கடம்பனுக்கு(= முருகனுக்கு) உகந்த கடம்ப மலர் ~ செங்கடம்பு, வெண்கடம்பு

43 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 19, 2019, 3:53:04 PM7/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
மாங்குடி கிழாரின் புகழ்பெற்ற புறப்பாட்டிலே நான்கு முதுகுடிகள் கூறப்படுகின்றன:
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவர் அவர்கள். பறையருள் துடியரும்,
பாணருள் கடம்பரும் அடங்குவர். இன்றும் சேர நாட்டில் பாணர் குடிகளில்
இருந்து சங்க இலக்கியம் வர்ணிக்கும் முருகுப் பூஜகன் வேலன் இருக்கிறான்.
இப் புறப்பாட்டில், இசைவாணர்கள் ஆகிய 4 குடிகள் கூறப்படுகின்றன.
இசைவாணரில், கடப்பம் பூச் சூடி முருகு என்னும் அணங்கு (பேஎ விழவு - பரிபாடல்)
செய்பவன் கடம்பன் எனப்படுகிறான். பொதுவாக, வேலன் எனப்படும் இப் பூசாரி
இப்பாடலிலே கடம்பன் என்று முருகனுக்கே சிறப்பான கடம்பு மலரால் குறிக்கப்படுவது
சிறப்பு. அணங்காடல் பேயாட்டம் என்று கேரளாவில் இன்றும் அழைக்கப்படுகிறது.

கடம்புகளில் பல வகையான இனங்கள் (species) உள்ளன. அவற்றிலே, செங்கடம்பு
மிக விசேடமானது. அது போகத்துக்குரிய மலர், அணியும் போது திளைக்கிறான்
முருகன் என்கிறார் நச்சினார்க்கினியர்.

வெள்ளைக்கடம்பு, வெண்கடம்பு என்று பல மரங்களை தாவரவியல் அறிஞர்கள்
அடையாளம் கண்டிருக்கிறார்கள். பேரா. கிருஷ்ணமூர்த்தி கருத்துக்கள்:

கடம்பன் என்று சங்க நூல்களில் - அதாவது சிலம்பு, மணிமேகலையில் முருகன் வணங்கப்படுகிறான். வேலன் கடம்ப மலர்சூடி. இதனைப் பல சங்க நூல்களில் பரக்கக் காண்கிறோம். வெண்கடம்புப் பூ என்ன என்று தாவரவியல் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆய்ந்துள்ளார். அவர் கூறுவது இருக்கலாம். அல்லது, இப்போது கர்நாடகா போன்றவற்றில் உள்ள கடம்ப மரம் தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தது. இப்போது இல்லை என்றும் இருக்க முடியும். அகில் பற்றி ஏராளமான சங்கப் பாடல் உண்டு. ஆனால், இன்று அகில் வடகிழக்கு இந்தியாவில் மட்டும் சுருங்கிவிட்டது. சில யா மரங்கள் தமிழ்நாட்டில் அழிந்துவிட்டன.
உண்மையான கடம்ப மரம்?
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/71548-19.html
வெண்கடம்பும் செங்கடம்பும் வேறு வேறா?
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/72645-20.html
கடம்பும் முருகனும்
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/74422-21.html
 எப்படி வந்தது வெளிக் கடம்பு?
https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/75306-22.html
செங்கடம்பு என்னும் மரம் இல்லை என்னும் கிருஷ்ணமூர்த்தியின் கூற்றை ஏற்க முடியவில்லை. தமிழ் இலக்கியம் முழுதும் சிவந்த கடப்ப மலரை விரும்பி அணிபவன் கந்தபிரான் என்றுள்ளது. ஓர் உதாரணம்:

சிவப்புத் தகட்டைப் போலச் சிவந்த கடம்ப மலரையும் என் நெஞ்சையும் உன்னுடைய இரண்டு திருவடிக்கே செலுத்தி உன்னை வழி படும்படி என்னைப் பணிகொண்டருள்வாய்;  http://kaumaram.com/alangkaram/alangkaram_ss082_u.html
   தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
   புகட்டிப் பணியப் பணித்தரு ளாய் புண்ட ரீகனண்ட
   முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப்
    பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.
சிவந்த தகடு போன்ற மலர்கள் பூப்பது செங்கடம்பு மரத்தில் என்பது வெள்ளிடைமலை.

மேலும் பார்ப்போம்,
நா. கணேசன்

kanmani tamil

unread,
Jul 19, 2019, 5:47:58 PM7/19/19
to mintamil, vallamai
வெளிர் மஞ்சள் நிறத்திலும் கடம்ப மலர்கள் உண்டு.
பொதுமக்கள் இன்றும் வெளிர் மஞ்சள் வண்ணத்தை 'குமரன் கலர் ' என்பர்.
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfT4hpDda2eQL2qtAKvort5Rzietqy0X4K%3Dy0%3DbQYpZcA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jul 19, 2019, 10:33:05 PM7/19/19
to மின்தமிழ், vallamai
On Fri, Jul 19, 2019 at 4:47 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வெளிர் மஞ்சள் நிறத்திலும் கடம்ப மலர்கள் உண்டு.
பொதுமக்கள் இன்றும் வெளிர் மஞ்சள் வண்ணத்தை 'குமரன் கலர் ' என்பர்.
சக 

கட்டில், தேர் போன்றவை செய்யப் பயன்படும் மரம் இது. 

மஞ்சட்கடம்பு (p. 3006) mañcaṭ-kaṭampu மஞ்சட்கடம்பு mañcaṭ-kaṭampu , n. < id. +. A kind of cadamba, 1. tr., Adina cordifoliaநீண்ட மரவகை. (L.)  https://en.wikipedia.org/wiki/Haldina

மஞ்சள் என்ற நிறம் ஹரி என்று வட மொழியில் பெயரும். ஹரித்ர = மஞ்சள் கிழங்கு பற்றி எழுதினேன். ஹரி+மா = அரிமா = சிங்கம்.
ஹரிணம் = மான். அதுபோலே, வடமொழியில், மஞ்சள் கடம்பு = ஹரி-த்ரு. 
ர்/ல் மாறுபாடு: நீர்- நீலம் போல, ஹரித்ரு > ஹல்தின ...





NG

மஞ்சட்கடம்பு - ஊசி போல் உள்ளவை பந்தைக் கடைதலால் கடம்பு என த்ராவிடப் பெயர். கடம் என ஹிந்தியில்.
adina-cordifolia.jpg
 

N. Ganesan

unread,
Jul 20, 2019, 6:12:37 AM7/20/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Fri, Jul 19, 2019 at 2:52 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
மாங்குடி கிழாரின் புகழ்பெற்ற புறப்பாட்டிலே நான்கு முதுகுடிகள் கூறப்படுகின்றன:
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவர் அவர்கள். பறையருள் துடியரும்,
பாணருள் கடம்பரும் அடங்குவர். இன்றும் சேர நாட்டில் பாணர் குடிகளில்
இருந்து சங்க இலக்கியம் வர்ணிக்கும் முருகுப் பூஜகன் வேலன் இருக்கிறான்.
இப் புறப்பாட்டில், இசைவாணர்கள் ஆகிய 4 குடிகள் கூறப்படுகின்றன.
இசைவாணரில், கடப்பம் பூச் சூடி முருகு என்னும் அணங்கு (பேஎ விழவு - பரிபாடல்)
செய்பவன் கடம்பன் எனப்படுகிறான். பொதுவாக, வேலன் எனப்படும் இப் பூசாரி
இப்பாடலிலே கடம்பன் என்று முருகனுக்கே சிறப்பான கடம்பு மலரால் குறிக்கப்படுவது
சிறப்பு. அணங்காடல் பேயாட்டம் என்று கேரளாவில் இன்றும் அழைக்கப்படுகிறது.


புறப்பாட்டு, சிலம்பு, மணிமேகலை போன்றவற்றில் கடம்பன் குறிப்பிடப்படுகிறான்.
கடம்பன் என்னும் வேலன் பூசாரி புறப்பாட்டில். காப்பியங்களில் கடம்பன் வேலன் எனப்படும் முருகன்.
இவன் காட்டுவாசி, சாதாரணமானவன் என்று 17-ஆம் நூற்றாண்டுவரை நகைச்சுவையாகக்
கூறப்படுகிறது. இந்த கடம்பன் பற்றிய இமேஜ் தான் முருகன் வழிபாட்டையும், கடம்பன்
என்னும் முருகப் பூசாரியின் பேயாடலும் பிற மாநிலங்களில் மறைந்துபோனதன் முக்கிய காரணம் எனலாம்.

மறைந்து வருகிற வேட்டுவ (Hunter-Gatherer) சமுதாயம், அதன் பேயாட்டம், அதைத் தொடர்ந்து
வரும் பெருஞ்சமயங்கள், நெல் உகுத்துப் பராவுதல் பற்றி மாங்குடி கிழார் பதிவு செய்கிறார்,
அண்மையில் கி.பி. 900-800 வரை ஆதிச்சநல்லூர் நாகரீக காலம் கணிக்கப்படுகிறது.
இதில் முதுமக்கள் தாழியில் கிடைக்கும் ஓட்டில் விடங்கரும் - கொற்றவையும்,
அருகே நெல்லம் பயிரும், அதைக்காட்டும் கொக்கும், நெல்மணிகளும் காண்கிறோம்.
வட நாட்டில் இருந்து வரும் வேளிர் நாகரீகம் அதன் முதல் பதிவுகளில்,
ஆதிச்சநல்லூர் பாலை ஓடும், மழுவாள் நெடியோன் பெருஞ்சிற்பமும் முக்கியமானவை.
தமிழ்நாட்டின் ஆதி கலை வெளிப்பாடுகள் இவை. மேலும், 

சாதாரணமான நன்னான்கு பொருள்களைப் பட்டியலிடும் புறப்பாட்டை மாங்குடி கிழார்
பாடியுள்ளார். வேற்றுமை தெரிந்த நாற்பால் என்கிறான் பாண்டியன் நெடுஞ்செழியன்.
நாற்பாலுக்கு எதிராய் நாங்கு இசைக் குடிகளை முன்னிறுத்துகிறார்.   அதில் எல்லோரும் போல,
 கடம்பன் ஒரு இசைவாணன். முருகனை அது போன்ற
காட்டுவாசி என காளமேகம், அந்தகக்கவி வீரராகவர் பாடுவதைக் காண்போம்.

                      சிவன் பிச்சை எடுப்பதேன்?
மாடுகிடப் பாடி மனையாள் உடல்பாதி
தேடுதற்குப் பிள்ளை தினைக்கடம்பன் - நாடில்
அரவுஆ பரணம்பூண் அம்பலவா! பிச்சை
இரவாமல் நீர்என்செய் வீர்  - காளமேகம்.


(நந்தி கிடையில். மகனோ கடம்பு அணிந்து தினைக்கொல்லையில் திரியும் காட்டுவாசி. குறிஞ்சிவாழ்வு.)

                       பிள்ளையாருக்கு ஏன் கலியாணம் ஆகவில்லை?
 வீரம் சொரிகின்ற பிள்ளாய் உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன் கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம் யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்
; உன் தாய் நீலி நிற்கும் பெருவயிறே. - அந்தகக்கவி.

கடம்பன் என்பது கேலிக்கு உரியதாய் சங்கத்தின் பின்னர் ஆகிவிட்டது.
இதனை, கடம்பன் (அ) வேலன் பூசாரியையும், முருகனையும் மடையன்
என்று பரிகாசத்திற்குரிய பாத்திரங்களாய் சங்கப் புலவர்கள் பாடுவதில் 
தொடங்கிவிட்டது. ஆறலைக் கள்வர் கடம்பு சூடுவதாய்ச் சங்க இலக்கியத்தில்
குறிப்புகள் உள்ளன.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 21, 2019, 11:47:31 AM7/21/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/75306-22-2.html
"எனவே, தமிழக முருகனுடன் தொடர்புடைய நிஜமான கடம்ப மரம் மித்ரகைனா பார்விஃபோலியாதான் என்பதும், பிற்காலத்தில் பக்தி இலக்கியக் காலத்துக்குப் பின்பு, அதாவது 7-ம் நூற்றாண்டுக்குப் பிறகு நிஜமான கடம்ப மரத்தைப் பற்றி கண்டறிய முடியாத மக்கள் தமிழகத்துக்கு வெளியிலிருந்து வளர் தாவரமாக வந்த நியோலமார்க்கியா கடம்பாவை, நிஜக் கடம்ப மரத்தோடு தொடர்புபடுத்தியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது தாவரவியல் அறிஞர்களின் பொதுவான கருத்து."

கு. வி. கிருஷ்ணமூர்த்தி தமிழ்ஹிண்டுவில் எழுதிய கட்டுரைகளுக்குச் சில குறிப்புகள்:

(1) இக் கதம்ப (< கடம்ப) மரம் தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. இலங்கையிலும் இயற்கையாக வளர்வதே.
காதம்பரி என்ற மது இம் மரத்தில் தயார் ஆவதாகும். இதன் பெயர்: Common cadamba, l. tr., Anthocephalus cadamba; also, Anthocephalus indicus (synonym).
https://en.wikipedia.org/wiki/Neolamarckia_cadamba
http://www.flowersofindia.net/catalog/slides/Kadam.html

(2) நீர்க்கடம்பு எனத் தமிழில் அழைக்கப்படும் Mitragyna Parvifolia-வைக் கடம்பு என்கிறார் கு.வி.கி
https://en.wikipedia.org/wiki/Mitragyna_parvifolia
http://www.flowersofindia.net/catalog/slides/Kaim.html

Mitragyna parvifolia, Neolamarckia cadamba - இரண்டுமே கடம்பு என்று கொண்டிருக்கின்றனர். பூக்கள் மிக ஒற்றுமையான தோற்றம் கொண்டவை. இவை ஆங்கிலத்தில் Water Cadamba, Common Cadamba எனப்படும். இன்னும் பல கடம்பு மர இனங்கள் உண்டு. கண்மணி அவர்கள் குறிப்பிடும் கதம்பன் மரம் பற்றி இன்னொரு முறை பார்ப்போம்.

துர்க்கைக்கு மிக விசேடமானது இக் கடம்பு மரம். மீனாட்சி கோவிலின் தலமரம் இது (Common cadamba). அபிராமி அந்தாதியில் குறிப்பிடும் கடம்பு இந்த பந்துக் கடப்ப மரம் தான். ”தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு”. பந்து போன்ற பூக்களைக் கொண்டவை. சிந்தாமணியில் திருத்தக்கதேவர் இதனைச் சொல்கிறார்.
#1650
கோடு தையா குழிசியோடு ஆரம் கொள குயிற்றிய
ஓடு தேர் கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம்
கூடு கோழி கொழு முள் அரும்பின அம் கோசிக
ஆடை பூத்தன பாதிரி வெண்கடம்பு பந்து அணிந்தவே

http://www.payer.de/amarakosa/amara205a.htm
22. c./d. tūlaṃ ca nīpa-priyaka-kadambās tu haripriyaḥ
तूलं च नीप-प्रियक-कदम्बास् तु हरिप्रियः ॥२२॥

[Bezeichnungen für Anthocephalus cadamba Miq. (= Neolamarckia cadamba (Roxb.) Bosser) - Kadam:]

नीप - nīpa m.: tief Liegender, Nīpa
प्रियक - priyaka m.: kleiner Liebling
कदम्ब - kadamba m.: Kadamba, Menge, Schar
हरिप्रिय - haripriya m.: Dem Hari (Viṣṇu) Lieber
Colebrooke (1807): "Nauclea orientalis [= Anthocephalus cadamba Miq.]."
"Anthocephalus Cadamba, Rubiaceae
Wild Cinchona (Eng.)

This tree is sacred to Kālī or Pārvatī, the consort of Śiva; it is the Arbor Generationis of the Maratha Kunbis, and a branch of it is brought into the house at the time of their marriage ceremonies. The tree is planted near villages and temples, and is held to be sacred. In Sanskrit it is called Kadamba or Kalamba, and has also many synonyms, such as Sisu-pāla, 'protecting children'; Hali-priya, 'dear to agriculturists,' &c. The Kadamba blossoms at the end of the hot seasons, and its night-scented flowers, form a large, globular, lemon-coloured head, from which the white clubbed stigmas project. They are compared by the Indian poets to the cheek of a maiden mantling with pleasure at the approach of her lover, and are supposed to have the power to irresistibly attracting lovers to one another. This idea is expressed in the following couplet of the Saptasatika of Hāla: -"Sweet-heart, how I am bewitched by the Kadamba blossoms, all the other flowers together have not such a power. Verily Kama wields now-a-days a bow armed with the honey balls of the Kadamba." The flowers are fabled to impregnate with honey the water, which collects in holes in the trunk of the tree. Beal, in his Catena of Buddhist scriptures from the Chinese, informs us that according to the Dirghagama Sutra, to the east of mount Sumeru rises a great king of trees called Kadamba; in girth seven yoganas, height a hundred yoganas, and in spread fifty yoganas. M. Senārt (Essai sur la l‚gende du Buddha) says: -"L'arbre de Bouddha sort spontanément d'un noyau de Kadamba déposé dans le sol; en un moment, la terre se fend, une pousse paraît, et le géant se dresse ombrageant une circonférence de trois cents coudées. Les fruits qu'il porte troublent l'esprit des adversaires du Buddha contre lesquels les Dévas déchaînent toutes les fureurs de la tempéte." (De Gubernatis.)  The fruit, which is about the size of a small orange, is eaten by the natives and is considered to be tonic and febrifuge, and its fresh juice is applied to the heads of infants when the fontanelle sinks; at the same time a small quantity mixed with cumin and sugar is given internally. In inflammation of the eyes the bark-juice with equal quantities of lime-juice, opium and alum is applied round the orbit."

[Quelle: Pharmacographia indica : a history of the principal drugs of vegetable origin met with in British India / by William Dymock [1834-1892], C. J. H. Warden and David Hooper [1858-1947]. -- Bd. 2. -- London, 1891. -- S. 169f.] ”தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு” என அபிராமி பட்டர் துதிப்பது இதனால்.

-----------------

முனைவர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி எழுதினார்:
”செங்கடம்பு (இது ஒரு இலக்கிய உருவகம்; சீரிய, சிறப்பான, வளமான கடம்பு என்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர, சிவந்த பூக்களைக் கொண்டது என்று பொருள் கொள்ளக்கூடாது. இதற்கு நல்ல மற்றொரு ஒப்பீடு `செங்கோல்’.)”

இக் கருத்து தவறு என்பதைப் பிற தாவரவியல் அறிஞர்கள் செங்கடம்பு, வெண்கடம்பு என்றால் என்ன என எழுதிய கட்டுரைகளைப் படித்தாலும், சங்க இலக்கியச் செய்திகளைக் கூர்ந்து ஆய்ந்தாலும் அறிந்துகொள்ளலாம். கடம்பன் எனப் புகழப்படும் முருகனுக்கு உகந்த செங்கடம்பு Barringtonia இன மரங்கள் ஆகும். இந்த செங்கடம்பு, வெண்கடம்பு மரங்கள் எவை என்றும், சங்க இலக்கியத்துடன் பொருத்தம் பற்றியும் பிறகு எழுதுவேன். ஓர் அழகிய வெண்பா இந்தக் கடப்ப மலரை விரகத்தாபம் உள்ள தலைவிக்கு அளிக்க முருகனை வேண்டுகிறது:

                                            கடம்பனை வேண்டல் (தாய்க்கூற்று)
            வேலனே வேளூர் வினைதீர்த் தவன்உதவும்
            பாலனே சேனா பதிவேளே - சீலனே
            கோங்கரும்பிற் கோங்குகொங்கைக் கூந்தல்கொண்டற் காந்தளங்கைப்
            பூங்கரும்பிற் காங்கடம்பிற் பூ.

கடம்பு - போகத்திற்குரிய மலர் (நச்சர்).

பிற பின்!
நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jul 22, 2019, 10:16:54 AM7/22/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On July 19, SK wrote:
<<<
Ist International Conference Seminar On Skanda Murukan நடந்தபோது எழுதிய கட்டுரை அது. அப்போது தாவரவியல் துறையினர் உதவியுடன் குறிப்பிட்ட கடம்ப மரத்தை அடையாளம் காண முயன்று கட்டுரையில் பயன்படுத்தி உள்ளேன். விபரம் பின்வருமாறு:
Wendlandia Notoniana (Mathew,K.M.-Illustrations On The Flora Of The Carnatic Series-p.349)
இதே மரத்தை இன்னொரு பிரிவினர் Wendlandia Thyrsoidea (another school of thought) என்று அழைப்பவரும் உளர். (Gamble.J. Song- Flora Of The Presidency Of Madras- p. 588) அந்தக்காலம் இதைப் படமெடுத்துப் பயன்படுத்தவில்லை. ஆனால் ' நறுங்கடம்பு ' என்ற நற்றிணைத் தொடருக்கும்,
" உருள் இணர்க்கடம்பு " என்ற பரிபாடல் தொடருக்கும் பொருந்தி வருவதைப் பார்த்தே முடிவு செய்தேன். இணைப்புகளைத் தனித் தனியாக அனுப்புகிறேன்.
சக
>>>

http://murugan.org/research/kanmani.htm
Murukan Cult in Cilappatikaram
by S. Kanmani

<<<
Botanists name this tree as Wendlandia notoniana.42 It is also called as Wendlandia thyrsoidea by another school of scientists. The katampu flowers are pale yellow in colour with remarkable fragrance.43 This fact coincides with the term narun katampu (naru = fragrant).44 The phrase urul inark katampu (the katampu flowers which resemble the wheel and axle of a chariot), can be explained on the basis of the type of corolla and androecium of the flowers.45 They have a tubular corolla with epipetalous stamens, which is the reason for the garland of katampu resembling the wheel and the axle of the chariot.
>>>

Yes. Both Wendlandia notoniana and Wendlandia thyrsoidea are synonyms in Botany.  

தமிழிலே, இம் மரம் ‘கதம்பம்’ எனப்படுகிறது. அதைத்தான் கே. எம். ஜார்ஜ் மற்றும் ஜான் ஸைக்ஸ் கேம்பிள் ‘kadampan' எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கில நியூஸ் பேப்பரில் இந்தியா பிரதமர் Modi என்பதைப் பார்த்து, தமிழ்ப் பத்திரிகை உலகம் மோடி என எழுதுவது போல, kadampan - கடம்பு என்று கட்டுரையில் கொள்ளப்பட்டுள்ளது.  Madras Tamil Lexicon:
கதம்பம்² (p. 710) 3. A species of Roudeletia wort, 1. tr., Wendlandia notoniana; ஒரு சிறுமரம். (L.)
இந்த கதம்ப மரத்தின் பூக்களை முருகன் அணிந்ததாக சங்க இலக்கியச் செய்திகள் கூறுவதில்லை. எந்த சங்கம் மருவிய கால இலக்கியங்கள், கோவில்களிலும் காணோம்.

https://www.flowersofindia.net/catalog/slides/Mountain%20Wendlandia.html
https://indiabiodiversity.org/species/show/31894
https://sites.google.com/site/efloraofindia/species/m---z/r/rubiaceae/wendlandia

-----------
ஆனால், தாவரவியலார் சங்க இலக்கியத்தை ஆராய்ந்து செங்கடம்பு, வெண்கடம்பு என்பன Barringtonia இன மரங்களின் பூக்கள் என விரிவாக ஆராய்ந்துள்ளனர். அதுபற்றி முன்னர் எழுதியுள்ள இழைகள்.
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/DZruM8C08OI/Mg-7wSTiCAAJ

NG

kanmani tamil

unread,
Jul 22, 2019, 2:33:38 PM7/22/19
to vallamai, mintamil
சங்க இலக்கியம் சொல்லும் கடம்ப மரம் (கதம்ப மரம் என்று இல்லை.) மழைக்காலத்தில் மயக்கும் மணத்துடன் பூப்பது.
திருமுருகாற்றுப்படை வருணித்துச் சொல்லும் திருப்பரங்குன்றத்து முருகன் அணிந்திருந்த கடம்பந்தார்  தேர்ச் சக்கரத்தைப் போன்ற கண்ணிகள் உடையது. மலைக்கு மேலே கிடைப்பது.
இந்த அடையாளத்துடன் பொருந்தி வரும் கடம்ப மலரே முருகனுக்குரியது.
நீங்கள் கொடுத்திருக்கும் வெண்கடம்பு, செங்கடம்பு, நீர்க்கடம்பு, மஞ்சக்கடம்பு எதுவும் திருமுருகாற்றுப்படைச் செய்திக்கு ஒத்து வரவில்லை. 
இப்பவும் Wendlandia Notaniana தான் tubular corolla வுடன் காணப்படுகிறது. அது தான் கழுத்திலணியும் மாலையாகக் கட்டும்போது ஒவ்வொரு கண்ணியும் தேர்ச் சக்கரம் போலக் காட்சியளிக்க இயலும்.
இது திருப்பரங்குன்றத்து முருகன் கழுத்தைப் பார்ப்பவருக்கு மட்டுமே புரியும்.
சக  


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdSMr%3DYykKHfNW3jZ2KhMb%3DpBE4s_%3DX0iyKmD-YMY7irA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jul 22, 2019, 3:35:17 PM7/22/19
to மின்தமிழ், vallamai
On Mon, Jul 22, 2019 at 1:33 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சங்க இலக்கியம் சொல்லும் கடம்ப மரம் (கதம்ப மரம் என்று இல்லை.) மழைக்காலத்தில் மயக்கும் மணத்துடன் பூப்பது.
திருமுருகாற்றுப்படை வருணித்துச் சொல்லும் திருப்பரங்குன்றத்து முருகன் அணிந்திருந்த கடம்பந்தார்  தேர்ச் சக்கரத்தைப் போன்ற கண்ணிகள் உடையது. மலைக்கு மேலே கிடைப்பது.
இந்த அடையாளத்துடன் பொருந்தி வரும் கடம்ப மலரே முருகனுக்குரியது.
நீங்கள் கொடுத்திருக்கும் வெண்கடம்பு, செங்கடம்பு, நீர்க்கடம்பு, மஞ்சக்கடம்பு எதுவும் திருமுருகாற்றுப்படைச் செய்திக்கு ஒத்து வரவில்லை. 
இப்பவும் Wendlandia Notaniana தான் tubular corolla வுடன் காணப்படுகிறது. அது தான் கழுத்திலணியும் மாலையாகக் கட்டும்போது ஒவ்வொரு கண்ணியும் தேர்ச் சக்கரம் போலக் காட்சியளிக்க இயலும்.
இது திருப்பரங்குன்றத்து முருகன் கழுத்தைப் பார்ப்பவருக்கு மட்டுமே புரியும்.
சக  


நீங்கள் குறிப்பிடும் Wendlandia Notaniana மரத்திற்குத் தமிழில் கதம்பம் எனப் பெயர். கடம்பு அன்று.

மேலும், முருகனுக்கு விருப்பமான சிவந்த மலரும் இல்லாதது. தொடுத்த மாலை போலத் தொங்கும்
செங்கடம்பு, வெண்கடம்பு மலர்களைப் பற்றி அடுத்துப் பார்ப்போம். 

NG

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsy%3DkaNJiS9RCFpO0Rdw7CDnkCvZEHzcDs%3Doh0qA7LyEw%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Jul 23, 2019, 7:26:26 AM7/23/19
to vallamai, mintamil
பண்டை இலக்கியக் குறிபபுகளை அடியொட்டிப் பொருத்தமாக உள்ள மலர் எது என்று பார்ப்பது தானே இங்கு தேவை. 

பெயர் காலப்போக்கில் மாற்றம் பெற்றிருக்கலாம்.
 
முருகனுக்குப் பிடித்தது சிவந்த வண்ணம் என்று சங்க இலக்கியத்தில் எங்கே குறிப்பு உள்ளது?  

பிற்கால, இடைக்கால(சிற்றிலக்கியச்) சான்றுகள் தேவையில்லை. 
இப்போது சங்ககாலக் கடம்பு பற்றித்தான் பேச்சு. 
சக 

N. Ganesan

unread,
Jul 23, 2019, 9:21:10 AM7/23/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Tue, Jul 23, 2019 at 6:26 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பண்டை இலக்கியக் குறிபபுகளை அடியொட்டிப் பொருத்தமாக உள்ள மலர் எது என்று பார்ப்பது தானே இங்கு தேவை. 

பெயர் காலப்போக்கில் மாற்றம் பெற்றிருக்கலாம்.

அப்படி எல்லாம் இல்லை. செங்கடம்பு முருகனுக்கு மிக விருப்பான மலர்.
தாமரையில் செந்தாமரை, வெண்டாமரை, ... இருந்தாலும் தாமரை என்றால் செந்தாமரைதான். 
அதுபோல, முருகன் அணிவது கடம்பு என்றால் செங்கடம்பினைக் குறிக்கும்.
உ-ம்: திருப்புகழில் நூற்றுக்கணக்கான இடங்களில் கடம்பு, கடப்ப மலர், தார் என்று வரும்.
சில இடங்களில் செங்கடம்பு, செந்தாது உடைய கடம்பு என்று குறித்திருப்பார்.
வெண்கடம்பு என்று முருகன் பாடல்களில் இராது.

செங்கடம்பு, வெண்கடம்பு இரண்டுமே Barringtonia இன தாவரங்கள். முன்பே தாவரவியலார்
ஆராய்ந்து அறிவித்துள்ளனர். நீங்கள் பார்க்கவில்லை போல இருக்கிறது. 
சென்னை பல்கலைப் பேரகராதி, தொல் தாவரவியல் பேரா. கு. சீனிவாசன் (தஞ்சைப் பல்கலை).
இவர் வள்ளலார் பக்தர். எனவே, பொள்ளாச்சியில் காணும் வாய்ப்பு அமைந்தது.
சீனிவாசனின் நூலைப் படிக்க வேண்டுகிறேன்.
 
 
முருகனுக்குப் பிடித்தது சிவந்த வண்ணம் என்று சங்க இலக்கியத்தில் எங்கே குறிப்பு உள்ளது?  

அவனது நிறமே சிவப்பு என்பதால் சேயோன் என்கிறது சங்க இலக்கியம்.
போர்க்கடவுள் - சிவப்பு போரின் நிறம்.
 

பிற்கால, இடைக்கால(சிற்றிலக்கியச்) சான்றுகள் தேவையில்லை. 
இப்போது சங்ககாலக் கடம்பு பற்றித்தான் பேச்சு. 
சக 

சங்க காலத்தில் செங்கடம்பு, வெண்கடம்பு இரண்டுமே Barringtonia இன தாவரங்கள். 
‘பூக்கும் கடம்பா’ - திருமுருகு வெண்பா, மணிமேகலை, சிலம்பு இரண்டிலும்
’அலர் கடம்பன்’ :: இங்கே எல்லாம் கடம்பு என்பது செங்கடம்பு மலர் அணிந்த கடம்பன்
பேசப்படுகிறான். போகத்திற்குரிய மலர் செங்கடம்பு. இதை அணியும் வேலன்
பூசாரி கடம்பன் என புறநானூற்றில் சொல்லப்படுகிறான்.

கடம்ப மலர் சிவந்தது என்பதற்கு அம்மரத்தின் பூக்கள் உதிர்ந்த நிலம்
இந்திரகோபப் பூச்சி நிறைந்த நிலம் போல் உள்ளது எனச் சிறுபாணாற்றுப்படை
அடிகள் குறிப்பிடுகின்றன. கோதை மாலை, தார் போலவும், இந்திரகோவம் போலவும்
சிவந்த மலர் கொண்டவை கடம்பு மரம். இது Barringtonia. பாண்டிய ராஜாவின்
இந்திரகோபம் என்னும் கட்டுரையிலும் படத்துடன் கொடுத்துள்ளார் பார்க்கவும்.
அவருக்கு முன்னர் பல தாவரவியலார் கடம்பு என்றால் Barringtonia எழுதிவிட்டனர்.

மரா/மராஅம்/மரவம்  என இலக்கியங்களில் சொல்லப்படுபவை மூன்று பெருமரங்கள் தாம்.
(1) சுருளி/சுள்ளி (சூர்ணீ = வடமொழிப்பெயர்). இது பாரதப்புழா நதி. பரம்பிக்குளம் ஆறு,
ஆழியாறு சேர்த்துக்கொண்டு பாயும் சுள்ளியம் பேரியாறு. இதன் கரையில் முசிறிப் பட்டினம் உள்ளது.
யவனர்கள் வந்து மிளகுக்கறி கொண்ட துறைமுகம்.

(2) யா என்னும் ஆச்சா மரவகைகள். Shorea trees, காராச்சா, ....

(3) கடம்பு : செங்கடம்பு (முருகன் அணிவது), வெண்கடம்பு, பந்துக் கடம்பு (காதம்பரி என்னும் கள் தயாரிப்பது. அம்பாளின் மலர்), ...

----------------------

வெங்கடம்பு என்ற ஊர் நாகர்கோயில் அருகே உள்ளது. வெண்கடம்பு > வெங்கடம்பு என்று அழைக்கப்படுகிறது.

NG

kanmani tamil

unread,
Jul 23, 2019, 9:30:29 AM7/23/19
to vallamai, mintamil
///கடம்ப மலர் சிவந்தது என்பதற்கு அம்மரத்தின் பூக்கள் உதிர்ந்த நிலம்
இந்திரகோபப் பூச்சி நிறைந்த நிலம் போல் உள்ளது எனச் சிறுபாணாற்றுப்படை
அடிகள் குறிப்பிடுகின்றன. /// Dr.Ganesan wrote 10mts. ago.

பாடலடிகள் ?
சக 

kanmani tamil

unread,
Jul 23, 2019, 9:35:01 AM7/23/19
to vallamai, mintamil
///தாமரையில் செந்தாமரை, வெண்டாமரை, ... இருந்தாலும் தாமரை என்றால் செந்தாமரைதான். 
அதுபோல, முருகன் அணிவது கடம்பு என்றால் செங்கடம்பினைக் குறிக்கும்.
உ-ம்: திருப்புகழில் நூற்றுக்கணக்கான இடங்களில் கடம்பு, கடப்ப மலர், தார் என்று வரும்.
சில இடங்களில் செங்கடம்பு, செந்தாது உடைய கடம்பு என்று குறித்திருப்பார்.
வெண்கடம்பு என்று முருகன் பாடல்களில் இராது.///Dr. Ganesan wrote 15 mts. ago.

நான் கேட்டது சங்க இலக்கியச் சான்று தான்.
அப்படியே ஆனாலும் இங்கே தாமரை பற்றிய பேச்சு தேவையில்லை.
கடம்பு என்றால் செங்கடம்பு என்பது உங்கள் விருப்பம் தான். அது தரவு இல்லை.
சக 

N. Ganesan

unread,
Jul 23, 2019, 9:35:54 AM7/23/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Tue, Jul 23, 2019 at 8:30 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///கடம்ப மலர் சிவந்தது என்பதற்கு அம்மரத்தின் பூக்கள் உதிர்ந்த நிலம்
இந்திரகோபப் பூச்சி நிறைந்த நிலம் போல் உள்ளது எனச் சிறுபாணாற்றுப்படை
அடிகள் குறிப்பிடுகின்றன. /// Dr.Ganesan wrote 10mts. ago.

பாடலடிகள் ?
சக 

சிறுபாண் அடிகள் கடம்பு மலர் என்ன நிறம், மாலை போல் தொங்குவது காண:
ப. பாண்டியராஜா, இந்திரகோபம்

வடமொழியில் இந்திரகோபம் என்ற பெயர்.
இந்திரன் மழைக்குக் காரணன். எனவே தம்பல (< தாம்பூலம்) பூச்சிக்கு முன்னொட்டு.
கோபம் < கோவம். கோவை/கொவ்வைக் கனி நிறம். கோவம் என்றே சிறுபாணில்.

 

kanmani tamil

unread,
Jul 23, 2019, 9:40:03 AM7/23/19
to vallamai, mintamil
///செங்கடம்பு, வெண்கடம்பு இரண்டுமே Barringtonia இன தாவரங்கள். முன்பே தாவரவியலார்
ஆராய்ந்து அறிவித்துள்ளனர். நீங்கள் பார்க்கவில்லை போல்  இருக்கிறது. 
சென்னை பல்கலைப் பேரகராதி, தொல் தாவரவியல் பேரா. கு. சீனிவாசன் (தஞ்சைப் பல்கலை).
இவர் வள்ளலார் பக்தர். எனவே, பொள்ளாச்சியில் காணும் வாய்ப்பு அமைந்தது.
சீனிவாசனின் நூலைப் படிக்க வேண்டுகிறேன்.///Dr. Ganesan wrote  

தாவரவியலார் சங்க இலக்கியம் படித்துவிட்டு அந்நூலை எழுதினாரா?
அவர்களுக்குத் தமிழ் இலக்கியக் கருத்து தேவையில்லை . எனவே நம் இலக்கியக் கருத்துக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் தாம் கொடுக்க வேண்டும்.
சக    
 

N. Ganesan

unread,
Jul 23, 2019, 9:54:15 AM7/23/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Tue, Jul 23, 2019 at 8:40 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///செங்கடம்பு, வெண்கடம்பு இரண்டுமே Barringtonia இன தாவரங்கள். முன்பே தாவரவியலார்
ஆராய்ந்து அறிவித்துள்ளனர். நீங்கள் பார்க்கவில்லை போல்  இருக்கிறது. 
சென்னை பல்கலைப் பேரகராதி, தொல் தாவரவியல் பேரா. கு. சீனிவாசன் (தஞ்சைப் பல்கலை).
இவர் வள்ளலார் பக்தர். எனவே, பொள்ளாச்சியில் காணும் வாய்ப்பு அமைந்தது.
சீனிவாசனின் நூலைப் படிக்க வேண்டுகிறேன்.///Dr. Ganesan wrote  

தாவரவியலார் சங்க இலக்கியம் படித்துவிட்டு அந்நூலை எழுதினாரா?
அவர்களுக்குத் தமிழ் இலக்கியக் கருத்து தேவையில்லை . எனவே நம் இலக்கியக் கருத்துக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் தாம் கொடுக்க வேண்டும்.

தாவரவியலார் சங்க இலக்கியத்தை நன்கு படித்துவிட்டுத்தான் செங்கடம்பு = கடம்பு பற்றி எத் தாவரம் என்று காட்டியுள்ளனர்.
இதை நீங்கள் கு. சீனிவாசன், பி. எல். சாமி நூல்களால் அறியலாம்.

வ. அய். சுப்பிரமணியம் வகுத்த வழி அது. கு. சீனிவாசனை தமிழ்ப் பல்கலைக்கு கொணர்ந்தவர் அவரே. நீண்ட தொலைநோக்குப்
பார்வை கொண்டவர். இன்றும் 829 ஏக்கரா பரப்பளவில் தமிழ்ப் பல்கலை விரிந்து கிடக்கிறது. காரணர் வ. ஐ.சு. தான். அரசு, அரசியலார்க்கு
அந்த நிலம் மீது எப்போதும் ஒரு கண். சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வந்திருந்த துணைவேந்தர் பாலசுப்பிரமணியனிடம் வெகுநேரம் பேசினேன். என் மடல்களைப் பலகாலம் படிக்கும் அன்பர் அவர். புலவர் செ. இராசு, சுப்பராயலு போன்றோர் அங்கே
உருவாக்கியவர் கா. ராஜன் போன்றோர், சு. ராஜவேலு, மா. பவானி சிகாகோ வந்திருந்தனர். தமிழ்நாடு என்ற எழுத்துகளுக்குப்
பெண்டகன் வடிவில் கட்டடங்கள் எழுப்பியவர், உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை தனிநாயகம், சுவெலெபில் சேர்ந்து
ஆரம்பித்தவர் வ.ஐ.சு .

கடம்பு என்றால் செங்கடம்பு, தாமரை என்றால் செந்தாமரை. சங்க இலக்கிய காலத்திலிருந்து தமிழ் இலக்கியம்
தெளிவாகக் காட்டுவது இச்செய்தி.

நா. கணேசன்

 

kanmani tamil

unread,
Jul 24, 2019, 2:48:35 AM7/24/19
to mintamil, vallamai
முனைவர் கணேசன் அவர்களே ;
நீங்கள் சுட்டிய தளத்தைப் படித்தாகி விட்டது. பின்வரும் மேற்கோள்களையும் பொருளையும் கூட்டிக் கழித்து முடிவைக் கண்டறிக.

பரிபாடல்- 6- அடி- 55-" பூந்தாரான் குன்று"---கடம்ப மாலை குறிப்பாகப் பெறப்பட்டது. வண்ணம் பற்றிய பேச்சு இல்லை .
             பா-19- அடி-2---" புலவரை அறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து"  முருகன் கடம்ப மரத்தில் உறைகிறான். வண்ணம் பற்றிய குறிப்பே இல்லை. 
கலித்தொகை - 101---" தொல்வலி மராஅமும் முறையுளி பராஅய்ப்"--- வலிமையான மராமரம் ; வண்ணம் பற்றிய குறிப்பு இல்லை
                          பா-106--" ஆலும் கடம்பும் அணிமார்" ---கடம்பு தெய்வத்தன்மை பொருந்தியது. வண்ணம் பற்றிய குறிப்பு இல்லை. 
மதுரைக்காஞ்சி -613-614" கடம்பின் சீர்மிகு நெடுவேள் பேணி"--- முருகன் கடம்ப மரத்தில் உறைகிறான் . வண்ணம் பற்றிய குறிப்பு இல்லை 
குறிஞ்சிப்பாட்டு -அடி-176-" திணி நிலைக் கடம்பின் திரளரை வளைஇய"--- திண்ணிய கடம்ப மரத்தின் வண்ணம் பேசப்படவில்லை.
அகநானூறு - 138-- " ..........முருகு மனைத்தரீஇக் 
                                      கடம்பும் களிறும் பாடி.............." --- இங்கு கடம்பின் நிறம் பற்றி எந்தச் செய்தியும் இல்லை 
                        பா-98-" வெண்போழ் கடம்பொடு சூடி"---பனந்தோட்டோடு வேலன் கடம்பு சூடுகிறான் . வண்ணம் பற்றிய செய்தி இல்லை .
                        பா-383- " கடம்பு கொடி யாத்து"--- கடம்பிலே கொடியைக் கட்டி ....வண்ணம் பற்றிய செய்தி இல்லை. 
குறுந்தொகை- 87 "மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்"---முருகன் கடம்ப மரத்தில் உறைகிறான் . இங்கும் வண்ணம் பற்றிய பேச்சு இல்லை.
நற்றிணை -34--" கார்நறுங்கடம்பின் கண்ணி" - கார்காலத்தில் நறுமணத்துடன் பூக்கும் கடம்பு ; வண்ணம் பற்றிய பேச்சு இல்லை.   
சிறுபாணாற்றுப்படை ---அடி- 68-71
                                                             "நறுநீர்ப் பொய்கை அடைக்கரை நிவந்த 
                                                              துறுநீர்க் கடம்பின் துணையார் கோதை
                                                              ஓவத்தன்ன உண்டுறை மருங்கில் 
                                                              கோவத்தன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்" - பொய்கைக் கரையிலிருந்த செங்கடம்பின் சிவந்த தாது தாமரை மலரில் விழுவது குறித்துப் பேசும் பாடல். (கடம்பில் பல வண்ணங்கள் உள்ளன என்று நீங்கள் பல படங்கள் போட்டுக் காட்டியுள்ளீர்கள். அவற்றில் இது ஒன்று. உறையூரின்  வளத்தைப் பேசுகிறதே அன்றி இங்கு முருகனுக்குத் தொடர்பே இல்லை.)
திருமுருகாற்றுப்படை:நக்கீரர் கூற்று 
அடி- 10-11 " .....................................................மராஅத்து 
                    உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் "- மரா மரத்தின் தேர்ச்சக்கரத்தைப் போன்ற தோற்றம் உடைய மாலை என்கிறார்.
பெருமழைப் புலவர் உரை--- 'செங்கடம்பினது தேர் உருளை போலும் பூவால் ஆனமாலை' என்கிறார் . இங்கே 'சிவந்த' என்பது                                                                                          பொ.வே.சோமசுந்தரனாரின்  extra fitting.
உங்களுக்கும் பெருமழைப் புலவருக்கும் ஒரு ஆசை; முருகனுக்குச் செங்கடம்பு சூட்ட வேண்டும் என்று........தவறில்லை.

ஆனால் எந்தக் கடம்பு கண்ணியாக்கும் போது தேர்ச்சக்கர வடிவம் பெறுகிறதோ அது தான் முருகனுக்குரிய கடம்பு. ஏனென்றால் திருப்பரங்குன்றத்து முருகன் கழுத்தில் அப்படித்தான் செதுக்கி உள்ளனர்.
சக 

On Tue, Jul 23, 2019 at 7:25 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Jul 24, 2019, 6:51:52 AM7/24/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
>திருமுருகாற்றுப்படை:நக்கீரர் கூற்று 
அடி- 10-11 " .....................................................மராஅத்து 
                    உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் "- மரா மரத்தின் தேர்ச்சக்கரத்தைப் போன்ற தோற்றம் உடைய மாலை என்கிறார்.
பெருமழைப் புலவர் உரை--- 'செங்கடம்பினது தேர் உருளை போலும் பூவால் ஆனமாலை' என்கிறார் . இங்கே 'சிவந்த' என்பது                                                                                          பொ.வே.சோமசுந்தரனாரின்  extra fitting.
> உங்களுக்கும் பெருமழைப் புலவருக்கும் ஒரு ஆசை; முருகனுக்குச் செங்கடம்பு சூட்ட வேண்டும் என்று........தவறில்லை.

பெருமழைப் புலவர் கூற்றோ, என் கூற்றோ மாத்திரம் இல்லை. திருமுருகின் அடிகளில் சொல்லப்ப்டுவது செங்கடம்பு என்பது நச்சினார்க்கினியர் கூற்று. அவர் காலத்து அருகே வாழ்ந்த அருணகிரிநாதர் கூற்றுக் அஃதே.

”10. இருள் பட  பொதுளிய பராரை மராஅத்து - இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியினையுடைய செங்கடம்பினது,

பராரை: பண்புத்தொகைச் சந்திமுடிபு வேற்றுமையென்றுணர்க. 

11. உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் - தேருருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலையசையும் மார்பினையுடையவன்;”


முருகன் சிவந்த நிறத்தவன். சிவந்த ஆடை, சிவந்த மலராகிய கடம்பில் பெருவிருப்பம் உடையவன் என்பது தமிழரின் 3000 ஆண்டுக் கொள்கை. இதில் பெருமழைப் புலவரோ, யானோ மாற்ற என்ன இருக்கிறது? வேலன் கடிமரம் என்று கடம்ப மரத்தைச் சங்க இலக்கியம் பாடுகிறது. செங்கடம்பு படம் பார்த்திருப்பீர்கள்: இது Barringtonia வகை. கண்ணி, கோதை, மாலை போலப் பூப்பது செங்கடம்பு.  பலராமன் நிறம் போலப்
பூப்பது வெண்கடம்பு. அதுவும் கோதை போலப் பூக்கும்.

முருகனைச் சிவப்பு நிறத்தன் என்று முழுவதும் சங்கத் தமிழர் கோட்பாட்டை அறிந்தால், அவன் அமரும் கடம்பு என்னும் கடிமரம்
செங்கடம்பு, கடம்பன் (வேலன்) சூடுவது செங்கடம்பு மலர் என்றும் அறியலாம். இது காலங்காலமாக உள்ள மரபு.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Jul 24, 2019, 7:04:49 AM7/24/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai

ஆனால் எந்தக் கடம்பு கண்ணியாக்கும் போது தேர்ச்சக்கர வடிவம் பெறுகிறதோ அது தான் முருகனுக்குரிய கடம்பு. ஏனென்றால் திருப்பரங்குன்றத்து முருகன் கழுத்தில் அப்படித்தான் செதுக்கி உள்ளனர்.
சக 

இன்னொன்றும் கடம்ப மரத்தின் மலர்களைப் பற்றி அறிதல் வேண்டும். இயற்கையாகவே உருள் போன்ற (தேர் அச்சு போன்ற) கோதை/தார்/கண்ணி
பூத்துத் தொங்குவது எனச் சங்க இலக்கியம் பல இடங்களில் பாடுகிறது. இது செங்கடம்பு (முருகன்), வெண்கடம்பு (பலராமன் நிரம் போல இருப்பது) இரண்டுக்கும் Barringtonia இனங்கள் எனத் தெளிவாகக் காட்டுவது,

நீங்கள் சொல்வது “கண்ணி ஆக்குவது”. ஆனால், கடம்ப மரத்தில் இயற்கையே கண்ணிஆக்கிவிடுகிறது என்று சங்கப் புலவர் பலர் பாடிஉள்ளனர். மனிதர் கண்ணி ஆக்குவது இல்லை. எனவே தான் Wendlandia சங்க இலக்கிய காலக் கடம்பு அல்ல என்றும், அதற்குக் கடம்பு என்ற பெயரே தமிழில் இல்லை (கதம்பம் என உண்டு) என்றும் அறிய முடிகிறது.

NG

kanmani tamil

unread,
Jul 24, 2019, 7:29:36 AM7/24/19
to mintamil, vallamai

///திருமுருகின் அடிகளில் சொல்லப்ப்டுவது செங்கடம்பு என்பது நச்சினார்க்கினியர் கூற்று. அவர் காலத்து அருகே வாழ்ந்த அருணகிரிநாதர் கூற்றுக் அஃதே. 

முருகன் சிவந்த நிறத்தவன். சிவந்த ஆடை, சிவந்த மலராகிய கடம்பில் பெருவிருப்பம் உடையவன் என்பது தமிழரின் 3000 ஆண்டுக் கொள்கை. ///Dr.Ganesan wrote 30 mts.ago 

நச்சினார்க்கினியரும் , அருணகிரிநாதரும் வாழ்ந்த காலத்திலிருந்து இக்கொள்கை உருவானது என்று கொள்ளலாம். ஆனால் அதற்காக 3000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? சங்க இலக்கியம் முழுதும் அந்த வண்ணத்தைப் பற்றிய பேச்சே இல்லையே.

முருகன் சிவந்த நிறத்தவன். செவ்வேள் என்று அழைக்கப்படுகிறான்  

அவன் கடம்ப மரத்தில் உறைவதாக மக்கள் நம்பினர். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது.

எனவே செங்கடம்பு தான் அவனுக்கு உகந்தது என்று சொல்வதற்கு வலுவான ஆதாரம் எனக்குக் கிடைக்கவில்லை.

சக  

 



N. Ganesan

unread,
Jul 24, 2019, 8:07:57 AM7/24/19
to மின்தமிழ், vallamai
On Wed, Jul 24, 2019 at 6:29 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

///திருமுருகின் அடிகளில் சொல்லப்ப்டுவது செங்கடம்பு என்பது நச்சினார்க்கினியர் கூற்று. அவர் காலத்து அருகே வாழ்ந்த அருணகிரிநாதர் கூற்றுக் அஃதே. 

முருகன் சிவந்த நிறத்தவன். சிவந்த ஆடை, சிவந்த மலராகிய கடம்பில் பெருவிருப்பம் உடையவன் என்பது தமிழரின் 3000 ஆண்டுக் கொள்கை. ///Dr.Ganesan wrote 30 mts.ago 

நச்சினார்க்கினியரும் , அருணகிரிநாதரும் வாழ்ந்த காலத்திலிருந்து இக்கொள்கை உருவானது என்று கொள்ளலாம். ஆனால் அதற்காக 3000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? சங்க இலக்கியம் முழுதும் அந்த வண்ணத்தைப் பற்றிய பேச்சே இல்லையே.

முருகன் சிவந்த நிறத்தவன். செவ்வேள் என்று அழைக்கப்படுகிறான்  

அவன் கடம்ப மரத்தில் உறைவதாக மக்கள் நம்பினர். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது.

எனவே செங்கடம்பு தான் அவனுக்கு உகந்தது என்று சொல்வதற்கு வலுவான ஆதாரம் எனக்குக் கிடைக்கவில்லை.

சக  


3000 - 1800 ஆண்டுகளுக்கு ஆன கால கட்டங்களில், முருகு என்னும் அணங்காக முருகன் வழிபடப்பட்டான். “பேஎ” என்பது அக் கடவுளின்
மிகப் பழைய பெயகளில் ஒன்று. சிவப்பும் கறுப்பும் வெகுளிப் பொருள - தொல்காப்பியம். சிவப்பு சினத்தின் வடிவம். சினமிகுந்த பேஎ
முருகன். எனவே தான், செங் கடம்பு மரம் அவனுக்கே உரிய மரமாகத் பண்டைத் தமிழர் தெரிந்தெடுத்தனர். பேஎ என்னும் முருகும், அதற்கான
செங்கடம்பு மரமும் பற்றிய அழகான பாடலைக் கபிலர் பாடியுள்ளார். சங்க காலச் சான்று.

மருத மரத்திலும் எது மருதத் திணையைக் குறிக்கும் மரம் என்று ஆய்ந்துள்ளனர். பூ என்றாலே சிவப்பு. பூவல் = செம்மண். 
பூக்கும் கடம்பன் = செங்கடம்பு மலர் அணி முருகன் (திருமுருகு வெண்பா). மருதத்திணை குறிப்பது பூமருது ‘]Prdie of India'
என்று ஆராய்ந்து முதலில் எழுதியவர் பி. எல். சாமி. சங்கப் பாடல்களால் பூ மருது = சிவந்த மருது (சிவந்த பூக்கள் உடையது.)
வெள்ளைப் பூக்கள் மலரும் அர்ஜுன மரம் அல்ல. 

கடம்பு என்று முருகனொடு தொடர்பு உடைய இடங்கள் எல்லாம் செங்கடம்பு. தாமரை என்றால் செந்தாமரை; கடம்பு என்றால் செங்கடம்பு.
 
நீபப் போதலங்கல் அணிகுமரன் குன்றுதொறும்     
         பேருவகை பூப்ப மேவிப்
     புனிதவிளை யாட்டயர்ந்தான்;  

 நீபப் போது அலங்கல் - செங்கடம்பு மலராலாகிய மாலையை, அணி - அணிந்த, குமரன்-முருகன், குன்றுதொறும் - மலைகள் தோறும், பேர் உவகை பூப்ப - பெரிய மகிழ்ச்சி உண்டாக, மேவி - தங்கி, புனிதம் விளையாட்டயர்ந்தான் - தூய திருவிளையாடலைச் செய்தான்.  

N. Ganesan

unread,
Jul 24, 2019, 4:00:18 PM7/24/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
3000 - 1800 ஆண்டுகளுக்கு ஆன கால கட்டங்களில், முருகு என்னும் அணங்காக முருகன் வழிபடப்பட்டான். “பேஎம்” என்பது அக் கடவுளின் மிகப் பழைய பெயர்களில் ஒன்று. சிவப்பும் கறுப்பும் வெகுளிப் பொருள - தொல்காப்பியம். சிவப்பு சினத்தின் வடிவம். சினமிகுந்த பேஎ முருகன். எனவே தான், செங் கடம்பு மரம் (https://en.wikipedia.org/wiki/Barringtonia_acutangula)  அவனுக்கே உரிய மரமாகத் பண்டைத் தமிழர் தெரிந்தெடுத்தனர். பேஎ என்னும் முருகும், அதற்கான செங்கடம்பு மரமும் பற்றிய அழகான பாடலைக் கபிலர் பாடியுள்ளார். சங்க காலச் சான்று. ஆபிசாரக வழிபாடு இயற்றிய தொன்மைக்காலம். In the history of World's religions, gods get sweetened all the time.

3000 ஆண்டு முன்,  அல்லது அதன் முன்னரோ கடம்பு மரத்தின் சிவந்த மலர்கள் முருகனோடு இயைக்கப்பட்டுவிட்டன. ”வேலன் கடிமரம்” என்று இந்தச் செங்கடம்பு மரத்தைத் தமிழர்கள் வழிபாடு இயற்றியதைச் சங்க இலக்கியம் வர்ணிக்கிறது. இத்தகு தொன்மையான வேலன் பூசாரி முருகனை நினைவுறுத்தச் செங் கடம்பு மலர்களைச் சூடி ஆடுவான் (அணங்காடல்). அதனால், மாங்குடி கிழார் புறநானூற்றின் முக்கியமனான பாடலில் அவனைக் கடம்பன் என்று குறிப்பிடுகிறார். கடம்பன் சூடும் கடம்புப் பூமரத்துக்குத் தமிழில் அரத்தம் என்ற பெயருண்டு. சிவந்த பூக்களைக் பூக்கும் கடம்பு ஆதலான், அரத்தம் எனப் பெயர் வழங்குகிறது. அரத்தம் ::: ரத்தம், செம்பரத்தை, ... தாமரை என்றால் செந்தாமரையும், கடம்பு என்றால் செங்கடம்பும் ஆகும். இதனை, நச்சினார்க்கினியர், அருணகிரிநாதர் போன்றோர் விரிவாக விளக்கி எழுதியுள்ளனர். பே/பேஎ/பேஎம், குரா/குராஅ/குராஅம்/குரவம், ... போல மரா/மராஅ/மராஅம்/மரவம். மரவக்காடு என்ற ஊர் உள்ளது. மரா என்றால் பெரிய மரங்கள் மூன்றுக்கு வரும்.

முருகன் சிவந்த வண்ணத்தான் என்பது:
(இதனால் தான் செங்கடம்பு அணிவதில் மகிழ்பவன் என்பது பண்டைத் தமிழர் கொள்கை.)

(1)
தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியன் காப்ப
ஏமவைகல் எய்தின்றால் உலகே - குறுந்தொகை கடவுள் வாழ்த்து

சிவந்த அடிகள், பவழ மேனி, குன்றிமணி போன்ற உடை, கிரவுஞ்சகிரியைப் பிளப்பதால் சுடரும் நெடுவேல், சேவலின் செங்குடுமி எனப் பாடல் முழுதும் சிவப்பு தான். எனவே, கடம்பன் என்கிறபோது செங்கடம்புத் தார் அணிபவன். அரத்தம் என்பது பூவால் கடம்புக்குப் பெயர். பவழம், இந்திரகோபம் (சிறுபாண்) போன்றன கடப்பம்பூவுக்கு உவமைகள்.

(2) செவ்வேள் (3) சேயோன்
(4) செய்யன் (திருமுருகு - 206) (5) சேந்தன்

(5) சேயோன் மேய மைவரை உலகம் - தொல்.
செங்கேழ் முருகன் காதலித்த வான் தங்கிய மைவரை உலகம் - நச்.

(6) மணிமயில் உயரிய மாறா வென்றிப்
  பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் (புறம் 56)

(7) உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி - திருமுருகு.
செங்கடம்பு உள்ளிட்ட சிவந்த பூக்கள் பலவும் தூவி, அச்சம் வர்ரும்படியாக.
ஆடு அறித்து, அதன் அரத்தம் கலந்த செந்தினையைப் பரப்பி
வேலன் வழிபாடு நடைபெறும். இவ்வாறு சிவப்பு பிரதானமாக
இருக்கும் வேலன் வழிபாட்டை நடத்துபவன் கடம்பன் (=செங் கடம்புப் பூ அணிந்த)
பூஜகன் என்கிறது புறப்பாடல்.

முருகனின் கடம்ப மரம் எது? சங்க இலக்கியம் கூறுவனவற்றால் வெளிச்சம் அடைகிறது.
அதனைப் பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 25, 2019, 9:34:17 AM7/25/19
to மின்தமிழ், vallamai
On Wed, Jul 24, 2019 at 6:29 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

///திருமுருகின் அடிகளில் சொல்லப்ப்டுவது செங்கடம்பு என்பது நச்சினார்க்கினியர் கூற்று. அவர் காலத்து அருகே வாழ்ந்த அருணகிரிநாதர் கூற்றுக் அஃதே. 

முருகன் சிவந்த நிறத்தவன். சிவந்த ஆடை, சிவந்த மலராகிய கடம்பில் பெருவிருப்பம் உடையவன் என்பது தமிழரின் 3000 ஆண்டுக் கொள்கை. ///Dr.Ganesan wrote 30 mts.ago 

நச்சினார்க்கினியரும் , அருணகிரிநாதரும் வாழ்ந்த காலத்திலிருந்து இக்கொள்கை உருவானது என்று கொள்ளலாம். ஆனால் அதற்காக 3000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? சங்க இலக்கியம் முழுதும் அந்த வண்ணத்தைப் பற்றிய பேச்சே இல்லையே.

முருகன் சிவந்த நிறத்தவன். செவ்வேள் என்று அழைக்கப்படுகிறான்  

அவன் கடம்ப மரத்தில் உறைவதாக மக்கள் நம்பினர். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது.

எனவே செங்கடம்பு தான் அவனுக்கு உகந்தது என்று சொல்வதற்கு வலுவான ஆதாரம் எனக்குக் கிடைக்கவில்லை.


சங்க இலக்கியத்தில் தெளிவாகக் கிடைக்கிறது. பரிபாடல் - செவ்வேள் பாடல்களில் பாருங்கள்.
முருகன் அணிவது செங்கடம்பின் மலர்மாலை என்று பாடியுள்ளனர். இதனால் தான் 
முருகனின் கடம்பு என்றால் என்ன தாவரம் என்றும், தாமரை என்றால் செந்தாமரை, கடம்பு என்றால் செங்கடம்பு
என்றும் அறிய முடிகிறது. அலர் கடம்பன் என்று இரட்டைக்காப்பியங்களில் குறிப்பிடப்படுவது
செங்கடம்பு மலர்களைக் கந்தன் அணிவதால். மாங்குடி கிழார் கடம்பன் என்று குறிப்பிடும்
வேலன் அணிவது செங்கடம்பு மலர்கள். இதனை, பேஎ என்று மிகத் தொல்காலத்தில் வழங்கப்பட்ட
முருகணங்கைப் பற்றிய குறுந்தொகை, நற்றிணைப் பாடல்களிலே விளக்கியுள்ளனர்.
'முருகு மெய்ப்பட்டபுலைத்தி போல ’(புறநா. 259).  
 

kanmani tamil

unread,
Jul 25, 2019, 10:25:29 AM7/25/19
to vallamai, mintamil
நான் காட்டியுள்ள தரவுகள் அனைத்திற்கும் மேற்கோள் பகுதிகள் காட்டியுள்ளேன். 

நீங்கள் ஏன் மேற்கோள் பகுதி இல்லாமலே கட்டுரைக்கிறீர்கள்? 

உரு என்பது வண்ணம் என்று தான் பொருள்படும். 

குரு என்பது சிவப்பைக் குறிக்கும்.
சக 
கைபேசியிலிருந்து. .....  

N. Ganesan

unread,
Jul 25, 2019, 10:45:06 AM7/25/19
to மின்தமிழ், vallamai
On Thu, Jul 25, 2019 at 9:25 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
உரு என்பது வண்ணம் என்று தான் பொருள்படும். 


உரு, உருவம் என்பது சிவப்பு என்பது அடிப்படைப் பொருள். அதன் விரிவு நிறம்(வண்ணம்) என்று ஆகிறது.

உரு = அடிப்படையில் “தீ” (நெருப்பு). உருக்கு- = தீயில் காய்ச்சுதல், வுட்ஸ் எனும் ஸ்டீல். உருப்பம் = வெம்மை.
எனவே, உரு/உருவம் = சிவப்பு என்ற பொருளிலும் வரும். பிறகு எல்லா நிறத்துக்கும் விரிந்தது.

ர-/ல- மாற்றம்: நீர்- இதிலிருந்து நீலம் ‘blue' வண்ணம் ஏற்படுதல் போல. நீலம் < நீர-
சோறாக்குவது. உலை வைத்தல். < உரு-
(அரிசி, கூலம் படும் பாட்டால், உலைதல், உலைவு என்ற பொருளும் பின்னர் ஏற்றது.)

 நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages