தமிழ் எழுத்துகள் வரிசைப்படுத்தப்பட்டது எப்படி?

24 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 25, 2026, 8:41:18 AM (11 days ago) Jul 25
to வல்லமை, hiru thoazhamai
                                                               தமிழ் எழுத்துகள் வரிசைப்படுத்தப்பட்டது எப்படி?


image.png

தமிழ் எழுத்துகள் சீரற்ற (random) முறையில் உருவானதாக சர்ச்சையான கருத்தை வெளியிடுகிறார் செயந்து  தேவ் என்ற கருநாடகர். அதே நேரம் சமசுகிருத எழுத்துகள் அறிவார்ந்த முறையில் வரிசை படுத்தப்பட்டுள்ளதாக சொல்கிறார். 

உண்மையில் உலகில் முதன்முதலாக இலக்கணம் தோன்றியது தமிழில் தான். தமிழ் இலக்கணத்தின் முதல் இலக்கணம் எழுத்தை பற்றியது தான். அதன் பின் சொல் இலக்கணம், பொருள் இலக்கணம் தோன்றின. யாப்பு, அணி இலக்கணங்கள் மிக பிற்பாடே தோன்றின. 

பேரா. பாண்டியராசா தமிழ் எழுத்து பயன்பாடு பற்றிய ஆய்வுக் காணொளியில் சொல்வது போல பல ஆயிரம் ஆண்டு பழமையான பாறைக் குகை ஓவிய சிந்து எழுத்துகளிலும் குறில் எழுத்துகள் தான் அதிகம். 


ஒலியின் அளவை ஒரு மாத்திரை, இரு மாத்திரை, அரை மாத்திரை என்று அளவிட்டு அதற்கு தக வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பகுத்தனர் தமிழ்ப் புலவர். 

க, ச, ட, த, ப, ற வல்லினத்தில் றகரம் தவிர்த்து பிற எழுத்துகள் அதிகம் பயன்படுகின்றன. இடையினம் ய, ர, ல, வ, ழ, ள வில் ர, ல, வ அதிகம் பயனில் உள்ளன. இரண்டு எழுத்துகளை இணைக்க இவை இடையில் வைக்கப்படுவதாலேயே இடையினம் எனப்பட்டன போலும். மெல்லினம் ங, ஞ, ண, ந, ம, ன வில்  தவிர பிறவற்றின் பயன் நடுவிலும் இறுதியிலும் அதிகம் உண்டு. ஆக பேரா. பாண்டியராசா சொல்வது போல் வல்லின, மெல்லின எழுத்தே தமிழில் அதிகம் பயன்படுகின்றன. 

இனி, இந்த எழுத்துகள் எவ்வாறு? எந்த காரணம் கொண்டு வரிசை படுத்தப்பட்டன என்று பார்த்தல் தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் சில உண்டு. அதே நேரம் ககரம், சகரம் கொண்ட சொற்கள் மிகு பயன்பாட்டில் இருப்பதை கவனித்து. க, ச வை முதலில் வைத்தனர் புலவர். ன் + க் = ங், ன் + ச் = ஞ் என ஈரெழுத்துகளின் கூட்டால் இந்த எழுத்துகள் உருவானதால். இவை இன எழுத்துகள் என உணர்ந்து. இவற்றை அந்தந்த எழுத்துகளின் பக்கத்தில் வைத்ததால் க, ங, ச, ஞ என்று வரிசைப் படுத்தினர் புலவர். பின் வல்லினத்தில் அதிகம் புழங்கும் எழுத்துகள் ட, த, ப ஆகும். இவற்றின் ஊடே மெல்லின ஒலிகளான ண, ந, ம ஆகிய எழுத்துகளை வல்லின ட, த, ப வின் இடையே வைத்து வரிசைப்படுத்தினர் எனலாம். பின்பு விடுபட்ட  இடையின ய, ர, ல, வ, ழ, ள எழுத்துக்களை நாவின் இசைவிற்கு தக வரிசைப் படுத்தினர் என்று தோன்றுகிறது. ள, ற, ன ஆகியன காலப்  பிற்பாடு தோன்றிய எழுத்துக்கள் ஆகலின் இறுதியில் வைத்திருக்கலாம் என்கிறார் தேவநேய பாவாணர். எனவே தான் இவை வடநாட்டு எழுத்துகளில் இல்லை என்பது அவர் கருத்து. 

உயிர் எழுத்துகளில் ஆ, ஈ, ஊ ஆகியன இடச்சுட்டாக அடிக்கடி பேச்சில் புழங்கியமையால் இவற்றின் குறிலை முன்னிட்டும் நெடிலை பின்னிட்டும் வரிசைப் படுத்தி இருக்க வேண்டும். எ, ஒ எழுத்து பயன்பாட்டு சொற்கள் தமிழில் குறைவு என்பதால் அவற்றை குறிலும் நெடிலுமாக பின் வரிசையில் வைத்து விட்டனர் போலும். ஐ,  இரண்டுக்கு இரு உயிர் எழுத்தின் கூட்டு ஒலிகள் (dipthong) ஆகும்.  ஆதலால் இவ்விரு எழுத்துகளை இறுதியில் இடையிடையே வைத்தனர். 

இந்த வல்லின, மெல்லின சொல் புழக்கத்தை வைத்து தான் புலவர் தமிழ் எழுத்துகளை சீராக வரிசைப்படுத்தினர் என்ற முடிவு தான் சரி. இந்த முறையிலேயே வடநாட்டில் பாளி, பிராகிருத மொழிகள் தமக்கான கூடுதல் எழுத்துகளை வரிசைப்படுத்திக் கொண்டன. எனவே இந்திய மொழிகள் தம் எழுத்து வரிசை அமைப்பில் தமிழைத் தான் பின்பற்றின என்பதே மெய். பிற நாட்டு எழுத்துகளில் குறில், நெடில் பாகுபாடு இன்மையால் எழுத்துகள் சீரற்றும் குறைவாகவும் உள்ளன.

seshadri sridharan

unread,
Jul 25, 2026, 4:14:53 PM (10 days ago) Jul 25
to வல்லமை, hiru thoazhamai
தட்டச்சு பொறியில் கூட அதிக பயன்பாட்டு எழுத்துகள் முன்னும் குறைந்த பயன்பாட்டு எழுத்துகள் ஓரத்திலும் வரிசைப்படுத்தப்பட்டு  இருக்கும். எனவே இந்த வரிசையில் தான் எழுத்துகள் இடம் பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. எனவே இந்திய எழுத்துகளின் தாய் எழுத்து தமிழே. 

seshadri sridharan

unread,
Jul 27, 2026, 6:15:21 AM (9 days ago) Jul 27
to வல்லமை, hiru thoazhamai


On Sun, 26 Jul, 2026, 1:44 am seshadri sridharan, <ssesh...@gmail.com> wrote:
தட்டச்சு பொறியில் கூட அதிக பயன்பாட்டு எழுத்துகள் முன்னும் குறைந்த பயன்பாட்டு எழுத்துகள் ஓரத்திலும் வரிசைப்படுத்தப்பட்டு  இருக்கும். எனவே இந்த வரிசையில் தான் எழுத்துகள் இடம் பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. எனவே இந்திய எழுத்துகளின் தாய் எழுத்து தமிழே. 

ஆதி தமிழ்க் குடிகள் சிறு குழுக்களாக இருந்ததால் எழுத்தின் வரிசையிடல் மாறுபட்டு  இருக்கலாம்  என்பது சரி.

இந்த செயந்து தேவு ka, kha, ga, gha விற்கு கூறும் விளக்கம் இன எழுத்துகளுக்கு தான் பொருந்துகிறது. ஆனால் "க" வுக்கு பின் "ச" வும் அதற்கு பின் "ட" வும் பின்பு "த" வும் அதே போல "ப" வும் எதன் அடிப்படையில் வரிசையிடப்பட்டன என்பதை கூறாமல் அறிவார்ந்த முறையில் சமசுகிருத எழுத்துகள் உள்ளன என்கிறார்.    நான் அதை வல்லினத்தில் மிகு பயன்பாட்டு முறையில் வரிசையிடப்பட்டதாக கூறியுள்ளேன். மிகு பயன்பாடு கருத்தில் ஏற்பட்ட இந்த வரிசையிடலில் என்ன அறிவார்ந்த (scientific) அணுகுமுறை உள்ளதோ? செயந்து தேவு இதை புரிந்து கொள்ளவே இல்லை. 

Reply all
Reply to author
Forward
0 new messages