270 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Mar 26, 2014, 12:15:01 AM3/26/14
to Minthamil, vallamai editor, வல்லமை, நட்புடன், தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, Anthiyuran PazamaiPesi, A K Rajagopalan, Mazalais

 

என்றதும் சென்ற ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ் சினிமா பற்றி ஏதோ எழுதப் போகிறார் இவர் என எதிர் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் அளித்திடப் போவதற்கு மன்னிக்கவும்.  நான் எழுதப் போவது ஒரிஜினல் ஈயைப் பற்றி, அதான் ஆங்கிலத்திலே டொமெஸ்டிக் ஃப்ளை (domestic fly) என்கிறார்களே அது பற்றி.  ஈக்கு விஞ்ஞான ரீதியாய் அளிக்கப் பட்ட பெயர் மஸ்கா டொமெஸ்டிகா (Musca domestica)

 

Inline image 6 


நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு ஆறு கால் ஜந்து ஈ.  ஆனால் அதனுள்ளும் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன.  அவற்றுள் நான் பார்த்து, படித்து அறிந்து கொண்ட சில விஷயங்கள் பற்றிதான் எழுத நினைக்கிறேன்.

 

உள்ளங் காலில் இருந்து உச்சந்தலை வரை உரோமங்கள் கொண்டது ஈ.  கண்ணாடி போன்ற ஒரு ஜோடி இறகுகள் உண்டு இதற்கு பறந்திட.  இதன் மற்றொரு ஜோடி இறகுகள் மிகச் சிறியதாய் பறந்திடும் போது சம நிலையில் வைத்திருக்க உதவிடும்.

 

Inline image 5

 

மனிதன், விலங்குகள், பறவைகள், பெரும்பாலான பூச்சி புழுக்கள் இவை எல்லா வற்றுக்கும் இரண்டு கண்கள் தான் இருக்கும்.  சிலந்தி வகைகளில் சிலவற்றுக்கு மூன்று ஜோடிக் கண்களும் சில வற்றுக்கு நான்கு ஜோடிக் கண்களும் இருக்கும்.  ஆனால் ஈக்களுக்கோ தும்பி போன்று ஆயிரக் கணக்கான கண்கள், இரு கூட்டமைப்பாக இருக்கும்.  இவை மனிதர்களால் காண முடியாதவற்றைக் கூடக் காண முடியும்.  உதாரணத்திற்கு ஒரு ஈ அதனைச் சுற்றி முன். பின், மேல், கீழ் என நாற் புறமும் நிகழ்ந்திடும் மிகச் சிறிய அசைவினைக் கூடக் காண முடியும்.  ஈ அடித்தவர்களுக்கு இது புரியும்! (இதிலிருந்துதான் வந்திருக்குமோ ஈ அடிச்சான் காப்பி என்பது, தன் விடைத்தாள் மட்டும் இன்றி பக்கத்து மேஜையில் இருக்கும் மற்ற மாணவர்களின் விடைத் தாள்களையும் பார்த்திட முடியுதே காப்பி அடித்திடும் மாணவனால்!)


Inline image 1

 

ஈயை அடிப்பதற்கு ஒரு ஈ அடிக்கும் மட்டையை (fly swat) வைத்துக் கொண்டு அடிப்பதை விட்டு இரண்டு மட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு அடிப்பது சுலபம் என்பவர்களும் உண்டு.  இரண்டு மட்டைகள் நகர்வதைக் கண்டு ஈ குழம்பி விடுமாம்!

 

மனிதர்களிடையே வியாதிகளைப் பரப்புவதில் முதலிடம் ஈக்களுக்குத் தான்.  இதுதான் அதன் உணவு என்றில்லாமல் எதையும் உண்ணும் ஈக்கள்.  அம்மா ஆசையாய் சமைத்து வைத்த உணவோ, இரத்தமோ, இறந்த உயிரினமோ, குப்பை கூளமோ, சாணமோ, மனித மலமோ எதுவாயினும் அது ஈக்கு உணவே.

 

ஈ தன் உணவை எப்படி உண்ணும்?  கடித்து சுவைத்து உண்ணுமா? இல்லை.  அது ஒரு பொருளின் மீது உட்கார்ந்தது அதன் மீது எச்சிலத் துப்பும்.  உணவினை ஓரளவு ஜீரணிக்கும் பலம் கொண்டது அந்த உமிழ் நீர்.  பின் ஈ அந்த எச்சிலை உரிஞ்சிவிடும்.

 

அடிக்கடி உணவினை உண்டு கொண்டிருக்கும் போதே ஈ சிறிது மலமும் கழித்திடும்.

 

சாணம், மலம், இறந்து அழுகிடும் உடல்கள், குப்பை மேடு என அசுத்தத்தின் இடையேயே வாழ்ந்திடும் ஈ தன் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அதிக நேரம் செலவழித்திடும் ஒரு பிராணி.  (மனிதர்களில் சிலர் தன் உடல் சுத்தத்திலும், அதை அழகாய் வைத்திருப்பதிலும் அதிக நேரம் செலுத்துகிறார்களே அது போலத்தான்.

 

உங்கள் வீட்டில், “போறுண்டி.  அது என்ன அறுபது நாழியும் கண்ணாடி முன்னே நின்னிண்டு அலங்காரம் பண்ணிக்கறது?  காலேஜுக்கு நாழியாச்சு.  கெளெம்பு” என்ற அம்மாவின் அதட்டல் கேட்டதுண்டா?

 

ஈயை சிறிது நேரம் கூர்ந்து பாருங்கள்.  அது அடிக்கடித் தன் கால்களால் கண்கள், இறக்கைகள், உடல் இவற்றை சுத்தம் செய்து கொண்டே இருப்பதைப் பார்க்கலாம் நீங்கள்.

 

ஈக்களின் திருமணம் ஈயாகப் பிறந்த இரண்டு நாட்களுள்!  மேலும் அன்றே முதலிரவு!  அதுவும் ஒரு முறைதான்!  ஆனால் பெண் ஈ ஆண் ஈயின் விந்துவைத் தன் உடலுள் சேமித்து வைத்துக் கொண்டு, தடவைக்கு 75 முதல் 150 வரையிலான, ஒன்று முதல் ஒன்றரை மில்லி மீடர் நீளம் கொண்ட முட்டைகளை பல முறை, சாணம், மலம், இறந்த உயிரினம் இவற்றில் இடும்.  அந்த முட்டைகளும் ஒரே நாளில் புழுக்களாக (maggots) முட்டைகளில் இருந்து வெளியே வந்து உணவு உண்ண ஆரம்பிக்கும்.  இந்த நிலையில் அவற்றுக்குக் கால்கள் கிடையாது.

 

Inline image 4

(ஈயின் குழந்தைகள் புழு வடிவிலே)

(animals:how things work தளத்தில் இருந்து)

 

ஒரு வாரத்தில் புழுக்கள் உலர்ந்த, குளிர்ச்சியான இடங்களுக்கு நகர்ந்து, கருஞ்செங்கல் நிற கூட்டுப் புழுக்களாக மாறிடும்.  பின் இந்த கூட்டுப் புழுக்கள் உடலில் மாற்றங்கள் அடைந்து சிறகு கொண்ட ஈயாக மாறி, கூட்டுக்குள் இருந்து வெளியே வந்திடும்.

 

இறக்கை முளைத்து வெளி வந்த ஈக்கள் வாழ்வது இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரைதான்.  ஆனால் அந்த ஒரு மாதத்திற்குள் மனிதனுக்கு என்ன கேடுகள் விளைக்க முடியுமோ அத்தனையும் விளைத்திடும்.  எப்படி?

 

ஈக்கள் அசுத்தமான இடங்களிலும், இறந்த மற்றும் அழுகிடும் உடல்களிலும் தங்கள் உணவைத் தேடுவதால், உண்பதால், அவற்றில் கால்களிலும் அவற்றின் உடலுள்ளும் பலவிதமான நோய்க் கிருமிகளும் இருக்கும்.  அவை நம் உணவின் மீதும் வந்து உட்காரும்.  உட்கார்ந்த உடன் எச்சிலைத் துப்பும்.  விடாது உணவு உண்டு கொண்டே இருக்குமாதலால் அவ்வப்போது சிறிது மலமும் கழிக்கும்.  . 

இப்படிப் பலவற்றையும் உண்டிட அதன் மீது அமர்வதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தன் கால்களால் கிருமிகளை பரப்புவது மட்டும் இன்றித் தன் மலத்தின் வழியேயும் வியாதிகளைப் பரப்பிடும்.  இப்போது புரிகிறாதா வியாதிகளைப் பரப்புவதில் உலகில் முதல் இடம் ஈக்களுக்கு ஏன் என்று?

 

சரி இந்த அளவு நமக்குத் தீங்கிழைக்கும் ஈக்களுக்கு எதிரிகளே இல்லையா இவ்வுலகில் என்றால் இருக்கிறார்கள் என்பேன்.

 

ஈக்களைத் தன் உணவாகக் கொண்ட சில பறவைகள் உள்ளன.  உதாரணத்துக்கு “தேனீத் தின்னி, வால் நீண்ட கருங்குருவி”.  ஈக்களையே தன் பிரதான உணவாகக் கொண்ட உயிரினம் பச்சோந்தி. இவை தவிற கூட்டுப் புழு நிலையிலேயே அவற்றைக் கொன்று தின்று அதே கூட்டினுள் தன் முட்டையை இடும் ஒரு வகைக் குளவி, என இவை எல்லாம் ஈக்களின் எதிரிகள்.

 

இதோ இந்த ஈயின் கூட்டுப் புழுக்களைப் பாருங்கள்.  ஒவ்வொன்றிலும் ஒரு சிறு துவாரம்.  அதைச் செய்தது வேறு யாரும் இல்லை.  ஒரு குளவிதான்!

 

Inline image 3

(குளவியின் வீடாய் மாறிய ஈயின் கூட்டுப் புழுக்கள்)

 

ஈக்களினால் ஏதேனும் உபயோகம்?  உண்டு.  செத்த உயிரினங்களை அழுகச் செய்து ஒரே வாரத்துள் அதனை – எலும்பு தவிற மற்ற வற்றை – உண்டு தீர்த்திடுவது ஈக்களும் அதன் புழுக்களுமே.

 

Inline image 2

(இறந்த பன்றியினை உண்டிடும் லட்சக் கணக்கான ஈயின் குழந்தைகள்)

சரி இந்த ஈக்களை உலகில் எங்கெல்லாம் காண முடியும்?  உலகில் ஈக்கள் இல்லாத இடமே இல்லை எனலாம்.  மனிதர்கள் வாழ்ந்திடும் இடங்களில் பறக்கும் பூச்சிகளில் சுமார் 90 சதவிகிதத்துக்கும் மேலானவை ஈக்கள் தானாம்.

ஈ இல்லாத இடம் இல்லை

ஈ போல் எதிரி நமக் கில்லை

என்று பாடலாமோ?

 

ஈக்களில் ஒரு வகை பச்சைப் பொன் வண்டின் நிறத்தில் இருக்கும்.  உருவத்தில் இது சாதாரண ஈயை விட சற்றே பருமனாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் “Blue bottle fly” என்பார்கள்.  இது மா மரப் பூங்கொத்துகளில் அமர்ந்து தேனைப் பருகிடும்.  சில சமயம் வீட்டிற்குள்ளும் வந்திடும் இவை.  இவ்வகை ஈயை பொன்னீ என்றும் அழைப்பதுண்டு.

 

Inline image 1

(பொன்னீ படம் விழியன் உபயம்.  மற்ற படங்கள் கூகிளார் உபயம்)


இயற்கையில் தான் எத்தனை வினோதங்கள்!

 

நடராஜன் கல்பட்டு

25-03-2014

 

 

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Natrajan Kalpattu Narasimhan

unread,
Mar 26, 2014, 10:15:38 PM3/26/14
to Minthamil, வல்லமை, vallamai editor, நட்புடன், தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, Anthiyuran PazamaiPesi, A K Rajagopalan, Mazalais


---------- Forwarded message ----------
From: Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
Date: 2014-03-27 7:22 GMT+05:30
Subject: Re: [MinTamil] Re: ஈ
To: "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com>


யைப் பற்றி அளிக்கும் னிய நகைச் சுவையோ?  ஹீ..ஈஈஈஈஈஈஈஈ......


2014-03-26 19:02 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

ஸுபாஷிணி சொல்வது போல் செய்வது நலம். இலவசம். விலை மதிப்பற்றது.
ஒரு ஜோக்:
'ஈயை அடிப்பதற்கு ஒரு ஈ அடிக்கும் மட்டையை (fly swat) வைத்துக் கொண்டு அடிப்பதை விட்டு இரண்டு மட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு அடிப்பது சுலபம் என்பவர்களும் உண்டு.  இரண்டு மட்டைகள் நகர்வதைக் கண்டு ஈ குழம்பி விடுமாம்!'
~ மட்டையை ஓங்கினார், சார்லி சாப்ளின். ஆனால் ஈயடிக்கவில்லை! ஏன் என்று கேட்டதற்கு, அந்த ஈ பறந்து விட்டது. இது வேறே ஈ என்றாராம்.



2014-03-26 2:37 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
வாசிக்கும் போதே மனம் எந்த அளவு ஈக்களை தவிர்க்க சுத்ததை பேண வேண்டும் என்ற சிந்தனையை வலுப்பெறச் செய்கின்றது.

இவ்வகைப் பதிவுகளை சிறிய பெம்ப்லெட்ஸ்களாக அச்சடித்து பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நாம் வழங்க வேண்டும் என நினைக்கின்றேன். சிறு குழந்தையாக இருக்கும் போதே சுத்தத்தின் அவசியத்தை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டியது  அவசியம். 

சுபா
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.




--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Natrajan Kalpattu Narasimhan

unread,
Mar 26, 2014, 10:18:41 PM3/26/14
to Minthamil, வல்லமை, vallamai editor, நட்புடன், தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, Anthiyuran PazamaiPesi, A K Rajagopalan, Mazalais
---------- Forwarded message ----------
From: Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
Date: 2014-03-27 7:44 GMT+05:30
Subject: Re: [நட்புடன்] ஈ
To: நட்புடன் <nadp...@googlegroups.com>



2014-03-27 1:25 GMT+05:30 Srimoorthy S <s.srim...@gmail.com>:

தேனீயும் ஈயும் ஒரே இனம்தானே தாத்ஸ்?

ஈ தேனீ இவை இரண்டுமே, தேள் , கரப்பான் பூச்சி, சிலந்திப் பூச்ச், எட்டுக்கால் பூச்சி, ஈப்புலி இவை போன்று ஒட்டுக் காலி (Arthropoda) இனம் தான்.  இத்தோடு நுடிகிறது அவற்றின் ஒற்றுமை.  ஈயின் குடும்பம்  மஸ்கிடே. (Muscidae).  தேனீயின் குடும்பம் ஏபிடே (Apidae).

தேனீ பற்றி கேட்டு விட்டீர்கள்.  அது பற்றியும் எழுதுகிறேன் இன்றே.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


தேமொழி

unread,
Mar 26, 2014, 10:31:19 PM3/26/14
to vall...@googlegroups.com, Minthamil, vallamai editor
கல்பட்டு ஐயா,

குளவி, ஈசல், கரையான், மின்மினிப்பூச்சி, பல வகை வண்டுகள், அந்துப் பூச்சி, தட்டான் (முன்னர் கொஞ்சம் கொடுத்திருந்தீர்கள்)    போன்ற பலவகை பூச்சிகளைப் பற்றியும் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். 

..... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 26, 2014, 11:00:52 PM3/26/14
to vall...@googlegroups.com, Minthamil, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com

கல்பட்டு ஐயா,

உயிரிகளைப் பற்றி எழுதும் செய்திகள் அரியன. நன்றி. நிறைய எழுதுங்கள். ரஞ்சனி சொன்னாற்போல் வலைச்சுவடி
ஏற்படுத்தியும் பதியுங்கள்.

--

ஈ என்னும் பெயர்ச்சொல் ஈர்த்தல் என்னும் வினைச்சொல்லில் இருந்து பிறக்கும். ஈ/ஈர்- இனிப்பான உணவுள்ள
இடங்கள் ஈக்கும்/ஈர்க்கும் ஈயை. ஒப்பு: (1) கோத்தல்:கோர்த்தல் - கோவை/கோர்வை
(2) கூ என்றால் கூர்மை எனப் பொருள். பென்சில் கூ (sharp edge) கூவு/கூகு என்றாகிறது. கொங்குநாட்டு வழக்கு.
(பா- பச்சை: பாகல்/பாவக்காய் போல், கூ கூகு/கூவு ‘sharp tip' (,say, of a pencil or pen). வாயைக் குவிப்பதால்
கூவு என்கிறோம். குவித்து எழுப்புவது கூக்குரல். (3) தா, வா என்னும் வினைகள் தாராய், வாராய் என ரகரம்
சேர்ந்து விரியும். அதுவே, தருக, வருக எனக் குறுகும்.

எழுத்துருவுகளால் கமுகு > க்ரமுக, பவழம் > ப்ரவால, தமிழ் > த்ரமிள/த்ரமிட என்று வடமொழியில் திரியும்.

நா. கணேசன்

பி.கு: கல்பட்டு வள்ளலார் வாழ்க்கையில் தொடர்புடைய ஊர் ஆயிற்றெ!


Natrajan Kalpattu Narasimhan

unread,
Mar 27, 2014, 3:28:53 AM3/27/14
to வல்லமை, Minthamil, vallamai editor
கல்பட்டு ஐயா,
குளவி, ஈசல், கரையான், மின்மினிப்பூச்சி, பல வகை வண்டுகள், அந்துப் பூச்சி, தட்டான் (முன்னர் கொஞ்சம் கொடுத்திருந்தீர்கள்)    போன்ற பலவகை பூச்சிகளைப் பற்றியும் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். 
..... தேமொழி 

அன்பு தேமொழி,

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.  முயற்சி செய்கிறேன்.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages