக்கம் சீர்திருத்தத் திருமணம் தான் மிகுதியான நடைமுறை என்பதால் புரியாமல் போனதோ என்னவோ!?!?!? 

'நலங்கு வைத்தல்' என்பது கூட எங்கள் திருமணத்தில் கிடையாது; அந்த சொல் மட்டும் தான் கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர; அது என்ன என்று தெரியாது. 
சக

Raju Rajendran

unread,
Apr 18, 2025, 10:07:21 AMApr 18
to vall...@googlegroups.com


வியா., 17 ஏப்., 2025, 10:20 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
On Thu, 17 Apr 2025, 9:17 am Raju Rajendran, <raju.ra...@gmail.com> wrote:
///மருதாணி, நலங்கு பாடல் ஏற்கனவே உண்டு./// 

மருதாணி வைக்கும் வழக்கம் பண்டு தொட்டுத் தமிழகத்தில் இருந்து வரும் பழக்கம் தான் எனினும்; திருமணத்தின் போது அதை ஒரு தனிப்பட்ட விழாக் கூறாகக் கொண்டாடும் வழக்கம் இன்றைய புதுப் போக்கு என்பதை மறுக்க இயலாது.

///புட்டகம் உடுத்தி நீர் விளையாட்டு செய்வார். இன்று ஈராழிகளை இயக்க பெண்களுக்கு  சுடிதார் வசதியானது.///

சத்தியமாகப் புரியவில்லை ஐயா... ஒருவேளை எங்கள் பக்கம் சீர்திருத்தத் திருமணம் தான் மிகுதியான நடைமுறை என்பதால் புரியாமல் போனதோ என்னவோ!?!?!? 

'நலங்கு வைத்தல்' என்பது கூட எங்கள் திருமணத்தில் கிடையாது; அந்த சொல் மட்டும் தான் கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர; அது என்ன என்று தெரியாது. 

நலங்கு என்பது முன்பு தனித்தனியே மணமக்கள் வீடுகளில் அவரவர் உறவினர்களால் மஞ்சள் அரிசி சொரிந்து வாழ்த்தும் நிகழ்ச்சி. அப்போது நலங்கு பாட்டு பாடுவது வழக்கம். இப்போது மண்டபங்களில் இணைந்து நடத்துவதால் நலங்கு பாட்டு இல்லாமல் போனது.

புட்டகம் நீர் விளையாட்டு ஏற்ப புடவையை கட்டிக்கொள்வது. ( இதற்கு சான்று தேடுகிறேன். கிட்டவில்லை. நினைவிலிருந்து சொன்னது)

ஈராழி= two wheeler

 
சக

வியா., 17 ஏப்., 2025, 12:08 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
நம் கொள்கைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும் இடையில் தான் எத்தனை முரண்பாடுகள்...

///நாம் என்னதான் வடவர்களைத்  திட்டினாலும் அவர்கள் மொழியை வெறுத்தாலும் அவர்களுடைய கலாச்சாரம் இங்கு வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. 
பஞ்சாபி சுடிதார் இங்கு வெகு இயல்பான உடையாக மாறி ரொம்ப நாள் ஆச்சு. 
பானி பூரி, போண்டா வடையை மிஞ்சி இப்போது பாப்புலர் ஸ்நாக்ஸ். 
 வீரத் தமிழ்த் திருமணங்கள் முழுக்க முழுக்க வட இந்திய பாணிக்கு மாறிவிட்டன. மார்வாடி உடையலங்காரங்கள், ஹல்தி, மெஹந்தி , சங்கீத் எல்லாம் கட்டாயம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான ஒத்திகைகள், உடையலங்காரத் திட்டங்கள், வீடியோ செலெக்ஷன் அனைத்தும் மாதக்கணக்கில் நடக்கின்றன ரிசப்ஷன் மெனுவில் ரூமாலி ரோட்டி, ஸ்வீட்ஸ் தொடங்கி இட்லி தோசையை தவிர அனைத்தும் வட இந்திய உணவுகள்தான்.
பாராத் இன்னொரு கட்டாயம். கோஷ்டியாக ஆடிக்கொண்டே உள்ளே வருவதும், ஒரு பந்தலை தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு நடப்பதும், மேடையில் மணமக்கள் மற்றும் அவர்கள் தாத்தா பாட்டி உட்பட அனைவரும் குரூப் டான்ஸ் ஆடுவதும் , கிட்டத்தட்ட 'ஹம் ஆப்கே ஹை கவுன்' படத்தை மீண்டும் பார்ப்பது போல இருக்கிறது !!!

படித்ததில் பகிர்வது///


தெரிவு: சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv5LDXc4%2BEv5v_UC7CEm5cKQjsQ7Jaguhpy%3D2z%3DzHRD3w%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6h5T-2kUDyhvP49%3DPf4Z3vFH-ttNi65%3DY2rux4dUzv8eQ%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 20, 2025, 3:38:33 AMApr 20
to vallamai
///#சரிகமபாக்களும்_நாமும்

1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.

2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.

3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
#npteachers

4.விஜய் டிவியும், இன்னும் சில டிவி சேனல்களும் போட்டியில் பங்கேற்கும் குழந்தைகளின் பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டுத் துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களைப் பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி டிவி சேனல்களோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால் தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டி விடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.

சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்யப் பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக!

நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.

இந்தச் சிறு பெண்கள் பாடும் காதல் பாட்டுகள், குத்துப் பாடல்கள், விரச வரிகள் - ச்சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!

இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.

1.நேத்து ராத்‌த்தீரி யம்மா.
2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா

இன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.

இதைப் பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பது தான் வேதனை.

இந்தப் பதிவு உங்கள் மனதிற்கு நியாயமாகப் பட்டால் இதை தயவு செய்து பகிரவும்.
இது ஒரு பகிர்வுப் பதிவு.
copied மகிழாவின் பக்கம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Image - AI ///

https://www.facebook.com/share/p/1BbXQNUddU/

வாசித்தவுடன் மனதைப் பாதித்தது... ஒழுக்கம் தொடர்பாகப் பொதுமக்கள் இடையே நிலவும் முரண்பட்ட நடவடிக்கை எனத் தோன்றியது. 
சக 

kanmani tamil

unread,
Apr 21, 2025, 1:17:35 PMApr 21
to vallamai
அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் முரண்படுத்திக் காட்டும் கவிதை 

/// கல்லிருக்க குழவியாடினது
அது அந்தக் காலம்!
குழவியிருக்கக் கல்லாடுறது
இந்தக் காலம்!!

கால் கடுகடுக்கப் படியேறினது
அது அந்தக் காலம்!
நிலையில் நாம நிக்க, படி ஏறுறது
இந்தக் காலம்!!

அவசரத்துக்கு வெளிய
ஓடினது
அது அந்தக் காலம்!
அவசரம்ன்ன உடனே
உள்ள ஓடியாறது
இந்தக் காலம்!!

சுட்டுப் பிடிச்சது
அது அந்தக் காலம்!
பிடிச்சதை சுடுறது
இந்தக் காலம்!!

கிடைச்சதை ஒப்படைக்க
வெள்ளிடை மன்றம்,
அது அந்தக் காலம்!
தொலைஞ்சதைக் கண்டுபிடிக்க
காவல் நிலையம்,
இந்தக் காலம்!!

பாட்டுக்கு தாளம்
அது அந்தக் காலம்!
தாளத்துக்கு பாட்டு
இந்தக் காலம்!!

அலம்பிட்டு உள்ள போனது
அது அந்தக் காலம்!
உள்ள போயிட்டு அலம்புறது
இந்தக் காலம்!!

மொடாவுல காசு
அது அந்தக் காலம்!
காசுக்கு மொடாத்தண்ணி
இந்தக் காலம்!!

அடி வாங்கினவன் கத்தறது
அது அந்தக் காலம்.
அடி கொடுக்கறவன் (கராத்தேயில்) கத்தறது
இந்தக் காலம்.

யானைப் படை இருந்தது
அது அந்தக் காலம்
பூனைப் படை இருப்பது
இந்தக் காலம்

கந்தல் அணிந்தால் ஏழை என்பது
அது அந்தக் காலம்
அதையே அணிந்து மினிக்கிட்டு
ஃபேஷன் என்பது இந்தக் காலம்.

ஏழ்மையினால் கூழ் அருந்தியது
அது அந்தக் காலம்
நோயினால் கூழ் குடிப்பது
இந்தக் காலம்.

வீட்டை வெச்சிக் கடன்
அது அந்தக் காலம்!
கடன் வாங்கி வீடு
இந்தக் காலம்!!

தமிழ் படிப்போர் தமிழறிந்தோர் 
தட்டுப்படவில்லை.

வாகனப் பெருக்கம் 
சாலைகளைத் தின்றுவிட்டன.

பதிப்பகத்தார் பஞ்சப்பாட்டு 
இன்னும் ஓயவில்லை.

பொறியாளர்க்கு எட்டாயிரமாம் 
புரோட்டா பிசைய பதினெட்டாயிரமாம்.

தோனி அடிக்கடி வென்று 
கிரிக்கெட்டை மறக்கடித்து விட்டார்.

எல்லாப் பெண்களும் 
எக்கச்சக்கமாகப் படித்திருக்கிறார்கள். 
எப்படிப் பெண் கேட்பதென்றே 
தெரியவில்லை.

வெஸ்ட் இண்டீசா 
அப்படியென்றால் என்ன என்று 
பாப்பா கேட்கிறாள்.

காய்கறி வாங்குவதற்குக் 
கட்டுப் பணத்தை 
உடைக்க வேண்டியிருக்கிறது.

முடிவெட்டும் கட்டணத்தைவிட 
பக்கத்தூர் முருகனுக்கு 
முடியிறக்கிவிட்டு வருவது 
செலவு குறைவு.

ஆளில்லாத கண்ணாடி அறை 
குழல் விளக்கொளி 
குளிர்பதன வசதி 
அதற்குக் குருதியும் சதையுமாய்
மனிதக் காவல் 
தானியங்கு பணமெடுப்பு நிலையங்களாம்.

நகர் மையத்திலிருந்து 
நகர மைந்தன் வெளியேற்றப்பட்டவாறே 
இருக்கிறான்.

கடைத்தெருக் கடைகளில் 
யார்க்கும் தேவையில்லாதது 
எப்போதும் விற்கிறது.

யார்யாரோ நாயகர்கள்.
 எல்லாரும் இயக்குநர்கள்.

காக்கைக்கு முன்பெழுந்து 
ஓடுவோர் தொகை பெருகிவிட்டது.

பல்குச்சியைத் தவிர 
எல்லாமே செல்பேசியில் இருக்கிறதாம்.

ஐபோனாம் அறுபதாயிரமாம் 
நமக்குப் பால் சுரந்தூட்டிய பசுவினம் அழிந்து கொண்டிருப்பதை 
யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.

உண்மையாகவே இந்தக் காலம் நன்றாக இல்லை !///


சக 

Raju Rajendran

unread,
Apr 21, 2025, 9:29:51 PMApr 21
to vall...@googlegroups.com
மெத்தப்படித்தவன் ஆங்கிலம் கலந்து பேசியது அந்தக்காலம்.

திங்., 21 ஏப்., 2025, 10:47 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Apr 21, 2025, 9:32:35 PMApr 21
to vallamai

N. Ganesan

unread,
Apr 22, 2025, 6:55:21 AMApr 22
to வல்லமை
ஐ.டி. மந்திரி பிடிஆர் பற்றிச் சொல்வது போல் உள்ளது, வேந்தன் வரிகள்.

kanmani tamil

unread,
Apr 22, 2025, 12:09:14 PMApr 22
to vallamai
கசப்பும் இனிப்பும் ஆகிய முரண்...

நெல்லிக்காயை உவமையாக்கிப் பேசப்பட்டு இருப்பது தான் இந்தப் பதிவிற்கு உரிய காரணம். பண்டைத் தமிழ் அகப் பாடல்களில் நெல்லிக்காய் ஒரு குறியீடாகவே பயன்பட்டு உள்ளது. சாப்பிடும் போது புளிப்போடு விக்கும்... உண்ட பிறகு தண்ணீர் குடித்தால் இனிக்கும். ஆனால் மாம்பழம் சாப்பிடும் போது இனிக்கும்; பிறகு தண்ணீர் குடித்தால் துவர்க்கும். 

இந்த இயல்பை ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீட்டு வாழ்வோடும் புகுந்த வீட்டு வாழ்வோடும் ஒப்புமைப்படுத்தி அமைந்த குறியீடே நெல்லிச் சுவைக் குறியீடு. 

இதைத் தனி ஆய்வுக் கட்டுரை ஆக்கலாம். 

இங்கே 'மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்' என்ற கொள்கையை வலியுறுத்தும் முகநூல் பதிவு. 

/// 1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?
- பெயர் வைக்காத கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்.

2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்.

3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வரச் சொன்னார்கள். ஏன்? -கிருமிகள்.

5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்.

6. சாவு வீட்டில் சமைக்கக் கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்.

7. குடும்பத்திற்குச் சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டுச் சமைத்தார்கள். ஏன்? -கிருமிகள்.

8. வாசல் பெருக்கிச் சாணம், மஞ்சள் தெளித்துக் கோலமிட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

9. மண், செம்பு, வெண்கலப் பாத்திரங்களை உபயோகித்தார்கள். ஏன்? -கிருமிகள்.

10. வீட்டில் சமைத்த உணவையே பெரும்பாலும் உண்டார்கள். ஏன்? -கிருமிகள்.

தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அகலாது அணுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து, திட்டமிட்டு சிதைத்து நாகரீகம் எனும் பெயரில் அதற்கான விலையை இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இனியாவது இத்தலைமுறையினர்
“மூத்தோர் சொல் வார்த்தையும், முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்” என்றுணர்வோமா....///


தெரிவு: சக 

kanmani tamil

unread,
Apr 27, 2025, 1:41:46 PMApr 27
to vallamai
வட்டாரத் தமிழ் வழக்குகள் குறித்த முரண்பட்ட விமர்சனங்களை மறுக்கும் பதிவு இது.


தெரிவு: சக 

kanmani tamil

unread,
May 26, 2025, 8:48:49 AMMay 26
to vallamai
/// 🎤🙏🏻கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயைப் புகழ்கிறார்கள்

கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்

முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்

தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்

அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக் கிழங்கைப் புகழ்கிறார்கள்

பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியைப் புகழ்கிறார்கள்

வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள்

நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பைப் புகழ்கிறார்கள்

மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயைப் புகழ்கிறார்கள்

கடுகு அதிகம் வெளிநாட்டில் வளராது; ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்

வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக் கொண்டே வருகிறது. தடுப்பார் யார்?

பாரத பூமி புண்ணிய பூமி
பாரதத்தில் வாழாதவர்கள் அதிஷ்டம் இல்லாதவர்கள்...

பாரதத்தில் இருந்தும் வாழத்தெரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள்!!!

ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?

அரசும் மீடியாவும் பிரபலங்களும்...

'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!

ஆனா "கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.

ஏன்? 

இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி,மருத்துவமனை,
அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....

அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.

ஏன்? 

எங்கெல்லாம் 
புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்தச் சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு 
அந்தப் புளிய மரங்களை வெட்டிவிடும்.

விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும். 

அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.

பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.

அப்பொழுதும் கூட அந்த மக்கள் 
காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.

எனக்குத் தெரிந்து ...

ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.

நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முதன்மையான உணவே பழம்தானே.

ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. 

மா பலா நாவல் அத்தி கொய்யா....
என்று எத்தனை மரங்கள் உள்ளன.
அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?

நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர். காரணம்...
MMMC: mass media mind control.

"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.

தொடர்ந்து மரம் நிழல் தரும், காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்
கனியை மறந்தான்.

கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .

ஆனால் இதையெல்லாம் தடுத்து கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.

 அதையெல்லாம் ஏதோ 
'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்
 தின்னு உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.

 கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.

நல்லா புரிஞ்சிக்குங்க...
 'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.

மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.

அதை முழு முற்றாகத் தடுத்து,

'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..

நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...

கருவை மரங்கள் உள்ள இடங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும். 

தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.

நம் மனநிலையே
மகிழ்வாக இருக்கும்.

உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.

நீங்கள் மீண்டும் மீண்டும் இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....

அப்பொழுது 'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'

ஓர் உயர்ந்த மண்ணை
இப்படி நரகமாக்கிவிட்டு,
ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.

அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.

ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.

கார்ப்பரேட் அறிவாளியல்ல... 

நாம் சிந்திக்கவில்லை.. அவ்வளவே.

'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."

இப்படிக்கு..

பலன் தரும் மரங்கள்..!
🌴🌾🌳🌲🦧🍍🥬🌤️💐///


பழமையும் புதுமையும் என்ற தலைப்பில் அமைந்துள்ள முரண். 

தெரிவு: சக 

kanmani tamil

unread,
May 26, 2025, 1:59:35 PMMay 26
to vallamai
அந்தக் கால கருப்பு வெள்ளைப் படத்தில் சிவாஜி கணேசன் நக்கீரராகவும் சிவபெருமானாகவும் இரட்டை வேடத்தில் நடித்த காட்சி. 


பின்னர் திருவிளையாடல் வண்ணப் படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாகவும் ஏ.பி.நாகராஜன் நக்கீரராகவும் நடித்த காட்சி 


சிவாஜியின் நடிப்பும் காலத்தின் போக்கில் எவ்வளவோ மெருகேறித் தெரிகிறது. 

ஆனால் தருமியாக நடித்த நாகேஷ் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி இருப்பது தான் பெரிய முரண் 

தெரிவு: சக 

N. Ganesan

unread,
May 26, 2025, 6:14:35 PMMay 26
to வல்லமை
On Monday, May 26, 2025 at 12:59:35 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
அந்தக் கால கருப்பு வெள்ளைப் படத்தில் சிவாஜி கணேசன் நக்கீரராகவும் சிவபெருமானாகவும் இரட்டை வேடத்தில் நடித்த காட்சி. 

https://www.youtube.com/watch?v=QLq1LoabFiY  அக் காட்சி மட்டும்
https://www.youtube.com/watch?v=7iaF0fYuwP0 நான் பெற்ற செல்வம், 1956 
 

kanmani tamil

unread,
Jun 12, 2025, 11:47:32 AMJun 12
to vallamai
யோசிக்க வைக்கும் முரண் 


பீரங்கியுடன் வந்த ஆங்கிலேயரது நடை, உடை, வாழ்க்கை முறை எனப் பல நாகரிகக் கூறுகளை இன்றுவரை மனமுவந்து அன்றாட வாழ்வில் ஏற்றுக் கொண்டு உள்ளோம்.வாளுடன் வந்த வேற்று மதத்தவர் இன்று நம் சகோதரர் ஆகி உள்ளனர்.
தர்ப்பை நாகரிகத்தை 2000ஆண்டுகளாக நடைமுறையில் பயன் கொள்கிறோம் என்பதை மறுக்க இயலாது.
சக







--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 13, 2025, 2:48:43 PMJun 13
to vallamai
தலைமுறை இடைவெளி ஏற்படுத்தும் முரண்:

https://www.facebook.com/share/p/18jvHnxc9r/

/// இந்த அரிவாள்மனை வாங்கி 30 வருஷமாச்சாம். அப்ப உணவுக்கே கஷ்டப்படுற சூழ்நிலையில் ரொம்ப மாசமா காசு சேர்த்து வச்சு அம்மா வாங்கினாங்களாம். 20 ரூபாயாம் அப்ப. நான் பிறந்த பிறகு தான் அம்மா வாங்கிருக்காங்க.. எனக்கு 1 வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.. ஏன் இவ்ளோ காசு கொடுத்து வாங்கினாங்கனா நான் வளர்ந்த பிறகு எனக்கு குடுத்துடலாம்னு நினச்சாங்களாம்.. 

இதுல ஒரு சோகம் என்னன்னா எனக்கு அரிவாள்மனை பயன்படுத்தவே தெரியாது. ஒன்லி chopper board.. 😂😂///

பெற்றவர்கள் இப்படித்தான் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி ஏதேதோ கணக்குப் போட்டு; என்னென்னவோ எதிர்பார்த்து எதை எதையோ சேர்த்து வைக்க; கடவுள் போடும் கணக்கின் படி... அதுஅது நடக்கிறது; நடக்கும். 

சக 

Raju Rajendran

unread,
Jun 13, 2025, 11:52:20 PMJun 13
to vall...@googlegroups.com
வாளினும் பீரங்கியினும் கடவுள் வலிமையானது

வியா., 12 ஜூன், 2025, 9:17 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jun 14, 2025, 12:47:36 AMJun 14
to vallamai
On Sat, 14 Jun 2025, 9:22 am Raju Rajendran, <raju.ra...@gmail.com> wrote:
வாளினும் பீரங்கியினும் கடவுள் வலிமையானது

ஆமாம்; சரிதான். இது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் கொள்கை...
ஆனால் கடவுள் மறுப்பாளர்கள் துள்ளுவது தான் முரண் ஆகிறது. 

😄😄😄

சக

kanmani tamil

unread,
Jun 19, 2025, 4:44:05 AMJun 19
to vallamai
தலைமுறை இடைவெளி காரணமாகவும் சமூகமாற்றம் காரணமாகவும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான உறவுநிலையில் ஏற்பட்டுள்ள முரண்...

/// மெளனமாக அரங்கேறும் பெற்றோர் அவமதிப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்!
நாற்பது, ஐம்பது, அறுபது வயதைத் தாண்டிய ஒரு தாய், திடகாத்திரமான தன் இருபது வயது பெண் மகளுக்குகாக சேவை செய்யவும் அவளது குழந்தைகளை (பேரப்பிள்ளைகளை) பராமரிக்கவும் கட்டாயப்படுத்துவது ஒரு வகை மௌன (பெற்றோர்) அவமதிப்பாகும். 

நாற்பது, ஐம்பது, அறுபது வயதைத் தாண்டிய ஒரு தந்தை, தனக்குள்ள மூட்டுவலி, முதுகுவலியோடு, தனது இருபது, முப்பது வயதுள்ள தெம்புள்ள ஆண் மகனுக்காக பணி செய்ய நிர்ப்பந்திப்பது ஒரு வகை மெளன (பெற்றோர்) அவமதிப்பாகும்.

வாலிப வயதில் உள்ள தனயன் சந்தை சென்று வாங்கி வந்து கொடுக்க வேண்டிய வீட்டுப் பொருட்களை வயதான தந்தை சென்று வாங்கி வரும் படி பணிப்பது ஒரு வகை மெளன( பெற்றோர்) அவமதிப்பாகும். 

நாம் நினைப்பது போன்று பெற்றோர்களை அவமதிப்பதென்பது அவர்களை வாய் கிழிய ஏசுவதும் திட்டுவதும் அவர்களை பாராது, அனாதரவாக விடுவதும் மாத்திரமல்ல. 

சில சமயம் பகிரங்கமான அவமதிப்பை விட அதிகம் வலிக்க வைக்கும் அந்தரங்கமான அவமதிப்பு வடிவங்களும் உள்ளன, என்பதை உணரத் தவறாதீர்கள். 

நம் தாய்மார்களை மதித்து மரியாதை செய்யும் வடிவங்களில் ஒன்று தான் அவர்களின் இயல்புணர்வையும் இரக்க குணத்தையும் பயன்படுத்தி நமக்கு தொண்டு செய்யவும் நமது குழந்தைகளை பராமரிக்கவும் இடம் வைக்காமல் இருப்பதாகும். 

நம் தாய்மார்களை மதித்து மரியாதை செய்யும் வடிவங்களில் இன்னொன்று தான் நமக்கிருக்கும் சின்ன பெரிய கஷ்டங்கள் தொல்லைகளை எல்லம் அவர்களிடம் சொல்லி அவர்கள் மனதையும் வலிக்க வைக்காமல் இருப்பாதாகும். 

நம் சிறுபிராயத்தில், நமக்காக அவர்களின் சுகங்களை துறந்து நம்மை சுகமாக வைத்ததுப் பார்த்தது போல நாமும் அவர்களுக்கு சுகவாழ்வை அளிப்பதாகும். 

எமது அடங்காத மழலைப் பருவத்திலும் அட்டகாசமான குழந்தைப் பருவத்திலும் அவர்கள் முன்னாலும் பின்னாலும் ஓடி வந்து நம்மை கவனித்து போல அவர்களின் தள்ளாடும் இந்த வயதில் நாம் அவர்களை கவனித்துப் பார்ப்பதாகும். 

அறுபது வயது தாய் ஒருவள் நமக்காக தொண்டு செய்யும் தெம்பில் இருக்கவே மாட்டாள். மாறாக நாம் தான் அவளுக்கு தொண்டு செய்யும் தெம்பில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 

அறுபது வயது தந்தை ஒருவர், விதைகளை நடவு செய்து தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் நிலையில் உள்ளவரல்ல, கனிகளை அறுவடை செய்து பலன்களை காண வேண்டிய நிலையில் உள்ளவர். ///

https://www.facebook.com/share/p/1EtYwetTvL/

பெண்பிள்ளைகள் படித்துப் பணிக்குச் சென்று சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற மனநிலை; அது தான் வாழ்க்கையில் முன்னேற்றம் என்ற கொள்கை மாற்றம்...

வீட்டில் குடும்பத்தைக் கவனிப்பது மட்டுமே கடமை என்ற நிலையில் வாழ்ந்து முடித்த முந்தைய தலைமுறைப் பெண்கள் இரண்டாம் தரமானவர்கள் என்ற எண்ணம் மேலோங்கியமை...

அரசு அலுவலராகவோ தனியாரிடமோ மாதச் சம்பளம் பெற்ற தந்தை; இன்று ஐடி கம்பெனிகளில் கைநிறையச் சம்பாதிக்கும் மகன்களோடு முரண்பட்ட பொருளாதார நிலையில் இருக்கும் அவலம்...

இப்படிப்பட்ட காலத்தின் கோலத்தில் சிக்கித் தவிப்பவர்கள் தான் இன்றைய வயோதிகப் பெற்றோர்... 

ஆம்; இது மௌன அவமதிப்பு தான். 

சக 

kanmani tamil

unread,
Jun 19, 2025, 11:28:25 PMJun 19
to vallamai
உணவுமுறையில் ஏற்பட்டு இருக்கும் மாறுபாடு:

/// கறி: சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை கூட மக்கள் கறிச்சோற்றுக்கு இப்படி ஆவலாய் ஆசைப்பட்டுப் பார்த்ததில்லை. இத்தனைக்கும் அப்போது எல்லா வீடுகளிலும் ஆடு, கோழிகள் வளர்ப்பார்கள்... இப்போது போல அப்போது இவற்றுக்கெல்லாம் பெரிய விலை மதிப்பும் கிடையாது...

கிராமங்களுக்குச் சென்றால் எல்லா வீடுகளிலும் ஆட்டுப்பட்டி இருக்கும்... கோழிகளை அடைத்து வைக்கும் பெரிய கூடை இருக்கும்... கூலி வேலை செய்பவர்கள் வீடு உட்பட... வேலைக்குச்சென்று வேலை செய்யும் இடங்களிலும் திரும்பும் வழியில், வேலிகளில் படர்ந்துள்ள கொடிகளை சேகரித்துக்கொண்டே செல்வார்கள் ஆடுகளுக்கு தீவனம் போட...

அவர்கள் நினைத்திருந்தால் வாரம் ஒருமுறை என்ன, தினமும் கூட கறி சாப்பிட்டிருக்கலாம்... ஆனால் அப்படிச் செய்ததில்லை. ஞாயிற்றுக்கிழமையானால் கறிச்சோறு தின்றே ஆகவேண்டும் என்று மக்கள் அலைந்ததில்லை... அசைவம் சாப்பிடுவதற்கான காரணங்கள் கூட மிக அரிதானவை...

வராத விருந்தாளிகள் [குறிப்பாக மருமகன்] வந்தால் கோழி அடித்து குழம்பு வைப்பார்கள். அல்லது வீட்டில் குழந்தைகளுக்கு சளி பிடித்து ரொம்பவும் தொந்தரவு செய்தால் இளம் கோழிக்குஞ்சு சூப் வைத்துக் கொடுப்பார்கள். அவ்வளவே... 

அய்யன் போன்ற சாமிகளுக்கு நேர்ந்துகொண்டு அவரவர் வீட்டிலேயே பொங்கல் வைத்து படையல் போடுவது உண்டு

சேவல் கட்டில் பலியாகும் சேவல் கறி... மற்றபடி, ஆட்டுக்கறி சமையல் என்பது குலதெய்வம், அல்லது அவரவர்கள் ஊரிலுள்ள சிறு தெய்வ வழிபாட்டின் போது கோவில்களுக்கான நேர்ந்து கொண்டு வளர்க்கப்படும் கிடாய் வெட்டும்போதுதான்...    

உற்றார் உறவினர் எல்லோரும் வந்து சாப்பிட்டுவிட்டுப் போனது போக மீதமிருக்கும் கறியை [பெரும்பாலும் தொடைக்கறியை] தனியாக எடுத்து உப்புக்கண்டம் போட்டு; கம்பிகளில் கோர்த்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வார்கள். மழைக்காலங்களில் ஆற்று மீன், கடல் மீன், குளத்து மீன் கிடைக்காதபோது அதுதான் பிரதான உணவு.

கொங்குப்பகுதியைப் பொறுத்தவரை அசைவ உணவு சமைப்பதும் உண்பதும் சற்று ஆச்சாரக் குறைவான விஷயமும் கூட... கல்யாணம், சீர், வளைகாப்பு இப்படி எந்த விசேஷத்திலும் அசைவ உணவு கிடையாது... துக்க வீடுகளிலும் அப்படித்தான்... பதினாறாம் நாள் காரியம் உட்பட எதிலும் அசைவ உணவு கிடையாது...

அவ்வளவு ஏன், அசைவ உணவு சமைக்க தனியான பாத்திரங்கள் வைத்திருப்பார்கள்... பெறால் சட்டி என்று அழைக்கப்படும் மேற்படி பாத்திரங்களைப் பிற நாட்களில் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கமாட்டார்கள்... பொடக்காளி என்று அழைக்கப்படும் குளியல‌றையில் [வீட்டை ஒட்டி ஒரு ஓரமாக தென்னை அல்லது பனை ஓலைகளால் சுற்றிலும் மறைக்கப்பட்ட [ஒதுக்கு என்பார்கள்]... அமைப்புதான் பொடக்காளி - புழக்கடை என்பதன் மரூஉ] ஒரு ஓரமாகக் கவிழ்த்து வைத்திருப்பார்கள். அசைவ சமையலுக்குப் பயன்படும் அகப்பை அந்த ஓலைப் படலில் சொருகப்பட்டிருக்கும்... அசைவம் சமைத்த அன்று இரவே சுத்தமாகக் கழுவி எடுத்துப் போய் பொடக்காளியில் வைத்துவிடுவார்கள். அடுத்த நாள் காலை எழுந்தவுடன் வீட்டை மாட்டுச் சாணம் போட்டு மெழுகிய [வளிச்சு உடறது] பிறகே அன்றைய வேலைகளை ஆரம்பிப்பார்கள்...

மிகச் சமீப காலமாக மக்கள் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்ற‌ம் என்னை வியக்க வைக்கிறது... ஞாயிற்றுக்கிழமையானால் கறி சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தவிர்க்கவே முடியாத விஷயமாகிவிட்டது... கறிக்கடைகளில் கூட்டம் நெறிபடுகிறது... திரும்பிய பக்கமெல்லாம் அசைவ ஹோட்ட‌ல்கள்...

பெரும்பாலான பெரிய ஊர்களில் எங்காவது ஒரே ஒரு பிரியாணிக் கடை தான் இருக்கும்... இன்று அதன் எண்ணிக்கை பலமடங்கு...

கிராம மக்கள் நகரங்களை நோக்கி நகரும் இந்தக் காலத்தில் ஆடுவளர்ப்பு கணிசமாகக் குறைந்துவிட்டது. 

[திருப்பூர் மாவட்டம் - கன்னிவாடி] ஆட்டுச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று... இருபது வருடங்களுக்கு முன்பு வரை சந்தைக்கு வந்துகொண்டிருந்த ஆடுகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒருபங்கு கூட இப்போது வருவதில்லை... சென்னையைப் பொருத்த வரைக்கும் ஆந்திராவிலிருந்து தான் ஆடுகள் வந்து கொண்டிருக்கிறது. அங்கு மட்டும் என்ன; இதேநிலைதான் உற்பத்திக் குறைவு. கோழிகளைப்போல ஆடுகளை பண்ணைகளில் வளர்க்கும் முறையும் இன்னும் அதிகரிக்கவில்லை.

பின் நாள்தோறும் புற்றீசல் போல முளைக்கும் இத்தனை அசைவ ஹோட்டல்களுக்குத் தேவையான கறி எங்கிருந்து கிடைக்கும்? அத்தனையும் சுத்தமான, சுகாதாரமான ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்ய யாரால் முடியும்?

அப்புறம் அவன் கிடைக்கும் எல்லாக் கறியையும் கலந்து விற்கத்தான் செய்வான். நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகள், கோமாரி நோயால் செத்த மாடுகள் மற்ற நாலுகால் பிராணிகள் கறி என இப்படி எல்லா இறைச்சிகளும் கலந்து விற்கத்தான் செய்வார்கள்...
 
கறியில் கலக்கப்படும்... எக்கச்சக்கமான மசாலாக்கள், நிறமிகள், பிரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படுவதால் நம்மால் வித்தியாசம் கண்டுபிடிக்கவும் முடியாது...

தப்பிக்க ஒரே வழி... குறைந்தபட்சம் அசைவ உணவுகளைப் பொறுத்தவரைக்குமாவது நம் நம்பிக்கைக்குப் பாத்திரமான கடைகள் அல்லது நம் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு திரும்புவது மட்டும்தான்... 

சிந்திப்பது... நம் கடமை.///


நம்பிக்கைக்குப் பாத்திரமான கடைகளுக்குச் செல்லலாம்... பழைய பழக்க வழக்கங்களுக்குத் திரும்புவது அவ்வளவு சுளுவாக முடியாது. 

சக 

kanmani tamil

unread,
Jun 20, 2025, 12:07:52 PMJun 20
to vallamai
பேசுவதற்கு ஏதும் இல்லை. 

https://www.facebook.com/share/p/19DaZjvq3f/

சக 

kanmani tamil

unread,
Jun 24, 2025, 2:35:53 PMJun 24
to vallamai
தலைமுறை முரண்
அறிவியல் பூர்வமான விளக்கமாகத் தோன்றவில்லை ஆனாலும்; முரண்பாடு இருப்பதை மறுக்க முடியாது. 


/// "காதலன் Car வாங்க வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியாமல் 60 லட்சம் பணம் எடுத்த கல்லூரி மாணவி, கல்தா குடுத்த காதலன்..."

"24 வயது இளைஞனுடன் செல்ல விரும்பி , போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்த 4 வயது குழந்தையின் தாய் , இளைஞரை அறிவுறுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்த போலீசார், கணவனுடன் செல்ல மறுத்த பெண்ணை, பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார்..."

"Honeymoon போன இடத்தில் , கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய மனைவி..."

"Whatsappபில் பல பேருடன் chat, சந்தேகத்தப்பட்டு மனைவியின் தலையை வெட்டிய கணவன்..."

" Friends App என்கிற பெயரில்.................................."

"Live Chat பெயரில் , Gold , Diamond , Platinum என்று லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் கூட்டம்..."

இப்படி நாளொரு வண்ணம் , பொழுதொரு மேனி ன்னு News சேனலை தொறந்தாலே ஒரே புரட்சி சமாச்சாரம்தான்..   

வர வர நம்மளை Counseling குடுக்குற Psychiatrist ( இந்த வார்த்தையை கரெக்ட்'டா type பண்றதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே) மாதிரி நெனச்சு கேள்வி கேக்குறாங்களே???இன்றைய Speed தலைமுறையின் speed கல்யாண வாழ்க்கை பற்றியும் , குழந்தை பெத்துக்க மறுக்கிறதை பத்தியும் எழுதுங்கன்னு நேயர் விருப்பம்... ஆரம்பிக்கலாம்ங்களா ???

Boom , Boom , Boomer ............

*நல்ல ஒரு financial level க்கு வந்தப்புறம் பெத்துக்கலாம்னு precaution பல பண்ணிட்டு, கடைசில அதே வினையா வந்து முடியும்ங்கிறதை புரிஞ்சிக்க மாட்டாங்க... Financial Level பார்த்து பெத்துக்கலாம்னு பல பெற்றோர் நெனச்சிருந்தா என்ன ஆகியிருக்கும்...??

*இப்போதைக்கு குழந்தை வேணாம் , ரெண்டு மூணு வருஷம் நல்லா சம்பாதிச்சிட்டு அப்புறமா பெத்துக்கலாம்'ன்னு முடிவு எடுத்துட்டு, ரெண்டு மூணு வருஷம் கழிச்சு சம்பாதிச்சதுல பெரும் பகுதி டாக்டருக்கே செலவு பண்ணுவாங்க..

*கூட்டுக் குடும்ப வாழ்க்கை இன்னைக்கு காணாமலே போச்சு. புருஷன் மனைவி ரெண்டு பேரும் சம்பாதிக்கிறாங்க. சரி நிகர் சமானம்'ங்கிற நிலைமை மாறி நீ பெரியவனா? நான் பெரியவளா'ங்கிற Ego இங்கே தலைவிரித்தாடுது... உடலும் உடலும் ஒப்புக்கு சேருகின்றனவே தவிர, மனசும் மனசும் சேர்ந்து சேருவதில்லை இதுவும் ஒரு காரணம்'ன்னு சொல்றாங்க. 

*சில காலம் முன்பு வரை ரெகுலரா கோயிலுக்கு போற பழக்கம் இருந்துச்சு... அங்கே கிடைக்கிற positive vibes மற்றும் கோயில் மரங்களில் கிடைக்கும் அந்த காத்து, இவைகளுக்கெல்லாம் கரு உருவாவதில் பெரும் பங்கு 
இருந்துச்சு. ஆனா இப்போ ???

இவ்வளோ ஏன் பல கோயில்ல அரசமரத்துக்கு அடியிலே நெறைய நாக தேவதைகள் சிலை இருக்கும் ( ரெண்டு பாம்பு பெனஞ்ச மாதிரி ) நம்ம உடம்புல இருக்கிற DNA அமைப்பு அந்த மாதிரிதான் இருக்கும்... வெறுமனே மரம் மட்டும் இருந்தா ஜனங்க கண்டுக்க மாட்டாங்க அதனால இந்த மாதிரி சிலைகளை வெச்சு சுத்தி வந்தா குழந்தை பாக்கியம் உண்டாகும்ன்னு ஒரு நம்பிக்கை விதைக்கிறதுக்காக முன்னோர்கள் இதையெல்லாம் செஞ்சாங்க...  அரசமரம் 
24மணி நேரமும் Oxygen உற்பத்தி செய்யும் தன்மை வாய்ந்தது.. ஆனா இன்றைய கம்ப்யூட்டர் தலைமுறை இதையெல்லாம் நக்கலடிச்சிட்டு இருக்காங்க.

*அப்போ ஆண்களின் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது... நடந்து போறது, சைக்கிள்'ல போறது, கை கால்களுக்கு வேலை தரும் தொழில்களை செய்றது, சொல்லப் போனா உடம்போட அனைத்து பகுதிகளுக்கும் ஒரு உந்து சக்தி கொடுத்துட்டே இருக்கிற வேலை செஞ்சிட்டு இருந்தாங்க... இன்றைய தலைமுறை சீட்டை தேய்ச்சிக்கிட்டு கம்ப்யூட்டரை நோண்டிக்கிட்டு நல்ல வருமானம் கெடச்சா போதும்ன்னு இருக்கு. ஒப்புக்கு ஜிம்முக்கு போறது, வீட்லையே பெருமைக்கு ஜிம்மை நிறுவுறது... இப்படித்தான் இருக்கு.

*அப்போ பெண்களும் ஆண்களுக்கு இணையா வேலை செஞ்சாங்க... சமையல் வேலையில் கைகளுக்கு பலம், துணிதுவைக்கும் போது மார்புக்கும், தோள்களுக்கும் பலம்... தண்ணிக்குடம் சுமக்கும் போது இடுப்பு பலமாகும்... இதெல்லாம் செய்யும்போது கால்கள் தானா பலமாகும்...  
(அப்போ பெண்களை வீட்டு வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தும் நீங்க ஒரு ஆணாதிக்க சைக்கோ ன்னு பல குரல் வரும்...)
மேற்சொன்ன சமாச்சாரங்கள் செஞ்சாதான் உடலும் மனசும் உறுதியாகும்ன்னு நான் சொல்லலை... அதுக்கு equalஆன வேலை ஏதாவது செய்யணும்ன்னு தான் சொல்றேன்... அதை ரெகுலரா செய்யணும்... 

*எல்லாவற்றையும் விட குழந்தை பெத்துக்கிட்டா ஆன்ட்டி ஆயிடுவேன்; அதனால தான் பெத்துக்கலை'ன்னு சொல்லி... அதை என் காதால் கேட்டதும் உண்டு. 

மொத்தத்துல இந்த Fast food உலகத்துல தப்பான முடிவுகளை ரைட்டுன்னு நெனச்சுக்கிட்டு fastடா ஓடிட்டிருக்கிற தலைமுறை ஒரு இடத்துல முட்டி நிக்கும். அதுல கிடைக்கும் மாற்றம் கண்டிப்பா நல்ல மாற்றமா இருக்கும்ன்னு நம்பலாம்...

அன்புடன்,
Gowrishankar Krishnan
Kokila Shankar
Gowrishankar Radhakrishnan

#repost #repostchallenge #highlights2025 #highlight #highlighteveryone #followerseveryone #followforfollowback #follower #follow #genz #brainless #generations #ego #selfish #contentcreator #contentwriting #truestory #realstory///

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 2, 2025, 1:44:40 PMJul 2
to vallamai
நடைமுறைச் சிக்கல்... பெரும்பாலும் ஓய்வு பெற்ற பெற்றோர் உணர்ந்து வருந்துவது. 

/// என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய முட்டாள்தனம், என் குழந்தைகளோடு ஒன்றாக வாழ்வதற்காக ஒரு வீடு கட்டியதுதான். இன்று இருந்தால் நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். குழந்தைகள் பெரியவர்களாகும் வரை, தேவைக்கு ஏற்ற அறைகள் உள்ள வாடகை வீட்டில் வாழ்ந்திருப்பேன்!

தயவுசெய்து என்னைத் தவறாகப் புரியாதீர்கள். உங்களுக்கு ஒரு வீடு நிச்சயம் தேவை. ஆனால் அதை நீங்கள் கட்ட வேண்டியது, குழந்தைகள் பெரியவர்களாகி தங்கள் படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறிய பிறகுதான். 

(டெனிஸ் அரக்கல் © எழுதியது...)

அப்போது அவர்கள், வீட்டுக்கு வாரத்தில் ஒருமுறை அல்லது மாதத்தில் ஒருமுறை வரும் விருந்தினர்களாக மாறும்போது, மனைவிக்கும் கணவனுக்கும் வாழ்ந்து இறக்க ஒரு சிறிய நல்ல இரண்டு அறைகள் மட்டுமே உள்ள வீட்டைக் கட்ட வேண்டும். எல்லா வசதிகளும் உள்ள, நடக்கும்போது வழுக்காத; எழுந்திருக்க குளியலறையிலும், சுவர்களிலும், எஃகு கைப்பிடிகள் உள்ள ஒரு வீடு.

குழந்தைகள் இடையில், அல்லது திருமணம் முடிந்து வரும்போது அவர்கள் ஒரு அறையை பயன்படுத்தட்டும்! அரிதாக வந்து, மிகவும் அரிதாக மட்டும் இரவு வீட்டில் கழிக்கும் விருந்தினர்களும் இதேபோல் செய்யட்டும்!

ஒரு 50 ஆண்டுகள் மட்டுமே நிலைக்கும் வகையில் மட்டுமே வீடு கட்டுங்கள். எங்கள் காலம் முடிந்தபோது அதை இடித்து தள்ளி வேறு வீடு கட்டவோ விற்கவோ குழந்தைகளுக்கு கஷ்டம் இருக்கக்கூடாது. அவர்களுக்கு மனதிற்கு ஏற்ற வீடு, அன்றைய ஸ்டைலில் வேண்டுமென்றால் அவர்கள் கட்டட்டும்!

பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய சேமிப்புகள் செல்வது அதீத வட்டியுள்ள வீட்டுக் கடனை தீர்க்கும் போதுதான். சிறிய சிறிய பயணங்கள் செய்யவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் பயன்படுத்தக்கூடிய பணம் நமக்குத் தெரியாமல் வழிந்தோடுகிறது...

வீடு ஒரு ஸ்டேட்டஸ் ஒன்றுமில்லை. நாம் இங்கே விட்டுச்செல்லும்; பின்னர் வரும் மக்கள் இடித்துத் தள்ளும்; 60 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கும் தேவையில்லாத, சிமெண்ட் குவியல் மட்டுமே!

இதை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு யோசித்திருந்தால், என் வாழ்க்கையின் மிகப்பெரிய நடைமுறை முடிவை நான் எடுத்திருப்பேன்!

டெனிஸ் அரக்கல்///


அட! தெம்பு இருந்த காலத்தில் எல்லோரும் தப்புக் கணக்கு தான் போட்டுள்ளோம். 

இப்போது மூன்றாண்டுகளாக இந்த முகநூல் பதிவாளர் சொல்வது போல் நானும் என் கணவரும் வயோதிகத்திற்கு ஏற்ற வீட்டைக் கட்டிக் கொண்டு தான் வாழ்கிறோம்.

ஆனால் கேட்பவர்களுக்கு பதில் சொல்லி முடியவில்லை. 

எதற்காக இப்படிச் சின்ன வீடாகக் கட்டினீர்கள்?
எதற்காக அந்தப் பெரிய வீட்டை விட்டு வந்தீர்கள்?
எதற்காக இப்படி வித்தியாசமான அமைப்பில் கட்டி இருக்கிறீர்கள்?

எல்லாவற்றுக்கும் ஒரே பதில்... வயோதிகத்திற்கு வசதியாக இருக்கிறது. அவ்வளவு தான். 

சக

kanmani tamil

unread,
Jul 4, 2025, 2:50:09 AMJul 4
to vallamai
அன்றைய ரயில் சிநேகிதர்களும் நேரத்தைத் தள்ளிக் கொண்டு போகும் நடைவண்டிகளும்:

காலத்தின் கோலத்தில் ஏற்பட்ட முரண்... எழுத்தாளர் ராஜேஷ் குமார் கோணத்தில்...

/// வந்தே பாரத் ஒரு வசதியான ரயில் என்பதில் எந்த 
ஒரு சந்தேகமும் இல்லை.
கோவையில் இருந்து சென்னைக்கு ஐந்தரை மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். 

காலை ஆறு மணிக்குப் 
புறப்பட்டால் பதினோரு மணிக்கெல்லாம் பெரம்பூர் ரயில் நிலையம் கண்ணில் படுகிறது. 

எல்லாம் சரிதான். 
அண்மையில் நான் வந்தே பாரத்தில் பயணம் செய்த பொழுது கம்பார்ட்மெண்ட் நிறைந்திருந்தது. எல்லோருடைய இருக்கைகளுக்கு முன்பாக தமிழ் நாளிதழ்களும் ஆங்கில நாளிதழ்களும் இஸ்திரி போட்ட தினுசில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. 

ரயில் புறப்பட்டது.
ஆனால் பயணிகளில் யாருமே அந்த நாளிதழ்களை எடுத்து படிக்கவோ குறைந்தபட்சம் புரட்டிப் பார்க்கவோ கூட இல்லை. எல்லோரும் செல்போன்களில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அல்லது ரீல்ஸ்களை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

காலை உணவுக்கு ஆர்டர் செய்திருந்தவர்கள் பாதிக்கு மேற்பட்டவர்கள் தட்டில் உணவைப் பாதியளவே சாப்பிட்டுவிட்டு,மீதியைக் குதறிவிட்டு வீணடித்து இருந்தார்கள். பயணிகளில் ஒருவர் மட்டுமே உணவின் தரம் சரியில்லை என்று ஊழியரிடம் சின்னதாக சண்டை போட்டுவிட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டார்.  

எந்த ஒரு பயணியும் இன்னொரு பயணியிடம் பேச்சு கொடுக்கவேயில்லை.
முன்பெல்லாம் 'ரயில் சிநேகம்' என்கிற ஒரு வார்த்தையே உருவாகி, அது ஆழமான நட்பாக மாறிய நிகழ்வுகளும் உண்டு. இன்றைக்கு பயணிகள் நாட்களைத் தள்ளிக் கொண்டு போகும் நடைவண்டிகளாக மாறிவிட்டார்கள்.

முதல் பி.கு. 

ஐந்து வரிசை தள்ளி உட்கார்ந்திருந்த ஒரு பெண் பயணி மட்டும், என்னைப் பார்த்துவிட்டு தன் ஆட்காட்டி விரலால் காற்றில் எழுதுவது போல் அபிநயத்து விட்டு நீங்கள் எழுத்தாளர்தானே என்று சைகையில் கேட்டு வணக்கம் சொன்னது மட்டுமே வந்தே பாரத் எனக்கு கொடுத்த ஒரு வரம்.

இரண்டாவது பி.கு

நீங்கள் 
பார்த்துக் கொண்டிருக்கும் என் உருவத்தை ஓவியமாக உருவாக்கியவர் 
ஒருவாசகர். பெயர் அண்ணாமலை. அவருக்கு என் நன்றி.


சக 

kanmani tamil

unread,
Jul 6, 2025, 3:04:19 AMJul 6
to vallamai
தமிழர் பாரம்பரியத்தில் இருந்து முரண்பட்ட ஒரு வழக்கம்:


வாழையிலையை நெட்டுக்குத்தாகப் போட்டுச் சாப்பிடுவதைப் பாருங்கள். ஆந்திராவில் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறதாம். அஸ்ஸாமிலும்...

மற்றபடி; விரதம் இருப்பது குறித்து நமது பாரம்பரியத்திற்கு உரிய அறிவியல் விளக்கம்...

/// உடலைப் பட்டினி போடும் போது என்ன நடக்கிறது...?

உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி என்பவர். 2016 ஆம் ஆண்டில், அவர் உடலியல் மூலக்கூறில் Auto phagy" உடல் தன்னையே உண்ணுதல் பற்றிய மருத்துவ ஆய்வுக்காக நோபல் பரிசை வென்றார்.

அதாவது உடல் 8 மணி நேரத்திற்குக் குறையாமலும் 16 மணி நேரத்திற்குக் கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது; அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கிறது என்ற மருத்துவ உண்மையை கண்டு பிடித்தார். 

மேலும் இந்த செயல்முறை பற்றி ஓசுமி கூறும் போது, உடல் பட்டினியாக இருக்கும் போது, உடலின் அனைத்து திசுக்களில் இருந்தும் விசேட புரதங்கள் சுரந்து, அவைகள் பெரும் துடைப்பங்கள் போன்று சுற்றித் திரிந்து; உடலில் காணப்படும் இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து; புதுப்பித்து விடுகின்றன. 

இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை 
வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உண்ணாமல் குடிக்காமல் பட்டினிக்கு உட்படுத்திப் "பட்டினி சிகிச்சை"
அளித்து வருகின்றனர். 

2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசின் கருப்பொருளும் இதுவாகவே இருந்தது. 
படித்ததில் பகிர்வது.///

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 6, 2025, 2:50:16 PMJul 6
to vallamai
சமையல்கட்டில் அவ்வப்போது சொலவடையாகக் கேட்கும் முரண்:

/// வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி.......

முருங்கைக் கீரையை அதிகம் வேக வைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.....

அதனை அளவாக வேக வைத்துப் பதமாகச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள இரும்புச்சத்து முதல் அனைத்துச் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும்......

ஆனால் அகத்திக் கீரை இதற்கு நேர் எதிரானது. அதனை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது.....

அதனை நன்றாக வேகவைக்க வேண்டும். ஏனெனில் அகத்தியில் இரும்புச்சத்து உள்ளிட்டவை மிக நிறைவாக உள்ளன.....

அது நமது செரிமானத்துக்குத் தாங்காது. ஆடு போன்ற விலங்கினங்களால்தான் அதனை பச்சையாகவும் அரைவேக்காடாகவும் சாப்பிட இயலும்.....

மென்மையான சீரண மண்டலம் கொண்ட மனிதர்களாகிய நாம் அகத்திக் கீரையைச் சாப்பிட வேண்டுமானால் அதனை நன்றாக வேக வைக்க வேண்டும்.....

இதுவே இப்பழமொழி சொல்லும் நேரடிப் பொருள். ஆனால், இது போலத்தான் ஒரு செயல் அல்லது ஒரு பொருள் ஒருவ ருக்கு குறைவாகத் தேவைப்படும். .....
இன்னொருவருக்கு அதிகமாகத் தேவைப்படும். அதிகம் தேவைப்படுபவர் குறைவாக கிடைத்தாலும் நஷ்டமடைவார்.....
குறைவாகத் தேவைப்படுபவர் அதிகம் கிடைத்தாலும் கையாளத் தெரியாமல் சிரமப்படுவார்.....

இதனையே இப்பழமொழி உள்ளர்த்தமாகக் குறிக்கிறது.....

#திண்டுக்கல்சமையல் ///


இதே போல் என் அம்மா வாயில் அவ்வப்போது நான் கேட்டது...

'கழுவிக் கெட்டது கறி; கழுவாமக் கெட்டது மீனு'

மீன் கழுவிய நீரில் முகம் தெரிய வேண்டுமாம். அந்த அளவிற்குச் சுத்தமாகக் கழுவினால் தான் மீன் குழம்பு ருசிக்கும். ஆட்டுக்கறியை ஒரே ஒரு முறை அலசினால் போதும். திரும்பத் திரும்பக் கழுவினால் தண்ணீரில் சத்து வெளியேறி; சமைக்கும் போது
ரொம்பவே ருசி கெட்டு விடும். 

சக 

kanmani tamil

unread,
Jul 12, 2025, 12:03:58 AMJul 12
to vallamai
முரண்படும் முந்தைய தலைமுறையின் சினிமா ரசனையும் பொழுதுபோக்கும் 

https://www.facebook.com/share/p/1ZBjNEod3k/

"கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே....
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே"
சற்று நேரத்திற்கு முன்பு இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். முதல் சரணம் முடிவதற்குள் எங்கெங்கோ என்னை இழுத்துச் சென்ற நினைவுகள். 

இப்படி ஒவ்வொரு பாடல் கேட்கும் போதும், ஒவ்வொரு காலத்திற்கு மிதந்து செல்லும் வாய்ப்பு இன்றைய அனிருத் தலைமுறைக்கு வாய்க்குமோ என்னமோ!! ஆனால் இளையராஜாவின் தலைமுறைக்குக் கண்டிப்பாக வாய்க்கும். 

சி சென்டர் எனப்படும் கிராமத்து தியேட்டர் ஒன்றில் சத்யராஜையும் ரேகாவையும் பாரதிராஜாவின் கைவண்ணத்தில், கடல் அலைகளின் நடுவே பார்த்தது இன்று பார்த்தது போல அப்படியே தோன்றுகிறது. 

அப்போதெல்லாம் திரைப்படத்திற்கு செல்வது திருவிழாவிற்கு செல்வது போல... கடலோரக் கவிதைகளுக்கு செல்வதற்கு முன்பே கடலை அறியாத எங்கள் கிராமத்திற்குள் 
அலைகள் வீசும். பெருங்கடல் விழிகளில் தெரியும். இளையராஜா கிடாரோடு அதன் பாடல்களை வாசித்துக் கொண்டிருப்பார். இனம் புரியாத ஒரு பெரு மகிழ்ச்சி 
போஸ்டர் ஒட்டப்பட்ட கணம் முதல் எங்கள் இதயங்களை சூழ்ந்து கொள்ளும்.

அது என்ன App?? Book my showவா Ticket Newவா..... அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. 
தனியாக புக் செய்து தனியாகப் போய்ப் படம் பார்த்து, இடைவேளையில் படம் சரியில்லை என விமர்சனம் செய்யும் கூட்டம் நாங்கள் இல்லை. 

அத்தைகள், சித்திகள், அம்மா, பாட்டி, தாத்தா, சித்தப்பா, மாமா, ஏன் நாங்கள் வளர்க்கும் நாய் கூட எங்களுடன் திரையரங்கத்திற்கு வரும். காட்சி தொடங்குவதற்கு முன்பு மெதுவாக மேலே திரை ஏறும் எங்கள் கண்ணபிரான் தியேட்டர் - சிறுவயது கலைக்கோயில். 

சரியாக 30 / 35 வருடங்களுக்கு முன்பு பார்த்த திரைப்படம் தான்!! ஆனால் ஒவ்வொரு காட்சியும் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது, 
கெட்டவனாக பார்த்த சத்யராஜ் இதில் அப்பாவியாக, ஒற்றைக் காலில் நிற்கும் சின்னப்பதாஸாக, பாடலின் நடுவே கடலில் காணாமல் போய், ரேகா தவிக்கையில் 
கையில் பெரிய மீனோடு வரும் காட்சியாகட்டும்; டீச்சர் டீச்சர் என ஜெனிபர் டீச்சரைச் சுற்றி வரும் தருணங்களாகட்டும், கடைசி காட்சியில் மாதா கோயில் மணியை மனம் உருக அடிக்கும் கிளைமாக்ஸ் ஆகட்டும்.... அப்படியே மனப்பாடமாக இருக்கிறது. 

நாங்கள் பார்த்த திரைப்படங்களுக்கு லாஜிக்குகள் இருந்ததில்லை, நாங்களும் லாஜிக்குகள் பார்த்ததில்லை, சொல்லப்போனால் லாஜிக் என்ற வார்த்தையே எங்களுக்கு சமீபத்தில் தான் பரிச்சயம். 

பார்க்கும் காட்சி உணர்வுகளைத் தூண்டுகிறதா?? இசை ஜீவனை சிலிர்க்க வைக்கிறதா?? காட்சிகள் சாகாவரம் பெறுகின்றனவா?? கண்ணீரும் சிரிப்பும் 
எந்தத் தடைகளும் இன்றி வெளியே வருகின்றனவா?? இவ்வளவு தான் எங்கள் திரை அனுபவங்கள். 

ஒரே ஒரு பாடல் டைம் மெஷின் போல; எவ்வளவு தூரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது பாருங்கள். அப்படி ஒரு காலம் மீண்டும் வராதா?? 

கடந்த கால ஏக்கங்கள் தானே நிகழ்காலத்தின் ஆறுதல்கள்!!

சரி தானே???

#பிரபுசங்கர்_க///

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 14, 2025, 12:12:05 AMJul 14
to vallamai
சமநிலை தேடும் ஒரு சிக்கல்:

/// உறவினர் ஒருவர் ஆச்சரியமான தகவல் ஒன்றைச் சொன்னார்.

சமீபத்தில் பெண் பார்த்தல் முடிந்து ஒரு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. அப்போது அந்த மாப்பிள்ளை அந்தப் பெண்ணை தனியே சந்தித்துப் பேசியபோது,
"உன் மொபைல் எண்ணை நான் கேட்க மாட்டேன். என் எண்ணை நானும் தரப் போவதில்லை. திருமணம் வரை நாம் பேசிக் கொள்வதைத் தவிர்ப்போம். முன்பே போனில் நிறைய பேசிவிட்டால் திருமணத்திற்குப் பிறகு பேசிக்கொள்ள புதிய விஷயங்களோ, சுவாரசியமோ இல்லாமல் போய் விடும்.'' 
என்று சொல்லியிருக்கிறார்.   

சமீப காலமாக நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நடுவில் போனில் இருவரும் மிக அதிகமாக பேசுவதாலேயே திருமணங்களில் பிரச்சினைகள் ஏற்படுவது அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில்... அந்த மாப்பிள்ளை எடுத்த முடிவு பற்றி யோசிக்கிறேன். 

நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடைப்பட்ட நாட்கள்தான் ஏற்பாட்டுத் திருமணத்தில் அனுமதிக்கப்பட்ட அழகான காதல் நாட்கள். 

என் காலத்தில மொபைல் இல்லை என்பதால் 
வாரம் ஒரு முறை நேரம் முடிவுசெய்துகொண்டு 
கால் புக் செய்து லேண்ட் லைன் ட்ரங்காலில் 
பேசிக் கொண்டோம். அதுவும் அதிகபட்சம் பத்து நிமிடங்களே. மற்றபடி எக்கச்சக்கமாக கடிதங்கள் எழுதிக் கொண்டோம். காதல் அட்டைகளும், பரிசுப் பார்சல்களும் அனுப்பிக் கொண்டோம். 

ஒரு லிமிட்டோடு மட்டும் பேசிக் கொள்ளலாமே என்று அட்வைஸ் சொல்லலாம் என்று நினைத்தால்.. அந்த எல்லைகளில் நிற்பார்களா என்பதும் சந்தேகமே.

சில சுவாரசியங்களின் இழப்புகள் இருந்தாலும் 
அந்தப் பையன் எடுத்த முடிவு சரியானதுதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

சரியா, தவறா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எழுத்தாளர் பட்டுக்கோட்டை அவர்களின் முகநூல் பதிவு ///

https://www.facebook.com/share/p/12JwfLBF2ED/

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 15, 2025, 5:39:34 AMJul 15
to vallamai
விளம்பர யுகத்தைப் பற்றி ஆழமான உண்மையோடு; மக்களை சிந்திக்க வைக்கும் நகைச்சுவைப் பதிவு 

*/// கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான எவனோ எழுதியிருக்கான்.* 

*உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருப்பதை போன்ற விளம்பரங்கள் நிஜமா????? *

*காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு மணி நேரம் கிருமிகளிடமிருந்து உங்கள் பல்லுக்கும் வாய்க்கும் பாதுகாப்பு” என்று பாடம் நடத்துகிறார்.*

*விட்டால் வீடுவீடாக வந்து காலங்காத்தாலே பல் துலக்கி விட்டு ஹோம்டெலிவரி என்று செர்வீஸ் சார்ஜும் போட்டு பில்லை தலையில் கட்டுவார்கள் போல.*

*கக்கா போகலாம் என்று கக்கூசுக்கு போனால் உடகாராதீங்க உட்காராதீங்க என்று அங்கே ஒரு மாஜி நடிகர் வலக்கையில் துடைப்பமும் இடக்கையில் கிருமிநாசினியுமாக உள்ளே நுழைகிறார்.*

 *“அட நிம்மதியா காலைக்கடன் கழிக்கக் கூட விடமாட்டீங்களா” என்றால் “உங்க டாய்லெட்டு 100 % சுத்தமா இருக்கா?” என்கிறார் “அட வாரத்துக்கு ஒருக்கா கழுவி வுடுறேன் நீங்க போங்க பாஸ்” என்றால் கையிலிருக்கும் பூதக்கண்ணாடியால் கக்கூசை ஆராய்ச்சி செய்கிறார். “சார் இது போதவே போதாது எங்க டாய்லட் கிளீனர யூஸ் பண்ணினீங்கன்னா கிருமிகள் எல்லாம் செத்துரும் நாள் முழுக்க கக்கூஸ் நல்லா இருக்கும்” என்கிறார்.*

 *“யோவ் நான் என்னய்யா நாள்முழுக்க கக்கூசுலயா குடித்தனம் நடதுறேன் போய்யா” என்றால் “ சார் ஸ்மார்ட் கக்குஸ் ஸ்மாட்டஸ்ட் கக்கூசர்”என்கிற காண்டெஸ்ட்ல வின் பண்னினா நீங்க வெளிநாடு போகலாம்” என்ற படி பாட்டிலுடன் கூப்பனை நீட்டுகிறார்.*

 *“யோவ் வெளிநாடு போகிறது இருக்கட்டும் நான் முதல்ல வெளிக்கி போகணும். நீ முதலில வெளியில போய்யா” என்று கதவை சாத்தவேண்டி இருந்திச்சு.*

*ஒரு வழியா வெளிய வந்தா ஒருத்தன் ஓடி வந்து கைய புடிச்சு ஒரு மைக்ரோஸ்கோப்புல வச்சிட்டு சொல்றான் “ சார் பாருங்க உங்க உள்ளங்கை முழுக்க ஆயிரக்கணக்கான கிருமிகள்” “யோவ் நீ யாருய்யா. நான் நல்லா கைய கழுவிட்டு தான்யா வந்திருக்கிறேன்”என்று நான் டென்ஷனாகலாம் என்று பார்த்தால் பதிலுக்கு அவர் டென்ஷன் ஆகிறார்.*

 *“சார் நீங்க வெறும் தண்னீல கைய கழுவினீங்க எங்க ஹேண்ட் வாஷ் எக்ஸ்பெர்ட் போட்டு கழுவினீங்களா. இல்லல்ல அப்போ எப்படி சார் உங்க கையில கிருமிகள் எல்லாம் சாகும்” என்று பீதியூட்டும் புன்னகையுடன் பார்க்கிறார்.*

 *வேண்டாம் விட்டுடங்க என்பதை கேக்காமல் உள்ளங்கையில் ரெண்டு சொட்டை வைத்து இப்போ நல்லா கழுவுங்க சார் என்க்றார். “யோவ் என்னமோ நான் பொறந்ததிலேருந்தே கையை கக்கூசுக்குள்ள விட்டுட்டு திரிஞ்ச மாதிரியில்ல இருக்கு உன் பேச்சு ஆளவிடுப்பா” என்று குளியலறைக்குள் நுழைந்தால்,*

*அங்கே ஒரு அம்மா கையில் சோப்புடன் உங்க ஸ்கின்னோட பத்து பிரச்சனைகளுக்கு இது தான் தீர்வு என்று சோப்பை மூக்குக்கு நீட்டுகிறார்.*

 *“இந்தாம்மா இந்த பத்து படை இதெல்லாம் எனக்கு பிரச்சினையே இல்ல முதல்ல ஆம்பிள குளிக்கிற இடத்துல உனக்கென்னமா வேலை வெளிய போம்மா” என்கிறேன்.*

 *“சார் அப்போ எங்க சோப்ப போடுங்க உங்க அக்குள்ல இருந்து தொப்புள் வரைக்கும் கிருமிகளை கழுவிக்களைய இது இருபத்தி நாலுமணி நேர கேரண்டி” என்று அண்டாவுக்குப்பின்னாலிருந்து எழுகிறாள் இன்னொரு பெண்.*

 *“உட்டா உலகத்துல இருக்கிற கிருமியெல்லாம் என் உடம்ப குத்தகைக்கு எடுத்து குடித்தனம் பண்றதா சொல்வீங்க போல”ன்னு வெளிய தொரத்திட்டு குளிச்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்ணு ஆயிடிச்சு.*

*நிம்மதியா சப்பிடலாம்ணு ஒரு பிடி சோத்த வாய்க்கு கொண்டு போற நேரத்துல பொருத்தமே இல்லாம வேலைக்காரி வேஷம் போட்ட ஒரு விளம்பர மாடல் வந்து கைய பிடிச்சு சாப்பிடறத நிறுத்துறா.*

 *பதட்டத்தோட பரபரக்கிற என் மனைவி கிட்ட கேக்குறா“பாத்திரம் கழுவும் போது பாத்து கழுவினீங்களா”. என் மனைவியோ செய்யக்கூடாத குற்றத்தை செய்து விட்டது போல திருதிருவென்று முழிக்கும் கணத்தில்,*

 *“உங்க பாத்திரங்கள் எங்களோட நீமும் எலுமிச்சையுமுள்ள டிஷ் வாஷ் வச்சி கழுவினா தான் கிருமிகளெல்லாம் சாகும். பாத்திரமும் பளபளக்கும்” என்கிறாள்.*

 *“அட நிம்மதியா சப்பிடவும் விட மாட்டீங்களா” என்று எழுந்து தண்ணி குடிக்கப்போனால் அங்கேயும் விடுறதாயில்லை.*

*ஜன்னல் வழியாக எட்டி பார்த்து எகத்தாளமாய் சிரித்து விட்டு ஒருவன் சொல்கிறான் “உங்க தண்ணி சுத்தமானதா? எங்க தண்ணி 100% ஜெர்ம்ஸ் ஃப்ரீ அடிஷனலா இரும்பு சத்தும் சேர்த்திருக்கோம்”*

 *“யோவ் என்னைய்யா தண்ணியையே நீங்க தான் கண்டு பிடிச்ச மாதிரி பேசுறிங்க” என்றால் “ இரும்பு சத்து சார் இரும்பு சத்து” என்று பாட்டிலை வாய்க்கு நேராக நீட்டி ஆட்டுகிறான். “இரும்பு சத்து வேணும்னா நான் இந்த ஜன்னல் கம்பியையே கடிச்சு சாப்பிட்டுகிறேன் நீ கிளம்புப்பா” என்று துரத்தி விட்டு திரும்பி சட்டையை போட்டுட்டு கிளம்பலாம் என்றால்,*

 *அங்கேயும் ஒரு எக்ஸ்பெர்ட் கையில் பாட்டிலுடன் நிக்கிறான்.*
*அவன் சொல்லும் முன்பே நான் முந்தி கொள்கிறேன்”யோவ் இது சத்தியமா சுத்தமா துவச்ச சட்டை தான்யா” என்கிறேன்.*

*அவனோ சிரித்தபடி “துவச்சீங்க ஆனா எங்களோட இந்த ப்ராடக்ட்ல ரெண்டு சொட்டு உட்டு துவச்சீங்கன்னா துணியில ஒரு கிருமி கூட ஒட்டிக்கிட்டு இருக்காது” எனக்கு சட்டையே வேண்டாம் என்று ஹேங்கரை தூக்கி எறிந்து விட்டு ஹாலிற்கு வந்தேன்.*

*”சார் காலை கொஞ்சம் தூக்குங்க” என்று தரையை தண்ணீர் விட்டு துடைக்கிறாள் இன்னொரு விளம்பர பெண் “என்னம்மா என்ன ஆச்சு” என்றால் “தரையெல்லாம் கிருமிகள் சார்.*

 *எங்க ஃப்லோர் கிளீனர் கண்ணுக்கு தெரியாத கிருமியை எல்லாம் அழிச்சு உங்க தரையை சுத்தம் பண்னிடும். காலை தூக்குங்க சார்” என்ற படி தரையில் ஒரு தேய்ப்பு தேய்க்கிறாள்.*

 *”கண்னுக்கு தெரியாத கிருமி எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது” என்றால் “டெக்னாலஜி சார் டெக்னாலஜி” என்கிறாள்.*

*காலையில எழுந்து, கக்கூஸ் போனா கிருமி, கைய கழுவினா கிருமி, பல்லை தேய்ச்சாலும் கிருமி, குளிச்சாலும் கிருமி, நடந்தா காலில கிருமி நடக்குற தரையிலும் கிருமி உட்காந்த கிருமி உட்காருற இடத்திலயும் கிருமி முகத்தை தொடச்சா கிருமி சாப்பிட்டா கிருமி சாப்பிடுற தட்டிலயும் கிருமி தண்ணி குடிச்சா கிருமி வெளியில போனா கிருமி உள்ள வந்தா கிருமி மண்டைல கிருமி தொண்டையில கிருமி வாயில கிருமி வாசலில கிருமி துணியில கிருமி தும்மினா கிருமி தூங்கினா கட்டில்ல கிருமி தூங்கி எழுந்தா மறுபடியும் பல்லில கிருமி என்று தெனாலி கமல் மாதிரி தினமும் பொலம்ப வச்சிடுறானுங்க.*
 
*“ஏண்டா இந்த பூமியில கிருமி நாசினிகள் வரும் முன்னாடியே மனுஷங்க வாழ்ந்திட்டு இருக்கானுங்க மனுஷங்க வரும் முன்னாடியே கிருமிகள் வாழ்ந்திட்டு இருக்கு.*

 *அது பாட்டுக்கு இருந்திட்டு போகட்டும் இப்படி உலகததையே கழுவி தொடச்சி கிருமிகள அழிச்சி பளபளன்னு வச்சிட்டு பவுடர் போட்டு அழகு பாக்கவா போறீங்க.*

 *ஓடிப்போயிடுங்க என்றபடி மனைவியைப் பார்த்தேன் அவள் சொன்னாள் “*

 *கடைசியா ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு இந்த டிவி பொட்டியிலிருந்து தான் எல்லா கிருமிகளும் இங்கே வீட்டுக்குள்ள வருது முதல்ல அத அணைச்சிடுங்க” என்கிறாள். நான் டிவியை அணைத்து விட்டேன். அதிலிருந்து எங்கள் வீட்டுக்குள் கிருமிகள் இருக்கலாம் ஆனால் வியாபாரக் கிருமிகள் இல்லை.*

 *இப்போதான் நானும் என் மனைவியும் குழந்தைகளும் கிருமிகளும், கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம் என்கிறார் ஒரு சாமானியன்.*///


இந்த விளம்பரங்களை நம்பும் இளைய தலைமுறையினருக்கு மத்தியில் தானே நாம் முரண்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 😄

சக 

kanmani tamil

unread,
Jul 17, 2025, 10:39:51 AMJul 17
to vallamai
எதுவும் சொல்வதற்கு இல்லை...


சக 

kanmani tamil

unread,
Jul 18, 2025, 4:43:23 AMJul 18
to vallamai
*///🔅ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்துக் கேட்டான்👍*
🔅செல்போன்,
🔅டி வி,
🔅கம்ப்யூட்டர்,
🔅இண்டர்னெட்
🔅ஏ சி,
🔅வாஷிங் மெஷின்,
🔅கேஸ் கனெக்‌ஷன்,
🔅மிக்ஸி,
🔅கிரைன்டர்,
இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?

தந்தை பதில் கூறினார்...

ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,

 👍நாங்கள் சைக்கிள் ஒட்டினோம், 

👍ஹெல்மெட் அணியவில்லை,

👍பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்
பொழுது சாயும் வரை
 விளையாடினோம்.

👍டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை,

👍உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம்.

👍இண்டெர் நெட்டில் அல்ல,

👍தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம்,

👍மினரல் வாட்டர் அல்ல,

👍ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை,

👍தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை

👍எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம், எந்த பாதிப்பும் வந்ததில்லை,

👍எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்,

 👍எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல, ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை,

👍பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம். ஹாஸ்டல் அறைகளில் அல்ல,

 👍உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம். வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை,

👍எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்,

👍எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள், உங்களைப்போன்று தனிக்குடித்தனம் அல்ல,

👍எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.

 👍பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்,

👍சுருக்கமாக சொன்னால்,
⚘WE ARE THE LIMITED EDITIONS⚘

👍ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 👍அன்பாக இருங்கள்,
 👍கற்றுக் கொள்ளுங்கள்,
 
 👍நாங்கள் இம்மண்ணிலிருந்து மறையும் வரை, 🙏🙏🙏

https://www.facebook.com/share/p/1CD2YsLUqU/

தெரிவு: சக 



kanmani tamil

unread,
Jul 19, 2025, 12:01:49 AMJul 19
to vallamai
*எழுதியது யார் என்று தெரியவில்லை..* 

 ஆனால்...
உண்மையை புட்டு புட்டு வச்ச மாதிரி இருக்கு!

 ●  வெற்றிலை பாக்கு போட்டால் அது கிராமம்.
பீடா போட்டால் அது நகரம்.

●  பச்சை குத்தினால் கிராமம்.
டாட்டூ (Tattoo ) போட்டுக் கொண்டால் நகரம்.

● மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்.
மெஹந்தி போட்டா நகரம்.

●  மஞ்சள் தண்ணி ஊத்தி கொண்டாடினா கிராமம்.
இரசாயன (Chemical) பொடி தூவி ஹோலின்னா (Holi) நகரம்.

● கையில் மஞ்சப் பை வைத்திருந்தால் கிராமம்.
பாலித்தீன் பை வைத்திருந்தால் நகரம்.

●  கணவன் தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்.
மனைவி அவள் நண்பா்களை கணவனுக்கு அறிமுகம் செய்தால் நகரம்.

● கிழிந்த ஆடையை துவைத்துப்  போட்டால் கிராமம்.
நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்.

●  உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்.
உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்.

● கோடு போட்ட அண்டர்வேர் (பட்டாப்பட்டி) கிராமம்.
இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் நகரம்..

● நாய் வீட்டைக் காவல் காத்தால் அது கிராமம்.
நாயை வீட்டில் வைத்து காவல் காத்தால் அது நகரம்.

 *இப்ப இன்னொன்று .* 

● சாதத்தில்  தண்ணீர் ஊற்றி, பழையது சாப்பிட்டா கிராமம்.
அமேசான்ல ஆர்டர் பண்ணி பழையது சாப்பிட்டா நகரம்.

 *நீங்கள் கிராமமா அல்லது  நகரமா ?*

இது ஒரு வாட்ஸ் ஆப் பகிர்வு

சக 

kanmani tamil

unread,
Jul 20, 2025, 8:47:30 AMJul 20
to vallamai
பெற்றோர்களின் மனநிலையில் தேவைப்படும் மாற்றம்...

/// பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்....!!

அன்பார்ந்த பெற்றோர்களே! 

உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது. பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம். எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

☀பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்... ஒரு கலைஞன் இருப்பான்... அவனுக்கு கணிதம் தேவைப்படாது. 
☀அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்... அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை. 
☀ஒரு இசைஞானி இருப்பான்... அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது. 
☀ஒரு விளையாட்டு வீரனிருப்பான்... அவனது உடல் நலனே முக்கியமன்றி பௌதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

💥பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை...!! எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன் என்று தயவு செய்து அவர்களது தன்னம்பிக்கையை ஒரு போதும் பறித்து விடாதீர்கள். 

💥அவர்களுக்குச் சொல்லுங்கள்.... இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே. நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன. 
உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை. "என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படிச் சொல்லிப் பாருங்கள். 

💥பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.
வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்துவிடக் கூடாது. 

💥மதிப்பெண் என்பது வெறும் எண் தான்...
வாழ்க்கையின் முடிவே அது அல்ல... புரிந்து புரிய வையுங்கள்...

நன்றி 
Amma Shagasraa///

https://www.facebook.com/share/p/1AAATygtG9/

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Aug 9, 2025, 1:52:57 PMAug 9
to vallamai
/// 🇮🇳 A Mirror We Refuse to Look Into

Japan — a nation devastated by two nuclear bombs — rose from its ashes without begging for sympathy or aid. It rebuilt itself with pride, with honour, and with an unshakable sense of self-respect and keeping its own culture alive. Since then, not once has it stretched a hand to USA for alms.

An Indian gentleman who had lived in Japan for over a year was struck by something strange. Though people were polite, helpful, and respectful — no one ever invited him to their home. Not for tea. Not even once.

Perplexed and hurt, he finally asked one of his Japanese acquaintances why.

After a long pause, the friend replied — quietly, but without hesitation:

1 “We are taught Indian history… not for inspiration, but as a warning.”

Confused, the Indian man asked — “A warning?”

The Japanese friend continued:

2 Tell me — how many British ruled India?”

The Indian man thought. “Perhaps… around 10,000?”

3 And how many Indians lived there? Over 300 million, right?”

4 Then who oppressed your people? Who carried out the orders to whip, torture, and shoot them?”

5 When General Dyer gave the command ‘Fire!’ — who pulled the trigger on your own unarmed brothers and sisters? The soldiers weren’t British… they were Indian.”

> “Not one turned their rifle on the tyrant. Not one.”

The Japanese friend went on:

“How many Mughals came from Central Asia? A few thousand maybe? And yet they ruled you for centuries. They built empires not with their numbers, but because your own people bowed their heads and offered their loyalty in exchange for survival… or silver.”

Your own blood converted. Your own brothers became instruments of their oppression. Your own men handed over your heroes — Chandrashekhar Azad was betrayed. Bhagat Singh faced the gallows without even a whisper of help from those who called themselves patriots.”

You don’t need foreign enemies. Your own betray you… for power, for position, for personal gain. Again and again. For centuries.”

> “That is why we keep our distance.

> “But in India, you didn’t just join the enemy. You served them. Worshipped them. Killed your own to please them.”

> “Even today, you haven’t changed. Offer some free electricity, a bottle of liquor, a blanket — and your vote, your conscience, your voice — all sold without a thought. Your loyalties lie not with your nation, but with your stomach.”

“You chant slogans. You march in protests. But when it matters, when the country needs your character — where are you?”

“Your first loyalty is still to yourself. Your family. Everything else — society, dharma, the country — can burn.”

And then he said one last thing.

“If your nation is not strong, your home will never be safe. If your character is weak, no flag can protect you.”

We are still such a fragmented society even today.Nothing much has changed even today. Fact remains we dont need patriotic speeches . We need people with character
people who think and Practice- India First 
Jai Hind 

#IndiaFirst///

https://www.facebook.com/share/p/1BEEYxHyqA/

சிந்திக்க வைக்கும் பதிவு. 

kanmani tamil

unread,
Aug 18, 2025, 5:21:56 AMAug 18
to vallamai
😀😃😃

எந்த மொழி ஆனாலும் அதை மனமொப்பிப் பேசுவதும் பயில்வதும் தான் வாழ்க்கைக்கு வசதி ஆகும். 


பிஞ்சுக் குழந்தையிடம் பேசுவது உயிர் வாழ மூச்சு விடுவது மாதிரி இயல்பாக அமைவது தானே நல்லது. 

இயல்பிற்கு முரணாக இந்தத் தாய் பேசுவது... லண்டன்குட்டித்தனம். 

சக 

kanmani tamil

unread,
Aug 19, 2025, 9:47:06 AMAug 19
to vallamai
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருப்பதாகக் கூறப்படும் இவ் வேறுபாடுகள் எந்த அடிப்படையில் முடிபுகள் ஆக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால் இம்முரண்கள் வாசிக்க ஆர்வத்தைத் தூண்டுகின்றன. 


///ஆணும் பெண்ணும் சமமானவர்களில்லை..

ஆணையும் பெண்ணையும் படைத்த இயற்கை ஆணும் பெண்ணும் சரிசமமானவர்கள் அல்ல என்று பிரித்துள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் அடிப்படை வித்தியாசங்களைக் வேறுபிரித்துக் காட்ட விழைகின்றது. அத்தோடு இந்த வித்தியாசத் தன்மைதான் இருவரும் சேர்ந்து வாழ வழியமைக்கின்றது. ஆண் பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் தேவையுடையவர்கள் என்பதை உண்ர்த்துகின்றது. ஆணோ, பெண்ணோ இருவரும் அரைகுறையானவர்கள். இருவரும் இணையும்போதுதான் அங்கு பூரணத்துவம் ஏற்படுகின்றது.

திருமண வாழ்க்கையில் இந்த ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. இதனை விளங்காதிருக்கும்போது தான் “என்னால் முடியும் என்றால் ஏன் உன்னால் முடியாது? உன்னால் முடியுமென்றால் ஏன் என்னால் முடியாதா?” என்ற வெடுக்குத்தனமான கேள்விகளெல்லாம் எழுகின்றது. அதன் தொடராக பிரச்சினைகளும் வெடிக்கின்றன. எனவே இல்லரத்தில் இணைந்தவர்களும் குறிப்பாக இணைய இருக்கின்றவர்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும்.

1.நிறமூர்த்தத்தில் உள்ள வேறுபாடு:

பரம்பரையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செழுத்தும் நிறமூர்த்தங்களில் (குரோமோசோம்) ஆணினது நிறமூர்த்தம் XY என்ற அமைப்பிலும் பெண்ணுடைய நிறமூர்த்தம் XX என்ற அமைப்பிலும் காணப்படுகின்றது. இவைதான் ஒரு பிள்ளை ஆணாகப் பிறக்குமா? அல்லது பெண்ணாகப் பிறக்குமா? என்பதனைத் தீர்மானிக்கின்றது. பார்த்தீர்களா? அடிப்படையே வித்தியாசம். இனி எப்படி ஆணும் பெண்ணும் சமமாக முடியும்?

2. பார்வைப் புலன்:

படம் 2 துணையுடன் இதனைப் படியுங்கள். பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 பாகைக் கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது. இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 பாகைக் கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும். அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது. 

உங்களது வீட்டிலும் இந்தப் பிரச்சினை இருக்கும். கணவன் வேலைக்குச் செல்ல தயாராகிக்கொண்டு “எண்ட பைக் கீ எங்க? கார் கீ எங்க? ஆபீஸ் கீ எங்க?, சாக்ஸ பார்த்தீங்களா? என்று மனைவியைப் போட்டு வதைப்பதும் மனைவியும் ”இது என்ன? கண்முன்னுக்கு வச்சிக்கிட்டு தேடுறீங்க? எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்” என்று திட்டிக்கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி. இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும். ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.

3. கவனம் செலுத்தும் திறன்:

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Multi Personality என்போம். உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும். உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Single Personality என்போம். உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது. அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது. கணவன் பத்திரிகையைத் திறந்து சோபாவில் அமர்ந்தால் மனைவி வாயைத் திறப்பார் “இந்த மனுசனுக்கு உலகமே அழிஞ்சாலும் ஒன்னும் தெரியாது. பேப்பர்தான் அவருக்கு உலகம்”

4. நிறங்கள் புலப்படும் விதம்:

ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள். காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்கள் துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான். எனவே ஆண்கள் மொத்தமாகப் பார்க்கும் பார்வையைவிடவும் பெண்கள் துல்லியமாகப் பார்ப்பதால் ஆடைகளைத் தெரிவுசெய்வதில் தாமதம் ஏற்படுகின்றது. படம் 3 பார்த்தால் புரியும்.

5.மொழி:

பெண்களால் இலகுவாக பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம். அவ்வாறே ஒரு நாளைக்குப் பெண்கள் சுமார் 7000 வார்த்தைகளைப் பேசுகின்றார்கள். 

ஆண்கள் ஒரு நாளைக்குப் பேசும் வார்த்தைகள் சுமார் 2000 மட்டும்தான். அனேக கணவன்மார் மனைவியைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைதான் “வாய மூடு, ஏன் எப்ப பாத்தாலும் சும்மா வள வளண்டு பேசுற?” பெண்கள் தமக்குள் உள்ளவற்றையெல்லாம் வாய் திறந்து பேசவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கணவன் அன்றி வேறு யாரிடம்தான் அவர்களால் வாய் திறந்து பேச முடியும்? கணவன்மாரே மனைவியருக்கு சற்று செவிசாய்த்தால் என்ன?

6. பகுத்துணரும் திறன்: (Analytical Skills):

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

உதாரணமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் (Signal) என்பவற்றை முன் கூட்டியே விரைவாகக் கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். ஆண்களால் இவ்வாறு செய்ய முடிவதற்குக் காரணம், ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறனும் 90 பாகையில் தூரப் பார்க்கும் திறனுமாகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

7. உடல் மொழிகளைப் பிரித்தறிதல்:

பெண்களால் இலகுவாக ஆண்களின் உடல் மொழிகளைப் (Body languages) படித்திட முடியும். சோர்வு, விரக்தி, கவலை, கோபம், சந்தோசம் என எதனையும் ஒரு பெண்ணால் இலகுவாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்துகொள்வார்கள். ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் பிரித்தறிந்து உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை.

8. பிரச்சனைக்கான தீர்வுகள்:

பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள். ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்ணின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாகவே திருப்தியடைந்து கொள்வார்கள். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் சரி தீராவிட்டாலும் சரி அவர்கள் நிம்மதியாக படுத்துறங்குவார்கள்.

உதாரணமாக ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்.

9. மகிழ்ச்சியின்மை:

ஒரு பெண்ணிற்கு தனது அன்புறவுகளிடையே பிரச்சினை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களால், அவர்களின் வேலையில் ஒழுங்கு முறையாகக் கவனம் செலுத்த முடியாது. அதேபோன்று ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சினை இருந்தால் அவனின் அன்புறவுகளின் மீது சரியாகக் கவனம் செலுத்த முடியாது.

10. ஞாபக சக்தி:

இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். பிள்ளையின் பிறந்த தேதி, வயது, எத்தனையாவது வகுப்பில் படிக்கிறான் என்று தந்தைமாரைக் கேட்டால் மனைவியைத்தான் திரும்பிப் பார்ப்பார்கள். மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள். எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் மறந்துவிடுவார்கள். காரணம் ஆண்களின் இயல்புத் தன்மை அப்படித்தான். ஆனால் இதுவிடயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள். கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.///

இவை அறிவியல்பூர்வமான முடிபுகளா?!


தெரிவு: சக 
Reply all
Reply to author
Forward
0 new messages