"கில்லா" ...

108 views
Skip to first unread message

rajam

unread,
Feb 24, 2021, 11:44:50 PM2/24/21
to tamilmantram, vallamai, mintamil
நண்பர்களே, வணக்கம்.

நான் ‘வாட்சப்’ போன்ற குழுமங்களில் இல்லை. எனக்காக … ஒரு சொல்லைப் பற்றிக் கேட்டறிய முடிந்தால் அறிந்து சொல்லவும்.

அந்தச் சொல் ‘கில்லா.’ சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் காணப்படுகிறது. அதைப்பற்றி இணையக் குழுமங்கள் என்ன சொல்கின்றன என்று அறிய ஆவல்.

[தற்குறிப்பு: நெடுங்கால முன்பு ... இதைப் பற்றித் தமிழாய்வாளர் கமில் சுவலெபில் அவர்களிடம் கேட்டேன், விடையே கிடைக்கவில்லை. :-( ]

நன்றி,
ராஜம்

Jean-Luc Chevillard

unread,
Feb 25, 2021, 2:00:40 AM2/25/21
to tamil...@googlegroups.com, vallamai, mintamil
Greetings

"விடவும் கில்லேன்"

Tēvāram 4:36__2

போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;---நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்---குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்---பழனத்து எம் பரமனாரே.

-- jlc (in Müssen)

https://twitter.com/JLC1956

N. Ganesan

unread,
Feb 25, 2021, 5:32:21 AM2/25/21
to வல்லமை
On Thursday, February 25, 2021 at 1:00:40 AM UTC-6 jeanluc.c...@gmail.com wrote:
Greetings

"விடவும் கில்லேன்"

Tēvāram 4:36__2

போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;---நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்---குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்---பழனத்து எம் பரமனாரே.

முன்பு மு. இராகவயைங்கார் எழுதியதைப் படித்துள்ளேன். CTamil-ல் பேசியுள்ளோம்.

கில்- :: கில்+து = கின்று எனவும் வரும். உ-ம்: நடக்கின்றது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 25, 2021, 9:05:05 AM2/25/21
to vallamai

முன்பு குழுக்களில் எழுதியன தொகுக்கலாம். 19, 20-ம் நூற்றாண்டு நூல்களினின்றும்.
நிகழ்காலம் காட்டும் இடைநிலை: கிறு/கின்று (நன்னூல்).
நல்+து+மணம் = நறுமணம், சில்+து+குருவி = சிறுகுருவி, .... போல,
கில்+து = கிறு, கின்று. வருகிறான், செல்கின்றேன், நடக்கிற்பன், ....
சொல்கிலேன், ...

நா. கணேசன்
 
-- jlc (in Müssen)

https://twitter.com/JLC1956

On 25/02/2021 05:44, rajam wrote:
நண்பர்களே, வணக்கம்.

நான் ‘வாட்சப்’ போன்ற குழுமங்களில் இல்லை. எனக்காக … ஒரு சொல்லைப் பற்றிக் கேட்டறிய முடிந்தால் அறிந்து சொல்லவும்.

அந்தச் சொல் ‘கில்லா.’ சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் காணப்படுகிறது. அதைப்பற்றி இணையக் குழுமங்கள் என்ன சொல்கின்றன என்று அறிய ஆவல். 

[தற்குறிப்பு: நெடுங்கால முன்பு ... இதைப் பற்றித் தமிழாய்வாளர் கமில் சுவலெபில் அவர்களிடம் கேட்டேன், விடையே கிடைக்கவில்லை. :-( ]

நன்றி,
ராஜம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/2138739a-4555-4f09-8a0b-690118c2ccd8n%40googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Feb 25, 2021, 1:40:00 PM2/25/21
to தமிழ் மன்றம், vallamai

மிக்க நன்றி இழான் (Jean-Luc).

கில்-கில்-தல், கிற்றல் என்பதைப் பார்த்திருக்கின்றேன். செய்யகில்லேன் என்று

நானே சில இடங்களில் பயன்படுத்தியும் உள்ளேன்.  இது நன்கு அறிந்த

சொல்லாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் இசானபோர்டு இசுட்டீவர்

(Sanford Steever) இந்தக் ‘கில்’ என்னும் சொல்லைப்பற்றி புதிய கண்டுபிடிப்பாக

எழுதியதைப் பார்த்து சற்று அதிர்ச்சியுற்றேன். 

இதைபற்றி அப்பொழுதே எழுதவேண்டுமென்று நினைத்தேன்.

தமிழ்ப்பேரகராதி தெளிவாக, கில்-தல், கிற்றல் பற்றிக் கூறுகின்றது:

கில்¹-தல் [கிற்றல்] kil- , 10 v. intr. To be able; ஆற்றல்கொள்ளுதல். கிற்பன் கில்லேன் (திவ். திருவாய். 3, 2, 6).

கில்²
 kil
 , part. Verbal infix indicating ability; ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெம்ப வரு கிற்பதன்று கூற்ற நம்மேல் (தேவா. 1229, 2).

கம்ப இராமாயணத்திலே பல இடங்களில் வருகின்றது இச்சொல். 

“துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்” என்று ஈரிடங்களில் வருகின்றது.

அன்புடன்

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/be8c76b9-7b52-627b-f7f4-36c9eb6aa42c%40gmail.com.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

rajam

unread,
Feb 25, 2021, 5:25:57 PM2/25/21
to tamil...@googlegroups.com, vallamai
வணக்கம். தங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி, நண்பர்களே. 

என் துழவு / துழாவுதல் … கில்லா என்ற அடிச்சொல்லைப் (root/stem) பற்றி; கில் என்ற இடைச்சொல்லையோ / இடைநிலையையோ (infix) பற்றியதன்று. 

சங்க இலக்கியத்துக்குப் பிற்கால இலக்கியங்களில் ‘-கில்’ என்ற சொல்லின் ஆட்சி பற்றி அறிவேன். 

பிற்கால அகராதிகள் … ???  நான் அகராதிகளை நம்பி என் ஆய்வைச் செய்வதில்லை. 

அப்படியே, கையோடு கையாக … பரிபாடல் 12 -ஐயும் பார்த்துவிடவும். 
[தற்குறிப்பு: இது இக்கால இணையத் தமிழரின் கூச்சலை விவரிப்பது-போலவே இருக்கும்! :-) ]

நன்றி,
ராஜம் 

kanmani tamil

unread,
Feb 25, 2021, 11:21:14 PM2/25/21
to vallamai, rajam ramamurti
நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன் அம்மா. 

உங்கள் தற்குறிப்பு... 😆 பாடலோடு ஒப்பிட்டு ரசித்தேன்.

என் தாழ்மையான கருத்து இது தான்...

சங்க காலத்திற்குப் பிற்பட்ட மதுரைப் பேச்சு வழக்கில் அமைந்துள்ள பாடல் இது.... 
'கில்லா'   ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்ச வடிவமாகத் தோன்றுகிறது. 

"அவை கில்லா கேள்வி கேட்டன சிலசில"    = 'அவை முழுவதுமாகக் கேட்க இயலாதவை; கேட்கப் பட்டவை சிலவே' என்பது இக்காலத் தமிழ். 

பெருமழைப் புலவரின் உரை பரிமேலழகரின் பழையவுரையை அடியொட்டியே  'கூடா' என்று அமைந்து உள்ளது. 
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/B546168F-A962-42E5-9528-E6D8AC564701%40earthlink.net.

kanmani tamil

unread,
Feb 25, 2021, 11:47:20 PM2/25/21
to vallamai, rajam ramamurti
' சொல்ல இயலாதவை ' என்று பொருள் கொண்டாலும் பொருத்தமாகத் தான் இருக்கிறது. 
சக 

N. Ganesan

unread,
Feb 26, 2021, 12:07:43 AM2/26/21
to வல்லமை
On Thursday, February 25, 2021 at 10:47:20 PM UTC-6 kanmani...@gmail.com wrote:
' சொல்ல இயலாதவை ' என்று பொருள் கொண்டாலும் பொருத்தமாகத் தான் இருக்கிறது. 

சொல்ல முடியாதவை. பரிமேலழகர் உரை.

N. Ganesan

unread,
Feb 26, 2021, 12:40:23 AM2/26/21
to vallamai
On Thu, Feb 25, 2021 at 1:00 AM Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
Greetings

"விடவும் கில்லேன்"

Tēvāram 4:36__2

போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;---நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்---குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்---பழனத்து எம் பரமனாரே.

I saw another nice example from NammAzvAr' TiruvAymozi. Among the two decads that I like most (1) A decad where describes the Great tradition vs. Little tradition of Indian religions (2) Gopis' pining for Krushna, the phalasruti has "killA". kil- 'able' < kiL-/kiT- as in kiTAy/kiTIr etc., in post-Sangam poetry. We use aakiTum, aakaTTum (in today's Tamil). kil- 'able' (< kiL/kiT/kiR-); killA 'unable' (paripATal, and also in NammAzvAr). Here the pAsuram: (ARRa-killA = ARRa-k-kUTA or ARRA-muTiyA).
திருவாய்மொழி:
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே
https://thiruvonum.wordpress.com/2014/02/14/திருவாய்மொழி-வியாக்யான-541/
ஆற்ற கில்லா = ஆற்ற முடியா/கூடா.
 
-- jlc (in Müssen)

https://twitter.com/JLC1956

On 25/02/2021 05:44, rajam wrote:
நண்பர்களே, வணக்கம்.

நான் ‘வாட்சப்’ போன்ற குழுமங்களில் இல்லை. எனக்காக … ஒரு சொல்லைப் பற்றிக் கேட்டறிய முடிந்தால் அறிந்து சொல்லவும்.

அந்தச் சொல் ‘கில்லா.’ சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் காணப்படுகிறது. அதைப்பற்றி இணையக் குழுமங்கள் என்ன சொல்கின்றன என்று அறிய ஆவல். 

[தற்குறிப்பு: நெடுங்கால முன்பு ... இதைப் பற்றித் தமிழாய்வாளர் கமில் சுவலெபில் அவர்களிடம் கேட்டேன், விடையே கிடைக்கவில்லை. :-( ]

நன்றி,
ராஜம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Virus-free. www.avg.com

Jean-Luc Chevillard

unread,
Feb 26, 2021, 2:37:21 AM2/26/21
to tamil...@googlegroups.com, vallamai
Dear VSR,

in case you (or other members of the list) are interested to know how François Gros translated in 1968 into French the passage which you are referring to, here is his French translation:

«Les mots que disent ceux qui se tiennent en rangs serrés sur le bord de la rive,
Nombreux et confus, s'élèvent à la fois.
Qui peut les comprendre et les écouter tous ? C'est impossible!
Quelques-uns seulement ont été perceptibles à nos oreilles.»
(François Gros, 1968, page 82)

முன்றுறை நிறையணி நின்றவர் மொழிமொழி
ஒன்றல பலபல வுடனெழுந் தன்றவை
எல்லாந் தெரியக் கேட்குநர் யாரவை

கில்லா கேள்வி கேட்டன சிலசில

((PARI 12, lines 36-39))

Best wishes

-- Jean-Luc (in Müssen)

https://twitter.com/JLC1956

N. Ganesan

unread,
Feb 26, 2021, 2:54:17 AM2/26/21
to vallamai
On Fri, Feb 26, 2021 at 1:37 AM Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
Dear VSR,

in case you (or other members of the list) are interested to know how François Gros translated in 1968 into French the passage which you are referring to, here is his French translation:

«Les mots que disent ceux qui se tiennent en rangs serrés sur le bord de la rive,
Nombreux et confus, s'élèvent à la fois.
Qui peut les comprendre et les écouter tous ? C'est impossible!
Quelques-uns seulement ont été perceptibles à nos oreilles.»
(François Gros, 1968, page 82)

Google translates,
"The words of those who stand in tight rows on the edge of the shore, Many and confused, rise at the same time. Who can understand and listen to them all? It's impossible! Only a few were perceptible to our ears. ”

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/d5d0be60-3fc2-5f17-d655-bab5e188fe7a%40gmail.com.

Virus-free. www.avg.com

C.R. Selvakumar

unread,
Feb 26, 2021, 8:24:19 AM2/26/21
to தமிழ் மன்றம், vallamai

அம்மையீர்,

வணக்கம்.

கில்லா என்பதை “கூடா” என்னும் பொருளில பொ.வே. சோமசுந்தரனார் ஆண்டுள்ளார்

பரிபாடல் - உரை பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு பக் 268-9 

….துறை

முன்றுறை நிறையணி நின்றவர் மொழிமொழி

ஒன்றல பலபல வுடனெழுந் தன்றவை

எல்லாந் தெரியக் கேட்குநர் யாரவை

கில்லா கேள்வி கேட்டன சிலசில

என்னும் வரிகளுக்கு

துறை முன்றுறை நிறையணி மொழிமொழி - அப்பொழுது அவ் வையையின்கண் நீராடுந் துறையின்

முன் நிறைந்த அணி அணியாக நின்ற மாந்தர் மொழிகின்ற மொழிகள்.

ஒன்றல பலபல உடனெழுந்தன்று - ஒன்றையொன்று ஒவ்வாது பலபலவாக ஒருகாலத்தெழுந்தன.

யாரவை எல்லாம் தெரிய கேட்குநர்- யாரே அம்மொழிகளை எல்லாம் பொருள்விளங்கக் கேட்க

வல்லார்.

கில்லா - அவை கேட்டல் கூடா

கேட்டன சிலசில - எம்மாற் கேட்கப்பட்டன ஒருசிலவேயாம்

என்று விளக்கம் தருகின்றார்.

.

இது பற்றிய என் கருத்துகள்: 

 கில்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்று நினைக்கின்றேன்.

எனவே கில் என்பது அடிச்சொல் என்று கருதுகின்றேன். இதன் பொருள் இயலுதல், (ஒன்றைச் செய்யும் வல்லமை கொண்டிருத்தல்). இப்பொருள் இப்பாட்டில் முற்றிலும் பொருந்துவதாகவே கருதுகின்றேன்.
பொ.வே.சோ அவர்கள்
கூறும் “கூடா”: என்பது ‘சேராத, முடியாத, செய்ய இயலாத (நடைபெறாத, நடைபெற இயலாத) என்னும்

பொருளில் ஆண்டுள்ளார் என்று கருதுகின்றேன். 

அன்புடன்

செல்வா

rajam

unread,
Feb 26, 2021, 2:41:48 PM2/26/21
to tamil...@googlegroups.com, vallamai, kanmani tamil, C.R. Selvakumar
வணக்கம் செல்வா. பதிவுக்கு மிக்க நன்றி. 

உங்களைப் போலவே கண்மணி அவர்களும் ‘கில்லா’ என்பதை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

அதைப் பற்றி இன்னும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். 

நானறிந்த ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களைத் தொடர்ந்து வல்லின மெய்களில் தொடங்கும் பெயர்ச்சொற்கள் வரும்போது, அந்தத் தொடக்க வல்லினம் அந்த ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் ஈற்றில் மிகும். 

இங்கே, பரிபாடல் 12-இல் காணும் கில்லா என்பதை அடுத்து வருவது கேள்வி என்ற சொல். கில்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமானால் … நமக்குக் கிடைத்திருக்கும் தொடர் *கில்லாக் கேள்வி என்று இருக்க வேண்டும்.

எனவே அதைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி,
ராஜம் 

C.R. Selvakumar

unread,
Feb 26, 2021, 3:38:22 PM2/26/21
to rajam, தமிழ் மன்றம், vallamai, kanmani tamil

நானும் வலிமிகுந்திருக்கவேண்டுமே என்று நினைத்தேன்.

ஏன் அப்படி மிகவில்லை (ஏதும் எழுத்துப்பிழையா அல்லது

வேறு ஏதேனும் காரணம் பற்றியா) என்று தெரியவில்லை.

அன்புடன்

செல்வா

rajam

unread,
Feb 26, 2021, 3:47:13 PM2/26/21
to C.R. Selvakumar, தமிழ் மன்றம், vallamai, kanmani tamil
தேடுவோம். தேடுங்கள் கிடைக்குமென்றார்! ஆராய்வோம் நம் அறிவுக்கு எட்டிய அளவில்! 

kanmani tamil

unread,
Feb 27, 2021, 9:59:49 PM2/27/21
to rajam, vallamai
பரிபாடலின் பிற்பட்ட தன்மையும் வட்டார வழக்கும் அவ்வளவு எளிதாக ஒதுக்கி விடக் கூடியவை அல்லவே. 

இப்பயன்பாடு கி.பி.4லிருந்தோ; அல்லது அதற்கும் பிற்பட்டோ மதுரை மக்களின் பேச்சு வழக்காக இருந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம். 

ஒரு கட்டுரைக்காகத் தயார் செய்த இரண்டு tableகளிலும்; பரிபாடலும் கலித்தொகையும் மட்டும் தனித்து நிற்பதைக் கண்டுள்ளேன். அதனால் தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. 
சக 

On Sun, 28 Feb 2021, 8:17 am rajam, <ra...@earthlink.net> wrote:

On Feb 27, 2021, at 1:33 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

அம்மா, 
இந்த ஒற்று மிகும் என்ற இலக்கணம் பேச்சுத்தமிழைக் கட்டுப்படுத்த இயலுமா?
சக 

இயலாது, கண்மணி. 
நமக்குக் கிடைத்திருக்கும் முதல் இலக்கணமாகிய தொல்காப்பியமே “வழக்கும் செய்யுளும் நாடிச்” செய்யப்பட்டதாகத் தானே அறிகிறோம். அந்நூலிலும் வழக்கு, செய்யுள் பற்றிய குறிப்புகள் உண்டே.

அன்புடன்,
ராஜம் 

rajam

unread,
Feb 27, 2021, 10:43:00 PM2/27/21
to kanmani tamil, vallamai
/// பரிபாடலின் பிற்பட்ட தன்மையும் வட்டார வழக்கும் அவ்வளவு எளிதாக ஒதுக்கி விடக் கூடியவை அல்லவே.///

பிற்பட்ட தன்மை பற்றியும் வட்டார வழக்குப் பற்றியும் நான் ஆராய்ந்ததில்லை.   

முதலில் ‘வட்டாரம்’ என்றால் எது என்று வரைந்துகொள்ளவேண்டும். அதுவே எனக்குக் குழப்பம்! 

பரிபாடலும் கலித்தொகையும் பிற சங்க இலக்கியப் பாடல்களிலிருந்து வேறுபட்டுக் காண்பது உண்மை. கலித்தொகையில் காணும் சில சொற்களின் கட்டமைப்பு குறுந்தொகையில் காணும் சில சொற்களிலும் காணப்படுகின்றன. அவையெல்லாம் யாப்புக்காக என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். 

காலம் பற்றி? … எனக்கு அதைக் குடையும் அறிவும் வல்லமையும் இல்லை! 

[தற்குறிப்பு: நான் மொழியியல் படிக்கத் தொடங்கிய காலத்தில் … சண்முகம் பிள்ளை, நீதிவாணன், விஜய வேணுகோபால் போன்றவர்கள் … dialectology என்றசொல்லைப் புழங்கத் தொடங்கினார்கள். நீதிவாணன் அவர்கள் தம் முனைவர் படிப்புக்கான ஆய்வை இந்த வட்டார வழக்குப் பற்றித்தான் செய்தார் என்று நினைவு. ]

kanmani tamil

unread,
Mar 2, 2021, 11:51:09 PM3/2/21
to rajam, vallamai
பரிபாடலின் பாடுபொருள் அனைத்தும் வையை, திருப்பரங்குன்றத்து முருகன், அழகர்மலைப் பெருமாள் என்று மதுரையைச் சுற்றியுள்ள இடங்கள் தாமே.
பாடிய புலவர்களும் அவற்றை நேரில் கண்டு எழுதியதாகத் தானே இருக்கிறது.
வட்டாரத்தை வரையறை செய்வதில் சிக்கல் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை .

காலம் பற்றி நான் கொண்ட கொள்கைக்குக் காரணம் முருகனை அழைக்கும் முறை .
மிகத் தெளிவாக வேறுபாடு உள்ளது. ஒரு கட்டுரைக்காக நான் அட்டவணைப்படுத்திய போது கண்டேன். இன்னொரு அட்டவணையும் வரையறுத்துப் பார்த்த நினைவு உள்ளது. தேடி எடுக்க வேண்டும். 

ஒரு ஐயம் ... தொகையிலக்கியம் யாப்புக்காகப் பாடப்பட்டது இல்லையே...  என்னுடைய புரிதல் அப்படி ...
ஆசிரியப்பாவாக இருந்தாலும் இடையிடையே வஞ்சி அடிகள் விரவி வரும். காரணம் ? 
வாய்மொழித்தன்மை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு யாப்பில் அவ்வளவாகப் பயிற்சி கிடையாது அம்மா.

இந்த மடல் எழுத முக்கிய காரணம் ...
சில மாதங்களுக்கு முன் பாரிமகளிர் வயது பற்றி இந்தாலஜி குழுமத்தில் நிகழ்ந்த உரையாடல் குறித்து ஐயம் எழுப்பி இருந்தீர்கள்... அவர்கள் இருவரும் 10+ வயதினர் தாமே ?! எப்படிப் பாடியிருக்க முடியும் என்றெல்லாம் ....

ஒரு கட்டுரைக்காக மகட்பாற்காஞ்சிப் பாடல்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்.
வேந்தர் அடாவடித்தனமாகக் கேட்கும் பெண்கள் எல்லோரும் 10+ வயதினர் இல்லை. 

குன்றிமணிகளின் வண்ணத்தில் மயங்கி; ஓடிஓடிப் பொறுக்கி விளையாடும் பெதும்பைப் பருவத்துப் பெண்- புறம்.340.

தன் கையில் பாலை எடுத்துக் கொண்டு உண்ணச் சொல்லித் தாய் வற்புறுத்தக் கூடிய இளம்பெண்- புறம்.346.   

‘கோங்கின்முகை வனப்புஏந்திய முற்றாஇளமுலைத் தகை’- பதின்மவயதுப்பெண்-புறம்.336.

புறம்345- ‘நெருங்கல் வெம்முலை மையல் நோக்கு’ உடையவள்- மங்கைப் பருவத்தினள். 

அதிலும் அந்தப் பெண்ணின் பார்வையில் 'மையல்' உள்ளது... திட்டவட்டமாக மங்கைப் பருவத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பவள். ஏனெனில் 'நெருங்கல் வெம்முலை' கொண்டவள். பாரிமகளிர்க்கு 10+ வயது என்று சொல்ல இயலாது. இப்படியும் இருக்கலாம் அல்லவா?!

இதை உங்கள் இந்தாலஜி குழுமத்தில் பேசப் பயன்படுத்தலாமே.
சக  

rajam

unread,
Mar 5, 2021, 11:00:21 PM3/5/21
to kanmani tamil, vallamai
என் கருத்துகள் கீழே இடைச்செருகலாக … 

On Mar 2, 2021, at 8:50 PM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

பரிபாடலின் பாடுபொருள் அனைத்தும் வையை, திருப்பரங்குன்றத்து முருகன், அழகர்மலைப் பெருமாள் என்று மதுரையைச் சுற்றியுள்ள இடங்கள் தாமே.
பாடிய புலவர்களும் அவற்றை நேரில் கண்டு எழுதியதாகத் தானே இருக்கிறது.
வட்டாரத்தை வரையறை செய்வதில் சிக்கல் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை . 

மதுரை-வட்டாரம் என்று எடுத்துகொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அப்படியா? 

மொழியியலில் standard language, dialects என்று படித்த நினைவு. அதைப் புரிந்துகொள்ளத்தான் முயல்கிறேன். 
மதுரை மொழி (standard language) … சுற்றியுள்ள பரங்குன்றம், அழகர்மலை, வையைப் பகுதிகளில் வழங்கிய மொழி (dialects) … என்று பிரித்தெடுத்துப் புரிந்துகொள்ள வேண்டுமா? இங்கேதான் என் குழப்பம். அதனால்தான் அந்த வகை ஆய்வில் நுழைந்ததேயில்லை.  

காலம் பற்றி நான் கொண்ட கொள்கைக்குக் காரணம் முருகனை அழைக்கும் முறை .
மிகத் தெளிவாக வேறுபாடு உள்ளது. ஒரு கட்டுரைக்காக நான் அட்டவணைப்படுத்திய போது கண்டேன். இன்னொரு அட்டவணையும் வரையறுத்துப் பார்த்த நினைவு உள்ளது. தேடி எடுக்க வேண்டும். 

ஒரு ஐயம் ... தொகையிலக்கியம் யாப்புக்காகப் பாடப்பட்டது இல்லையே...  என்னுடைய புரிதல் அப்படி … 

தொகையிலக்கியம் யாப்புக்காகப் பாடப்பட்டதோ இல்லையோ …  பாடல்கள் ஆசிரியம், வஞ்சி, கலி யாப்புகளைப் பின்பற்றி அமைந்தவையாகவே எனக்குத் தென்படுகின்றன. 

ஆசிரியப்பாவாக இருந்தாலும் இடையிடையே வஞ்சி அடிகள் விரவி வரும். காரணம் ?  

காரணம் எனக்குத் தெரியாது, கண்மணி. ஆசிரியத்தில் வஞ்சியும், கலியில் வெண்பாவும் விரவுவது இயற்கை என்று தொல்காப்பியத்தில் படித்த நினைவு. 

வாய்மொழித்தன்மை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு யாப்பில் அவ்வளவாகப் பயிற்சி கிடையாது அம்மா.

இந்த மடல் எழுத முக்கிய காரணம் ...
சில மாதங்களுக்கு முன் பாரிமகளிர் வயது பற்றி இந்தாலஜி குழுமத்தில் நிகழ்ந்த உரையாடல் குறித்து ஐயம் எழுப்பி இருந்தீர்கள்... அவர்கள் இருவரும் 10+ வயதினர் தாமே ?! எப்படிப் பாடியிருக்க முடியும் என்றெல்லாம் …. 

அது என் ஐயமில்லை, கண்மணி. வேறொரு பேராசிரியரின் கருத்தாக நான் அறிந்தது. 

ஒரு கட்டுரைக்காக மகட்பாற்காஞ்சிப் பாடல்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்.
வேந்தர் அடாவடித்தனமாகக் கேட்கும் பெண்கள் எல்லோரும் 10+ வயதினர் இல்லை. 
குன்றிமணிகளின் வண்ணத்தில் மயங்கி; ஓடிஓடிப் பொறுக்கி விளையாடும் பெதும்பைப் பருவத்துப் பெண்- புறம்.340.
தன் கையில் பாலை எடுத்துக் கொண்டு உண்ணச் சொல்லித் தாய் வற்புறுத்தக் கூடிய இளம்பெண்- புறம்.346.   
‘கோங்கின்முகை வனப்புஏந்திய முற்றாஇளமுலைத் தகை’- பதின்மவயதுப்பெண்-புறம்.336.
புறம்345- ‘நெருங்கல் வெம்முலை மையல் நோக்கு’ உடையவள்- மங்கைப் பருவத்தினள். 
அதிலும் அந்தப் பெண்ணின் பார்வையில் 'மையல்' உள்ளது... திட்டவட்டமாக மங்கைப் பருவத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பவள். ஏனெனில் 'நெருங்கல் வெம்முலை' கொண்டவள். பாரிமகளிர்க்கு 10+ வயது என்று சொல்ல இயலாது. இப்படியும் இருக்கலாம் அல்லவா?!

இதை உங்கள் இந்தாலஜி குழுமத்தில் பேசப் பயன்படுத்தலாமே.  

ஆ!  அது என் இந்தாலஜிக்குழுமம் இல்லை, கண்மணி. 30-ஆண்டுகளுக்குமுன் ஓர் ஐரோப்பியர் தொடங்கி நடத்திவரும் ஒரு குழுமம். உறுப்பினரில் தமிழரின் தொகை மிகக்குறைவு. அங்கே உங்கள் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் செய்கிறேன். நன்றி. 

ராஜம் 
Reply all
Reply to author
Forward
0 new messages