க்ரியா ராமகிருஷ்ணன்

122 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 19, 2020, 12:28:25 PM11/19/20
to vallamai, housto...@googlegroups.com, Santhavasantham
டாக்டர் ஜேம்ஸ் நை (சிகாகோ பல்கலை) கூறி, ரோஜா முத்தையா நூலகத்திற்கு என்னைச் சிலமுறை அழைத்துச் சென்ற
க்ரியா ராமகிருஷ்ணன் தொற்றுநச்சிலால் மரணம். ஆழ்ந்த அநுதாபங்களுடன், நா. கணேசன்

https://thefederal.com/obituary/cre-a-ramakrishnan-the-wordsmith-of-tamil-literary-world-dies-at-75/

Cre-A Ramakrishnan, wordsmith of Tamil literary world, dies at 75

Best remembered for 'Cre-A: Dictionary of Contemporary Tamil', which is in publication for the past 30 years, he published the early works of many eminent Tamil writers and introduced direct translation of European works into Tamil

N Vinoth Kumar
4:27 PM, 17 November, 2020 Updated 5:37 PM, 17 November, 2020

Apart from publishing books, Ramakrishnan was also actively involved in the making of Roja Muthaiah Research Library in Chennai and Koothuppattarai, a theatre group. Photo: Social media

S Ramakrishnan, one of the doyens of Tamil publishing industry died due to COVID-19 on Tuesday (November 17) in Chennai.

Best remembered as ‘Cre-A’ Ramakrishnan for Tharkaala Tamil Agarathi or Cre-A: Dictionary of Contemporary Tamil, which he has been editing for the past 30 years, the 75-year-old recently released the third revised edition of the dictionary at the hospital.

Born in Chennai, Ramakrishnan worked in RK Swamy advertising agency, before taking the plunge into the Tamil literary world. He along with his friends and fellow litterateurs such as Na Krishnamoorthy and Gnanakooththan, published the Ka Sa Da Tha Pa Ra, a small literary magazine which introduced a lot of young writers in the 1970s.

Being a voracious reader, Ramakrishnan always craved for Tamil books which are published on par with books published in English. It was then that he became conscious about the use of the language and understood the importance of editing books.

Related news: Textbook for Tamil goes beyond literature, delves into films, history, science

In 1974, he started his own publishing house ‘Cre-A’ in Chennai. Its first published work was Naarkaalikaarar, a collection of plays by Koothuppattarai’ Na Muthusamy.

He published the early works of some of the writers who are now major literary figures. Sundara Ramasamy, author of JJ Sila Kurippugal, Ambai, who has written Veettin Moolaiyil Oru Samayalarai and Imayam whose work Koveru Kazhuthaigal, celebrates its silver jubilee this year are a few to name. Ramakrishnan has also published renowned epigraphist Iravatham Mahadevan’s Early Tamil Epigraphy.

Besides publishing modern Tamil literary works, Cre-A also published translated works of Albert Camus, Jacques Prevert and Franz Kafka.

While the Tamil publishing world published translated works in European languages through English editions, Cre-A has published some of the books, directly translated from French and German.

“Before that some of the Russian works were translated directly from Russian by other publishers. But they were not properly edited and proofread. Ramakrishnan has brought meticulous editing and works such as Anniyan (Stranger by Camus) and Visaranai (The Trial by Kafka) have become classics among Tamil readers,” says D Asaithambi, a journalist who worked with Cre-A for some years.

Ramakrishnan not only focused on the content but also other aspects of publishing like selecting suitable fonts and bringing modernity cover designs. Over the years, Cre-A had started to publish books on a gamut of subjects like health, environment and science.

While publishing those works, both the writer and the publisher faced a major linguistic hiccup: translating scientific jargons in English to Tamil. In order to address this lack of vocabulary, Ramakrishnan embarked on a landmark work in 1985 – publishing a contemporary Tamil dictionary. Even though a Tamil dictionary by the century-old South India Saiva Siddhanta Works Publishing Society Limited was in in publication before Cre-A, it had limited words, with most being archaic in nature.

Cre-A’s in contrast had close to 80 lakh word bank. The first edition of dictionary was published in 1992 and the second edition came in 2008 and the third revised edition was brought in November 2020.

It is also the first Tamil dictionary to be published in Braille format. The publishing house has also developed mobile application of the dictionary.

