தமிழை ஆண்டாள்

327 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 10, 2018, 9:26:09 AM1/10/18
to செல்வன்
இதில் உண்மையில் வெளியே வரும் விசயம் என்னவெனில் பல்கலைகழகங்களின் ஆய்வுகள் நடக்கும் லட்சணம்தான்.

ஆண்டாள் என ஒருவர் உண்மையிலேயே இருந்தாரா, வரலாற்றுகதாபாத்திரமா என்பதற்கே கர்ணபரம்பரை கதைகளும் அவர் பெயரில் உள்ள பாடல்களும் தான் ஆதாரம் எனும் நிலையில் அவரது பாடல்களை தன் மேற்கத்திய மனோநிலையில் கேட்டு, மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடுவதுபோல ஆண்டாள் தேவதாசியாக தான் இருந்திருக்கவேண்டும் எனும் தன் யூகத்தையே ஆராய்ச்சி ஆக்கி, அதை பதிப்பித்தும் வைத்த ஆய்வாளர்களை நாம் குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஏனெனில் ஆராய்ச்சிகளின் லட்சணம் அந்த அழகில் தான் இருக்கிறது. பி.எச்.டி படித்துவிட்டால் அவர் ஒரு அறிஞர், மேதாவி எனும் நம் நினைப்பும் கூட அதிலும் வெள்ளைத்தோலும் கூட இருந்தால் அவருக்கு ஒரு கோயிலே கட்டிவிடவும் நாம் தயாராக தான் இருக்கிறோம்.

இந்தியாவை பற்றி எதுவுமே தெரியாத இவர்களின் ஆய்வுகளை இந்தியர்கள் தலைமேல் ஏற்றிக்கொன்டு சுமக்கும் கலோனிய மனோபாவம் தான் இதில் கவனத்துக்கு உரியது. இந்தியாவை பற்றிய ஆய்வுகளை இந்தியர்கள் செய்வதே பொருந்தும்

--

செல்வன்

Theetharappan R

unread,
Jan 10, 2018, 9:58:36 AM1/10/18
to vall...@googlegroups.com
நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளார்கள். நதிகளாலும் ரிஷிகளாலும் நாம் அடைந்து 
கொண்டிருக்கும் நன்மைகளை மட்டுமே எண்ணிப் பார்க்கவேண்டும். அதே போல் கவி (கவிஞர்கள் ) மூலமும் பார்க்கக்கூடாது என்பது 
ரசிகமணி டி கே சி அவர்களின் கருத்து. கம்பரைப் பற்றி   சிலர்  ஜாதி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த போது, " கம்பர் உலகத்திலேயே 
தலை சிறந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பது உண்மை! அதாவது, அவர் கவிச்சக்கரவர்த்தி ஜாதி! காளிதாசர்,தாகூர், ஷேக்ஸ்பியர், ஹோமர் போன்றவர்களுடைய ஜாதி தான் கம்பர் ஜாதி " என்று ' கம்பரும் தமிழரும் ' என்ற கட்டுரையில் எழுதியுள்ளார்." ஆண்டாள் 
தமிழால் நம்மையும் ஆளுகிறாள் " என்றும் 1948 ஆண்டு கல்கி தீபாவளி மலரில் எழுதியுள்ளார் ரசிகமணி.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

AnnaKannan K

unread,
Jan 10, 2018, 11:48:51 AM1/10/18
to Vallamai
சிறுபிள்ளைகள் விளையாட்டில் யாரோ, யாரையோ கிள்ளிவிடுவார்கள். யார் என்று கேட்டால், ஒவ்வொருவரும் இன்னொருவரைச் சுட்டிக் காட்டித் தப்பிக்கப் பார்ப்பார்கள். வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையிலும் இதே தான் நடக்கிறது. தினமணியைக் கேட்டால், வைரமுத்துவைக் காட்டும். வைரமுத்துவைக் கேட்டால் இண்டியானா ஆய்வு என்பார். ஆனால், அது இந்திய ஆய்வுதான். அந்த ஆய்வாளரைக் கேட்டால், அவர் இன்னொருவரைக் கை காட்டுவார். அந்த இன்னொருவரும் வேறு ஒருவரைக் காட்டுவார். கடைசியில், யாரோ ஒருவரின் அடிப்படையில்லாத கருத்து அல்லது கணிப்பு என்பது வெளிப்படை.

மேலும், சரியான சான்றுகள் இல்லாதது, ஓர் ஆய்வே இல்லை. வெறும் கருத்தே. அந்தக் கருத்தை யாரும் கூறலாம். பேராசிரியர் கூறினால், அதற்குத் தனி மதிப்பு ஏதும் இல்லை. எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

ஆண்டாளைத் தேவதாசி என்று கூறியது தவறு எனக் கண்டனம் எழுப்பினால், இப்போது பலரும் தேவதாசிகளின் வரலாற்றையும் அருமை பெருமைகளையும் அவர்களை ஒழித்த அரசாளர்களையும் பற்றி எழுதி வருகிறார்கள். இது, பேசுபொருளைத் திசை திருப்பும் செயலாகும்.

மேலும் சிலர், வைரமுத்துவின் கருத்துரிமை என்று வேறு பேசுகிறார்கள். கேட்கவே நாராசமாக இருக்கிறது. இந்தக் கருத்துரிமையை வேறு மதங்களில் இவர்கள் காட்டிவிட முடியுமா? இந்து மதத்தைப் பற்றியும் அதன் பெரியோரைப் பற்றி, யாரும் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று நினைப்பவர்கள் திருந்த வேண்டும்.

அடுத்து, கண்டனம் தெரிவிப்பவர்களை எதிர்த்து முழங்குவோர். காவிகள், டவுசர்கள், பார்ப்பனர்கள் என வழக்கமான முத்திரைகளோடு, வைரமுத்துவுக்கு முட்டுக் கொடுக்க வருகிறார்கள். தவறைத் தவறென்று ஒப்புக்கொண்டு வருந்தி மன்னிப்புக் கேட்பது, சரியான நெறி. இதனை வைரமுத்துவும் செய்திருக்கிறார். தினமணியும் செய்திருக்கிறது. ஆயினும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை, பக்தர்களுக்கும் உணர்வாளர்களுக்கும் உண்டு. இவற்றை வினைக்கான எதிர்வினை என்ற அளவில் பார்ப்பது முறை. நியூட்டனின் மூன்றாம் விதியும் இதைத்தான் சொல்கிறது.

தரவுகளைப் பயன்படுத்துகையில் அவற்றின் நம்பகத் தன்மையை அலசி ஆராய்வது, ஆய்வாளரின் முதல் கடமை. வார்த்தை அலங்காரத்தை விட, உண்மை அதில் சுடர்விட வேண்டும். வைரமுத்து இதனை உள்ளபடியே உணர வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க.

வேந்தன் அரசு

unread,
Jan 10, 2018, 7:16:26 PM1/10/18
to vallamai
<இந்தக் கருத்துரிமையை வேறு மதங்களில் இவர்கள் காட்டிவிட முடியுமா? > காட்டிவிட்டால்?

10 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:48 அன்று, AnnaKannan K <annak...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

AnnaKannan K

unread,
Jan 10, 2018, 10:27:05 PM1/10/18
to Vallamai
காட்ட முடியாது என்பதே நிதர்சனம். காட்டிவிட்டால், என்ன நடக்கும் எனக் கேரளாவில் காட்டியிருக்கிறார்கள்.

seshadri sridharan

unread,
Jan 10, 2018, 11:14:05 PM1/10/18
to vall...@googlegroups.com
சோழன் இராசராசன் தான் தேவரடியார் (ஆண்/பெண்) முறையை முதன் முறையாக கோவில்களில்
அறிமுகப்படுத்தினான். ஆண்டாள் இராசராசனுக்கு 150-200 ஆண்டுகள் மூத்தவள். எனவே
தேவரடியார் முறையே இல்லாத போது ஆண்டாளை தேவரடியார் என்பது பிழைபட்ட கருத்து.
தேவரடியார் தேவடியாள் ஆனது விசயநகர ஆட்சிக் காலத்தில். எப்படிப் பார்த்தாலும்
வைரமுத்துவின் கருத்து போலியானது,
>>> email to vallamai+u...@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>
>>
>>
>> --
>> வேந்தன் அரசு
>> வள்ளுவம் என் சமயம்
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to vallamai+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jan 10, 2018, 11:24:22 PM1/10/18
to vall...@googlegroups.com
ஊரெல்லாம் இதே தான் பேச்சு.
எங்கு பார்த்தாலும் காச்சுமூச்சு.
காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்.
இதெல்லெ என்ன வேண்டிருக்குக் கொஞ்சல்!
இன்னம்பூரான்


Tthamizth Tthenee

unread,
Jan 10, 2018, 11:51:39 PM1/10/18
to vall...@googlegroups.com
​வைரமுத்து கெட்டிக் கார வியாபாரி   தற்போது ஆண்டாளைப் பற்றிய  கருத்தை சொல்லி  அதையே விளம்பரமாகவும் வியாபாரமாகவும் செய்து கொண்டிருக்கிறார்    தாசி வழி வந்தவர்க்கெல்லாம்  ஆண்டாளை  தாயாக எண்ண மனம் வருமா    அவரவர் வந்த  வழியே  அவரவர்  சிந்தனை போகும்   பூமா தேவியான தாயார் ஆண்டாளை  கொடுஞ்சொற்களால் குதறி இருக்கிறார்   பூமாதேவிதான்  ஆனாலும் பொறுமை காப்பாள்    பொங்கி எழுந்தால்  அகிலமே தூளாகும்  காத்திருப்போம்     தகுந்த  தண்டனை கிடைக்கும்   தமிழ் கொடுத்த  ஆண்டாளின்  அருளால் பிழைப்பு ஓடுகிறது இவருக்கு  அந்தத் தமிழையே  தமிழ் கொடுத்த ஆண்டாளையே தூற்றினால்  என்ன பலன் என்ரு பொறுத்திருந்து  பார்ப்போம்

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அன்புடன்

தமிழ்த்தேனீ


Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link:​ https://www.youtube.com/user/thamizthenee/videos

Contact:​

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

seshadri sridharan

unread,
Jan 11, 2018, 5:56:00 AM1/11/18
to vall...@googlegroups.com
தமிழ் கருவறையில் ஒலிப்பதற்கு முழுக் காரணம் ஆண்டாளின் 30 பாக்கள். கோவிலில் செட்டியார், முதலியார், இடையர், பிராமணர், நாயுடு, ரெட்டியார் என அனைத்து மக்களும் ஒருங்கே அமர்ந்து வழிபாடு நடத்தும் ஒரு நோன்பு  ஆண்டாளின் மார்கழி நோன்பு. 

பக்திக்கு அன்பே அடிப்படை தொழிலோ, பிறப்போ அடிப்படை அல்ல.  . வைரமுத்து தனது மனக் கோணலை இப்படி ஒரு பெண் மீது ஏவி இருக்கக் கூடாது.

எத்தனையோ கணிகையர் குலமக்கள் கோவிகளுக்கும் கோவில் நிகழ்வுகளுக்கும் அளப்பறிய கொடைகளை வழங்கியுள்ளனர்.  

ஸ்வாதி ஸ்ரீ விஜயாதித்ய சத்யஸ்ரைய ஸ்ரீ பிரித்வி வல்லப மகாராஜாதிராஜ படாரர உயிர்தலைவி (பிராணவல்லபே)  வினாபோடிகள் எனும் சுள்ளையர். இவரது முது தாய் (அம்மைக்கு அம்மை) விரேவமஞ்சல் கலாவரா மகள் குசிபோடி களாவர மகள் வினாபோடிகல் இங்கே (இல்லியே) ஹிரண்யகர்ப்பம்  இழுத்து எல்லா தானமும்  கொடுத்து தெய்வத்திற்கு பீடம் அங்கிசுவினை கட்டி  வெள்ளி மாலை கட்டி மங்கல் உள்ளே 800 சேத்திரம்  கொடுத்தோள். இதனை அழிவோனுக்கு மாபாவம் மிகும். 


 மங்கன் காப்பன் 

2018-01-10 19:55 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

க்ருஷ்ணகுமார்

unread,
Jan 11, 2018, 8:43:57 AM1/11/18
to வல்லமை
தமிழகமே வைரமுத்து இழிவாகப் பதிந்த கருத்தினை விவாதிக்கையில் கூகுள் தமிழ்க்குழுமங்கள் கமுக்கமாக இருந்துள்ளதே என்று நினைத்தேன்.  சிவபெருமானையே தமிழ்க்கடவுள் இல்லை ஆரிய வந்தேறி என்பது போன்ற கருத்துக்களை தமிழ்க்குழுமங்களில் வாசித்து இவற்றிலிருந்து விலகியிருப்பது நல்லது என்று கருத்துடையவன்.  மேலும் வரைமுறையில்லாமல் தேசப்பிரிவினையை பரப்புரை செய்வதையும் தமிழ்க்குழுமங்களில் வாசித்துக் கண்டனமும் செய்திருக்கிறேன்.  

கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆனாலும் சரி.............இந்த இழிவினை கண்யமாக விமர்சித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா கண்ணன்.  பல தமிழ்க்குழுமங்களில் தமிழை ஆண்டாளை இழிவு படுத்தியது ஒரு பொருட்டாகக் கூட கருதப்படவில்லை என்பதையும் கவனிக்கிறேன்.  இதற்குக் காரணம் என்ன என்றும் அறிவேன்.  வைரமுத்து தேவதாசி என்ற அளவில் நின்றுவிடவில்லை தமிழிலக்கியம் மற்றும் பாரதத்தின் மற்றைய அனைத்து பாஷைகளிலும் இயற்றப்பட்ட இலக்கியங்களின் அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல்  மேற்கத்திய ஆப்ரஹாமிய நிலைப்பாடுகளின் அடிப்படையில் விஷயத்தை அணுக முயற்சித்திருக்கிறார். 

வைரமுத்துவைக் கடுமையாகக் கண்டனம் செய்வது ஏற்புடையதே. ஆனால் அதிலும் வரைமுறை மீறப்பட்டிருப்தைக் கண்ணுற்றேன்.  கழகத்தினர் கருத்தியலும் அவர்களது செயற்பாடுகளும் தரக்குறைவானது என்று எடுத்துக்காட்டுகளுடன் விமர்சனம் செய்யும் எதிர்த்தரப்பு அதே தரக்குறைவான முறையில் மாற்றுக்கருத்தினரை விமர்சனம் செய்வது அறவே ஏற்கப்படக்கூடியது இல்லை.  சங்கபரிவாரத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எமது தரப்பிலிருந்து பரப்புரை செய்யப்பட்ட தரம் தாழ்ந்த கண்டனங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

ஹிந்து மத நூற்களை ( தமிழில் எழுதப்பட்ட சைவ வைஷ்ணவ நூற்களும் அடக்கம்) தமிழ்க் குழுமங்கள் இழிவாகச் சித்தரிப்பதை தொடர்ந்து அவதானித்து வருகிறேன். இதே அலகீட்டை ஆப்ரஹாமிய மத நூற்களுக்கு தமிழ்க்குழுமங்கள் முன்னெடுப்பதில்லை. இக்குறைபாட்டை சுட்டிக்காண்பிப்பவர்களை கட்டபஞ்சாயத்து மூலம் பஞ்சாயத்து செய்து தள்ளிவைக்கும் சகிப்புத்தன்மையையும் கண்கொண்டு பார்த்திருக்கிறேன். இந்த லக்ஷணத்தில் சகிப்புத்தன்மையைப் பற்றி பக்கம் பக்கமாக விவாதிப்பதில் (முழு பக்ஷபாதத்துடன்)  குறைவு இருக்காது.   

ஒரே ஒரு வித்யாசம். முன்னால் ஹிந்து மதத்தை யார் இழிவு செய்தாலும் அதற்கு எதிர்க்குரலிருக்காது.  இப்போதெல்லாம் மிக மிக உரத்த எதிர்க்குரலிருக்கிறது. 

 ஹிந்து" என்ற சொல்லை முனைந்து திரிப்பது "ஹிந்து" என்ற சொல்லின் மீது காழ்ப்புணர்ச்சியை வரைமுறையற்று பரப்புரை செய்வது ஹிந்து மத நூற்களை வரைமுறையன்றி திரிக்க முனைவது அப்படி திரிக்க முனைபவர்களை விதந்தோதுவது அதற்கு மாற்றுக்கருத்து முன்வைக்க விழைபவர்களை முனைந்து எத்தையாவது காரணத்தை சொல்லி தள்ளிவைக்க முனைவது இவையெல்லாம் தமிழ்க்குழுமங்களின் எழுதப்படா விதி..

தமிழகத்தில் ஹிந்துத்வ இயக்கங்கள் பெருமளவில் வளர்வதற்கு கழகத்தினர், கழகத்திற்கும் இடதுசாரிகளுக்கும் வித்யாசமில்லாத படிக்கு இயங்கும் இடதுசாரி மற்றும் நக்ஸல்வாத இயக்கங்கள் மற்றும் தமிழ்க்குழுமங்களின் மட்டில்லாத ஹிந்து மதக் காழ்ப்பு, அதே வேகத்தில் மட்டில்லாத ஆப்ரஹாமிய சார்பு போன்றவை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவும் என்பதில் எனக்கு லவலேசமும் சம்சயமில்லை. 

வெற்றிவேல்.

க்ருஷ்ணகுமார்

unread,
Jan 11, 2018, 8:53:48 AM1/11/18
to வல்லமை
அன்பின் செல்வன்,  இழையை ஆரம்பித்தது நீங்கள். ஆனால் நான் அண்ணா கண்ணன் அவர்களை மட்டிலும் பாராட்டி விட்டு உங்களை விட்டு விட்டேனானால் தவறு.  உங்களது கருத்துக்களில் தர்க்கம் பொதிந்திருக்கிறது அண்ணா கண்ணன் அவர்களது கருத்தில் உணர்வுகள் தெளிவாக ப்ரதிபலிக்கப்பட்டிருக்கின்றன.  அது சட்டென்று மனதில் பதிந்து விட்டது. ஸ்டார்ட்டர் வீக்கான ட்யூப்லைட் மாதிரி மெதுவாக லைட் எரிஞ்சாலும் சரி வெளிச்சம் வருகிறதே.  சந்தோஷம் :-)

செல்வன்

unread,
Jan 11, 2018, 10:27:45 AM1/11/18
to vallamai
கிருஷ்ணகுமார் அவர்களே

ஆக என்னை டியூப்லைட் என சொன்னதை பாராட்டாக எடுத்துக்கொள்வதா இல்லை சண்டைக்கு வருவதா என யோசித்துகொண்டிருக்கிறேன் :-)

சும்மா ஜோக் தான் அடித்தேன் :-) நலமா?

2018-01-11 7:53 GMT-06:00 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:
அன்பின் செல்வன்,  இழையை ஆரம்பித்தது நீங்கள். ஆனால் நான் அண்ணா கண்ணன் அவர்களை மட்டிலும் பாராட்டி விட்டு உங்களை விட்டு விட்டேனானால் தவறு.  உங்களது கருத்துக்களில் தர்க்கம் பொதிந்திருக்கிறது அண்ணா கண்ணன் அவர்களது கருத்தில் உணர்வுகள் தெளிவாக ப்ரதிபலிக்கப்பட்டிருக்கின்றன.  அது சட்டென்று மனதில் பதிந்து விட்டது. ஸ்டார்ட்டர் வீக்கான ட்யூப்லைட் மாதிரி மெதுவாக லைட் எரிஞ்சாலும் சரி வெளிச்சம் வருகிறதே.  சந்தோஷம் :-)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

S. Jayabarathan

unread,
Jan 11, 2018, 11:25:10 AM1/11/18
to vallamai, mintamil, tamilmantram
திருமணம் ஆகாத ஆண்டாள் போல், வட நாட்டில் திருமணமான மீராவே கணவனான ராணாவை விட்டுவிட்டுக், கண்ண பெருமானைத் தேடி சரணடடிந்தாள்.

ஆண் கவிஞர் பாரதியாரே கண்ணனைக் காதலனாக, காதலியாகப் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

சி. ஜெயபாரதன்

Innamburan S.Soundararajan

unread,
Jan 11, 2018, 11:28:13 AM1/11/18
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram

வைரமுத்து வைரம் பாராட்டுகிறாரா?

க்ருஷ்ணகுமார்

unread,
Jan 11, 2018, 11:46:25 AM1/11/18
to வல்லமை
நலம் தான்.  ஆனால் பாருங்கள் நான் கூட யோசித்திக்கொண்டிருக்கிறேன்.  எல்லாம் செல்வனுடைய சஹவாச தோஷம் தான் :-)

ஸ்மைலி போட்ட போதே இங்க லைட் எரிஞ்சாச்சு.  அதுக்கு அப்பறம் ஜோக். சரி.  அதுக்கு அப்பறம் ****அடித்தேன்****.  :-)

அது.  அது.  அஃதாகப்பட்டது, வால்மீகி ராமாயணத்தில் சீதாபிராட்டி நிவேதனம் செய்ததைப் படித்த பிறகு இந்த அடிதடி அசைவ பேலியோவில் இறங்கினீர்களா? அல்லது அடிதடி அசைவ பேலியோவிற்குப் பிறகு வால்மீகி படிக்க நேர்ந்ததான்னு யோசித்துக்கொண்டிருக்கிறேன்  :-)

இந்த அடி மத்திரம் விட மாட்டேங்குது.  எந்த குழுமத்தில் யார் வலம் இடம் மேலே கீழே என நாற்றிசையிலும் எவ்வளவு அடி அடித்தாலும் தாங்கும் படிக்கு புஷ்டியா இருப்பதற்காகவே பாடிபில்டிங்கில் மறுபடி இறங்கினதா இந்த மருதக் காரங்க சொல்றாங்க. கூடவே டயலாக் வேற. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார் பாரு எவ்வளவு நல்லவர் இவுருன்னு வேற.  

முடியல.  இந்த அடிய விட்டு வெளில வரமுடியல. நான் ஜூட் :-)


S. Jayabarathan

unread,
Jan 11, 2018, 11:51:34 AM1/11/18
to vallamai
வாலிப வயதில் விலைமாதர் தேடிச் சென்ற பெரியாரின் சீடர்கள்,  ஒரு பெண் கவிஞர் ஆண்டாள் கொக்கோகம் எழுதியுள்ளார் என்று கேலி செய்வது வியப்பாக உள்ளது !!!

75 வயதில் 25 வயது பணிப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்ட பெரியாரின் சீடர்கள்,  ஒரு பெண் கவிஞர்ஆ ண்டாள் கொக்கோகம் எழுதியுள்ளார் என்று கேலி செய்வது வியப்பாக உள்ளது !!!

திராவிடக் கட்சி ஆடவர் சிலர் இருதாரம், பலதாரம்  வைத்துக் கொண்டு, ஒரு பெண் கவிஞர் ஆண்டாள் கொக்கோகம் எழுதியுள்ளார் என்று கேலி செய்வது வியப்பாக உள்ளது !!!

சி. ஜெயபாரதன்

செல்வன்

unread,
Jan 11, 2018, 11:56:59 AM1/11/18
to vallamai
கிருஷ்ணகுமார் அவர்களே

நான் மகாபாரதம், ராமாயணம் எல்லாம் படித்துமுடிக்கும்போது என் வயது 10 :-) என் தாத்தா சிறுவயதிலேயே வியாசர் விருந்தும், சக்ரவர்த்தி திருமகனும் படிக்க கொடுத்துவிட்டு  படித்து முடித்தபின் பரிசாக பென்சிலும் வழங்கினார் :-)

அதற்குமுன்னும், பின்னும் 30 ஆண்டுகள் நான் சைவம்தான்.. :-)

நல்லவேளை இராமர் என்னை தடுத்தாட்கொண்டு அவருடைய வழியில் செல்ல எனக்கு அருள்புரிந்தார். நான் தப்பினேன் :-)


--

செல்வன்

க்ருஷ்ணகுமார்

unread,
Jan 11, 2018, 12:06:00 PM1/11/18
to வல்லமை
:-) :-) :-)

ம்ஹும் அடிச்சுக்க முடியாது உங்கள.

ஆஹ்! மறுபடியும் அடியா?

சாமி அப்படியே நைஸா உங்க வழிக்கு இழுத்து விடுவீர்கள் போல :-)

உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனேன்னு எங்க ரூட் வேறங்க. எங்கூர்ல இந்த சோறு நீரு இதெல்லாம் என்னான்னா பால், தயிர், வெண்ணெய், நெய் இதல்லாம் சாமி. சும்மனாச்சுக்கும் வால்மீகீன்னா நேரா அயோத்திக்கே கூட்டிட்டு போயிடுவீங்க போல :-) 

செல்வன்

unread,
Jan 11, 2018, 12:10:36 PM1/11/18
to vallamai
விரைவில் ராமர், சீதை வழிக்கு நீங்க்ள் வர எல்லாம் வல்ல அயோத்தி இராமனையும், குகனையும், சீதாபிராட்டியையும்வே ண்டுகிறேன் :-)

-- 

செல்வன்

க்ருஷ்ணகுமார்

unread,
Jan 11, 2018, 12:30:08 PM1/11/18
to வல்லமை
இந்த டைமண்டுவை முதலில் ஒரு வழிசெய்து விட்டு மக்கால விருந்தாவனத்தின் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் பற்றி தனியா உங்களூக்கு பாடம் எடுக்கறேன்.  அப்பறம் நீங்களே சொல்லுவீங்க பாரினில் சிறந்தது பரமன் விளையாடிய ஆய்ப்பாடியே என்று.  நான் சொல்லல சாமி. விட்டுசித்தன் கோதையே சொல்லியது.  ராமனைக் கொண்டாடியது பெரிதும் குலசேகராழ்வாரே.  ஆனால் பாருங்க அவரு கூட பாக்கி இல்லாம பாடிய ஒரு ஆழ்வார்களிலும் பாக்கியில்லாம கொண்டாடியது எங்கள் கோதை நாயகனையே.  கொஞ்சம் கொஞ்சமா பாடம் வரும்.  ஆனா மொதக்க டைமண்டுவ ஒரு வழி செய்யோணும்.

Oru Arizonan

unread,
Jan 11, 2018, 1:36:59 PM1/11/18
to vallamai
இந்திய/இந்து ஆராய்ச்சியில் கலோனிய ஆய்வுகளுக்கு வால்பிடித்து ஆலவட்டம் தூக்கக்கூடாது என்ற செல்வரின் கணிப்பும், அண்ணா கண்ணன் அவர்களின் அருமையான உணர்வுபூர்வமான கருத்தும், கிருஷ்ணகுமார் அவர்களின் நிலைதடுமாற பதிலையும் கண்ணுறும்போது நான் எழுத எதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

இருப்பினும் எனது ஒரு சென்டுக் கருத்துகள்:

  • பெரும்பாலானதமிழ்க்  குழுமங்களின் நோக்கே இந்து சமயத்தையும், இந்து உணர்வையும், குறிப்பிட்ட சாதியையும் தாக்குவதே.  இதற்குச் சில் குழுமங்கள் விலக்காக இருக்கலாம்.
  • ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களாக வாழ்ந்தவர்களை, தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை 'வந்தேறி' என்று கூசாமல் சொல்வது தமிழ்ப்பணி என்ற உணர்வை அனைவருக்கும் ஊட்டுவதே இவர்களின் 'தமிழ்த் திருப்பணி'!
  • இதற்கு ஆழவாரில் ஒருத்தரான ஆண்டாளும் விலக்கல்ல.
  • ஆண்டாள் ஆற்றிய தமிழ்ப்பணியை இவர்களின் வெறி கண்ணை மறைத்துவிட்டது.
  • ஆண்டாளைப் பழித்தவரைத் தட்டிக் கேட்பதவிட, பழித்தவரின்[சொற்குற்றம், பொருட்குற்றத்துடன் கவிதை எழுதுவரின்] பேச்சுரிமையக் காக்கக் குரல்கொடுப்பதும், ஆயுதம் எடுக்கப் போவதாக மிரட்டுவதும்தான் இந்தத் தமிழ்த் திருப்பணியாளர்களுக்கு முக்கியம்.
  • இதைத் தட்டிக் கேட்பவரின்மீது பழிபோட்டு விரட்டியடிப்பது ஒன்றுதான் இவர்களுக்குக் கைவந்த கலை.
  • வெறுப்புணர்வுடன் செயல்பட்ட எவரும் வென்றதாக வரலாறு இல்லை.
  • ஹிட்லர், ஸ்டாலின், துக்ளக் என்று அடுக்கிகொண்டே போகலாம்.  அவர்களின் வெற்றி தாற்காலிகம்தான்.  அவர்களது கொள்கை வெற்றிபெறவில்லை.
இப்பொழுதாவது தட்டிக்கேட்கப் பலகுரல்கள் கிளம்புகின்றனவே என்று மகிழ்கிறேன்.

ஒரு அரிசோனன் 


Virus-free. www.avast.com

வேந்தன் அரசு

unread,
Jan 11, 2018, 10:55:45 PM1/11/18
to vallamai


10 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:27 அன்று, AnnaKannan K <annak...@gmail.com> எழுதியது:

காட்ட முடியாது என்பதே நிதர்சனம். காட்டிவிட்டால், என்ன நடக்கும் எனக் கேரளாவில் காட்டியிருக்கிறார்கள்.


மேரி மெக்டலினா'வை யேசுவின் மனைவி என்றுகூட ஆராய்சியாளர் சொல்லியுள்ளார்கள்.

S. Jayabarathan

unread,
Jan 11, 2018, 11:57:28 PM1/11/18
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
Mary Magdalene, a woman, who believed and was close to Jesus Christ over many years, was considered as the 13th disciple.  But she was ignored and labelled as a prostitute by men around Jesus. She was not afraid like the men disciples at the end and stayed near him with his mother at the time of his crucifying. 

S. Jayabarathan   

க்ருஷ்ணகுமார்

unread,
Jan 12, 2018, 6:13:08 AM1/12/18
to வல்லமை
வல்லமைக் குழுமத்தில் ஹிந்துமதக் காழ்ப்பு மற்றும் ஜாதிக்காழ்ப்புக் கருத்துக்கள் பதியப்பட்டால் அதற்கு மாற்றுக்கருத்து பதிவதற்கு வழிவகை இருக்கிறது.  வாழ்த்துக்கள். இந்நிலை தொடரட்டும்.

S. Jayabarathan

unread,
Jan 12, 2018, 10:18:46 AM1/12/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, Kalairajan Krishnan, vaiyavan mspm
ஆண்டாளின் படைப்பு போல், பின் தள்ளப்படும் பெண்ணின் உன்னத சாதனைகள் எல்லா மதத்தினரிடமும் உள்ளன என்று காட்டுகிறேன். 

இந்து மதம் ஒன்றுதான் பெண் கடவுளை நம்புகிறது. வழிபடுகிறது.  வேறு எம்மதமும் இல்லை.

சி. ஜெயபாரதன் 

On Fri, Jan 12, 2018 at 1:51 AM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
இந்த இழையில் இப்போது இது எதற்கு?
ப.பாண்டியராஜா
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Jan 12, 2018, 10:50:05 AM1/12/18
to செல்வன்
தமிழுக்காகவும், ஆண்டாளுக்காகவும் எனது உயிரை இழக்கத் தயார்: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்!


ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பிரபல நாட்டுப்புற பாடகர் விஜயலட்சுமியும், அவரது கணவர் நவநீதகிருஷ்ணனும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 

மதுரை அருகே பறவை கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாட்டுப்புறப் பாடகர் விஜயலட்சுமி, இந்து மதம், இந்து கடவுள்களை பற்றி முழுமையாக அறியாமல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கூறிய கருத்தை வைரமுத்து ஆமோதிப்பது சரியல்ல என்று கூறினார்.

வைரமுத்து கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், இதனை இன்று மாலையில் முடித்துக் கொண்டு, நடந்தே ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்ல உள்ளதாகவும் விஜயலட்சுமி தெரிவித்தார். மேலும், தமிழுக்காகவும், ஆண்டாளுக்காகவும் தமது உயிரையும் இழக்க தயாராக இருப்பதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நவநீதகிருஷ்ணன், தமிழ் மரபு, வைணர மரபு தெரியாமல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் கூறிய கருத்தை வைரமுத்து ஆமோதித்தது, தங்களையும், ஆண்டாளை வழிபடும் மக்களையும் பெரிதும் புண்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதால் பாவம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பாவத்தை போக்குவதற்காக நாங்கள் 72 மணி நேர உண்ணாவிரதத்தில் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

seshadri sridharan

unread,
Jan 13, 2018, 7:28:32 AM1/13/18
to vall...@googlegroups.com
2018-01-11 16:25 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
தமிழ் கருவறையில் ஒலிப்பதற்கு முழுக் காரணம் ஆண்டாளின் 30 பாக்கள். கோவிலில் செட்டியார், முதலியார், இடையர், பிராமணர், நாயுடு, ரெட்டியார் என அனைத்து மக்களும் ஒருங்கே அமர்ந்து வழிபாடு நடத்தும் ஒரு நோன்பு  ஆண்டாளின் மார்கழி நோன்பு. 

பக்திக்கு அன்பே அடிப்படை தொழிலோ, பிறப்போ அடிப்படை அல்ல.  . வைரமுத்து தனது மனக் கோணலை இப்படி ஒரு பெண் மீது ஏவி இருக்கக் கூடாது.

எத்தனையோ கணிகையர் குலமக்கள் கோவிகளுக்கும் கோவில் நிகழ்வுகளுக்கும் அளப்பறிய கொடைகளை வழங்கியுள்ளனர்.  

ஸ்வாதி ஸ்ரீ விஜயாதித்ய சத்யஸ்ரைய ஸ்ரீ பிரித்வி வல்லப மகாராஜாதிராஜ படாரர உயிர்தலைவி (பிராணவல்லபே)  வினாபோடிகள் எனும் சுள்ளையர். இவரது முது தாய் (அம்மைக்கு அம்மை) விரேவமஞ்சல் கலாவரா மகள் குசிபோடி களாவர மகள் வினாபோடிகல் இங்கே (இல்லியே) ஹிரண்யகர்ப்பம்  இழுத்து எல்லா தானமும்  கொடுத்து தெய்வத்திற்கு பீடம் அங்கிசுவினை கட்டி  வெள்ளி மாலை கட்டி மங்கல் உள்ளே 800 சேத்திரம்  கொடுத்தோள். இதனை அழிவோனுக்கு மாபாவம் மிகும். 


 சோழன் இராசராசன் தான் தேவரடியார் (ஆண்/பெண்) முறையை முதன் முறையாக கோவில்களில்
அறிமுகப்படுத்தினான். ஆண்டாள் இராசராசனுக்கு 150-200 ஆண்டுகள் மூத்தவள். எனவே
தேவரடியார் முறையே இல்லாத போது ஆண்டாளை தேவரடியார் என்பது பிழைபட்ட கருத்து.
தேவரடியார் தேவடியாள் ஆனது விசயநகர ஆட்சிக் காலத்தில். எப்படிப் பார்த்தாலும்

வைரமுத்துவின் கருத்து போலியானது,



 மங்கன் காப்பன் 

2018-01-10 19:55 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
இதில் உண்மையில் வெளியே வரும் விசயம் என்னவெனில் பல்கலைகழகங்களின் ஆய்வுகள் நடக்கும் லட்சணம்தான்.

ஆண்டாள் என ஒருவர் உண்மையிலேயே இருந்தாரா, வரலாற்றுகதாபாத்திரமா என்பதற்கே கர்ணபரம்பரை கதைகளும் அவர் பெயரில் உள்ள பாடல்களும் தான் ஆதாரம் எனும் நிலையில் அவரது பாடல்களை தன் மேற்கத்திய மனோநிலையில் கேட்டு, மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடுவதுபோல ஆண்டாள் தேவதாசியாக தான் இருந்திருக்கவேண்டும் எனும் தன் யூகத்தையே ஆராய்ச்சி ஆக்கி, அதை பதிப்பித்தும் வைத்த ஆய்வாளர்களை நாம் குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஏனெனில் ஆராய்ச்சிகளின் லட்சணம் அந்த அழகில் தான் இருக்கிறது. பி.எச்.டி படித்துவிட்டால் அவர் ஒரு அறிஞர், மேதாவி எனும் நம் நினைப்பும் கூட அதிலும் வெள்ளைத்தோலும் கூட இருந்தால் அவருக்கு ஒரு கோயிலே கட்டிவிடவும் நாம் தயாராக தான் இருக்கிறோம்.

இந்தியாவை பற்றி எதுவுமே தெரியாத இவர்களின் ஆய்வுகளை இந்தியர்கள் தலைமேல் ஏற்றிக்கொன்டு சுமக்கும் கலோனிய மனோபாவம் தான் இதில் கவனத்துக்கு உரியது. இந்தியாவை பற்றிய ஆய்வுகளை இந்தியர்கள் செய்வதே பொருந்தும்



வேளுக்குடி கிருஷ்ணன் கேள்வி 

S. Jayabarathan

unread,
Jan 13, 2018, 9:11:17 AM1/13/18
to thantha...@googlegroups.com, veeramani k, Aravindan Neelakandan, maarimuthu pazhani, Soma Ilangovan, mintamil, vallamai, tamilmantram
வேளுக்குடி கிருஷ்ணன் கேள்வி 

-- 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Jan 13, 2018, 12:38:20 PM1/13/18
to செல்வன்


முதிர்ச்சியான நிலைப்பாடு

ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகள்

seshadri sridharan

unread,
Jan 15, 2018, 11:03:44 PM1/15/18
to vall...@googlegroups.com
திருவல்லிகேணியில் வைரமுத்துவுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் 


--

S. Jayabarathan

unread,
Jan 16, 2018, 1:13:22 PM1/16/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, thantha...@googlegroups.com, veeramani k, Soma Ilangovan, tsj...@gmail.com, Subashini Tremmel

செல்வன்

unread,
Jan 17, 2018, 12:28:47 AM1/17/18
to mint...@googlegroups.com, vallamai
திரு.வைரமுத்து அவர்களுக்கு, சுகி சிவம் கேள்விகள்.

மரியாதைக் குறிய
ஐயா, சுகி சிவம் அவர்களால் கைப்பட எழுதிய,

"அத்துமீறல் ஓர் அலசல்"

என்ற தலைப்பிட்ட கேள்விகளை நாம் காண்போம்.

1) பரந்த வாசிப்பும், சிறந்த மொழித் திறனும், சொந்த சிந்தனைகளும் உடைய மதிப்புறு மனிதர்

 "கவிஞர் வைரமுத்து " 
 
என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், ஆண்டாள் குறித்த கட்டுரையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரிடம் சில கேள்விகள் எழுப்ப வேண்டி உள்ளது.

2) இன்டியானா பல்கலைக் கழகத்தின் ஆய்வு செய்தியைபதிவிடும் போது -

அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் எழுதாமல் நழுவியது ஏன்?

இது தவறு, அல்லது சரி என்று காரண காரியங்களுடன் எழுத வேண்டியது நேர்மையான இலக்கியவாதியின் கடமை அல்லவா?

அந்த நேர்மை உங்களிடம் இல்லாமல் போனது ஏன்?

3) "கோட்டுக் கால் கட்டிலின் மேல் " என்ற பாசுரத்திற்கு உரைதாரர் விளக்கங்களை

"தீராப் புலமையின் திமீர் காட்டி "

என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களால்,
 பல்கலைக்கழக ஆய்வு மட்டும் தவறு என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்?

4) பலரது பல கால நம்பிக்கைகளுக்குப் பகையாக
( முரணாக அல்ல)
ஒரு செய்தியை எழுதும் போது தக்க ஆதாரங்களையும்,
நிரூபணங்களையும் தந்திருக்க வேண்டும்.

மேம்போக்காக மேற்கோள் எவ்வாறு ஆதாரமாக - நிரூபணமாக ஆக முடியும்?

ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில்,

 அவ்வாறு வாழ்ந்து காலம் கழித்தாள் 

என்பதற்கு என்ன சான்றுகளை சேகரத்தீர்கள்?

5) பக்தி இலக்கியம் பற்றி ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் எழுதிக் கொண்டிருக்கும் நீங்கள்,

பகுத்தறிவு நண்பர்கள்
கண்டனம் களில் இருந்து தப்ப,
அவர்களை திருப்திபடுத்த

இப்படி யொரு சாமர்த்தியத்தைக் கையாண்டீர்களா?

6) சமண - பவுத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறான துய்ப்புன் கதவுகளைத் திறந்து விட்ட அக்கால மதநெறிகளின் குறியீடு -ஆண்டாள் என்கிறீர்கள்.

இது பிழை.

சமண - பவுத்த மதங்களால்
வாழ்க்கை இருக்கமானதும்
பக்தி இயக்கங்கள்,
அதனை தளர்த்த முயன்றதும் வரலாற்று உண்மை அறிவேன்.

ஆனால் துய்ப்பு நெறி சமயத்தின் செய்தி அன்று.

நுட்பமான வேறுபாடு தெரிய வேண்டும்.

உலகியல் துய்ப்பினும் பரம்பொருள் துய்ப்பே மேலானது என்கிற அணுகுமுறையே ஆண்டாளின் செய்தி.

" இற்றைப் பறைகொள்வான்
அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம்
மற்றை நம் நாமங்கள் மாற்று "

என்கிறாள் ஆண்டாள்.

மற்றை நம் காமங்கள் மாற்று என்பது உலகியல் துய்ப்புக்கு எதிராக நிலைப்பாடு அல்லவா.

உண்மையில் ஆண்டாளின் தமிழ்,

"கடவுளை காதலிக்கும்
அச்சமற்ற அழகியல் உணர்விக் உச்சபட்ச வெளிப்பாடு. "

ஆன்மாவின் அனுபவத்தை சாரீரத்தின் சுகமாகவும் சொல்ல முயன்ற முயற்சி.

கடினமானதாக கண்டறியப்பட்ட கடவுள்
தத்துவத்தை,

கலவி,
காமம்,
காதல் என்கிற விசயத்தை,

சுகநிலையில்
பேச முடியும் என்று நிரூபித்த 
கவிதாயினியின் சாதனை அது.

முக்தி என்று
சூன்ம விடுதலை பேசிய ஒரு சமயத்தின் முழுச் சுதந்திரம் வெளிப்படுத்திய தமிழ் கோதைத் தமிழ்.

ஆண்டாள் தமிழ் பதிமூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் உயிர் வாழ்கிறது.
ஆனால், அடுத்த நூற்றாண்டு வரை உங்கள் கவிதைகள்
தாக்குப் பிடித்தால், அதுவே பெரிய விஷயம் என்பது புரிய வேண்டாமா?

7) அர்ச்சாவ தாரத்தோடு
எழும்பும் சதையுமுடைய பெண் எவ்வாறு
கலக்க முடியும் என்று அறிவு கேள்வி எழும்புமானால்,

இறைபணியிலும், கோயில் பணியிலும் காலம் கழித்து கரைந்து கலந்த திலகவதியார் போல,

ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் வாழ்ந்திருக்க கூடும் என்று எழுதி இருந்தால் சமய உலகம்

இவ்வளவு கொதிப்படைந்து இருக்காது.

8) உங்கள் வார்த்தை தேர்வில்,
வன்மம்,
குரூரம்,
மெல்லிய வஞ்சகம்
வெளிப்படுவதாகவே பக்தர்கள் வருந்துகிறார்கள்.

குருதி, இறைச்சி என்ற சொற்களில் எந்தப் பிழையும் இல்லையென்றாலும்

"உழினை உருக்கி " என்ற மணிவாசகரையும்

"தசையினைத் தீ கடினும் " என்கிற பாரதியையும் நீங்கள் ஒரு முறை கூர்ந்து கவனிப்பது அவசியம்.

சமய உலகிற்கென்று மர4 இருக்கிறது.
நீங்கள் நாத்திகராக அறியப்பட்டவர்.
அப்படி இருக்க

காயப்படுத்தும் வார்த்தைகளில் கவனம் காட்ட தவறியது ஏன்?

9) வைணவ குடும்பங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தம் மக்களை ஆண்டாளாக பாவித்து |
ஆண்டாள் கொண்டை போட்டு,
மாப்பிள்ளையை 
ரங்கமன்னராக்கி மணமுடித்து கொடுப்பதே வழக்கம்.
பெற்ற தகப்பன் பெரியாழ்வாராவது அந்த ஒரு கணம் .... ஒரே கணம்
அந்த அழகான கனவை

அசிங்கமான பதிவால் கலைத்து
என்ன நன்மை பெறுகிறீர்கள்?

10) சாதிக் கட்டுமானம் காரணமாக
ஆண்டாளை
சமூகம் நிராகரிப்பு செய்திருக்கலாம் என்பது
அபத்தமானக் கற்பனை.

வீட்டுக்குள் வரவேற்கத சமூகம்
கோயிலுக்குள் குடியேற்றி
கொண்டாடி இருக்குமா என்ன?

கடவுளையே மணப்பேன்
என்கிற ஆண்டாள்

பெரிதினும் பெரிது கேள் என்கிற பாரதியின் முன்னோடி.

சமூக நிராகரிப்பு என்ற வார்த்தைகளால் அவளது உச்சபட்ச உயரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டுமா என்ன?

நிவேதனம் கூட
நூறு அண்டா வெண்ணெய்,
நூறு அண்டா சர்க்கரை பொங்கல் என்று

பெரிதினும் பெரிது குறித்துப் பேசிய பெண் பிள்ளை,
உள்ளூர் மாப்பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு
வைகுந்த வாசிக்கு
வாழ்க்கைப் பட நினைத்ததே
ஆண்டாளின் தனிச்சிறப்பு .

11) கட்டுரை முழுவதும் ஆண்டாளை வெளிப்படுத்தும் அக்கறையை விட
உங்கள் பரந்த புலமையை வெளிப்படுத்தும் வேகமே வெளிப்படுகிறது.
நாத்திகராக இருப்பது உங்கள் சௌகர்யம்.

ஆனால்,
அதற்காக ஆண்டாளிடமிருந்து
கடவுளை கழித்த பிறகு என்று கட்டுரையை முடித்திருக்க வேண்டாமே.

இறை நிலையை ஆண்டாளிடம் இருந்து அழிக்க முடியாது.
அழித்தப் பின் ஆண்டாள்
அங்கே இருக்க முடியாது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா வாங்கி வந்து
பால்கோவாவை எறிந்து விட்டு
பிளாஸ்டிக் பையைச் சேகரிக்கும் முயற்சியை

பைத்தியக்காரத்தனம்
என்று சொல்லாமல்

பாராட்டவா முடியும்?

நாத்திகர்களை
திருப்தி செய்ய

ஆத்திகர்களை
வலிக்கச் செய்வது

விவேகமா கவிஞரே?

12) அத்துமீறலில் இத்தனை
அத்துமீறலா?
--

செல்வன்

செல்வன்

unread,
Jan 19, 2018, 7:51:46 PM1/19/18
to mint...@googlegroups.com, vallamai
*வைரமுத்து மனைவி கவிஞர் பொன்மணி வைரமுத்து* எழுதியது

 (கவிப்பேரரசு-வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம் விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு. உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.

அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!

அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.

ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.

கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது. 
ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.

அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.

அதை அச்சிட்ட தினமணி கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்)

மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த
ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே!
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு
கோரும்வரை நீளும் வழக்கு

இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான்
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான்
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல்
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான்
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான்
அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை!

மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம்
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ?
தனியான மரியாதை தமிழாலன்றோ?
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ?
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ?
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ?
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்!
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!

ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!

ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா?
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா?
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள்
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!

இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்?
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்!
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்!
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர்
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!
( இவர் அவரின் முன்னாள் மனைவி. இறைபக்தி மிகுந்தவர். ஸத்ய ஸாய் பாபவின் தீவிர பக்தை)
--

செல்வன்

AnnaKannan K

unread,
Jan 19, 2018, 11:12:09 PM1/19/18
to Vallamai, Venkateswaran T A
இதில் ஏதோ குழப்பம் இருக்கிறது. இந்தப் பதிவில் உள்ள கவிதை, இசைக்கவி ரமணன் எழுதியது.

மேலும் பொன்மணி, இன்றும் வைரமுத்துவின் மனைவியே; முன்னாள் இல்லை. தொடக்கத்தில் உள்ளது தவிர, பிற அவர் சொல்வது போல் இல்லை.

--

Ramanan Isaikkavi

unread,
Jan 19, 2018, 11:57:22 PM1/19/18
to Anna Kannan, Vallamai
இது யார்செய்த வேலை என்று தெரியவில்லை. நான் என் முகநூல் பக்கத்திலும், என் வலைத்தளத்திலும், என் கூகுள் குழுமத்திலும், வாட்ஸாப் குழுக்களிலும், இந்தக் கவிதையை என் முன்னுரையுடன் இட்டிருந்தேன்.

என் மதிப்புக்கும், அன்புக்கும் உரிய திருமதி பொன்மணியை எதற்காக இதில் இழுத்து அவர் இதை எழுதியதாக யார் போட்டார்களோ தெரியவில்லை.

நம் கருத்தை, பண்புடன் நேரடியாக வெளிப்படுத்தும் நாகரிகமே ஆரோக்கியமானது.

வருத்தத்துடன்,
ரமணன்

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Jan 20, 2018, 1:42:46 AM1/20/18
to vallamai, min tamil
2018-01-20 6:21 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
*வைரமுத்து மனைவி கவிஞர் பொன்மணி வைரமுத்து* எழுதியது

 (கவிப்பேரரசு-வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம் விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு. உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.

அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!

அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.

ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.

கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது. 
ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.



இது இசைக்கவி ரமணன் எழுதிய திறந்த கடிதம் செல்வன்.  தலைப்பை 'கவிஞர் பொன்மணி வைரமுத்து' என்று மாற்றி வாட்ஸாப்பில் யாரோ சிலர் உலவ விட்டிருக்கிறார்கள்.  பொன்மணி வைரமுத்து, வைரமுத்துவுக்கு எழுதியதன்று.

வைரமுத்துவைக் கல்லூரி நாட்களிலிருந்து நானும் ரமணனும் அறிவோம். அவர் ரமணனுடன் பழகுவது இப்போதும் தொடர்கிறது. 

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

செல்வன்

unread,
Jan 20, 2018, 1:45:42 AM1/20/18
to vall...@googlegroups.com
நன்றி ஹரிகி ஐயா

வாட்ஸாப்பில் பலதும் வருகிறது. எது உண்மை என தெரிவதிக்லை. இதை முகநூலில் இருந்து எடுத்தேன். பார்த்தால் எழுதியவர் ரமணன், மாற்றி பதிவொட்டுள்ளனர் என தெரிகிறது. அவருக்கு என் நல்வாழ்த்துகள். அறுமையாக எழுதியுள்ளார்
--

செல்வன்

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Jan 20, 2018, 1:45:58 AM1/20/18
to vallamai, min tamil
2018-01-20 12:12 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:


இது இசைக்கவி ரமணன் எழுதிய திறந்த கடிதம் செல்வன்.  தலைப்பை 'கவிஞர் பொன்மணி வைரமுத்து' என்று மாற்றி வாட்ஸாப்பில் யாரோ சிலர் உலவ விட்டிருக்கிறார்கள்.  பொன்மணி வைரமுத்து, வைரமுத்துவுக்கு எழுதியதன்று.

வைரமுத்துவைக் கல்லூரி நாட்களிலிருந்து நானும் ரமணனும் அறிவோம். அவர் ரமணனுடன் பழகுவது இப்போதும் தொடர்கிறது. 


இதற்கு ரமணனே பதில் எழுதியிருப்பதைப் பிறகுதான் கவனித்தேன்.  தேவையில்லாமல் என் விளக்கத்தைக் கொடுக்க நேர்ந்துவிட்டது. 

செல்வன்

unread,
Jan 20, 2018, 12:02:37 PM1/20/18
to செல்வன்

இரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா?

இல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.

ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல

ஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா? தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.

கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.

அதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.

பக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான  வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே

கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்

ஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.

கடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது? அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை

ஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டாலும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி

ஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த  மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்..  காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட  .

வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.

ஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.

ஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.

ஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழகியல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.

மதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.

இன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.

இருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற்கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே


http://www.jeyamohan.in/105607#.WmNjLJM-cWq

மூத்த கணியன்

unread,
Jan 20, 2018, 1:02:38 PM1/20/18
to வல்லமை
பல்கலைக் கழக ஆய்வுகளை அவ்வளவு எளிதாகப் புறங்கையால் தள்ளிவிடுவது தகுமா?  
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மேலாண்மை தொடர்பான முனைவர் ஆய்வு படித்துப் பார்த்தேன்
ஸ்ரீவைணவ - வீர சைவ பக்தி வெளிப்பாட்டை ஆய்வு செய்யும் ஆண்டாள் அக்க மஹாதேவி  ப்ப்பபாஅசுர- வசன ஒப்புமை ஆய்வு ஒன்றையும் பார்த்தேன்
ஸ்ரீவைணவத்தில் ஸ்ரீ என்பதே பெண்ணை முன்னிறுத்தும் சிந்தனை என்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார்
ஆய்வு செய்ய வேண்டிய இடம் பொதுமக்கள் கூட்டத்தில் அல்ல
ஆய்வை விமரிசனம் செய்ய ஆய்வாளர்கள் குழுமங்கள் தேவை
ஏதோ இரண்டு மேற்கோள்களைச் சுட்டினால் அது ஆய்வாகிவிடும் என்று எழுதுபவர்கள் எண்ணுதல் சரியல்ல
மூத்த கணியன்


On Wednesday, 10 January 2018 19:56:09 UTC+5:30, Neander Selvan wrote:
இதில் உண்மையில் வெளியே வரும் விசயம் என்னவெனில் பல்கலைகழகங்களின் ஆய்வுகள் நடக்கும் லட்சணம்தான்.

ஆண்டாள் என ஒருவர் உண்மையிலேயே இருந்தாரா, வரலாற்றுகதாபாத்திரமா என்பதற்கே கர்ணபரம்பரை கதைகளும் அவர் பெயரில் உள்ள பாடல்களும் தான் ஆதாரம் எனும் நிலையில் அவரது பாடல்களை தன் மேற்கத்திய மனோநிலையில் கேட்டு, மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடுவதுபோல ஆண்டாள் தேவதாசியாக தான் இருந்திருக்கவேண்டும் எனும் தன் யூகத்தையே ஆராய்ச்சி ஆக்கி, அதை பதிப்பித்தும் வைத்த ஆய்வாளர்களை நாம் குற்றம் சொல்ல எதுவுமில்லை. ஏனெனில் ஆராய்ச்சிகளின் லட்சணம் அந்த அழகில் தான் இருக்கிறது. பி.எச்.டி படித்துவிட்டால் அவர் ஒரு அறிஞர், மேதாவி எனும் நம் நினைப்பும் கூட அதிலும் வெள்ளைத்தோலும் கூட இருந்தால் அவருக்கு ஒரு கோயிலே கட்டிவிடவும் நாம் தயாராக தான் இருக்கிறோம்.

இந்தியாவை பற்றி எதுவுமே தெரியாத இவர்களின் ஆய்வுகளை இந்தியர்கள் தலைமேல் ஏற்றிக்கொன்டு சுமக்கும் கலோனிய மனோபாவம் தான் இதில் கவனத்துக்கு உரியது. இந்தியாவை பற்றிய ஆய்வுகளை இந்தியர்கள் செய்வதே பொருந்தும்

--

செல்வன்

வேந்தன் அரசு

unread,
Jan 20, 2018, 1:12:48 PM1/20/18
to vallamai, செல்வன்
<
வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே>

அப்படித்தோணலை திரு ஜெ. மோ.
பறையருக்கும் விடுதலை புலையாருக்கும் விடுதலை" என்று பாரதி ஏன் எழுதினான் என ஆய்வுசெய்தால் அது தவறா?

It does not appear to be so Mr. Jay. Moe.Is it wrong to investigate why Bharathi wrote "liberation for the PaRaiyar and liberation for Pulaiyar"?


20 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:02 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

DEV RAJ

unread,
Jan 21, 2018, 5:33:51 AM1/21/18
to வல்லமை
On Saturday, 20 January 2018 09:02:37 UTC-8, Neander Selvan wrote:

>>>> ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். <<<<

அதற்கான தேவை என்ன?
ஆழ்வார்கள் தாமே வேறு வேறு நிலைகளில் பாடியுள்ளனரே!
நம்மாழ்வார் ஒருவரே தாய் வழிப்ப்பாசுரமாகவும், தாமாகவும் நின்று பாடியுள்ளார்.
குலசேகரர் தம்மைத் தயரதனாக நினைத்துப் பாடியுள்ளார். அவரே தாயின் நிலையில்
தம்மை தேவகியாக பாவித்துப் பாடியுள்ளார். புனைபெயரில் யாரும் பாடவில்லை.
எழுத்தை விற்பதற்கான நாகரிகப் புனைவுகளின் தேவை நிலவாத காலம் அது.

தாஸ்யம், ஸக்யம், மாதுர்யம் - வேறுபட்ட நிலைகள்;
ஒருவரே மூன்று பாவங்களிலும் பாடலாம்.


தேவ்

DEV RAJ

unread,
Jan 21, 2018, 5:51:35 AM1/21/18
to வல்லமை


நாச்சியார் பாடியருளியது தொல்மரபான பாடாண் படலத்தின் புறத்திணைக் கைக்கிளையை ஒட்டியது. 
அறியாமை காரணமாகவோ [அ] இவ்வுண்மையை மறைத்தோ அதைப் பாலியல் - சமூகவியலில் 
சேர்த்துப் பிணைத்து ஆய்வு நோக்கு எனும் கவர்ச்சி வெளிச்சம் போட்டு ஆண்டாள் பனுவலை 
முன்னிறுத்துவது ஆணாதிக்க மேட்டிமைத்தனம் தவிர வேறில்லை.

தளிச்சேரி வாழ்க்கையைத் தேர்வு செய்வதானால் வில்லிபுத்தூர் ஆலயமோ,
மாலிருஞ்சோலை விண்ணகரமோ அருகில் உள்ளவை.

எந்த ஆய்வாளரும் திட்டவட்டமாக ஆண்டாள் தேவதாசி என முடிவாக அறிவிக்கவில்லை.
ஆண்டாள் தளிச்சேரி சேர்ந்தமைக்கு எவ்விதமான கல்வெட்டு ஆதாரமோ,
பிற நூல்களின் சான்றோ கிடையா. அருளிச்செயலிலிருந்தும் அகச்சான்று காட்ட
முடியாது


தேவ்

N D Logasundaram

unread,
Jan 21, 2018, 8:39:30 AM1/21/18
to vallamai
ஆண்டாள் தானே பாடிய பாடல்கள் இருக்கும் பொது வேறு ஆதாரங்கள்
 வேண்டும் என்பது குதர்க்கம் பேசும் மரபினர் பேச்சு

 நாச்சியார் திருமொழி என குறித்து விட்டு பின் எதற்காக திசை திருப்பும்
கள்ளத்தனமான வே லைகள்  செய்வது அழகல்ல 
பாருங்கள் 
தேவரடியார் தேவதாசி எனும் சொற்களை நல்ல வைணவர்கள் சிறந்த
 பொருளால் விளக்கும் உள்ளதைக் கூறாமல் பிற்காலத்தன் பொருளை
 மேலேற்றி கேவலப்படுத்துவது  தன்னைத்தானே விளம்பரம் செய்வது
 பயித்தியக் கா ரத்தனம் அல்லவா ?

கேட்டீர்களே திரு இராகவன் கருத்து கிட்டியதா? 

நூ த லோ சு
மயிலை
ஊ 

--

DEV RAJ

unread,
Jan 21, 2018, 1:04:23 PM1/21/18
to வல்லமை





பா ராகவன் எழுதியது கண்டனம் பெற்றது -

அவர் பேசியது பொதுவெளியிலன்று.

ஆண்டாள் ஆலயப் பணி செய்ததற்குக் கல்வெட்டுச் சான்றோ,
இலக்கியச் சான்றோ, வைணவப் பனுவல்களில் அகச்சான்றோ
கிடையா. 

கோபிநாத ராவ் ஆண்டாளை தளிச்சேரிப் பெண் என
எங்கே சொல்கிறார்? 



திருவரங்கம் ஆலயத்தில் ஆண்டாளுக்கென இரு சிற்றாலயங்கள்
உள்ளன.ஆலயப் பணி செய்த மகளிருக்குத் தனி ஆலயம் அமைக்கும்
வழக்கம் உண்டா?

ஆண்டாள் தாம் ஆலயப்பணி செய்ததாக எங்கேயாவது
பாடியுள்ளாரா?


தேவ்
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jan 21, 2018, 1:10:48 PM1/21/18
to vallamai
கைக்கிளை அகத்திணைகளில் ஒன்று.

21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:04 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Jan 21, 2018, 11:03:00 PM1/21/18
to vallamai

பா ராகவன் எழுதியது கண்டனம் பெற்றது -

எப்போது??

அவர் பேசியது பொதுவெளியிலன்று.

அவர் சொன்னது பொது வெளியில் அன்று என்பதால் என்ன சொல்ல நினைக்கின்ரீர்
அதனை ஓர் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றா ??
உங்கள் மனம்போன போக்கெல்லாம் ஒரு நிலை இல்லாமல் சௌகரியம் போல்
பேசுவது தான் உங்கள் வாத நிலையின் திறனா? ?

ஏதோ கல்வெட்டு சான்று என பேசுகின்ரீரே இது என்ன கள்ளத்தனம் கல்வெட்டு
வழியாகத்தான் எல்லாம் பேச வேண்டும் என்றால் பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்கள்
பாசுரம் வரலாறு எல்லாம் கல்வெட்டுடன் காட்டுங்களேன் முடியுமா 

எதிலும் உங்கள் மனம்போன போக்கெல்லாம் சௌகரியம் போல் பேசுவது தான் உங்கள்
 வாதாப்  போக்கா அது  குறைபாடுடையது அல்லவா  ?

ஆண்டாள் பாடியது நாச்சியார் திருமொழி என்று திவ்வியப்பிரபந்தம் தொகுத்தபோது
தொகுத்துள்ளார்களே அவையெல்லாம் 4000 பாடல்களுக்கு கல்வெட்டு சான்று உள்ளனவா 
இல்லாத ஒன்றைக் காட்டுங்கள் என்பது திறனற்றவன் பேசும் திசை திருப்பும் சொற்கள் 

இராஜாஜி தன மனம் சென்றவழி இது நாச்சியார் பா டவில்லை என்கிறாரே பின் கல்வெட்டுச்
சான்று எதற்கு 
அத்னையும் மேற்கூறிய வழுக்கல்போல் ஓர் சான்றாக எடுக்க வேண்டாம் என்கிறரீரா ??


நூ த லோ சு
மயிலை
ஊ 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

DEV RAJ

unread,
Jan 22, 2018, 4:08:44 AM1/22/18
to வல்லமை
சான்றில்லாத எதுவும் அனுமானம் மட்டுமே ஆகமுடியும்;
’தேவதாசி’ எனும் கருத்தியலும் அனுமானமே.


தேவ்

DEV RAJ

unread,
Jan 22, 2018, 4:11:26 AM1/22/18
to வல்லமை
On Sunday, 21 January 2018 20:03:00 UTC-8, N D Logasundaram wrote:
பா ராகவன் எழுதியது கண்டனம் பெற்றது -
எப்போது??




பா.இராகவன் தனது வாசகர்களை மிக மோசமாக ஏமாற்றுவதுடன், தமது வணிக எழுத்தில் அறிவுஜீவி புகழ்வட்டத்தை சேர்க்க, ஆபாச இலக்கியம் (Porn) குறித்து பேசும் போது, ஆண்டாளது பாசுரங்களை அனாவசியமாக இழுத்திருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னையும், தன்னை வளர்த்த சமயச் சூழ்நிலையையும், தன் வாசகர்களையும் கீழ்மைப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நம் அனுதாபங்கள் உரித்தாகுக. ஆபாச எழுத்து என்பது வேறு; காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி என்பது வேறு. முன்னது வாலிப வயதின் எழுச்சிக்கோ அல்லது வாலிப-வயோதிகத்தின் இயலாமைக்கோ ஒரு வடிகால். பின்னது அவ்வுணர்ச்சியின் வீச்சையும் ஆழத்தையும் ஆதாரத்தன்மையையும் அறிந்து கொண்டு, அதனை பிரபஞ்சமெங்கும் கவியும் ஓர் உணர்வாக உயர்த்துவது. நாயகி-நாயக பாவத்துடன் இறைமையை அணுகுவது இது.



தேவ்

DEV RAJ

unread,
Jan 22, 2018, 4:49:00 AM1/22/18
to வல்லமை
On Sunday, 21 January 2018 20:03:00 UTC-8, N D Logasundaram wrote:
ஏதோ கல்வெட்டு சான்று என பேசுகின்ரீரே இது என்ன கள்ளத்தனம் கல்வெட்டு
வழியாகத்தான் எல்லாம் பேச வேண்டும் என்றால் பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்கள்
பாசுரம் வரலாறு எல்லாம் கல்வெட்டுடன் காட்டுங்களேன் முடியுமா 


ஆய்வு நோக்கில் ஆழ்வார்களை அணுகினால் அவை தேவைப்படும்;
நம்பிக்கை அடிப்படையில் செல்வோர் அவை கோரார்.
எந்த இலக்கியத்தின் மூலப் படிக்கும் கல்வெட்டுச் சான்று
தேட முடியாது, திருக்குறள் உள்பட. அது எந்த எழுத்துருவில்
இருந்தது என்பதும் யாருக்கும் தெரியாது.

இங்கு ஆய்வு, பல்கலை ஆராய்ச்சி என்றெல்லாம் பேசப்படுவதால்
கல்வெட்டுச் சான்று கோருவதில் தவறில்லை


தேவ் 

DEV RAJ

unread,
Jan 22, 2018, 4:54:29 AM1/22/18
to வல்லமை
On Sunday, 21 January 2018 10:10:48 UTC-8, வேந்தன் அரசு wrote:
கைக்கிளை அகத்திணைகளில் ஒன்று.


கைக்கிளை பொதுவாக அகத்திணையே. அகத்திணைக் கைக்கிளை பெண்ணிற்கு இல்லை. பெரும்பாலும் ஆண்களின் ஒருதலைக் காமமே
பேசப்படும். ஆனால் நச்சினார்க்கினியர் கருத்துப்படியும், தொல்காப்பியம் ’காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்பதாலும்
இது புறத்திணைக் கைக்கிளை எனப்படும். இருபாலாருக்குமுரியதே.  அதனாற்றான் திருமங்கையாழ்வார்,நம்மாழ்வார் போன்றோரின் 
பாடல்களும் புறத்திணைக் கைக்கிளையாயின.


தேவ்

DEV RAJ

unread,
Jan 22, 2018, 5:16:34 AM1/22/18
to வல்லமை
On Sunday, 21 January 2018 20:03:00 UTC-8, N D Logasundaram wrote:
இராஜாஜி தன மனம் சென்றவழி இது நாச்சியார் பா டவில்லை என்கிறாரே 


ராஜாஜி சொன்னது ஓர் அனுமானம் மட்டுமே;
அவர் தாம் ஆய்வு செய்ததாகச் சொல்லிக்கொள்ளவில்லை;
எந்த ஒரு பல்கலைக் கழக ஆய்வையும் துணை தேடவில்லை.
காஞ்சீபுரம் அண்ணன் ஸ்வாமியின் மறுப்பைப் பார்த்ததும்
அதற்கு விடை தரவில்லை. அது அப்படியே முடிந்து போனது.
பின்னால் வந்தவர்களே அதை இன்னும் பிடித்துத் தொங்கிக்
கொண்டிருக்கின்றனர். ராஜாஜியின் துறைகள் அரசியலும்,
சட்டமும். பிற துறைகளில் அவர் சொல்வது அதாரிடி ஆகாது.
விவாதம் செய்யுமளவு தம்மிடம் சமய நூல் சுவடிகள் இல்லை
என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.


தேவ்

வேந்தன் அரசு

unread,
Jan 22, 2018, 11:01:16 AM1/22/18
to vallamai


22 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 1:54 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

<காமப்பகுதி கடவுளும் வரையார்>
இது பாடாண் திணையுள் வரும்.
கைக்கிளையில் பெயர் சுட்டிப்பேசார். பாடாண் திணையில் பெயரைசொல்லலாம்.

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Jan 22, 2018, 12:36:00 PM1/22/18
to vallamai
ஆண்டாள் பாசுரங்களை சங்க இலக்கிய வரையறைக்குள் நிலை நிறுத்த இயலாது
தலைவன் - தலைவி உறவின் வெளிப்பாடு ஆண்டாளின் பக்தி நிலைப் படைப்புகளுக்கு ஒத்து வராது
ஆழ்வார்கள் அனைவரும் தங்களைப் பெண்ணாகப் பாவித்து இறைவனை ஆணாகக் கருதிப் பாடியுள்ளானர் எனினும் ஆண்டாள் மட்டுமே பெண்

சங்க இலக்கியத்துக்கும் சைவ வைணவ மறுமலர்ச்சிக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவான தமிழ் அருளாளர்கள் உருவாக்கிய பக்தி இயக்கத்தம் பற்றிய தகவல் இன்னும் கிட்டவில்லை என்ற நிலையில் ஆண்டாளை அவர் வாழ்ந்த காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று கருத்தை வெளிப்படுத்துவதற்கு மாற்றாக ஆண்டாள் வாழ்ந்த காலம் மற்றும் அதற்கு குற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் மக்கள் இயக்கமாக இருந்த தமிழ் சைவ தமிழ் வைணவ இயக்கங்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்

மூத்த கணியன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.

வேந்தன் அரசு

unread,
Jan 22, 2018, 1:42:25 PM1/22/18
to vallamai
<
தலைவன் - தலைவி உறவின் வெளிப்பாடு ஆண்டாளின் பக்தி நிலைப் படைப்புகளுக்கு ஒத்து வராது>

புறத்திணைபபடலில் ஒரு பெண்ணின் ஏக்கம்


அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே;
என் போல் பெரு விதுப்புறுக என்றும்
ஒரு பாற் படாஅதாகி,
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே!


22 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:35 அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

செல்வன்

unread,
Jan 22, 2018, 10:14:49 PM1/22/18
to செல்வன்
சற்றுமுன்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்டார் 

வேந்தன் அரசு

unread,
Jan 23, 2018, 12:16:10 AM1/23/18
to vallamai, செல்வன்
எந்த பக்தகோடியும் கடவுளை நம்புவதில்லை.
 ஆண்டாளைப்பழித்தவனை அரங்கன் பார்த்துக்குவான் என அவனவன் வேலையைப்பார்க்கலாமே!


22 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:14 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
சற்றுமுன்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்டார் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Jan 23, 2018, 6:02:41 AM1/23/18
to vallamai
திரு தேவ் இராஜாஜி கருத்தை தாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால்
 நாச்சியார் திருமொழி யார் பாடியது அல்லது உங்கள் மனம்போன
 போக்கில்தான் சொல்லுங்களேன் யார் பாடியதாக சொல்லப்போகின்றீர்  
வெளியே செல்லும் விவாதம் வேறு இங்கு நம் செய்யும் விவாதமாகவே கொள்வோம் 

கைக்கிளை ஆண்மகவுனுக்குத்தான் என்றால் நாச்சியார் திரு மொழியை எதனி ல் சேர்ப்பீர்?
ஆண்மகன்பாடவில்லை என்றால் யார் பாடியதுயது? பெண் பாடியது ஆகாதா ?
 நா தி பி குறிப்பதுபோல் ஆண்டாள் பாடவில்லையா? நாச்சியார் திருமொழி என 
ஏடு எழுதினார் தவறு என்கிறரீரா? அதனில் வருவது இப்படி உள்ளது எதற்கு நல்ல
குல மகளிர் எல்லாம் இதனை ஏன் ஓத வேண்டும் இதனை  வெளியில் விளக்கிப்
பேசுவது கூடாது தவறு என்கிறீரா?
ஏதாவது ஒன்றினை முடிவாக கொண்டு பேசத்தெரியாதா? என் இப்படி நழுவல்கள் ? 
 நிற்க 
பி ஜெ பி  சொல்வது போல் பகவத் கீதை தான்  இந்துமதம் என்றால் பௌத்தம் சமணம் சீக்கியம்
எல்லாம்தான்  இந்து என் கொள்ள வேண்டும் எனும்  கொள்கை பித்தலாட்டம்   இல்லையா




 



7                                                       

நூ த லோ சு
மயிலை
ஊ 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


Virus-free. www.avast.com

N D Logasundaram

unread,
Jan 23, 2018, 6:08:59 AM1/23/18
to vallamai
நா ன் வைத்த கருத்து
நாச்சியார் திருமொழி தானே சான்று அதனில் காணும் விளக்கங்கள் விவரித்தால்  தானே உண்மை புரியும் 
அதனைத்தான் திரு இராகவன் மிக நகரிகமாக் வைத்துள்ளார் அது அவர்கருத்து அதனை பற்றி நீங்களோ
நானோ கருத்து ன்சால்வதற்கு முயலலாம் அவ்வளவே 

நூ த லோ சு
மயிலை


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


Virus-free. www.avast.com

N. Ganesan

unread,
Jan 24, 2018, 4:53:41 AM1/24/18
to வல்லமை
On Monday, January 22, 2018 at 7:14:53 PM UTC-8, செல்வன் wrote:
சற்றுமுன்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்டார் 

 ஆண்டாள் சர்ச்சை: தீர்த்து வைக்க திமுக, பாஜக போட்டி!

NG

ஆண்டாள் சர்ச்சை: தீர்த்து வைக்க திமுக, பாஜக போட்டி!

 ஆண்டாள் சர்ச்சை: தீர்த்து வைக்க திமுக, பாஜக போட்டி!

இன்று (ஜனவரி 23) காலை 6 மணியளவில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் மதுரையில் இருந்து புறப்பட்டு திருவில்லிப்புத்தூருக்குப் புறப்பட்டார். அங்கே ஜீயரைச் சந்தித்துவிட்டு ஆண்டாள் சந்நிதிக்கும் சென்று , ‘ஆண்டாள் திருவடிகளே சரணம்’ என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

வைரமுத்துவின் ஆண்டாள் பற்றிய கருத்தைப் பெரிதாக பற்ற வைத்தது பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் மிகக் கடுமையான பேச்சு. அதேநேரம் பாஜக பற்ற வைத்த சர்ச்சையை பாஜகவே மெல்ல அணைத்திருக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத் தக்கது.

ஆம். தினமணி ஆசிரியரோடு ராமகிருஷ்ணா மடத்துப் பிரமுகர்களும், பாஜகவின் ஊடகப் பிரிவு மாநில தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத்தும் சென்றிருந்தனர். பிரசாத் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசையின் தீவிர ஆதரவாளராக அறியப்படுவர். மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர்.

இந்நிலையில் பிரசாத்தின் தொடர் முயற்சியால்தான் வைத்தியநாதன் திருவில்லிப்புத்தூருக்கு இன்று சென்றார் என்று தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அலையடித்த நிலையில் நாம் இதுபற்றி பிரசாத்திடமே பேசினோம்.

பாஜக ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், “நான் தினமணி ஆசிரியரின் மாணவன். பலர் சித்திரிக்கிற மாதிரியான நபர் அல்லர் அவர். அவரைப் பற்றி மிக நன்றாக அறிவேன். வைரமுத்துவின் அந்த வார்த்தைகளைப் பிரசுரிக்க வேண்டாம் என்று சில வைணவர்கள் அவரிடம் சொன்னதாகவும், அதை அவர் மறுதலித்ததாகவும் அவர் மீது புகார்கள் வளைய வந்தன. ஆனால் இன்று காலை தினமணி ஆசிரியர் திருவில்லிப்புத்தூர் ஜீயரை சந்தித்து இரண்டு மணி நேரம் உரையாடியதில் பல பிரச்னைகள் தீர்ந்துவிட்டன’’ என்றார்.

இருவரும் என்ன பேசினார்கள் என்று கேட்டோம்.

”ஜீயர் மிகவும் தன்மையாகவும், கனிவாகவும் பேசினார். ‘நீங்கள் பாரதத்தின் கலைகளையும், ஆலயங்களையும் பற்றியெல்லாம் தினமணியில் எவ்வாறு எழுதுகிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் உங்களை ஆண்டாள் சந்நிதியில் இப்படி நிறுத்தும் அளவுக்கு சூழல் ஆகிவிட்டது’ என்ற ஜீயர்,

’இந்தக் கட்டுரையை பிரசுரிக்க வேண்டாம், அந்த வார்த்தைகளையாவது பிரசுரிக்க வேண்டாம்னு உங்களிடம் கேட்டும், நீங்கள் அதை மறுத்து அப்படியே பிரசுரத்துக்கு அனுப்பினதா சொல்லுகிறார்களே?’ என்று தினமணி ஆசிரியரிடம் கேட்டார்.

அதற்கு தினமணி ஆசிரியர், ‘அப்படி யாரும் என்னிடம் சுட்டிக்காட்டவும் இல்லை, நான் அவர்களை மறுத்துப் பேசவும் இல்லை. இந்த கட்டுரை ஆற்றிய நாளில் என் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டதால் நான் அவரைப் பார்க்க சென்றுவிட்டேன். அதன் பின் ஐந்து நாட்கள் என்னால் பணியில் முழு கவனம் எடுத்துக் கொள்ள முடியவில்லை. மற்றபடி நான் வேண்டுமென்றே அந்த வார்த்தையைப் பிரசுரிக்கவில்லை’ என்று விளக்கம் அளித்தார் தினமணி ஆசிரியர்.

அதையடுத்து ஜீயர், ஆசிரியர் வைத்தியநாதனிடம், ‘வைரமுத்துவையும் இங்கே தாங்கள் வரச் சொல்லி வற்புறுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த தினமணி ஆசிரியர், ‘வைரமுத்துவை நான் சந்தித்து உங்களுடன் பேசியது பற்றி அவரிடம் சொல்கிறேன். உங்களைப் போன்றவர்கள் மனதளவில் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துகிறேன். ஆனால் அவரை இங்கே வரச் சொல்லி என்னால் வலியுறுத்த முடியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு. நான் அவரை கட்டாயப்படுத்த முடியாது’ என்று சொன்னார்.

அப்போது ஜீயர், ‘இது தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிட்டது. நாங்கள் அவரை மனிதர்களிடத்தில் மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை. ஆண்டாள் தாயாரிடம் வந்துதான் கேட்கச் சொல்கிறேன். அவர் இங்கே வரட்டும், ஆண்டாளைப் பார்க்கட்டும். ‘அம்மா... நான் தவறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வார்த்தை உங்களை வணங்கும் கோடானுகோடி பேரைப் புண்படுத்தியிருக்கிறது. அவர்கள் அதை தவறு என்று கருதுகிறபோது நான் என் தாயிடம் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று அவர் இங்கே வந்து சொல்லட்டுமே. அதில் அவருக்கு ஒரு கௌரவக் குறைவும் வரப் போவதில்லை’ என்று ஜீயர் குறிப்பிட்டார்.

சில நேரங்களில் ஜீயர், தினமணி ஆசிரியர் இருவருமே கண் கலங்கிவிட்டனர். ஜீயரை சந்தித்து முடித்த கையோடு ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, ஆண்டாள் திருவடிகள் சரணம், ஜீயர் திருவடிகள் சரணம் என்று வணங்கினார் தினமணி ஆசிரியர். உருக்கமான சந்திப்பு இந்த சர்ச்சையில் பாதியை முடித்துவிட்டது. மீதியையும் விரைவில் முடித்துவிடும்’’ என்றார் பிரசாத்.

பாஜகவின் இந்த காய்நகர்த்தலுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

தினமணி என்ற பாரம்பரிய நாளிதழை பாஜகவினர் சமூக தளங்களில் சகட்டுமேனிக்குத் தாக்கினர். இந்நிலையில் இப்போது நாம் நடத்தும் தாக்குதல் பிற்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு பாதகம் ஆகிவிடக் கூடாது என்றும் பாஜக மூத்த தலைவர்கள் கருதினர். இந்நிலையில்தான் அவர்கள் தினமணி ஆசிரியருக்கு நெருக்கமான பிரசாத்தின் மூலம் இந்த சந்திப்பை நடத்தச் செய்து சுமுக சூழலை உண்டாக்கியிருக்கின்றனர். பின்னாட்களில் தினமணி தன்னை ஒரேயடியாக எதிர்த்துவிடக் கூடாது என்ற பாஜகவின் பார்வையும் இதில் இருக்கிறது என்றனர் கட்சி வட்டாரத்தில்.

மேலும் ஜீயரின் உண்ணாநோன்பை முடித்துவைத்தது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா என்று ஜெகத்ரட்சகன் கூறியதை பாஜக வட்டாரங்கள் ரசிக்கவில்லை. ஜீயரிடம் பேசிப் பிரச்னையை தீர்க்கும் அளவுக்குக்கூட பாஜக இல்லையா? நமது ஏரியாவில்கூட திமுகதான் விளையாடுகிறதா? இதில்கூட திமுகதான் செல்வாக்கு செலுத்துகிறதா என்ற கேள்வி பாஜகவினர் மத்தியிலேயே எழுந்தது. அதையெல்லாம் முடிவுகட்டும் விதமாகத்தான், தான் பற்ற வைத்த இந்த சர்ச்சையை தானே முன் வந்து அணைக்க ஆரம்பித்திருக்கிறது பாஜக.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் இந்தச் சந்திப்பைப் பற்றி இன்றே வைரமுத்துவிடம் அலைபேசியில் பேசிவிட்டார். அப்புறம் என்ன என்பது ஆண்டாளுக்கே வெளிச்சம்!

-ஆரா

N. Ganesan

unread,
Feb 1, 2018, 5:02:17 AM2/1/18
to மின்தமிழ், vallamai
ஹார்வர்ட் தமிழ்ப்பீட நிதியுதவி: - வைரமுத்து
முழுச் சொற்பொழிவும்,


தினமணி எடிட்டர் கே. வைத்தியநாதன் ஏற்பாடு செய்த
வைரவமுத்தின் ‘ஆண்டாள்’ பேச்சு:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 4, 2018, 8:47:48 AM2/4/18
to மின்தமிழ், vallamai
நம் அனைவர்க்கும் தாயனைய ஆண்டாள்:
http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19661

இணையம் முழுதும் வைரமுத்துவின் பேச்சும், தினமணியில் பிரசுரமான வைரமுத்துவின்
‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையும் கிடைக்கிறது. இதனை இணையம் முழுக்க எப்படி நீக்குவது?

வைரமுத்துவின் தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையை தடை செய்ய ஹைகோர்ட்டில் வழக்கு

மூதறிஞர் ராஜாஜி மகாபாரதம், இராமாயணம் என்ற இந்தியாவின் இரண்டு
இதிகாசங்களையும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கு எளிய, இன்றைய தமிழில்
நூல்கள் எழுதி ஹிந்து சமயத்தின் அரிய பொக்கிஷங்களைப் பரப்பிய பெரியோர்.
அவரது கருத்தாக ஆண்டாள் பற்றி எழுதினார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு என
ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். (ஃபேஸ்புக்கில் நான் இல்லை. பின்வரும் கட்டுரையின்
ஃபேஸ்புக் வலைச்சுட்டி தாருங்கள். நன்றி. யாருடைய மொழிபெயர்ப்பு இஃது? நா. கணேசன்

சனி, 03 பிப்ரவரி 2018 15:32

(1946 ஜூன் மாதத்திய திருவேணி பத்திரிகையில் வெளிவந்த பார்த்த சாரதியின் ஆண்டாளின் காதல் என்னும் கட்டுரையை படித்த பிறகு திரு.ராஜ கோபாலச்சாரியார்   கீழ்க்கண்டவற்றை ஒரு கடிதமாக எங்களுக்கு எழுதி அனுப் பினார்.  திரு.ராஜாஜி அவர்கள் அளித்த விளக்கம் பரவலாக அறியப்படாமல் இருந்ததால் அவர்களுடைய அன்பான அனுமதியின் பேரில் அதனை நாங்கள் வெளியிடுகிறோம் - இணை ஆசிரியர்)

ஆண்டாள் உண்மையிலேயே பெரி யாழ்வாரால் வளர்க்கப்பட்ட மகள் அல்ல. அது அவரது கவிதை மனதினால் உரு வாக்கப்பட்ட ஒரு பாத்திரமாகும். தனது கற்பனையில் ஆன இந்தக் குழந்தை பேசுவது போன்ற பாடல்களை அவர் எழுதினார் - பக்திப் பாடல்களின்  வழக்க மான பாணியை     மாற்றிக்கொண்ட பெரியாழ்வார், காதல் நோய்ப்பட்ட ஒரு பெண்ணின் தாபத்தினை மத அனுபவங் களாக வெளிப்படுத்தினார்.

காதலால் துன்பப்படும்  ஒரு பெண்ணின் மொழியிலேயே பெரி யாழ்வார் பேசுவது என்பது நாம் அனை வரும் நன்றாக அறிந்த ஒரு தந்திரம் தான். தனது மனதுக்கு உகந்த மணாளன் ஆன எம்பெருமானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மகளையே அவர் கற்பனையில் உருவாக்கிவிட்டார். ஞானம் பெற்ற இம்மனிதர் மீது வீழ்ந்த தெய்வத்தின் கருணையையே தான் கண்டெடுத்து பாசத்துடனும் அன்புடனும் வளர்த்த மகளாக பாவித்தார்.

தங்களின் முதல் அனுபவத்தில் பொதுவாக மக்கள் இருப்பது போலவே அவளும் முதலில் வெட்கம் கொண் டவளாகவும் ரகசியம்  பெறுபவளாகவும் இருந்தாள். பெருமாளுக்கான மாலையை ரகசியமாகத் தான் போட்டுக்கொண்டு அழகு பார்த்த கதை இதுதான்.    சமூகப்பணியில் ரகசி யம் காப்பதை உலகம் ஒப்புக்கொள்வ தில்லை.

எம்பெருமானையே மணந்து     கொள்வது  என்பது ஆண்டாளின் விருப் பம். ஞானம் பெற்று ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப் படுவதைவிட ஆண் டவன் மேல் பக்தி உணர்வில் மூழ்கி கிடப்பதையே அனைத்து பக்தர்களும் விரும்புவார்கள் .

ஆண்டாள் இறைவனை அடைந்த போது ஏற்பட்ட துன்பம் இதுதான். ஒருவர் சமாதிநிலையை அடையும் போது தன்னுடைய தனித்தன்மை யையும் ஆழ்ந்த  மகிழ்ச்சியையும் இழந்து விடுகிறார். இறைவனிடம் ஒருவரை  எடுத்துச்செல்லும் உள்ளுறை  கருணைக்கு எதிராக நுணுக்கமான கல்வியாளர்கள் போராடுகின்றனர்.  ஆண்டாளையே பிந்தையவராக செய்து கொண்ட பெரியாழ்வார் ஆண்டாளின் சந்தேகங்களையும் துயரங்களையும் தந்தையான தனக்கு அடையாளமாக ஆக்கிக் கொள்கிறார்.

இவ்வாறு ஆண்டாள் இயற்றியது என்று கருதப்படும் இலக்கியம் பெரி யாழ்வாரின் ஓர் அத்தியாயமாக இருக்கக்கூடும். மற்ற துறவிகளின் பக்திப் பாடல்களில் வரும் காதல் கதைகளைப் போன்றதே இந்த அத்தியாயமும்.

ஆனால் பாரம்பரியமான ஒருதனி நபராகவும் ஒரு துறவியாகவும் கருதப் படும் அளவுக்கு ஆண்டாளின் கதை மிகுந்த பாதிப்பும் புகழ் பெற்றதாகவும் ஆகிவிட்டது - ஒரு கவிதையின் கதாபாத்திரம் ஒரு தனிக் கதையாகவே ஆகிவிட்டது.

இக்காலமாக இருந்து  இருந்தால் அது கட்டுக்கதை என்று ஒதுக்கப்பட்டு இருக்கும். ஒரு கூடுதல் துறவியாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மிகுந்த பக்தி கொண்டவராக தன்னையும் தன் மகளையும் பெரியாழ்வார் ஆக்கிக் கொண்டார்.

முகநூலிலிருந்து:

கிருஷ்ணன் டி.கே.பாலா

வேந்தன் அரசு

unread,
Feb 4, 2018, 9:51:41 AM2/4/18
to vallamai, மின்தமிழ்
ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெயரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று.

4 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:47 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Feb 4, 2018, 9:59:31 AM2/4/18
to மின்தமிழ், vallamai
2018-02-04 6:51 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெ யரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று.

புனைபெயர். இது வினைத்தொகை. உவேசா போன்றோர் எழுதியுள்ளனர். எதற்கு ஒற்று மிகுகிறது?
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Feb 4, 2018, 10:06:48 AM2/4/18
to vallamai, மின்தமிழ்


4 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:59 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



2018-02-04 6:51 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெ யரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று. 

புனைபெயர். இது வினைத்தொகை. உவேசா போன்றோர் எழுதியுள்ளனர். எதற்கு ஒற்று மிகுகிறது?

புனைவுப்பெயர் சரியா?

 

N. Ganesan

unread,
Feb 4, 2018, 10:34:27 AM2/4/18
to மின்தமிழ், vallamai
2018-02-04 7:06 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


4 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:59 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


2018-02-04 6:51 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ராஜாஜி பெரியாழ்வாரை இழிவுபடுத்தியுள்ளார். புனைப்பெ யரில் ஒளிந்துகொண்டு காமரசம் சொட்டும் பாசுரங்கள் செய்துள்ளார் என்று. 

புனைபெயர். இது வினைத்தொகை. உவேசா போன்றோர் எழுதியுள்ளனர். எதற்கு ஒற்று மிகுகிறது?

புனைவுப்பெயர் சரியா?

புனைபெயர் = புனைவுப்பெயர். ஆனால், நீளமான பெயர் வேண்டாமே.

புழுக்கு/புழுக்கல் (’கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே!’ -பதிற்.) - இதனைப் பருப்புச்சோறு என விலக்கினார் நச்சினார்க்கினியர்.
புழுக்கலும், விழுக்குடை மடையும் -சிலம்பு (புழுக்கல் = அரிசீம்பருப்புஞ்சாதம், விழுக்குடைமடை - கறித்துண்டுகள் பெரட்டின சோறு.)

குறுகிய பழைய பெயர்களை விடுத்து definition போல விரித்துச் சொல்வதால் தமிழ் தன் சொல்வளத்தை இழக்கிறது.

ஆண்டாள் ஊர்ப்பெயரிலே இதைப் பார்க்கலாம். கல்வெட்டுகளில் எல்லாம் சீவில்லிப்புத்தூர்/ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றுதான் உள்ளது.
டிகேசி எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்களிலே சீவில்லிப்புத்தூர்/சீவிலிப்புத்தூர் எனத்தான் எழுதியுள்ளார். அவர் பங்கு
ஓமந்தூராரிடம் சொல்லி சீவிலிப்புத்தூர் கோபுரம் தமிழ்நாட்டின் அரசுசின்னம் ஆனது. நேரு செக்குலரிஸ்ட். இது ஏன் 
என நேரு கேட்டபோது திராவிடக்கலையின் சின்னம் என்றார்கள். இப்போது ஜர்னலிஸ்ட் எழுத்தில் திருவில்லிப்புத்தூர் என
எழுதுவது ஏன்? தமிழின் வளம் குன்றி ஒற்றைப் பரிமாணமாக ஆகிக் கொண்டுள்ளது. சீரங்கம், சீனிவாசன், சீதரன், எல்லாம்
இருக்கும்போது பழைய பெயரான சீவில்லிப்புத்தூரை ஏன் தமிழ் இழக்கவேண்டும்? சீவைணவர்களும் அதையே சொல்கின்றனர்.
ஹ்யூஸ்டன் நகரில் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி உபன்யாசங்கள் கேட்டுள்ளேன். திருவில்லிப்புத்தூர் என்ற பழைய வழக்கு
இல்லை - காரணம்: திரு இல்லாத புத்தூர் எனப் பொருள் தந்துவிடும். அதனால்தான் சீவில்லிப்புத்தூர்/ஸ்ரீவில்லிப்புத்தூர் என்கிறார்.
சீரங்கமும், சீனிவாசனும் தமிழில் இருப்பதுபோல் சீவில்லிப்புத்தூர்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Feb 4, 2018, 12:00:31 PM2/4/18
to vallamai
ஆண்டாள் ஒரு ஆய்வு

தொடக்கப் புள்ளி பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவரின் ஆய்வுப் பார்வையில் ஆண்டாளின் தமிழ் தொடர்பானது.  ஆழ்வார்கள் வரிசையில் இறுதியாக ஒரு பரம்பரையின் முற்று புள்ளியாகக் கருதப்படுபவர் ஆண்டாள்.  ஆண்டாளின் படைப்புகள் வேதத்தின் தமிழ் வடிவம் என்று ஸ்ரீவணவர்களும் தமிழ் பக்தியின் வெளிப்பாடு என்று தமிழ் அறிஞர்களும் இருவேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர்

தென் தமிழகத்தில் வாய்மொழியாக ஆயர்பாடி மக்களிடையே பரவி இருந்த இசையுடன் பாடும் பாடல்களைத் திராவிட வேதத்தின் அங்கமாகத் தொகுக்க ஸ்ரீவைணவ ஆச்சாரியார்கள் ஆண்டாளின் பாடல்களைத் தேடித் திரட்டித் தொகுத்தனர்

வைணவத்தில் ஆழ்வார்கள் பன்னிருவர் என்றிருந்தாலும் அவர்களீல் பத்துப்பேரை மட்டுமே ஆழ்வார்கள் பட்டியலில் சேர்த்தனர்.  ஆண்டாள் பெயர் இடம்பெறவில்லை.  ஆண்டாளின் பாடல்கள் தமிழ் மரபுவழிப் பக்தியின் வெளிப்பாடா அல்லது வடபுல வேத வேதாங்கத்தின் சாரமா என்று வாதம் இன்னும் தொடர்ந்துகொண்டுள்ளது

பக்திவயப்பட்ட அருளாளர்கள் இறைவனை உருவமாகவும் அருவமாகவும் வழிபடுவது மரபு. ஆண்டாளின் பக்தி இறைவனை உருவமாக ஏற்றுக் கொண்டதால் அவர் பக்தியில் காமம் வெளிப்படுவதும் மற்ற ஆழ்வார்கள் இறைவனை உருவம் இல்லாத அருவமாகக் கருதிப் பக்திப்பாடல்கள் பாடியதால் காமத்தின் வெளிப்பாடு ஏற்படவில்லை என்று கருதுகோளை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்

ஆண்டாள் என்ற ஆழ்வார் ஸ்ரீவைணவ நம்பிக்கையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவதரித்தவர் என்ற நம்பிக்கை நிலைபெற்றுள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்த உள்ளுறை ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களின் காலம் கி.பி 550 - 950 என்று நிறுவினாலும் ஆண்டாள் வாழ்ந்த காலம் என்று ஒரு காலத்தை நிறுவ இயலவில்லை

பெற்றெடுத்த பிள்ளை என்றும் இல்லை இல்லை வளர்ப்பு மகள் என்று தொடர்ந்து வரும் அனுமானத்தில் எது சரி என்று நிறுவப் போதுமான தரவுகள் இல்லாத நிலையில் ஆழ்வார்களில் மிகக் குறுகிய காலம் வாழ்ந்தவர் என்று கருதப்படும் நிலையில் ஆண்டாள் பற்றிய  ஆய்வுகள் தொடரவேண்டுமே ஒழிய இறுதி முடிவுகளை ஆய்வாளர்கள் உறுதிபடச் சொல்ல இயலாது

மூத்த கணியன்


 


Reply all
Reply to author
Forward
0 new messages