IILPT- உரைப் பொழிவுகட்கு உரிய குறிப்புகள்

27 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 29, 2026, 12:07:28 PM (7 days ago) Jul 29
to vallamai
சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தும் உயர்கல்விக்கான உலகளாவிய புதுமைத் திட்டம் (International Innovative Learning Programme for Tamil) மூலம் தமிழியல் வகைமைகள் பற்றி வெளிவரும் தமிழ் காணொலிக் குவையில் இடம் பெறும் கருத்துகள் (notes of lesson for specific topics)

பண்டைத் தமிழர் உணவு


அவித்த உணவு = புழுக்கு

தானியங்கள்:

நன்செய்ப்பயன்- நெல் (புறம்.399)

புன்செய்ப் பயன்கள்-

வரகு ‘புன்புல வரன்… புன்கம்’ (புறம்.34)

தினை ‘சிறுதினை…/ உவித்த புன்கம்’ (புறம்.168)

கம்பு “இருநிலக் கரம்பை… நுண்புல்… அட்ட… புழுக்கல்” (பெரு.93-100)

மூங்கிலரிசி “கழைவளர் நெல்லின் அரிஉலை ஊழ்த்து“ (மலை.180)

அவரை வகைகள்: 

உழுந்து “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி” (அகம்.86) 

துவரை “வேங்கை வீகண்டன்ன/ அவரை வான்புழுக்கு அட்டிப் பயில்வுற்று” (பெரு.194-195) 

கிழங்குப்பூ: ‘கருங்கட் கருனை’ (நற்.367); ‘புலிக்கண் வெப்பர்’ (புறம். 269)

ஊன்: “ஊன்புழுக்கு அயரும்” (அகம்.119, 159, 172, 315)


புழுக்குகள்

புன்செய்ப் பயனின் புழுக்கு =   புன்கம்

‘வரகின்… புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்' (அகம்.393)

'மென்தினைப் புன்கம்' (அகம்.237)

கூழ்.  ‘கூழ்ஆர் கூவலர்’ (அகம்.21)

களி  “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை” (அகம்.86)

ஊன்சோறு  ‘ஊன்துவை கறிசோறு’ (புறம்.14)

நன்செய்ப் பயனின் புழுக்கு- சோறு

‘அமலை’/ ’சொன்றி’ (புறம்.34; பெரு.131)

கலந்த தானியப் புழுக்கு- பால்கஞ்சி

“கொள்ளோடு பயறு பால்விரைஇ வெள்ளி 

கோல் வரைந்து அன்ன வாலவிழ் மிதவை” (அகம்.37)

ஊன் புழுக்கு 'நிணப்புழுக்கு' (புறம்.152)

'எறிகதிற்றி ஏற்றுமின் புழுக்கே' (பதிற்.18)

ஊன்புழுக்குகள்

யானை “பெருங்களிற்று… ஊன்… உமணர் சோற்றுலைக் கூட்டும்” (அகம்.169)

“கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப் புலவுப்புழுக்கு” (அகம்.309)

செம்மறி “பதனறிந்து / துராஅய் துற்றிய துருவையம்.. வேவை” (பொரு.102-104)

வெள்ளாடு “வெண்எறிந்து இயற்றிய மாக்கண் அமலை” (மலை.441)

வாளைமீன் ‘நெடுவாளைப் பல் உவியல்' (புறம்.395)

மான் ‘மான்தடி புழுக்கிய’ (புறம்.168)

வாடூன் “வாராது அட்ட வாடூன் புழுக்கல்” (பெரு.94-100)

வரால்மீன் “மோட்டிரு வராஅற் கோட்டுமீன் கொழுங்குறை” (புறம்.399)

ஆமை “வயலாமைப் புழுக்கு உண்டும்”  (பட்டி.64) 

நத்தை “பழன… / கடுநந்து உடைக்கும்” (நற்.280)

ஈயல் “புற்றத்து/ ஈயல்பெய்தட்ட இன்புளி வெம்சோறு”  (அகம். 394)


உலை வகைகள்

பால் “சிறுதினை மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்… உவித்த”  (புறம்.168)

மோர் “... மாமோராகக்/ கழைவளர் நெல்லின் அரிஉலை ஊழ்த்து” (மலை.179-180)

நீராகாரம் ‘காடி வெள்உலைக் கொளீஇ’ (புறம்.399)

நீர்- ஊற்றுநீர் “நெடுந்கிணற்று/ வல்லூற்று உவரி தோண்டி… அட்ட” (பெரு.97-100)

சுனைநீர் “சுனைகொள் தீநீர் சோற்றுலைக் கூட்டும்” (அகம்.169)


பதப்படுத்திய ஊன்

உப்புக்கண்டம்- “ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறை கால் யாத்தது” (பெரு.132-133) ‘வேட்டையில் கிடைத்த  மிகுந்த 

ஊனை வெட்டி; இரண்டு கம்புகளை ஊன்றி அவற்றை மேலே  இணைக்கும்   கயிற்றில் கோத்துக்;  காய வைத்து…’) 

மீன் உணங்கல்- “புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி” (நற். 331)

'சூடுகிழித்து வாடூன் மிசைய' (புறம்.386)


ஊன் சோறு

பன்றிக்கறிச் சோறு “குறுந்தாள் ஏற்றைக் கொழுங்கண் நல்விளர் நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா” (புறம்.379)

முள்ளம்பன்றிக்கறிச்சோறு “... எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை” (புறம்.177) 

முயல்கறிச் சோறு “குறுமுயலின் நிணம்பெய்தந்த நறுநெய்ய சோறென்கோ” (புறம்.396)

மான்கறிச் சோறு “இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல் ஒலிகழை நெல்லின் அரிசியோடு…

அளைபெய்து அட்ட வெண்சோறு” (அகம்.107)

வெள்ளாட்டங்கறிச் சோறு- "செவ்வூன் தோன்றா வெண்துவை… வாலூன் வல்சி" (பதிற்.55)

செம்மறிக்கறிச் சோறு- “மைப்பறப் புழுக்கின் நெய்க்கனி வெண் சோறு” (அகம்.136)

மீனூன்சோறு- “முள்ளரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு” (மலை.465-467)

கூட்டுக்கறிச் சோறு- “அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்… கடமா கொழுங்குறை முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் 

பிளவை… பிணவுநாய் முடுக்கிய தடி… வழையமை சாரல் கமழத் துழைஇ”  (மலை.174-183)


ஊன்சோற்றின் செய்முறையும் சிறப்பும்

"பொன் அறைந்தன்ன நுண்ணேர் அரிசி

வெண்ணெறிந்து இயற்றிய மாக்கண் அமலை 

தண்ணென் நுண்ணிழுது உள்ளீடாக” (மலை.440-443)

(தொடரும்)
சக 

kanmani tamil

unread,
Jul 30, 2026, 5:01:33 AM (6 days ago) Jul 30
to vallamai
"சோறுவேறு என்னா ஊன்துவை அடிசில்" (பதிற்.45)

“பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்” (குறி. 204)

"பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை" (புறம்.177) 

"புகழ்படப் பண்ணிய பேரூன்சோறும்" (மது.533)

"அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்" (புறம்.390)


நெல்லரிசி வகைகள்

பொன்னறைந்தன்ன நுண்ணேர் அரிசி’ (மலை.440)

‘...பெருஞ் செந்நெல்லின் தெரிகொள் அரிசித்  திரள்நெடும் புழுக்கல்’ (பெரு.L.474)

“சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி (பெரு.131)

“நெடுவெண் ணெல்லின் அரிசி” (மலை.564)


நெல்லரிசிச் சோற்றின் படிநிலைகள் 

வெந்தசோறு = ‘நிமிரல்’  

சுடுசோறு- ‘நாட்சோறு’ (புறம்.379)

நீரில் ஊறிய சோறு: ஓர் இரவில்… ‘கொக்குகிர் நிமிரல்’ (நற்.258)

ஈரிரவில்… ‘பொம்மல் பெருஞ்சோறு’ (நற்.60)

ஈரிரவிற்கு மேல்… ‘பழஞ்சோறு அயிலும்’ (புறம்.399)

சோறு வகைகள்

புளிச்சோறு- "எயிற்றியர் அட்ட இன்புளி வெம்சோறு" (சிறு.175) 

தயிர்ச்சோறு- “...கோவலர் / மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி செவியடை தீர… ப் பகுக்கும்" (அகம்.311)

பால் சோறு- “பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்” (அகம்.394)

சர்க்கரைப் பொங்கல்- ‘கட்டிப்புழுக்கிற் கொங்கர்கோவே’ (பதிற்.90) 

அரிசீம்பருப்புஞ்சோறு- “முதிரை… வல்சி" (பதிற்.55) 

சுடுகாட்டுப் படையல்- 'உப்பிலாஅ அவிப்புழுக்கல்'  (புறம்.363)


பண்ணியம்

இழையப்பம் “இழைசூழ் வட்டம் பால்கலந்தவை போல்” (பெரு.378)

கொழுக்கட்டை “அயிர் உருப்புற்ற ஆடமை விசயம் கவவொடு பிடித்த வகையமை மோதகம்" (மது.625-626)

கருப்பட்டி ஆப்பம் "நல்வரி இறாஅல் புரையும் மெல்லடை” (மது.624)

தானியமா “விசையம் கொழித்த பூழிஅன்ன உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை” (மலை.444-445: இதை வேக வைத்தால் அது தான் இன்றைய புட்டு)

அவல் பாயசம் “பால் உலை இரீஇ… பாசவல்” (அகம்.141- திருக்கார்த்திகை)

“...கரும்பின்… அந்தீஞ் சேற்றோடு     பால்பெய் செந்நெல் 

பாசவல் பகுக்கும்” (அகம்.237)

பால் பொங்கல் “...சிறுதினை / மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்… உவித்த” (புறம்.168- அறுவடைக் கொண்டாட்டம்)


கள் (அரியல்,வேரி, பிழி, நறவு, தோப்பி, தேறல்)

நெல்லரிசிக் கள்- "அவையா அரிசி அம்களித் துழவை

மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி…

பூம்புற நல்அடை அளைஇ தேம்பட

எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி

வல்வாய்ச் சாடியின்  வழைச்சு அற விளைந்த

வெம்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" (பெரு.275-281)

பழச்சாற்றுக்கள்- "...மாஅத்து / தீங்கனி… பலவின் எதிர்ச் சுளை 

அளைஇ இறாலோடு கலந்த வண்டுமூசு அரியல் 

நெடுங்கண் ஆடமைப் பழுநி… தோப்பி" (அகம்.348) 

பாளைக்கள்- "பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்" (பட்டி.89)

தினைக்கள்- "தினைக்கள் உண்ட தெறிகோல் மறவர்" (அகம். 284) 


இணை உணவுகள்

கள்ளின் இணை: 

ஊன் சூடு- ‘அரவு வெகுண்டன்ன தேறலொடு சூடு' (புறம்.376)

கெடிற்றுமீன்& இஞ்சிப்பூ- “இருங்கெடிற்று மிசையோடு பூங்கள் வைகுந்து” (புறம்.384)

 மான்கறி- ‘...மான்நிணப் புழுக்கோடு/ வேரியை நல்கி’ (புறம்.152)

ஆரல்மீன்சூடு& ஆமைப்புழுக்கு- “...வெங்கள் / யாமைப் புழுக்கிற்… ஆரல் கொழுஞ்சூடு” (புறம்.212)

பச்சைமீன் சூடு- “அரியல்… நறும்பிழி தண்மீன் சூட்டொடு” (பெரு.275-282) 


வரகின் இணை:

பால்& முயல்கறிச்சூடு-  “வரகின் / பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக் குறுமுயல் கொழுஞ்சூடு கிழித்த' (புறம்.34)

வேளைக்கீரைத் தயிர்ப்புளி மிதவை- “வரகின்… வாக்கல்… வேளை வெண்பூவெண்தயிர்க் கொளீஇ… அம்புளி மிதவை” (புறம்.215)

வரகவல், ஈசல்& ஆட்டுத்தயிர்- “சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர் இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு … ஈர்வாய்ப் புற்றத்து ஈயல்பெய்தட்ட இன்புளி வெம்சோறு (அகம். 394)


நெல்லுச்சோறின் இணை:

நீர்ச்சோறு& மான்கறி உப்புக்கண்டம் “மான்வறைக் கருனை கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர (புறம்.398)

“பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப” (பொரு.115)

சிவந்த அரிசிச் சோறு& உடும்புக்கறி உப்புக் கண்டம்- 

“சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி… உடும்பின் வறைகால் யாத்தது… பெறுகுவிர்” (பெரு.130-133)

காடைக் கறியும் சோறும்- “நெய் கனி குறும்பூழ் காயம் ஆக ஆர் பதம் பெறுக” (குறு.389)

மோர்க்குழம்பு- "முளிதயிர் பிசைந்த… அட்ட தீம்புளிப் பாகர்" (குறு.167)

கொக்குகிர்நிமிரல்& பச்சைமீன்சூடு- “...கொக்குகிர் நிமிரல் பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி’ (புறம்.395)

முயல்கறிச் சோறு& ஊன்சூடு- “கொழுந்தடிய சூடு என்கோ… குறுமுயலின் 

(தமிழ்நாடு அரசின் புதுமை முயற்சிகள் திட்டம் (TANII) உலகளாவிய தமிழ் ஆர்வலர்களின் உயர்கல்விக்கு ஏற்ற நடவடிக்கையாக எடுக்கும் முயற்சியின் சிறுதுளி இது... தொடர்கிறது.)

சக




kanmani tamil

unread,
Jul 30, 2026, 7:55:46 AM (6 days ago) Jul 30
to vallamai

நிணம் பெய்த நறுநெய்ய சோறென்கோ” (புறம்.396)

வெள்ளாட்டங்கறிச்சோறு& எலிச்சூடு-“மையூன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் எலிவான் சூட்டோடு மலியப் பேணுதும்” (நற்.83) கிழங்குப் பூ “கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு” (நற். 367)

மாங்காய்ப் புளி கூட்டிய வரால் மீன் குழம்பு, சுறா மீன் பொரியல், பாகற்காய்க்கூட்டு, வள்ளைக்கீரைக் கடையல்…- (புறம்.399- பாடல் சிதைந்து உள்ளது.)


தினையின் இணை: தினைச் சோறு& பால்- ‘பசும் தினை மூரல் பாலொடும்’ (பெரு.168)

தினைச்சோறு& ஊன்பொரியல்- “பரூஉக் குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக் கண் இறடிப் பொம்மல்” (மலை.168-169)


சூடு

தாளித்து  எண்ணெயில் பொரித்தவை:

'நெய்உறப் பொரித்த குய்யுடை  நெடுஞ்சூடு' (புறம்.397)

“பரூஉக் குறை பொழிந்த நெய்க்கண் வேவை(மலை.168)

எண்ணெயில் முழுக வறுப்பவை:  

‘நெய்கனிந்து வறை ஆர்ப்ப’ (மது.756)

‘நெய்துள்ளிய வறை முகக்கவும்’ (புறம்.386)

நேரடியாக நெருப்பில் சுடுபவை: 

“... விடுவாய்ப் பிசிரோடு சுடுகிழங்கு நுகர”  (புறம்.225)

'காழிற்சுட்ட கோழூன் கொழுங்குறை' (பொரு.105)

'விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப' (புறம்.366)

“முளவுமா… / கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்” (புறம்.325)

“கடல்இறவின் சூடுதின்றும்” (பட்டி.63)

கருவாடு- “சூடுகிழித்து வாடூன் மிசையவும்” (புறம்.386) 

பச்சை மீன்சூடு ‘தண்மீன் சூட்டொடு’ (பெரு.282)

“பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி” (புறம்.395)

பன்றிச் சூடு- “...ஏனம் கானின் / முளிகழை இழைந்த காடுபடு தீயின் நளிபுகை கமழாது இறாயினிர் மிசைந்து 

துகளறத் தெளிந்த மணிமருள் தெண்ணீர் 

குவளையம் பைஞ்சுனை அசைவிடப் பருகி 

மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட் பொதியினிர்” (மலை.247-249்)


(எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஒரு கடலுக்கு நிகராகத் தம்முள் பொதிந்து வைத்து இருக்கும் செய்திகள் ஏராளம். உணவின் தலைப்பெய் பண்டமும் கையுறை பண்டமும், திருமணம், வெற்றிவிழா போன்ற சிறப்பான நிகழ்வுகட்கு உரிய விருந்துணவு போன்ற செய்திகள் காலத்தின் அருமை கருதித் தவிர்க்கப்பட்டு உள்ளன.

- பண்டைத் தமிழர் உணவு முற்றும்)

சக


kanmani tamil

unread,
Jul 30, 2026, 9:47:47 PM (5 days ago) Jul 30
to vallamai

பண்டைத் தமிழர் புழங்கிய பொருட்கள்

அடுப்புகள்

கோட்டடுப்பு- ‘கோடுயர் அடுப்பின்’ (புறம்.164- பாணர்)

பல்கோட்டடுப்பு-பல்கோட் டடுப்பில் பால்உலை இரீஇ" (அகம்.141- வேளிர் அட்டில்)

குழிசிமுரியடுப்பு- ‘...குழிசி/ வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றி… உவித்த (புறம்.168- குறவர்) 

“முரவுவாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி” (பெரு.99- எயினர்)

கல்லடுப்பு- “உமண்உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்… கொடுவில் ஆடவர்… ஊன்புழுக்கு அயரும்”   (அகம்.159) 

களிபடு குழிசி கல்அடுப்பு ஏற்றி’ (அகம்.393) 

சுடுமண் அடுப்புகள்- படம்:1&2

எரிபொருள்- முரிகள் 

குறும்பர்- ‘முரிவாய் முற்றம்’ (புறம்.261)

பாண்மகள்- “வராஅல்… வஞ்சி விறகிற் சுட்டு” (அகம்.216)

நுளைமகள்- “வீங்கு திரை கொணர்ந்த விரைமர விறகிற் 

கரும்புகைச் செந்தீ மாட்டி” (சிறு.155- அகில்)

குறத்தி- ‘சாந்த விறகின் உவித்த’ (புறம்.168)

உமணர்- “யாஅத்து…/ களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் 

கல்லா உமணர்க்குத் தீமூட் டாகும்”   (அகம்.257)

முனிவர்- “களிறுதரு விறகின் வேட்கும்” (பெரு.499)

நானிலத்து முரிகள்

குறிஞ்சி- மூங்கில் 

“ஏனம்காணின்/  முளிகழை இழைந்த காடுபடு தீயின்” (மலை.247-249) 

முல்லை- பனம்பட்டை 

“விடுவாய்ப் பிசிரொடு  சுடுகிழங்கு நுகர” (புறம்.225) 

ஒடுமரச்சுள்ளி& இலந்தைச்சுள்ளி

“முளவுமாத் தொலைச்சி… உடும்புஇழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச் சீறில் முன்றில்…/  மன்றத்து அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்… அருமிளை” (புறம்.325)

“கொழுஞ்சூடு…/ இரத்தி நீடிய அகன்தலை மன்றத்து” (புறம்.34)

மருதம்- வைக்கோல்

“பழனயாமைப் பாசடைப் புறத்துக்

கழனி காவலர் கடுநந்து உடைக்கும்” (நற்.280) 

நெய்தல்-

புன்னை- “புன்னை ததைந்த வெண்மணல்” (நற்.96)

ஞாழல்- “...சிறுவீ / ஞாழலொடு… கொழுநிழல் துறைவ” (நற்.315) 

அடும்பு-  “...மகளிர் கொடிகொய்து அழித்த 

பொம்மல் அடும்பின் வெண்மணல்” (நற்.272)  

‘கருந்தொழிற் கலிமாக்கள்

கடலிறவின் சூடுதின்றும்’ (பட்டி.61-63


கலன்கள்

‘வறுங்கலம்’ (புறம்.160)

“சிறுகலத்து” (புறம்.232)

‘கலந்தொடா மகளிர்’ (புறம்.299)

‘கலம்செய் கோவே’ (புறம்.228, 256) 

அடுகலன்கள்- கடும்பின் அடுகலன்’  (புறம்.32)   

மடா- “அடைச் சேம்பெழுந்த ஆடுறு மடாவின்” (பதிற்.24)

துடுப்பு- “ துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு” (புறம்.328)

‘துடுப்பின் துழந்த வல்சி’ (புறம்.26)

தாலம்-  “தாலம் பூசல் மேவர” புறம்.120

குழிசி- “இருங்கண் குழிசி” (புறம்.65)


உண்கலன்கள்

தாவர இலைகள்- “அடையிடைக் கிடந்த கைபிழி பண்டம்” (புறம்.246- விதவை) 

பனங்குடை- “பசுவெள்ளமலை… இரும்பனங் குடை(புறம்.177- கிழார்)

வாழையிலை- “உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்” (புறம்.384- நாகர்

“வாழை அகல்இலைப் பகுக்கும்” (புறம்.168) 

தேக்கிலை- “அரைத் தேக்கின் அகல்இலை மாந்தும்” (அகம்.107)


மண்ணாலான மண்டை- “கவிழ்ந்த மண்டை  மலர்க்குநர் யாரென--- பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை”

(புறம்.103- பாணர்)

“நீட்டிய மண்டை” (புறம்.286)

“பாணர் மண்டை  நிறையப் பெய்ம்மார்” (புறம்.115)

உலோகத்தாலானவை- ‘பெறலருங்கலம்’ (பொரு.156)


உண்கலன்கள்  

“வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி” (புறம்.390)

“தேஎங் கொண்ட வெண்மண்டையான்” (புறம்.352)

“ஊன் கொண்ட வெண்மண்டை (புறம்.385)


வெண்கலம்- “ஏந்திய பசும்பொன் மண்டை” (புறம்.289)

‘பொன்செய் புனைகலம்’ (புறம்.56) 

‘பொலங்கலம்’ (புறம்.367; பொரு.86)


செம்பு- ‘செம்பியன்றன்ன’ (மது.485; நெடு.111-112)

(தொடரும்)

சக

kanmani tamil

unread,
Jul 31, 2026, 9:35:48 PM (4 days ago) Jul 31
to vallamai

“அழல் கான்றன்ன அரும்பெறல்… மண்டைய” (புறம்.398)

“இளங்கதிர் எள்ளும்… / விளங்கு பொற்கலத்” (சிறு.242-244) 

“மணிக்கலன்” (புறம். 397)


கொள்கலன்கள்

தசும்பு- “நிறைந்து நெடிதுஇராத் தசும்பின்” (பதிற்.43)

‘சேறுபட்ட தசும்பும்’ (புறம்.377)

‘தசும்புடன் தொலைச்சி’ (புறம்.224)

‘தயிர் கொடு வந்த தசும்பு’ (புறம்.33)

சேமச் செப்பு- “அஞ்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் / சேமச்செப்பினுள்” (குறு.277)

சாடி- ‘முதுகட்சாடி’ (புறம்.258)

‘நனைமுதிர் சாடி’ (புறம்.297)

“சின்னீர் பெய்த … / முதுவாய்ச் சாடி” (புறம்.319)

குடம்- ‘குடப்பால்’ (புறம்.276)

கரகம்- நீர்மலி கரகம்’ (கலி.133)

வட்டி-     “வட்டி நிறைய …/ அரிகாற் பெரும்பயறு”  (ஐங்.47)

வள்ளம்- ‘வள்ளத்து இடும்பால்’ (புறம்.328) 

பிழா- மலர்வாய்ப் பிழா’ (பெரு.276)

தோல்பை- 'சுவல்' (அகம்.340)

மூங்கில் தூக்கு- “...கோவலர் / மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி செவியடை தீர… ப் பகுக்கும்" (அகம்.311)



கருவிகள்

'ஊசி'- (புறம். 82)

ஊனம்- “எஃகுறச் சிவந்த ஊனம்” (பதிற்.24)

“பாசவர் ஊனத்தழித்த வானிணம்” (பதிற்.21) 

கொடுவாள்- “கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை” (பெரு.471-472)

உரலும் உலக்கையும்-

“தொடிமாண் உலக்கை” (புறம்.399)

“குற்றானா உலக்கையால் கலிச்சும்மை” (புறம்.22)

“குரைத் தொடி  மழுகிய உலக்கை” (பதிற்.24)

“உரல்போல் பெருங்கால்” (பதிற்.43)

‘சீறுரல்’ (பெரு.54)

“நிழல் முன்றில் நிலவுரல் பெய்து” (பெரு.96)

உறி- ‘பல்கால் மெல் உறி’ (நற்.142) 

மத்து- ‘நாளுறை மத்தொலி’ (புறம்.257)

நாரரி- ‘நாரரி’ (பதிற்.11; புறம்.232,297,304,367&400)

“நார் பிழிக் கொண்ட வெங்கட் தேறல்” (புறம்.170)

காழ்- “காழிற் சுட்ட கோழூன்” (பொரு.105)

நாழி-  ‘உண்பது நாழி’ (புறம்.189)

மரக்கால்- “நெல்லின் அம்பண அளவை” (பதிற்.66)

சுளகு- “வெள்ளெள் சுளகிடை உணங்கல் செவ்வி” (புறம்.321)

“நீறாடு சுளகு” (புறம்.249) 

முறம்- ‘முறம்’ (நற். 376)

ஞெலிகோல்- ‘இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்’ (புறம்.315)

திரிகல்-  ”களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர்” (பெரு.187)

“...மனையோள் / ஐதுணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த / திரிமரக் குரலிசை” (அகம்.224)

வெட்டுண்ட மரம்- படம்:3 யானையின் கால்- படம்:4


தொழில்சார் கருவிகள் 

வண்டி& கலப்பை / - ‘உருளையொடு கலப்பை சார்த்தி (பெரு.188)

நாஞ்சில் / ‘களிறாடிய புலம் நாஞ்சில் ஆடா’ (பதி.26)

மேழி / ‘கொடுமேழி நசைஉழவர்’ (பட்டி.205)

ஏர்- ‘நல்லேர் முதியன்’ (புறம்-389)

தூண்டில்- “பச்சூன் பெய்த சுவல்பிணிப் பைந்தோல் கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில்” (பெரு.283-285)

எறிஉளி- “...பரதவர் கூர்உளிக் கடுவிசை மாட்டலின்” (அகம்-340)

வலை- “கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை… முன்றில்… தூங்கும்” (அகம்.340)


நுகர்பொருட்கள்-

பாண்டில் கட்டில்- “வல்லோன்… சேக்கை” 

நாற்பது ஆண்டு நிரம்பிய போர்வல்ல யானையின் தந்தங்கள் தாமே வீழ அவற்றினின்று  கால்களைச் செதுக்கிச் செய்த கச்சுக்கட்டில்… ஒவ்வொரு காலின் இடையே அழகுறுத்த இரண்டு இலைகளின் ஊடாகப் பால்கட்டி வீங்கிய முலைகளை ஒத்துத் தோன்றும் குடம்… குடத்திற்கும் கட்டிலுக்கும் இடைப்பட்டுத் திரண்ட உள்ளி போன்ற அமைப்பு… நூல் நுழைய இயலாத மூட்டுவாய்கள்… பக்கங்களில் பலகணி போலத் தொங்கும் முத்து மாலைகள்… வரிப்புலி உருவத்தைக் கொத்திய தகட்டால் வேயப்பட்ட நடுவெளி… பல  மென்மையான மயிர் செறித்த படுக்கை… அதன் மேல் அரிமா வேட்டையும் காட்டுப் பூவேலைப்பாடுகளும் தோன்றப் போர்த்திய போர்வை… துணைபுணர் அன்னத்தின் தூவியால் நிறைத்த இரட்டைத் தலையணை… துவைத்துக் கஞ்சி தோய்த்த மலர்மணம் ஊட்டப்பெற்ற விரிப்பு… (நெடு.118- 135)


பனைநார்க் கட்டில்- “கட்டில் நிணக்கும்… போழ்தூண்டு ஊசி” (புறம்.82)

குறுங்காற் கட்டில்- “...குறுங்காற் கட்டில்/ …புதல்வன்” (ஐங்.410)

மெத்தை- ‘மெல்லணைக் கிடந்தோன்’ (புறம்.383)

பாய்& அதள்- ‘அதளுண்டாயினும் பாயுண்டாயினும்’ (புறம்.317)

பரற்பள்ளி- “பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்” (புறம்.246)

(தொடரும்)
சக 

kanmani tamil

unread,
Jul 31, 2026, 11:32:36 PM (4 days ago) Jul 31
to vallamai
திருத்தம் 
தோல்பை- 'பைந்தோல் சுவல்மிசை' (அகம்.340)
சக 

kanmani tamil

unread,
Aug 1, 2026, 9:24:02 PM (3 days ago) Aug 1
to vallamai

பரற்பள்ளி- “பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்” (புறம்.246)

பாடை- ‘கால்கழி கட்டில்’ (புறம். 286)

ஆட்டுத்தோல்- “பல்யாட் டினநிரை… / துய்ம்மயிர் அடக்கிய சேக்கை அன்ன மெய்உரித்து இயற்றிய மிதியதட் பள்ளி" (மலை.418- 419) ‘அதளோன் துஞ்சும்’ (பெரு.151)

‘மான்றோற் பள்ளி’ (பெரு.88-90)

மான்தோல்- “மானதட் பெய்த உணங்குதினை” (புறம்.320)

படைக்கட்டில்- “வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழ” (புறம்.41)

ஏணி& கோக்காலி- ‘ஏறாஏணி’ (பதிற்.43)

பாவை விளக்கு- 

“யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந்து ஐயகல் நிறைய நெய் சொரிந்து பரூஉத் திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி” (நெடு.101-103)

பாண்டில்விளக்கு-

“பாண்டில் விளக்கிற் பரூஉச் சுடர் அழல” (நெடு.175; பதிற்.47)

“சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து” (பதிற்.52) 

இரும்பு விளக்கு- 

“இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ… கைதொழுது” (நெடு.42)

தேர்-  “உரவுநீர்ச் சேர்ப்பன் தேர்மணிக் குரலே” (நற்.78)

வண்டி- ‘உறுகண் மழவர் உருள் கீண்டு இட்ட’ (அகம்.121)

“குறுஞ்சாட்டுருளையோடு… சார்த்தி” (பெரு.188)


விளையாட்டுப் பொருட்கள்

பந்து, பாவை, கழங்கு- “பந்தும் பாவையும் கழங்கும் … ஒழித்தே”  (ஐங்.377)

‘பொறிஅமை பாவை’ (அகம்.98)

ஊசல்- “ஊசன்மேவற் சேயிழை மகளிர்” (பதிற்.43)

சிறுதேர்- ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்- (பெரு.249)

சிறுபறை, வட்டு- “வங்கா வரிப்பறைச் சிறுபாடு முனையின்

செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்” (நற்.341)

(புழக்கத்திற்கு உரிய நீராதாரங்கள் பற்றிய செய்திகள் காலத்தின் அருமை கருதித் தவிர்க்கப்பட்டுள்ளன ... முற்றும்)

 நன்றி: tamilconcordance.in

சக


kanmani tamil

unread,
Aug 2, 2026, 11:48:38 PM (2 days ago) Aug 2
to vallamai

3.பண்டைத் தமிழகத்துக் குடியிருப்புகள்

நன்றி: tamilconcordance.in


வெள்ளிவீதியார் பட்டியலிடும் குடியிருப்புகள் 

நாடு,  ஊர் & குடிமுறை

“நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் 

குடிமுறை குடிமுறை தேடின்

கெடுநரும் உளரோ நம் காதலோரே” (குறு.130)

நாடுகள்: ‘நெடுஞ் சோணாட்டு’ (பட்டி. 28), 

‘அகனாட்டு’ (புறம்.249) 

கோனாடு, புறநாடு, இடைகழி நாடு …


நன்செய் வேளாண்மையின் ஒரு அலகு நாடாக; நாட்டைச் சார்ந்து ஊர்கள் இருந்தன. 

“நாடெனும் பேர் காடாக” (மது.156)

“காடாகி விளியும் நாடு” (புறம்.52)

“காடு என்றா நாடு என்றாங்கு” (புறம்.166)

“நாடா கொன்றோ காடா கொன்றோ” (புறம்.187)

“காடு முன்னினரே நாடு கொண்டோரும்” (புறம்.359)

"...அஞ்சீறூர் நாடுபல பிறக்கொழிய" (அகம்.331) 

“பல்லூர் சுற்றிய கழனி’ (புறம். 387)


நானிலத்து நாடுகள்

நானிலங்களிலும் நன்செய் வேளாண்மை நிகழ்ந்தது. 

குறிஞ்சி சார்ந்த நாடுகள்: ‘கல் நாடு’ (புறம்.60) 

‘குறும்பல் பொறைய நாடு’ (ஐங்.404) 

‘குன்று ஓங்கு வைப்பின் நாடு’ (அகம்.338) 

‘நீடுவரை அடுக்கத்த நாடு’ (பதிற்.55)

‘கல் நாடன்’ (சிறு.87);

 ‘மலை நாடன்’ (சிறு.107) 

‘வரை நாடன்’ (பெரு.103)

‘குன்று கெழு நாடன்’ (குறி.199) 

‘குறும்பொறை நாடன்’ (ஐங்.183) 

‘சாரல் நாடன்’ (அகம்.328) 

“முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு” (புறம்.110)

முல்லை சார்ந்த நாடுகள்: 

‘காடு தலைக்கொண்ட நாடு’ (பதிற்.40)

‘கான் கெழு நாடன்’ (நற்.61) 

‘புறவு அணி நாடன்’ (ஐங்.405) 

‘புன்புல நாடன்’ (ஐங்.421) 

‘வன்புல நாடன்’ (ஐங்.469) 

மருதம் சார்ந்த நாடுகள்:

"பெண்ணையம் படப்பை நாடு" (புறம்.126)

‘யாறு… நாடனை’ (குறு.271)

நெய்தல் சார்ந்த நாடுகள்:

‘தண்கடல் படப்பை -நாடு’ (பதிற்.55&88)

"புனவர் தட்டை புடைப்பின் அயலது

இறங்கு கதிர் அலமரு கழனியும் பிறங்குநீர்ச் 

சேர்ப்பினும் புள்ளொருங்கு எழுமே" (புறம்.49)


வேந்தர் தலைநகர்கள்

மதுரை-

மணிநீர்க் கிடங்கு, ஓங்கி அகன்ற நிலை வாயில்கள், வலிமையான கதவுகள், படைப்புரிசை,  வேந்தன் அரண்மனை, மாடங்கள், திருவிழாக் கொடிகளோடு பிற கொடிகள் ஏற்றிய அங்காடிகள், நாற்படை இயங்க அகன்ற தெருக்கள், பௌத்தப் பள்ளி, அந்தணர்பள்ளி , அமண்பள்ளி; ஐம்பெருங் குழுவினர், வணிகர், வேளாளர்க்குரிய தனித்தனித் தெருக்கள் ஆகியவற்றுடன் திகழ்ந்தது. (மது. 327-699)


மேற்கரை வஞ்சி-

“புனல் வாயில் வஞ்சி” (சிறு.50)

நானில வளமும் பொருந்தியதாய் (பதிற்.30);

ஆறு கடலோடு கலக்கும் சங்கமத் துறையில் இருந்தது. காவற் காட்டுடன் அம்பு எய்யும்  பொறி; அகன்ற வாயில், முதலைகள் மிக்க ஆழ்ந்த அகழி, வளைந்து உயர்ந்த மதில் அனைத்தும் இருந்தன (பதிற்.53).


கொங்குக் கருவூர்- முதலைகள் மிகுந்த அகழி, செம்பாலானது போன்ற மதில் சுவர்,  கோட்டைக்குள்ளே முதலையோடு கூடிய இலஞ்சியுடன்   ஆன்பொருநைக் கரையில் இருந்தது (புறம்.36).


பட்டினங்கள்

புகார்- 

மருத வளமும் நெய்தல் வளமும் ஒருங்கு பொருந்தி; கழி, நாவாய்த்துறை, படகு மேடை, சுங்கவரி வசூலிக்கும் இடம், பண்டசாலை முன்றில், அறஞ்செயும் அட்டிற் சாலைகள், தேரோடும் வீதிகள், வேந்தன் அரண்மனை, எருத்துச் சாலை, தவப்பள்ளி, போர்வீரர் பயிற்சித்திடல், பரதவர்சேரி, அங்காடித்தெரு; வேளாள வணிகக்  குடியிருப்புகள், இரு ஏரிகளுடன் நிலாக்கோட்டம், முருகனுக்குரிய வழிபாட்டிடம், காவல் பூதம் என நகர நாகரிகம் நிலவிய துறைமுகம் (பட்டி.1-218).


மருங்கூர்ப் பட்டினம்- 

“விழுநிதி துஞ்சும்…/ இருங்கழிப் படைப்பை மருங்கூர்ப் பட்டினத்து” (அகம்.227) 

“… காக்கை / தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் 

மருங்கூர்ப்பட்டினத்து“ (நற்.258)


முசிறி-

“சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க  

யவனர் தந்த வினைமாண் நன்கலம்  

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” (அகம்.149)


கொற்கை-

“விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்… நற்கொற்கை” (மது.135-138) 


ஊர்கள்

(தொடரும்) சக

Raju Rajendran

unread,
Aug 3, 2026, 9:29:05 AM (2 days ago) Aug 3
to vall...@googlegroups.com
பலகணி என்பது தமிழ்ச்சொல்லா?

ஞாயி., 2 ஆக., 2026, 8:48 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsZ4a899XTfxY8xEv%2BxGeKBUD9gv%3Dry0Azrjd14j_9bcA%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Aug 4, 2026, 11:07:40 PM (2 hours ago) Aug 4
to vall...@googlegroups.com

ஊர்கள்

உழவர் குடியிருப்புகள் நீர்வளமும் பசுமையும் மிகுந்த ஊர்களாயின.  "முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்" (புறம். 110)

“கழனி நல்லூர் மகிழ்நர்க்கு” (நற். 70)

“அகல்வயல் படப்பை அவன்ஊர்” (நற்.365) 

‘வயலணி நல்லூர’ (கலி.72,73) 

‘கழனியம் தண்டுறை ஊர’ (கலி.79)

‘வண்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த 

மஞ்சள் முன்றில் மணநாறு படப்பைத் 

தண்டலை உழவர் தனிமனை’  (பெரு.353-355)


அள்ளூர் ஆவூர் ஆலத்தூர் இடைக்குன்றூர் ஈர்ந்தூர் உமட்டூர் உறையூர் உவர்க்கண்ணூர் ஊணூர் எருக்காட்டூர் எறிச்சிலூர் ஐயூர் ஒக்கூர் ஒல்லையூர் கம்பூர்  கடம்பனூர் கயத்தூர் கருவூர் கரும்பனூர் கடியலூர் காட்டூர் குமட்டூர் குன்றூர் கோவூர் குறுங்கோழியூர் கொடியூர் கோட்டியூர்  கோளியூர் கூடலூர் செயலூர் செல்லூர் துறையூர் நல்லாவூர் நண்பலூர் நல்லூர் புல்லாற்றூர் பெருங்குன்றூர் பிடவூர் மருங்கூர்  மாற்றூர் மாடலூர் முரஞ்சியூர் முள்ளியூர் முகையலூர் மையூர் விரியூர் விரிச்சியூர் வெள்ளூர் வேம்பற்றூர் காமூர் (50+)


ஊர்மக்களோடு கிழான் தலைமை ஏற்று வாழ்ந்தான்.

மையூர் கிழான் கோவூர் கிழார் மாங்குடி கிழார்  ஆவூர் கிழார் நல்லாவூர் கிழார் காரிகிழார் கருவூர் கிழார் கம்பூர் கிழார்  ஆலத்தூர்கிழார் குன்றூர் கிழார்  கூடலூர் கிழார் ஈர்ந்தூர் கிழான் மாடலூர்கிழார் கோளியூர் கிழார் வெள்ளூர்கிழார் பிடவூர் கிழான் ஒல்லையூர் கிழான் கரும்பனூர் கிழான் ஆவூர் மூலங்கிழார் உமட்டூர் கிழார்  மாற்றூர் கிழார் குறுங்கோழியூர்கிழார் துறையூர் ஓடைகிழார பெருங்குன்றூர்கிழார் இடைக்குன்றூர் கிழார் ஆர்க்காடு கிழார் உப்பூரிகுடி கிழான் பெருஞ்சிக்கல் கிழான் (28+)


அந்தணர் குடியிருப்பு

“செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர் 

பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் 

மனைஉறை கோழியொடு ஞமலி துன்னாது

வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் 

மறைகாப்பாளர் உறைபதி” (பெரு.297-301)

“அந்தணர் அருகா அருங்கடி வியனகர்… ஆமூர்” (சிறு.187-188)


ஊரும் சேரியும்

ஊரின் புறத்தே சேரிகள்  இருக்க; அவை பேரூர் ஆயின.

"கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி 

அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய" (அகம்.347)

 "...நல்லூர்… தமர்தம் அறியாச் சேரியும் உடைத்தே" (நற்.331)

“ஊரும் சேரியும் ஓராங்கு அலர்எழ" (அகம்.383) 

"ஊஉர் அலரெழச் சேரி கல்லென" (குறு.262) 

“ஊரும் சேரியும் உடனியைந்து அலர் எழ” (அகம். 220)

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர் 

கொள்ளீரோ எனச் சேரிதொறும் நுவலும்” (அகம்.390)

“ஓரூர் வாழினும் சேரி வாரார்” (குறு.231)

“உறைக்கிணற்றுப் புறச்சேரி” (பட்டி.76)

“பேரூர் அலரெழ” (ஐங். 77)


நியமமூதூர்

வணிகரால் நிறுவிப் பராமரிக்கப்பட்ட நியமத்தை ஒட்டி அமைந்த ஊர் நியமமூதூர். 

“நெடுங்கொடி நுடங்கும் நியமமூநூர்” (நற்.45& அகம்.83)

‘கடுங்கண் கோசர் நியமம்’ (அகம்.90)


குடிமுறை

சிறுகுடி, மாங்குடி, உகாய்க்குடி, குறுங்குடி, சிறைக்குடி, இறங்குடி, கள்ளிக்குடி, உப்பூரி குடி, வெள்ளைக்குடி… 


குடிமுறை எனும் மாற்றுப்பெயர் கொண்ட சேரியில் சேரித்தலைவன் நிர்வாகத்தில்; பசுமை வளத்தோடு இலைவேய் குடிசைகள் இருந்தன.  

‘சேரிக்கிழவன் மகளேன்’ (கலி.117)

“உறைகிணற்றுப் புறச்சேரி… 

நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய  

குறுங்கூரைக் குடிநாப்பண் 

வலையுணங்கு மலர்முன்றில்” (பட்டி.60-83)

“இலங்குவளை இருஞ்சேரிக் கட்கொண்டிக் குடிப்பாக்கத்து” (மது.136)

‘மல்லல் எம் சேரி’ (நற்.249) 

‘இலை வேய் குரம்பை’ (மது.310)


சேரிக் குடியிருப்புகள்

வலைஞர்-

“வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத் 

தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த 

குறிஇறைக் குரம்பைப் பறியுடை முன்றில் 

கொடுங்காற் புன்னைக் கோடுதுமித்து இயற்றிய

பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர் …

மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக்…

தோள்தாழ் குளத்த கோடு காத்து இருக்கும் 



Reply all
Reply to author
Forward
0 new messages