கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டதுமே காலத்தால் அழியாத அவருடைய காவியப் பாடல்களும், கலங்கரை விளக்காய்த் திகழ்ந்துவரும் அவருடைய தத்துவப் பாடல்களும், அவற்றில் மிளிரும் இலக்கிய நயமுமே பலருடைய நினைவிற்கும், கவனத்திற்கும் உடனடியாக வருபவை. எனினும் பன்முகத் திறனும், பரந்துபட்ட ஆற்றலும் கொண்ட அம்மாமேதை திரைப்படத்துறை அன்றியும் வேறுபல் தளங்களிலும் செயலாற்றி வெற்றி கண்டவர்; தனி முத்திரை பதித்தவர்.
அவ்வகையில், இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத அவருடைய பத்திரிகைத்துறை அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள், பத்திரிகைவழி அவராற்றிய தமிழ்த்தொண்டு ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். (வல்லமை மின்னிதழில் ஏற்கனவே வெளியான இக்கட்டுரையை அவருடைய நினைவு நாளான இன்று (அக்.17) இங்கே மீள்பதிவு செய்கின்றேன்).
’சிறுகூடல்பட்டி’ முத்தையா
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து ‘கண்ணதாசன்’ ஆனார். அவர்
கழகத்தில் சேர்ந்த காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பத்திரிகையை நடாத்திக் கொண்டிருந்தனர். தந்தை பெரியார் ’விடுதலை’ என்ற
இதழை நடத்தி
வந்தார். அவரிடமிருந்து பிரிந்துவந்த பேரறிஞர் அண்ணா ’திராவிட நாடு’ கண்டார்.
அஃது அண்ணாவின் அரிய கருத்துக்களைத் தாங்கி வார இதழாக வெளிவந்தது. நாவலர்
நெடுஞ்செழியன் ‘மன்றம்’
என்ற இதழை இலக்கிய இதழாக நடத்தி
வந்தார்; கலைஞர்
கருணாநிதியோ ‘முரசொலி’யை முழங்கச் செய்தார்.
அத்தருணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன் பாதம் பதித்த கவியரசு கண்ணதாசன், ’தென்றல்’ எனும் அழகிய பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார். அவ்விதழ் இலக்கிய இதழாகவும், அரசியல் இதழாகவும் விளங்கியது. உள்நாட்டு, கழகச் செய்திகளோடு பிறநாட்டுச் செய்திகளும் அதில் சுருங்கிய அளவில் இடம்பெற்றிருந்தன.
நல்ல தமிழில் அந்த (கவிதைத்) தென்றல் வீசியது. கழக இளைஞர்களும், தமிழார்வலர் பிறரும் தென்றலை மிக விரும்பி வாங்கினர்; படித்தனர்; சுவைத்தனர்.
கல்லூரி மாணவர்களிடையே ’தென்றல்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அறிஞர் கா. அப்பாதுரையாரின் துணையோடு கண்ணதாசன் ’வெண்பாப் போட்டி’யைத் தென்றல் பத்திரிகையில் நடத்திப் பரிசுகள் வழங்கி வந்தார். வெண்பாப் போட்டியாலும், தென்றலின் சுவைமிக்க பிற பகுதிகளாலும் தமிழ் இளைஞர்களிடத்துத் தமிழ்ப்பற்றும், தமிழின உணர்வும் மிக்கோங்கின. ஈழத் தமிழர் பற்றிய செய்திகளும் தென்றலில் தவறாது இடம்பெற்றிருந்தன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
தென்றலையொட்டி ’முல்லை’ என்ற இலக்கியத் திங்களிதழும் கண்ணதாசனால் தொடங்கப் பெற்றது. இவ்விதழ் அளவிற் சிறியதேனும் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது என்பதை யாரும் மறுக்கவியலாது. வரலாற்றுச் சிறுகதைகளும், புனைகதைகளும் முல்லைக்கு மேலும் மணங்கூட்டின.
தி.மு.க.வில் இணைந்திருந்த கவிஞரின் (கழக) அரசியல் வாழ்வு நீண்டநாள் நீடித்திருக்கவில்லை. சூழ்நிலை அவரைக் கழகத்தினின்றும் பிரித்தது. எனினும், அவருடைய கலை, இலக்கியப் பணிகள் தென்றலிலும், முல்லையிலும் தொடர்ந்தவண்ணம் இருந்தன. ஊழின் பெருவலியோ அல்லது காலத்தின் கோலமோ அறியோம்…..தென்றலையும், முல்லையையும் அவரால் தொடர்ந்து நடத்த இயலாமற் போனது. அதனால் தென்றல் ஓய்ந்தது; முல்லையும் காய்ந்தது.
ஆயினும், கவிஞரின் இலக்கிய ஈடுபாடும், கவிதைக் காதலும் அவரை விடாமல் துரத்தின. அதன் விளைவே சில ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த ’கண்ணதாசன்’ எனும் இலக்கியத் திங்களிதழ். போற்றுதலுக்கும், திறனாய்வுக்கும் உரிய சிறுகதைகள் பல அவ்விதழில் வெளிவந்தன. தரமான பிறர் படைப்புக்களோடு கவியரசரின் கருத்தோவியங்களும் இதழுக்கு எழில்கூட்டின.
கண்ணதாசன் இதழில் இடம்பெற்ற பல சிறுகதைகள், கருத்தரங்குகள் பலவற்றில் மீள்வாசிப்பிற்கும், திறனாய்விற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டன. ’வனவாசமும், மனவாசமும்’ கவிஞரின் உண்மை வாழ்வைப் புனைவின்றி வாசகர்களுக்குப் புகன்றன. ஆம்…கவியரசு கண்ணதாசன் என்றுமே தன் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துரைக்கத் தயங்கியதில்லை. அவற்றின் வெளிப்பாடே அவரெழுதிய வனவாசமும், மனவாசமும்! (It seems he wanted to keep his life as an open book!).
கவியரசரின் வாழ்வில் தொடர்ந்து பல சங்கடங்கள் ஏற்பட்டன. அரசியலிலிருந்து முற்றிலும் விலகாவிட்டாலும்கூட ஒதுங்கியிருக்கலானார். உண்மைகளையும், நன்மைகளையும் மட்டுமே ஆதரிப்பவரானார். அவர் பெரிதும் நம்பியிருந்த திரையுலகிலும் அவருக்குச் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. எனினும் கவித்துவமும், தனித்துவமும் மிக்க அவர்தம் சிந்தனைகள் அனைத்து எதிர்ப்புக்களையும் வென்று அவரை வாழவைத்தது. பொருளாதாரச் சிக்கல்களினால் ’கண்ணதாசன்’ இதழும் இடையிடையே தடைப்பட்டு வெளிவந்து, இறுதியில் முற்றிலும் நின்றே போனது. அந்தோ!!
இக்காலகட்டத்தில் கவிஞரோடு நட்புப் பாராட்டிய எழுத்தாளர்களாக விளங்கிய ஜெயகாந்தனையும், தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியையும் தமிழிலக்கிய உலகம் என்றும் மறவாது போற்றும். இவர்கள் மூவரும் அன்று எழுத்துலகில் மும்மணிகளாக – திரி ரத்தினங்களாகத் திகழ்ந்தனர் எனலாம்.
’கண்ணதாசன்’ திங்களிதழ் நின்றபின்பும் கவியரசரின் எழுத்துப்பணி தொய்வின்றித் தொடர்ந்தது. கல்கியில் அவர் எழுதிவந்த ’சேரமான் காதலி’ என்ற வரலாற்றுப் புதினம், அவருக்குச் சாகித்ய அகாதெமியின் விருதினைப் பெற்றுத் தந்தது. பின்னர் அவர் எழுத்தின் – சிந்தனையின் திசை மாறியது. ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற பெயரில் பல தொகுதிகள் இந்து சமயத்தை எளிதாக விளக்கும் முறையில் வெளியாயின. வாசகர்களிடம் பேராதரவினை இந்நூல்கள் அவருக்குப் பெற்றுத்தந்தன. கண்ணனைப் பற்றிய பல சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். ஆதிசங்கரரின் ‘கனகதாரா தோத்திரம்’ ’பொன்மழை’யாகப் புத்துருப் பெற்றது.
கவியரசரின் இலக்கியப் படைப்புக்களின் முடிமணியாக இன்றும் திகழ்ந்துவருவது கிறித்தவப் பேரிலக்கியமான ‘இயேசு காவியம்’ என்றால் அதனை இலக்கிய ஆய்வாளர் யாரே மறுப்பர்?
’கன்னியின் காதலி’ என்ற படத்தில் ‘கலங்காதிரு மனமே; உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்ற பாடல்மூலம் தன் திரையுலக வாழ்வைத் தொடங்கிய கண்ணதாசன், பாடல்கள் எழுதியதோடல்லாமல் சொந்தத் தயாரிப்பாகவும் திரைப்படங்கள் பல எடுத்தார். கழகக் கருத்துக்களும், தேசியக் கருத்துக்களும் அவருடைய திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தன. ‘சிவகங்கைச் சீமையும்’, ’இரத்தத் திலகமும்’ அவரது சிறந்த தயாரிப்புக்களாகும்.
நிழலுலகத்தாரால் (சினிமாத்துறை) மட்டுமன்றி, நிஜவுலகத்தாராலும் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் ஆளானவர் கவியரசர். ஆயினும்,
”போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்!” என்ற கருத்தில் சற்றும் பின்வாங்காது வாழ்ந்தவர் அவர்.
கண்ணதாசன், தன் தனிவாழ்வில் பெருவெற்றி பெற்றவர் அல்லர்; ஆனால் பலருடைய வெற்றிக்கு வழிகாட்டியவர்; உழைத்தவர்; உதவியவர். குறைகண்டவிடத்து ஏசிய கவிஞர்; நிறைகண்டவிடத்து யாரையும் போற்றவும் தயங்கினாரில்லை. ‘குரல் கெட்ட குயிலே கேள்!’ எனப் பாவேந்தரை ஏசிய கண்ணதாசன்,
”புரட்சிப் பாவல வணக்கம்………
”ஏடெடுத்துக் கவியெழுத நினைக்கும் போதில்
என்னெதிரே நின்னுருவம் ஏறு போன்று
‘பாடுதமிழ்’ என்றுரைக்கக் கேட்பேன்! அந்தப்
பத்தியிலே பன்னூறு கவிதை யாப்பேன்
கூடலிறை பாண்டியன்போல் நிமிர்ந்து நிற்கும்
குலத்தலைவா! யான்கற்ற கல்வி கொஞ்சம்,
நாடெனையும் நோக்கும்வகை நான் வளர்ந்தேன்
யாவுமுனைக் கற்றதனால் பெற்ற பேறு!
………………………………………………………….
இருபதுடன் பதினான்கு வயது சென்றும்
இயல்பினில்யான் குழந்தையென அறிவாயன்றோ! (தன்னுடைய 34-ஆம்
வயதில் இக்கவிதையை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது)
எனப் பாவேந்தர் புகழ்பாடுகின்றார். அவருடைய குழந்தை உள்ளத்திற்கு இதனினும் விஞ்சிய சான்றுண்டோ? :-)
திரைப்படப் பாடல்கள் அன்றித் தனிப்பாடல்களாலும் பெரும் புகழ்பெற்றவர் கண்ணதாசன்.
காட்டாக ஒன்று…
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
’அனுபவம் என்பதே நான்தான் ’என்றான்!
’ஆண்டவன் என்றொருவன் வெளியில் இல்லை; நம் அனுபவங்களில்தான் அவன் வாழ்கிறான்’ என்ற கவியரசரின் தீர்க்க தரிசனம் இக்கவிதை வரிகளில் பளிச்சிடுகின்றது.
அகவை ஐம்பதைத் தாண்டிய சில ஆண்டுகளில் மிக அவசரமாகத் தன் பூவுலக வாழ்வைக் கவிவேந்தர் நீத்தாலும், காலத்தை
வென்ற தன் கவிதைகளாலும், திரையிசைப் பாடல்களாலும், இலக்கியப் படைப்புக்களாலும்
அழியாப் புகழை நிறுவி அமரகவியாகிவிட்டார். காவியத் தாயின் இளைய மகன் என்று தன்னை உரிமையோடு அழைத்துக்கொண்ட கண்ணதாசன், இன்று
தானே ஒரு காவியமாகித் தமிழர்கள் அனைவர் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பைந்தமிழ்
வளர்த்த அந்தக்
கவியரசரின் புகழ் இவ்வையமுள்ளவரை நிலைத்து
நிற்கும்; காலத்தை வென்று நிற்கும்.
அன்புடன்,
மேகலா
கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டதுமே காலத்தால் அழியாத அவருடைய காவியப் பாடல்களும், கலங்கரை விளக்காய்த் திகழ்ந்துவரும் அவருடைய தத்துவப் பாடல்களும், அவற்றில் மிளிரும் இலக்கிய நயமுமே பலருடைய நினைவிற்கும், கவனத்திற்கும் உடனடியாக வருபவை. எனினும் பன்முகத் திறனும், பரந்துபட்ட ஆற்றலும் கொண்ட அம்மாமேதை திரைப்படத்துறை அன்றியும் வேறுபல் தளங்களிலும் செயலாற்றி வெற்றி கண்டவர்; தனி முத்திரை பதித்தவர்.
அவ்வகையில், இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத அவருடைய பத்திரிகைத்துறை அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள், பத்திரிகைவழி அவராற்றிய தமிழ்த்தொண்டு ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். (வல்லமை மின்னிதழில் ஏற்கனவே வெளியான இக்கட்டுரையை அவருடைய நினைவு நாளான இன்று (அக்.17) இங்கே மீள்பதிவு செய்கின்றேன்).
’சிறுகூடல்பட்டி’ முத்தையா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து ‘கண்ணதாசன்’ ஆனார். அவர் கழகத்தில் சேர்ந்த காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பத்திரிகையை நடாத்திக் கொண்டிருந்தனர். தந்தை பெரியார் ’விடுதலை’ என்ற இதழை நடத்தி வந்தார். அவரிடமிருந்து பிரிந்துவந்த பேரறிஞர் அண்ணா ’திராவிட நாடு’ கண்டார். அஃது அண்ணாவின் அரிய கருத்துக்களைத் தாங்கி வார இதழாக வெளிவந்தது. நாவலர் நெடுஞ்செழியன் ‘மன்றம்’ என்ற இதழை இலக்கிய இதழாக நடத்தி வந்தார்; கலைஞர் கருணாநிதியோ ‘முரசொலி’யை முழங்கச் செய்தார்.
...
<span style="font-size:12.0pt;line-height:150%;font-family:"Times New Roman&
திரு கண்ணதாசனின் பாடல்கள் என்றுமே எனக்கு இனியவை. அவரை நேரில் ஒரு முறை தூரத்திலிருந்து கண்டிருக்கிறேன். ஆனால் அவரிடம் நெருங்கிப் பேச வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் திரு கண்ணதாசன் அவர்களைப் பற்றிய கவிதை ஒன்று எனக்குத் தெரிந்த வரையில் எழுதினேன்
இதோ கீழே அந்தக் கவிதை
" கண்ணதாசன் "
எட்டடுக்கு மாளிகையில் இவனிருக்கவில்லை
ஏழு பிள்ளை பெற்றவர்க்கே எட்டாய்ப் பிறந்த பிள்ளை
ஆழ்கடலில் முத்தெடுக்கும் மீனாய் வாழுகின்ற வரையில்
தமிழ்க் கடலில் மூழ்கியே முத்தெடுக்க
தாழ்ந்தே உயர்ந்தே வாழுகின்ற போதினிலே
வறுத்தெடுத்த துயரத்தையும் வாட்டுகின்ற
கோமகனாய் வாழ்ந்தே அனுபவ முத்துக்களை
அள்ளியே வாரித் திரட்டி மனமென்னும் கூடையிலே
போட்டு வைத்து யார் வந்து கேட்டாலும் வாரி
இறைத்து வறுமையிலே தாழ்ந்தாலும் செல்வ
வளத்திலே வாழ்ந்தாலும் சந்தனமும் வெந்தணலும்
பூக்கடையாய் மனதிருத்தி அத்தனையும் அனுபவமே
என்றுணர்ந்து சரம் சரமாய் அனுபவ முத்துக்களை
கோர்த்து வைத்து விண் முட்டப் பாட்டெழுதி
மண்ணிலே புகழ்கொண்ட கவி மன்னன்
மூன்றெழுத்தில் மூச்சு வைத்த தான்தோன்றிக் கவிஞன்,
எட்டாத உயரத்திலும் தமிழ் மணம் பரப்பி
கிட்டுகின்ற சொற்களையே தமிழ்க் கள்ளாக்கி
சுட்டுகின்ற மதுவினையே சுடுகின்ற நெருப்பினையே
கோப்பையிலே ஏந்திக் குடித்தே தேவர்களை
சந்திக்க புறப்பட்டான் கோப்பையிலே வாழ்ந்த இவன்
தமிழ்க் கோட்டையிலே கவிஞனானான்
தமிழெட்டி எட்டி அவன் பாக்கோனாக மாறி
தன் பாட்டையையே பாட்டாக மாற்றி வாழ்ந்தான்
முதல் முதலில் நாத்திகமாய் வாழ்ந்திருந்தும்
ஆத்திகத்தின் வாசலிலே கவி படைத்தான்
நாத்திக வாதத்தில் ஒன்றுமில்லை என்றுணர்ந்து
ஆத்திக வேதத்தின் உரையெழுதி கீதை தனையே
எழுதி கண்ணனிடம் பித்தானான் கண்ணனுக்கே
சொத்தானான் முத்தான பாட்டெழுதி சத்தான
வித்துக்களை சொத்துக்களாய்க் குவித்தான்
தொடக்க முதல் முடிவு வரை தானெழுதி
ஆத்திகமே முடிவில்லாப் பேரொளி என்றெழுதி
முடிவில்லாப் புகழடைந்தான் மூத்த கவி இவனானான்
தமிழ் பெருமை கொண்டது தரணியிலே இவன்
புகழ் பாடி படிக்கின்ற பாடமெல்லாம் பரவசத்தை
ஊட்டும் வடிக்கின்ற கவிதைகளும் பா ரசத்தை
காட்டும் இலக்கியத்து வாசலிலே மழைக்காக
ஒதுங்கியவன் முற்றும் நனைந்தபடி மூழ்கி
மூழ்கி முத்தெடுத்தான் வலக்கையால் வாழ்த்தி
நம்மை வரவேற்கும் நாமகள் கலைமகளருள் புரிந்தாள்
முடிசூடா மன்னனிவன் இனி ஒருவன் உண்டா
இறையே உன் படைப்பில் இவனோர் அதிசியம்
இவன் உனக்கே புரியாத ரகசியம்
இனிக்கும் கவியான கண்ணதாசன் என்னும்
இவன் இன்னொரு சிவன்
அடி முதல் முடிவரை இவன் தொடாத
இலக்கியமா பாடாத பாட்டுண்டா இவன்
போல் பாட்டெழுத உனக்குண்டோ திறமை
உன்னை நீ அறிய முயன்று பார்
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/5F9oOXQoxOg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
அகவை ஐம்பதைத் தாண்டிய சில ஆண்டுகளில் மிக அவசரமாகத் தன் பூவுலக வாழ்வைக் கவிவேந்தர் நீத்தாலும், காலத்தை வென்ற தன் கவிதைகளாலும், திரையிசைப் பாடல்களாலும், இலக்கியப் படைப்புக்களாலும் அழியாப் புகழை நிறுவி அமரகவியாகிவிட்டார். காவியத் தாயின் இளைய மகன் என்று தன்னை உரிமையோடு அழைத்துக்கொண்ட கண்ணதாசன், இன்று தானே ஒரு காவியமாகித் தமிழர்கள் அனைவர் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பைந்தமிழ் வளர்த்த அந்தக் கவியரசரின் புகழ் இவ்வையமுள்ளவரை நிலைத்து நிற்கும்; காலத்தை வென்று நிற்கும்.
கவிஞர் வாலி கண்ணதாசன் மரணத்தின் போது எழுதிய கவிதை
கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !
நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அவர் நலம் பெற்றுத் தமிழகன் வருவார். அரசியலில் ஈடுபடாமல் அவர் கோலோச்சிய திரை உலகில் ஒரு வார இதழ் ஆசிரியராகப் பொறுப்பேற்பார் என்ற உறுதிமொழியுடன் தொடங்கப்பட்டது ஜெமினி சினிமா என்ற வார இதழ். அவர் பொறுப்பேற்கும்வரை தொட்ங்கி அதன் நிழலாசிரியனாக இருந்தேன். கவி அரசரைப்பற்றிய உண்மைத் தகவலைவிடத் திரி(போட்ட) வெடிகள் அதிகம். எடுத்துக்காட்டாக அவர் நண்பர்கள் கலைஞர் எம்.ஜி.ஆர் போல் அவருக்கும் மூன்று மனைவிகள் என்று எழுதுவது. சத்திய சோதனைபோல் தன்னுடைய அழுக்கைத் தனக்குள் மறைத்துக்கொள்ளாமல் அப்பட்டமாகச் சொன்ன மாமனிதர். அவர் ஆளுமைகளை முகமூடிகளைக் கிழித்தும் தோலுரித்தும் மறைந்திருக்கும் மர்மமென்ன என்று வெளிப்படையாகக் கேட்டவர். மாற்றம் என்பதே நிலையானது என்று காலத்துக்கேற்ப மாறிக்கொண்டிருந்தார். எதிர்ப்பதற்காகக் கற்ற ஆத்திக வளங்களை நாத்திக நிலையிலிருந்து பாமரர்களும் கற்றறிந்த அறிஞர்களும் போற்றும் காவியமாக உரைநடையாகப் படைத்தவர்அவ்ருடைய பாடல்கள் திறநிலைக்கு வந்து இணையத்தில் கிடைக்கிறது. அவர் படைப்புகளை அரசு நாட்டுடமையாக்குவதை அவர் குடும்பம் விரும்பவில்லை. எனவே இணையத்தில் கிடைப்பது நடக்கும் என்று தோன்றவில்லைஇனா பனா அனா
”மணவாழ்க்கை: 1950ல் கண்ணதாசனின் மண வாழ்க்கை தொடங்கியது. கவிஞருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் பொன்னழகி என்கிற பொன்னம்மா. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்கள். அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்கள் (விசாலாட்சி என்பது கண்ணதாசனின் தாயாரின் பெயர்).
இரண்டாவது மனைவி பார்வதிக்கு காந்தி கண்ணதாசன், கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள். (காந்தி கண்ணதாசன் தற்போது ‘கண்ணதாசன் பதிப்பக’த்தின் அதிபர்).

மூன்றாவது மனைவி புலவர் வள்ளியம்மைக்கு, விசாலி மனோகரன் என்ற ஒரே மகள். (கண்ணதாசன் இறந்தபோது விசாலிக்கு 4 வயதுதான். பிற்காலத்தில், சினிமாவிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்). ”