பழந்தமிழர் வாழ்வியல் பண்புக்கூறு காதலா? காமமா? உண்மை தெரிஞ்சாகனும் சாமி

89 views
Skip to first unread message

vnagarajan

unread,
Dec 14, 2012, 3:18:45 PM12/14/12
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள்
 
 
This is a Tamil version of the lecture notes on human development taken during the joint project on Adult Development between Madras University and Virginia Tech University
 
My Tamil has the limitation of exact and comprehensive reproduction
 
I will be happy to receive the feed back
 
Nagarajan
 
 

பழந்தமிழர் வாழ்வியல் பண்புக்கூறு காதலா? காமமா? உண்மை தெரிஞ்சாகனும் சாம

 

================================================================================================

பழந்தமிழர் வாழ்வியல் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு வாழ்க்கைப் படிநிலைகளை உள்ளடக்கியது. வாழ்க்கை பொருள் ஈட்டுதலில் ஆரம்பித்து இன்பம் தேடி குடும்ப வாழ்க்கையில் திளைத்து நீதி நெறி வலியுறுத்தும் அறம் செய்து இறுதியில் குமுக் வாழ்க்கைப் பிணைப்புகளை விட்டு விலகி வாழ்ந்து மறைவது என்று முடிவதாக அமைந்திருந்தது

 

தமிழர் வாழ்வியல் இன்பம் என்ற நிலையைக் காதல் வீரம் என்ற மெய்ப்பாட்டின் நுண்ணிய உளவியல் வெளிப்பாடாக அதிலும் களவு கற்பு என்ற இரு நிலைகளில் இலக்கியம் படைத்துச் சிறப்புற்றது சங்க இலக்கியம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநிலை தந்து பருவ அடிப்படையில் தோன்றும் இன்ப உணர்வுகளுக்கு எவ்வாறு வடிவமைத்து வடிகால் அமைத்து வாழ்ந்தார்கள் என்பதை விளக்குகிறது. காமதேவன் என்ற கருத்துரு தமிழகத்தில் புகாதவரை இன்பவியலில் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்ற நிலையும் குமுகத்தில் பெண் தெய்வங்களே கிராம தேவதைகளாக இருந்து குடும்ப வாழ்வின் காவல் தெய்வங்களாக விளங்கி வந்தது என்ற பெண்களின் உயர்நிலையும் வழக்கத்தில் இருந்தது

 

காமதேவன் என்ற இந்து உயர் கடவுள் ரதி என்ற அழகிய துணையுடன் எப்போது தமிழ்ப் புலத்தில் நுழைதது என்பது பற்றி உறுதியான தகவல் இல்லையெனினும் அதன் தாக்கமு வீச்சும் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் தழைத்தோங்கி அவர்தம் வாழ்வியல் மரபில் மாற்றத்தை ஏற்படுத்தியது மறுக்கமுடியாத உண்மை

 

கிரேக்க சமய இலக்கியங்கள் காம தேவனை கொழு கொழு குழந்தையாக உருவகித்து காமனே முதல் கடவுள் என்ற கருத்தை வலியுறுத்தியதுபோல் இந்து சமயத்தில் காமன் ஒரு வளர்ந்த வாலிபனாக ரதியுடன் இணைந்து இன்ப வாழ்வு வாழ்வதாகவும் முதலில் தோன்றி மூத்திருந்தாலும் அன்றாடம் தோன்றி மறைவதால் இளையவன் என்ற கருத்தை வலியுறுத்துவதாகவும் இருந்தது

 

வசந்த காலத்தில் தெற்கிலிருந்து தென்றலாகத் தோன்றி உயிரனங்கள் அனைத்தும் காதல் வயப்பட வைக்கும் வல்லமை கொண்டவன் காமன். அவன் கையில் மலரால் பிணைக்கப்பட்ட நாணுடன் கூடிய வில் ஐந்துவகை மலர்களைக் கொண்ட அம்புகள் காதலில் கட்டிப்போட ஒரு பாச வலை, அகப்படவரை அருகில் இழுக்க ஒரு கொக்கி என்ற நான்குவகை ஆயுதங்களுடன் இயங்குவதாகப் படைக்கப்பட்ட தொன்மைக் கடவுள்

அம்புகள் மூலம் இதயத்தைத் திறப்பதாகவும் வில்லின்மூலம் மோஹத்தை வளர்ப்பதாகவும் வலையின் மூலம் ஸ்தம்பிக்கவும் கொக்கிமூலம் அடக்கி வசப்படுத்தவும் காமதேவன் மேற்கொள்ளும் செயலின் விளைவே காமம் என்று விவரிக்கப்படும்

 

காமத்தைப் படைத்து அது நாளும் பொழுதும் வளரக் கால லோகத்தையும் படைத்து காலச் சக்கரத்தில் சிக்கி பிறப்பு வளையத்துள் வலம் வரும் உயிரினங்கள் வாழும் நாட்களில் மகிழ்வுடன் இணை சேர்ந்து வாழ்க்கையைச் சுவைத்து மகிழ வாய்ப்பளித்து உலகில் வாழும் உயிரினங்கள் தங்கள் இனம் அழிந்துவிடாமல் காப்பது காமதேவனின் கடமை. காம லோகம் என்பது பூவுலகின்  உலகின் மேலும் கீழுமாக உள்ள உலகங்களைச் சேர்த்து மூவுலகமாக்கி  எல்லாருக்கும் காமம் பொதுவென உருவாக்கம் பெற்றது

 

கீழுலகம் என்ற நரகத்தில் பிரேதர்கள், ராட்ஷகர்கள் அசுரர்கள் நாகர்கள் வீடுறைக் கடவுளரான யட்சர்கள் என்ற பிரிவுகள் வாழும் உலகம் நடுப்பகுதியில் கருடர்கள் கந்தர்வர்கள் மறுபிறப்பினால் சொர்க்க நிலை அடைந்து அழகிய அப்சரஸ் மங்கையருடன் இணைந்து இன்பம் துய்க்கும் மானுடர்கள் வாழும்  உலகம்.  மேலுலகம் என்பது பிரம்மலோகம் என்றாலும் அங்கும் காமனின் தாக்கம் இருப்பதாக அமைத்து மூவுலகிலும் காமனின் ஆட்சி என்ற கருத்துரு இந்துக் கடவுளான காமதேவன் பெயரில் உருவாக்கம் பெற்றது

 

காமம் என்பது மேலுகவாசிகளுக்கு இச்சையாகவும் மற்றவர்களுக்குக் காமமாகவும் தோன்றித் தங்களின் இனத்தைப் பல்கிப் பெருக்கிக்கொள்ள வழி செய்கிறது. ஆகவே அனைதுயிர்களுக்கும் முதலில் தோன்றும் உணர்வே காமம்.  எனவே காமனே முதற்கடவுள் மூத்த கடவுள் அவன் தினம் தோன்றி மறவதால் இளைய கடவுள் என்ற இரு நிலைச் சிறப்பைப் பெற்றதாகக் கருதப்படுகிறது.  காமனின் தாக்குதலுக்கு ஆட்பட்டவர்கள் காம இன்பத்தில் திளைக்க பல  கலைகளை உருவாக்கித் தாங்கள் இன்புறுவதுடன் தங்களின் இனத்தைப் பெருக்கிக் கொள்ளவும் முனைந்து செயல்படுவதால் மனிதன் இன்புற்றுத் தொடர் சங்கில்யாக நிலைத்து வாழ முடிகிறது 

 

சமஸ்கிரிதத்தில் காமம் என்பது காதல் உடலுறவு, புலன் நுகர்வு மகிழ்ச்சி என்ற பல நிலைகளையும் குறிப்பிடுவது.  அதர்வ வேதம் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வைத் திருமண உறவை மனைவியைக் கனவனை அன்னையை நலம் மிக்க குழந்தைகளைக் குறிப்பாக ஆண் குழந்தைகளைப் பெற்று வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறது

 

ஆண் குழந்தைகள் தங்களின் சந்ததியை வளர்க்கவும் மறைந்த தந்தையர்களுக்கான சடங்குகளைச் செய்யவும் தேவை என்ற அடிப்படையில் ஆணுக்கு முக்கியத்துவம் அளித்து பெண் பின்னுக்குத் தள்ளப்பட்டாள். தொடக்கத்தில் குடும்ப வாழ்வின் நுண்ணிய இன்ப நிலைகளைப்பற்றிய ஆவணங்கள் பல அரசர்களால் ஆவணப்படுத்திக் சேமிக்க்ப்பட்டிருந்தும் பிற்காலத்தில் காம சிருங்கார நுணுக்கங்களை விளக்கும் நூல்கள் இன்பத்தின் எல்லையைச் சிருங்கார ரசத்துடன் சுருக்கிக் கொண்டது

 

கி.பி மூன்று அல்லது நான்காம் நூற்றான்டில் உருவான வத்சாயனர் காம சூத்திரம் 11 ஆம் நூற்றாண்டில் உருவான பஞ்ச சகாய, 13-ஆம் நூற்றான்டில் உருவான ரதி ரகஸ்யா, 16 ஆன் நூற்றான்டில் உருவான ஆனங்கரங்க போன்ற நூல்கள் காமத்தின் எல்லையைச் சுருக்கி பெண்ணின் நிலையையும் ஒரு போகப்பொருளாகத் தாழ்த்தி தமிழகத்தைத் தாக்கித் தமிழர் வாழ்வியலையே மாற்றிப்போட்டது

 

 

 

தேமொழி

unread,
Dec 14, 2012, 9:18:31 PM12/14/12
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள்
>>
கி.பி மூன்று அல்லது நான்காம் நூற்றான்டில் உருவான வத்சாயனர் காம சூத்திரம் 11 ஆம் நூற்றாண்டில் உருவான பஞ்ச சகாய, 13-ஆம் நூற்றான்டில் உருவான ரதி ரகஸ்யா, 16 ஆன் நூற்றான்டில் உருவான ஆனங்கரங்க போன்ற நூல்கள் காமத்தின் எல்லையைச் சுருக்கி பெண்ணின் நிலையையும் ஒரு போகப்பொருளாகத் தாழ்த்தி தமிழகத்தைத் தாக்கித் தமிழர் வாழ்வியலையே மாற்றிப்போட்டது
>>

ஆனால்
இதற்கும் முன்பே நம் வள்ளுவர் காமத்துப் பால் பாடிவிட்டார் அல்லவா?
திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கில் வருவதுதானே.
சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குபவது காதலும் வீரமும் ஆகும் என்றால் காமத்துப்பால் ஏன் பாடப்பட்டது?

வள்ளுவரும்தான் தன் பங்கிற்கு ஆணாதிக்க சாயலில், பெண் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தால் அவள் சொன்னால் மழை பெய்யும் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
எனவே, இந்தியக் கலாச்சாரம் என்றால் பெண் எப்படி இருக்கவேண்டும் என்றுதானே முதலில் அனைவரும் சொன்னார்கள் , சொல்கிறார்கள் (இன்று வரை பஞ்ச் டயலாக்)
சுட்டும் விரலால் எதிரியை நோக்கி குற்றம் சாட்டுகையில் மற்றும் மூன்று விரல்கள் நம் மார்பினைக் காட்டும்.
அதனால்
பழந்தமிழர்களும் பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவதில் சளைத்தவர்களாக இருந்ததில்லை என்பது தெளிவாகிறது


கேள்வி: பழந்தமிழர் வாழ்வியல் பண்புக்கூறு காதலா? காமமா?
பதில்: இரண்டுமேதான்

திருக்குறளில்
காதல், காமம் வரும் சொற்கள் உள்ள குரல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காதல் என்பது யாரிடத்தும் தோன்றும் அன்பாக (தெய்வத்திடமும்) பொருள் கொள்ளப்பட்டாலும், காமம் ஆண் பெண் இடையே தோன்றும் உறவின் வெளிப்பாட்டிற்கு மட்டுமே குறிப்பிடப்படுகிறது (என்று நான் நினைக்கிறேன்)
__________________________________________________________________________
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். 283

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 440

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். 921

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை. 1195

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. 1242

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது. 1291

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. 1298
_______________________________________
காமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். 360

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.  1090

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். 1109

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 1110

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. 1131

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். 1137

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். 1138

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. 1139

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. 1144

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. 1145

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். 1148

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. 1166

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. 1196

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. 1201

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல். 1202

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. 1214

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு. 1247

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். 1252

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். 1254

கூடிய காமம் பிர஧ந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு. 1264

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்
காமம் நிறைய வரின். 1282

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். 1289

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. 1306

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. 1326

____________________________


shylaja

unread,
Dec 14, 2012, 10:02:02 PM12/14/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
தேமொழி அசத்தறீங்க..வரேன் நானும்  மசால்தோசையை செய்து முடித்துவிட்டு:):)

2012/12/15 தேமொழி <them...@yahoo.com>
--
 
 



--
ஷைலஜா
 

Karuannam Annam

unread,
Dec 14, 2012, 10:32:24 PM12/14/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
2012/12/15 தேமொழி <them...@yahoo.com>
வள்ளுவரும்தான் தன் பங்கிற்கு ஆணாதிக்க சாயலில், பெண் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தால் அவள் சொன்னால் மழை பெய்யும் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
கேள்வி: பழந்தமிழர் வாழ்வியல் பண்புக்கூறு காதலா? காமமா?
பதில்: இரண்டுமேதான்

திருக்குறளில்
காதல், காமம் வரும் சொற்கள் உள்ள குரல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காதல் என்பது யாரிடத்தும் தோன்றும் அன்பாக (தெய்வத்திடமும்) பொருள் கொள்ளப்பட்டாலும், காமம் ஆண் பெண் இடையே தோன்றும் உறவின் வெளிப்பாட்டிற்கு மட்டுமே குறிப்பிடப்படுகிறது (என்று நான் நினைக்கிறேன்)
உடம்பொடு உயிரிடை என்னமற்றுஅன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு  1122
காதற்சிறப்புரைத்தில் அதிகாரத்தில் உள்ள மேற்கண்ட குறளை வள்ளுவர் ஆணாதிக்கவாதியா என்பதற்கும் காதல் பற்றிய புரிதலுக்கும் பயன்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Dec 14, 2012, 11:58:37 PM12/14/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், mint...@googlegroups.com, thamiz...@googlegroups.com
ஆணாதிக்க விவாதம்,
பழந்தமிழர் வாழ்வியல் பண்புக்கூறு காதலா? காமமா?
என்ற விவாதத்தை  திசை திருப்புகிறது என்று கீச் கீச் கேட்டாலும் ....
குறள்  பற்றி நான் ஆரம்பித்த வைத்ததற்கு  பதில் சொல்வது என் பொறுப்பு என்பதினால்....

வாழ்க்கைத் துணைநலம்:
51. இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
52. இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
53. மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.
54. இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.
55. வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.
56. கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
57. மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
58. கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்..
59. புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
60. மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

கணவன் எப்படி இருக்க வேண்டும் இதில் ஒரு குறளாவது அறிவுருத்துகிறதா?
வாழ்க்கைத் துணை நலம் என்பது மனைவி மட்டும்தானா?
'கணவனாக வாழ வேண்டிய துணை நலம்' எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறியதைப் பட்டியலிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒளவையும் கூறாமல் சன்யாசம் கொள் என்றுதான்  சொல்கிறார்.
சத்தியவான் போல கோவலன் போல ஒரு கணவன் இருந்தால் மனைவி என்ன செய்ய வேண்டும் என்ற சமநீதி அற்ற, அநீதியான கருத்துக்களே உலா வருகிறது.
வள்ளுவருமா இப்படி?
ஏன்? ஏன்? ஏன்?

sk natarajan

unread,
Dec 15, 2012, 7:04:08 AM12/15/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
 தொடருங்கள்  ஐயா
தொடருகின்றேன் .....

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/15 vnagarajan <radius.co...@gmail.com>

sk natarajan

unread,
Dec 15, 2012, 7:06:54 AM12/15/12
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com
வள்ளுவருமா இப்படி?
ஏன்? ஏன்? ஏன்?

ஆமாம் ....... ஏன் ?

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/15 தேமொழி <them...@yahoo.com>
வள்ளுவருமா இப்படி?
ஏன்? ஏன்? ஏன்?

Nagarajan Vadivel

unread,
Dec 15, 2012, 10:29:12 AM12/15/12
to vallamai
ஆடேங்கப்பா என்னமா அடிச்சு ஆடறீங்க
திருவள்ளுவரின் திருக்குறளில் காமதேவன் பற்றியோ மலரம்பு வீசுவது பற்றியோ குறிப்புள்ளதா?
 
அதர்வ வேதத்தில் 536 மந்திரங்களில் 41 மந்திரங்கள் குடும்ப வாழ்வின் சிறப்பை விளக்குவதாக உள்ளது. அதர்வ வேதக் கருத்துக்கலுக்கும் டிருக்குறளுக்கும் யாராவது ஒப்பாய்வு செய்துள்ளார்களா?
 
பிற்காலத்தில் காமம் பற்றி உருவான வைதீகக் கருத்துக்கள் பித்ரு லோகத்தில் உள்ள முன்னோர்களுக்குச் சடங்குகள் செய்யவும் வம்ச விருத்திக்கும் ஆண்கள் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.  திருக்குறளில் இடுபோன்ற கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதா?
 
திருக்கு்றள் என்பது ஒரு நீதி நெறி நூல் என்று கருத்தில் கொண்டால் அது தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியா அல்லது தமிழர் வாழ்வியலில் உருவாகவேண்டிய புதிய பண்புக்கூறுகளை வலியுறுத்தும் முயற்சியா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்
 
திருவள்ளுவர் ஒரு அப்பாவீங்க அவரெல்லாம் ஆணாதிக்கச் சிந்தனை செய்யும் அளவுக்கு அவருடைய விட்டில் சுதந்திரம் இருந்திருக்குமா?
நாகராசன்
 


2012/12/15 தேமொழி <them...@yahoo.com>
>>
--
 
 

DEV RAJ

unread,
Dec 15, 2012, 1:12:11 PM12/15/12
to வல்லமை
On Dec 15, 8:29 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

>>> அதர்வ வேதத்தில் 536 மந்திரங்களில் 41 மந்திரங்கள் குடும்ப வாழ்வின் சிறப்பை
விளக்குவதாக உள்ளது. அதர்வ வேதக் கருத்துக்கலுக்கும் டிருக்குறளுக்கும்
யாராவது ஒப்பாய்வு செய்துள்ளார்களா? <<<


குறளில் வெளிப்படையாகவே தெரியும் அமரர், அவியுணவு, அளறு,
செய்யாள், மாலவன் பற்றிப்பேசினாலே இந்துத்துவா என்று
சாயம் பூசி விடுகிறார்களே :)) மறைகளில் ஆழ்ந்து ஒப்பாய்வு
செய்தாலும் தமிழில் பகிர்ந்துகொள்ள முடியுமா , சந்தேகமே.


மறைவழி அறநூல்களுக்கும் குறளுக்கும் உள்ள
தொடர்பைச் சற்று ஒப்பிடும் பதிவு இதோ -
http://askdevraj.blogspot.in/2012/11/blog-post.html


குறள் முதன்மை தரும் அறம், பொருள், இன்பம்
எனும் மும்மைத் தொகுதி ‘த்ரிவர்கம்’ எனப்படுகிறது.
நூல்கள் பலவற்றிலும் இந்தத் த்ரிவர்கத்திற்கு மட்டுமே
முதன்மை தந்து பேசும் மரபும் இருந்துள்ளது

தேவ்

On Dec 15, 8:29 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> ஆடேங்கப்பா என்னமா அடிச்சு ஆடறீங்க
> திருவள்ளுவரின் திருக்குறளில் காமதேவன் பற்றியோ மலரம்பு வீசுவது பற்றியோ
> குறிப்புள்ளதா?
>
> அதர்வ வேதத்தில் 536 மந்திரங்களில் 41 மந்திரங்கள் குடும்ப வாழ்வின் சிறப்பை
> விளக்குவதாக உள்ளது. அதர்வ வேதக் கருத்துக்கலுக்கும் டிருக்குறளுக்கும்
> யாராவது ஒப்பாய்வு செய்துள்ளார்களா?
>
> பிற்காலத்தில் காமம் பற்றி உருவான வைதீகக் கருத்துக்கள் பித்ரு லோகத்தில் உள்ள
> முன்னோர்களுக்குச் சடங்குகள் செய்யவும் வம்ச விருத்திக்கும் ஆண்கள் முன்னிலைப்
> படுத்தப்பட்டனர்.  திருக்குறளில் இடுபோன்ற கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதா?
>
> திருக்கு்றள் என்பது ஒரு நீதி நெறி நூல் என்று கருத்தில் கொண்டால் அது
> தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியா அல்லது தமிழர் வாழ்வியலில்
> உருவாகவேண்டிய புதிய பண்புக்கூறுகளை வலியுறுத்தும் முயற்சியா என்பதை உறுதி
> செய்ய வேண்டியது அவசியம்
>
> திருவள்ளுவர் ஒரு அப்பாவீங்க அவரெல்லாம் ஆணாதிக்கச் சிந்தனை செய்யும் அளவுக்கு
> அவருடைய விட்டில் சுதந்திரம் இருந்திருக்குமா?
> நாகராசன்
>

> 2012/12/15 தேமொழி <themo...@yahoo.com>


>
>
>
>
>
>
>
>
>
> > கி.பி மூன்று அல்லது நான்காம் நூற்றான்டில் உருவான வத்சாயனர் காம சூத்திரம்11 ஆம்
> > நூற்றாண்டில் உருவான பஞ்ச சகாய, 13-ஆம் நூற்றான்டில் உருவான ரதி ரகஸ்யா, 16 ஆன்
> > நூற்றான்டில் உருவான ஆனங்கரங்க போன்ற நூல்கள் காமத்தின் எல்லையைச் சுருக்கி
> > பெண்ணின் நிலையையும் ஒரு போகப்பொருளாகத் தாழ்த்தி தமிழகத்தைத் தாக்கித் தமிழர்
> > வாழ்வியலையே மாற்றிப்போட்டது
>
> > ஆனால் இதற்கும் முன்பே நம் வள்ளுவர் காமத்துப் பால் பாடிவிட்டார் அல்லவா?
> > திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கில் வருவதுதானே.
> > சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குபவது காதலும் வீரமும் ஆகும் என்றால்
> > காமத்துப்பால் ஏன் பாடப்பட்டது?
>
> > வள்ளுவரும்தான் தன் பங்கிற்கு ஆணாதிக்க சாயலில், பெண் எப்படி இருக்க
> > வேண்டும், எப்படி இருந்தால் அவள் சொன்னால் மழை பெய்யும் என்று சொல்லிவிட்டுச்
> > சென்றிருக்கிறார்.
> > எனவே, இந்தியக் கலாச்சாரம் என்றால் பெண் எப்படி இருக்கவேண்டும் என்றுதானே
> > முதலில் அனைவரும் சொன்னார்கள் , சொல்கிறார்கள் (இன்று வரை பஞ்ச் டயலாக்)
> > சுட்டும் விரலால் எதிரியை நோக்கி குற்றம் சாட்டுகையில் மற்றும் மூன்று
> > விரல்கள் நம் மார்பினைக் காட்டும்.

> > *அதனால் **பழந்தமிழர்களும் பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவதில்
> > சளைத்தவர்களாக இருந்ததில்லை என்பது தெளிவாகிறது *

> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Dec 15, 2012, 10:01:34 PM12/15/12
to vallamai


2012/12/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஆடேங்கப்பா என்னமா அடிச்சு ஆடறீங்க
திருவள்ளுவரின் திருக்குறளில் காமதேவன் பற்றியோ மலரம்பு வீசுவது பற்றியோ குறிப்புள்ளதா?
 

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். (1197)

விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லோரையும் சமமாக ஆட்கொள்ளும் காமதேவன், என் விஷயத்தில் மாறுபட்டுவிட்டான்.  இங்கே என்னை மட்டுமே பீடித்திருக்கிறான்.  (ஒருவர்கண் நின்று ஒழுகுதல், தலைவியைப் பொருதல் என்பது உரையாசிரியர் குறிப்பு.)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

வேந்தன் அரசு

unread,
Dec 17, 2012, 8:01:29 AM12/17/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்


14 டிசம்பர், 2012 9:18 pm அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

>>
கி.பி மூன்று அல்லது நான்காம் நூற்றான்டில் உருவான வத்சாயனர் காம சூத்திரம் 11 ஆம் நூற்றாண்டில் உருவான பஞ்ச சகாய, 13-ஆம் நூற்றான்டில் உருவான ரதி ரகஸ்யா, 16 ஆன் நூற்றான்டில் உருவான ஆனங்கரங்க போன்ற நூல்கள் காமத்தின் எல்லையைச் சுருக்கி பெண்ணின் நிலையையும் ஒரு போகப்பொருளாகத் தாழ்த்தி தமிழகத்தைத் தாக்கித் தமிழர் வாழ்வியலையே மாற்றிப்போட்டது
>>

ஆனால்
இதற்கும் முன்பே நம் வள்ளுவர் காமத்துப் பால் பாடிவிட்டார் அல்லவா?
திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கில் வருவதுதானே.
சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குபவது காதலும் வீரமும் ஆகும் என்றால் காமத்துப்பால் ஏன் பாடப்பட்டது?


புறம் என்றால் வீரம் அல்ல. காதலைத்தவிர்த்த பிற யாவும் புறம். 

நீங்க இட்ட குறள்களில் ஒன்றில் காமம், காதல் என்ற சொற்கள் இல்லை.
ஆனால் யாமம் இருக்கு. அது போதும்,


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Dec 17, 2012, 8:15:39 AM12/17/12
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, தமிழ் சிறகுகள்


14 டிசம்பர், 2012 3:18 pm அன்று, vnagarajan <radius.co...@gmail.com> எழுதியது:

 
 
This is a Tamil version of the lecture notes on human development taken during the joint project on Adult Development between Madras University and Virginia Tech University
 
My Tamil has the limitation of exact and comprehensive reproduction
 
I will be happy to receive the feed back
 
Nagarajan
 
 

பழந்தமிழர் வாழ்வியல் பண்புக்கூறு காதலா? காமமா? உண்மை தெரிஞ்சாகனும் சாம


தமிழில் காதல் காமம் இரண்டுக்கும் ஒரே பொருள்தான்.

திருக்குறளில்  இன்றைய பொருளில் காமம் எங்கேயும் பயன்பாடு இல்லை.

ஒரே இடத்தில் முத்தக்காட்சி இருக்கும். அதுவும் தலைவனது கற்பனையாக காட்டி இருப்பார்.

பாலொடு தேன் கலந்தற்றே பனிமொழி
வால் எயிற்று ஊறிய நீர்


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Dec 17, 2012, 7:49:40 PM12/17/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, mint...@googlegroups.com
>>
நீங்க இட்ட குறள்களில் ஒன்றில் காமம், காதல் என்ற சொற்கள் இல்லை.
ஆனால் யாமம் இருக்கு. அது போதும்
>>


ஆமாம், தவறைக் கண்டேன் மன்னிக்கவும்
1137 குறளை  வெட்டி ஒட்டியதில் தவறு.
தவறுதலாக  1136 ஆவது இடம் பெற்றுவிட்டது 

இரண்டு குறள்களும்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.     1136

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.     1137

...தேமொழி




Karuannam Annam

unread,
Dec 18, 2012, 12:49:51 AM12/18/12
to vall...@googlegroups.com, mintamil
தமிழ்கடல் இராய. சொக்கலிங்கன் காமத்துப்பால் குறித்து வெகுகாலத்திற்கு முன் பேசிய பேச்சில் என் நினைவில் இருப்பவை.
1.தலைவன் இவன் தலைவி இவள் எனச் சுட்டாமல் பொதுமை குறித்த பார்வை.
2.காம உறுப்புகள் பற்றிக்குறிப்பிடவில்லை.
3.உடல் புணர்ச்சி வகைகள் சுட்டவில்லை.
4.உள்ள உணர்வுகளே பாடப்பட்டுள்ளன.
5.மங்கை மணாளணோடு ஆடியதைப் பாட முடியுமா என்று கேட்டபொழுது பாடமுடியும் என்று”தம்மில் இருந்து” எனப் பகிர்ந்து வாழ்தல் போன்ற சமூகக் கருத்துக்களைக் காதலிலும் கண்டு கேட்டு போன்ற உளவியல் கருத்துக்களை  நுணுகி ஆராய்ந்தும் வெளிப்படுத்தியுள்ளது காமத்துப்பால்.

சங்கப்பாடல்கள் உடலுறு புணர்ச்சியைவிவும் உள்ளப்புணர்ச்சியையே பாடியுள்ளன என்பதைக் காண்கிறோம்
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Hari Krishnan

unread,
Dec 18, 2012, 1:02:09 AM12/18/12
to vallamai, mintamil


2012/12/18 Karuannam Annam <karu...@gmail.com>

2.காம உறுப்புகள் பற்றிக்குறிப்பிடவில்லை.

எனக்குக் கெட்ட வார்த்தை பேசுபவன் என்று முத்திரை குத்திவிடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இருக்கட்டும் பரவாயில்லை.

மார்பகத்தைக் குறிக்கும் இரண்டெழுத்துச் சொல் இரண்டு குறட்பாக்களில் பயில்கிறது.  இவற்றில் ஒன்று மட்டும்தான் காமத்துப் பாலில் வருகிறது.  மற்றது கல்லாதவனைப் பற்றியது.

சகட்டு மேனிக்கு நான்கெழுத்தை இறைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நடுவில், ஒரே ஒரு குறளில்கூட அந்தச் சொல் பயிலாமல் ஒரு முழு காமத்துப் பாலையே பேச முடிந்திருக்கிறது.

Karuannam Annam

unread,
Dec 18, 2012, 1:47:22 AM12/18/12
to vall...@googlegroups.com, mintamil
விளக்கத்திற்கு நன்றி திரு ஹரிகி. யானை மத்தகங்களைப்பார்க்கும்போது குறளும் பொருளும் மனதில் நிழலாடுவதைத் தவிர்க்கமுடியவில்லைதான்.
கல்லாதான் குறள் மார்பகத்தைக் காம உறுப்பு என்பதைத் தெற்றனெச் சுட்டுவது.
சொல்லில் கெட்டவார்த்தையில்லை.பார்வையில்,பொருள்கொள்ளும் விதத்தில் சொல் கெட்ட வார்த்தையாக மாறுகிறது என எண்ணுகிறேன்.

மார்பகத்தையும் கண்,குழல் போல ஒரு அவயமாகத் தான் பார்த்திருக்கிறார்கள். கெட்டவார்த்தையாகப் பார்க்கவில்லை என்பது பல அன்னையரின் பெயர்கள் மூலம் வெள்ளிடைமலை.
குன்றுமுலை, பெருநல இளமுலை,  பொன்முலை, பூமுலை, உண்ணாமுலையாக இருந்தால்தான் கவுணியர்க்குப்பால் சுரந்ததை போல உலக உயிர்களுக்கெல்லாம் கருணை சுரந்தளிக்க முடியும் என்பதற்கான் குறியீடுஎனப் பெயரிட்டார்கள் என்று ஒரு கட்டுரைக்குறிப்புப் படித்திருக்கிறேன்.
பேரா. நாகராசன் கிளறிவிட்டு உண்மைதெரிஞ்சாகணும் என்கிறார்!
 அன்புடன்
 சொ.வினைதீர்த்தான்.


2012/12/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

 

2012/12/18 Karuannam Annam <karu...@gmail.com>
2.காம உறுப்புகள் பற்றிக்குறிப்பிடவில்லை.

எனக்குக் கெட்ட வார்த்தை பேசுபவன் என்று முத்திரை குத்திவிடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
மார்பகத்தைக் குறிக்கும் இரண்டெழுத்துச் சொல் இரண்டு குறட்பாக்களில் பயில்கிறது.  இவற்றில் ஒன்று மட்டும்தான் காமத்துப் பாலில் வருகிறது.  மற்றது கல்லாதவனைப் பற்றியது.

சகட்டு மேனிக்கு நான்கெழுத்தை இறைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு காமத்துப் பாலையே பேச முடிந்திருக்கிறது.நடுவில், ஒரே ஒரு குறளில்கூட அந்தச் சொல் பயிலாமல் 


N. Ganesan

unread,
Dec 18, 2012, 6:15:54 AM12/18/12
to வல்லமை, mintamil, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com

கம நிறைந் தியலும் - தொல்காப்பியர்
(கமம் நிறைந்து இயலும்)

கம- என்னும் வேரில் இருந்து பிறக்கும் தமிழ்ச்சொல் காமம்.
வடநாட்டில் திராவிட பாஷைகள் ஹிந்தி போன்றவற்றுக்கு
மாறியபோது இந்தப் பழைய அழகிய சொல் தன் சிறப்பை
இழந்து வெறும் செக்ஸ் என்றாகி இருக்கிறது. இதை
ஆராய்ந்து கவிஞர் பரமசிவன் ருத்ரா திண்ணை இதழில்
கவிதை படைக்க வேண்டுகிறேன்.

உயிர்கள் வாழவும், வாழையடிவாழையாய்த் தொடர்வும் புணர்ச்சி
தேவை. ஆக, புணர்ச்சி வாழ்வு நிறைந்தியல முக்கியம்.
ஆனால், அதுதான் காமம் என்றில்லை. உடற்புணர்ச்சி மாத்திரம்
இருந்தால் விலங்கு. உள்ளப்புணர்ச்சி இருந்தால் மாந்தர்.
உள்ளப்புணர்ச்சி பற்றிய சொல்லே காமம் என்று காமத்துப்பாலில்
காட்டியுள்ளார்.

அணுக்கு/அணுங்கு என்றால் வருத்துவது, பொடிஆக்குவது எனப்பொருள்.
இன்றும் அணுங்கு கறையான் புற்றைப் பொடிக்கும் விலங்கின்
பெயராய் தமிழில் உள்ளது: http://en.wikipedia.org/wiki/Indian_pangolin
அணுக்கு/அணுங்கு என்னும் வினையடிப் பிறக்கும் பெயர்ச்சொல் அணு.
இந்திய தத்துவங்களில் கணாதர் என்னும் முனி அளித்த கோட்பாடு
இத் தமிழ்ச் சொல் “அணு” என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது.
http://en.wikipedia.org/wiki/Kanada

அணுங்கு அணங்கு என்றும் தமிழில் ஆகும். பொருளொன்றே.
காமன் காதலால் வருத்துபவன், பிரிந்துழி காதலர் வருந்துவர். எனவே அணங்கன்
என்றும் காமனுக்குப் பெயர். தமிழ்ச்சொல் அணங்கன் வடமொழியில்
அனங்கன் எனத் திரிந்தது பொருள் விளங்காமையால் என
போப்பையர் முதல் பலர் எழுதியுள்ளனர். அணங்கன்/காமன் கன்னங்கறேர் என்ற
நிறமுடையவனாகவும், விஷ்ணுவின் மகனாகவும் ஹிந்து சமயத்தில்
காட்டப்படுபவன்.
விள்- விட்டு/விண்ணு/விண்டு என்னும் தமிழ்சொல் விஷ்ணு என்றாகியது
என்பர் வடமொழி ஆராய்ச்சி முனைவர்கள்.
இயற்கை பறவைகளும், மான்களும் காமத்தில் ஈடுபடும் காலமாகிய
வசந்தம் காமனின் காலம். வசந்த் என்ற பெயரும் காமனது தான்.
கொங்குவேள் பெருங்கதையில் காமவேள் வழிபாட்டைப் பாடுகிறார்.
சிவ-காமி சிவபிரானைக் காமிப்பவள் அன்றோ? கல்வெட்டுக்களில்
அம்மன் சன்னிதி எல்லா ஊர்களிலும் காமக்கோட்டம் என்றுதான் பெயர்.
மதறாஸ் பத்திரிகை உலகம் 20-ஆம் நூற்றாண்டில் சிருஷ்டித்த
மாதிரி ஒரு ஊருக்கோ, ஒரு கோயிலுக்கோ உள்ள பெயர் காமகோட்டம்
பழங்காலங்களில் இல்லை.

ஆல மரங்கள் இருந்த ஆலவாய் ஹாலாசியம் ஆதல் போல,
தமிழரின் காமன்விழா ஊளிவிழவு ஹூளி/ஹோளி என்று
வடநாட்டில் ஆகியுள்ளது.
http://nganesan.blogspot.com/2011/03/holi-uuli.html

காமனின் சின்னம் மகரம்/விடங்கர் என்னும் முதலை.
இச் சின்னமாக தொல்தமிழர் தேர்ந்தளித்தது வெள்ளிடைமலை அன்றோ?

இது தென்னாட்டிலும் இருந்தது. இந்தியாவில் மூன்று முதலை
இனங்கள் இருந்தன. புறநானூற்றிலும், தொல்காப்பியத்தில்
பேராசிரியர் உரையிலும் காணலாம்:
(1) கரா/கராம் - கடலின் கரையில் உள்ளது:
http://en.wikipedia.org/wiki/Saltwater_crocodile
ஈழத் தமிழருக்குப் போராட்டம் நடத்திய வே. பிரபாகரன் அவர்களின்
கரையர்/கராவர் சமூகத்தின் சின்னம் இந்தக் கரா மகரந்தான்.
(2) நகர் என்று வட இந்தியாவில் அழைக்கப்படும் விடங்கர் முதலை:
http://en.wikipedia.org/wiki/Gharial
நகர்ந்து செல்வதால் இதற்கு நகர் என்றே பெயர். இத் தமிழ்ச் சொல்
நக்கர் (நக்கரித்தல் = நகர்தல்), நக்கரம்/நக்கிரம் என்று ஆகியுள்ளது.
நக்ரமு என்று தெலுங்கில் வரும் முதலை இவ் விடங்கரே.
நக்கரப் பலகை என்றால் முதலை வடிவில் செய்யும் மணை.
கொங்குவேள் இதைப் பாடியுள்ளார். நகர்/நக்கர் - இப்பெயரில்
மக்களுக்குப் பெயர் சூட்டல் உண்டு. நக்கன் என்ற தமிழ்ப்
பெயரை சங்க காலக் கல்வெட்டுக்களில் காணலாம்.
இடைக்காலத்தில் நக்கன் என தேவதாசிகளுக்குப் பட்டம் அளிப்பதும்
இதனால்.
(3) மொகர்/மொங்கர்/மகரம் -
எல்லா ஊரிலும் உள்ளது. மொகர தான் தெலுங்கு/கன்னடத்தில்
மொசலெ, தமிழில் முதலை.
http://en.wikipedia.org/wiki/Mugger_crocodile

சிந்து சமவெளியில் காமனின் சின்னம்/கொடி மகர விடங்கர்
கொற்றவையுடன் தம்பதியராய்க் காட்டப்பட்டுள்ளனர்.
தமிழறிஞர் பேரா. வ. ஐ. சுப்பிரமணியன் சிறப்புமலரில் அச்சான கட்டுரை
பிடிஎப் இங்கே:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9
சிந்து சமவெளி ஆய்வில் ஆர்வமுடைய அனைவரும் பேரா. வ. ஐ.சு.
ஐயா (நிறுவனர், தஞ்சை தமிழ்ப் பல்கலை) சிறப்புமலர்க் கட்டுரை
படித்து மேலான கருத்துக்களை தெரிவித்தருளினால் ஆய்வுகளை
மேம்படுத்தலாகும். நன்றி.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Dec 18, 2012, 10:01:47 PM12/18/12
to vall...@googlegroups.com, mintamil


18 டிசம்பர், 2012 1:02 am அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:



2012/12/18 Karuannam Annam <karu...@gmail.com>
2.காம உறுப்புகள் பற்றிக்குறிப்பிடவில்லை.

எனக்குக் கெட்ட வார்த்தை பேசுபவன் என்று முத்திரை குத்திவிடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இருக்கட்டும் பரவாயில்லை.

மார்பகத்தைக் குறிக்கும் இரண்டெழுத்துச் சொல் இரண்டு குறட்பாக்களில் பயில்கிறது.  இவற்றில் ஒன்று மட்டும்தான் காமத்துப் பாலில் வருகிறது.  மற்றது கல்லாதவனைப் பற்றியது.

ஹரி கி ஐயா
முலை பற்றி பாடுதல் தவறு என கருதாத காலம் அது.
இந்த ”கருங்கண் வெம்முலை” பெண்ணால் இந்த ஊரே அழியுப்போகுதுனு கபிலர் வருந்துவாரே

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 
படாஅ முலைமேல் துகில். 

அந்த காலத்துப்பெண்கள் மேலாடை அணியலைனு இந்தக்காலத்தவர் சொல்லல்கூடாது  எனு ஐயன் கருதி இருக்கார்.

Hari Krishnan

unread,
Dec 18, 2012, 10:05:47 PM12/18/12
to vallamai, mintamil


2012/12/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ஹரி கி ஐயா
முலை பற்றி பாடுதல் தவறு என கருதாத காலம் அது.
இந்த ”கருங்கண் வெம்முலை” பெண்ணால் இந்த ஊரே அழியுப்போகுதுனு கபிலர் வருந்துவாரே

இந்தச் சமாதானம் எனக்குத் தேவையில்லாத ஒன்று வேந்தன்.  இந்தக் கருத்தைத்தான் நான் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகிறேன்.  ரிக்டர் அளவுகோலை பூகம்பம் பழித்ததைப் போல், பூகம்பங்கள் பொருமிக் கொண்டுள்ளன.  நான் வெறும் அளவுகோல்.  

வேந்தன் அரசு

unread,
Dec 18, 2012, 10:10:01 PM12/18/12
to vall...@googlegroups.com, mintamil


18 டிசம்பர், 2012 10:05 pm அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:



2012/12/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஹரி கி ஐயா
முலை பற்றி பாடுதல் தவறு என கருதாத காலம் அது.
இந்த ”கருங்கண் வெம்முலை” பெண்ணால் இந்த ஊரே அழியுப்போகுதுனு கபிலர் வருந்துவாரே

இந்தச் சமாதானம் எனக்குத் தேவையில்லாத ஒன்று வேந்தன்.  இந்தக் கருத்தைத்தான் நான் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகிறேன்.  ரிக்டர் அளவுகோலை பூகம்பம் பழித்ததைப் போல், பூகம்பங்கள் பொருமிக் கொண்டுள்ளன.  நான் வெறும் அளவுகோல்.  

அறிவேன் ஐயா

உங்களுக்கு சொல்லும் பாவனையில் உலகுக்கு சொன்னேன்
-- 
Reply all
Reply to author
Forward
0 new messages