பாரத சமுதாயம் வாழ்கவே!

2,223 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 30, 2022, 6:08:30 PM8/30/22
to Santhavasantham

பாரத சமுதாயம் வாழ்கவே
----------------------------------------------

DKP: https://youtu.be/KVwZrk3vbmw
Sivasri Skandaprasad: https://youtu.be/-IOpKf5RZoI
K. J. Jesudas: https://youtu.be/lVH5Ca2Gmso

> பாரதியார் தன் வாழ்நாளில் பொது மேடையில் பாடிய கடைசி பாட்டு எது? எங்கே எப்போது பாடினார்.
> "பாரத சமுதாயம் வாழ்கவே" சென்னை கடற்கரைக் கூட்டத்தில்.
https://bharathipayilagam.blogspot.com/2015/06/blog-post_17.html

https://yarl.com/forum3/topic/260555-புரட்சியை-வரவேற்ற-புதுயுகக்-கவிஞர்-பாரதியார்-திவரதராசன்/
" ‘பாரத சமுதாயம் வாழ்கவே!’ என்று தொடங்கும் பாரதியின் பாடலே அவர் எழுதிய கடைசிப் பாடல் என்று பாரதி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனை உறுதிசெய்வது போல் ‘பாரதி: சில பார்வைகள்’ என்ற நூலில் ஆய்வாளர் தெ.மு.சி.ரகுநாதன் கூறுவதாவது:  “பாரதியின் நெருங்கிய தோழரும், தொழிற்சங்கத் தந்தையுமாகத் திகழ்ந்த வி.சக்கரைச் செட்டியார் 1.3.1922 அன்று தாம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பாரதியின் கடைசித் தோற்றம் கடற்கரையில் நடந்த ஓர் ஒத்துழையாமைக் கூட்டத்திலாகும். அவரைத் தமது பாடல்களிலொன்றைப் பாடும்படி ஜனங்கள் கேட்டபோது அவர் ‘பாரத சமுதாயம்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் துணிவான கருத்தும் உயர்ந்த மன எழுச்சியும் பொருந்தியதாகும்.”
இந்தப் பாடலில்தான் பாரதி, “முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை” என்றார்.

ரஷ்யப் புரட்சியை “யுகப்புரட்சி” என்றார். ‘Revoluation’  என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமாகப்‘புரட்சி’யைத் தருகிறார் பாரதி. செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகக் கொடுங்கோல் ஆட்சிச் செய்த ஜார் மன்னனின் ஆட்சியைப் ‘புரட்டி’ப் போட்டப் பேரெழுச்சி என்பதால் அதற்குப் புரட்சி எனும் புதுமைச் சொல்லிட்டு அழைத்தார் பாரதி. ‘பொதுவுடைமை’, ‘புரட்சி’ ஆகிய இரு சொற்களும் புரட்சிகர இயக்கத்திற்கும், தமிழ்மொழிக்கும் பாரதி வழங்கிய அருங்கொடையாகும். "

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார் மேடையில் பாடிய கடைசிப் பாடல் ஆகலாம். ஆனால், எழுத்துவடிவில் அச்சான கடைசிப் பாடல்கள் உள்ளன.

In particular, I am interested in songs written after the translation of a poem on Bharata Mata by an American poet from Detroit. I am reading Pe. Thooran's "Paarati Tamil" (Amuta Nilaiyam, 1953) in which this translation is published for the first time in a collection Bharatiar poems. How many songs did Bharati write after the above mentioned translation. will write more details on the American poet, the one who was opposed to Annie Besant.

Thanks
N. Ganesan

N. Ganesan

unread,
Aug 30, 2022, 6:53:15 PM8/30/22
to Santhavasantham
இந்தியாவின் அழைப்பு  என்பது தலைப்பு.
பாரதாமாவுக்கு வேண்டுகோள், பாரதமாதா தந்த உத்தரம்
- என இரு பகுதிகள். அமெரிக்கக் கவிஞர் பாட்டின் மொழிபெயர்ப்பு.
அந்த ஆங்கிலப் பாட்டு என்னிடம் உண்டு.
பாரதி தமிழ் -- பக்கம் 467-468
சுதேசமித்திரன் 19-7-1921 இதழ்.

இம் மொழிபெயர்ப்புக் கவிதை *அகவல்*. அதற்கப்புறம் பாரதி
பாடிய பாடல்கள் உண்டா? நன்றி. NG

N. Ganesan

unread,
Aug 30, 2022, 7:39:05 PM8/30/22
to Santhavasantham, Niranjan Bharathi, Dr. Y. Manikandan, Erode Tamilanban Erode Tamilanban, sivasub...@sivasubramanian.in, Subramanian T S, Subbaiyar Ramasami, Dr.Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam
19-7-1921. இது தான் பாரதி செய்த கடைசிப் பாடல்.

பாரதியியலில் புதிய ஓர் ஏடு:
தி. ந. ராமச்சந்திரன், ஆர். சுப்பராயலு, ய. மணிகண்டன் போன்றோர் ஆங்கிலத்தில் உள்ள
மூலக் கவிதை கிடைக்கவில்லை என எழுதியுளர்.

கிடைத்து விட்டது. அந்த ஆங்கிலக் கவி பற்றியும் சொல்லவேண்டும்.

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 30, 2022, 11:05:44 PM8/30/22
to vallamai, housto...@googlegroups.com
பாரதியார் மொழிபெயர்த்த மாட் ரால்ஸ்டன் ஶர்மனின் அமெரிக்கக் கவிதை
-------------------------------------------------------------------------------------------------------------------

The very last poem by Bharatiyar, a translation of an American poem
by Maude Ralston Sharman, Detroit, Michigan. Bharati's translation
was published in Swadesa Mithran on 19-7-1921. Around that
time, Bharatiyar was attacked by the Triplicane temple elephant.
He passed away shortly after on 11-9-1921.


I am reading Pe. Thooran's "Paarati Tamil" (Amuta Nilaiyam, 1953) in which
this translation is published for the first time in a collection Bharatiar poems.

இந்தியாவின் அழைப்பு  என்பது தலைப்பு.
பாரதாமாவுக்கு வேண்டுகோள், பாரதமாதா தந்த உத்தரம்
- என இரு பகுதிகள். அமெரிக்கக் கவிஞர் பாட்டின் மொழிபெயர்ப்பு.
பாரதி தமிழ் -- பக்கம் 467-468 (சுதேசமித்திரன் 19-7-1921 இதழ்).

https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/jul/19/பாரதியின்-இறுதிக்-கவிதை-நூற்றாண்டு-3662935.html
"ஆங்கிலத்தில் மூலக்கவிதையைப் படைத்தவா் குறித்து இதுவரை கண்டறிய இயலவில்லை. பாரதி பாடல்களின் ஆங்கில மொழிபெயா்ப்புத் தொகுதியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காகப் பதிப்பித்த ‘சேக்கிழாா் அடிப்பொடி’ தி.ந. இராமச்சந்திரன், ‘ஆங்கில மூலத்தை எங்களால் கண்டறிய இயலவில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

பாரதியின் மொழிபெயா்ப்புகளை விரிவாக ஆராய்ந்த இரா. சுப்பராயலுவும் இதே கருத்தை வழிமொழிந்தாா். "

எனவே, தி. ந. ராமச்சந்திரன், ஆர். சுப்பராயலு, ய. மணிகண்டன் போன்றோர் ஆங்கிலத்தில் உள்ள
மூலக் கவிதை கிடைக்கவில்லை என எழுதியுளர். மாட் ரால்ஸ்டன் ஶர்மன் பற்றியும் தெரியவில்லை
என்கிறார் பேரா. ய. மணிகண்டன். மாட் ரால்ஸ்டன், தியோசபி இயக்கத்தைச் சார்ந்தவர் மகள்.
விவேகானந்தர் கலந்துகொண்ட சிகாகோ மாநாட்டில் கலந்துகொண்டவர்.  ஶர்மன் என்னும்
பஞ்சாப் பிராமணரை மணந்தவர். அன்னி பெசண்ட்டை எதிர்த்தவர். காந்தி ராட்டை இயக்கம்
தொடங்கியபோது மாட் ரால்ஸ்டன் ஶர்மன் எழுதிய பாடல் மிக அழகானது. பாரதி அடிச்சுவட்டில்
நல்ல கவிதையாகத் தமிழில் வரவேண்டும். அமெரிக்கக் கவிஞர் பற்றி விரிவாகப் பின்னர் கட்டுரை தரலாம்.

*பாரதியியலில் புதிய ஓர் ஏடு*: பாரதி செய்த கடைசிப் பாடலின் மூலம் ஆகிய அமெரிக்கக்
கவிதையை இணைக்கிறேன். பாரதி மறைந்த பின்னர் யூனிட்டி என்ற இதழில் அச்சான
வடிவம். இதற்கு முன்னரே இக்கவிதை, கடிதம் வாயிலாகச் சென்னை தியாசபி ஸொஸைட்டி
போன்ற இடங்களில் பிரபலமாக இருந்துள்ளது. அதில் மனம் பறிகொடுத்த பாரதியார்
தமிழாக்கம் செய்துள்ளார். இங்கே கொடுத்துள்ள யூனிட்டி பத்திரிகைக்கு முன்னரே சென்னையில்
இந்த அமெரிக்கக் கவிதை பிரபலம் என்பதற்கு பாரதியின் இறுதிக் கவிதை சான்று.
ஒரு ஒப்பீடு: அகத்தியரின் 12 மாணவர் பெயர்கள் ஒரே நூலில், ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய
 ’தமிழ்’ என்னும் கட்டுரையில் காண்கிறோம். இப் 12 பெயர்களும் அவர் தம் பள்ளியிலும், மேடையிலும்
கற்பித்திருக்க வேண்டும். நாவலரின் ‘பாலபாடம்’ நூல் அச்சாகும் முன்னரே, சைமன் காசி செட்டி நூலில்
 - ஆங்கிலத்தில் - இந்தப் பட்டியல் இடம்பெறுகிறது! அது போலத் தான் அமெரிக்க, தமிழ்க் கவிகளின்
பாடல் பதிப்புகளும் எனலாம்.

நிவேதிதையைக் கல்கத்தாவில் சந்தித்ததில் இருந்து பாரத மாதா புகழ் பாடி வந்த பாரதியார்,
கடைசிக் கவிதையாகவும், ஒரு பெண் கவிஞரின் பாரதமாதா பாட்டையே தமிழில் தந்துள்ளது சிறப்பு.
பாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும்:
http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html

UNITY
(Established 1878)
A Journal of the Religion of Democracy

Published Weekly
Volume LXXXIX             Number 14
Chicago, June 1, 1922

https://books.google.com/books?id=PlHwCNr3CUQC&
Unity, Volumes 89-90
A.C. Clark, 1922

இதில் காணும் மாட் ரால்ஸ்டன் ஶர்மன் கவிதையைத் தான் பாரதி தமிழ் ஆக்கினார்.

பிற பின்,
நா. கணேசன்
unity12.jpg
unity11.jpg

kanmani tamil

unread,
Aug 31, 2022, 2:27:12 AM8/31/22
to vallamai
👍👍👍
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfU%3DJ66E8D5%3Dendd16UZMLwC%2BG3vHjU8ZxedfzX_ffc4g%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages