--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd4sNfsWqpJ5DAPt%3Dp4Y3EgS2M1niQPVT2HUSTcpfpoeg%40mail.gmail.com.
'மரை' விளக்கம் 👌
'நவ்வி' விளக்கம் 🤔'உழை' விளக்கம் அருமை."மென்தினை நுவணை" இலக்கியத்தில் உண்டு.நுண்ணிடி நுவணை = ? (மலைபடுகடாம்)தினைமா உருண்டையா?எள் உருண்டையா?உரையாசிரியர் தினைமா உருண்டை என்று சொல்லி இருப்பதாக நினைவு.
For representative, typical species in zoology, we see the scientific names repeated twice:
Axis Axis deer (puLLi mAn), ...
https://en.wikipedia.org/wiki/List_of_tautonyms#Mammals
அதுபோன்ற நூற்பா இது: தமிழகத்தில் உள்ள Antelopes-ல் சிறந்த இரலை-யும், Deer-ல் சிறந்த கடமானையும் குறித்து,
புல்வாய் என்பது இரண்டையும் சேர்த்த பொதுப்பெயருள் அடங்கும் என்கிறார்: 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). பல இடங்களில் மனிதன் என்றால் பெண்ணையும் சேர்த்துத்தான். அதுபோன்ற சூத்திரம். Mankind என்றால் பெண்ணும் உளப்படத் தானே.
பின்னர், இருபாலுக்கும் பொதுவான பெயர் கொண்ட நவ்வி (chinkara), உழை (spotted deer) இரண்டுமே புல்வாய்
என்பதாகவும் ஒரு சூத்திரத்தில் சொல்கிறார். அதாவது, இங்கே முன்னர் சொன்ன ராஜமரை (representative antelope) ஆகிய இரலை, ராஜமான் (representative deer) ஆகிய கடமான் இரண்டையும் விட்டுவிட்டு நவ்வி மரை + புள்ளிமான் இரண்டும் புல்வாய் என்கிறார். இது பேராசிரியர் உரையால் தெரிகிறது.
”தொல்காப்பிய மரபியலில்,
“யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே”
என்று வரும் சூத்திரத்திற்கு (தொல்-மரபு-12) உரை கூறும் பேராசிரியர் ’நவ்வியும் உழையும் புல்வாயும் அடங்குமன்றே. அவற்றை மூன்றாக ஓதியதேன்’ என்று தாமே கேள்வி கேட்டு விடை கூறுவது போலப் புல்வாயில் மடனுடைய நவ்வி யெனவும், இடைநிகரன உழை எனவும் கொள்க என்று எழுதுகிறார்.” (பி. எல். சாமி).
இரண்டு சூத்திரங்களாலும் புல்வாய் என்பது பொதுப்பெயர் எனத் தெரிகிறது. சில இடங்களில் சிறப்புப் பெயராக இரலைக்கும் வரும். கலை என்பது கருமை நிறம்பற்றின பெயர். இது கடமானுக்கும், இரலைக்கும் வரும். மரை என்பது Antelopes, this name is due to fixity of horns screwed in to the skull for Life, a defining feature of antelopes. ஆனால், உள்துளை உள்ள "அறுகோடு" (deer's antlers) ஆண்டுதோறும் விழுந்து முளைப்பவை. கவைகள் (branches) கொண்டவை. கலைமான் என்னும் கடமானுக்கும், புள்ளி மானுக்கும் உள்ள கவைக்கொம்பு அறுகோடு (வினைத்தொகை) ஒப்புமையால், கலை என்னும் கடமாவின் பெயர் புள்ளிமானுக்கும் வரும். சங்க நூல்களில் கலைக்கு முன்னே புகர் (அ) புள்ளி என இருந்தால் Axis deer (புள்ளிமான்). புள்ளிமா கருமை இல்லையே, ஏன் கலை என்றனர் என்ற கேள்வி எழலாம்: எண்ணெய் (எள் தானிய நெய்) மற்றவற்றிற்கும் எண்ணெய் (Oil) ஆவது போல. கலை கருமையால் இரலைக்கும், கடமாவிற்கும் முதலில் உருவாகி, புள்ளிக்கலை என்று பொருள்விரிந்தது. அராகம் என்று மனத்தைப் பண்படுத்தும் பண் சிவப்பு நிறத்தால் ஏற்பட்டு, மற்ற எல்லா நிறங்களுக்கான பண்களுக்கு பொதுப்பெயர் ஆக இசையில் ராகம் என்று ஆனாற்போல எனக் கொள்க (Cf. Raagamaala paintings).
சுந்தரர் தேவாரம்:
----------------------
தமிழிலே மூன்று அன்றில் பறவைச் சாதிகளுக்கும் உள்ள பெயரை விளக்கினேன்:
https://groups.google.com/g/houstontamil/c/_4FfKRzq0ww/m/Lrp1CwW-AQAJ
அப்போது (WA group), சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் இரண்டைக் குறிப்பிட்டேன்,
சுந்தரர்: (clearly, distinction between deer "maa/maan" vs. antelopes "marai" is made)
மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே
மற்ற அடிகளின் எதுகையை நோக்கினால், முதல் அடி “மாவும்” எனத் தொடங்க வேண்டும் எனத் தெரிகிறது.
ஆ/ஆன், மா/மான் என்பதாக மாவும் = மான்களும் என்ற பொருளில் இருந்த பாட்டில், காலப்போக்கில்
ஏடுபெயர்த்தோர் மாவும் என்பதை “மானும்” எனத் திருத்திவிட்டார்கள். கவரிமா (குறள்) கவரிமான் ஆகிறது.
'கடமா தொலைச்சிய கானுறை வேங்கை' - சங்கம். கடமா = கடமான், Sambur deer.
கீழ்வரும் அதே பதிகப் பாடலில் “மானும் மரை இனமும்” வருகிறது. எதுகை சரியாக இருக்கிறது.
ஆனால், மேலே கொடுத்துள்ள பாடல் "மாவும் மரை இனமும்" எனத் தொடங்க வேண்டும்.
மாவும் = மானும் எனப் பொருள். எனவே, மாவும் என்பதை மானும் என்று திருத்தத் தேவையே இல்லை.
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும்
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம்
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே
NGOn Mon, Jun 14, 2021 at 7:12 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Sun, Jun 13, 2021 at 3:57 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:அருமையான கட்டுரை திரு கணேசன்நன்றி, கவிஞரே.---------
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து - மலை 404,405
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcWvFLvcFbnfuXc7jnu0Ziu2KfQ%2By%3DesZiNNePoX8EJ%2BA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/8wtqfTSFN0U/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/240d27f6-4702-4ad9-a39d-a28c74104a6an%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeBbD5C%3DO_84tmKJ_gwdDUfGPPHT4ZzWAymFkW64eMqHA%40mail.gmail.com.