நூ தா லோ சு
மயிலை
"அரத்தம் - சங்க இலக்கியத்தில் உள்ளதா ?" >>>> தேவ்
வேறு வேலை காரணமாக தொகுத்தும் உடன் (எழுதி) முடிக்கததனால் மடல் வைக்கவில்லை மன்னிக்க
தங்கள் காட்டிய திணைமாலை நூற்றைம்பதைத் தவிர சங்க இலக்கியத்தில் 'அரத்தம் ' என எங்கும் காணவில்லை
ஆனால் இரத்தி எனும் ஒர் மரப்பெயர் உள்ளது
ஊர் மன்றங்களில் உள்ள தா கக் காண்பதால் அத்தி (ஆல் ) வகைச் சார்ந்த அரச மரமாகலாம்
சிவந்த நிறமுடன் பழம் இலை போன்ற ஒன்றின் தொடர்புடையதும் ஆகலாம்
இரவு இரத்தல் தமிழி ல் ஓர் வினைச்சொல் .
இதனில் உள்ள இ வடமொழி சொல் வழி வந்த முன்னொட்டு அல்ல
அதுபோல் இரத்தியும் தமிழே ஆகும்
ஏனெனில்
(முன்பு ) முத் து என்பதில் வடநாட்டில் ஒருவன் மோதி என்பது சொல் அதிலிருந்து
முத் து பிறந்தது எனச சொல்ல நான் முத் து விளையும் பகுதியில் சொல் தோன்றுமா
அல்லது முத்தினை யாது எங்கிருந்து எப்படி வந்தது என்பதே அறியாத மக்கள்
வாய் வழி யில் பிற ந்து பிறகு தமிழில் முத் து என ஆனது என ஆகமுடியாது
என்பதைக் (ஓர் பழம் மடலில்) காட்டியது போல் தமிழ் நாட்டில் இயல்பாக வளரும்
ஓர் பயிரினத் தை விளி க்க வே ற்று நாட்டினரைக் கேட்டு ஓர் சொல் வைக்க முடியாது
சீ வரத்தர் = பவுத்தர் (தேவாரம் )
சீ = அடைமொழி + அரத் தர் = சிவந்த ஆடை உடுத்தவர் (இருமடி ஆகுபெயர்)
அரத்தம் = சிவப்பு >>> அந்நிற ஆடைக்கு ஆகி >>> அந்நிற ஆடைகளை அணிந் தோர் க்கா கியது
வேர் பற்றி ஆயும் பொது பொதுவாக ஓர் கருத் து
வடமொழி பற்று உ டையோர் வடமொழிச் சொல் எனமட்டும் காட்டி விட்டு
அகராதியில் இருப்பது தான் மூலம் எனும் மாயையை வைக்கின்றனர்
உண்மையில் தமிழில் எந்த நூலில் உள்ளது எனக் காட்டி அதன் காலத்தைக் காட்டு வது போல்
வடமொழிச் சொற்களை (SANSKRIT OR PRAKRITHAM )எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது
அந்த நூலின் காலம் யாது அதன் ஆசியர் யார் எந்த பகுதியைக் சார்ந்தவர் எனக்கா ட்டாது
வடமொழி என்றால் அதுதான் உறுதியாக பழமை யுடையது என்று ஏதோ சொல் வதை
( by default) அடுத்தவர் ஒப்புக் கொள்ளவேண்டும் எனும் நினைப்பினை தாங்கள் கொண்டு மற்றவர்களும்
கொள்ள வேண்டும் எனு ம் மனப் போக்கினை மறைமுகமாகபுகுத்த நினைப்பவர்களை காண்கின்றேன் .
இன்று ஆங்கிலத்தில் அகராதி மிக மிக பெரிதாக உள்ளது
அவைதனில் சொற்களைச் சேர்த்து விட்டதால் இருக்கின்றது அவ்வளவே
அதனால் ஆங்கிலம் படித்தவர்கள் அவ்வளவு அறிவையும் படைத்தவர்
அறிவுமிக்கவர் எனக் கொள்ள முடியாதது போல் ஓர் மொழியில் ஒரு சொல்
இருந்தால் அம்மொழிபடித்தவர் எல்லோரும் அதன் சொந்தக்காரர்களாக முடியாது
வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்களில் உள்ள அறி வுநிலை அதன ஆசிரியர்கள்
தங்கள் வாழ்ந்த வாய்ப்பு பெற்ற இடத்திலிருந்து காலத்திலிருந்து வந்தது அவ்வளவே.
