அத்தி , அகத்தி , ஆத்தி மூன்றும் வேறுவேறு பயிரினங்கள்

428 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Nov 14, 2013, 2:42:38 PM11/14/13
to mintamil, வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org, myla...@gmail.com, Arunachalam sivakumar, Naga Loga
திருவாளர் தேவ் அவர்களுக்கு 


அத்தி , அகத்தி , ஆத்தி மூன்றும் வேறுவேறு பயிரினங்கள் 

(1)  ஆத்தி  என்பது பற்றி >>>>

ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி யைப்படித் திருபீர்கள் ? 

ஆத்திச்சூடி அமர்ந்த தேவனை ...... ஆத்திச்சூடி = சிவன் = ஆத்தி மலர் அணிந்தவன் 

ஆத்தி மாலை சோழர் களுடையது 

மரம் பூ எவ்வாறு இருக்கும் காண 
சொடுக்குக 


இதனில் ஆத்தி யைத் தேர்வுசெய்க 


ஆத்தி சில கோயில்களில் தல ப் பயிரினம் காண்க இந்த சுட்டி 



(2)  அகத் தி ,

 மரமல்ல அனால் மெலிதாக கிளைகள் இல்லாமல் உயரமாக வளரும் செடி எனலாம் 
இதனை வளர்த்து அதன் மீதுதான் வெ ற்றிலை க்கொடியை படர விடுவார்கள் 

அகத்தி கீரைதான் தெரியுமே எனினும் காண்க 


நூ த லோ சு 
மயிலை 

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 14, 2013, 9:09:46 PM11/14/13
to வல்லமை
அத்தி ஆத்தி அகத்தி என்றே
சுத்த் சுத்திச் சொல்கிறார் மரங்களின் பெயர்களை
எத்தனை விதங்கள் தான் படைத்தாய் இறைவா இப்
பித்தனை வியந்திடச் செய்ய


2013/11/15 N D Logasundaram <selvi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


DEV RAJ

unread,
Nov 14, 2013, 11:22:29 PM11/14/13
to mint...@googlegroups.com, mintamil, வல்லமை
On Friday, 15 November 2013 01:12:38 UTC+5:30, selvi...@gmail.com wrote:
அத்தி , அகத்தி , ஆத்தி மூன்றும் வேறுவேறு பயிரினங்கள் 
 

தெளிவு தந்தமைக்கு நன்றி, ஐயா.
ஆத்தி - ஆர் , இரண்டும் ஒன்றா ? [ஆர்க்காடு, ஆரூர்]

ஆர் = ஆத்தி = அகத்தி

இவை போன்ற பதிவுகள் தவறானால் உடனே திருத்தம்
செய்யப்பட வேண்டியவை


தேவ்

வேந்தன் அரசு

unread,
Nov 15, 2013, 6:52:36 AM11/15/13
to vallamai, mintamil, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org, myla...@gmail.com, Arunachalam sivakumar, Naga Loga



14 நவம்பர், 2013 2:42 PM அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

திருவாளர் தேவ் அவர்களுக்கு 


அத்தி , அகத்தி , ஆத்தி மூன்றும் வேறுவேறு பயிரினங்கள் 

(1)  ஆத்தி  என்பது பற்றி >>>>

ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி யைப்படித் திருபீர்கள் ? 



அவரு எழுதியது ஆத்தி சூடி என்பார்கள்.

ஆத்திச்சூடி என்பது வினையால் அணையும் பெயர்

ஆத்தி சூடி என்றால் ஆத்தியை சூடி, பிறையை அணிந்து என் அவர் செய்த செயல்களை சொல்லுகிறார் அவ்வை.
 
-- 

ஒற்று வேண்டாம்னு சொன்னால் ஒப்புவார் யாரும் இல்லை


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Nov 15, 2013, 12:46:04 PM11/15/13
to vall...@googlegroups.com
மேலும் கொஞ்சம் தெளிவு படுத்த இயலுமா நூ த லோ சு  ஐயா?


என்ற சுட்டி தரும் தகவல் படி ஆத்தி – Bauhinia racemosa   

ஆனால் கொடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இருப்பது 


இது Bauhinia racemosa    அல்ல

Bauhinia variegata   அல்லது Bauhinia purpurea  


இது wiki தரும் தகவல், ஆனால் wiki தரும் இந்த தகவல் சரியா என எனக்குத் தெரியாது. 


அன்புடன்
..... தேமொழி

தேமொழி

unread,
Nov 15, 2013, 12:55:33 PM11/15/13
to vall...@googlegroups.com

ஆத்தி பற்றி மேலும் மற்றொரு விக்கி பக்கம் 
https://ta.wikipedia.org/s/l4n

seshadri sridharan

unread,
Nov 15, 2013, 8:55:03 PM11/15/13
to vall...@googlegroups.com


2013/11/15 தேமொழி <them...@yahoo.com>

இது Bauhinia racemosa    அல்ல Bauhinia variegata   அல்லது Bauhinia purpurea  


இது wiki தரும் தகவல், ஆனால் wiki தரும் இந்த தகவல் சரியா என எனக்குத் தெரியாது. 

வெள்ளை மஞ்சள் செந்நீலம் ஆகிய நிறங்களில் பூக்கள் காணப்படும்.

ஆரை, மந்தாரை, ஆத்தி என வழங்கும் பெயர்கள் ஒரே செடி இனத்தைக் குறிக்கும் பெயர்கள். இவற்றின் இலை மந்தாரை இலை போல பிளவுற்று ஒட்டினாற் போல் காணப்படும். இரு இலைகள் சேர்ந்தாற் போல் இருப்பதனால் சேர்க்கைக் கருத்தை உடைய ஆர் ஐகார பின்னொட்டு பெற்று ஆரை எனப்பட்டது. 

ஆர் > ச்+ஆர் = சார் > சார்த்து. இரு கதவுகளையும் சேர்த்து பூட்டுவதை சார்த்து என்கிறோர். ஒன்றன் மேல் ஒன்றை வைப்பதையும் சார், சார்த்து என்கிறோம். 

சேசாத்தரி

தேமொழி

unread,
Nov 15, 2013, 10:35:25 PM11/15/13
to vall...@googlegroups.com
 தகவலுக்கு மிக்க நன்றி சேசாத்திரி....

 Bauhinia racemosa   மற்றும்  Bauhinia variegata இரண்டுமே ஆத்திதானா?


..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages