அதில் குலத்தால் உயர்வு, தாழ்வு சொல்ல கூடாது என்பதை வலியுறுத்தவே சாதிகள் இல்லையடி பாப்பா என்கிறான். குலம் என்பது தொழில் சார்ந்தது சாதி என்பது பட்டம் சார்ந்தது, பிரிவு சார்ந்தது. ஏனெனில் ஒரே குலத்தில் பல சாதிகள் உண்டு. இதை தப்பாக புரிந்து கொண்டு சாதி இல்லை என்றால் குலம் மட்டும் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். எல்லா குலத் தொழிலும் சமூகத்திற்கு
தேவைப்படும் போது தொழிலால் ஒருவருக்கு ஒருவர் ஏற்றத் தாழ்வு கற்பித்தல் ஆகாது. இதனால் பட்டத்தினால் வரும் வேற்றுமை தேவை இல்லை என்பதற்கு தான் சாதி இல்லை என்கிறான். ஒரு எடுத்துக்காட்டு, பிராமணரில் பூசனை செய்வோரை உயர்ந்தவர் என்று கருதுவது. பிற பிராமணர் அவரினும் தாழ்ந்தவர் என்று பட்டாச்சாரிகள் கூறுவது. இது ஒரே பிராமண குலத்தில் சாதிகளால் வந்த தாழ்வு ஏற்றம் ஆகும்.