அதுபோல் இன்று வடமொழியைப் படித்தோர்க் கு ம் அதற்கும் உள்ள தொடர்பு
காங் கிரசு எனும் ஓர் அரசியல் கட்சி 150 ஆண்டுகளு க்கு முன் தோன்றியது அதனில்
பல தலைவர்கள் இருந்தனர் அவர்களின் நாட்டுப் பற்றிற் கும் இன்று அதே பெயரை
தாங்கள் வைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் என்ன தொடர்பு ??
அதான்று வடமொழி ஆனது எப்பகுதி மக்கள் வாய்மொழி வழக்கில் என்றும்
இல்லலா தது எழுத மட்டும் பயன் கொண்டது அதனில் பல நாடுகளின் மக்களின்
காலத்தினது அறிவு ஆவணமாகக் கலந்துள்ளது எனவே அது ஒரு கலி த்த தொகுதி
அதனால்
அதற்கு தனக்கென சிறப்புநிலை வரலாறு படைத் துக் கொள் வது அவ்வப்போது
கையில் எடுத்தாளு ம் தனிதனி பொருளுக்கு மட்டும் பொருந்துமே அன்றி எவற்றிற்கும்
எவ்விடத்திற்கும் பொருந்தாது
(ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லையும் அம்மொழியில் பேராசிரியர் ஆனாலும் எப்படி
ஒலி க்கவேண்டும் எனத் தனித் தனியேதான் கற்க வேண்டும் கீறும் எழுத்திற்கும்
வாய்வழி வரும் ஒலிக்கும் கற்பு நிலை இல்லாத ஓர் மொழி அஃது ஆதலால்.
மேலும்
சமஸ்கிருதம் எந்த இந்திய நாட்டை மண்ணைச் சார்ந்த மக்களையும் சாராதது மிக மிக
குறைவான எண்ணிக்கை கொண்டவரல் பயன்பட்டது ஆ னால் அதனில் ஆவணப்படுத்தப்பட்தவை
கிட்டியுள்ளது அவ்வளவே. உலக அழகி என தேர்ந்தெடுக்கப்பட்டால் அவள்தான் உலக ழகி ஆக மாட்டாள்
தேர்ந்தோர் நடுவில் வாய்ப்பு பெற்றவர் கள் இடையே எனமட்டும் கொள்ளலாம் நல்ல அழகிகள்
இம்மாதிரி தேர்வுகளுக்கு வரமாட்டார்கள் மேலும் அவர்களுக்கு இம்மாதிரி ஒன்று உள்ளது
என்பதே கூடத் தெரியாது
மேலும்
.முன்பு ஒருமடலில் சமஸ்கிருதம் இந்தியாவின் ஓர் பொதுமொழி ( LINGUA FRANCA = LINK LANGUAGE)
என யாவரும் அறிந்தது தானே எனறுகூட எழுதப்பட்டிருந் தது . இல்லாத ஒன்றை எழுதி வைத்துவிட்டால்
பின் வருபவர்கள் அதுதான் உண்மை என நினை க்கட்டும் எனும் நினைப்பினில் .
எப்படி முடியும்??
எந்த நாட்டு மக்களாலும் எந்நாளிலும் வாய்வழியே பேசாத ஒர்மொழி linguafranca / LINKLANGUAGE
மக்களின் மொழியாக இருந்திருக்க முடியும் பாருங்கள் என்னே விந்தையான மயக்குக் கூற்று
ஆங்கிலம்தான் ஓரிரு நூற்றாண்டுகளாக அரசினரால் புகுத்தப்பட்டு வந்துள்ளது அதனால்
அது ஓர் இந்திய மொழி ஆகிவிடுமா ??
ஓர் மொழியில் ஒன்றிற்கு பழமை இருப்பதால் அதனைக்கொண்டு அம்மொழியில்
உள்ள எல்லவற்றிரகும் பழமைக் காட்டமுடியாது - கா ட்டுவது மாயவாதம்
சென்னை மின்சார ரயிலில் ஏதோ ஒரு சங்கிலி போல் ஒன்று வைத்துக்கொண்டு
அப்படியும் இப்படியும் நு ழைத் து வெளியில் எடுக்கவும் உ ள்ளே மாட்டவும் செய்து
வியப்பினை ஏற்படுத்தி பிறகு பல்பொடியை விற்பான்
லிங்கத்தை,தொழிற்சாலை வரிசைஎண் கொண்ட HMT WATCH தனை வாயிலிரு ந்து
வெளியில் எடுத்து வியப்பூட்டி தனக்கு தெரிந்த வற்றை மற்றவர்களுக்கு பிரசா ரம்
செய்வது மாயவித் தை அன்றி வேறென்ன ?
எனவே ரத் தம் வடமொழி ரக்தம்
என்பது மிகப் பழமையாக எந்த நூலில் உள்ளது அதன் காலம்
(முடிந்தால் ஆசிரியர் அவர்நாடு தமிழகம் அல்லாவிடிலும் ஆனாலும் )
தோன்றிய வழி என எல்லாம் தெரிந்தால் தான் ஓர் முடிவை நாம் பெறமுடியும்
மக்கள் வாய்வழக்கில் பெரிதும் உள்ள ஆங்கிலத்திலேயே ஒருசொல்லின் மூலம்
இலத்தீன் கிரேக்கம் பிரஞ்சு ஸ்பானிஷ் எனக்கட்டுவது போல் சொல் வந்த வழியை
வடமொழியில் காட்டுவதில்லை எந்த பகுதி மக்களும் பேசாத ஒர்மொழி எப்பகுதி
மக்கள் வாய் வழக்கிலிருந்து வராத து தனியான ஒன்று அதிலிருந்துதான் மற்றவை
வந்ததுபோல் காட்டு வது கள்ளத் தனமே
நிற்க
எடுத்துக் காட்டுகள் காண்க
-----------------------------------------------------
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்கஎன்று நின் புறம் 34
உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே புறம் 325
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால்
அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமே நற்றிணை 113
அரத்தம் உடீஇ அணிபழுப்பப் பூசிச்
சிரத்தையால் செங்கழுநீர் சூடிப் - பரத்தை
நினைநோக்கிக் கூறினும் நீமொழியல் என்று
மனைநோக்கி மாண விடும் திணைமாலை நூற்றைம்பது 143
வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு 85
அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் 90 / 14 ஊர்காண் காதை / சிலம்பு
வென்றி வெங்கதிர் புரையும் மேனியன்
குன்றா மணிபுனை பூணினன் பூணொடு
முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு
சண்பகம் கருவிளை செங்கூ தாளம் 40
தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணங் கொண்ட மார்பினன் 45
பொங்கொளி அரத்தப் பூம்பட் டுடையினன்
முகிழ்த்தகைச் சாலிஅயினி பொற்கலத் தேந்தி
ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து
வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில் 50
பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் 22 அழற்படு காதை / சிலம்பு
தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத் 25 -10 மந்தி ரம் படுத்த காதை / மணிமேகலை
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
பூங் கொடி அன்னாய் யார் நீ?' என்றலும்
ஆய் இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவதிலகை செவ்வனம் உரைக்கும் 20
'ஈங்கு இதன் அயல் அகத்து இரத்தினத் தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெருங் கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் 11-பாத்திரம் பெற்ற காதை / மணிமேகலை
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி 80
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து
புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும் 90 / 6-சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை / மணிமேகலை
இரத்தினத் திரயம்
மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
யிப்பொருள் ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய்
இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல் சூளாமணி
இரத்தின பல்லவம்
மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்
திருத்தின வில்லது செம்பொ னுலகில்
புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்
இ ரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே சூளாமணி
இரத்தின கண்டன் இளவரசன்
வானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்
ஈனோ ருட்கும் இரத்தின கண்ட னெனநின்றான் சூளாமணி
இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்
இலங்கொளி மாடவீதி இ ரத்தின புரம தாளும் சூளாமணி
உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவம் ஊ ரக்
கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய்
அடுக்கிய வனிச்சப் பூவிலன் அ ளிமேல் அரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில் சூளாமணி
ஓருடல்இரண்டுகூறுபடவிடுத்த
அழியாப்பேரளிஉமைகண்நின்று
தன்பெயர்புணர்த்திக்கற்பினொடுகொடுத்த
அமையாவென்றிஅரத்தநெடுவேலோய் 15 / கல்லாடம் (பாயிரம்-வேலன்வணக்கம்)
சாதகப்புட்கண் தாமரை கழுநீர்
கோபம் மின்மினி கொடுங்கதிர் விளக்கு
வன்னி மாதுளம்பூ விதை என்னப்
பன்னு சாதரங்க ஒளிக்குணம் பத்தும் 30
செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம்
முயலின்சோரி சிந்துரம் குன்றி
கவிர்அலர் என்னக் கவர்நிறம் எட்டும்
குருவிந் தத்தில் குறித்தன நிறமும்
அசோகப் பல்லவம் அலரி செம்பஞ்சு 35
கோகிலக்கண் நீடுஇலவலர் செம்பெனத்
தருசெளகந்திதன் நிறம் ஆறும்
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை
குங்குமம் அஞ்சில் கோவாங்கு நிறமும்
திட்டை ஏறு சிவந்த விதாயம் 40 (திருவிளையாடல் மாணிக்கம் விற்றபடலம்
ஒக்கல் புற்றாம் குருதி தொழுனை குறித்த பாடல் = மணிகளின் நிறம் குறைகள்
மணிகோ கனகம் கற்பம் பாடி தொகுப்பு (GEMOLOGY ) எத்தனை விதமாக
மாங்கி சகந்தி வளர்காஞ்சு உண்டையென்று சிவந்தநிறத்திற்கு எடுத்துக்காட்டுகள் காண்க)
ஆங்கொரு பதின்மூன்று அடைந்தன குற்றமும்
இவையெனக் கூறிய நிறை யருட்கடவுள் 45 / கல்லாடம் 47
ஐந்தெனப் பெயரிய நெடுமரம் ஒடித்து
கண்உளத்து அளவா எள்ளுண வுண்டு
பொரியெனத் தாரகைக் கணன்உடல் கொத்தி 20
அடும்திறல் அனைய கொடுந்தொழில் பெருக்கிய
மாயா அரத்த பெருங்குருகு அடித்து (சிவலீலைகளில் ஒன்று திருமாலின் பிறப்பாகும்
வெண்சிறை முடித்த செஞ்சடைப் பெருமான் கொக்கின் {= குருகு=அன்னம்} இறகு அணிதல்)
அடிவண்ணம் தாமரை ஆடுஅரவு
அல்குல் அரத்தமங்கை (தொய்யில் /அழல்வண்ணம்/மருதாணி / பூசியவள்)
கொடிவண்ண நுண்இடை கொவ்வைச்
செவ்வாய் கொங்கைக் கோங்கரும்பின்
படிவண்ணம் செங்கோல் பராங்குசன்
கொல்லிப் பனிவரைவாய்
வடிவண்ண வேல்கண்ணினால் என்னை
வாட்டிய வாள்நுதற்கே 36 பாண்டிக் கோவை
பேராயிரத்து இருநான்(கு) உடையானைப் பிறங்கியநல்
சீராயிரத்தில் சிறந்துடையானை நல்சித்தி செய்யும்
காராய் இரத்தினம்மூன்(று) அளிப்பானைக் கவிதைசெய்யா(து
ஆராய் இரத்திர் அறியாதவரை அறிஞர்களே 72 திருநூற்றந்தாதி (சமண ஆசிரியர் நூல் )
மந்தாரம் தரு, மரம், செவ்வரத்தமும் ஆகும் என்ப 128 சூடாமணி நிகண்டு
அரத்தமே இரத்தம் செம்மை அரக்கொ(டு) உற்பலம் கடம்பு 176 சூடாமணி நிகண்டு
குருதியே சிவப்பு இரத்தம் குசன் எனக் கூறுமுப்பேர் 189 சூடாமணி நிகண்டு (குசன் = செவ்வாய்)
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம்பு இரத்தம் என்ப 192 சூடாமணி நிகண்டு
இரத்தஞ் சென்னீர் சிவப்பாம் இலாங்கலியலந்தென் காந்தள்
அரக்கென்ப மெழுகு கள்ளின் விகற்பமுஞ் சிவப்புமாகும் 200 சூடாமணி நிகண்டு
கறை இறுத்திடல் இரத்தம் கறுப்பு உரல் விடம் பேரைந்தே 278 சூடாமணி நிகண்டு
மேலும் என்னிடமுள்ள 17 நிகண்டுகளில் காணக் கூடியவைகளை திகட்டல் கருதி
காட்டுவது விடுத்தோம்
சீவரத்தர் = செவ்வாடை அணிந்த பவுத்தர் / தேவாரம் = பற்பல;
எண் மிகுதி கருதி வரிகளையே காட்டுவது விடுத்தோம்
On Fri, Jul 5, 2013 at 11:57 AM, DEV RAJ
<rde...@gmail.com> wrote:
அரத்தம் - சங்க இலக்கியத்தில் உள்ளதா ?
தேவ்