பாட்டு இசை மதம்
இதஸ் கித தேரஹ ஸதி விஸரிய ஸுமந குதஸ ஸித குஹ (situlpavuva - koranakgala IC No 641)
விளக்கம்: தம்புரா பாடலில் (இதஸ் கித) தேர்ந்தவர் (தேரஹ), எப்போதும் தனை மறந்தவரான (ஸதி விஸரிய) சுமன குப்தருடைய நிலைத்த (ஸ்தித > ஸித) குகை இது. சதா தனைமறந்தவர் என்றால் தனக்கு தானே பேசி சிரிக்கும் பைத்தியம் ஆகிவிட்டவர். இதன் மூலம் நாரதர் போல பாட்டு பாடும் ஒரு சிறு மதக் கூட்டம் சுமன குப்தர் போல இருந்துள்ளது என்று தெரிகின்றது அல்லோ! . IC 641
கனக ரகிய உபசிக திஸய அகத அனகத ஸகஸ (silava kanda IC No. 673)
விளக்கம்: பாடியபடி இருக்கும் உபாசிகை திஸயாள் ஏற்படுத்திய குடைவுத் தளம் இது. வந்தவர் வராதவருக்கு உணவு (அன்னதானம் / ஸகஸ) வழங்கப்பட்டது. யாருக்காக இத்தளம் ஏற்படுத்தியது என்ற விவரம் இல்லை. இல்லற வாழ்வில் உபசகராய் இருப்பவரே பின்பு வானப்பிரஸ்தம் புகுவார். IC 673
ஈஸீர கித தேரஹ ஸதி விஹரிய பத பகினிய திஸ தேரஹ (situlpavuna, IC No 614)
விளக்கம்: தெய்வீகமாய் பாடுவதில் தேர்ந்தவர் (தேரர்), சதா சுற்றித் திரிபவரான பட்டர், தலைசிறந்தவர் (பஹிர் நிய / specialist) ஆன திஸ்ஸ தேரர்க்கு (உரிய தளம் இது). தேரர் என்பதற்கு இலங்கை தொல்லியலார் மூத்தவர் (elder).என்று தேரவாத மதப்படி சொற்பொருள் காட்டியது இங்கு பொருந்தாது காண்க. IC 614
சூட புதர கித தேரஹ அதி வஸிக பத திஸஹ (லெணெ) (Gongala, IC No. 670)
விளக்கம்: கொண்டைவிட்ட (சூட) மங்கள இசையில் (புதர கித) தேர்ந்தவரும் உடன் வாழும் சமசுகிருத அறிஞன் (பத) திஸனும் உறையும் (குடைவுத்தளம்). கீத >கித என ஒலிக்கும் பிராகிருதத்தில். இதை இலங்கை தொல்லியலார் ஆள் பெயராக காட்டிவிட்டனர். புத்த மதத்தில் பாட்டு, இசை போன்ற உத்தியில் பிச்சை எடுப்பது இல்லை. IC 670
தேவர கிதஸ ச தம தேரஸ ச லேணெ (Veherakema, IC N.700)
விளக்கம்: "தேவ" எனும் மேள இசைஞரும் "தம" எனும் நீண்ட மேள இசைப்பில் தேர்ந்தவரும் ஆகிய இருவர் உரையும் குடைவுத் தளம் இது. இவை நந்தி தேவர் போன்ற சிவ கணங்களின் இசைக் கருவிகள் ஆகும். இந்த இசைஞர்களும் வானப்பிரஸ்த துறவை ஏற்றவர் என்பதையும் புத்த மதத்தில் இசைக்கு இடம் இல்லை என்பதையும் ஒப்பிட்டால் இசை வழியில் வாழ்ந்தோர் புத்த மதத்தவர் அல்லர் என்பது புரியும். அது சரி ஆரியர் தமிழிசையை திருடிக் கொண்டனர் என பிதற்றும் சில தமிழர் இனி எங்கே கொண்டு போய் தம் முகம் புதைப்பரோ!! ஆரியருக்கும் இசை இருந்துள்ளது அன்றோ! IC 700
பாஸனாதரிய கமஸி கணக திஸ புத கணக திஸஹ லெணெ (Situlpavuna, IC No. 619)
விளக்கம்: (மனம் தடுமாறாத) கல்நெஞ்சராகத் திரிகின்ற ஜோதிடர் (கணக) திஸருடைய மகன் ஜோதிடன் திஸன் தந்தைக்கு குடைவுத் தளம் அமைத்தான். ஜோதிடம் தொழில் என்றாலும் இதனால் வளர்க்கப்படும் நம்பிக்கை அதை தனி மதம் போல காட்டும். காட்டாக, தோஷ நிவர்த்தியை சொல்லலாம். IC 619
சமண மதம்
பருமக தத ஜித பருமக பகினிய நதிகஸ ஜய பருமகளு ஸமனய லெணெ (Brahmanayagama, IC No.148)
விளக்கம்: மேன்மைமிகு தத்தன் மகளும் மேன்மைமிகு தலைசிறந்த (பகிர்னிய) குழல் (நதி கஸ) இசைஞர்க்கு மனைவியுமான மேன்மைமிக்கவள் சமண துறவாட்டி ஆகியதால் ஏற்படுத்திய குடைவுத்தளம் இது. துறவாட்டி ஆனதால் பழைய பெயர் தரவில்லையோ? நடி என்பதற்கு நடிகன் என்று இலங்கை தொல்லியலார் பொருள் கூறிவிட்டனர் காரணம் பகினிய என்பதற்கு ஆள் பெயர் என்று கொண்டது தான் தவறு. இக் கல்வெட்டு தமிழ்நாட்டிற் போலவே சமணர் இலங்கையிலும் வாழ்ந்ததற்கு நற் சான்றாகும். IC 148
யாஹஸினி ஸமனிய லெணெ. அகத அனகத சதுதிஸ ஸகஸ. (vessagiri, IC No. 89)
விளக்கம்: ஓய்வற்றவள் / இளையோள் (யாஹஸினி) சமண துறவாட்டி ஆனதனால் ஏற்படுத்திய குடைவுத் தளம் இது. வந்தவர் வராதவர் என நாற்றிசை ஊரும் பெயரும் அறியாத மக்களுக்கு உணவு (அன்னதானம் / ஸகஸ) வழங்கப்பட்டது. IC 89
அதி ஆஜரிய படிய மாதா உபசிகா நாகயா (Tantirimale, IC No.112)
விளக்கம்: பேராசிரியன் பட்டியினுடைய தாய் உபாசிகை நாகவுடைய (குடைவுத்தளம் இது). இலங்கை தொல்லியலார் அதி - யானை, ஆஜாரிய - பாகன் என்று விளக்கம் கொடுத்தது பொறுப்பற்ற தன்மையையே காட்டுகின்றது. இப்படி பல இடங்களில் பிதற்றலாக விளக்கி உள்ளனர். ஆசார்ய என்ற சொல் சமண, ஆசீவக, வேத மரபில் ஆசிரியரை குறிப்பது உண்டு. புத்த மரபில் அது இல்லை. ஆனாலும் ஸகஸ என்ற ஒற்றைச் சொல்லை வைத்து dedicated to sanga என்கின்றனர். இன்று இணைய வசதி ஏற்பட்டுவிட்டதால் பிராகிருத சொற்களுக்கு சிறு முயற்சியில் பொருள் கிடைத்துவிடுகிறது. பாவம் அவர்கள் காலத்தில் 1970 இல் இந்த வசதி இல்லை.
தமிழ்நாட்டிலும் இப்படியான உபாசகர் பற்றி தமிழி கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. மதுரை அருகே திருவாதவூர் கல்வெட்டு 3:2 உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன் என்று உள்ளது. கீழவளவு கல்வெட்டு 4:1 உப(ச)அன் தொண்டி(ல)வோன் கொடு பளிஇ என உள்ளது. கொங்கர் புளியங்கொம்பு கல்வெட்டு 5:1 குற கொடுபிதவன் உபசஅன் உபறுவ(ன்) என உள்ளது. ஆண் பால் ஈறு "அன்" தனித்து காட்டப்பட்ட இத் தமிழி கல்வெட்டுகள் கி.மு 5 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை என்பதை மறக்கலாகாது. IC 112
ஸேனாபிதி பருமக புஸதேவஹ ஜித நாக ஸமனிய மஹா லெணெ. (Valaellugoda - kanda, IC No. 725)
விளக்கம்: படைத்தலைவர் மேன்மைமிகு பூசதேவர் மகள் நாக என்னும் சமண துறவாட்டி உடைய பெரும் குடைவுத் தளம் இது. துறவு நாள் உணவு (ஸகஸ) வழங்கப்பட்டது. IC 725
திஸ மஹாரஜஹ ஸேனாபிதிய அகிததஹ பார்யாய / ஸேனாபதி பருமக புஸதேவஹ ஜிதய உபஸிகா நாகய லெணெ / ஸகஸ தினே. (Valaellugoda - Kanda, IC No. 724)
விளக்கம்: தேவநபிய காமினி திஸ வேந்தனுக்கு படைத் தலைவரான அக்னி தத்தன் மனைவியும் படைத்தலைவர் மேன்மைமிகு பூசதேவர் மகளும் ஆன உபாசிகை நாக உடைய குடைவுத்தளம் இது. நாக வானப்பிரஸ்த துறவு ஏற்ற நாளில் உணவு வழங்கப்பட்டது. 725 ஆம் கல்வெட்டுப்படி நாக துறவு பூண்டாள் என உள்ளது. பிராமணரான இவள் சமண மதத்தை தழுவி இருக்கிறாள். ஆனால் ஸகஸ என்ற ஒற்றைச் சொல்லை வைத்து குடைவுத்தளம் புத்த சங்கத்திற்கு கொடுக்கப்பட்டதாக சொல்வதை எப்படி ஏற்க முடியும்? சமணர் புத்த சங்கத்திற்கு குறைவுதான் தளம் அர்ப்பணிக்க இது என்ன வேண்டுதலா? சமண குரத்தி நாக தேவநம்பிய திஸன் காலத்தவர் என்பதால் இது கி.மு 3 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, நிகழ்வு ஆகும். அப்போது புத்த மதம் அறிமுக நிலையில் தான் இருந்தது, பெரிதாக வளர வில்லை. IC 724
சிவ மதம்
ஸிவ நாக(ரசி) படகே கமனி ஸிவேன தினே இம லேணஸி வஸ வஸித சமணயே (Yatahalena - vihara, IC No. 796)
விளக்கம்: சிவ நாக அரசி படிக்க கிராமத்தான் சிவனால் இக் குடைவுத்தளத்தில் சமண துறவிகள் மழை நாளிலும் வாழ வகை செய்யப்பட்டது. IC 796.
ஜித தேரஹ மஹாஸுதஸனி உபஸிகா திஸய தேரஹ நாக லெணெ (virandagoda, IC No. 1090)
விளக்கம்: தேரருடைய மகள் மஹாசுதர்சனி உபாசகி ஆவாள். அந்த திஸய தேரருக்கு பாம்பின் படம் போன்ற குடைவுத் தளம் ஏற்படுத்தினாள். IC 1090
பத ஸிவபூதிய லெணெ ஸுபதிதிதே (Rajagala, IC No. 443)
விளக்கம்: சிவபூதியின் சுபதிதிதே எனப் பெயரிடப்பட்ட குடைவுத்தளம் இது. தமிழக சிவாச்சாரியார் மரபு போன்றதோ இது? பட்டன் > பத என பிராகிருதத்தில் சிதையும். பட்டன் என்றால் வேத சமஸ்கிருத அறிஞன் என்று பொருள். IC 443
ஸிவனபூதிய தேரஹ ஸதிவிஹரிய ஸிவஹ லெணெ (Situlpavuna, IC No. 608)
விளக்கம்: சிவானுபவம் உணர்ந்த தேரர், சதா சுற்றித் திரியும் சிவன் என்பவனின் குடைவுத்தளம் இது. இவர் சிவ மதத்தவர். தன் முன்னோர் ஏற்ற வானப்பிரஸ்த துறவை தவ வாழ்விற்காக ஏற்று குகை புகுந்தார். IC 608
காபாலிக மதம்
பருமக கபாலி திஸ புத கபாலி திஸஹ லெணெ, ஸகஸ. (Nilosalena, IC No. 950)
விளக்கம்: மேன்மைமிகு கபாலிக தியானத்தில் உறுதி கொண்டவருக்கு (திஸ) மகன் கபாலிகன் திஸன் வானப்பிரஸ்த துறவுக் குடைவுத் தளம் அமைத்தான், உணவளித்தான். மண்டை ஓட்டில் பிச்சை வாங்கித் தின்று அந்த மண்டை ஓட்டை மடிமேல் வைத்து இடுகாட்டில் தியானம் செய்பவர் கபாலிக தியான மதத்தவர் ஆவார். தந்தை வழியிலேயே கபாலிகராக இருப்பவர் தன் தந்தை முழு நேர தியானி ஆவதற்கு வானப்பிரஸ்த துறவுக்கு வழி செய்தார் எனலாம். IC 950
பிண தியான மதம்
பத ஸவபூதிஸ பருமக ஸுமந தேரஹ ச ஸவ ததேய லெணெ (Ancient Inscriptions of Ceylon, Edward Muller, pg 48, Mulagama No. 83b)
விளக்கம்: பட்டன் ஸவபூதியின் குடைவுத்தளம் இது. மேன்மைமிகு சுமன தேரனும் ஸவ தத்தனும் ஏற்படுத்தியது ஆகும். அப்படி என்றால் ஸவபூதி.மற்ற இருவர் உறவு என்ன என்று தெரியவில்லை. குருவுக்கு மாணாக்கர் செய்ததாக இருக்கலாம்.. பிணத்தின் ஆவியை வசப்படுத்தி அதை ஆட்டுவிக்கும்முறை அவித்ய தந்திரம் ஆகும். இவர்கள் அவித்யா தத்திரிகர்கள் போல தெரிகின்றது. பில்லி, சூனியம், ஏவல் இதனோடு தொடர்புடையது.
புதன கமிக ஸிவஹ ச கமிக ஸுமநஹ ச / கமிக ஸதனஹ ச லெணெ. ஸவ ஸாதனயே ஸமக பதி (Situlpana- Konara gala, IC No.624)
விளக்கம்: வழிநடத்தும் (புதன) நாடோடி (கமிக) சிவனும், நாடோடி சுமனும், நாடோடி ஸதனனும் தங்கும் குடைவுத்தளம் இது. பிண தியானத்தில் ஒருங்கிணைக்கும் தலைவனானவன் இம்மூவர் இருக்கும் இடம் இது என்று தீர்மானித்து கட்டளை இட்டான். அவன் பெயரை இங்கே குறிக்கவில்லை. IC 624
வணிகர் கல்வெட்டு
வணிக திஸஹ லெணெ ஸகஸ (vilba vihara, IC No. 897)
விளக்கம்: வணிகத்தில் உறுதி கொண்டவர் (திஸ) அமைத்துக் கொடுத்த குடைவுத்தளம் இது. யாருக்கு அமைத்தார் என்று குறிப்பு இல்லை. இவர் சமணர் என்றால் சமண துறவிக்கு ஏற்படுத்தி இருக்கலாம். IC 897
பருமக வணிஜ திஸஹ லெணெ. ஸகஸ. (Banbaragas latava, IC No. 515)
விளக்கம்: மேன்மைமிகு வணிகன் திஸனுக்கு ஏற்படுத்திய குடைவுத் தளம். உணவு (ஸகஸ - அன்னதானம்) வழங்கப்பட்டது. வணிகன் பெயர்? என்ன வணிகன் என்பது குறிக்கப்படவில்லை. IC 515
கஸகஸ ச வணிக ஸிவக லெணெ (Situlpavava, IC No.660)
விளக்கம்: வெங்கலக் கருவி இசைஞனும் (kasa kasa) வணிகன் சிவகனும் உறையும் குகைத்தளம் இது. வணிகர் சிலரும் வானப்பிரஸ்த துறவு ஏற்றுள்ளனர் என்பது உறுதி ஆகிறது. அண்மைக் காலத்தில் கூட பசு மாட்டை உடன் அழைத்து வந்து ஒரு வெங்கலத் தட்டை அதே கையில் ஒரு கொம்பால் தட்டி இசைத்தபடி பிச்சை எடுப்பவரை தெருக்களில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. IC 606
தமேட வணிஜ கபதி விஸாகஹ லெணெ (Periya puliamgulama, IC No. 356) தமேட வணிஜ கபதி விஸாகஹ ஸேனி கமே (IC No. 357)
விளக்கம்: தமிழ வணிகன் குடும்பகனான விசாகன் ஏற்படுத்திய குடைவுத் தளம் இது. அவன் படிக்கட்டும் செய்வித்தான் என்கிறது அடுத்த கல்வெட்டு IC 357
இலு பரதஹி தமேட ஸமனே கரிதே. தமேட கஹபதி கண பாசடி / ஸகஸ ஆஸனே / நஸதஸ ஆஸனே / க _ _ _ ஜிஸஹ ஆஸனே / _ _ _ ஆஸனே / கில்பிர ஸுஜாதஹ / நவிக கரவாஹ ஆஸனே (Anuradhapura, Abhayagiri area, IC No. 94)
விளக்கம்: மண் (இலு) தடுப்பை அல்லது வரப்பை (பரதஹி) இடித்து தமிழர் சமன் செய்கிறார் (கரிதே). தமிழ் குடும்பத் தலைவர் கண ஒரு நாள் துறவு ஒழுக்கமான "பாசடி" ஒழுக்கத்தை, நெருங்கிய இருப்பை என்று சமண சமய ஒழுக்கத்தை பற்றி விவரிக்கிறது கல்வெட்டு. இடைஇடையே சிதைந்து உள்ளது. இதற்கு சமணர் தான் தெளிவான விளக்கம் தர முடியும். வர > பர = வரத > பரத ஆனது. தமிழர் என்றால் தமிழில் தானே கல்வெட்டு பொறிக்க வேண்டும்? மகத ஆட்சிக்கு உட்பட்ட வட ஆந்திரம், கருநாடகம் ஆகிய இடங்களில் கூட மக்கள் மொழியில் கல்வெட்டு பொறிக்காமல் அரச மொழி பிராகிருதத்தில் கல்வெட்டு பொறித்த அதே கட்டுப்பாடு இலங்கையில் இருந்திருக்கும் போல தோன்றுகிறது. IC 94
ஆசீவகம்
ஸுமநஸ புத ஸாத்தேன கரிதே மநபதஸனே லெணெ (Bambaragas Latava, IC No.521)
விளக்கம்: ஸுமனன் மகன் சாத்தனால் உண்டாக்கப்பட்ட மனபதஸனி என பெயரிட்ட குடைவுத்தளம் இது. யாருக்கு உருவாக்கப்பட்டது என்ற செய்தி இல்லை. சாத்தன் என்ற பெயரை வைத்து இவன் ஆசீவகன் ஆதலின் ஆசீவக துறவிக்கு இதை உருவாக்கி இருக்க வேண்டும் என்று உய்த்துணரலாம் (infer). IC 521
பிற செய்திக் கல்வெட்டு
திஸ குத தேரஹ ஸதிவிஹரிய பத மஜிம பாணக திஸஹ லெணெ ஸுதஸனி.அகத அனகத ஸகஸ சதுதிஸ ஸகஸ. (Dambulla, IC No. 852)
விளக்கம்: புத்த மத மத்திம நிகாயத்தில் சொற்பொழிவாற்றும் திஸன், திஸகுப்த தேரனான சதா சுற்றித் திரியும் சமசுகிருத வேத புலவனுக்கு (பத < பட்டன்) அமைத்த குடைவுத் தளம் இது. இதற்கு சுதஸனி என பெயரிடப்பட்டது. வந்தவர் வராதவர் என நாற்றிசை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. திஸன் தன் தந்தை திஸ குப்தனுக்கு வானப்பிரஸ்த தவ வாழ்க்கை நெறிக்காக குடைவுத் தளம் செய்திருக்க வேண்டும். திஸன் பிராமண நெறியை விட்டு புத்த நெறியை தழுவி உள்ளான் தந்தை திஸ குப்தனோ மதம் மாறவில்லை என்று தெரிகின்றது. புத்த மதம் ஏதோ இந்திய மதம் என்பதால் தந்தைக்கு பழைய மத வழக்கத்தை நடப்பிக்க அனுமதித்தது. ஆனால் இன்றைய ஆபிரகாமிய மதங்கள் மதம் மாறிய மகனை இப்படி செய்ய அனுமதிக்க மாட்டா என்பதை சிந்திக்க வேண்டும். தியானம் செய்பருக்கு தலையில் இடம் மாறி மாறி ஏதோ ஒரு இடத்தில் சக்கரம் போல சுழலும். இந்த சுழற்சி மீது கவனம் செலுத்தினால் தொலைவான காட்சி தெரியும், சித்தர் ஆவிகளுடன் பேசலாம். அந்த இடத்திலேயே கவனத்தை ஊன்றினால் சப்தரிஷி நிலையைக் கூட எய்தலாம் என்பதால் அதை நல்ல காட்சி (ஸு + தர்ஷினி) சக்கரம் (pineal gland) என்றனர். இதை உபாசிப்பவரும் கல்வெட்டில் குறிக்கப்பட்ட தண்டு. இது திருமாலின் ஆழிப்படை அல்ல. இது யோக சக்கரம் ஆகும். IC 852
பருமக மலஸ புதி பருமக நமரி. பருமக நமரஸ புதி பருமக நாகஹ ஏதஸ கோமி. அகத அனகத சதுதிஸ ஸகஸ நியதே (Kandakadu: Tonigala, IC No. 318)
விளக்கம்: மேன்மைமிகு மலஸனின் மகள், மேன்மைமிகு நமரி, மேன்மைமிகு நமரனின் மகள் மேன்மைமிகு நாகன் இவர்களின் பாசத்திற்கு உரியவளுக்கு (கோமி) (குடைவுத்தளம் ஏற்பாடானது). வந்தவர் வராதவர் என நாற்றிசை மக்களுக்கு உணவு நியதிப்படி வழங்கப்பட்டது. மலஸன், நமரி, நாகன் ஆகியோருக்கு தாயும் மலஸன் மகள், நமரி மகள் ஆகியோருக்கு பாட்டியும் ஆன பாசமிகு பெண் இவள் வானப்பிரஸ்தம் புகுந்தாள் என தெரிகிறது. IC 318
பருமக வேள் ஸுமநஸ புத பருமக வேள்ஸ புத பருமக புசதேவஸ லெணெ, தேவநபியஸ ரகிதிஸ்ஸ அயகஸ லெணெ,தேவ ஒஹரணெ லெணெ ஸகஸ.
விளக்கம்: மேன்மைமிகு அரச பொறுப்பாளர் (வேள்) சுமனரின் மகன் மேன்மைமிகு அரச பொறுப்பாளர் (பெயர் குறிப்பு இல்லை) மகனான பூச தேவனுடைய குடைவுத் தளம் இது என்றதோடு நில்லாமல் தேவநம்பிய திஸ்ஸன் உடைய காவல் நிரம்பிய (ரகி திஸ்ஸ) வரிக்கருவூலகர் (ஆயக) குடைவுத்தளம் இது. தெய்வம் உறையும் குடைவுத்தளம் இது என்று தன் பாட்டன் சுமனன் என்று சொல்லி தன் தந்தையும் ஒரு அரச பொறுப்பு அதிகாரி என காட்டியதோடு தன்னை தேவநம்பிய காமினி திஸ்ஸனுடைய கருவூலத் தலைவன் என பெருமை படக் கூறி தன் குகைத்தளம் தெய்வ உறைவிடம் என்று சொல்வதில் இருந்து பூச தேவன் புத்த மதம் தழுவாதவன் என்பதை காட்டுகிறார். இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டினது. இவரும் தவ வாழ்விற்காக வானப்பிரஸ்தம் புகுந்தார். தமிழ்நாட்டு கல்வெட்டில் வேள் என்பது அரையனான சிற்றரசரைக் குறிக்கும் ஆனால் இலங்கை கல்வெட்டில் இதன் பொருள் மாறுபட்டு அரச பொறுப்பு அதிகாரி என்ற பொருளில் வழங்கிற்று. (புதிய கண்டுபிடிப்பு)
முக்காலமும் உணர்ந்த ஆனந்த மார்க்க தலைவர் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் தமிழரின் ஒளிவீசும் கண்களைக் கண்டு அதற்கு காரணம் அவர் பழகும் தந்திர யோகம் தான் என அறிந்து ஆரியர் இமய மலைக் குன்றுகளில் இப்படி ஒரு தந்திர யோக ஆன்மீக சமுதாயத்தை ஏற்படுத்தினர் என பாராட்டுகிறார், புகழ்கிறார். அவர்கள் வாழ்ந்த காடும் மலையும் சார்ந்த குன்றுகளுக்கு கோத்திரம் என்று பெயர். அதுவே அவர்களுக்கு அறிமுக முகவரி ஆனது பின்னாளில். அவர்களுடைய வழித்தோன்றல்கள் நாடு முழுதும் சென்று பரவி அங்கும் தமது ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டனர். இவருள் பிரம்மத்தை உணர்ந்தவர் தம்மை பிரம்மன் > பிராம்மண் என்றனர். இலங்கை அத்தகு வானப்பிரஸ்த துறவு இடமாக புத்த மதம் அங்கு வலுப்பெறும் முற்காலம் வரை இருந்து அழிந்துவிட்டதை இக்கல்வெட்டுகள் நமக்கு காட்டுகின்றன. இப்படி ஒரு சான்று வட இந்தியாவில் கூட இருந்திருக்குமா என சொல்ல முடியாது. இப்போது நான் முதன் முதலாக மறைக்கப்பட்ட இந்த வானப்பிரஸ்த துறவு வரலாற்றை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டேன். இனி, பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள் தான் மேற்கொண்டு இது தொடர்பான ஆய்வை முன்னெடுத்து செல்ல வேண்டும். உணர்ச்சிக்கு ஆட்பட்ட தென் பகுதி இலங்கையரால் பழைய மன நிலையை மாற்றிக் கொள்வது மிக கடினம் ஆகும். அவர்கள் உண்மையை கொண்டு செல்வதற்கு பயன்பட மாட்டார்கள். என் இந்த விளக்கம் பழைய பிழையான விளக்கத்தை வரலாற்றுப் பார்வையை புரட்டிப்போடும்.
IC என எண் குறிக்கப்பட்ட மேற்கண்ட கல்வெட்டுகள Inscriptions of Ceylon, Vol - I, Senarath Paranavithana வெளியிட்டவை. இரண்டாம் மடல (Volume) கல்வெட்டுகள் பிந்து பிராமியில் உள்ள கல்வெட்டுகள். அவற்றை நான் படிக்கவில்லை.
சுதர்சன உபசகம் : In specific esoteric or meditation contexts, the activation of the Kundalini energy can lead to a "Sudarshan Chakra" being perceived or visualized approximately a foot above the head as part of the opening of the Third Eye and Crown Chakras.
பாசடி: In Jainism, Paushad (often pronounced or written as Pausad, Posadh, or Posaha, though not typically Pasade) refers to a sacred lay practice where a householder adopts the strict, disciplined lifestyle of a monk or nun for a day. During this time, the person stays in a separate, clean room or a temple/Upashraya, maintains silence, reads scriptures (Svadhyaya), performs meditation (Samayik/Kayotsarga), and keeps a strict vow of celibacy.
