For the hold of astrology on another section of Tamil society, please read: R. S. Perinbanayagam, The karmic theater: self, society and astrology in Jaffna, U. Massachussetts press, 1982, 212p. It will be interesting. Regards, N. Ganesan
‘கோளாறு’ என்று ஒரு தமிழ்ச்சொல். ‘என்னப்பா கோளாறாப் பேசுற?’ ‘பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு; காரியந்தான் ரொம்பக் கோளாறா இருக்கு!’ ‘கோளாறு புடிச்ச ஆளா இருப்பான் போலருக்கு!’ என்று கோளாற்றுக்குப் பயன்பாட்டுச் சான்றுகள் காட்டலாம். செரிமானக் கோளாறு, தொழில்நுட்பக் கோளாறு போன்ற பயன்பாடுகளும் உண்டு.
தீர்வில்லாமல் இழுத்துக்கொண்டே போகிற சிக்கலைத் தீர்ப்பதற்கு நுட்பமான யோசனை சொல்கிறவரை மதுரை வட்டாரத்தில் ‘கோளாறு சொல்கிறவர்’ என்பார்கள். ‘ஏப்பா, இதுக்கு நான் ஒரு கோளாறு சொல்றேன்; கேக்குறியா?’
கோளாறு ‘சீர்குலைவு’ என்றும், கோளாறு சொல்லுதல் ‘சீர்குலைவைச் சமன் செய்வதற்கான யோசனை’ என்றும் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் கோளாறு என்கிற சொல் இன்னாளில் அடைந்திருக்கிற பொருள் வழக்குகள். முன்னாளில் கோளாறும் கோளாறு சொல்லுதலும் வேறு பொருள் வழக்குடையவை.
கோளாறு என்பது கோள்+ஆறு. கோள் என்பது ஒன்பது கோள்கள்; ஆறு என்பது வழி. கோள்களின் இயக்கமே கோளாறு. கோளாற்றை வடமொழியில் சொல்ல விரும்பினால் அது ‘கிரகச்சாரம்’. தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாளம் ஆக்கிக் ‘கோட்சாரம்’ செய்து அதைக் ‘கோச்சாரம்’ என்று வழங்குவர் சோசியர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
///கோளாறு என்பது கோள்+ஆறு. கோள் என்பது ஒன்பது கோள்கள்; ஆறு என்பது வழி. கோள்களின் இயக்கமே கோளாறு. கோளாற்றை வடமொழியில் சொல்ல விரும்பினால் அது ‘கிரகச்சாரம்’. தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாளம் ஆக்கிக் ‘கோட்சாரம்’ செய்து அதைக் ‘கோச்சாரம்’ என்று வழங்குவர் சோசியர் ///Ganesan wrote 6hrs agoகோளாறு என்ற சொல்லின் மூலத்தைக் காட்டியமைக்கு நன்றி .இன்று அதன் பொருள் வேறு பல பரிமாணங்களுடன் வழங்குவதும் பல திருப்பங்களைச் சந்தித்து இருப்பதும் மேலே காணும் மடலாடல்களின் மூலம் தெளிவாகிறது.
ஆறு என்று முடியும் சொற்களைத் தொகுத்துப் பார்த்தேன்.எனக்கு நான்கு சொற்கள் தான் கிடைத்தன......
கண்மணி
On Monday, June 18, 2018 at 8:08:35 PM UTC-7, nkantan r wrote:(சேரலாதன் முன் ஒற்று வராதா?)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
திருவள்ளுவர் திருநாள் என்பது தைப் பொங்கல் தினம். தமிழர்களின் தொடராண்டு திருவள்ளுவர் ஆண்டு என தமிழர்களின் அரசாங்கம் செயல்படுத்திவருகிறது.
திருவள்ளுவருக்கு அடித்தளம் அமைத்தவர் தொல்காப்பியர் தாம். தொல்காப்பியர் திருநாள், 60-ஆண்டுச் சுழற்சி ஆண்டின் வருஷப் பிறப்பு ஆகிய சித்திரைத்
திருநாள் என்று கொண்டாடலாம். தொல்காப்பியரே சித்திரை, வைகாசி, ... 12 அமாந்த மாதங்களின் பெயர்களுக்கு இலக்கணம் தந்தவர். எனவே,
அவரது திருநாள் என சக வருஷம் பிறக்கும் சிதிதிரைக்கணியைக் கொள்ளுதல் பொருத்தம்.
இதுபற்றி விரிவாக டில்லியில் இருந்து வெளியான வடக்குவாசல் இதழில் பல ஆண்டு முன்னரே விரிவான கட்டுரை வரைந்துள்ளேன். மின்தமிழ் ஆவணக்
களரியில் கிடைக்கும்.
தைப்பொங்கல் - திருவள்ளுவர் ஆண்டு - தமிழர்களின் தொடராண்டு. தொடக்கம் கி.மு. 31
சித்திரை - 60 வருஷ சுழலாண்டு பிறப்பு - தொல்காப்பியர் திருநாள். இதுபற்றி தமிழண்ணல் போன்றவர்களிடம் கருத்தாடிச் சொல்லியும் இருக்கிறேன்.
சித்திரை ஒன்றாம் திகதி தொடங்கும் ஆண்டு தமிழர்க்கு எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டு பின்னரே ஏற்பட்டது.
ஆதாரம்: மணிமேகலை, தேவாரம் காண்க. சங்க காலத்தில் திருக் கார்த்திகை தான் முதல் நக்ஷத்திரம்.
ராசி சக்கரம் என்பது தமிழர்க்கு யவனர்கள் கொணர்ந்தது. யவனர்கள் பாண்டியர் அரண்மனைச் சுவர்களில்
படங்கள் எழுதினார்கள். எனவே, நெடுநல்வாடையில் ”ஆடு தலையாக” என்பது என்ன பொருள்? என உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.
ராசி சக்கரத்தில் கேப்ரிகார்ன் எனப்படும் தைப் பொங்கல் (தமிழின் பேராசிரியன்மார் தெரிந்தெடுத்த மகர சங்கிராந்தி) ராசியாகவும்
இருக்க வாய்ப்புகள் உண்டு. இதனை ஆர். நீலகண்டன் விடுத்த வினாவின் பதிலிலும், பல்லாண்டு முன்னரும் குறிப்பிட்டுள்ளேன்.
நிச்சயமாக, பிரம்மகுப்தர் (பிறப்பு: கி.பி. 598) பின்னர் தான் சித்திரை முதல் நட்சத்திரம். ஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக் கார்த்திகையை
முதல் நட்சத்திரம் எனப் பாடிச் சென்றுள்ளார். வட இந்தியாவில் பிரம்மகுப்தர், வராகமிகிரர் போன்றோர் கார்த்திகையை, சித்திரை நட்சத்திரம்
ஆக்குவது ஏழாம் நூற்றாண்டிலே தான். எனவே, தமிழர் சித்திரை முதல் நக்ஷத்திரம் எனக் கொள்வது 8 (அ) 9 நூற்றாண்டே,
பொம்பெய் (Roman empire) போன்ற நகரங்களில் அரச மாளிகைகளில் வரைந்த யவனர்கள் பாண்டியர் அரண்மனைகளில் வரைந்தது
ராசி சக்கரத்தின் முதல் படி எனலாம். அப்போது கேப்ரிகார்ன், ஏரிஸ் இரண்டும் ஆடுதான். கேப்ரிட் என்றாலே ஆடுகள் தாம் விஞ்ஞானத்தில்.
ஏரிஸ் (மேழம், sheep), கேப்ரிகார்ன் (ஆடு, goat). எனவே, நெடுநல்வாடை பாடுவது சித்திரை நட்சத்திரம் பௌரணமியாக வரும் மாதம் என்பது பிழை.
கார்த்திகை தான் சங்க கால நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம். கார்த்திகை பற்றியே சங்க இலக்கியங்களில் மிகக் குறிப்புகளை ஓர்க.
மேலும், ஆடு தலையாக (நெடுநல்வாடை) என்பதில் ஆடு எது? கேப்ரிகார்னா? ஏரிஸா? - இதுவும் உறுதியாய்க் கணிக்க இயலாது.
மட்டஞ்சேரி பேலஸ் போய்ப் பாருங்கள். அதன் சித்திரங்களும் யவனர்களைக் கொண்டு வரைந்தனவே.
கேப்ரிகார்ன் ஆடு தலையாகக் கொண்ட மகராயனம் (உத்தராயனம்) பொங்கலை தமிழறிஞர்கள் திருவள்ளுவர் தொடராண்டு என
அறிவித்தனர்.
The wheel of Philology turns slowly, like the Buddha's Wheel of Dharma.
பிற பின்,
நா. கணேசன்
பாடியவர்: கூடலூர் கிழார்.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காயப்,
பங்குனி உயர் அழுவத்துத்,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல் நாள்மீன் துறை படியப்,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்,
கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி,
ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே:
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்,
’பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமன் தில்’லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,
அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்,
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்,
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்,
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை,
மணிவரை அன்ன மாஅ யோனே?
A translation:
Puranānuru 229, Poet Koodaloor Kizhār
King – Cheramān Yānaikatchey Māntharancheral Irumporai
At midnight crowded with darkness in the first
quarter of the night when the constellation of Fire
was linked with The Goat and from the moment
the First Constellation arose, formed like a bent palmyra,
and the one shaped like a reservoir was glittering
at the farthest limit, during the first half
of the month of Pankuni, when the Constellation
of the Far North was descending and the Eighth
Constellation was rising and the Deer’s Head
sinking into the sea, a star fell from the sky!
Not slanting east or north,
like a light for the earth surrounded by ocean, a star fell as roaring,
spreading fire stirred and swollen by the wind! When we saw this,
I and many others who had come to him in our need thought,
“May the king
who rules a good land with a waterfall whose music is like drum,
may he live without illness!” A feeling of despair spread throughout our
troubled hearts and we were afraid! Now the seventh day has come
and
as great elephants like sleeping on their trunks and the royal drum
tightly bound with its straps has burst its eye and rolls across
the ground and the white umbrella of protection is snapped off
at the base and ruined and the proud horses swift as the wind stand
stock still, he has reached the world of the gods! Has he
who was the lover desired by women who wear shining bangles
forgotten those women who were his companions? He as a man
the dark color of a mountain of sapphires! His strength bound up
his enemies and killed them. And to those
who wished him well he was munificent beyond measure!
(Translated by George Hart).
///சரவணன் எழுதப்போகும் சங்க இலக்கியத்தில் "ஆடு" என்ற கட்டுரை வந்தபிறகு;அதில் "ஆடு" (யாடு என்று இல்லாமல்);ஆடு என்னும் சொல் சங்க இலக்கியத்தில் ஆட்டையே குறிக்கப் பயன்பட்டமைக்குச் சான்றுகள் கிடைக்கும் வரை இக்கருத்தை ஓரங்கட்டி வைப்பதே நல்லது என்று கருதுகிறேன்.///themozhi wrote on 20th Juneஆடு என்ற சொல் ஆட்டைக் குறிப்பதாகச் சங்க இலக்கியத்தில் உள்ளது தேமொழி. அதனால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேரநாட்டில் பெருவாரியாக இல்லாத கால்நடை வளத்தைத் தொண்டிக்குக் கொண்டு வந்தான் எனல் பொருந்தும்.கொங்கு நாட்டுப் பசுக்களும் சேரநாடு வரை விரட்டிச் செல்லப்பட்டமைக்கும் சங்க இலக்கியத்தில் சான்று உண்டு.கண்மணி
2018-06-24 0:38 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:இந்த ராசிச் சக்கரம் ,நாள் ,கோள் ,விண்மீன் >>>>>>எல்லாமே ஒவ்வாமை தரக்கூடிய செய்திகள்.படிக்கிற காலத்தில் அதைத் தவிர்த்து தாவிச் சென்றாகி விட்டது.பாடம் நடத்திய காலத்தில் உரையாசிரியரை ஒப்பித்து முடித்தாயிற்று.இப்போதும் அதில் ஆர்வமில்லை .சரவணன் கட்டுரை என்ன சொல்கிறது என்றும் பார்ப்போமே .ஆடு என்பதற்கு அவருடைய உரைப்போக்கு எப்படி அமைகிறது என்று பார்க்கலாம் .முடிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டால் அப்புறமாக capricorn,aries எல்லாம் பாடமாக நடத்துங்கள்.கண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சங்கப் பாடல்களில் வான இயல்
Astronomy in Sangam Poetry: The ancient Tamils had good knowledge of astronomy as seen by the following:
Planets around the Sun – The ancient Tamils knew that the planets went around the sun – In Sirupānātruppadai 242-243, there is mention of the sun with tender rays that is surrounded by planets – வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு.
Planets, கோள்கள் – There are many references to planets. Akanānūru 86 – கோள் கால் நீங்கிய, Puranānūru 392 – கோள்மீன் அன்ன, Pattinappālai 68 – நாள்மீன் விராய கோள்மீன் போல, Kalithokai 5 – நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே, Sirupānātruppadai – வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு, Pathitruppathu 14 – கோள், Pathitruppathu 69 – ஆநியம் நிற்ப, five planets are mentioned in Paripādal 3 – தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் – the five elements of fire, wind, sky, earth and water, the sun, moon and the five planets – mars, Mars, Mercury, Jupiter, Venus, Saturn.
Venus, வெள்ளி – In Porunarātruppadai lines 71-72 the planet Venus (morning star) is mentioned – விரி கதிர் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல், Mathuraikānji 108 – வைகல் மீன், Pattinappālai 1 – வசையில் புகழ் வயங்கு வெண்மீன், Puranānūru 117 – தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், Puranānūru 229 – வேர் முதலா, 383 – வெள்ளியது நிலையே, Puranānūru 384 – யாண்டு நிற்க வெள்ளி, Puranānūru 385 – வெள்ளி தோன்றப் புள்ளுக் குரல் இயம்ப, Puranānūru 386 – யாண்டும் நிற்க வெள்ளி, Puranānūru 388 – வெள்ளி தென் புலத்து உறைய, Puranānūru 389 – வெண்பொன் போகுறு காலை, 397 – வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும், 398 – மதி நிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர, Natrinai 230 – குணக்குத் தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும், Natrinai 356 – குணக்குத் தோன்று வெள்ளியின், Pathitruppathu 13 – வெள்ளி ஓடாது, Pathitruppathu 24 – சீர் சால் வெள்ளி, Pathitruppathu 69 – பயங் கெழு வெள்ளி, Paripādal 11 mentions the bright venus joining the bull constellation – உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர – bright Venus joins the Taurus (bull) constellation.
Saturn, சனி – In Puranānūru 117, it is ‘even if Saturn smoldered or comets appeared’- மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும், Paripādal 3 – தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் – the five elements of fire, wind, sky, earth and water, the sun, moon and the five planets – mars, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, புகையினும் தூமம் தோன்றினும், In Paripādal 11, Jupiter travels beyond the twin houses of Saturn – அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்கு உப்பால் எய்த, Paripādal 3 – தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் – the five elements of fire, wind, sky, earth and water, the sun, moon and the five planets – mars, Mars, Mercury, Jupiter, Venus, Saturn.
Mars, செவ்வாய் – In Puranānūru 60, the Red Planet Mars shines like boats in the ocean at night – முந்நீர் நாப்பண் திமில் சுடர் போலச்செம்மீன் இமைக்கும் மாக விசும்பின், Pathitruppathu 13 – அழல் சென்ற மருங்கின், Pathitruppathu 31 – உள்ளும் சிறந்த செம்மீன், In Paripādal 11, Mars is in the goat constellation – வருடையைப் படிமகன் வாய்ப்ப, Paripādal 3 – தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் – the five elements of fire, wind, sky, earth and water, the sun, moon and the five planets – mars, Mars, Mercury, Jupiter, Venus, Saturn.
Mercury, புதன் – In Paripādal 11, mercury joins the Gemini constellation – புந்தி மிதுனம் பொருந்த, Paripādal 3 – தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் – the five elements of fire, wind, sky, earth and water, the sun, moon and the five planets – Mars, Mercury, Jupiter, Venus, and Saturn.
Jupiter, வியாழன் – Paripādal 3 – தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் – the five elements of fire, wind, sky, earth and water, the sun, moon and the five planets – mars, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, in Paripādal 11, Jupiter travels beyond the twin houses of Saturn – அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்கு உப்பால் எய்த.
Constellations – Puranānūru 229 has descriptions of a goat constellation, a bent palmyra tree constellation, a flame constellation and a goat constellation – ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில் முடப் பனையத்து வேர் முதலாக் கடைக் குளத்துக் கயம் காய, Akanānūru 136 mentions wagon constellation – சகடம், Hair constellation – Akanānūru 141 குறுமுயல், the Pleiades constellation is mentioned in Akanānūru 141 – அறுமீன் சேறும் அகல் இருள் நடு நாள், Natrinai 202 mentions Karthikai month as the time do do charity – அறுமீன் பயந்த அறம் செய் திங்கள், Paripādal 11 mentions the bright venus joining the bull constellation – உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர – bright Venus joins the Taurus (bull) constellation, Paripādal 11 mentions mars being in the goat constellation – வருடையைப் படிமகன் வாய்ப்ப, Malaipadukādam line 100 mentions the Pleiades constellation – அகல் இரு விசும்பின் ஆஅல் போல, Kalithokai 64-4 mentions the Pleiades constellation – ஆரல் மீன் தகை ஒப்ப.
Karthikai Star, கார்த்திகை நட்சத்திரம் – In Paripādal 11, mercury joins the Gemini constellation – புந்தி மிதுனம் பொருந்த, Paripādal 11, when dawn breaks, in Paripādal 11 Karthikai reaches its zenith – புலர் விடியல் அங்கி உயர் நிற்ப.
Karthikai, கார்த்திகை, Thiruvathirai, திருவாதிரை, Parani, பரணி – In Paripādal 11, there is mention of Karthikai, Thiruvathirai and Parani – எரி சடை எழில் வேழம்.
Makaram (Pisces), மகரம் – In Paripādal 11, brother of Yamas, is in the archer’s house Pisces – இறை யமன் வில்லின் கடை மகரம்.
Gemini, மிதுனம் – In Paripādal 11, mercury joins the Gemini constellation – புந்தி மிதுனம் பொருந்த, In Paripādal 11 – மிதுனம் அடைய – reaches Gemini.
Taurus, இடபம் – Paripādal 11 mentions the bright Venus joining the bull constellation – உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர – bright Venus joins the Taurus (bull) constellation,
Pothiyil Sage Star, பொதியில் முனிவன் – Paripādal 11 mentions a star called the Sage of Pothikai – பொதியில் முனிவன்
Stars (மீன், தாரகை), Sun (ஞாயிறு, கதிரோன், மண்டிலம், பகலோன், செல்வன், என்றூழ், பருதி) and Moon (மதி, நிலா, திங்கள், உவா) – There are very many references to the stars, the sun and the moon. The many phases of the moon are mentioned.
Lunar Eclipse, கிரகணம் – mentioned in Puranānūru 260 as a snake with sharp teeth hiding the moon – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின் and Paripādal 11 – மேவ பாம்பு ஒல்லை மதியம் மறைய வரு நாளில்.
Comet, வால் நட்சத்திரம் – In Puranānūru 117, it is ‘even if Saturn smoldered or comets appeared’- மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்.
Meteorites – In Puranānūru 229, stars fell from the sky – மீன் விழுந்தன்றால் விசும்பினானே, In Kurunthokai 189 a torch fell from the sky – விசும்பு வீழ் கொள்ளியின்.
I didn't realize that I had not updated that file list.Here's another one. I just added it.I hope you are doing well.Anbudan,Vaidehi
Astronomy List
அகம் - உலகம், earth (Malai 81)
அங்கி – கார்த்திகை, Pleiades (Pari 11-7)
அந்தணன் – வியாழன், Jupiter (Pari 11-7)
அம்புலி - நிலா, Moon (Once, Kali 80-19)
அருந்ததி – அருந்ததி, Northern star, Alcor (Once, Aink 442-3)
அறுமீன் – கார்த்திகை, Pleiades (Aka 141-8, Nat 202-9)
ஆடு இயல் - மேட ராசி, mēdam constellation (Pura 229-1)
அழல் - செவ்வாய், Mars (Pathit 13-25)
அழல் குட்டம் - flame constellation, Kārthikai (Pura 229-1)
ஆஅல் - கார்த்திகை மீன், Pleiades (Once, Malai 100)
ஆநியம் - கோள்கள், planets (Pathit 24-25, 69-14)
ஆரல் - கார்த்திகை பெண்டிர், deities of Pleiades (Pari 9-7), கார்த்திகை மீன், Pleiades stars (Kali 64-4)
உரோகிணி – ரோகினி நட்சத்திரம், Rohini star (Once, Nedu 163)
உலக - உலகத்து, on earth, in the world (Once, Pura 175-8)
உலகத்தான் – உலகத்தில், on earth, in the world (Aka 75-16, 268-9, Nat 226-9, 366-12, Pura 6-7, 74-7)
உலகத்து - உலகத்தில், on earth, in the world (Aka 55-14, 66-1, 178-16, 258-12, 311-6, Nat 46-2, Kuru 44-4, 57-5, 99-3, 174-5, 199-8, Aink 442-3, Kali 22-3, 54-20, 99-4, 108-54, 118-5, 125-1, 142-48, 143-52, Pari 15-51, Pura 18-13, 22-35, 24-35, 27-14, 29-24, 34-19, 42-4, 50-15, 53-9, 76-2, 165-1, 171-14, 174-20, 213-3, 213-23, 214-8, 214-9, 287-12, 356-7, 361-20, 375-17, Kurinji 24, Thiru 293, Perum 32, 410, 466, Porunar 176, Mathu 133)
உலகத்தோர் – உலகத்தில் உள்ளவர்கள், those on earth, those in the world (Once, Pathit 38-1)
உலகத்தோர்க்கு – உலகத்தில் உள்ளவர்களுக்கு, for those on earth, for those in the world (Pathit 15-24, 37-13)
உலகம் – வையகம், ஞாலம், உலகம், earth, world (Aka 66-2, 213-18, 273-8, 374-2, Nat 1-6, 22-8, 196-5, 237-9, 327-6, 337-1, Kuru 6-3, 83-2, 101-1, 273-7, 361-2, Kali 25-28, 47-1, 114-19, 139-36, 141-11, Pari 2-3, 3-9, 3-20, 3-75, 4-23, 5-17, 13-23, 19-11, Pari Thirattu 7-1, Pura 62-18, 66-7, 167-11, 182-1, 184-11, 186-2, 194-6, 206-9, 207-7, 213-10, 217-12, 221-11, 223-1, 224-11, 228-11, 229-22, 240-6, 249-11, 341-15, 357-2, Pathit 50-4, 52-9, 59-8, 63-18, 70-23, 81-1, Thiru 1, 124, 161, Mathu 23, 197, 237, 471, 698, Mullai 1
உலகமொடு – உலகத்துடன், with the world (Pura 72-15, Pathit 37-6, Mathu 199, Malai 70, 541), உலகில் உள்ளவர்களுடன், with those on earth (Nat 348-10)
உலகமோடு - உலகத்துடன், with the world (Pura 56-25, Pathit 14-22)
உலகில் – உலகத்தில், on earth, in the world (Once, Pura 260-21)
உலகிற்கு – உலகத்திற்கு, for the world (Once, Nat 139-1)
உலகின் – உலகத்தில், on earth, in the world (Once, Pari 3-9)
உலகினும் - உலகத்தை விட, more than the world (Once, Pura 230-10)
உலகு – வையகம், ஞாலம், உலகம், world (Aka 64-2, 78-15, 141-5, 204-1, 255-1, 263-1, Nat 164-3, 240-1, Aink 409-4, Kali 10-7, 25-3, 26-12, 26-16, 92-6, 103-79, 104-80, 121-1, 126-2, 129-4, 134-9, 138-31, 142-54, Pari 3-85, 5-35, 8-4, 8-64, 11-34, 12-102, Pari Thirattu 7-2, 12-4, Pura 107-4, 132-9, 182-6, 234-5, 382-17, 400-7, Pathit 42-20)
உவா – மறை நிலா, hidden moon (Pari 11-37)
உற்கம் - விண் வீழ் கொள்ளி, shooting stars (Once Pura 41-4)
எல் – கதிரவன், sun (Aka 190-2, Nat 204-2, 258-6, Kali 129-3, Pura 157-9, Kurinji 39)
எல்லை – சூரியன், sun (Kuru 355-3)
எரி – வால் நட்சத்திரம், comet (Pura 395-34)
எரி – கார்த்திகை விண்மீன், Karthikai star (Pari 11-2)
எழுமீன் – Ursa Major, Saptharishi (Nat 231-2)
என்றூழ் - கதிரவன், sun (Aka 22-14, 43-3, 325-17, Nat 43-2, Kuru 215-2, Pura 75-9)
ஏற்றியல் – இடப ராசி, bull constellation, Taurus (Once, Pari 11-4)
ஐவரும் – ஐந்து கிரகங்களும் – செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, the five planets, Mars, Mercury, Jupiter, Venus and Saturn (Once, Pari 3-5)
கனலி - ஞாயிறு, சூரியன், sun
கனலியை – ஞாயிற்றை, சூரியனை, the sun (Once, Kali 16-12)
கனலியொடு – ஞாயிற்றுடன், சூரியனுடன், with the sun (Once, Perum 17)
கார்த்திகை – கார்த்திகை நட்சத்திரம், Pleiades stars (Once, Pari Thirattu 11-1)
குளம் – குளமீன் என்ற விண்மீன், a star named kulam (Pura 395-35)
குறுமுயல் – முயல் விண்மீன் கூட்டம், Rabbit constellation (Aka 141-7)
கோள் – கிரகம், planet (Aka 86-6, Pathit 14-3)
கோள்மீன் – கோள், planet (Kali 5-9, Pura 392-17, Siru 242, Pattina 68)
சகடம் – வண்டி வடிவ விண்மீன் கூட்டம், உரோகிணி, wagon constellation, Rohini (Aka 136-5)
சடை – திருவாதிரை, Thiruvathirai (Pari 11-2)
சாலினி – அருந்ததி, Northern star, Alcor (Pari 5-44)
சிறுமீன் – விண்மீன் அருந்ததி, Northern star, Alcor (Once, Perum 303)
சுடர் – கதிரவன், ஞாயிறு, sun (Aka 39-13, 47-9, 48-23, 187-19, 213-12, 291-21, 309-14, 363-3, 367-1, 378-14, Nat 26-5, 33-1, 78-5, 117-5, 261-3, 321-5, 369-1, Kuru 195-1, 234-1, Pari 19-46, Kali 22-20, 44-1, 45-16, 78-15, 119-2, 120-3, 121-1, 121-17, 126-1, 130-18, 143-43, Pari 67-3, 19-46, 19-100, Pura 16-8, 136-18, Pura 365-2, Siru 171, Perum 305, Mathu 411, 545, Pathit 43-3, 69-13)
சுடர் – கோள்மீன், planet (Pari 19-47)
சுடர் – நிலா, moon (Pura 365-2)
சுடர் – விண்மீன், star (Pari 19-46)
சுடரின் – ஞாயிற்றை, கதிரவனை, the sun (Pura 155-5)
சுடரினும் – ஞாயிற்றைக் காட்டிலும், more than the sun (Once, Nat 283-7)
சுடரொடு – கதிரவனுடன், சூரியனுடன், with the sun (Aka 336-18)
சுடரொடு – நிலவுடன், with the moon (Pari 19-19)
செல்வன் - ஞாயிறு, கதிரவன், sun (Aka 229-1, 362-2, Nat 164-2, 215-2, Kali 26-2, Pura 34-18, 56-23, Pattina 122, Porunar 136)
செல்வனொடு - திங்களோடு, நிலவோடு, with the moon (Once, Nedu 162)
ஞாயிற்றது – கதிரவனின், சூரியனின், of the sun (Once, Aink 71-5)
ஞாயிற்று - கதிரவனின், சூரியனின், of the sun, கதிரவனில், சூரியனில், in the sun, கதிரவன், சூரியன், sun (Aka 101-13, 156-10, 181-7, 184-15, 108-10, Kali 42-31, 108-13, 121-17, 144-40, 145-65, Nat 163-10, 219-8, 258-3, 396-6, Pathit 52-29, Pari 4-25, 5-12, 13-1, Pura 4-16, 16-8, 20-8, 24-2, 30-1, 30-2, 38-7, 55-13, 65-12, 82-2, 160-1, 362-1, 366-10, 376-1, Siru 10, Mathu 385, 431, Malai 464)
ஞாயிற்றை – கதிரவனை, சூரியனை, the sun (Once, Kali 146-29)
ஞாயிறு – கதிரவன், சூரியன், sun (Aka 9-15, 89-1, 91-1, 114-4, 120-5, 164-1, 298-1, 378-14, Aink 322-2, Kali 8-2, 20-2, 118-4, 134-4, 142-37, 143-22, 145-26, 145-35, 147-27, 147-31, 147-35, 147-58, 148-1, Kuru 58-3, 92-1, 315-3, 378-1, Nat 218-1, 239-1, 241-7, 338-1, 398-2, Siru 243, Pathit 14-3, 17-10, 22-34, 59-6, 62-6, 64-13, 72-12, 88-38, Pari 3-5, 3-22, 11-76, 18-26, Pura 2-9, 6-28, 25-3, 35-17, 59-6, 90-5, 174-2, 228-8, 231-6, 374-17, Siru 243, Thiru 2, Mathu 7, 546, 768, Malai 85, 272)
ஞால – உலகம், world (Pura 179-1)
ஞாலத்து – உலகத்தின், the earth’s, உலகத்தில், in this earth, in the world (Kali 33-1, 100-5, 143-44, 144-39, 145-16, 148-1, Kuru 267-1, Nat 157-1, Pathit 13-22, 15-38, 31-2, Pari 3-27, 4-28, 15-36, Pura 20-2, 174-3, 185-1, Mathu 4)
ஞாலம் – உலகம், earth (Aka 4-5,181-15, Aink 452-1, Kali 29-3, 34-1, 82-1, 106-27, 119-1, 124-1, 146-38, Nat 153-2, Pathit 18-9, 24-9, 69-12, Pari Thirattu 1-74, Pura 18-2, 18-14, 23-15, 35-29, 56-9, 225-13, 395-33, Thiru 91)
தலைநாள் மீன் – உத்திரம், Uthiram (229-6)
தாள் - தாள் என்ற விண்மீன், a star name thāl (Pura 395-35)
திகிரி - கதிரவன், சூரியன், ஞாயிறு, sun (Aka 53-2)
திங்கள் – moon (Aka 2-17, 54-17, 86-6, 122-12, 136-4, 253-25, 362-15, Kali 41-24, 42-23, 80-18, 103-15, 103-48, 140-17, 144-18, 150-17, Kuru 129-4, Nat 62-7, 335-1, Pari 1-45, 3-5,3-67, 4-26, 11-77, Pathit 14-3, 90-17, Pura 13-6, 27-14, 38-8, 55-14, 59-7, 102-6, 112-1, 112-3, 118-2, 177-5, 231-5, 376-8, 396-27, 400-1, Thiru 98, Perum 384, 480, Mathu 8, 769, Porunar 11 )
திங்களில் – மாதத்தில், in the month (Once, Mullai 100)
திங்களின் – நிலவைப் போன்று, like the moon (Once, Pura 396-27)
திங்காள் - நிலவே, oh moon (Once, Kali 145-47)
தூமம் - வால் மீன், comet (Pura 117-1)
நாள்மீன் - விண்மீன், நட்சத்திரம், star (Kali 104-27, Pura 24-24, 160-8, 229-6 (உத்திரம், Uthiram), 229-7 (மூலம், Moolam), 229-8 (மிருகசீரிடம், Mirukaseeridam), Mathu 6, Pattina 68)
நாளொடு – உத்திரம் என்னும் விண்மீன், with the star named uthiram (Nedu 82)
நிலவில் – நிலா வெளிச்சத்தில், in the moonlight (Once, Nat 271-10)
நிலவின் – நிலவுடன், with the moon (Aka 259-9, Pura 112-1, 112-3), நிலவினுடைய, the moon’s (Nat 196-2, Kuru 359-2, Aink 443-2, Pura 392-3, Pattina 114), நிலாவினை, the moon (Aink 454-2, Pathit 61-16), நிலா வெளிச்சத்தில், in the moonlight (Aka 228-8)
நிலவு – நிலா, moon Aka 20-16, 122-10, 123-8, 295-4, 344-2, Nat 3-9, 140-6, 182-1, 183-3, 348-1, Kuru 81-5, Pura 17-11, 38-7, 372-13, Kurinji 241, Porunar 213, Mathu 114, Nedu 95, Pattina), நிலாவின் ஒளி, moonlight (Nat 11-9, 159-3, 163-5, Kuru 123-2, Kali 119-4, Pari 11-33, Pura 25-4)
நிலா – நிலா, moon (Aka 54-17, 57-11, 212-15, Nat 377-7, Kali 29-20, 96-19, 131-17, 143-1, 145-40, Pura 67-4, 394-6, 398-1), நிலாவின் ஒளி, moonlight (Kali 121-3, Pari 1-44, Pura 294-1, Mathu 548)
நிலாவின் – நிலவின், the moon’s (Once, Aka 200-1)
நிலைநாள் மீன் – மூல நட்சத்திரம், Moolam (Pura 229-7)
பகல் - கதிரவன், sun (Aka 71-9, 365-2, Kali 19-5, 86-17, 148-22)
பகலின் – ஞாயிற்றைப் போன்று, like the sun (Kali 19-11)
பகலோன் - கதிரவன், ஞாயிறு, sun (Once, Aka 201-8)
பங்குவின் – சனியின், planet saturn’s (Once, Pari 11-7)
பங்குவின் இல்லத் துணை – சனியின் இரட்டை இல்லங்கள், twin houses of Saturn (Once, Pari 11-8)
படிமகன் – செவ்வாய், Mars (Once, Pari 11-5)
பரிதியின் – கதிரவனைப் போன்று, like the sun (Pari 1-23, Thiru 299)
பருதி – ஞாயிறு, sun (Aka 37-15, 229-1, 360-2, Kali 26-2, Pura 358-1)
பாம்பு – பாம்பு நிலாவை விழுங்கும் சந்திர கிரகணம், snake swallowing the moon, lunar eclipse (Nat 128-2, Kali 15-17, 144-22, Pari 11-9)
பிறை - பிறை நிலா, இளந்திங்கள், crescent moon (Aka 32-14, 98-28, 110-3, 138-4, 147-14, 151-4, 170-3, 30-12, 313-1, Nat 80-9, 117-10, 117-11, 130-12, 140-11, 247-9, 318-6, 322-2, 355-11, 368-8, 397-4, 397-8, Aink 110-4, 216-6, 325-2, 478-2, Pari 6-92, 9-48, Kali 45-23, 53-15, 55-9, 67-19, 81-3, 99-10, 103-25, 104-11, 120-7, 124-8, 125-23, Pura 14-15, 17-22, 20-9, 150-3, 150-19, 165-13, 307-12, 320-4, 367-11, 394-14, Pathit 53-14, Perum 11, 412. Porunar 25)
பிறையின் - இளந்திங்களைப் போன்று, like the crescent moon (Kuru 178-5, Mathu 193)
பிறையை – பிறையை, இளந்திங்களை, a crescent moon (Once, Kali 142-24)
புந்தி – புதன், Mercury (Once, Pari 11-6)
பொதியில் முனிவன் – அகத்தியரின் பெயரைக் கொண்ட விண்மீன், a star called the Sage of Pothikai (Agasthiyar) (Pari 11-11)
பொழுது – ஞாயிறு, sun (Aka 303-13, 308-13, 316-4)
பொழுதோடு – கோள்களுடன், with the planets (Pathit 24-25)
மக - மக வெண்மீன், white Makam star (Pattina 35)
மகரம் – மீனராசி, pisces (Pari 11-9)
மண்டிலத்து - மண்டிலங்களின் (ஞாயிறு, திங்கள்), of the heavenly orbs (sun, moon) Pari 13-8, கதிரவனின், of the sun (Pura 175-9), ஞாயிற்றுடன், with the sun (Once, Nedu 161)
மண்டிலம் – ஞாயிறு, sun (Aka 11-1, 31-1, 260-1, 263-2, 363-3, 367-1, 378-14, 381-5, Nat 67-1, 69-1, 117-5, 152-4, 187-2, Kali 25-1, 71-1, 141-12, Pari 17-32, Pura 8-6, Perum 442, Nedu 73, Kurinji 216, Perum 442), உலகம், earth (Aka 105-5, Kuru 300-7, Pura 367-1), திங்கள், m00n (Aka 122-11, 277-1, Nat 375-7, Kali 7-7), கோள்கள், planets (Pura 30-3)
மண்ணகம் - உலகம், earth (Kali 144-43, Pura 3-2)
மதி – நிலா, moon (Aka 141-7, 179-13, 192-1, 297-15, 306-10, Nat 62-7, 316-5, Kuru 226-3, Aink 280-3, 456-2, Kali 15-16, 15-17, 17-7, 32-6, 55-10, 56-4, 64-1, 70-4, 72-6, 100-4, 104-27, 104-37, 105-46, 118-6, 119-4, 126-2, 126-21, 141-7, 145-6, 147-30, 148-5, Pari 2-1, 2-30, 3-52, 10-74, 10-76, 10-78, Pura 3-1, 32-11, 60-3, 160-8, 174-15, 362-2, 392-1, 393-20, 398-1)
மதியத்து – நிலவின், of the moon (Nat 377-7, Kali 121-3, Pura 102-7, 371-17, 398-12)
மதியம் – நிலா, moon (Aka 299-11, Nat 62-4, 196-3, Kuru 315-1, Kali 39-8, 121-8, 143-2, Pari 11-10, Pura 6-27, 56-24, 67-4, 160-22, 294-1, Mathu 548)
மதியமொடு – நிலவுடன், with the moon (Pari 11-1)
மதியின் – நிலாவைப் போன்று, like the moon (Aka 57-11, 114-5, 313-7, Nat 128-2, 346-8, Kali 62-14, Pari 10-74, Pura 31-4, 260-17, Mathu 195, 452)
மதியினுக்கு – நிலவிற்கு, for the moon (Once, Kuru 395-4)
மதியொடு – நிலவுடன், with the moon (Kali 144-22, 144-24)
மதியை – நிலவை, the moon (Once, Kali 64-1)
மிதுனம் – மிதுன ராசி, Gemini constellation (Pari 11-6, 11-12)
மீன் – விண்மீன், star, stars, கோள்மீன்கள், planets (Aka 10-2 - விண்மீன்கள், stars, Aka 141-8 - அறுமீன், Pleiades, 264-1, Nat 202-9 - அறுமீன், Pleiades, Nat 231-2 – எழுமீன், ursa major, Kuru 357-7 – விண்மீன், star, Kali 2-21 – வடமீன், northern star, Kali 5-9 - கோள்மீன், planets, Kali 64-4 -ஆரல் மீன், Karthikai star, Kali 104-27 – விண்மீன்கள், stars, Pari 5-44 – சாலினி, அருந்ததி, Arunthathi northern star, Pari 16-36 - விண்மீன்கள், stars, Pari Thirattu 1-12 - விண்மீன்கள், stars, Pura 13-6 - விண்மீன்கள், stars, Pura 21-4 - விண்மீன்கள், stars, Pura 24-25 - விண்மீன்கள், stars, Pura 25-1 - விண்மீன்கள், stars, Pura 60-2 – செம்மீன், Mars, Pura 109-10 - விண்மீன்கள், stars, Pura 117-1 – மைம்மீன், Saturn, Pura 122-8 - வட மீன், northern star, Pura 129-7 - விண்மீன்கள், stars, Pura 160-8 - விண்மீன்கள், stars, Pura 229-6 - விண்மீன்கள், stars, Pura 229-7 - விண்மீன்கள், stars, Pura 229-8 - விண்மீன்கள், stars, Pura 229-12 - விண்மீன், star, Pura 270-1 - விண்மீன்கள், stars, Pura 302-10 - விண்மீன்கள், stars, Pura 392-17 - கோள்மீன்கள், planets, Pura 396-26 - விண்மீன்கள், stars, Pathit 31-8 (செம்மீன், Mars), Pathit 64-12 -விண்மீன்கள், stars, Pathit 90-1 - விண்மீன்கள், stars, Pathit 90-17 - விண்மீன்கள், stars, Pathit 90-35 - விண்மீன்கள், stars, Thiru 169 - விண்மீன்கள், stars, Thiru 169 - விண்மீன்கள், stars, Siru 219 - விண்மீன்கள், stars, Siru 242 - கோள்மீன்கள், planets, Perum 303 - சிறு வட மீன், small northern star, Perum 477 - விண்மீன்கள், stars, Mathu 6 - விண்மீன்கள், stars, Mathu 108 - வைகல் மீன், வெள்ளி, morning star, Venus, Mathu 769 - விண்மீன்கள், stars, Pattina 1 - வெண்மீன், Venus, Pattina 35 - மக வெண்மீன், white Makam star, Pattina 68 - விண்மீன்கள், stars, Pattina 68 - கோள்மீன்கள், planets)
மீனின் - விண்மீன்களைப் போன்று, like the stars (Aka 17-21, 114-11, 144-17, 235-10, 297-15, Nat 48-4, Kuru 150-2, Thiru 88), விண்மீனைப் போன்று, வெள்ளி, like the morning star, Venus (Perum 318)
மீனினும் – விண்மீன்களைக் காட்டிலும், more than the stars (Kuru 44-3, Pura 367-16, 371-25)
மீனொடு – விண்மீன்களுடன், with stars (Aka 153-15, Nat 199-9), விண்மீனுடன், with a star (Pura 395-35 - குள மீன், Pathit 89-19 - அருந்ததி)
முடப் பனையத்து – அனுடத்தில், in the Anudam constellation (Pura 229-3)
மைம்மீன் – சனி, Saturn (Once, Pura 117-1)
வடமீன் – வடமீன், northern star, அருந்ததி, Arundathi, Alcor (Kali 2-21, Pura 122-8)
வருடையை – ஆட்டை, மேடத்தை, மேடராசி, the goat, Aries (Once, Pari 11-5)
விசும்பு வீழ் கொள்ளியின் – விண்ணினின்று விழும் சுடர்ப் போன்று, like a meteor (Kur 189-4)
வில்லின் - தனுர் ராசியின், of Sagittarius (Pari 11-9)
வெண்மீன் – வெள்ளி, Venus (Once, Pattina 1)
வெள்ளி – வெள்ளி, Venus (Pari 11-4, Pura 35-7, 117-2, 384-20, 385-1, 386-23, 388-1, 397-1, 398-1, Pathit 13-25, 24-24, 69-14, Porunar 72)
வெள்ளியது - வெள்ளியின், of Venus (Once, Pura 383-23)
வெள்ளியின் - வெள்ளியைப் போன்று, like Venus (Nat 230-4, 356-9)
வேழம் - பரணி, Parani, part of Aries (Pari 11-2)
வைகல் மீன் – காலை விண்மீன், வெள்ளி, morning star, Venus (Once, Mathu 108)
வைகுறு மீனின் - காலை விண்மீனைப் போன்று, வெள்ளி, like Venus, like the morning star (Perum 318)
வைய – உலகமாகிய, the earth (Once, Pari 5-23)
வையக – உலகத்தின், of the world (Nat 130-11, Pura 168-18)
வையகத்து – உலகத்தில், in the world (Kali 16-20, Pura 201-17)
வையகம் - உலகம், world (Pura 69-7, 230-5, 260-16, 394-4, Pathit 88-1, Siru 92, Nedu 1, Mullai 57)
வையத்து – உலகத்தில், in the world, உலகத்தை, of the world (Pura 225-4, 371-1, Pathit 90-9, Siru 38, Mathu 470)
வையம் – உலகம், world (Kali 141-12, Pari Thirattu 2-17, 2-94, 10-2, Pura 8-1, 261-6, 358-3)