தேவகோட்டையில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

8 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Apr 7, 2026, 5:38:53 AMApr 7
to

தேவகோட்டையில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில்  பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

                                 ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு, ஒழுக்கம், வருகை பதிவுகள் மற்றும் பள்ளி வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது என தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் வலியுறுத்தினார்.

                                      மேலும், மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து வளர்த்தெடுக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பள்ளியின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

                                    இந்த கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள்  பலரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.சிறப்பாக பேசிய பெற்றோர்கள் அமலா   மற்றும் சித்ரா  ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது பள்ளியின் சிறப்புகள் குறித்து மாணவி ரித்திகா  பேசினார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.இதில் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசினார்.சிறப்பாக பேசிய பெற்றோர்கள் அமலா   மற்றும் சித்ரா  ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதுபள்ளியின் சிறப்புகள் குறித்து மாணவி ரித்திகா  பேசினார்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=fX8AJSCeabM


https://www.youtube.com/watch?v=XOy1Vl8cvEs

IMG_4627.JPG
IMG_4607.JPG
IMG_4636.JPG
IMG_4618.JPG
IMG_4621.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages