Paleo Diet

627 views
Skip to first unread message

Banukumar Rajendran

unread,
Oct 5, 2015, 8:04:18 AM10/5/15
to மின்தமிழ், vallamai

செல்வன்

unread,
Oct 5, 2015, 12:47:03 PM10/5/15
to vallamai, மின்தமிழ்
பேலியோ பற்றி ஊடகங்களில் செய்தி வருவதே வியப்பளிக்கிறது பானுகுமார் ஐயா :-)

கட்டுரையை படித்தேன். நிறைய பிழைகள் காணபடுகின்றன. பேலியோ டயட்டை உருவாக்கியதாக கூறபடுபவர்கள் பெயரே தவறு. கருத்து ரீதியான பிழைகளும் (உதா: ஆதிமனிதன் ஸ்டார்ச் உண்டான், பேலியோவில் பல வகைகள் உள்ளன) காணபடுகின்றன

குங்குமம் டாக்டரை தொடர்ந்து இவ்வார குங்குமத்திலும் "கொழுப்பை எடு கொண்டாடு" என்ற தலைப்பில் பேலியோ பற்றிய கட்டுரை ஒன்று வெளீவந்துள்ளது..அப்பல்லோ மருத்துவமனையின் இதயநோய் நிபுணர் மாதவனிடன் குங்குமத்தில் இந்த டய்ட்டை காட்டி கருத்து கேட்டு எழுதியுள்ளார்கள்.

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=9401&id1=4&issue=20151005

ஊடகங்கள் எப்பவோ முடிவுக்கு வரட்டும், நாம் மக்களிடம் நேரடியாக பேசுவோம் என சொல்லி சுகர்ப்ரீ பொங்கல் 2016 எனும் நிகழ்வையும் துவக்கியுள்ளோம்.

https://www.facebook.com/groups/ancestralfoods/

எத்தனை ஆண்டு டைப் 2 டயபடிசால் அவதிபடுவர்களாக இருந்தாலும் அவர்களது டயபடிசை பொங்கல் 2016 அன்று காணாமல் போக்கடிக்கும் முயற்சியே இது. உங்களுக்கு தெரிந்த யாரேனும் டயபடிஸால் அவதிபட்டால் (சைவம், அசைவம் அனைத்தும் ஓக்கே) இக்குழும முகவரியை பரிந்துரைக்கவும். அவர்களுக்கு உதவியகா இருக்கும்

coral shree

unread,
Oct 5, 2015, 1:31:10 PM10/5/15
to vallamai
​நன்றி செல்வன். நான் பலருக்கு பகிர்ந்திருக்கிறேன். 

என் மருமகள் ​Food technology - B.E. M.B.A  படித்திருக்கிறாள்... உங்கள் பேலியோ டயட்டில் ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறாள்.... அவள் வேண்டாம் என்று சொல்லும் உணவு அத்தனையும் நீங்கள் பாசிட்டிவ்வாக சொல்கிறீர்கள். ஆர்வமாகத் தொடர்கிறாள்.. பார்க்கலாம்..  நன்றி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

செல்வன்

unread,
Oct 5, 2015, 1:37:44 PM10/5/15
to vallamai
நன்றி பவள ஸ்ரீ.. பேலியோ பற்றி மேலும் அறிய அவருக்கு தினமணியில் நான் எழுதிவரும் இக்கட்டுரை தொகுப்பை உதவும் என நம்புகிறேன்

http://www.dinamani.com/junction/paleo-diet/

coral shree

unread,
Oct 5, 2015, 1:54:25 PM10/5/15
to vallamai
அவசியம் இதையும் அவருக்கு முன் அனுப்புகிறேன். நன்றி.

அன்புடன்
பவளா

2015-10-05 23:07 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
நன்றி பவள ஸ்ரீ.. பேலியோ பற்றி மேலும் அறிய அவருக்கு தினமணியில் நான் எழுதிவரும் இக்கட்டுரை தொகுப்பை உதவும் என நம்புகிறேன்

http://www.dinamani.com/junction/paleo-diet/

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Oct 6, 2015, 11:39:03 AM10/6/15
to vallamai, mintamil

உலகின் மிக வயதான பெண்ணின் பேலியோ டயட்

116 வயதாகி உலகின் மிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் சுசானா எனும் அமெரிக்க பெண்.

இவரது டயட் என்ன?

தினம் அதிக நேரம் உறங்குவார். காலை 9:30க்கு எழுவார்.

10:30க்கு காலை உணவு: பேகன் (பன்றி வயிற்றுகொழுப்பு), முட்டை

மதியம்: வெறும் பழங்கள்

இரவு உணவு: இறைச்சி, காய்கறி, உருளைகிழங்கு...அதிலும் இறைச்சியை தான் முதலில் சாப்பிடுவாராம்

இன்னமும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் சுசானா...இவரைப்பற்றி நம் சரிவிகித உணவு டயட்டிசியன்களுக்கு தெரியுமோ, தெரியாதோ?

Natrajan Kalpattu Narasimhan

unread,
Oct 6, 2015, 9:17:46 PM10/6/15
to வல்லமை
டாக்டர்:  "அய்யா நீங்க தினோம் பதினாறு மணி நேரம் தூங்கணும்.  பன்னி கொழுப்பும் இறைச்சியுமா சாப்பிடணும்."

வயித்தியம் பார்த்துக் கொள்ள வந்தவர்: " எதுக்கு டாக்டர்?"

வயித்தியர்:  "அப்பொதான் நீங்க 120 வருசம் வாழ்ந்து கின்னஸ் சாதனை புரிய முடியும்."

வ.பா.கொ.வ.:  "சரி டாக்டர்.  அந்த பன்னி எத்தினி வருசம் வாழும் எல்லாரும் பன்னி கொழுப்பு தின்ன ஆரம்பிச்சா?"


குசும்பனின் குறும்புக்கு அன்பு செல்வன் மன்னித்திட வேண்டும்.  மனதில் பட்டது.  தட்டி விட்டேன். 

பதினான்கின் எட்டத்தில் இருக்கும் நானும் எட்டிப் பிடித்திடலாமோ நூறை என நாள் தப்பாது  உங்கள் மடல்களை ஆவலுடன் படிக்கும் நடராஜன் கல்பட்டு



2015-10-06 21:08 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


செல்வன்

unread,
Oct 10, 2015, 9:03:29 PM10/10/15
to vallamai, mintamil
யாழ்ப்பாணத் தமிழரிடையே ஒருவர் இறந்தால் அவரது நினைவாக ஒரு நூலை அச்சிட்டு ஊர் மக்களுக்கு வழங்கும் வழக்கம் உண்டு. அதில் இறந்தவரது நினைவை போற்றும் செய்திகள், குறிப்புகள், வாழ்க்கை வரலாறு ஆகியவை இருக்கும். இதை கல்வெட்டு என அழைப்பார்கள்.

சமீபத்தில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் இறைவன் அடி சேர்ந்தார். அவரது நினைவாக வெளியான கல்வெட்டு நூலில் பேலியோ டயட் பற்றிய என் தினமணி கட்டுரைகள் அனைத்தும் சேர்க்கபட்டு வெளியாகின. 60 பக்க நூலில் 14 பக்கம் இறந்தவர் பற்றிய தகவலும், மீதி 46 பக்கம் பேலியோ டயட் பற்றிய விவரமுமே

மக்களுக்கு நல்ல உடல்நலன் கிடைப்பதே இறந்தவருக்கு செய்யும் நினைவஞ்சலி என நினைத்து இக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்கள்.

அவர்கள் நோக்கம் நிறைவேறி இறந்த அத்தமிழர் ஆன்மநலன் பெற என் வேண்டுதல்கள்



Innamburan S.Soundararajan

unread,
Oct 11, 2015, 2:12:30 AM10/11/15
to vall...@googlegroups.com, mintamil
ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்று நிரூபித்து விட்டார், அந்த பெரியவர்.

--

Banukumar Rajendran

unread,
Oct 24, 2015, 6:52:39 AM10/24/15
to vallamai, mintamil

செல்வன்

unread,
Oct 26, 2015, 6:08:29 AM10/26/15
to vallamai, mintamil

வணக்கம் சக குகை மனிதர்களே..நலமா?

சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் சிலர் தனி மடலிலும், மெஸேஞ்சரிலும் "உலக சுகாதார அமைப்பு ப்ராசஸ் செய்யபட்ட இறைச்சியை சாப்பிட்டால் கான்சர் வரும்" என சொல்லியிருப்பது குறித்து வினவினார்கள். சிலர் பதற்றம் அடைந்தது மாதிரி தெரிந்தது.

பதில்: உலக சுகாதார மையம் 2 வருடம் லேட். குழுவின் மெயின் டயட் சார்ட்டில் இருப்பதை காண்க:.




மத்தபடி ப்ராசஸ் செய்த எந்த உனவையும் உண்ணவேண்டாம் என குழு ஆரம்பித்த நாள் முதல் சொல்லி வருகிரோம். கோதுமையை ப்ராசஸ் செய்தால் மைதா, எள்ளை ப்ராசஸ் செய்து ஹைட்ரஜனேட் செய்தால் நல்லெண்ணெய். இறைச்சியை ப்ராசஸ் செய்தால் ஹாம், ஸ்பாம், சாஸேஜ்.

இறைச்சியை கறிக்கடையில் இருந்து வாங்கி வாருங்கள். டப்பாவில் அடைத்த இறைச்சியை தவிருங்கள். அதில் ஏராளமான கெமிக்கல்கள், பிரசர்வேடிவ்கள் கலந்துள்ளன. இதை சப்பிடவேண்டாம் என உலக சுகாதார மையம் சொல்லிதான் நாம் தெரிந்து கொள்ளணுமா?


செல்வன்

unread,
Oct 31, 2015, 12:24:31 PM10/31/15
to vallamai, mintamil
From our group:-)

ஓசூர் TVS SUNDRAM FASTENERS , AND TITAN INDUSTRIES என ஒரு ஐம்பது பேர் பலனடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது . TITAN COMPANY INDUSTRIAL ல் கேண்டினில் மதியம் பேலியோ வெஜ் பொறியல் இரண்டு வகை போட சொல்லி தொழிற்சங்கம் வாயிலாக நெருக்கடியே கொடுத்துள்ளார்கள் Tvs sfl I'll ஒரு லன்ச்ல் தயிர் மற்றும் காய்கறி பொறியல் மட்டுமே எடுக்கிறார்கள் பேலியோ விழிப்புணர்வால் அரிசியை முற்றிலும் தவிர்த்துவுள்ளவர்கள் நான் பணிபுரியும் நிறுவனத்தில் ஐமபது பேர் இதன் லோ சுகர் ஆகி மயக்கம் போட்டவர் ஒருவர் . பதறி போய் கேட்டால் அவர் ஒரே சந்தோஷம் எனக்கெல்லாம் லோ சுகர் வருமென கனவுல கூட நினைக்கவில்லை என்று . இவர்களை எல்லாம் எடுத்து சொல்ல எனக்கு பக்குவம் போதாது. இது போன்ற பதிவுகள் மிகவும் உதவுகிறது நன்றி நன்றி நன்றி .


செல்வன்

unread,
Dec 22, 2015, 12:19:32 PM12/22/15
to vallamai, mintamil




செல்வன்

unread,
Dec 22, 2015, 12:22:13 PM12/22/15
to vallamai, mintamil


செல்வன்

unread,
Dec 22, 2015, 7:54:30 PM12/22/15
to vallamai, mintamil



seshadri sridharan

unread,
Dec 22, 2015, 9:09:00 PM12/22/15
to vall...@googlegroups.com
நான் சுருள்பாசியை (spirulina) நாள் ஒன்றுக்கு 6 கிராம் என 40 நாள் உண்டதில் எனது எடை 62 கிலோவாக குறைந்து விட்டது. அதற்கு முன் 72 கிலோ இருந்தேன். எனக்கு இருந்த தொப்பை குறைந்து தட்டையாகிவிட்டது. 6 கிராம் சுருள்பாசி விலை.உரூ. 8/- மட்டும். 1/2 கிலோ 1 கிலோ கலனில் பொடியாக வாங்கிவைத்து வெறும் நீரில் கலந்து குடிக்கலாம். முயன்று பாருங்களேன்.

பலியோ உணவின் செலவு என்ன என்று செல்வன் கணக்கிட்டு சொன்னால் நன்று 

ஓடமன்  

On Tue, Dec 22, 2015 at 10:49 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:




rajam

unread,
Dec 23, 2015, 1:02:29 PM12/23/15
to வல்லமை
சுருள்பாசி மட்டுமே உணவா? அல்லது அதோடு பிறவகை உண்டிகளும் உணவா? 

seshadri sridharan

unread,
Dec 24, 2015, 3:39:33 AM12/24/15
to vall...@googlegroups.com
2015-12-23 23:32 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
சுருள்பாசி மட்டுமே உணவா? அல்லது அதோடு பிறவகை உண்டிகளும் உணவா? 

 spirulina supplements protein deficiency and not a complete food by tself. so regular food has to be taken.

சுருள்பாசியை பழச்சாறுடன் கலந்து பருகலாம். ஆனால் சுடுகின்ற வெந்நீர் மற்ற பிற குடிப்புகளோடு (hotdrinks) கலந்து பருகக்கூடாது. வெப்பம் அதன் சத்துகளை அழித்துவிடும் என்கின்றனர். 

சுருள்பாசி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும், தோலை மினுமினுப்படையச்செய்யும். உணவை நல்ல முறையில் செரிக்கச் செய்யும் அதனால் குறைந்த அளவு  மலமே வெளியேறும். மேலும், நாடி நரம்புகளில் உள்ள அடைப்புகளை சிறுகச்சிறுக கரைத்து உடல் எடையை குறைக்கும். எனக்கு இடது கையும் சேரும் இடத்தில் ஓடும் நரம்பில் அவ்வப்போது லேசாக வலிக்கும். சுருள் பாசி உண்ட இரண்டே நாளில் அது நீங்கியது. இப்போது உடலும் மனமும் இலகுவாக (feel free) உள்ளன. இந்தவலியே பின்னாளில் நெஞ்சு வலியை ஏற்படுத்தும் என்கின்றனர். இவை என் சொந்த அனுபவம்.

ஒருவருக்கு 7 அடைப்புகள் உள்ளதால் anjio செய்யச் சொல்லி அறிவுறுத்தினாராம் மருத்துவர். அவர் தொடர்ந்து ஒரு மாதம் சுருள்பாசி உண்டன்பின் anjio மருத்துவ ஆய்விற்கு சென்றபோது மருத்துவர் அவரிடம் என்ன மருந்து உண்டீர்கள் அடைப்புகளே இல்லாமல் போய்விட்டதே! என்ன ஆச்சரியம் என்றாராம். அதுமட்டுமல்ல 2 ஆண்டுகள் தொடர்ந்து சுருள்பாசி உண்டதால்  நீரிழிவு நோயர் insulin, வேறு எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை என்ற நிலை உருவானதாம். இதை சுருள்பாசி பண்ணை வைத்திருக்கும் திரு.வேங்கடேசலு (99408 53523 )தன அனுபவத்தை எனக்கு சொன்னார். இவர் மாதம் ஒன்றுக்கு 150 கிலோ சுருள்பாசி உற்பத்தி செய்கிறார்.    


ஓடமன் 

செல்வன்

unread,
Dec 30, 2015, 10:39:26 PM12/30/15
to vallamai, mintamil

தென்றல் இதழில் வெளியான கட்டுரை



- மைதிலி தியாகு,
ஹூஸ்டன், டெக்சஸ்

பிடிச்சது: பேலியோ டயட் பயணம்

கல்லூரிக்காலத்தில் எங்கே, எப்போது எடை பார்த்தாலும் 42 கிலோதான் இருக்கும். நியாயமான எடைதான். எந்தக் கடவுளிடமும் எனது முதல்வேண்டுதலே உடலின் எடை அதிகரிக்க வேண்டும் என்றுதான் இருக்கும். மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்து, உட்கார்ந்தபடியே வேலை பார்த்ததாலோ என்னவோ எடை ஏறிக்கொண்டே போனது. வேலைப்பளுவில் உடல் பளு கவனிக்கப்படவில்லை. பிறகு திருமணம், அமெரிக்காவில் குடியேற்றம் என்று காலம் உருண்டோடியது. அமெரிக்காவில் குடியேறியது நியூஜெர்சி மாநிலத்தில். வருடத்தில் 4-5 மாதங்கள் பனி பெய்யும் இடம் என்பதால், வாசல்படியில் கார் ஏறி, இறங்குவதும் வாசல்படியில் என்றாகிவிட்டது. பிறகு வீட்டினுள்ளேயே சாப்பிடுவதும், தூங்குவதுமாக இருந்தால் என்ன நடக்கும்? மேலும் எடை கூடியது, பாதத்தில் வலி வந்தது. மருத்துவரிடம் போனால் விட்டமின் டி குறைவு என்றார். மனம் சோர்வடைந்தது.

சுறுசுறுப்பாக டேபிள் டென்னிஸ் விளையாடி, மாநில அளவில் வெற்றி பெற்றவள், ஏதாவது புது விஷயங்களில் ஈடுபட்டுச் சாதித்துக் கொண்டிருந்த எனக்கு என்னையே எனக்குப் பிடிக்காமல் போனது. பிறகு வெயில்காலத்தில் நடை, ஓட்டம், உடற்பயிற்சி, நீச்சல் என்று ஆரம்பித்து 1-2 கிலோவரை மட்டுமே குறைக்க முடிந்தது. நான்கு வருடங்கள் ஆகியும் எடை அதிகரித்ததே தவிர குறையவே இல்லை.

நான்கு வருடங்கள் கழித்துக் கருவுற்றதில், சுகப்பிரசவத்திற்காக 26 மணி நேரம் முயற்சித்து, முடியாமல், அவசர அறுவைசிகிச்சை மூலம் அழகான பெண்குழந்தை பிறந்ததது. பிரசவிக்க அதிகநேரம் எடுத்ததால், அதிக ரத்த இழப்பு! இதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டதாலும், குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க நான் நிறைய உணவு எடுத்ததாலும் எடை கிட்டத்தட்ட நூறு கிலோவைத் தொட்டது. திரும்ப எடையைக் குறைக்க உருண்டு புரண்டும் ஒன்றும் பலனில்லை. அழகுக்காக அல்ல. என்னை பயமுறுத்தியவை கால்வலியும், சில உடல் உபாதைகளும்தான்.

அப்படித்தான் ஆரோக்கியத்துக்கான தேடல் துவங்கியது. முகநூலில் திருநாவுக்கரசு இரத்தினம் என்பவரின் எடையிழப்பு ஃபோட்டோக்களைப் பார்த்து, இது சாத்தியமா என்று கேட்டேன். அவர் "ஆரோக்கியம் & நல்வாழ்வு" என்ற முகநூல் பக்கத்தைக் காண்பித்தார். அங்கு புதிதாக இணைபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் "முன்னோர் உணவு" என்னும் நூலையும் படிக்கச் கூறினார். அதை எழுதியவர் 'நியாண்டர் செல்வன்'.

நூலைப் படித்து முடிப்பதற்குள் வேர்த்துவிட்டது. "குப்பை உணவுகளைத் தவிருங்கள்" போன்றவை சரிதான். குறைந்த காரம் மற்றும் அதிகக் கொழுப்பு உணவுமுறைக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை. நாம் இத்தனை நாளாக நல்லதென்று சாப்பிட்டதை நிறுத்திவிட்டு, கெட்டதென்று ஒதுக்கியவற்றை உண்ணச் சொன்னால் மனம் பீதியடையத்தானே செய்யும்? நூலகத்துக்குப் போய் பேலியோ பற்றிய புத்தகங்களைத் தேடியெடுத்து வாசித்தேன். நம்பிக்கை கூடியது. முகநூல் குழுவின் திருநாவுக்கரசு நடத்தும் மாதாந்திர டயட் ஈவென்ட்டில் கலந்துகொண்டு, நியாண்டர் செல்வன், கோகுல் குமரன் ஆகியோரின் டயட் பரிந்துரைகளை கறாராகக் கடைப்பிடித்து சில மாதங்கள் முதல் பரிசுகளைப் பெற்றேன். இரண்டே மாதத்தில் எடை 7 கிலோ குறைந்தது. இப்பொழுது 30 கிலோ குறைந்துள்ளது! புகைப்படங்களைப் பாருங்கள், அவை உண்மை சொல்லும். அதுமட்டுமல்ல, ரத்தப்பரிசோதனையும் நான் ஆரோக்கியப் பாதையில் போவதைக் காட்டுகிறது.
இந்த முகநூல் குழுவில் 31,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பேலியோ டயட் கடைப்பிடிப்போர் முன், பின் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவுகளும் படங்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. இனிப்பு, கோக், துரித உணவு, சில வகைக் காய்கள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதால் இன்சுலின் கட்டுப்பட்டு, சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் பிரச்சினை ரிவர்ஸ் ஆகிறது. இதுமட்டுமல்லாமல் ஃபேட்டி லிவர், PCOS, மாதவிலக்கில் மாற்றங்கள், ரத்த அழுத்தம், பற்களின் பிரச்சனைகள், மூட்டுவலி, கால்வலி, மைக்ரேன் தலைவலி, கண்பார்வைக் கோளாறு, கொழுப்புக் கட்டிகள், தூக்கமின்மை, குறட்டை, சளிப் பிரச்சனை, தோல் பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், மாரடைப்பிற்கு முக்கியக் காரணமான ரத்தக்குழாயில் வீக்கம் போன்ற நோய்களும் குணமடைந்திருப்பதாக இக்குழுவில் பதிவு செய்துள்ளனர். பேலியோ டயட் எடுப்பதன் மூலம் ட்ரைகிளிசரைட்ஸ் குறைந்து, HDL என்னும் நல்ல கொழுப்பின் அளவும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இட்லி, தோசை சாப்பிட்டால் ஏற்படும் மந்தநிலை இந்த டயட்டில் சிறிதும் இல்லை. எவ்வளவு காலம் இந்த டயட் தொடர்ந்தாலும் சலிப்பு என்பதே இல்லை. உடல் மிகலேசாக உணரப்படுகிறது. நல்ல சுறுசுறுப்பு, நல்ல தூக்கம், காலை சீக்கிரம் எழுந்திருப்பது, கவலைகளின்மை மற்றும் நடப்பதற்கு நிற்பதற்கு இருந்த சிரமங்கள் போயே போய்விட்டன. வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாவற்றையும் சுலபமாகச் செய்ய முடிகிறது. இதுபோக தினமும் 4-5 மைல் நடக்கமுடிகிறது.

இக்குழு, 4 விதமான டயட்களை நம் இந்திய உணவு முறைகளுடன் வழங்குகிறது. அவை, 1. முட்டைகூடச் சாப்பிடாத சைவ டயட்; 2. முட்டை & சைவம் டயட்; 3. அசைவ டயட் 4. மெயின்டனன்ஸ் டயட். இதில் உணவாக 100 பாதாம், பேலியோ காய்கள், கீரைகள், முட்டைகள், பன்னீர், பால், சீஸ், மாமிசங்கள் என்று அவரவர் உணவுமுறைகள், ரத்தப் பரிசோதனைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இதில் முக்கியமாக சமைக்க வெண்ணெய், நெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் போன்றவையே பரிந்துரைக்கப்படுகின்றன. பேலியோ டயட் சமையல் குறிப்புகளும் வழங்கப்படுகின்றன. இத்துடன் மிதவேக நடைப்பயிற்சியும் வலியுறுத்தப்படுகிறது. இயற்கை முறையில் விட்டமின் டி கிடைக்க, நேரடி சூரிய ஒளியில் தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் இருக்கவும் சொல்லப்படுகிறது. இவற்றைச் சரியாகச் செய்ததால் நான் இளைத்துச் சுறுசுறுப்பானேன். நீங்கள்.....?


செல்வன்

unread,
Dec 30, 2015, 10:42:30 PM12/30/15
to vallamai, mintamil
சுருள்பாசி சாப்பிடலாம். ஆனால் அதனால் மட்டும் எடை இழப்பு நிகழாது.


செல்வன்

unread,
Dec 30, 2015, 10:46:03 PM12/30/15
to vallamai, mintamil
Nithi Jai added 4 new photos — feeling excited.




















2015 end my biggest achievement....!

Last year almost the same time I was feeling sick all the time..

Have gained almost 13 kgs in two months... I was feeling when I was seeing the weight scale it hit 87 kg..

I was depressed and anxious all the time.. My heart was racing frequently...I had terrible muscle cramps all over my body..my voice changed..I was looking like a swelled up hippo...!

I could see the scalp of my head.. There was heavy hair falls all over the floor...mood swings were extreme...I was having double visions frequently..

Wanted to sleep all the time and my ankle pain was out of the world...knee got swelled up and could not climb stairs...

I felt help less and didn't know what to do.. Then thought I should fight this up and should return to normal...fixed up an appointment and took all tests..

The results showed up I have hypothyroid and the TSH levels were alarming to critically high..

Called up Appa Amma and was crying for no reasons..

My GP panicked me saying she has never seen this high levels of TSH in her practice.. She suggested me to go for an ultra sound saying only people suspected with thyroid cancer will have this high TSH...

I was seriously scared to death.. Could not hold myself and felt aweful.. But the ultra sound did not show any suspect.. Thank god.. I was relieved..

Started my thyroid medications.. My Vit d levels were almost nil.. Started supplementing for it..

It didn't show much progress in the beginning.. My self and Appa discuss everyday about this for hours together..

Then dad suggested change of medication.. I was feeling a bit okay..then was browsing all about hypothyroid.. Then on routine test found out that I have thyroid related auto immune called Hashimotos..

Again a roller coaster feel.. Started other supporting vitamin and mineral supplements.. Could see some changes...

Then was trying to change my diet felt it may help me for sure.. It was actually not a diet but life style change...

I started this diet change in early October and switched over completely to this life style from November 2015...

I could see a huge difference in my health progress... It's almost 3 months now...

All my illness got away gradually.. I started losing weight... From 87 Have come down to 76 now (11 kgs - in 3 months)..,

Could not do any work out since a small walking would hurt my knees a lot and did not do any work out.. This weight loss is completely because of this diet and change of medicines..

That wonder diet is called Paleo diet... Less carb and high fat diet.. I stopped all grains, legumes and beans.. I eat lot of eggs, cheese, paneer butter,chicken,meat and vegetables..!

And the exciting part is I am feeling NORMAL now..!

I was not able to fit myself in 16 size pant and now I could wear 10 size pant😃

There is a group in Facebook with 30000+ members which gives clear idea on this diet..

Should thank my family for supporting me..

My target for 2016 should come down to 58 kg by June 2016...

After all health is wealth and we need to be healthy to take care of our loved ones😃😃

My before after pictures as a testimony...!

Happy 2016 my dear ones.. Stay fit and healthy..!


seshadri sridharan

unread,
Dec 31, 2015, 4:44:34 AM12/31/15
to vall...@googlegroups.com
n Thu, Dec 31, 2015 at 9:12 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
சுருள்பாசி சாப்பிடலாம். ஆனால் அதனால் மட்டும் எடை இழப்பு நிகழாது.
 
நான் உரூ. 7,000/- கட்டி  சுருள்பாசி வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்ட போது பயிற்சி வழங்கிய சுருள்பாசி பண்ணையாளர் வேங்கடேசலு (இவர் திருவண்ணாமலை SBI மேனாள் மேலாளர்) தான் திருவண்ணாமலையிலேயே மாதம் 30 கிலோ சுருள்பாசியை விற்றுவிடுவதாக சொன்னார். அதில்  ஒரு அன்பர் தன் எடை குறைந்து விடுவதால் இனி நான் சுருள்பாசி வாங்க மாட்டேன் என்று சொன்னதாக என்னிடம் சொன்னார். அதை நான் என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தேன். நான் ஒவ்வொரு நாளும் 6 - 7 கிராம்  சுருள்பாசியை வழக்கமான உணவோடு தான் உண்டேன் வேறு எந்த பொருளையும் உண்ணவில்லை. எனக்கு ஒரு நாள் செலவு உரூ. 8/- என்ற கணக்கில் 40 நாள்களுக்கு உரு 320/- தான் செலவானது. உங்கள் பலெஒ உணவின் ஒரு நாள் செலவே இந்த 320 உரூவாயைத் தாண்டும். இதை யாரும் உண்ணலாம் அகவை ஒரு பொருட்டல்ல.

இந்த சுருல்பாசியால் 100 நோய்கள் சீரடைவதாக வேங்கடேசலு சொல்கிறார். உங்கள் பலெஒ ஒரு கட்டத்தில் நோயை ஏற்படுத்தும். இரண்டுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் செல்வன். முடிந்தால் தனி இழையில் சுருள்பாசி வளர்ப்பைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை வழங்குகிறேன். 

ஓடமன்   

செல்வன்

unread,
Jan 2, 2016, 5:41:02 PM1/2/16
to vallamai

சுருள்பாசி சாப்பிடலாம்..ஆனால்.அதனால் எடை எப்படி இறங்கும் என்ற அறிவியல் விளக்கம் கிடைக்காமல் எப்படி அதை நம்புவது?

பேலியோவில் செலவு அதிகம் தான். ஆனால் வைத்தியநுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடு என்பது பழமொழி.

தேமொழி

unread,
Jan 2, 2016, 6:39:26 PM1/2/16
to வல்லமை


On Saturday, January 2, 2016 at 2:41:02 PM UTC-8, Neander Selvan wrote:

சுருள்பாசி சாப்பிடலாம்..ஆனால்.அதனால் எடை எப்படி இறங்கும் என்ற அறிவியல் விளக்கம் கிடைக்காமல் எப்படி அதை நம்புவது?



The very basic scientific fact.....
by hunger supressing and by craving control ...a high-protein diet induces sustained reductions in appetite ... so..eat less lose weight 

********************

Protein[edit]

Dried spirulina contains about 60% (51–71%) protein.[2][3] It is a complete protein containing all essential amino acids, though with reduced amounts of methioninecysteine, and lysine when compared to the proteins of meat, eggs, and milk. It is, however, superior to typical plant protein, such as that from legumes.[2][4][5]

Blue-green algae, however, is thirty times more expensive and, from a nutritional point of view, no better than other protein sources like dairy or meat.[6]


ref: https://www.psychologytoday.com/articles/200601/the-protein-hunger-connection

The Protein-Hunger Connection

A high-protein diet is the physiological key to controlling appetite.

By Carlin Flora, published on January 23, 2006 - last reviewed on November 20, 2015


While it's true that dieters who forsake bread and gorge on bacon tend to drop weight (at least in the short-term), it's never been clear why. Until now, that is: Extra protein, it turns out, sends "stop eating!" messages to the brain.

Robert Atkins, the late originator of the eponymous and best known low-carbohydrate, high-protein diet, believed that cutting carbohydrates stops sugar from getting stored as fat, while increasing protein works the kidneys harder and thus burns more calories. But all that was ever shown scientifically was that protein feeding suppresses the appetites of both animals and humans, said Gilles Mithieux of the University of Lyon in France, one of the authors of the study.

Previous research from the University of Washington, for example showed that simply increasing the amount of protein in your diet helps you lose weight even if you don't shun carbohydrates one bit. Protein makes up 15 percent of most Americans' daily caloric intake, while fat accounts for 35 percent and carbohydrates for 50 percent. In the study, subjects bumped up their protein intake to 30 percent and reduced their fat intake to 20 percent. Within three months, they were 11 pounds lighter on average, even though half of the calories they ate still came from carbohydrates. The group also reported feeling satisfied with less food. In other words, they lost weight because they consumed fewer calories.

To figure out just how protein achieves this special effect, Mithieux and his colleagues fed rats a protein-enriched diet and measured metabolic changes. They found that the regimen sparked production of glucose in the small intestine, and that this increase, sensed in the liver and relayed to the parts of the brain involved in the control of appetite, caused the rats to eat less. Since the human intestine also synthesizes glucose, glucose metabolism may be a new target in the treatment of food intake disorders, the researchers concluded.

Protein's benefits go way beyond waistline trimming. The brain and its long spidery neurons are essentially made of fat, but they communicate with each other via proteins. The hormones and enzymes that cause chemical changes and control all body processes are also made of proteins. Carbohydrates, while essential as the brain's main source of fuel, can make you feel tired—and hungry for an energy boost—because they increase the brain's level of the amino acid tryptophan,
which in turns spurs production of the calming neurotransmitter serotonin. Protein, on the other hand, prompts the brain to manufacture norepinephrine and dopamine, chemical messengers that promote alertness and activity.

Not all high protein foods are created equally, though—nutritionists recommend low-fat dairy products, beans, fish and lean cuts of meat, such as skinless chicken and turkey breasts. Even carb-heavy treats, like muffins and cookies, can be made protein-rich when baked with non-fat powdered milk and egg whites.

        Image result for spirulina protein
    Spirulina
    Food
    Spirulina is a cyanobacterium that can be consumed by humans and other animals. There are two species, Arthrospira platensis and Arthrospira maxima. Wikipedia
    Nutrition Facts
    Amount Per 
    Calories 20
    % Daily Value*
    Total Fat 0.5 g0%
    Saturated fat 0.2 g1%
    Polyunsaturated fat 0.1 g
    Monounsaturated fat 0 g
    Cholesterol 0 mg0%
    Sodium 73 mg3%
    Potassium 95 mg2%
    Total Carbohydrate 1.7 g0%
    Dietary fiber 0.3 g1%
    Sugar 0.2 g
    Protein 4 g8%
    Vitamin A0%Vitamin C1%
    Calcium0%Iron11%
    Vitamin D0%Vitamin B-60%
    Vitamin B-120%Magnesium3%
    *Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily values may be higher or lower depending on your calorie needs.


    ..... தேமொழி


Auto Generated Inline Image 1

செல்வன்

unread,
Jan 2, 2016, 7:43:35 PM1/2/16
to vallamai
சேசாத்திரி தினம் 6- 7 கிராம் சுருள்பாசி சாப்பிட்டதாக சொல்கிறார்.

அதில் 4 கிராம் புரதமே உள்ளது. ஒப்பீட்டுக்கு ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது. ஒரு கப் பாலில் (240 மிலி) 8 கிராம் புரதம் உள்ளது

seshadri sridharan

unread,
Jan 3, 2016, 7:16:09 AM1/3/16
to vall...@googlegroups.com
2016-01-03 6:13 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
சேசாத்திரி தினம் 6- 7 கிராம் சுருள்பாசி சாப்பிட்டதாக சொல்கிறார்.
அதில் 4 கிராம் புரதமே உள்ளது. ஒப்பீட்டுக்கு ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது. ஒரு கப் பாலில் (240 மிலி) 8 கிராம் புரதம் உள்ளது

நமக்கு தேவைப்படும் புரதம் அத்தனையும் சுருள்பாசியில் இருந்து தான் வரவேண்டும் என்பதில்லை. நாம் உட்கொள்ளும் பிற உணவுகளிலும் புரதம் கிட்டும். என்னை 8 முதல் 10 கிராம் வரை சுருள்பாசி உண்ணச் சொன்னார்கள். அதன் விலை அதிகம் என்பதால் 6 -7 நிறுத்திக்கொண்டேன். நானே சிறு தொட்டியில் சுருள்பாசியை/ குலோரெல்லா பாசியை வளர்க்கத் திட்டமிட்டுள்ளேன். 

Chlorella vs. Alga Spirulina... which algae is best?



Chlorella vs Spirulina...which algae is best?

Chlorella

Chlorella is a genus of single cell freshwater green algae comprised of organisms that have survived as a life form for billions of years. These single celled microscopic organisms are composed primarily of chlorophyll pigments. With the capacity to reproduce at a rapid rate of 4 times in just 12 hours, chlorella is an an incredibly sustainable food source offering many important nutrients coupled with a high value of complete protein. Because the cell wall of chlorella is indigestible to humans, it is mechanically “broken” through soundwave exposure, gentle milling or pulverizing in preparation for optimal nutrient bioavailability in humans. Encompassed in this fibrous outer shell is a bounty of unique and potent nutrients, offering a wealth of health benefits:

  • Cleansing Chlorophyll- Composing nearly 7% of the biomass of chlorella, the pigment chlorophyll is a powerful cleansing agent for the body. As a heavily researched component of this algae, it aids in the processing of oxygen, helps to prime the key elimination system of the body and promotes the growth and repair of your tissues.
  • Powerful Heavy Metal and Pesticide Detoxification- Chlorella is a powerful detoxification aid, strongly binding to heavy metals such as cadmium, uranium, mercury and even radioactive materials to usher their prompt removal. Studies have indicated that it has the unique potential to remove toxins while simultaneously strengthening the immune system response to subsequent exposures. Supplemental chlorella has been used therapeutically in mining populations and areas where there are high levels of air pollution and no pure drinking water.
  • Ultra-Rich in Nucleic AidsChlorella is extremely rich in nucleic acids, key factors for RNA and DNA that protect cells and raise energy levels.
  • Bountiful in Beta Carotene- This influential carotenoid acts as a powerful antioxidant to reduce the harmful effects of free radicals and minimize the damage generated from oxidative stress. As a fat soluble provitamin, it also helps with the functioning of the reproductive system, as well as to promote eye and skin health. 
  • Improves Bowel FunctionChlorella stimulates the growth of friendly aerobic bacteria which has a profound, beneficial effect on overall bowel health. Furthermore, chlorella's cell walls act to absorb toxic compounds within the intestines, restoring proper gastrointestinal pH and helping to promote normal peristalsis.

Spirulina 

Spirulina is a close cousin of Chlorella and related to other robust sea vegetables including kelp, dulse, nori, arame and wakame. Spirulina however, is a unique blue-green algae, meaning it is not a true algae in biological terms but rather a cyanobacteria. This distinctive classification is given because its genetic material is not organized in a membrane-bound nucleus, yet it still uses the sun as a source of energy the way that plants do. Grown natively in the alkaline freshwater lakes of Mexico and continental Africa, it has become a popular superfood worldwide, with the highest rates of consumption and production now in Japan.

  • Easily Digested- Because the cell wall of spirulina is composed of mucopolysaccharides instead of indigestible cellulose, it is easily broken down by the human digestive system. Nutrients are thus highly bioavailable and become quickly assimilated into the biochemistry of the body.
  • Rich in Complete Protein and B12- Slightly higher in content than chlorella (which contains about 50% protein), Spirulina is 70% full protein by biomass. Often used as a supplement for those who consume poor quality or limited amounts of meat in their diet, Spirulina is also one of the few plant sources of essential vitamin B12. Because of it’s highly digestible composition, the hardy protein found in this algae is high in net protein utilization and efficiency ratio, allowing all of the amino acids to be readily utilized without cooking. 
  • High in Fatty Gamma Linolenic Acid (GLA)- Few foods contain this substance, an omega-6 fatty acid that plays a crucial role in brain function, reproductive health, growth and development, skin and hair growth, bone health, and metabolism regulation. While most commonly consumed in the form of linoleic acid and then converted into GLA within the body, spirulina contains the full form of this fatty acid allowing for efficient absorption and potent effect.
  • Unique Phytochemical Phycocyanin- This outstanding phytochemical is the pigment which gives spirulina it’s blue hue. It is unique to spirulina and studies have found it to be useful to brain function, heart health, immune system strengthening, and in supporting bone marrow function for building blood cells. In mammals phycocyanin is converted into phycocyanorubin, an antioxidant that is helpful in protecting the tissues from free radicals

சக்கரவன் 

seshadri sridharan

unread,
Jan 3, 2016, 10:05:22 PM1/3/16
to vall...@googlegroups.com
2016-01-03 4:11 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
//சுருள்பாசி சாப்பிடலாம்..ஆனால்.அதனால் எடை எப்படி இறங்கும் என்ற அறிவியல் விளக்கம் கிடைக்காமல் எப்படி அதை நம்புவது?//

உங்களுக்கு அறிமுகமானோரில் பொதுக்கையாய் உள்ளவரை சுருள்பாசியை உண்ணச்சொல்லுங்கள் அவர் எடை குறைகிறதா என்று பாருங்கள்.

என்னைப் பார்கின்ற பலர், "என்ன? ஆள் நல்ல இளைச்சுட்டிங்க. கன்னம் பம்முனு  இருந்துது என்று செய்கையால் காட்டுவதொடு நில்லாமல் இப்போ கன்னம் எலும்போடு ஓட்டினா போல ஆயிடிச்சி" என்ன ஆச்சு உங்களுக்கு என்கின்றனர்.  

காலையில் நடைபயிலுவோர் எடையையும் கொழுப்பளவையும் அளந்து பார்த்துச் சொல்லி "எங்கள் குடிப்பு ஒன்றை நாள்தோறும் பருகிவந்தால் மாதம் 2 கிலோ குறையும்.தொடர்ந்து 10 - 12 மாதங்கள் குடிக்க வேண்டும். குடிப்பு விலை மாதம் ஒன்றுக்கு 4,000 உரூவா செலவு ஆகும் என்று பல உடல்நல (Health Drink) குடிப்பு சந்தைப்படுத்துவோர் குடைபோட்டு கூவிக் கூவி நிற்கின்றனர் சென்னையில்..  

சக்கரவன் 

செல்வன்

unread,
Jan 12, 2016, 10:05:35 AM1/12/16
to Neander Selvan
பேலியோவால் ஒரு வாரத்தில் சர்க்கரையை இறக்கி கண் அறுவை சிகிச்சைக்கு தயாரான உண்மைதமிழன்

ஒரு வாரம் முன்பு



இனிமேல் நானும் ஒரு சர்க்கரை நோயாளியே..!

08-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனது வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் துவங்கிவிட்டது என்றே நினைக்கிறேன்.

சென்ற வருடத்திய ஏப்ரல் மாதமே எனது வலது கண்ணில் புரை இருப்பதாகவும் அதனை சரி செய்ய உடனேயே ஆபரேஷன செய்ய வேண்டும் என்றும் வாசன் ஐ கேர் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். 

நான்தான் அப்புறம் பார்க்கலாம்.. பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இந்த வருட புதிய துவக்க நாள்களில் ஏதோ ஒரு வித்தியாசம் கண்ணில் தெரியவே.. ஒரு இனம் தெரியாத பயம் வர.. மருத்துவமனைக்கு ஓடினேன். வாசன் ஐ கேரில் ஆபரேஷனுக்கு 13000 ரூபாய் கேட்டார்கள். மற்ற சில மருத்துவமனைகளிலும் இதேபோலத்தான் கேட்டார்கள். நான் இ்பபோது வாழும் பொழப்பில் இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க முடியாத சூழல். 

அதனால் சின்னத்திரை இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர் என்கிற ரீதியில் சங்கம் அளித்த எஸ்.ஆர்.எம். மருத்துவ காப்பீட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தேன்.

இதனாலேயே தூரமாக இருந்தாலும் கடந்த 4 நாட்களாக காலை 4.30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.மருத்துவமனைக்கு சென்று அலைந்து திரிந்து வந்து சேர்ந்திருக்கிறேன்.

இரண்டு கண்களிலுமே புரையையும் மீறி வேறு ஏதோ ஒன்று இருப்பதாக கண் மருத்துவர்கள் சந்தேகப்பட்டார்கள். “எங்காவது கரண்ட் ஷாக் எடுத்துக்கிட்டீங்களா?” என்று அபாயகரமான கேள்வியை கேட்டார் ஒரு பெண் மருத்துவர். திக்கென்று இருந்தது. “இல்லையே மேடம் ஏன்..?” என்றேன். என் கண்ணிலேயே காட்டினார்கள். லேசர் மூலமாக எடுத்தப் புகைப்படங்களில் எனது இரு விழிகளின் ஓரத்திலும் கருமை நிறங்களாக காட்சியளித்தன. 

பின்பு தலைமை மருத்துவரும் வந்து இரு தரப்பினரும் சகலவிதமான ஆங்கில டிக்ஷனரி வார்த்தைகளையும் பயன்படுத்தி ஒரு வழியாகப் பேசி முடித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். “ஆபரேஷனை செய்யப் போகிறோம்..” என்றார்கள். அதற்கு முன் அனஸ்தீஷியா மருத்துவரிடம் பிட்னெஸ் சர்டிபிகேட் வாங்கி வரும்படி பணித்தார்கள். இதை இவர்கள் சொல்லி முடிப்பதற்கே மதியம் 2 மணி ஆகிவிட்டதால் மறுநாள் போக வேண்டிய கட்டாயம்..!

மறுநாள் மயக்க மருத்துவியல் நிபுணரை சந்தித்து எனது கோரிக்கையை வைத்தேன். “ரத்தப் பரிசோதனை இல்லாமல் நான் சர்டிபிகேட் தர முடியாதே..” என்றார். “எனக்கு பி.பி., சுகரெல்லாம் இல்ல ஸார். இதுவரைக்கும் அது தொடர்பா எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை..” என்றேன் தீர்மானமாக. “நீங்க சொல்றது சரி. ஆனால் எங்க ரூல்ஸ்படி அதில்லாமல் நாங்க சர்டிபிகேட் தரவே முடியாது.. நீங்க திரும்ப கண் டிபார்ட்மெண்ட்டுக்கே போய் அவங்ககிட்ட எழுதி வாங்கிட்டுபோய் பிளட் டெஸ்ட் பண்ணிட்டு அதை எடுத்திட்டு வாங்க. தர்றேன்..” என்றார் தீர்மானமாக.

மறுபடியும் கண் டிபார்ட்மெண்ட்டுக்கு ரிட்டர்னாகி எழுதி வாங்கிக் கொண்டு லேபுக்கு போய் என்னுடைய ரத்த மாதிரியை தானமாகக் கொடுத்து ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன். கிடைத்தது. எதுவுமே தெரியாமல் வாங்கிச் சென்று சந்தோஷமாக நீட்டினேன். வாங்கியவர் பேஸ்தடித்துப் போய் அருகில் இருந்த நர்ஸிடம் தனது அதிர்ச்சியை கண்களிலேயே காட்டினார். வேக வேகமாக பேப்பரில் எழுதி என்னிடம் நீட்டி, "இதைக் கொண்டு போய் கொடுங்க.." என்றார். "என்ன ஸார்.. சுகர்ல ஏதும் பிரச்சினையா..?" என்றேன். "இல்லை.. இல்லை. அங்க போய் கேளுங்க.. சொல்வாங்க.." என்று சொல்லி முடிப்பதற்குள் எழுந்து போய்விட்டார்.

ஒரு சந்தேகத்துடனேயே கண் டிபார்ட்மெண்ட்டுக்கு வந்தேன். அங்கேயிருந்த பெண் பயிற்சி மருத்துவரிடம் கொடுத்தேன். பார்த்த கணத்தில் தன் வாயில் விரல் வைத்துவிட்டு என்னை அப்படியொரு முறை முறைத்தார். “என்ன ஸார் நீங்க..? சுகரே இல்லைன்னு சொன்னீங்க.. இப்போ 231 இருக்கு. இதுல எந்த ஆஸ்பத்திரிலேயுமே ஆபரேஷன் செய்ய மாட்டாங்க..” என்று கோபித்துக் கொண்டார். வாங்கிப் பார்த்தேன். சாப்பாட்டுக்கு முன்பு 70-ல் இருந்து 110-க்குள் இருக்க வேண்டிய சுகர் 148 இருந்தது. சாப்பாட்டுக்கு பின்பு 80-ல் இருந்து 140-க்குள் இருக்க வேண்டிய சுகர் 231 இருந்தது.

எனக்குத் தலையும் புரியலை.. காலும் புரியலை.. “மேடம்..  சத்தியமா இது எனக்குத் தெரியாது.. எப்படி வந்துச்சுன்னும் தெரியலை..” என்றேன். “அது யாருக்குமே தெரியாமல்தான் வரும். இதுல நாங்க ஒண்ணும் செய்ய முடியாது ஸார். அனஸ்தீஸியா டாக்டர், டயாப்டீஸ் டாக்டர்கிட்ட ஒப்பீனியன் கேட்டுக்குங்கன்னு எழுதிக் கொடுத்திருக்கார். நீங்க டயாப்டீஸ் டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணிட்டு வாங்க.. அப்புறம் பார்க்கலாம்..” என்று சொன்னவர், “இன்னொரு தடவை பிளட் டெஸ்ட் கொடுக்கணும். எழுதித் தரேன். அதையும் செஞ்சிருங்க..” என்றார். 

தற்செயலாக உள்ளே வந்த டிபார்ட்மெண்ட் சீப் டாக்டரிடம் இதை அவர் சொல்ல.. அவரோ கையெடுத்துக் கும்பிட்டார். “ஐயோ வேணாம் சாமி.. நீங்க சுகரை குறைச்சிட்டு வாங்க. ஆபரேஷன் பண்ணுவோம்..” என்றார். மறுபடியும், மறுபடியும் தயங்கி நின்றேன். பெரிய டாக்டர் தோளில் கை போட்டு ஆதரவாக “வேற வழியில்லை ஸார்.. சுகர் அதிகமா இருக்குற நேரத்துல எந்த ஆபரேஷனும் செய்யக் கூடாது. இது மெடிக்கல் ரூல்ஸ். சுகரை குறைச்சிருங்க. அப்புறமா ஆபரேஷனை பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்சினையில்லை. போங்க..” என்று அன்புடன் சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆஹா.. இந்த ஒரு ஆபரேஷனை வைச்சே எல்லா வார்டையும் ஒரு ரவுண்டு அடிச்சிரலாம் போலிருக்கேன்னு நினைத்தேன். புதிய டெஸ்ட்டுக்கு அரக்கப் பரக்க ஓடி.. சீக்கிரமா கொடுத்திட்டால் இன்னிக்கே ரிசல்ட்டை வாங்கிரலாமேன்னு நினைத்து ஓடிப் போய் கியூவில் நின்னு செஞ்சாச்சு..! கடைசியாக பசிக்குதே.. கொஞ்சம் வயித்துக்கு போட்டுக்குவோமே.. என்று சாப்பிட்டுவிட்டு தெம்பாக சர்க்கரை வியாதி செக்ஷனுக்குள் போய் நின்னேன். 

புது ஆடு ஒண்ணு சிக்கிருச்சு என்பது போலவே நர்ஸ்கள் பார்த்தார்கள். டயாப்டீஸ் டாக்டரோ எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்குற லெவல்ல குடும்ப பரம்பரையையே கேட்டுவிட்டு, “இன்னொரு பிளட் டெஸ்ட் எடுக்கணும். போய்க் கொடுங்க. அந்த ரிசல்ட்டோட வாங்க. பேசுவோம்...” என்றார்.  “இப்போதான் ஸார் பிளட் கொடுத்தேன்..” என்று சொல்லி ஒரு சீட்டை காட்டினேன். வாங்கிப் பார்த்துவிட்டு, “இது யூரின் டெஸ்ட்.. இப்போ கொடுக்கப் போறது உங்களோட மூணு மாச சுகர் கவுண்டிங் எப்படியிருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான்..! போங்க..” என்று விரட்டியேவிட்டார்.

மறுபடியும் லேப். இப்பவும் மூன்று முறையும் ரத்தம் உறிஞ்சிய அதே டெக்னீஷியன் பொண்ணு. “என்ன ஸார்.. திரும்பவும்..?” என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். விஷயத்தைச் சொல்ல.. “பாவம்தான் ஸார் நீங்க..” என்று ஆற்றிவிட்டு ஒரு கப் நிறைய ரத்தத்தை உறிஞ்சி எடுத்து விட்டுத்தான் அனுப்பினார். “இந்த ரிசல்ட்டும் நாளைக்குத்தான் ஸார் கிடைக்கும். வேற வழியே இல்லை. வந்துதான் ஆகணும்..” என்றார்கள். நம்ம நேரம் இப்படித்தான் இருக்குன்றப்ப அவங்களை குத்தம் சொல்லி என்ன புண்ணியம்..? திரும்பி வந்தேன்.

மறுநாள் காலை மறுபடியும் விஜயம். கொஞ்சம் காத்திருப்புக்குப் பின்னர் ரிசல்ட் கைக்கு கிடைத்தது. HBA1c Result 8.3 ஆக இருந்த்து. 4.5-6.0-க்குள்தான் இருக்க வேண்டுமாம். E AG 192 இருந்த்து. 126-க்குள்தான் இருக்க வேண்டுமாம். யூரினில் சுகர் மூன்று பிளஸ் பாயிண்ட்டுகள். ஒரேயொரு ஆறுதலாக ஹீமோகுளோபின் 12.7-தான் இருந்த்து. இது13-17 இருக்க வேண்டுமாம். 

டயாப்டீஸ் மருத்துவரிடம் வந்து அமர்ந்தேன். பார்த்தார். எந்த சலனத்தையும் காட்டவில்லை. “மாத்திரை தர்றேன்.. டயட்டியீஷனுக்கு எழுதித் தர்றேன்.. அவங்ககிட்ட என்னென்ன சாப்பிடணும்..? எப்படி சாப்பிடணும்ன்னு தெரிஞ்சுக்குங்க.. திரும்பவும் திங்கள்கிழமை வாங்க.. குறைஞ்சிருச்சுன்னா கண்டிப்பா கையெழுத்து போட்டுத் தரேன்..” என்றார்.

டயட்டீஷன் செக்ஷன் வந்தமர்ந்தால் அதுவரையில் இருந்த பசியையும் அப்படியே ஓரம்கட்டிவிட்டார்கள்.



இனிமேல் சக்கரை, இனிப்பு வகைகள், அதிகப்படியான அரிசி சாதம், இளநீர், கோக், பெப்சி வகையறாக்களை தொடவே கூடாது.



காலைல 3 இட்லி அல்லது 3 இடியாப்பம் அல்லது 2 தோசை  அல்லது ஒன்றரை கப் உப்புமா, அல்லது 3 சப்பாத்தி. அதிலும் கோதுமை சப்பாத்திதான்.  என்ற ரீதியில் இரண்டு பக்கங்களுக்கு என்ன நேரத்தில், எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்று எழுதியே கொடுத்துவிட்டார்கள்..!  வாங்கிப் படித்தால் பசியே மறந்துபோய்விடும்..!




ஆக.. இந்த உண்மைத்தமிழனின் புலம்பல்கள் இந்தாண்டில் இருந்து இன்னும் அதிகமாக ஒலிக்கும் என்பதை வேறு வழியில்லாமல் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

நமக்குக் கிடைச்சிருக்கிற பிச்சைக்கார வாழ்க்கைல இருக்குற பிரச்சினையே போதாதா என்று நினைத்தால், இந்த கேடு கெட்ட முருகப் பய வருஷத் துவக்கத்திலேயே வைச்ச இந்த டிவிஸ்ட்டுதான் என் வாழ்க்கையில் சூப்பரானது...! இதுதான் கடைசியானது என்றும் நான் நினைக்கிறேன்..! 

சாவதற்கு நான் எப்போதும் பயப்படவில்லை. ஆனால் கஷ்டப்படுத்தாமல் கூப்பிட்டுக்கடான்னுதான் கேட்டுக்கிட்டேயிருக்கேன். பயலுக்கு என்னை மாதிரியே காது செவுடு போலிருக்கு..! ஆத்தா, அப்பன், பொண்டாட்டிகளோட அவன் மட்டும் நல்லாவே இருக்கட்டும்..


Read more: http://www.truetamilan.com/2016/01/blog-post_8.html#ixzz3x2iKbWbe

செல்வன்

unread,
Jan 12, 2016, 10:07:29 AM1/12/16
to Neander Selvan
இன்று

ஒரு வாரத்திற்குள்ளாகவே பேலியோவால் சுகர் அளவு நார்மலுக்கு வந்து, கண் அறுவைச் சிகிச்சைக்குத் தயாராகிரார் Saravanan Savadamuthu aka உண்மைத்தமிழன். முதல் பேலியோ உணவை அவருக்காக அவர் வீட்டுக்குச் சென்று தயாரித்துக் கொடுத்து, உரிய சமையல் பொருட்களையும் வாங்கிக் கொடுத்தபோது எடுத்த படங்கள். 

கார்ப் ப்ளூவில் பசியில் கதறிய கதைகளை விரைவில் நெடுந்தொடராக அவர் எழுதுவார்.






Megala Ramamourty

unread,
Jan 12, 2016, 10:41:01 AM1/12/16
to vallamai
செல்வன்,

தன்னுடைய தாங்கமுடியாத சிரமங்களையும் நகைச்சுவையாய் எழுதும் சின்னத்திரை இயக்குநர் திரு. சரவணன் சவடமுத்து அவர்கள் low-carb flu-வால் கதறிய சோகக்கதையை (வருத்தத்துடன்) அறிய நாங்களும் ஆவலாக உள்ளோம்.

அவருடைய சர்க்கரை அளவு இப்போது நார்மலுக்கு வந்துவிட்டது என்கிறீர்கள். அப்படியே உங்கள் பேலியோ டயட்டால் அவர் கண்நோய்களையும் குணப்படுத்தி அறுவைசிகிச்சையைத் தவிர்க்க முடியாதா? (கண்ணொளி தரும் பொன்னாங்கண்ணியைவிடவும் மாட்டின் கல்லீரல் (beef liver) சிறந்தது என்று சொன்னவர் நீர் தானே?)  :-))


அன்புடன்,
மேகலா

 

செல்வன்

unread,
Jan 12, 2016, 3:12:20 PM1/12/16
to vallamai
மேகலா,

எங்கள் குழுவில் பல ஆங்கில மருத்துவர்கள், சித்தா, ஹோமியோ மருத்துவர்கள் இருக்கிரார்கள். அவர்களில் ஆங்கில மருத்துவர்கள், சித்த மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். பல மருத்துவர்கள் டயட்டை தாம் பின்பற்றுவதுடன் நில்லாமல் நோயாளிகளை அவர்களே குழுவில் சேர்த்து, டயட்டை பரிந்துரைக்க சொல்லி, அதனுடன் தம் மருத்துவ சிகிச்சையையும் செய்கிறர்கள்.

மற்றபடி ஆரோக்கியம் நல்வாழ்வில் மருத்துவர்களுடன் இணைந்து நோயை தீர்க்கும் வழிமுறையையே கையாள்கிறோமே ஒழிய யாரையும் "ஆங்கில வைத்தியம் பார்க்காதே, பேலியோவே போதும்" என கூறுவதில்லை. சில வகை நோய்களுக்கு பேலியோவே போது, சிலவற்றுக்கு மருத்துவமே போதும். சிலவற்றுக்கு இரண்டும் அவசியம்.

பொன்னாங்கண்ணி சாப்பிட வேண்டாம் எனவில்லை..:-) வேண்டுமனால காம்பரமைசாக கீரை, பீஃப் லிவர் இரண்டையும் சாப்பிட்டுகொள்ளலாம்..அல்லது மனிதாபிமானம் பார்ப்பதாக இருந்தால் மாட்டுக்கு கீரையை கொடுத்துவிட்டு அதன் ஈரலை நாம் சாப்பிடலாம். அதுக்கும் உணவு கிடைத்த மாதிரி இருக்கும். நமக்கும் அதன் ஈரல் மூலம் பொன்னாங்கண்ணியின் சத்துக்கள் கிடைக்கும் :-)


seshadri sridharan

unread,
Jan 13, 2016, 11:14:36 PM1/13/16
to vall...@googlegroups.com
பாசி உண்டால் நீரிழிவு நோய் உடலைவிட்டுப்போகும் என்று சொல்லுங்கள் 

சக்கரவன் 

செல்வன்

unread,
Jan 23, 2016, 12:35:15 PM1/23/16
to Neander Selvan
அனைவருக்கும் வணக்கம்.

அசிட்டிட்டி. காரணமும், தீர்வும்.

ஆசிட் உடலுக்கு கெடுதலா?

அசிடிட்ட்டி மாத்திரைகளின் (ப்ரோட்டான் இன்கிபிட்டர்) ஆபத்தான பின்விளைவுகள் என்ன?

அசிட்டிடி மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன?

அசிடிட்டி பிரச்சனை ஏன் வருகிறது?

அதற்கான நிரந்தர தீர்வு என்ன?

ஆகியவற்றை இந்த விடியோவில் விளக்கியுள்ளேன் 



செல்வன்

unread,
Jan 24, 2016, 11:43:42 PM1/24/16
to Neander Selvan
நீங்கள் எல்லாரும் அந்த விடியோவை பார்த்திருப்பீர்கள்...பச்சை முட்டை சாப்பிட்டுவிட்டு அதன்பின் எத்தனை வருடம் கழித்து சமைத்த முட்டையை சாப்பிட்டாலும் ஆபத்து என்ற விடியோ.

"எனக்கு நேர்ந்த இந்த கெட்டபெயரை நீ தான் துடைக்கவேண்டும்" என கனவில் முட்டையும், கோழியும் வந்து கண்ணீர் விட்டு கதறியதால் அதற்கு ஒரு பதில் விடியோ தயாரித்தேன்.

கண்டு மகிழ்க :-)



rajam

unread,
Jan 25, 2016, 12:20:37 AM1/25/16
to vall...@googlegroups.com, Neander Selvan, ra...@earthlink.net
New Yorker செய்தியிதழில் வந்த இந்தப்பதிவு பழையதுதான், இப்போதுதான் கண்ணில்பட்டது, செல்வனுக்கு அர்ப்பணம்:


— இன்னும் ஒரு ‘தாவர பக்தை'

செல்வன்

unread,
Jan 25, 2016, 1:12:49 AM1/25/16
to rajam, vallamai
கட்டுரை படித்தேன் ராஜம் அம்மா. பல பாயிண்டுகள் சரியாக சொல்கிறார். அவர் சொல்வதுக்கு அவருக்கே பதிலும் தெரியுது என நினைக்கிறேன். அவரளவில் "இது ஒரு அனாவசியமான, ஆனால் ஆபத்தில்லாத, கிராக்பாட் டயட்"

ஒருவாரம் பேலியோ பின்பற்றியதாக சொல்கிறார். பேலியோ பான்கேக் செய்ததாக சொல்கிறார். (அது சரியான முறையல்ல)

நான் ஆரம்பித்த புதிதில் எனக்கு சமைக்கவே தெரியாது. தங்கமணி தான் சிக்கன், மீன் செய்து கொடுப்பார். மட்டனுக்கு மாறியபோதும் கூட மகிழ்ச்சியுடன் செய்து கொடுத்தார். பன்றி, எருமை என அடுத்த ஸ்டேஜுக்கு போனபின் "ஆட்டை விட பெரிய எந்த உயிரையும் சமைக்கமாட்டேன்" என சொல்லி மறுத்துவிட்டார். ஸ்டேக், சாப்ஸ், ரிப்ஸ், பேகன் என அந்த ரெசிபிகளும் அவருக்கு தெரியாது.

ஆக அதன்பின் நானே சமைக்க கற்றுகொண்டேன். இப்போது இதெல்லாம் நன்றாக சமைக்கிறேன்.

செந்தமிழும் நாப்பழக்கம்
பேலியோவும் கைப்பழக்கம்


--

தேமொழி

unread,
Jan 25, 2016, 1:45:35 AM1/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
செல்வன் டாக்டர் ஆசா சொல்வதை நையாண்டி செய்த காணொளியா நீங்கள் செய்தது !!!

முட்டை ஒவ்வாமை என்பது வேடிக்கை இல்லை செல்வன்.
முட்டை மட்டுமல்ல, பால், நிலகடலை கூட சிறுவயதில் ஒத்துக் கொள்ளும் உணவு பின்னாட்களில் ஒவ்வாமையைத்  தோற்றுவித்துவிடும்.

lactose intolerance போன்றவையெல்லாம் பாலை செரிமானம் செய்யும் ஆற்றலை  உடல் இழப்பதால் உடலில் பின்னாட்களில் ஏற்படும் மாற்றமே.

முட்டை பற்றி பேசலாம் ...
American College of Allergy, Asthma & Immunology

https://www.youtube.com/watch?time_continue=16&v=dPka3SytnrY<<< மருத்துவர் விளக்கும் காணொளி 


Eggs are one of the most common allergy-causing foods for children.

Egg allergy symptoms usually occur a few minutes to a few hours after eating eggs or foods containing eggs. Signs and symptoms range from mild to severe and can include skin rashes, hives, nasal congestion, and vomiting or other digestive problems. Rarely, egg allergy can cause anaphylaxis — a life-threatening reaction.

Egg allergy can occur as early as infancy. Most children, but not all, outgrow their egg allergy before adolescence.


anaphylaxis — a life-threatening reaction<<< இது  பற்றி ஆசா விரிவாக சொல்லி எச்சரிக்கிறார்கள்.

Anaphylaxis

A severe allergic reaction can lead to anaphylaxis, a life-threatening emergency that requires an immediate epinephrine (adrenaline) shot and a trip to the emergency room. Anaphylaxis signs and symptoms include:

  • Constriction of airways, including a swollen throat or a lump in your throat that makes it difficult to breathe
  • Abdominal pain and cramping
  • Rapid pulse
  • Shock, with a severe drop in blood pressure felt as dizziness, lightheadedness or loss of consciousness

Discuss with your doctor any reaction — no matter how mild — you or your child has to eggs. The severity of egg allergy reactions can vary each time one occurs, so even if a past reaction was mild, the next one could be more serious.

If your doctor thinks you or your child may be at risk of a severe reaction, he or she may prescribe an emergency epinephrine shot to be used if anaphylaxis occurs. The shot comes in a device that makes it easy to deliver, called an autoinjector.


egg allergy warning card

மேலும் படங்கள் 

https://www.google.com/search?q=egg+allergy+warning+card&biw=1600&bih=785&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ved=0ahUKEwjD4OmlrMTKAhUM5mMKHaHcB3MQsAQIGw


egg allergy warning food labelling

மேலும் படங்கள் 

https://www.google.com/search?q=egg+allergy+warning+food+labelling&biw=1600&bih=785&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ved=0ahUKEwj6jMHLrMTKAhVHzWMKHUCuDK4QsAQIGw#imgrc=PexvhbwdI0LMNM%3A


சிலர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. எச்சரிக்கை செய்வதில் தவறில்லை, 

அத்துடன் நுண்கிருமிகளை அழிக்க உணவை சமைத்து சாப்பிடச் சொல்வதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

இப்பொழுது எனக்கு உங்கள் காணொளி நகைப்பிற்குரியதாகத் தோன்றவில்லை செல்வன்.


..... தேமொழி


பி.கு. வல்லமைக்கும் நகல் அனுப்புகிறேன் 



On Sunday, January 24, 2016 at 10:14:23 PM UTC-8, செல்வன் wrote:

2016-01-24 23:34 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
முட்டையைப் பார்த்து யாரும் பயந்ததாக நான் கேள்விப்பட்டது  கூட இல்லை.
(வேண்டுமானால் தேர்வு முடிவை எதிர்பார்ப்பவர்கள் பயந்திருக்கக்கூடும்)

அது வைரஸ்  கிடையாது செல்வன் பாக்டீரியா ... சால்மோனெல்லா  பாக்டீரியா அதன் பெயர் 


நன்றி தேமொழி :-)

வைரஸ், பாக்டிரியா கன்பியூஸ் ஆகிட்டேன்

ஒரிஜினல் "பச்சை முட்டை ஆபத்து" விடியோ. இதை பதிந்தவர் ஒரு டாகடர் 



https://www.facebook.com/PuluthivayalWeb/videos/1064095033611515/


--

செல்வன்

unread,
Jan 25, 2016, 1:38:24 PM1/25/16
to vallamai, மின்தமிழ்
அவர் விடியோவில் என்ன சொல்கிறார் என பார்க்கவும் தேமொழி

சிலருக்கு பச்சை முட்டையால் அலர்ஜி வரும் சரி.நான் பச்சை முட்டை குடிக்கவேண்டாம் எனதான் விடியோவில் சொல்லியிருமிருக்கிறேன்

ஆனால் இவர் "நீங்கள் 5 வயதில் பச்சை முட்டை குடித்திருந்தால் அதன்பின் 40 வயது ஆனாலும் வேகவைத்த முட்டையை சாப்பிடுவதும் பாம்பின் விசத்தை சாப்பிடுவதும் ஒன்று" என்கிறார்

இதற்கு எந்த மெடிக்கல் ஆதாரமும் இவர் கொடுக்கவில்லை.

அமெரிக்காவில் மேயோ, எக்நாக் எல்லாம் பச்சை முட்டையால் செய்யபடுபவை. அமெரிக்கர்கள் தினமும் முட்டையை உண்பார்கள். ஆக இவர் சொல்லும் கனக்குபடி ஒட்டுமொத்த அமெரிக்காவும் தினமும் பாம்பு விசத்தை தான் குடிக்கிறதா?

தேமொழி

unread,
Jan 25, 2016, 2:09:11 PM1/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
இதற்குதான் food labelling முறை வைத்துள்ளார்கள்.

தனக்கு ஒவ்வாமை இருக்கிறது என்று தெரிந்தவர்கள் அதைப்படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவர்கள் பொறுப்பு.  

அவ்வாறு அறிந்தவர்கள் அதைப்படித்து இது நமக்கு உதவாது என்று தவிர்த்துவிடுவார்களாக இருக்கும்.  



..... தேமொழி 

செல்வன்

unread,
Jan 25, 2016, 6:44:02 PM1/25/16
to vallamai, மின்தமிழ்
முட்டைக்கு லேபிள் அவசியமே இல்லையே? அதனுள் என்ன இருக்கு என்பதை உலகமறியும். 

ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் முட்டையை தவிர்க்கணும் என்பது நியாயம்.

அல்லது "முட்டை அலர்ஜி" என்பது என்ன என்பதை விளக்கி அந்த அறிகுறிகள் இருப்பவர்கள் முட்டையை தவிர்க்கவேண்டும் என்றால் அது நியாயம்.

ஆனால் "ஐந்து வயதில் பச்சை முட்டையை சாப்பிட்டால் அதன்பின் 90 வயதிலும் அவித்த முட்டையை சபபிடுவது விசம் குடிப்பதுக்கு சமம்" என சொல்லுவது , அதிலும் ஒரு மருத்துவர் சொல்லுவது பொறுப்பற்ற வாதம்.

அப்படியானால் எக்நாக் மற்றும் மேயோ சாப்பிடும் அமெரிக்கர்கள் எல்லாரும் தொப், தொப் என செத்துதான் விழவேண்டும்

 

rajam

unread,
Jan 25, 2016, 9:00:53 PM1/25/16
to vall...@googlegroups.com
///முட்டைக்கு லேபிள் அவசியமே இல்லையே? அதனுள் என்ன இருக்கு என்பதை உலகமறியும்.///

தங்கள் எண்ணத்துக்கு மறுநோக்கு தேவை, செல்வன். முட்டை என்றால் என்ன என்பதே தெரியாத பிறவிகளும் இருந்ததுண்டு. என் சிறுவயதில் பக்கத்துவீட்டுப்பெண் விளையாட என்னை அவள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோனபோது … அங்கேயிருந்த முட்டையை மேசைப்பந்து (ping-pong ball) என நினைத்து எடுத்து விளையாடி … முட்டை உடைந்து அதன் உட்பொருள் என் மேலே வழிந்து அந்த நாற்றத்தில் வீட்டுக்கு ஓடிவந்து உடனே தலைமுழுகக்குளித்தது நினைவுக்கு வருது. 

இந்தக்காலத்தில் முட்டை என்றால் என்ன என்று உலகம் அறியுமாயிருக்கும். ஆனால் அதன் உள்ளே என்ன இருக்கு என்பது எல்லாருக்கும் தெரியாது. எடுத்துக்காட்டாக — சாதாரண முட்டைக்கும் unfertilized முட்டைக்கும் இடையே என்ன வேறுபாடு என்று எனக்குத் தெரியாது. 

ஆகவே, முட்டையோ கூட்டுமீனோ (shell fish) இன்ன பிறவோ கலந்திருக்க வாய்ப்புண்டு என்கிறபடியான குறிப்புரையும் (food labelling) மக்களுக்குத் தேவை, அதுவே எனக்கும் உதவுகிறது. சீஸ் என்பதில் உள்ள rennet, சாதாரண yogurt என்பதில் கலந்திருக்கும் animal product பற்றியெல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 40+ ஆண்டுகளுக்கு-முன் ஃபிலடெல்ஃபியாவிலும் ஆன் ஆர்பரிலும் இருந்த காலங்களில் அந்த மாதிரி food labelling இல்லாத நிலையில் … கண்டதும் கடியதுமான animal products என் உடலுக்குள் நுழைந்திருக்கின்றன. 

உண்மை … முட்டையின்மேல் label தேவையில்லை. ஆனால் … முட்டை கலந்திருக்கும் பொருள்களின்மேல் அந்தக் குறிப்பு தேவை.

இன்றைக்கும் … ஜெல்லி ஐஸ்க்ரீமை அள்ளி அள்ளிச் சாப்பிடுகிறவர்களுக்கு அந்த ஜெல்லி எங்கேயிருந்து வருகிறது என்று தெரிந்தால் … மேற்கொண்டு சாப்பிடுவார்களா என்பது ஐயமே!



--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/3mMZSf-nrOI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Jan 25, 2016, 9:37:34 PM1/25/16
to vallamai
ராஜம் அம்மா,

அமெரிக்காவில் கடைகளில் கிடைக்கும் முட்டைகள் அனைத்தும் மலட்டு முட்டைகளே. குஞ்சுபொறிக்ககூடிய முட்டைகள் எதுவும் கடைகளில் விற்கபடுவதில்லை.

குஞ்சு பொறிக்ககூடிய முட்டை என்பது சேவலின் உயிரணுவை தாங்கிய முட்டை. அதனுள் கோழிக்குஞ்சு அதன் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் இருக்கலாம். அத்தகைய முட்டை கடைகள் எதிலும் விற்கபடுவதில்லை. குஞ்சு பொறிக்காத முட்டை என்பதில் சேவலின் பங்களிப்பு எதுவுமில்லை. அது கோழியின் நார்மலான சைக்கிளில் உருவாகும் முட்டையே.

சீஸை எளிதில் ஜீரணிக்க அதில் ரென்னெட் எனப்படும் கன்றுகுட்டியின் வயிற்று என்சைம் கலக்கபடுகிறது. அது இல்லாத வெஜிட்டேரியன் ரென்னெட் தேர்வுகளும் உண்டு.

மற்றபடி பேலியோவில் நாங்கள் எடுக்கும் எந்த பொருளுக்கும் லேபிள் அவசியமில்லை.

முட்டை
இறைச்சி
காய்கறி


இதுதான் பேலியோ உணவுகள். இவை எல்லாமே சிங்கிள் இன்க்ரிடியாண்ட் உணவுகள் என்பதால் இதில் எதற்கும் லேபிள் அவசியமில்லையே? காய்கறிகள், பால் தவிர்த்து 
மளிகை கடை எதற்கும் நான் என் ஷாப்பிங்கிற்காக போவதே கிடையாது. வீட்டருகே உள்ள பண்ணையில் கிடைக்கும் இறைச்சியும், முட்டையுமே போதுமானதாக இருக்கிறது. அங்கே நன்றிஅறிவித்தல் நாளில் 1000 டால்ர் கட்டி 15% டிஸ்கவுண்ட் கார்ட் வாங்கினேன். அதில் இதுநாள்வரை 300 டாலர் செலவாகியிருக்கிறது. ஆக கணக்குபோட்டால் மாதம் 150 டாலர் தான் உணவுக்கு செலவாகிறது :-)

சூப்பில் போட செலரி, காரட், வெங்காயம் மாதிரி செலக்டிவான சில காய்களை மட்டுமே காஸ்ட்கோவில் வாங்குவேன். லெமென் ஜூஸ் அவ்வபோது பருகும் வழக்கம் உண்டு. மற்றபடி மாதம் ஒரு நாள் இந்திய மளிகை கடையில் கிடைக்கும் பாகற்காய், கோவைக்காய் தங்கமணி செய்து தர சொல்லி சாப்பிடுவேன். வேறு அட்டையில் அடைத்த, கேனில் உள்ள, ஒற்றை இன்க்ரிடியண்டுக்கு மேலான உணவு எதுவும் பேலியோவில் அவசியமில்லை. இது நோ லேபிள் டயட். 

ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே என்பதால் முனிவர் டயட்

முழுக்க, முழுக்க சொந்த சமையல். பாத்திரம் கழுவுவதில் இருந்து காய்கறி, இறைச்சி வெட்டுவது முதல், சமைப்பது வரை முழுக்க நானே என்பதால் மனைவிக்கு தொல்லை இல்லாத பெண்ணியம் போற்றும் டயட். சொந்த சமையல் (ச்வயம்பாகம்) என்பதால் இந்திய ஞானமரபின் டயட் :-)

அனைத்துமே லோக்கல் இன்க்ரிடியண்ட்ஸ். சாப்பிடும் அனைத்து மிருகங்களும் எங்கள் வீட்டில் இருந்து 3 மைலுக்குள் வளர்ந்தவை. அதனால் சுற்றுசூழலுக்கு உகந்த டயட்.

சமையல் எண்ணெய் கூட சொந்தமாக வீட்டிலெயே காய்ச்சுவேன். ஆட்டுகொழுப்பில் எடுத்த டேலோ ரெசிபி குழுவில் இட்டிருக்கிறேன். உப்பு, மிளகாய்பொடி மாதிரி லிமிடட்டன சில மசாலாக்கள் இந்தியாவில் இருந்து வந்தவை. உப்பு இமாலயன் உப்பு.

காமன் மேன் உணவுகளில் (உதா ஐஸ்க்ரீம், கேக், பீட்சா) லேபிள், இன்க்ரிடியண்ட் பார்த்து வாங்குவது அவசியம். ஏனெனில் அதில் என்னென்னா இருக்கு என யாருக்கும் தெரியாது. அதனால் கடுமையான லேபிள்கள் அதற்கு அவசியம்.

இன்றைக்கும் … ஜெல்லி ஐஸ்க்ரீமை அள்ளி அள்ளிச் சாப்பிடுகிறவர்களுக்கு அந்த ஜெல்லி எங்கேயிருந்து வருகிறது என்று தெரிந்தால் … மேற்கொண்டு சாப்பிடுவார்களா என்பது ஐயமே!

அதெல்லாம் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? :-)..தெரியும். ஆனால் தெரியாது மாதிரி இருப்பது மன அமைதிக்கு நல்லது. ஒரு அளவுக்கு மேல் யாரும் கொள்கையில் உறுதியாக இருப்பதில்லை. ஏனெனில் நம் ஊரில் சைவம் என்பது மரபின் வழி வருவதே ஒழிய கொள்கையால் வருவதல்ல. மரபின் வழி சைவம் என்கையில் சம்பிரதாயமாக சைவம் என இருந்தால் போதும்.


rajam

unread,
Jan 25, 2016, 10:08:16 PM1/25/16
to vall...@googlegroups.com
/// அது கோழியின் நார்மலான சைக்கிளில் உருவாகும் முட்டையே.///

மேலும் சற்றே விளக்கவும், செல்வன். இது ஒரு பெண்ணின் மாதவிடாய் ஒழுக்குப் போன்றதா? இல்லை, ஒரு பெண்ணின் ஓவரி போன்றதா? இது அறியாவினா.

என் வருத்தமெல்லாம் hypocrisy பற்றித்தான் — 'சொல்வது ஒன்று செய்வது மற்று' என்ற நடைமுறை பற்றித்தான். “ஐயங்கார்” பேக்கரியில் ஜெல்லி ஐஸ்க்ரீம் விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, அந்த ஐஸ்க்ரீமை ஆசை ஆசையாய் ஐயர்களும் ஐயங்கார்களும் அள்ளி அள்ளி விழுங்குவதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 

மற்றபடி, உங்கள் paleo உணவுப்பழக்கத்தைப் பற்றி எனக்கு ஒரு சிக்கலுமில்லை. சிறுதானியங்களைப் பயன்படுத்துவதைத் தவிர என் உணவுப்பழக்கமும் pegan (paleo + vegan) முறையினதே.

செல்வன்

unread,
Jan 25, 2016, 11:02:01 PM1/25/16
to vallamai

2016-01-25 21:08 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
மேலும் சற்றே விளக்கவும், செல்வன். இது ஒரு பெண்ணின் மாதவிடாய் ஒழுக்குப் போன்றதா? இல்லை, ஒரு பெண்ணின் ஓவரி போன்றதா? இது அறியாவினா.

முட்டை என்பது கோழியின் மாதவிடாய் ஒழுக்கே.

இதில் வியப்படைய எதுவுமில்லை. மனிதரில் கூட பெண்களுக்கு மாதா, மாதம் ஓவரியில் முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. அதில் ஆணின் உயிரணு பட்டால் முட்டை கருத்தரித்து கருவாக மாறுகிறது. ஆணின் உயிரணு படவில்லையெனில் முட்டை பீரியடாக வெளியே வருகிறது. கோழிக்கும் அதேபோல் தான்.

கடைகளில் உண்ணும் கோழிமுட்டைகள் கோழியின் பிரியட் சமயம் வெளிவரும் கருத்தரிக்க வாய்ப்பற்ற முட்டைகளே.


என் வருத்தமெல்லாம் hypocrisy பற்றித்தான் — 'சொல்வது ஒன்று செய்வது மற்று' என்ற நடைமுறை பற்றித்தான். “ஐயங்கார்” பேக்கரியில் ஜெல்லி ஐஸ்க்ரீம் விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, அந்த ஐஸ்க்ரீமை ஆசை ஆசையாய் ஐயர்களும் ஐயங்கார்களும் அள்ளி அள்ளி விழுங்குவதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பொதுவாக சாதிய விழுமங்களை எல்லாரும் கைவிட்டு வருகிறார்கள். பிராமணரிலும் அது நடந்து வருகிறது என கருதுகிறேன். ஆனால் பிராமணரும் பிற சைவ சாதியினரும் இந்த ஐஸ்க்ரீம், பீட்சா மாதிரியான உணவுகளின் சந்தைபடுத்தலில் மிக டெம்ட் ஆகிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே? என்னை கேட்டால் அவர்கள் இந்த ஜைனர்களால் உருவாக்கபட்ட சைவ உணவு எனும் கோட்பாட்டையே முழுக்க துறந்து அசைவ உணவுக்கு மாறும்படி சொல்லுவேன் (யாரும் கேட்கமாட்டார்கள் என்பது வேறு விசயம் :-)

மற்றபடி இன்றைய உலகில் சர்வைவ் ஆக ஹிப்பாக்ரஸி சற்று அவசியம் தான். முழுக்க, முழுக்க கொள்கையை பின்பற்றி வாழ்வது யாருக்கும் சாத்தியமில்லை என ஆகிவருகிறது. சாதிப்பெருமையும் வேண்டும், சாதி கொள்கையையும் கடைபிடிக்கமாட்டேன் என்பது ஹிப்பாகர்ஸிதான் எனினும் இன்றைக்கு எல்லா சாதியும், மதமும் அப்படித்தான் இருக்கிறது :-)



--

துரை.ந.உ

unread,
Jan 25, 2016, 11:16:25 PM1/25/16
to வல்லமை
2016-01-26 9:31 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2016-01-25 21:08 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
மேலும் சற்றே விளக்கவும், செல்வன். இது ஒரு பெண்ணின் மாதவிடாய் ஒழுக்குப் போன்றதா? இல்லை, ஒரு பெண்ணின் ஓவரி போன்றதா? இது அறியாவினா.

முட்டை என்பது கோழியின் மாதவிடாய் ஒழுக்கே.

இதில் வியப்படைய எதுவுமில்லை. மனிதரில் கூட பெண்களுக்கு மாதா, மாதம் ஓவரியில் முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. அதில் ஆணின் உயிரணு பட்டால் முட்டை கருத்தரித்து கருவாக மாறுகிறது. ஆணின் உயிரணு படவில்லையெனில் முட்டை பீரியடாக வெளியே வருகிறது. கோழிக்கும் அதேபோல் தான்.

கடைகளில் உண்ணும் கோழிமுட்டைகள் கோழியின் பிரியட் சமயம் வெளிவரும் கருத்தரிக்க வாய்ப்பற்ற முட்டைகளே.

​அது அவ்ளோ பெரிசாவா இருக்கும் !!
உங்கள் கூற்று உண்மை எனில் ...யானை,பூனை...ஏன் மனித முட்டை கூட சாத்தியம் போல இருக்கிறதே ...
அதுவும் யானை என்றால் ..முட்டை அளவை கணக்கிட்டால் ...ஒரு முட்டை ..ஒரு குடும்பத்துக்கு ..ஒருவாரம் வருமய்யா .... போகும் போக்கைப் பார்த்தால் ...முட்டைப்புரட்சி மிகவிரைவில் வரும் போலிருக்குதே :))

 

rajam

unread,
Jan 25, 2016, 11:18:02 PM1/25/16
to vall...@googlegroups.com
///முட்டை என்பது கோழியின் மாதவிடாய் ஒழுக்கே.

இதில் வியப்படைய எதுவுமில்லை. மனிதரில் கூட பெண்களுக்கு மாதா, மாதம் ஓவரியில் முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. அதில் ஆணின் உயிரணு பட்டால் முட்டை கருத்தரித்து கருவாக மாறுகிறது. ஆணின் உயிரணு படவில்லையெனில் முட்டை பீரியடாக வெளியே வருகிறது. கோழிக்கும் அதேபோல் தான்.///

??? இதைப்பற்றி வேறு எங்கேயாவது படித்துத் தெரிந்துகொள்ளவேண்டியதுவோ என் நிலை???

பெண்களின் மாதவொழுக்குகு உருவமில்லை. அது வெறும் குருதி — திரவம். கோழியிலிருந்து வெளிப்படும் முட்டை பருப்பொருள். 

புரியவில்லையே???


rajam

unread,
Jan 26, 2016, 12:01:07 AM1/26/16
to vall...@googlegroups.com
///உங்கள் கூற்று உண்மை எனில் ...யானை,பூனை...ஏன் மனித முட்டை கூட சாத்தியம் போல இருக்கிறதே ...
அதுவும் யானை என்றால் ..முட்டை அளவை கணக்கிட்டால் ...ஒரு முட்டை ..ஒரு குடும்பத்துக்கு ..ஒருவாரம் வருமய்யா .... போகும் போக்கைப் பார்த்தால் ...முட்டைப்புரட்சி மிகவிரைவில் வரும் போலிருக்குதே :))///

அச்சோ அச்சோ!!! யானையும் பூனையும் முட்டை போடும் காலம் வந்தாச்சா? என் பேலியோ மருமக்கள் அதெயும் திம்பாங்களா? 

செல்வனையும் என்னையும் ஒரே பூமியில் படைத்த கடவுளே … நீயே கதி. 


தேமொழி

unread,
Jan 26, 2016, 12:19:32 AM1/26/16
to வல்லமை


On Monday, January 25, 2016 at 8:16:25 PM UTC-8, துரை.ந.உ wrote:
 போகும் போக்கைப் பார்த்தால் ...முட்டைப்புரட்சி மிகவிரைவில் வரும் போலிருக்குதே :))

இழை போகும் போக்கைப்பார்த்தால் இந்தப் பாடல்தான் நினைவு வருகிறது...


ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி

கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு 
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் பாட்டிலுண்டு
பரம்பரை கதையிலுண்டு கதையல்ல மகராசி

..... தேமொழி




rajam

unread,
Jan 26, 2016, 12:23:12 AM1/26/16
to vall...@googlegroups.com
///முட்டை என்பது கோழியின் மாதவிடாய் ஒழுக்கே. இதில் வியப்படைய எதுவுமில்லை. மனிதரில் கூட பெண்களுக்கு மாதா, மாதம் ஓவரியில் முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. அதில் ஆணின் உயிரணு பட்டால் முட்டை கருத்தரித்து கருவாக மாறுகிறது. ஆணின் உயிரணு படவில்லையெனில் முட்டை பீரியடாக வெளியே வருகிறது. கோழிக்கும் அதேபோல் தான். கடைகளில் உண்ணும் கோழிமுட்டைகள் கோழியின் பிரியட் சமயம் வெளிவரும் கருத்தரிக்க வாய்ப்பற்ற முட்டைகளே///

amazing!!! வாயடைத்துத் திகைத்தேன்! பெண்களின் மாதவிடாய்க்கு இப்படிப்பட்ட ஒரு uplift கிடைத்திருப்பதைப்பற்றி என்ன சொல்ல என்று தெரியவில்லை! மகளிரின் முலைப்பாலை விலையாக்காமல் இருக்கும் மானுடத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் … 

துரை.ந.உ

unread,
Jan 26, 2016, 12:29:15 AM1/26/16
to வல்லமை
Inline image 1:)

2016-01-26 10:52 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
///முட்டை என்பது கோழியின் மாதவிடாய் ஒழுக்கே. இதில் வியப்படைய எதுவுமில்லை. மனிதரில் கூட பெண்களுக்கு மாதா, மாதம் ஓவரியில் முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. அதில் ஆணின் உயிரணு பட்டால் முட்டை கருத்தரித்து கருவாக மாறுகிறது. ஆணின் உயிரணு படவில்லையெனில் முட்டை பீரியடாக வெளியே வருகிறது. கோழிக்கும் அதேபோல் தான். கடைகளில் உண்ணும் கோழிமுட்டைகள் கோழியின் பிரியட் சமயம் வெளிவரும் கருத்தரிக்க வாய்ப்பற்ற முட்டைகளே///

amazing!!! வாயடைத்துத் திகைத்தேன்! பெண்களின் மாதவிடாய்க்கு இப்படிப்பட்ட ஒரு uplift கிடைத்திருப்பதைப்பற்றி என்ன சொல்ல என்று தெரியவில்லை! மகளிரின் முலைப்பாலை விலையாக்காமல் இருக்கும் மானுடத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் … 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jan 26, 2016, 12:32:12 AM1/26/16
to வல்லமை
Inline image 1:))

செல்வன்

unread,
Jan 26, 2016, 12:43:02 AM1/26/16
to vallamai

2016-01-25 22:17 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
பெண்களின் மாதவொழுக்குகு உருவமில்லை. அது வெறும் குருதி — திரவம். கோழியிலிருந்து வெளிப்படும் முட்டை பருப்பொருள். 

புரியவில்லையே???


குழம்ப வேண்டியதில்லை. ஏனெனில் கோழி பாலூட்டி அல்ல. அதற்கு கருப்பை எதுவும் கிடையாது. அதனால் அதற்கு மனிதர்களை போல பீரியட்ஸ் ஆவது கிடையாது. மனிதரில் பெண்களுக்கு தனியாக கருப்பை மற்றும் முட்டை இரண்டும் உன்டு. மாதவிலக்கின் சமயம் கருத்தரிக்கவில்லை எனில் கருப்பை லைனிங், டிஸ்யுவுடன் முட்டையும் சேர்ந்து குருதிவழியே வந்துவிடும். மனித முட்டை ஒரு சின்ன செல் என்பதால் அது கண்ணுக்கு தெரியாது.

கோழிக்கு கருப்பை இல்லை என்பதால் அதன் முட்டை தான் கருப்பையின் பணியையும் ஆற்றுகிறது. 


--

rajam

unread,
Jan 26, 2016, 12:45:14 AM1/26/16
to "துரை. ந. உ", vallamai
என்னெக் கொல்லாதீங்க மகரே, என்னெக்கொல்லாதீங்க, வேண்டிக்கிறென்.


Begin forwarded message:

செல்வன்

unread,
Jan 26, 2016, 12:46:05 AM1/26/16
to vallamai

2016-01-25 22:16 GMT-06:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
அது அவ்ளோ பெரிசாவா இருக்கும் !!
உங்கள் கூற்று உண்மை எனில் ...யானை,பூனை...ஏன் மனித முட்டை கூட சாத்தியம் போல இருக்கிறதே ...
அதுவும் யானை என்றால் ..முட்டை அளவை கணக்கிட்டால் ...ஒரு முட்டை ..ஒரு குடும்பத்துக்கு ..ஒருவாரம் வருமய்யா .... போகும் போக்கைப் பார்த்தால் ...முட்டைப்புரட்சி மிகவிரைவில் வரும் போலிருக்குதே :))


யானை,பூனை, மனிதன் என உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் முட்டையிலிருந்து வருபவையே.

பாலூட்டிகளுக்கு அது வயிற்றினுள், கருப்பையில் நிகழ்கிறது. பறவைகளுக்கு கருப்பை இல்லை என்பதால் முட்டைதான் கருப்பை.மற்றபடி முட்டையை எல்லாம் சாப்பிடவேண்டியதே கிடையாது. அது குழந்தைகளுக்கான உணவு மட்டுமே. நமக்கு இறைச்சி ஒன்றே போதும், அதிலும் ரெட் மீட்.

குழந்தைகள் வேண்டுமானால் முட்டை, கோழி, மீன் எல்லாம் சபபிடலாம்.


--

தேமொழி

unread,
Jan 26, 2016, 1:25:58 AM1/26/16
to வல்லமை


On Monday, January 25, 2016 at 9:46:05 PM UTC-8, Neander Selvan wrote:

யானை,பூனை, மனிதன் என உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் முட்டையிலிருந்து வருபவையே.

பாலூட்டிகளுக்கு அது வயிற்றினுள், கருப்பையில் நிகழ்கிறது. பறவைகளுக்கு கருப்பை இல்லை


பெண் பறவைகளுக்கு uterus / கருப்பை இல்லை என்று சொல்கிறீர்களா? உறுதியாகத் தெரியுமா?

எனது zoology பட்டமே கேள்விக்குறியாகிவிட்டது உங்கள் தகவலைப் படித்த பிறகு.

..... தேமொழி



 
என்பதால் முட்டைதான் கருப்பை.மற்றபடி முட்டையை எல்லாம் சாப்பிடவேண்டியதே கிடையாது. அது குழந்தைகளுக்கான உணவு மட்டுமே. நமக்கு இறைச்சி ஒன்றே போதும், அதிலும் ரெட் மீட்.

செல்வன்

unread,
Jan 26, 2016, 1:38:45 AM1/26/16
to vallamai



பெண் பறவைகளுக்கு uterus / கருப்பை இல்லை என்று சொல்கிறீர்களா? உறுதியாகத் தெரியுமா?

எனது zoology பட்டமே கேள்விக்குறியாகிவிட்டது உங்கள் தகவலைப் படித்த பிறகு.

..... தேமொழி




    Most animals that lay eggs, such as birds and reptiles, including most ovoviviparous species, have an oviduct instead of a uterus.


தேமொழி

unread,
Jan 26, 2016, 1:58:06 AM1/26/16
to வல்லமை

செல்வன்

unread,
Jan 26, 2016, 7:59:03 AM1/26/16
to vallamai
உங்கள் கேள்வி இதுதானே?

"..பெண் பறவைகளுக்கு uterus / கருப்பை இல்லை என்று சொல்கிறீர்களா? உறுதியாகத் தெரியுமா?

எனது Zoology பட்டமே கேள்விக்குறியாகிவிட்டது உங்கள் தகவலைப் படித்த பிறகு..."

இந்த வரைபடத்தில் கோழிகளுக்கு uterus (கருப்பை) இல்லையே?

செல்வன்

unread,
Jan 26, 2016, 8:07:14 AM1/26/16
to vallamai
மன்னிக்கவும்..வரைபடத்தில் யுடிரஸ் உள்ளது. ஆனால் வரைபடத்தில் இங்கே யுடிரஸ் என குறிப்பிடபடுவது ஷெல் கிளாண்ட்.

கருப்பை என நாம் மனிதரிடையே புரிந்துகொள்வது குழந்தை வயிற்றில் வளரும் இடம்.

இங்கே ஷெல் கிளாண்டில் கோழிகளின் முட்டைகளின் மேல் ஓடு இடப்படுகிறது.

குஞ்சு வளரந்து வெளியே வருவது முட்டையில் தான். கருப்பையில் அல்ல.

ஷெல்கிளாண்டை யுடிரஸ் என்றாலும் மனிதரிடையே கருப்பை ஆற்றும் பணியை கோழிகளுக்கு ஆற்றுவதில்லை

Oru Arizonan

unread,
Jan 26, 2016, 6:12:32 PM1/26/16
to vallamai
துரை அவர்களே,
தங்களின் படத்தைப் பார்த்ததும் எனக்கு, 'Mork and Mndy" என்ற சின்னத்திரை தொடர் நினைவுக்கு வந்தது.  இத்தொடரில் வரும் மோர்க் என்னும் வேற்றுக் கிரகத்தான், மனிதப்பெண்ணை மணந்து, முட்டையிட்டுக் குஞ்சுபொறிப்பான்.


பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Jan 27, 2016, 10:23:21 AM1/27/16
to Neander Selvan
ஊர்வசியின் அக்கா நடிகை கல்பனா தனது 50களில் மாரடைப்பில் மரணமடைந்தார். பொதுவாக பெண்களுக்கு மாரடைப்பு வரும் அளவு ஆண்களை விட மிக குறைவு. அமெரிக்க புள்ளிவிவரம் தான் கையில் இருக்கு. அதன்படி 15% ஆண்களுக்கு மாரடைப்பு வரும் என்றால் 10% பெண்களுக்கு தான் மாரடைப்பு வரும். ஆக ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு வரும் சதவிகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைவு.




இதற்கு காரணம் எஸ்ட்ரோஜன். ஆன்களுக்கு ஆண்ஹார்மோனான டெஸ்டெஸ்ட்ரோன் சுரக்கும். டெஸ்டெஸ்ட்ரோன் ஆண்மையின் ஹார்மோன். இதனால் ஆண்களுக்கு மஸில் அதிகமா இருக்கும். உடலெங்கும் முடி வளரும், சொட்டை விழும். கோபம், வீரம் எல்லாம் வரும்.

எஸ்ட்ரோஜனால் பெண்களுக்கு உடலில் அதிகமா கொழுப்பு ஸ்டோரேஜ் ஆகும். அதே சமயம் பெண்மை அதிக்ரிக்கும் (குரல், மென்மை,நளினம், மீசை,தாடி வளராதது, சொட்டை விழாதது) எல்லாவற்றுக்கும் காரணம் எஸ்ட்ரோஜன்.

எஸ்ட்ரோஜன் மாரடைப்பிலிருந்தும் பெண்களை இருவிதங்களில் காக்கிறது. அவர்களின் எச்டிஎல் அளவை இது அதிகரிக்கிறது. ஆண்களை விட பெண்களீன் குட் கொலஸ்டிரால் எச்டிஎல் அதிகமாக இருப்பதை காணலாம். எஸ்ட்ரோஜன் சுரப்பால் பெண்களுக்கு கோபம், வன்முறை ஆகிய குணங்களும் குறையும் (பூரிக்கட்டை எடுத்து வீசுவது எல்லாம் என்ன கணக்குன்னு யாருப்பா சவுன்டு விடறது :-). இதனால் மன அழுத்தம் குறைந்து மாரடைப்பு வரும் விகிதம் பெண்கலுக்கு குறைவு

அதே சமயம் ஆண்களுக்கு மாரடைப்பு வந்தால் அவர்கள் தப்பி உயிர்பிழைக்கும் வாய்ப்பும் அதிகம். பெண்களுக்கு அப்படி இல்லை. மாரடைப்பு வருவது அபூர்வம். வந்தால் உயிர்பிழைக்கும் சதவிகிதம் ரொம்ப குறைவு.

கல்பனா மாதிரி 50களில் இருக்கும் பெண் மாரடைப்பில் இறப்பது ரொம்ப அபூர்வமான விசயம். ஆனால் நாம் வாழும் காலத்தில் எது எல்லாம் நடக்காது என்றார்களோ, அது எல்லாம் நடந்து வருகிறது என்பதால் இது அதிர்ச்சியை அளித்தாலும் வியப்பை அளிக்கவில்லை.

அனைவரும் உடல்நல்னில் அக்கறை செலுத்தி நம்மை காப்பாற்றிகொள்வோம். 50களில் இறக்கும் கொடுமை யாருக்கும் நிகழவேண்டாம். குப்பை உனவுகளை தவிர்த்து ஆரோக்கியமாக இருப்போம். நம்மை படங்களில் மகிழ்வித்த நடிகை கல்பனாவின் ஆன்மா சாந்தி அடைய எங்கும் நிறைந்த பரமனை வேண்டுவோம்.

செல்வன்

unread,
Feb 1, 2016, 11:10:38 AM2/1/16
to Neander Selvan

5 வருட நீரிழிவு மருத்துவமும் 5 மாத பேலியோவும்:


5 வருட மருத்துவம் போதித்தது:


நீரிழிவு வியாதி, குணப்படுத்தவே முடியாது, மருந்து, மத்திரையை எடுத்தால் மட்டுமே கட்டுக்குள் வைக்கலாம் (!)


முதலில் மாத்திரையில் ஆரம்பித்து இறுதியில் இன்சுலினில் முடியும்.

சப்பாத்தி சாப்பிட்டால் குறையலாம் , ( ஜீரண கோளாறுதான் வந்தது) 


Diabetic rice, diabetic atta , Sugar free, இட்லி, சோறு, பழம் எல்லாம் கொஞ்சம் சாப்பிடலாம். 
3 வேளை உணவை 5 வேளையாக சாப்பிடவும் ( சுகரும் குறையல, ஆனால் பசியும், தாகமும் எப்பொழுதும் உடனிருந்தது )


முட்டையின் மஞ்சள் கரு, red meat பார்க்கவே கூடாது.


நீரிழிவிருந்தால் cholesterol , இரத்தழுத்தம் வரும் அதற்கும் மாத்திரை எடுக்கணும்.
எல்லா மாத்திரயையும் எடுப்பதால், அசிடிட்டி வரும், அதற்கும் மாத்திரை எடுக்கணும் .


5-மாத பேலியோவில் கற்றதும் பெற்றதும்


கற்றது :


பேலியோ உணவை மட்டும் வேண்டுமளவு சாப்பிடவும் 


கொழுப்பு உணவு (red meat, முட்டையின் மஞ்சள் கரு, கோழியிறைச்சியை தோலுடன், நெய், பன்னீர்( வேண்டியளவு சாப்பிடவும் 


பெற்றது :


எப்போதுமிருக்கும் பசி பறந்து போனது, நீண்ட நேரம் பசியின்றி , சோர்வின்றி இருக்கும் உணர்வு


கற்றது:


சர்க்கரையின் அளவு குறையும், மாத்திரைகளை மருத்துவரை ஆலோசித்து குறைக்கவும்

பெற்றது:


இரண்டாம் நாளிலேயே சர்க்கரையளவு குறைந்தது, மாத்திரைகளும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைந்தது 


கற்றது: 


வைட்டமின் டிக்கு வெயிலில் நிற்கவும், இண்டர்மீடியேட் பாஸ்டிங், நடைப்பயிற்சி 

பெற்றது:


சுகரும், தொப்பையும் குறைய உடம்பு இலகுவாகியது, 

கற்றது:


திரு. சிவராம் ஜெகதீசன் அவர்களின் உன்னை வெல்வேன் தொடர் 

பெற்றது: 


நீரிழிவு நோயின் அடிப்படை விழிப்புணர்வும், வெற்றிகொள்ளும் அறிவும்

4-மாதயிறுதில் பெற்றவை



இரத்தழுத்தம் காணமல் போனது (Blopress 20mg அவசியமில்லாமல் போனது) 

சுகரின் அளவு (105 - 125) (Janumet 1000 mg - 2 times, Diamacron 60mg 2 times, அவசியமில்லாமல் போனது)

அசிடிட்டி காணமல் போனது (Gastropan 1 time, fixit 300mg அவசியமில்லாமல் போனது)

முடிவாக, பேலியோவினால் மட்டுமே நீரிழிவை வெல்ல அல்லது கட்டுக்குள் வைக்க முடியும். மற்றவையாவும் நம்மை நிரந்தர நீரிழிவு நோயாளியாக்குவதோடல்லாமல் இன்னும் பிற நோய்க்கும் அதிபதியாக்கி ஈட்டும் வருவாய் யாவும் மருத்துவத்துக்கு மட்டுமே போகும்.

பேலியோ தொடருவோம் , நோயின்றி ஆரோக்கியமுடன் வாழ்வோம்

குழுவின் மூத்த உறுப்பினர்கள் திரு. நியான்டர் செல்வன், திருநாவுக்கரசு, கோகுல் குமரன், சங்கர், சிவராம் ஜெகதீசன் மற்றும் உற்சாகமும், ஊக்கமும் தரும் நண்பர்கள் 
அனைவருக்கும் என்றென்றும் நன்றியுடையவனாகிறேன்.

செல்வன்

unread,
Feb 2, 2016, 9:03:29 AM2/2/16
to Neander Selvan

d

ஒரு சிறப்பு பகிர்வு-II

ஒரு சிறப்பு பகிர்வு-II

அப்போது அறிமுகமானது நமது ஓம்ப்ரகாஷ் லிங்க் கொடுத்த 'ஆரோக்கியம் & நலவாழ்வு' என்ற குழு. அவர்கள் சொன்ன டயட்டெல்லாம் கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லாததால் சும்மா ஒரு டைம் பாசுக்காக அதை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அவருடை பழைய மற்றும் புதிய போட்டோவை போட்டு அசத்தினபோது கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

சோதனை முயற்சியாக ஒரு வாரம் செய்து பார்க்கலாம் என்கையில் உடம்புக்கு முடியாமல் போய் மருத்துவமனை அனுமதி, அந்த உணவையும் உண்ண முடியாத நிலையில் துவங்கினேன் இந்த டயட்டை. முட்டைகள், காய்கறிகள், மீன், கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, பாதம் பருப்பு, நெய், வெண்ணை, தேங்காய் என எல்லாமே எனக்கு பிடித்த உணவு வகைகள்.

ஆனால் அரிசி மற்றும் கோதுமைக்கு நோ சொன்னது ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. நான் சரியான சோத்து மூட்டை. அரிசி சாதம் இல்லாவிட்டால் உயிர் வாழவெ முடியாது என்னால் என்ற என் நம்பிக்கை இப்போது முடநம்பிக்கையானது.

நமது வால் Omprakash Viswanathan கொடுத்த நம்பிக்கை மற்றும்Neander Selvan ஊக்கம் காரணமாக துவங்கினேன் என் டயட்டை. நூரு நாட்கள் ஆகிறது. 15-கிலோவுக்கும் மேலாக குறைந்து விட்டேன். ஐந்து நிமிடம் சேர்ந்தாற்போல நடக்க முடியாதன் நான் ஒரு மணிநேரம் சோர்வின்றி நடக்கிறேன். வாசலுக்கே கார் வந்தால் மட்டுமே வெளியே வருவேன் (ஆட்டோவில் கூட ஏற முடியாமல் போனது இன்னொரு கொடுமை) என்ற நிலை மாறி நடக்கவே ஆசைப் படுகிறேன் புதிதாய் நடக்க துவங்கிய குழ்ந்தை போல.

பிரிடயாபடிக் என்ற மதில் மேல பூனை நிலையில் இருந்து மீண்டிருக்கிறேன். குழப்பம் தெளிந்து மற்றவர்களை குழம்ப விட்டிருக்கிறேன். பஞ்சு போல் உடலை கொண்டிருப்பதாக உணர்கிறேன்.

செல்வன்

unread,
Feb 3, 2016, 9:25:03 AM2/3/16
to Neander Selvan
ஃபேட்டி லிவர்: ஈரலில் கொழுப்பு தேங்குதல்.

ஃபேட்டி லிவர் வியாதி எதனால் வருகிறது?

இதற்கான தீர்வுகள் என்ன?

என்னவகை உணவுகள் மூலம் இதை குணப்படுத்த முடியும்?

rajam

unread,
Feb 3, 2016, 3:13:14 PM2/3/16
to vall...@googlegroups.com, Neander Selvan
தங்கள் விடியோக்கள் நல்லாருக்கு, செல்வன் — மணிக்கணக்கில் பேசி மக்களைச் சோர்வடையச்செல்லாமல் குறுகிய நேரத்தில் பெருகிய கருத்தை விளக்குகிறீர்கள். நல்ல உத்தி! பாராட்டுகிறேன்.

பொதுவாகவே என் உணவுமுறை lacto-ovo-vegetarian எதிலுமே அடங்காத vegan. ‘ragan (< rajam’s vegan’) என்றும் சொல்லலாம்!! 

இப்போ … 'பேலியோ-வீகனுக்கு மாறு,’ ‘தானியம் தகர்த்திடு’ என்று எனக்கே நான் கொடி பிடித்தால் … புரதத்துக்கு எங்கே போவேன்? உழுந்தும் துவரம்பருப்பும் பாசிப்பருப்பும் கலக்காத வீகன்-பேலியோ சமையலிலிருந்து புரதம் எப்படிக்கிடைக்கும்?

Flax seeds, hemp seeds, pumpkin seeds, salba seeds, sesame seeds, sunflower seeds இன்ன பிறவும் … பலப்பல கொட்டைகளும் (almonds, brazil nuts, hazelnutsmacadamia, pine nuts, walnuts etc.) பேலியோ பற்றித் தெரியாத நாட்களிலிருந்தே எனக்குப் பழக்கம். அதோடு, வீட்டுப் பின்புறத்தில் மலரும் தழைகளையோ மலர்களையோ விடாமல் பறித்து எடுத்து மொக்கியிருக்கிறேன்! முன்பிறவியில் நான் ஒரு பசுவாகவோ ஆடாகவோ இருந்திருக்கவேண்டும்!

[என் வீட்டுப்பின்புறத்தில் வளரும் dandelion தழைகளையும் கமீலியா (camelia) மலர்களையும் சந்தைப்படுத்தினால் நான் கோடானகோடீசுவரியாகித் தமிழ் ஆய்வுக்குப் பணம் கொடுத்து உதவும் நிலை உருவாகலாம்!! ஆனால் எனக்கு வணிகமும் சந்தையியலும் தெரியாதே. :-( ]

++++++++++

பேலியோ தெரிந்ததுக்கு அப்புறம் என்ன ஒரு மாற்றம் செய்திருக்கிறேன் என்றால் … முன்புபோல் பழவகைகளை (banana, grapes, grapefrute, nectarine, peach, plum etc.) மொக்குவதில்லை. 

ஆனால், எப்போதாவது அரிசி + பருப்புக் கலவையை வாயும் வயிறும் தேடுகிறதே! அதுவும் எப்பவும்போல் 2-மேசைக்கரண்டி அளவே போதும். ஆனால் அதோடு சேர்த்துச் சாப்பிட ஒரு கரண்டிச் சாம்பார்/ரசம் வேணும்-போல இருக்கே, என்ன செய்யலாம்?

[இப்போது மட்டுமில்லை, எப்போதுமே என் வீட்டார் என் சமையலைக் குற்றம் சொன்னதேயில்லை, சமைத்ததைக் குற்றம் சொல்லாமல் சாப்பிட்டுப் போவார்கள். அது என் நல்வினைப்பயன்.]

ஆக, செல்வனுக்கு ஒரு கேள்வி: சாம்பார் பேலியோவா?


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/3mMZSf-nrOI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 4, 2016, 3:16:00 PM2/4/16
to rajam, vallamai
ராஜம் அம்மா,

பேலியோ என்பது கற்கால டயட். அதில் இறைச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதை மாற்றம் செய்து சைவ பேலியோ என பால் சேர்த்துகொள்ளும்வரை பிரச்சனையில்லாமல் கொண்டுவர முடியும். வீகன் என்கையில் அது அடுத்த லெவல் அட்ஜஸ்ட்மெண்ட் ஆகிவிடுகிறது :-) ஆனால் முடியாத சவால் என இல்லை. அதையும் செய்யலாம்.

உங்கள் கேள்வி: புரதம்

புரதம் அதிகமுள்ள பேலியோ உணவுமுறை

100 பாதாம். வாணலியில் வணக்கி அல்லது ஓவர்நைட் ஊறவைத்து உண்டால் 23 கிராம் புரதம் கிடைக்கும்

தவிர பாதாம் பால், முந்திரிபால் என வீகன் பால் கடைகளில் விற்கிறது. இதில் சோயாபாலை தவிரவும், ரைஸ் மில்க், ஓட்ஸ் மில்க் என்பதை தவிரவும் மற்ற பால்களில் ஓரளவு பிரச்சனையில்லை. இதில் ஒரு எட்டுகிராம் புரதம் கிடைக்கும்

ஆக சுமார் 30 கிராம் புரதம் கிடைக்கிறது. சேசாத்திரி சொன்ன சுருள்பாசி ஸ்பைரூலினா 25 கிராம் எடுத்தால் 16 கிராம் புரதம். ஆக 45 கிராம் புரதம் கிடைக்கிறது.

தவிர புரதம் நிரம்பிய பேலியோ அல்லாத உணவுகளான முளைகட்டின பயறு, முளைகட்டின சுண்டல் போன்றவற்றையும் எடுக்கலாம். இவற்றால் கெடுதல் உண்டு. ஆனால் சாம்பார், அரிசியை விட இவை கெடுதலானவை அல்ல.

பி12 மாத்திரை, கால்சியம் போன்ரவை மேலே சொன்ன உணவில் சிக்கல் தான். பாதாம்பாலில் சிறிது கால்சியம் சேர்க்கிறார்கள். செயற்கை மாத்திரை, வைட்டமின்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நனிசைவ உணவில் இவர்றுக்கான தேர்வுகள் மிக குறைவே.

நீங்கள் முழுக்க பேலியோ பின்பற்றுவது கடினம். பேலியோ இன்ஸ்பையர்ட் என்பது போல ஒரு வேளை உணவாக பாதாம் எடுக்கலாம், சுருள்பாசி எடுக்கலாம். மற்ற வேளை உணவுகளில் முளைகட்டின பயறு, அரிசி ஆகியவற்றை எடுக்கலாம்.

காளிபிளவர் அரிசி என ஒரு பேலியோ அரிசியை அறிமுகபடுத்தியுள்ளோம் :-) அதையும் மற்ற சைவ ரெசிபிகளையும் இங்கே காணலாம்.(நனி சைவ ரெசிபிகள் அதிகமா இல்லை. ஆனால் சைவ ரெசிபிகள் சிலவற்றை நனிசைவ முறையில் சமைகக்லாம்)


மற்றபடி சாம்பர் நிச்சயமா பேலியோ அல்ல :-) ஏனெனில் அதில் பருப்பு இருக்கு

செல்வன்

unread,
Feb 5, 2016, 9:08:15 PM2/5/16
to Neander Selvan, vallamai, mintamil
இன்றைய விடியோ

ஆண்மை குறைபாடு: காரணமும், தீர்வும்



rajam

unread,
Feb 5, 2016, 10:18:48 PM2/5/16
to vall...@googlegroups.com, Neander Selvan
செல்வன்! பிச்சு வாங்குறீங்க! ரொம்ப டெலிகேட்-ஆன தலைப்பைப் பற்றி 'ஆகா ஊகூ’னு ஆவேசமாப் பேசாம ரொம்ப அமைதியாக நாசூக்காக விடியோ உரை கொடுத்திருக்கீங்க, பாராட்டு!! இதெல்லாம் பற்றி அண்மையில்தான் தெரிந்துகொண்டேன்! ஆடவர் என்றால் என்னெனமோ நினைத்திருந்தேன்!! பலதும் புஸ்வாணம்.

1. Omega-3 fatty acids தேவையென்றால் முட்டைக்குப் பதிலாக flaxseeds பயன்படுத்தலாமே, இல்லையா?

2. செலெனியம் (selenium) நம்ம கடுகில் (mustard seeds) இருப்பதாகப் படித்திருக்கிறேன். அதைச் சேர்த்துக்கொள்ளலாமா?

3. 100-பாதாம் (அல்லது 100-கிராம் பாதாம்) கொஞ்சம் அதிகமாத் தெரியுதே. எங்க வீட்டில் நெய்யும் பாலும் சர்க்கரையும் சொட்டச்சொட்ட … பாதாம் அல்வா / பாதாம் பாயசம் எவ்ளோ கொடுத்தாலும் சாப்பிடுவாங்க. ஆனால், ஊறவச்ச பாதாம் பருப்பை 100 அளவில் சாப்பிடச் சோம்பல் பட்டுவிடுவார்களே!

மற்றபடி நீங்கள் சொன்ன பூண்டு போன்றவை நல்லவையே.

++++++++++ 

இந்திய மரபணுவுக்கு ஒரு இயங்கியல் நேர்முறை உண்டு என்று நினைக்கிறேன். குறிப்பிட்ட வயதுவரைதான் குறிப்பிட்ட செயல்களை ஒருவரால் திறம்படச் செய்யமுடியும். நளாயினியின் கணவனாகவோ, ஜெயகாந்தன் கதையில் வரும் கங்காவின் மாமாகவோ-தான் பலரின் வாழ்க்கையும் அமைகிறதோ என்னவோ. எனக்கு நெருங்கிய உறவில் பார்த்திருக்கிறேன். 100+ வயதில் இறக்கும்வரை ஒரு பல்லும் விழவில்லை. அழகோ அழகு. மெலிந்த உடல். வழுக்கை இல்லை, தலைநிறைய முடி. வாழ்க்கைப்பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணுறவு, மது, புகை எல்லாம் உண்டு. ஆனால் … உடலுக்குள் செலுத்தும் பொருளில் … மது, உணவு எதுவானாலும் சரி … மிகக் கடுமையான அளவுக்கட்டுப்பாடு. எல்லாமே அளவுக்கு மிஞ்சாத அமிர்தமாகவே அமைந்தது. ஒருநாளும் தலைவலி காய்ச்ச்சல் என்று படுத்ததில்லை! 100-ஆம் ஆண்டு பிறந்தநாள் காலையில் ஒரு சொட்டு விஸ்கி அருந்தாமல் தன் நாளைத் தொடங்கவில்லை! யாரையும் தொல்லைப்படுத்தாமல் ஒருநாள் காலையில் காப்பி அருந்தியபின் படுத்ததுதான் இறுதி.

[தவ்வைமொழி: பிரமசரியம், இல்லறம், வானப்பிரசத்தம், துறவறம் … என்ற நிலைகள் போற்றத்தக்கனவே. ஏதேது, நானும் முட்டை-பேலியோவுக்குத் தாவிவிடுவேனோ என்று உள்மனம் கேட்கிறது! ஊஹூம் … அந்தக் கவிச்சிவாடெயெ ஒன்னால தாங்கிக்கமுடியாது-னு இன்னொரு பக்கம் சொல்கிறது. பிள்ளைப்பேற்றுக்காக … பச்சை முட்டையை அடித்துப் பாலில் கலக்கி அந்தக் கவிச்சி நாற்றத்தை மறைக்க … நெய்யும் பாதாமும் கலந்து கொடுத்தார்கள். தாங்கமுடியவில்லை. கருப்பையின் குறைபாடு எல்லாரையும் ‘பெப்பே’ என்று நக்கலித்துவிட்டது.]


செல்வன்

unread,
Feb 6, 2016, 2:35:02 AM2/6/16
to rajam, vallamai
ராஜம் அம்மா

நீங்க முட்டை பேலியோவுக்கு மாறினால் மிக்க நல்லது. ஏனெனில் அதில் நனிசைவ உணவில் கிடைக்காத பி12, ஒமேகா 3, முதல் தர புரதம், வைட்டமின் ஏ அனைத்தும் உண்டு

பிளாக்சீடில் ஒமேகா 3 இருக்கு என்றாலும் ஒரு முக்கிய விசயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒமேகா 3 என்பதில் இ.பி.ஏ மற்றும் டி.எச்.ஏ என இருவகை உண்டு

இதில் தாவரம் மூலம் கிடைக்கும் அனைத்துவகை ஒமேகா 3விலும் இ.பி.ஏ மட்டுமே உண்டு. டி.எச்.ஏ முட்டை,மீன், இறைச்சியில் மாத்திரமே கிடைக்கும். பாலில் சிறிதளவு உண்டு

ஆக ஒமேகா 3 பிளாக்சிடில் இருக்கு என்பது உண்மை என்றாலும் அதைலுள்ள ஒமேகா 3வினால் நமக்கு எப்பயனும் கிடையாது

வைட்டமின் ஏ அதுபோல புலால் உணவில் (ஈரல், முட்டை, பால், வெண்ணெய்) மாத்திரமே உன்டு. கீரை, காரட்டில் இருப்பதாக சொல்லபடுவது தவறு. தாவரங்களில் பீடா கரடின் மாத்திரமே உண்டு. பீடாகார்டினை வைட்டமின் ஏவாக மாற்ற பலரால் முடியாது (உதா: சுகர் நோயாளிகள், குழந்தைகள், தய்ராய்டு சிக்கல் உள்ளவர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்)

பேலியோவில் மார்பகம் முளைத்த ஆண், டெஸ்டெஸ்ட்ரோன் அளவு குறைவாக இருந்த ஆண், உயிரணு அளவு குறைவாக இருந்த ஆண் என பலரும் குணமடைந்துள்ளார்கள். பெண்களுக்கு ஹைப்போதய்ராய்டிசம், பிகாட் முதலானவை இப்போது மிக அளவில் உள்ளது. பாதி பெண்களை கேட்டால் பிகாட் என்கிரர்கள். ஆண்களுக்கு உயிரணு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் வரும்காலத்தில் ஜனதொகையே குறைந்தாலும் வியப்பில்லை எனும் அளவுக்கு தமிழக மக்களை இப்படிப்ப்ட்ட வியாதிகள் பிடித்து வாட்டி வதைத்து வருகின்றன. பலரும் பேலியோவால் நிவாரணம் பெற்று வருகிறார்கள். ஆனால் இனையம் இல்லாத மக்கள் என்ன செய்வார்கள் என நினைத்தால் தான் வருத்தமடிகிறேன்



செல்வன்

unread,
Feb 6, 2016, 10:48:03 AM2/6/16
to Neander Selvan, vallamai, mintamil
பேலியோ டயட் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதித்தா எழுதிய கட்டுரை

பன்றிக் கறி, மாட்டுக் கறி, பாலாடைக்கட்டி போன்ற கொழுப்பு உணவுகளைக் கன்னாபின்னாவென்று தின்னும் ஐரோப்பியர்களுக்கு ஏன் மாரடைப்பு வருவதில்லை? ஆனால் பயந்து பயந்து வாரத்துக்கு ஒருமுறை கால் கிலோ இறைச்சி எடுத்து (குடும்ப உறுப்பினர் ஐந்து பேர்!) சாப்பிடும் பாவாத்மாவான இந்தியர்களுக்கு ஏன் 50 வயதிலேயே மாரடைப்பு வந்து விடுகிறது? நீண்ட காலமாக எனக்குள் இருந்து வரும் சந்தேகம் இது. இதற்கு என் நண்பர் ஞான பாஸ்கர் ஒரு பதில் சொன்னார். ஐரோப்பியர்கள் தெரிந்தோ தெரியாமலோ Paleo Food உண்கிறார்கள். கொழுப்பே உணவு. சொன்னதோடு மட்டுமல்ல; வெறும் கொழுப்பையே உண்டு அவர் இப்போது ஒரு ஹாலிவுட் வில்லன் போன்ற தோற்றத்தைப் பெற்று விட்டார். அரிசி, கோதுமை, பழம் எதுவும் தொடுவதில்லை. வெறும் மாமிசம். பச்சை மாமிசம் என்று நினைத்து விடாதீர்கள்! சமைத்ததுதான். சைவர்களுக்கும் பேலியோ உணவு முறை இருக்கிறது என்கிறார்கள். உடம்பில் இருந்த அத்தனை கறியும் கரைந்து இப்போது ‘கிண்’ணென்று இருக்கிறார் ஞான பாஸ்கர். இது தொடர்பாக நியாண்டர் செல்வனின் கட்டுரைகளை நீங்கள் படித்துப் பார்க்கலாம். - சாரு நிவேதிதா


rajam

unread,
Feb 6, 2016, 12:41:35 PM2/6/16
to செல்வன், vallamai
///நீங்க முட்டை பேலியோவுக்கு மாறினால் மிக்க நல்லது. ஏனெனில் அதில் நனிசைவ உணவில் கிடைக்காத பி12, ஒமேகா 3, முதல் தர புரதம், வைட்டமின் ஏ அனைத்தும் உண்டு///

தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன், செல்வன். ஆனால் இந்தத் தொட்டில் பழக்கமும் படித்த குறள்களும் சமண உணவும் (- பால், சீனி வகைகள்) … எத்திக்ஸ் (ethics) என்ற பார்வையும் என்னை ஒட்டிக்கொண்டிருக்கின்றன. 

பி-12 மாத்திரை, பலவகை வைட்டமின் கலந்த மாத்திரை, எல்லாவகைக் காய்கறிகளும் … விழுங்கியும் மென்றும் வருகிறேன். பல நாட்களுக்குமுன்னால் Dr. Terry Wahls பற்றிப் படித்ததிலிருந்தே தானியங்கள் உண்பதில்லை. எப்போதாவது 2-மேசக்கரண்டியளவு பருப்பும் சோறும் சாப்பிடுவேன்.

2001-இலிருந்து நனிசைவ உணவு. மெல்ல மெல்லப் பழைய உடல்நலம் குறைந்துகொண்டே வந்திருக்கிறது-போல. இப்போது மிகவும் தளர்ந்தநிலை. பழைய நலத்தை மீட்கவாவது ஏதாவது செய்யவேண்டும்.

[முட்டையை எப்படி என்ன செய்வதென்று தெரியாது! நீங்களும் உங்கள் குடும்பமும் வந்துதான் கற்றுத்தரவேண்டும்!]

செல்வன்

unread,
Feb 6, 2016, 5:36:36 PM2/6/16
to rajam, vallamai

ராஜம் அம்மா,

எதிக்ஸ் அனைத்திலும் மேலான எதிக்ஸ் செல்ப் பிரசர்வேஷன், சர்வைவல்.

40வது வயதில் இதுபோல உடல் நலிந்த நிலையில் நாற்பது ஆண்டுகள் கடைபிடித்த சைவ உணவை கைவிட்டேன். நாற்பது ஆண்டுகால டேமேஜை மூன்று மாதங்களில் பேலியோ சரி செய்தது. இன்று உண்ணாத உயிரினம் உலகில் இல்லை. ஆனால் அதன்பின் தான் நாய், பூனை, சிங்கம், புலி மாதிரி உலகில் இருக்கும் இன்னொரு ஆம்னிவோர் மனிதன் என்பதை புரிந்துகொண்டேன். நம் இயல்பு ஆம்னிவோர் என ஆண்டவன் படைப்பு இருக்க, அதை மறுத்து "இல்லை நான் ஹெர்பிவோர்" என்றால் அது எப்படி எதிக்ஸ் ஆகும்?

வைட்டமிந் மாத்துரைகள் நீண்டகால நோக்கில் பலனற்றவை. இயற்கையுணவில் கிடைக்கும் வைட்டமின்களுடன் ஒப்பிடுகையில் செயற்கை வைட்டமின்கள் பலனற்றவை. ஏனெனில் இயற்கையில் வைட்ட்ச்மின்களுடன் கோ என்சைம்கள், கோ பேக்டர்கள் என அனைத்தையும் சேர்த்தே இயற்கை படைத்துள்ளது. அது ஒரு முழுமையான பாக்கேஜ். அதை உண்ணாமல் வெறும் வைட்டமினை மாத்துரை வடிவில் உண்பதால் பலனில்லை.

எஜ்ஜிட்டேரியந் பேலியோவில் இரண்டு வாரங்களில் நம்ப முடியாத மாற்றங்களை காண்பீர்கள். ஓரிரு மாதங்களில் உடல்நலநில் மிகுந்த முன்னேற்றம் காணப்படும்

முட்டையை சமைப்பது மிக எளிது. உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி உப்பு கலந்து (ஒரு முட்டைக்கு கால் ஸ்பூன் உப்பு போதும்), வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி போட்டு அனைத்தையும் நன்றாக கலந்தால் தோசை மாவு மாதிரி தயாராகிவிடும். வாணலியில் பட்டர் விட்டு வாணலி நன்ராக சூடாகும் வரை பொறுத்து தோசை மாதிரி அம்மாவை ஊற்றினால் சுவையான ஆம்லட் தயார்.

தினம் 3 முட்டையும், 2 கப் முழு கொழுப்பு பாலும் உண்டு, வேண்டும் அளவு பாதாம், பிஸ்தா மற்றும் உங்கள் தோட்ட கீரைகள், காய்களை உண்டால் உங்கள் உடல்நலந் மிக சிறப்பான முறையில் முன்னேறும்.

பேலியோவை பின்பற்றும் சமணர்களும் உண்டு...110 கிலோ எடை இருந்த சமணர் ஒருவர் இப்ப 87 கிலோவில் மகிழச்சியுடன் உள்ளார். நீங்களும் களமிறங்குங்கள். ஆர்கானிக் முட்டை , நார்மலான முழு கொழுப்பு பால் இரண்டும் போதும் உடல்நலநை முன்னேற்ற

செல்வன்

unread,
Feb 7, 2016, 11:09:24 AM2/7/16
to Neander Selvan


இந்த போட்டோவை போட்டதில் விஷயம் இருக்கிறது. ராமாவரம் தோட்டத்தில் வசிக்கும் (தலைவர் வீடேதான்) என்னுடைய கணவருடைய அண்ணன் வீட்டுக்கு அவருடைய பிறந்த நாள் கொண்டாட செப்டெம்பர் 25-ம் தேதி இரவு சென்றோம். அதாவது செப்-26 அவர் பிறந்தநாள். அங்கு செல்வதே எனக்கு ஒரு கோயிலுக்கு செல்வது போல்.

விஷயத்துக்கு வருவோம். அன்றைய தேதிக்கு என்னுடைய வெயிட் 94 கிலோ. மறு நாள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனை அனுமதி என நீண்டது. அக்டோபர் 22 தேதி முதல் Omprakash Viswanathan மற்றும் Neander Selvan அவர்களின் ஆலோசனை பெற்று ஒரு சிறிய மாற்றத்தை உணவில் கொண்டு வந்தேன். இன்றைக்கு நாலு மாத கூட ஆகவில்லை. என்னுடை உடலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் அளப்பரியன.

கிட்டத்தட்ட இருபது கிலோ வெயிட் குறைவு பெரிய அதிசயம் என்றால் பிறவற்றை சொல்கிறேன். கேளுங்கள். நடைப் பயிற்சி ஒரு மணி நேரத்துக்கும் மேல் செய்தாலும் அலுப்பு இல்லை. குறிப்பிட்ட படத்தில் நான் அணிந்திருக்கும் குர்த்தீ 5XL என்பதை வெளியில் சொல்ல இப்போது தயக்கம் இல்லை. ஏனெனில் இப்போது வெறும் XL லில் இருக்கிறேன். 42-இன்ச் ஜீன்ஸ் இப்போது 38". அதயெல்லாம் விட்டு விடலாம். புடவை கட்டினால் கொஞ்சம் சகிக்கிறது.

நேற்று ரத்த பரிசோதனை முடிவுகள் வந்தது. முன்று மாத சர்க்கரை கடந்த முறை 6.4 என இந்தது இப்போது என்ன மாயம் 5.4. வாவ், சந்தோஷம், ரொம்ப சந்தோஷம். தைராய்ட் பற்றி சொல்ல தெரியவில்லை. டாக்டரை பார்த்து விட்டு பகிர்வேன்.

இதை படிக்கும் யாரையேனும் தொட்டிருந்தால் நான் Tag செய்திருக்கும் ஓம்ப்ரகாஷ் மற்றும் நியாண்டர் செல்வன் அவர்களை அணுகுங்கள். கண்டிப்பாக மற்றம் உண்டு. சந்தோஷம் உண்டு. கொழுப்பு கொழுப்பாக உண்டு 'மத' கொழுப்பை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாமே




செல்வன்

unread,
Feb 7, 2016, 12:54:27 PM2/7/16
to Neander Selvan


Dear friends and Seniors,
Here it comes...first in ERODE!!!!!
"The Paleo-Diet Mess" named as
"SELVAM MESS"(c/o Karthick Driving Centre) exclusively for PALEO-DIET friends.

Available from: 07-02-2k16

1] Mutton/Chicken
300gms---- Rs.250
500gms---- Rs.350
1000gms---- Rs.700
2] Herbal Chicken 
300gms---- Rd.150

{Gingley/Coconut Oil for Cooking}

**(ONLY BASED ON ORDERS)**

Contact us @: 9842729790
9965529790

ஈரோட்டில் இரண்டு பேலியோ உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன :-)

செல்வன்

unread,
Feb 8, 2016, 1:47:38 AM2/8/16
to Neander Selvan
லேபிள்களை எப்படி படிக்கவேண்டும்?

ஒரு ஷாப்பிங் அனுபவ பதிவு



rajam

unread,
Feb 8, 2016, 2:29:07 PM2/8/16
to vall...@googlegroups.com, Neander Selvan
வாழ்த்து, செல்வன்!

தங்கள் பேலியோ உணவுமுறை பற்றிய அறிவுவிளக்கம் நம் தமிழருக்குப் பயன்படுவதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சி.

ச்சும்மா ஒரு fad மாதிரி இல்லாமல் … இந்த வகைக் கருத்துப் பகிர்வுகளில் … ஒவ்வொருவரும் (விருப்பமானால்) தாம் தாம் எந்தவகை  உணவுகளை உண்டுவந்தார்கள், இப்போது என்னவகைப் பேலியோ உணவுகளை உண்டு தம் உடல்நலத்தில் மேம்பாடு எய்தினார்கள் என்று குறிப்பிட்டுச் சொன்னால் என்போன்றோருக்கு மிகவும் உதவும். நன்றி.


rajam

unread,
Feb 9, 2016, 3:10:00 PM2/9/16
to vall...@googlegroups.com, செல்வன்
கடவுளே கடவுளே, நீ இருக்கியோ இல்லியோ தெரியாது … ஆனாலும் ஆத்திர அவசரத்தில் உன்னைக்கூப்பிட என் குடும்பம் என்னைப் பழக்கிவிட்டது. 

உடல்நலம் மிகவும் தளர்ந்த நிலையில், பிற(ர்) தாங்கல் இல்லாமல் நடக்கமுடியாத நிலையில் … பிறருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்ற கொள்கையின் பிடிப்பில் … 

பிள்ளைப்பிறப்புக்காக என்று பச்சை முட்டையைப் பாலில் கலந்து குடிக்கவைத்த நாட்களை நினைத்தால் இன்றும் குமட்டுகிறது. 

செல்வன் பரிந்துரைத்த ஆர்கானிக் முட்டை வாங்கிவிட்டேன். இன்னும் திறந்து பார்க்கக்கூடக் கையும் மனமும் கூசுது. 

மேக்கொண்டு என்ன செய்யப்போறேண்டு அந்த ஆண்டவனுக்கே தெரியாது. என் மகன் வந்து சமைத்துத்தரும்வரை அந்த முட்டைகள் என் குளிர்பதனப்பெட்டியில் இருக்கும். அடைகாக்கும் கோழியில்லாமல் அந்த உயிரைக்கொல்லும் என்னை எந்தக் கடவுள் மன்னிப்பார்? sigh.

செல்வன்

unread,
Feb 9, 2016, 7:46:29 PM2/9/16
to rajam, vallamai
மிக்க மகிழ்ச்சி அம்மா....முதல் முறை உண்பதுதான் கடினம். விரைவில் பழகிவிடும். அப்புறம் அதை விட மனமே வராது.

கோழிமுட்டையில் எந்த உயிரும் இல்லை. கடைகளில் விற்பதெல்லாம் குஞ்சில்லாத மலட்டு முட்டைகளே. அதில் எந்த பாவமும் நம்மை சேர்வதில்லை. எதிக்ஸுக்கும் முரணானது அல்ல

செல்வன்

unread,
Feb 9, 2016, 8:01:42 PM2/9/16
to mintamil, vallamai
100% பேலியோ உணவகம் ஈரோட்டில் துவக்கபட்டது :-)





rajam

unread,
Feb 9, 2016, 8:21:55 PM2/9/16
to செல்வன், vallamai
உண்மையில் அழுகிறேன், தேவனே. ஏன் எனைப் படைத்தாய் எனக்கும் சின்ன ஓர் உயிரைக் கொன்று தின்றே நான் வாழவேண்டும் என்ற நிலைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய் … என்று.

ஒரு பத்து மணித்துளிக்கூட பிற(ர்) தாங்கல் இல்லாமல் நின்று நடக்க இயலாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் … சோத்துக்குத் தண்டமில்லாமல் பூமிக்குப் பாரமில்லாமல் … பட்டெனெ விழுந்து பொட்டெனப் போகவேண்டுமே என்று ஒவ்வோர் மணித்துளியிலும் வேண்டிக்கொண்டிருக்கும் வேளை. 

வாங்கியாச்சு … செல்வன் பரிந்துரைத்த ஆர்கானிக் முட்டை. மகன் வந்து செய்துகொடுக்க நேரமில்லை. கையுறை அணிந்துகொண்டு நானே களத்தில் இறங்கினேன்:






எல்லாம் ஆச்சு, வயித்துக்குள்ளே போச்சு. பல மணி நேரமாச்சு.

செல்வன்

unread,
Feb 9, 2016, 9:51:07 PM2/9/16
to rajam, vallamai
மிக்க மகிழ்ச்சி அம்மா......இனி சில நாட்களில் நல்ல முன்னேற்றம் உடல்நிலையில் வரும்

துவக்கத்தில் சில நாட்களில் தவறாது கலோரிகளை அதிகமாக எடுக்கவும்

பாதாம்,பிஸ்தா பசியடங்கும் வரை
முட்டை 3 அல்லது 4
விருப்பட்ட அளவு தோட்ட காய்கறிகள். கிழங்குகள், சோயா, மக்காசோளம்,பேபிகார்ன் தவிர்க்கவும்
2 கப் முழுகொழுப்பு பால்

இவற்றை எடுக்கவும்....துவக்கத்தில் இவ்வுணவுக்கு மாறுவதால் தலைசுற்றல் இருக்கலாம். ஏனெனில் உடல் ஒரு புதிய உணவுமுறைக்கும், கொழுப்பின் அடிப்படையிலான எரிபொருளுக்கும் மாறுகிறது. தலை சுற்றினால், களைப்படைந்தால் காரட் இரண்டு,மூன்று எடுக்கவும். அல்லது தற்காலிகமாக ஒரு ஆப்பிள் அல்லது வாழை எடுக்கவும். சரியாகிவிடும். ஆனால் அதன்பின் பழங்களை தொடரவேண்டாம்.

தினமும் விரும்பும் அளவு வெள்ளரிக்காய், அவகாடோ போன்ரவற்றை எடுக்கவும்.

ஒரு வாரத்தில் டயட் பழகியபின் வியத்தகு மாற்றங்களை நிச்சயம் காண்பீர்கள்.

தேமொழி

unread,
Feb 9, 2016, 10:30:22 PM2/9/16
to வல்லமை

நான் போனாலும் சாப்பிட ஏதோ இரண்டு மூன்று ஐட்டம் இருகிறதே.!!!!

செல்வன்

unread,
Feb 10, 2016, 12:23:05 PM2/10/16
to vallamai

2016-02-09 21:30 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் போனாலும் சாப்பிட ஏதோ இரண்டு மூன்று ஐட்டம் இருகிறதே.!!!!

ஆம். சைவர்களுக்கு சைவபேலியோவும் சேர்த்தே உள்ளது


--

rajam

unread,
Feb 10, 2016, 2:12:41 PM2/10/16
to vall...@googlegroups.com

On Feb 9, 2016, at 6:50 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

மிக்க மகிழ்ச்சி அம்மா......இனி சில நாட்களில் நல்ல முன்னேற்றம் உடல்நிலையில் வரும் 

நல்ல எண்ணத்துக்கும் நம்பிக்கையூட்டலுக்கும் மிக்க நன்றி, செல்வன். 

ஆனா … தெரியலீங்க. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேத்து வெண்ணெய் பயன்படுத்தினேன், அதூஉம் ஒரு சின்னூண்டு கட்டி, ஒரு டீஸ்பூன்-தான். அந்தச் சமையல் வாடை வீட்டிலிருந்து இன்னும் போகவில்லை. அந்த நெடியால் தலைவலி. 

ஃபிலடெல்பியாவில் இருந்த காலங்களில் … வாரம் முழுக்க அலுக்கச்சலிக்க வேலை பார்த்துவிட்டு வார இறுதியில் ஆற அமர ஏதாவது சமைத்துச் சாப்பிடலாம் என்றால் … பிற அப்பார்ட்மென்ட்களிலிருந்து முட்டையும் பேக்கனும் சமைக்கும் நெடி வந்து பெருந்தலைவலி கொடுத்து என் சமையலின் நறுமணத்தை மறைத்துச் சுவையைக் கெடுத்துவிடும். அண்மைக் காலங்களில் … மதிய உணவாக … மணமிக்க சுவைமிக்க எலுமிச்சை ரசம் கலந்த சோறு எடுத்துக்கொண்டு போவேன். மேசைப்பக்கம் பிறர் உண்ணும் ஊனுணவின் நெடி என் எலுமிச்சைரசச்சோற்றைச் சுவைக்கமுடியாமல் செய்துவிடும். ஒரு start-up company-யில் ஒரே ஒரு பெரிய அறையும் ஒரு சின்ன அறையும்தான். அந்தச் சின்ன அறையில் இருந்த மின்கலத்தில் ஒருவர் squid உணவைச் சூடுபடுத்தி … அலுவலகம் முழுவதும் பரவிய அந்த நெடியை அமெரிக்கர்களாலேயே தாங்க முடியவில்லை! அன்றைக்கு என்று பார்த்து board meeting! பிறகு ஒரு மாதிரியான விதி வந்தது — பிறரைப் பாதிக்கும் நெடி மிகுந்த உணவுகளைப் பொதுவிடத்தில் பயன்படுத்தக்கூடாது என்று!

இங்கே வீடுவிற்கும் தரகர்கள் வரும்போதெல்லாம் புகழுவார்கள் — பிற இந்தியர் வீடுகளுக்குள் நுழைந்தாலே எண்ணெய், மசாலா, பிரியாணி வாடை முகத்தில் அடிக்கும். சுவர்களில் கறை படிந்திருக்கும். இங்கே அப்படியில்லையே என்று சொல்லி வியப்பார்கள். நேற்றிலிருந்து இன்னும் அந்த வெண்ணெய் நெடி போகவில்லை. ஊதுவத்தியைக் கொளுத்திவைத்திருக்கிறேன். அதுவே தலைவலி கொடுக்கிறது.

எனக்கிருக்கும் சைனஸ் சிக்கலால் நுகர்வுணர்வு (smelling sense) இருக்காது என்று மருத்துவர் சொன்னார். ஆனால், தாவரமற்ற எதையும் நுகர என் உணர்வு மறுக்கிறதே, என் செய்வேன்.

இன்றைக்கு இன்னும் பசிக்கவில்லை. காலையில் நாலு ப்ரசில் கொட்டை (brazil nuts) சாப்பிட்டுவிட்டு இலக்கண ஆராய்ச்சியில் உட்கார்ந்திருக்கிறேன். நேற்று முட்டை பயன்படுத்திய தோசைக்கல்லைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. எப்படி இந்தச் 'சைவ பேலியோ’ விரதத்தைத் தொடர்வேன் என்று தெரியவில்லை. 

பார்ப்போம். நம்பிக்கையின்றேல் எதுவும் நடக்காது, இல்லீங்களா!




துவக்கத்தில் சில நாட்களில் தவறாது கலோரிகளை அதிகமாக எடுக்கவும்

பாதாம்,பிஸ்தா பசியடங்கும் வரை
முட்டை 3 அல்லது 4
விருப்பட்ட அளவு தோட்ட காய்கறிகள். கிழங்குகள், சோயா, மக்காசோளம்,பேபிகார்ன் தவிர்க்கவும்
2 கப் முழுகொழுப்பு பால்

இவற்றை எடுக்கவும்....துவக்கத்தில் இவ்வுணவுக்கு மாறுவதால் தலைசுற்றல் இருக்கலாம். ஏனெனில் உடல் ஒரு புதிய உணவுமுறைக்கும், கொழுப்பின் அடிப்படையிலான எரிபொருளுக்கும் மாறுகிறது. தலை சுற்றினால், களைப்படைந்தால் காரட் இரண்டு,மூன்று எடுக்கவும். அல்லது தற்காலிகமாக ஒரு ஆப்பிள் அல்லது வாழை எடுக்கவும். சரியாகிவிடும். ஆனால் அதன்பின் பழங்களை தொடரவேண்டாம்.

தினமும் விரும்பும் அளவு வெள்ளரிக்காய், அவகாடோ போன்ரவற்றை எடுக்கவும்.

ஒரு வாரத்தில் டயட் பழகியபின் வியத்தகு மாற்றங்களை நிச்சயம் காண்பீர்கள்.
2016-02-09 19:21 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
உண்மையில் அழுகிறேன், தேவனே. ஏன் எனைப் படைத்தாய் எனக்கும் சின்ன ஓர் உயிரைக் கொன்று தின்றே நான் வாழவேண்டும் என்ற நிலைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய் … என்று.

ஒரு பத்து மணித்துளிக்கூட பிற(ர்) தாங்கல் இல்லாமல் நின்று நடக்க இயலாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் … சோத்துக்குத் தண்டமில்லாமல் பூமிக்குப் பாரமில்லாமல் … பட்டெனெ விழுந்து பொட்டெனப் போகவேண்டுமே என்று ஒவ்வோர் மணித்துளியிலும் வேண்டிக்கொண்டிருக்கும் வேளை. 

வாங்கியாச்சு … செல்வன் பரிந்துரைத்த ஆர்கானிக் முட்டை. மகன் வந்து செய்துகொடுக்க நேரமில்லை. கையுறை அணிந்துகொண்டு நானே களத்தில் இறங்கினேன்:


<IMG_5380.jpeg>


<IMG_5382.jpeg>

<IMG_5385.jpeg>

எல்லாம் ஆச்சு, வயித்துக்குள்ளே போச்சு. பல மணி நேரமாச்சு.



On Feb 9, 2016, at 4:46 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

மிக்க மகிழ்ச்சி அம்மா....முதல் முறை உண்பதுதான் கடினம். விரைவில் பழகிவிடும். அப்புறம் அதை விட மனமே வராது.

கோழிமுட்டையில் எந்த உயிரும் இல்லை. கடைகளில் விற்பதெல்லாம் குஞ்சில்லாத மலட்டு முட்டைகளே. அதில் எந்த பாவமும் நம்மை சேர்வதில்லை. எதிக்ஸுக்கும் முரணானது அல்ல


rajam

unread,
Feb 10, 2016, 2:14:47 PM2/10/16
to vall...@googlegroups.com
தேமொழீ, தமிழக முதல் Donald Trump யாரு-னு இப்பொ தெரியுதில்லே! ;-)


செல்வன்

unread,
Feb 10, 2016, 5:33:45 PM2/10/16
to vallamai
ராஜம் அம்மா,

உங்களுக்கு சைனஸும் இருக்கா? எனக்கு 20 ஆண்டுகளாக இருந்த தொடர் சைனஸ் பேலியோவில் 3 மாதங்களில் விலகி ஓடியது. எனக்கு மட்டுமல்ல குழுவில் பலருக்கும் சைனஸ் போய்விட்டது. அதனால் இப்ப தேதியை எழுதி வைத்துகொள்ளுங்கள். வரும் தமிழ்புத்தாண்டில் உங்களுக்கு சைனஸ் இருக்காது :-)

வெண்ணெயில் சற்று வாசம் வரும். அதை தவிர்க்கவேண்டுமெனில் இந்திய கடைகளில் கிடைக்கும் நெய்யை பயன்படுத்தலாம். நெய்யில் வாசம் சுத்தமாக வராது. அல்லது காஸ்ட்கோவில் கிடைக்கும் ஆர்கானிக் வர்ஜின் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

முட்டை எடுப்பதால் பி12 மாத்திரை இனி அவசியமே இல்லை. தினமும் முட்டையும், பாலும் எடுக்க துவங்கியபின் பி12 மாத்திரைகளை தலையை சுற்றி போட்டுவிடலாம்

எங்கள் தங்கதலைவர் ட்ரம்ப் நேற்று தேர்தலில் வெற்றி பெற்றார். இலரி அம்மையார் தோற்றார். அந்த மகிழ்ச்சியை இன்னமும் கொன்டாடும் வகையில் ட்ரம்ப்பின் புகைப்பட்த்தை இனைக்கிறேன்



rajam

unread,
Feb 10, 2016, 7:30:58 PM2/10/16
to vall...@googlegroups.com
அன்புநிறை செல்வன், 

///உங்களுக்கு சைனஸும் இருக்கா? ///

அட! சைனசா!! இணைத்துள்ள படத்தில் காணும் என் மூக்குறிஞ்சிகளைப் பார்க்கவும். இது இன்று காலையிலிருந்து பிற்பகல்வரை சேர்ந்த சொத்து!!


இன்னும் எவ்ளோ இருக்கு! இதெல்லாம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடியாகத் தமிழகத்தில் வாழ்ந்த நாட்களில் இருந்தும் வெளிப்படாதது, அறியாதது. அப்போதிலிருந்தே, அதாவது பிறப்பிலிருந்தே தொடர்ந்திருக்கும் முதுகெலும்பு வளைவு (scoliosis), சப்பைப்பாதம் (flat foot), ஒற்றைத்தலைவலி (migraine) … போன்ற சொத்துக்களையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் … கூனும் குறளுமாக வெளித்தோற்றம் அமையாமல் கோயில் சிலை போல உடலழகு அமைந்துவிட்டதால் கலியாணச் சந்தையில் பயங்கர டிமேன்ட்! பிறகும் என்ன எதுவும் தெரியாத நிலை. அதோடு … அட ஒரு பொம்பிளைதானே, பெத்துக்கொடுத்தாப் போதும் என்ற நிலை. இங்கே தனியாக வந்து 50+ வயதில்தான் இந்தக் குறைகளைப் பற்றி மருத்துவர்கள் சொல்லித் தெரிந்துகொண்டேன். ஏன் இந்த scoliosis-ஐ உங்கள் ஊரில் உன் சிறுவயதில் சரிசெய்யவில்லை என்று மருத்துவர்கள் கேட்டபோது … ஹ? என்று வியந்து … அம்மாவைக் கூப்பிட்டுக் கேட்டேன். 'இதெல்லாம் எனக்கென்ன தெரியும், நீ நன்னாத்தானே இருந்தே’ என்றார்கள்! இங்கேயோ மருத்துவர் சொன்னார் … அந்த scoliosis-ஐ அன்றைக்கே (pre-puberty) சரிசெய்திருந்தால் இன்றைக்கு உன் நிலை இப்படி இருக்காது! 

சரி சரி … சிவபக்தராவணன் வைணவச் சீதையின்மேல் மோகம் கொண்டிராவிட்டால் … … … .

++++++++++

செல்வன், சமையலறையின் வெண்ணெய் வாடை இன்னும் வயித்தைக் குமட்டுகிறது. இன்றைக்குத் தேங்காயெண்ணெயைப் பயன்படுத்தினேன். ஒரு முட்டைக்குமேல் செல்ல முடியவில்லை. கீரை தக்காளி என்று பலதும் திணித்தேன். வயிறு திம்மென்று இருக்கிறது. 


++++++++++

உங்கள் "த்ங்கதலைவர் ட்ரம்ப்” என் மகனுக்கும் அணுக்கமே! 



rajam

unread,
Feb 12, 2016, 9:05:14 PM2/12/16
to vall...@googlegroups.com
நம்ம பேலியோ ஆசான் அவர்களுக்கு வணக்கம். 

செல்வன், பேலியோ உணவுமுறைகளுக்காக இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது … உங்கள் 

Thanksgiving day feast 2015 வீடியோ தட்டுப்பட்டது (https://www.youtube.com/watch?v=U7-lHlN8ElA).
என்ன இப்டிச்சொல்லியிருக்கீங்க — சர்க்கரைவள்ளிக்கிழங்கு அமெரிக்காவில் தோன்றியது என்று! நெசமாலுமா சாமீ!!

கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் சொல்லப்பட்ட வள்ளிக்கிழங்கு எந்தவகையைச் சார்ந்ததோ??? வேட்டுவ முருகனைச் சொக்கவைத்த வள்ளியம்மை நம்ம ஊர்ப்பொண்ணுதானே?

++++++++++

இங்கே இன்று என் 4-ஆம் நாள் பேலியோ விரதம். இரண்டாம் நாள் இரவு தண்ணி தண்ணியா 3-பாட்டில் (மொத்தம் 1500-மி.லி) ஓரிரவில் குடிக்கவேண்டிய தாகம்! தொண்டை அப்படி வத்தியிருந்தது. (வாய்விட்டுக்கத்திச் சண்டைபோட வீட்டில் யாருமில்லே!) எல்லாம் அந்த கோமாதாவின் வெண்ணெயின் தயவு-போல! வெண்ணெயை விட்டுத் தேங்காயெண்ணெய்க்குத் தாவி, நேற்றிரவு அப்படியில்லை. இன்றைக்கு ஆம்லெட்டுக்கு 1/2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய். இன்றிரவு பார்ப்போம்.

காலையில் ஒரு கோப்பைப்பால், 5-ப்ரசீல் கொட்டை (brazil nuts). பொறவு நம்ம சேசாத்திரி ஐயா பரிந்துரைத்த சுருள்பாசி (spirulina tablet) மாத்திரை ஒண்ணே ஒரு கண்ணு. மதியம் ஒரு ஆம்லெட் — ஏகப்பட்ட காய்களில் பொதியப்பட்ட ஒரு முட்டை. 

இன்னும் பசிக்கலே. ஆறு மணியாச்சு. தொல்காப்பியத்தோடு உறவாடிக்கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கு இரவு … 2-மேசைக்கரண்டி தயிர்ச்சோறு, probiotic எலுமிச்சை ஊறுகாய் (வீட்டில் போட்டது), 1/2 ஆவக்காடோ, தட்டும் வாயும் கொள்ளும் அளவுக்குச் சூப்பர் கீரை (spinach, kale, bokchoy).

வேறென்ன வேண்டும்! மங்களமாய் வாழவேண்டும்!

++++++++++

அண்மைக்காலத்தில் உறவாடவந்திருக்கும் நெஞ்சுப் பதைப்பு (https://en.wikipedia.org/wiki/Atrial_fibrillation ) நின்றாலே போதும் என்று இருக்கிறது, செல்வன். இது … நூல்களிலும் இணையத்திலும் காணும் தமிழ்மொழி/தமிழிலக்கியம் பற்றிய செய்திகளைப் படிப்பதால் வரும் கோளாறா அல்லது மரபணுச்சிக்கலா என்று தெரியவில்லை. ஆனாலும் … இது ரொம்பவே தொல்லை. இரவில் தூங்கவே முடிவதில்லை. பேலியோவை நம்பியிருக்கிறேன்.

பார்ப்போம். நல்லதே வேண்டுகிறேன்.


On Feb 10, 2016, at 2:33 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

செல்வன்

unread,
Feb 12, 2016, 10:16:16 PM2/12/16
to vallamai
வணக்கம் ராஜம் அம்மா

பிரெசில் நட்ஸ் அதிகமாக எடுக்கவேண்டாம். அதில் செலனியம் மிக, மிக அதிகம். ஒரு நாளுக்கு ஒன்று போதுமானது. ஒன்று எடுத்தால் மிக நல்லது.

உங்கள் டயட் துவக்கம் நன்றாக உள்ளது. பால், முட்டை, காய்கறிகள், அவகாடோ,கீரைகள் நல்ல துவக்கம்..கணக்கு போட்டால் சுமார் 30 கிராம் புரதம் வருகிறது. இன்னும் 20 கிராம் புரதம் இருந்தால் நல்லது. இரவு பால் இன்னொரு கப் எடுங்கள். மெதுவாக துவக்குவோம். அவசரமில்லை. எடுத்த எடுப்பில் முழு பேலியோவுக்கு மாறுவது சிரமமானது தான்.

அட்ரியல் ஃபைப்ரிலேசன்...மிக சிக்கலானது. பி12, அனிமியா எனும் இரும்புசத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் வருவது. 12 ஆண்டுகள் வீகனாக இருந்ததால் பி12, இரும்புசத்து குறைபாடு நிறைய இருக்கும் என கருதுகிறேன். வைட்டமின் மாத்திரைகளால் உடலில் இரும்புசத்து,பி12 அளவுகள் அதிகரிக்குமே ஒழிய இயற்கையான மூலசத்துக்கள் அளிக்கும் பலனை அவை அளிக்குமா என்பது சந்தேகமே. ஆனால் இபோது எடுக்கும் முட்டையில் இரும்புசத்து உள்ளது.பி12 உள்ளது.

அத்துடன் மக்னிசியம் எடுப்பது இதற்கு நிவாரணமளிக்கும். மக்ன்சியம் பாதாமில் ஏராளமாக உள்ளது. முடிந்தவரை பாதாம் ஊறவைத்து தோலுடன் எடுக்கவும். எத்தனை எடுக்க முட்கிறதோ எடுக்கவும். பாதாமை பாலுடன், அல்லது வேறு எந்த உணவுடனும் எடுக்கவேண்டாம். பாதாம் உண்பதற்கு 2 மணிநேரம் முன்/பின் நீரையன்றி வேறு எதுவும் எடுக்கவேன்டாம். பாதாமில் புரதமும் உள்ளது. பலனளிக்கும்.

மைக்ரேனுக்கும் பாதாமில் உள்ள மக்னிசியம் நல்லது.

நம் இலக்கியங்களில் உள்ல வள்ளிகிழங்கு என்பது வேறாக இருக்கலாம். சர்க்கரைவள்ளிகிழங்கை சீமை சர்க்கரைவள்ளிகிழங்கு என்றே அழைப்பது பழைய வழக்கம். அதன் பூர்விகம் தென்னமெரிக்காவே

அன்புடன்
செல்வன்

rajam

unread,
Feb 13, 2016, 10:10:23 PM2/13/16
to vall...@googlegroups.com, செல்வன்
இந்த முட்டைகள் எப்படி, செல்வன்? Organic Pasture Raised Local Eggs என்று சொல்கிறார்களே. மத்த free range ஆர்கானிக் முட்டைகளுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்? Whole Foods சரக்கு. போனமுறை Clover Organic Large bRown Omega 3 eggs வாங்கினேன். Costco  போக எனக்கு வசதியில்லை — unless I use Google Express.


நன்றி,
ராஜம்

செல்வன்

unread,
Feb 14, 2016, 2:09:49 AM2/14/16
to rajam, vallamai

2016-02-13 21:10 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
இந்த முட்டைகள் எப்படி, செல்வன்? Organic Pasture Raised Local Eggs என்று சொல்கிறார்களே. மத்த free range ஆர்கானிக் முட்டைகளுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்? Whole Foods சரக்கு. போனமுறை Clover Organic Large bRown Omega 3 eggs வாங்கினேன். Costco  போக எனக்கு வசதியில்லை — unless I use Google Express.


காஸ்ட்கோ முட்டைகளை விட இது மேல் அம்மா.

ஏனெனில் "பேஸர் ரைஸ்" என்பது ப்ரிரேஞ்ச் நாட்டுகோழி முட்டை. இருப்பதிலேயே சிரப்பானது. ஆர்கானிக்கை விட பெஸ்ட்.



--

தேமொழி

unread,
Feb 14, 2016, 2:39:43 AM2/14/16
to வல்லமை
அம்மா ... ஒவ்வொரு முட்டையும் எவ்வாறு வேறுபடுகிறது எனத் தெரிய விரும்பினால்....


நம்பிக்கைக்குரிய தளம் தரும் செய்தி.


..... தேமொழி

rajam

unread,
Feb 14, 2016, 12:03:17 PM2/14/16
to vall...@googlegroups.com, Themozhi, செல்வன்
அன்புள்ள தேமொழி, செல்வன் இருவருக்கும் ... முட்டைகளைப் பற்றித்தெரிந்துகொள்ள உதவும் தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி. தேமொழி கொடுத்த சுட்டிக்குச் சென்று படிக்கிறேன்.

அன்புடன்,
ராஜம்

செல்வன்

unread,
Feb 15, 2016, 11:33:09 PM2/15/16
to Neander Selvan, vallamai, mintamil
வந்துவிட்டது

பேலியோ மசாலா தூள் :-)



Banukumar Rajendran

unread,
Feb 15, 2016, 11:40:32 PM2/15/16
to மின்தமிழ், Neander Selvan, vallamai
செல்வன், இந்த மசாலா படத்தை விந்தை உலகம் என்ற இழையில் பதித்திருக்கவேண்டும்.

பேலியோ பாக்கட்டில் Expiry date போட்டிருக்கிறது! :-)


இரா.பா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Feb 15, 2016, 11:43:34 PM2/15/16
to மின்தமிழ், Neander Selvan, vallamai
செல்வன், இது சரியான தருணம்! தற்போது உள்ள வேலையைத் தூக்கிப்போட்டுவிட்டு, தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒரு பேலியோ உணவகத்தை திறந்துவிடுங்கள். சீக்கிரத்தில்
கோட்டீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்!

:-))

இரா.பா

rajam

unread,
Feb 16, 2016, 12:14:02 AM2/16/16
to vall...@googlegroups.com, Neander Selvan
சந்தையியல் எப்படியெல்லாம் வெளுத்துக்கட்டும் என்பதுக்குச் சரியான நிகழ்காலத்துவம்! விரைவில் Forbes இதழில் "விசுகான்சின் பேட்டையொரு வெற்றித்தளம்” என்ற கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

"Best before 12 Months from the date of packing” ஆ, அப்புடீனா என்ன? packing பண்றதுக்கு 12 மாசம் முன்னாடியே யூஸ் பண்ணணுமா? ;-) “From the date of packing” to the "date of marketing" to the "date of shelving” to" purchasing by customers" … என்ற supply chain management இங்கே ஒறங்கப்போயிட்டதோ!

இதை நல்ல தமிழில் சொல்லி என்னைப்போன்ற அரைகுறைகளுக்கு அறிவுறுத்தியிருக்கலாம்!



You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/3mMZSf-nrOI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 16, 2016, 12:35:37 AM2/16/16
to Banukumar Rajendran, மின்தமிழ், vallamai

2016-02-15 22:43 GMT-06:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
செல்வன், இது சரியான தருணம்! தற்போது உள்ள வேலையைத் தூக்கிப்போட்டுவிட்டு, தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒரு பேலியோ உணவகத்தை திறந்துவிடுங்கள். சீக்கிரத்தில்
கோட்டீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்!


ஐயா :-)

பணம் எல்லாருக்கும் அவசியம் தான். எனக்கும் தான் :-) ஆனால் பேலியோவை பணம் சம்பாதிக்கும் கருவியாக நான் பயன்படுத்தமாட்டேன். தமிழக மக்கள் நோய்,நொடியின்றி வாழ உதவ முடிவதே எனக்கு போதுமானது.



--

செல்வன்

unread,
Feb 16, 2016, 12:37:29 AM2/16/16
to Banukumar Rajendran, மின்தமிழ், vallamai
On Mon, Feb 15, 2016 at 10:40 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:
செல்வன், இந்த மசாலா படத்தை விந்தை உலகம் என்ற இழையில் பதித்திருக்கவேண்டும்.

பேலியோ பாக்கட்டில் Expiry date போட்டிருக்கிறது! :-)




மசாலா எல்லாம் எக்ஸபியர் ஆகுமல்லவா பானுகுமார் ஐயா? :-)

 

செல்வன்

unread,
Feb 16, 2016, 12:43:16 AM2/16/16
to rajam, vallamai

2016-02-15 23:13 GMT-06:00 rajam <ra...@earthlink.net>:
சந்தையியல் எப்படியெல்லாம் வெளுத்துக்கட்டும் என்பதுக்குச் சரியான நிகழ்காலத்துவம்! விரைவில் Forbes இதழில் "விசுகான்சின் பேட்டையொரு வெற்றித்தளம்” என்ற கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.


பேலியோ சினிமா கூட வெளிவர இருப்பதாக தகவல் அம்மா :-)

தமிழகமெங்கும் பல பேலியோ உனவகங்கள்,பேலியோ ஹோம் டெலிவரி பிசினஸ்கள் திரக்கபட்டு வருகின்றன

பேலியோ எண்ணெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்னெய் பிசினஸ்கள் சக்கைபோடு போடுகின்றன. மக்கள் நல்லபடி தொழில் செய்து சம்பாதித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான் என்பதால் அதை எல்லாம் ரசித்துகொன்டிருக்கிறேன் :-)


--
It is loading more messages.
0 new messages