On Monday, 28 November 2016 14:33:17 UTC+5:30, anbulaham wrote:............ பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார்.
வள்ளுவர் காலத்தில் ‘கழகம்’ என்ன பொருளில் பயன்பாட்டில் இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
பேர் பொருத்தம்தான் :)
கழகம் - எனக்கு முதலில் விளக்கியவர் கம்பராமன் ஐயா
(எஸ். கே. ராமராஜ ரெட்டியார், கோபாலையரும் இவரும்
கல்லூரி தோழர்கள். புருஷோத்தம நாயுடு மாணவர்கள். )
கழகத்துக்கு நல்ல பெயர் கொடுத்தது கம்பன்.
’கலை பயில் கழகம்’. பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
நா. கணேசன்
பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.
முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள்.இரா.பா
குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.கழகம் எனும் சொல் குறளில் சூதாடும் இடம் எனும் பொருளில் கையாளப்படுகிறது
ரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.
முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள்.இரா.பாசங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கியத்தில் ’சங்கம்’பரிபாடலில் ’சங்கம்’ கால அளவைக் குறியீடாக இடம் பெறுகிறது.’கழகம்’ இருப்பதாகத் தெரியவில்லை. ’கூட்டம்’ உள்ளது.மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன
On Wednesday, 30 November 2016 20:33:35 UTC+5:30, N. Ganesan wrote:2011-ல் எனது மடல்: (கழகம் என்ற சொல்லுக்கு வாழ்வு கொடுத்தது கம்பன் என்பது பற்றி.தமிழ் தேசியர்கள் கழகம் என்றுள்ள கக்ஷிகட்கு என்ன பொருள் கொண்டுள்ளனர் என்பதும் பார்க்கணும்.)
கழகத்துக்கு நல்ல பெயர் கொடுத்தது கம்பன்.
’கலை பயில் கழகம்’. பின்னர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
சடகோபரந்தாதி பாடிய கம்பருக்கும் முன் சடகோபர் நற்பெயரளித்துத்தம் பனுவல் வாயிலாக நல்வாழ்வு கொடுத்துள்ளாரே !குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவிதமை தகுவார் பலருளர்,கழக மேறேல் நம்பீ! உனக்கும் இளைதே கன்மமே ![எம் குழாம்தனுள் புக வேண்டா, நம்பீ,பேரழகு படைத்த பெண்டிர் பலர் உளர்,அவர்பால் புகுவீர் ]
தேவ்
On Thursday, 1 December 2016 20:38:58 UTC+5:30, N. Ganesan wrote:கழகம் - சங்க இலக்கியத்தில் உள்ளது. 2 குறள்கள் போன்ற பொருளிலே.
அவ்வாறாயின் முதற்கழகம், இடைக்கழகம், கடைக்கழகம் எனும் பெயர்களுக்கு வாய்ப்பில்லைஎனத் தெரிகிறது.
Cowrie என்னும் ஆங்கில வார்த்தை - கவறி. Cowrie shells used as dice, https://en.wikipedia.org/wiki/Cowryஉருவாக்கம் காணமுடியும்.மேலும், சிவனுக்கு கவர்தி (Kavardha/Kabardin) பெயரும்: https://www.youtube.com/watch?v=wCkpO6OFDSw
kapardin - कपर्दिन् சரியான உச்சரிப்பு.கபர்திநி - அம்பிகைஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்திநி, ரம்ய கபர்திநி, சைலஸுதே !சோழி ஹிந்தியில் கௌடி ஆகி Cowry என ஆங்கில வடிவு பெறுகிறது என நினைக்கிறேன்.எப்படி Cowrieyயைக் கபர்தியோடு பொருத்துகின்றனர் புரியவில்லை
தேவ்
On Monday, November 28, 2016 at 7:50:03 PM UTC-8, இரா.பானுகுமார் wrote:பரஞ்சோதியார் தமது பாடலில் ' கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து' என்றுதான் எழுதியுள்ளார். பல அறிஞர்கள் தலைக்கழகம், இடைக் கழகம், கடைக் கழகம் என்றுதான் எழுதியுள்ளார்கள். சங்கம் எனும் சொல் சங்கமம் என்ற வடசொல்லில் இருந்து வந்தது என்று அதைத் தவிர்த்துள்ளார்கள். அவ்வாறெனில், வையாபுரி அவர்கள் ஏற்படுத்திய பிழையை நாம் மாற்ற, கழக இலக்கியங்கள் என்றே கூறவேண்டும்.
முன்னர் பழம்பாடல்களை ”பாட்டும், தொகையும்” என்றே அழைத்து வந்தார்கள்.இரா.பாசங்கம், இலக்கியம், பாட்டும், தொகையும் இவற்றையெல்லாம் தமிழ்ச் சங்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது தொல்காப்பிய உரையாசிரியர்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் அழகாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றை காலவாரியாகப் பகுத்தாராய்ந்த ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் சங்க இலக்கியம்: பாட்டும் தொகையும் (1939) என முழுச் சங்க நூல்களின் அச்சுப்புஸ்தகத்துக்கு பெயரிட்டழைத்தார். ”தாவிட சங்கொ” என கி.பி. 470-ல் வஜ்ரணந்தி தலைமையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையும் அவர் தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
On Sunday, 4 December 2016 17:42:14 UTC+5:30, Dev Raj wrote:‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது ?தனி மடல் தகவல் ஒன்று .திராவிடப் பிரகாசிகை -”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினுநன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லை
எனத் தெரிகிறது.
சங்கம் நிறுவித் தொண்டாற்றியதில் பவுத்த - சமணர் பங்களிப்பு இருந்திருக்குமானால்ஐம்பெருங்காப்பியங்களில் அல்லது பிற பவுத்த - சமண நூல்களில் கட்டாயம் குறிப்புஇருக்கும் . அவற்றில் இதற்கான ஆதாரம் உள்ளதா எனவும் ஆராய வேண்டும்.தமிழ்ச்சங்கம் பற்றிய குறிப்பு சீவக சிந்தாமணியில் இருப்பதாகத் தெரியவில்லைதேவ்
On Sunday, December 4, 2016 at 6:27:52 AM UTC-8, Dev Raj wrote:On Sunday, 4 December 2016 17:42:14 UTC+5:30, Dev Raj wrote:‘திராவிடப் பிரகாசிகை’ தமிழ்ச் சங்கம் , சங்க இலக்கியம் குறித்து என்ன சொல்கிறது ?தனி மடல் தகவல் ஒன்று .திராவிடப் பிரகாசிகை -”தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென்னு மூன்று சங்கங்களினுநன்று ஆராயப்பட்டது. இச்சங்க மூன்றினையும் நிறுவியவர் பாண்டியர்கள்” என்றும் ,’கடைச்சங்க இலக்கியம்’ எனும் தலைப்பிலேயே சங்கவிலக்கியத்தை விளக்கியுள்ளது.இத்தகவலின்படி சபாபதி நாவலர் அவர்கள் கழகமெனும் சொல்லாக்கத்தை ஆதரிக்கவில்லைஎனத் தெரிகிறது.சங்கத்தைக் கழகம் என்றது சேலத்தில். இது சபாபதி நாவலர் காலத்திற்கு மிகப் பிற்காலம். சபாபதிநாவலர் இறந்து 50, 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கம் கழகம் எனலாம் என்ற கருத்து பாவாணருக்குஏற்பட்டது.திராவிடப் பிரகாசிகையில் 14 இடங்களில் சங்க இலக்கியம் என்று குறிப்பிடுகிறார் சபாபதி நாவலர் (1845/6 - 1903).யோசித்துப் பார்த்தால் ஆறுமுக நாவலர் - சபாபதி நாவலரின் குரு - சங்க இலக்கியம் எனப் பயன்படுத்தியிருப்பார்கள்.தேடவேண்டும்.
Satura-aharadi, எனக்கு எப்போதும் ஒரு கேள்வி உண்டு. தமிழில் ஹகரம் இல்லை இருந்தும் ஏன் இப்படி ககரத்தை ஹகரமாக பலுக்கி தமிழைக் கொல்லுகிறார்கள். ஏன் தமிழர்கள் இப்படி முட்டாளாக இருக்கிறார்கள்? அகநானுறும் இப்படி ahanaanuru என்று தவறாக பேராசிரியர்களால் எழுதவும் பலுக்கவும் படுகிறது.ஆரோதன்
அன்பின் கணேசன்://சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்
ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு
முடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு.
//இது சற்று விளங்கவில்லை.சீரங்கம் எங்குள்ளது?

10 நூற்றாண்டுக்கு முன் எழுத இலக்கியங்கள் எதைப் பேசுகின்றன?தெரிந்து கொள்ளவே இக்கேள்வி.நா.கண்ணன்
On Sunday, December 4, 2016 at 2:06:04 AM UTC-8, N. Kannan wrote:அன்பின் கணேசன்://சீரங்கம் மைசூர் அருகே கங்கர்களின்ஆட்சியில் இருந்த ஊர், சோழர்களின் திருவரங்கம் ஆழ்வார்கள் பாடினது - இளங்கோ அடிகள், ஆழ்வார்கள் காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டுமுடிய தமிழ் இலக்கியங்களில் திருவரங்கம் வேறு. அதற்கும் முன்னரே காவேரி பேரரங்கமாகப் பாயும் சீரங்கம் வேறு என்பதும் தெளிவு.//இது சற்று விளங்கவில்லை.சீரங்கம் எங்குள்ளது?
திருவரங்கம் சோழநாட்டில் உள்ளது. திருச்சியில். இது செய்யப்பட்ட அரங்கம் ஆகலாம். 10-11 நூற்றாண்டுவரை ஸ்ரீரங்கம் என்று திருவரங்கம் அழைக்கப்பட்டதில்லை.பார்க்க: திவ்விய பிரபந்தம்.ஆனால், இயற்கையாகவே அமைந்த அரங்கம் காவிரியில் பழைய கொங்குநாட்டில் (acc. to scholars like உவேசா, ...) உள்ளது. காவிரியில் உள்ள பெரிய அரங்கம் இதுதான்.இதனை, கங்கர்கள் என்னும் சமண சமயத்தைப் பின்பற்றிய மன்னர்கள் ஆண்டனர். அவர்கள் மணிப்பிரவாள இலக்கியத்தை தமிழிலும், கன்னடம் போன்ற மொழிகளிலும்வளர்த்தனர். ஸ்ரீபுராணம். ஆழ்வார் என்ற சொல் தியானத்தில், யோகத்தில் மூழ்கி இருப்பவரைக் குறிப்பது. தீர்த்தங்கரர்களுக்கான கல்வெட்டுகளில் முதலில் உள்ளது.பின்னர், ஆழ்வார்கள் என்ற பெயரையும், வைஷ்ணவத்தின் முன்னர் உள்ள ஸ்ரீ, மணிப்ரவாலமாக உரைகள் எழுதும் வழிமுறை இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள் சமண சமயிகளிடம்இருந்து பெறலாயினர்.Cascade of mountains - பன்மலை அடுக்கம் என்பது பழைய தமிழ் இலக்கியங்கள். பன்மலை அடுக்கம் கொண்டது ஸ்ரீரங்கம். கங்க ராஜ்ஜியம். அங்கே தான் மதுரைக்கு30 காதம் (= ~ 360 மைல்கள்) வடக்கே பொழில்மண்டிலம் என்னும் ஸஹ்யாத்ரியில் கவுந்தி அடிகளைச் சந்தித்து, கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும்தெற்கே மதுரை நோக்கி வருகின்றனர். கங்க ராஜ்ஜியமாக இருந்த ஸ்ரீரங்கத்தில் தான் கவுந்தி அடிகள் அந்த(ர)சாரணர் என்னும் ஜைந தெய்வங்களைச் சந்தித்துமூவரும் தொழுகின்றனர். பின்னர் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அப்புறம் பெருமாள் துயில்கொள்ளும் திருவரங்கம் வருகின்றனர். நாடுகாண் காதையைகண்டவியூக சூத்திரம் (பௌத்தம்) நூல் போல இளங்கோ அடிகள் அமைத்துள்ளார் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் எழுதிய புதினத்தில். காதம் எவ்வளவு தூரம்? என்னும்இழையில் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் இருக்கிறது. நீங்கள் படிக்கலாம்.பன்மலை அடுக்கம் உள்ள ஸ்ரீரங்கம் -சிலம்பில் பாடப்பட்டுள்ளது: (இது திருவரங்கம் அல்ல).அடுக்கம் என்ற சொல்லை Cascade-க்கு தமிழில் பயன்படுத்துவது மிகப்பழைய மரபு.அடுக்கம் = பக்கம் பக்கமாக அமைந்த மலைகள் = cascade of hills, mountains.cascade என்ற சொல்லுக்கு அடிப்படையாக “in stages, successively, subsequently" flowing/being next to each other.அடுக்கடுக்கடுக்காக உள்ள மலைகள் பன்மலை அடுக்கம்.
திராவிடப் பிரகாசிகையில் 14 இடங்களில் சங்க இலக்கியம் என்று குறிப்பிடுகிறார் சபாபதி நாவலர் (1845/6 - 1903).
யோசித்துப் பார்த்தால் ஆறுமுக நாவலர் - சபாபதி நாவலரின் குரு - சங்க இலக்கியம் எனப் ன்படுத்தி யிருப்பார்கள். தேடவேண்டும்.
தமிழ் தேசியம் வளர்க்கும் ஸ்ரீ சேசாத்திரி இரண்டு உயிரெழுத்தின் நடுவே உள்ள -க்- மெய்யின் ஒலிப்பு ஒருவிதமான -h- என்பது பற்றிக் கேட்டிருந்தார். இதனை மொழியியல் அறிஞர்கள் intrevocalical fricative sound என்பர். அதனைக் குறிப்பிட ரோமன்/ஆங்கில எழுத்தில் ஒருமுறை உண்டு: h-ன் மீழே ஒரு breve (அரைவட்டம்). இவ்வொலி அறபி பாஷையிலும் இருக்கிறது. அதே போல, சொல் முதலில் வரும் ச் மற்றும் இரு உயிரிடை -ச்- இதற்கும் s- ன் மீழே ஒரு breve (அரைவட்டம்) இடம்பெறல் வேண்டும். இந்த விதிகளை இ. அண்ணாமலை, ந. தெய்வசுந்தரம், ... போன்றோர் எழுதியுள்ளனர் தொகுத்து கணிஞரைக் கொண்டு ஒலிப்புக்கு வசதியாக ஒரு வலைப்பக்கம் தயாரிக்கலாம். அப்போது யூனிகோட் தமிழோ, ஐஎஸ்ஓ ரோமன்லிபி தமிழோ உள்ளிட்டால் ஒலிப்பது எவ்வாறு என்று காட்டலாம். அப்போதுதான் இளைஞர்களுக்கு இந்த தொன்மையான தமிழ் ஒலிப்புவிளங்கிக்கொள்ள வசதி. இவ்வொலிப்பு மதுரையில், கோவையில், ஈழத்தில் உள்ளது. நல்ல தளம்: http://noolaham.org noolaham.org எப்படி நூலகம் எழுதப்பட்டுள்ளது எனப் பார்க்கவும்.Noolaham.org தளத்தில் திராவிடப் பிரகாசிகை: http://noolaham.net/project/49/4863/4863.pdfசங்க இலக்கியம் என்று வருமிடங்களைத் தொகுக்கலாம். யாராவது செய்யலாம். இல்லையெனில், நான் செயக்கூடும். http://noolaham.net/project/49/4863/4863.pdf
On Saturday, December 3, 2016 at 12:37:29 AM UTC-8, ஆரோதன் wrote:Satura-aharadi, எனக்கு எப்போதும் ஒரு கேள்வி உண்டு. தமிழில் ஹகரம் இல்லை இருந்தும் ஏன் இப்படி ககரத்தை ஹகரமாக பலுக்கி தமிழைக் கொல்லுகிறார்கள். ஏன் தமிழர்கள் இப்படி முட்டாளாக இருக்கிறார்கள்? அகநானுறும் இப்படி ahanaanuru என்று தவறாக பேராசிரியர்களால் எழுதவும் பலுக்கவும் படுகிறது.ஆரோதன்தெலுங்கு, கன்னடம் போன்ற த்ராவிட மொழிகள் இழந்துவிட்ட ஒலிப்பு intervocalical -k- ஒலிப்பு. முகம், அழகு, பிறகு, முருகன், .... இவற்றில் எல்லாம் இந்த -h- ஓசை உண்டு. ஹிண்டு போன்ற பத்திரிகைகளில் தெலுங்கு, கன்னடம் தாய்மொழி கொண்ட பலர் எழுதுவதால் mugam, azhagu, piragu, murugan, .... என்ற தவறான எழுத்துப்பெயர்ப்பு நடக்கிறது.நல்ல பாடகர்கள் தாய்மொழி வேறாயினும் அழகாக இந்த voiceless fricative sounds from intervocalical -k- & -c- ஒலிப்பதைக் கேட்கலாம். பி. சுசீலா, டிஎம்எஸ், பாலமுரளி, யேசுதாஸ் ... இப்பொழுது தமிழர்களின் குழந்தைகள் பலர் ஆங்கில எழுத்தில் தமிழை எழுதத் தொடங்கியுள்ளனர். எனவே intervocalical -k- அவ்வாறே எழுதப்படுதல் கற்பிக்கப்பட வேண்டும். இன்றேல், தெலுங்கு, கன்னடம் போல் இந்த மிகப் பழைய உச்சரிப்பை தமிழ் இழந்துவிடும்.பல மொழியியல் அறிஞர்கள் 150 ஆண்டுகளாய் எழுதுவதுதான் இந்த முக்கியமான ஒலிப்பியல். 1831-ல் பிரெஞ்சுக்காரர் கைப்பட எழுதிய பிரெஞ்சு-தமிழ் அகராதி உண்டு. சில காலமாக, இணையத்தில் இருக்கிறது. அதில் பார்த்தால், இந்த intervocalical -k- அப்படியே -k- என எழுதியுள்ளார். அம்முறை தான் தமிழின் இரண்டு உயிர்களுக்கு இடையே -க்- வரும்போது எழுதச் சிறந்தது.நா. கணேசன்
சங்கம் நிறுவித் தொண்டாற்றியதில் பவுத்த - சமணர் பங்களிப்பு இருந்திருக்குமானால்ஐம்பெருங்காப்பியங்களில் அல்லது பிற பவுத்த - சமண நூல்களில் கட்டாயம் குறிப்புஇருக்கும் . அவற்றில் இதற்கான ஆதாரம் உள்ளதா எனவும் ஆராய வேண்டும்.தமிழ்ச்சங்கம் பற்றிய குறிப்பு சீவக சிந்தாமணியில் இருப்பதாகத் தெரியவில்லைதேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.