குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல்

10 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Sep 2, 2024, 10:15:25 AM9/2/24
to

குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள் 

 இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் - செவிலியர்  அறிவுரை 


தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.

   

                           ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமை தாங்கினார் .சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரைகளை  தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி, மாணவர்களுக்கு வழங்கி பேசுகையில், மாணவர்கள் இனிப்பு சாப்பிடுவதை குறைத்து கொள்ள  வேண்டும்.கீரை மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட்டால் குடற்புழு முற்றிலும் அழிந்துவிடும்.சாப்பிடுவதற்கு முன்பும்,விளையாடிவிட்டு விட்டு வந்தபின்பும் அவசியம் கை ,முகம்,கால் கழுவி கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது குடற்புழு முட்டைகள் வையிற்றுக்குள் செல்வதை அறவே தடுக்க முடியும்.நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள இயலும் என்று பேசினார்கள் பள்ளி ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர்  மாத்திரைகள் வழங்க ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

                   5 முதல் 13 வயது வரை உள்ள மாணவ,மாணவியர்க்கு  400 மி.கி., மாத்திரை வழங்கபட்டது.ரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள  அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்  நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகளை  தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி  மாணவர்களுக்கு  வழங்கினார்கள்  . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 
 
 
வீடியோ : 
 
IMG_5452.JPG
IMG_5456.JPG
IMG_5457.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages