துப்பாக்கி
உலகின் புகழ்பெற்ற கைதுப்பாக்கிகளில் ஒன்று கோல்ட் 45 (Colt 45). இயந்திர துப்பாக்கிகளில் எப்படி ஏகே 47 பிரபலமோ அப்படி கைதுப்பாக்கிகளில் கோல்ட் 45 பிரபலம். இந்த துப்பாக்கி பிறந்த கதை சுவாரசியமானது
19ம் நூற்றாண்டில் கட்டைதுப்பாக்கிகளையும், பயோனட்டுகளையும் ரிவால்வர்களையும் போருக்கு பயன்படுத்தி வந்தார்கள். ரிவால்வர் என்பது தமிழ் சினிமாவில் வில்லன்கள் வைத்திருக்கும் ஆறுகுண்டு அடங்கிய துப்பாக்கி. இதை வைத்து போரை சமாளிக்க முடியாது என்பது 1899ல் துவங்கிய பிலிப்பைன்ஸ்- அமெரிக்க போரில் தெரிய வந்தது. மேலைநாடுகளில் போரில் சாவகாசமாக துப்பாக்கிகளில் குண்டுகளை லோட் செய்து சுடலாம். காரணம் அப்போதைய மேலைநாட்டு போர்களில் இரு தரப்பு வீரர்களும் தொலைதூரத்தில் இருந்து பீரங்கி குண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் சுட்டு கொள்வார்கள். ஆனால் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த போரில் முதல் முதலாக காடுகளில் மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர்வீரர்களை அமெரிக்க படைகள் எதிர்கொள்ள நேர்ந்தது.

முதல் உலக யுத்தத்தில் 13 பேர் அடங்கிய அமெரிக்கபடையணி ஒன்றுக்கு ஜெர்மன் படையணிகளை தாக்கி அவர்களின் பீரங்கிகளை கைப்பற்றும் பணி கொடுக்கபட்டது. பதுங்கி, பதுங்கி சென்ற அந்த அணியின் மேல் யதேச்சையாக வந்து விழுந்த பீரங்கி குண்டு ஒன்று அதன் தலைவர் உட்பட ஆறுபேரை கொன்றது. தலைவரை இழந்த அணிக்கு தலைமை தாங்கினார் ஆல்வின் யார்க் எனும் இளைஞர்.
வெறும் ஏழு பேரை வைத்துகொண்டு நூற்றுகணக்கான ஜெர்மானியர்கள் மேல் தாக்குதல் தொடுத்தார். யார் எங்கே இருந்து சுடுகிறார்கள் என தெரியாத குழப்பமான சூழல். எத்தனை அமெரிக்கர்கள் தாக்குகிறார்கள் என புரியாமல் ஜெர்மானியர்கள் குழம்பினார்கள். ஜெர்மானிய இயந்திர துப்பாக்கிகள் முழங்க அஞ்சாமல் திருப்பி சுட்டார்கள் அமெரிக்கர்கள். ஒரு கட்டத்தில் யார்க்கின் இயந்திர துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்த நிலையில் யார்க்கை நோக்கி பயோநெட் ஏந்திய ஆறு ஜெர்மானிய வீரர்கள் பாய்ந்தார்கள். சற்றும் தயங்காத ஆல்வின் யார்க் தன் கோல்ட் 45 உருவி எடுத்தார். ஆறு ஜெர்மானியர்களையும் சுட்டு தள்ளினார். அதன்பின் யார்க் தன் கோல்ட் 45 மட்டும் வைத்துகொண்டு ஜெர்மானியர்களை சுட்டு தள்ளி முன்னேறி பீரங்கிகளை அடைந்து பீரங்கிகளை இயக்கிய ஜெர்மானியர்களை சுட்டு கொன்று பீரங்கிகளை பிடித்தார். பீரங்கி பிடிபட்டபோது யார்க்கின் துப்பாக்கியில் மீதம் இருந்தது ஒரே ஒரு குண்டுதான்.
பீரங்கிகள் பிடிபட்டவுடன் ஜெர்மானிய தளபதி பால் வால்மர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி சரணடைவதாக கூறினார். அதன்பின் ஒற்றை புல்லட்டுடனும், ஏழு வீரர்களுடனும் களத்தில் நின்ற ஆல்வின் யார்க்கிடம் 4 அதிகாரிகள் உள்ளிட்ட 132 ஜெர்மானியர்கள் சரணடைந்தார்கள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
செல்வனுக்கு துப்பாக்கி வாங்கும் உரிமம் வேண்டுமென்றால் இந்தப் பாட்டை (பிழையில்லாமல் ) பாடிக் காட்டினால்தான் உரிமம் வழங்கப்படும் என சட்டம் போடச் சொல்லி நான் கோரிக்கை வைப்பேன்...