Related news: Sentenced words: Prison literature in Tamil Nadu recounts jail life, inner turmoil

“Many think that lexicographers create language. It is not true. The basic aim of a dictionary is to collect the ideas of a society about a word. So a dictionary not only helps in giving clarity on a language, but also to form a knowledge-based society. That’s why publishing a dictionary is a political act. It’s a key to democracy,” Ramakrishnan had said in one of his interviews.

Apart from publishing books, Ramakrishnan was also actively involved in the making of Roja Muthaiah Research Library in Chennai and Koothuppattarai, a theatre group. His wife Jayalakshmi predeceased him few years ago. The publication’s another latest offering was the Tamil translation of Greek economist Yanis Varoufakis’s Talking to my daughter about the economy.

 


Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Dec 13, 2020, 6:50:23 PM12/13/20
to vallamai, housto...@googlegroups.com
> டாக்டர் ஜேம்ஸ் நை (சிகாகோ பல்கலை) கூறி, ரோஜா முத்தையா நூலகத்திற்கு என்னைச் சிலமுறை அழைத்துச் சென்ற
> க்ரியா ராமகிருஷ்ணன் தொற்றுநச்சிலால் மரணம். ஆழ்ந்த அநுதாபங்களுடன், நா. கணேசன்
>

ரோஜா முத்தையா நூலகத்தைச் சென்னையில் சிகாகோ பல்கலைக்கழகம் நிறுவியது. அதற்காக, அமெரிக்க ஃபெட்னா மாநாட்டில் டாக்டர் ஜேம்ஸ் நை அவர்களைத் தமிழர்களுக்கு அறிமுகஞ்செய்தும், மாலையிட்டு வாழ்த்தியும் பேசினேன். டாக்டர் சங்கரலிங்கத்திடம் ஜேம்ஸ் நை ஃபோன் போட்டுப் பேசினார். க்ரியா ராமகிருஷ்ணனை அறிமுகம் செய்துவைத்தார். சிலமுறை சென்னையில் என்னை ரோஜா முத்தையா நூலகத்திற்கு அழைத்துச் சென்றவர் க்ரியா ராமகிருஷ்ணன் ஆவார். சிந்துசமவெளி - தமிழக ஆய்வு பற்றிய என் நூலை, அவரை வெளியிடக் கேட்கலாம் என்றிருந்தேன். கொரானா நச்சில் அதை இயலாத தாக்கிவிட்டது. ரோஜா முத்தையாவில் எனதுரை:
Some K-Initial Dravidian Loan Words in Sanskrit
https://youtu.be/GAsw1PWzFww
Int. J. of Dravidian Linguistics (2018) pp. 1-20, Vol. XLVII paper is at,
https://archive.org/details/NGanesan_IJDL_2018
https://timesofindia.indiatimes.com/city/chennai/indus-symbols-and-their-dravidian-connections/articleshow/67120027.cms

Two important lectures in RMRL:
Dr. Iravatham Mahadevan, Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case Study
http://nganesan.blogspot.com/2014/11/iravatham-indus-lecture-rojah-muthiah.html

'ரோஜா' முத்தையா நூலகத்தில் ரிச்சர்ட் ஸ்ப்ரோட்
http://nganesan.blogspot.com/2008/01/blog-post_05.html
ரோஜா முத்தையா சேகரித்த கருவூலம்:

சென்னையின் தரமணியில் (முன்பு முகப்பேரில்) ரோஜா முத்தையா நூலகம் இயங்கி வருகிறது. அரிய 100,000 புத்தகங்கள் கொண்டது. பத்திரிகைத் தொகுப்புகளோ ஏராளம். முன்பு தமிழ்நாட்டு அரசாங்கம் கூடச் சரியான விலைதந்து கோட்டையூர் 'ரோஜா' முத்தையாவின் நூலகத்தை வாங்கி வளர்த்தாத சூழ்நிலை. எழுத்தாளர் அம்பை போன்றோர் பேரா. ஏ. கே. இராமாநுஜனுக்குத் தெரிவித்து அவரது பரிந்துரையால் ஜேம்ஸ் நை (James Nye, University of Chicago) முயற்சி எடுத்துப் பல லட்சங்கள் செலவிட்டுச் சிக்காகோ பல்கலைக்கழகத்தால் சென்னைக்கு ஒரு நவீன பலகலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஏ. கே. இராமனுஜன், இந்திரா பீட்டர்சன் எனக்கு முதலில் இப்படி ஒரு நூலகம் கட்டுகிறோம் என்று அறிவித்தனர். சென்னை சென்றபோது அதன் அலுவலர்களைப் பார்த்துச் சரிவர நடக்கிறதா என்றறியச் சொன்னார் ஜிம் நை. அப்போது, 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன், நூலகர் சங்கரலிங்கம் போன்றோர் இருந்தனர். ரோஜா முத்தையா நூலகத்தை அருமையாக வளர்த்தெடுத்த என் நண்பர் சங்கரலிங்கம் அகாலமாக இயற்கை எய்திவிடவே, பின்னர் தியோடோர் பாஸ்கரன், தற்போது சுந்தர் இயக்குநர்களாக விளங்குகின்றனர். தமிழ்நாடு ஃபௌண்டேசன் விஸ்கான்சினில் நடத்திய ஜூலை 4 மாநாடு ஒன்றில் நண்பர் ஜேம்ஸ் நை (அவர் அடிப்படையில் ஸம்ஸ்க்ருத பிஎச்டி) அவர்களை அழைத்து அவர் செய்த செயலைப் பாராட்டி மாலையிட்டுக் கௌரவித்தேன். அன்று அந்த ஊரின் பல தமிழர்களே இவரைப் பற்றி இதுவரை தெரியவில்லை என்றனர்.

சிந்து சமவெளி நாகரிக ஆய்வுகள்:

மைக்கேல் விட்சல் (ஹார்வர்ட் பல்கலை, வேதவியல் நிபுணர்) மற்றும் அவர் நண்பர் ஸ்டீவ் ஃபார்மர் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகம் அல்ல, அதன் காரணங்களுள் ஒன்று ரிக் வேதத்தில் முக்கியமான இடம் வகிக்கும் குதிரை, குதிரை பூட்டிய இரதங்கள் (chariots) இல்லை என்பர்.

உடைந்த ஒரு சிந்து முத்திரை காளையைக் காட்டுவது, அதை எடுத்துக் கணினியில் ஃபோட்டோஷாப் போன்ற மென்பொருட்களால் அடியோடு மாற்றிக் குதிரை என்று புத்தகங்களில் அறிவித்திருந்தார் பெங்களூரின் நவரத்ன எஸ். ராஜாராம். இதனைக் கண்டறிந்து ஸ்டீவ் எழுதிய கட்டுரை ஹிந்து நாளிதழின் Frontline பத்திரிகையில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியமை நீங்கள் அறிந்திருக்கலாம். ஐராவதம் மகாதேவன் நாமெல்லாம் நன்கறிந்த தெனாலிராமன் கதை மூலமாக என். எஸ். ராஜாராமின் "சிந்துக் குதிரை" பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் பலர் ஆங்கிலப் பத்திரிகைளில் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியருடையது என்று எழுதினர்; இவர்களில் பலருக்கும் இவ்வாறு அறிவிக்க அடிப்படைத் தகுதிகள் இருக்காது, ஆனால் இந்தியத் தொல்பொருள் துறையில் உயர்பதவி வகித்த எஸ். ஆர். ராவ், பி.பி. லால் போன்றோரும் பதவி ஓய்வு பெற்றபின் பல புத்தகங்கள் எழுதியுள்ளனர். அவற்றில் சிந்து முத்திரைகளில் உள்ள எழுத்துக்களை வடமொழியில் படிக்கலாம் என்று கூறுகின்றனர்.

மேலும் பா.ஜ.க ஆட்சிக் காலம் நிகழ்ந்த காலத்தில் தான் பல பத்திரிகைகள் இணையப் பதிப்பாயின. அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி. அமெரிக்கா வந்த பல இந்தியர்களுக்கும் கணினி, இணைய வசதிகள் ஏற்பட்ட சூழல். இதெல்லாம், ஐ.டி. துறையில் சிற்றூர் கல்லூரிகளில் படித்தோர்கூட அமெரிக்கா போன்ற வெளியூர்களுக்குச் செல்ல வாய்ப்புகள் ஏற்படுவதன் முன்னம் நிகழ்ந்தன. ஐ.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் படித்து முடித்தவுடன் அமெரிக்கா வந்துவிடுவார்கள், பலர்க்கும், தமிழ் போன்ற தாய்மொழிகளைப் படிக்கவோ, எழுதவோ தெரியாது. இன்றும் ஆங்கிலத்தில் எழுதுவோரின் இணையத் தமிழ்ப் பங்களிப்புக் குறைவாகவே இருத்தலை அவதானிக்கக் கூடும்.

பல பத்தாண்டுகளாக ஹீராஸ் பாதிரியார், ஃபேர்செர்விஸ், ஆஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன் போன்றோர் சிந்து சமவெளி நாகரிகம் திராவிடருடையது என்ற ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவர்கள் திராவிட மொழிகள் சிந்து முத்திரை எழுத்துக்களில் உள்ளன என்று கூறுகின்றனர். வேதவியல் நிபுணர் ஆஸ்கோ பார்போலா கட்டுரையைப் படிக்கலாம்.

சிந்து முத்திரைகளில் ஒருவகை எழுத்துக் குறியீடுகள் இருக்கின்றன. ஒரு 4000 முத்திரைகள் 10,000 சதுர மைல் பரப்பில் நூறு ஆண்டுகளாய்த் தோண்டித் தொல்லியலாளரால் எடுக்கப்பட்டுள்ளன. முத்திரை எழுத்துக் குறிகள் மிகக் குறைவானவையாக இருக்கின்றன. ஏறத்தாழ ஒரு முத்திரைக்கு 5 குறிகளே உள்ளன. நிறைய (உ-ம்: 30-40) எழுத்துக்குறிகளுடன் ஒரு முத்திரையும் இதுவரை அகப்படவில்லை. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு பேராசிரியர்கள் மைக்கேல் விட்சல், ஸ்டீவ் ஃபார்மர், ரிச்சர்ட் ஸ்ப்ரோட் மூவரும் ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளனர். அவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தினர் எழுத்தறிவு இல்லாதார், அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றுரைக்கின்றனர்.அதன் தேற்றம் சிந்து முத்திரைகளில் இருப்பவை எந்த மொழியையும் சார்ந்தவை அல்ல, எனவே சிந்து முத்திரைகளை வடமொழி, தென்மொழி என்று படிப்பதெல்லாம் வெட்டிவேலை என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஸ்டீவ் ஃபார்மர் நடத்தும் ஆய்வுக்குழு:
http://groups.yahoo.com/group/indo-eurasian_research/

சென்னையில் ரிச்சர்டின் சொற்பொழிவு:

பேரா. ரிச்சர்ட் ஸ்ப்ரோட் வரும் திங்கட்கிழமை ரோஜா முத்தையா நூலகத்தில் பேசுகிறார். ஃபெஸ்தோஸ் வட்டில் (Phaistos disc) என்பதன் எழுத்துக்களைப் பலர் படிக்க முயன்றும் இன்னும் அவிழ்க்க முடியாத புதிராக விளங்குகிறது. இன்னும் மேலும் அதேபோன்ற எழுத்துக்கள் கொண்ட சான்றுகள் கிடைத்தாலொழிய அதனைப் படிப்பது இயலாக் காரியம். நேரம் இருந்தால் சென்னையில் உள்ளோர் ரிச்சர்டின் ஆய்வுரையை வரும் திங்கட் கிழமையன்று கேட்கலாம். ரோஜா முத்தையாவின் அரும்பணிகளையும், தமிழின் புதிய சரசுவதி மகாலையும் காணலாமே!

நா. கணேசன்

kanmani tamil

unread,
Dec 14, 2020, 1:33:26 AM12/14/20
to vallamai
தரமணியில் ரோஜா முத்தையா நூலகம் நிறுவப்பட்ட வரலாற்றைத் தெரிவித்தமைக்கு நன்றி.
சக  

பி.கு.
சென்னையில் நிறுவப்படும் முன்னர் இங்கு ம.கா.பல்கலை.யிலிருந்து ஆய்வு மாணவர்கள்...; அவர்களது பூர்விக வீட்டோடு சேர்ந்து இருந்த நூலகத்திற்குச் சென்று நூல்களைப் பார்வையிடுவது பற்றிக் கேட்டிருக்கிறேன்.
எங்கள் துறையின் மூத்த பேராசிரியர் ஒருவர் சொல்வார்; 'சிவகாசியிலிருந்து அங்கே போய்ச் சேர்ந்தவுடன் என்னை முதலில் சாப்பிட வைப்பார்கள்; அதற்குப் பிறகு தான் நூலகத்திற்குள் நுழைவேன்' என்பார். 
'முன் பின் தெரியாத என்னை அவர்கள் உபசரிக்கும் விதம் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது' என்பார்.

எங்கள் பகுதியில் இல்லாத வேறுபட்ட பழக்கம்- அந்த வட்டாரத்தில் இன்றும் விருந்து போற்றும் பண்பு- கேட்டு நாங்கள் வியந்துள்ளோம்.    

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcEE%3DDTy1rkvHgsPzM1QGYXd7xy66PCECSKVwuXezPLBw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Dec 14, 2020, 8:45:17 AM12/14/20
to vallamai, housto...@googlegroups.com
On Mon, Dec 14, 2020 at 12:33 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தரமணியில் ரோஜா முத்தையா நூலகம் நிறுவப்பட்ட வரலாற்றைத் தெரிவித்தமைக்கு நன்றி.
சக 

முதலில், முகப்பேர் என்னுமிடத்தில் கலியாண மண்டபத்தில் அமையப்பெற்றது.
கோட்டையூரில் இருந்து சென்னைக்கு நூல்களை நகர்த்தும்போது யார்யார் லஞ்சம்
கேட்டனர் என டாக்டர் நை கூறினார். சிகாகோ பல்கலை சுமேரியா, எகிப்து போன்ற
நாடுகளின் தொல்லெழுத்துகளை அறிய ஆய்வு செய்த பல்கலை. தமிழ்நூல்கள்
அழிந்துபடாமல் காக்கும் விஞ்ஞான முறைகளைக் கற்றுத்தர வருகிறோம்.
லஞ்சம் கொடுத்துப் பழக்கமில்லை எனக் கையை விரித்துவிட்டார்கள்.
ஸ்பேஸ் எக்யுப்பெண்ட் போக, வரும்போது ருஷ்யாவிலும் இதுபோல்
லஞ்சம் கேட்பதைக் கண்டிருக்கிறேன் ....


பி.கு.
சென்னையில் நிறுவப்படும் முன்னர் இங்கு ம.கா.பல்கலை.யிலிருந்து ஆய்வு மாணவர்கள்...; அவர்களது பூர்விக வீட்டோடு சேர்ந்து இருந்த நூலகத்திற்குச் சென்று நூல்களைப் பார்வையிடுவது பற்றிக் கேட்டிருக்கிறேன்.
எங்கள் துறையின் மூத்த பேராசிரியர் ஒருவர் சொல்வார்; 'சிவகாசியிலிருந்து அங்கே போய்ச் சேர்ந்தவுடன் என்னை முதலில் சாப்பிட வைப்பார்கள்; அதற்குப் பிறகு தான் நூலகத்திற்குள் நுழைவேன்' என்பார். 
'முன் பின் தெரியாத என்னை அவர்கள் உபசரிக்கும் விதம் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது' என்பார்.

எங்கள் பகுதியில் இல்லாத வேறுபட்ட பழக்கம்- அந்த வட்டாரத்தில் இன்றும் விருந்து போற்றும் பண்பு- கேட்டு நாங்கள் வியந்துள்ளோம்.    

இப்பொழுது பல பில்லியன் $ வரும்படி விருதுபட்டி, சிவகாசி, ... என வந்துகொண்டுள்ளது. காலப் போக்கில் வரும் என நினைக்கிறேன்.

எங்கள் விருந்துபோற்றும் பண்பை செட்டிநாடு தந்த மகாகவி (கண்ணதாசன்) பாடியுள்ளார். படித்திருக்கிறீர்களா?
கோயம்புத்தூர்: ஒரு விளக்கம்
        கவிஞர் கண்ணதாசன்
தும்பி சேர கீரன் பாடல் பற்றி எழுதினேன். 3 நாள் முன் மறைந்த பசிப்பிணி மருத்துவனார் (பழனிச்சாமி சுப்பிரமணியன், சாந்தி கியர்ஸ்)
பற்றியும், அவரது குலப்பெயர் பற்றியும் எழுத ஆவல். பார்ப்போம். அவரைப்போல ஒருவன், எகிப்து முசிரிப் பட்டினம் வழியாகப்
போயிருக்கிறான். தமிழ் பிராமி எழுத்து பானையோட்டில் ’-ணந்தை கீரன்’ என உள்ளது. கண்ணந்தை குலத்தானாக இருக்கலாம்.
தை தமிழ் மாதங்களில் உள்ள ஒரே தமிழ்ப்பெயர். கண்ணன்+தை - கண்ணந்தை. ஆந்தை (உ-ம்: வா.செ. குழந்தைசாமி), பூந்தை,
கீரந்தை, சாத்தந்தை (காலிங்கராயன் கால்வாய் வெட்டிய ஊத்துக்குழி காலிக்ரராயர்கள், புலவர் செ. இராசு) ... 63 குலங்களும்,
அவர்களின் குலதெய்வக் கோவில்களும் உண்டு. சேரலன் என்ற கூட்டமும் உண்டு. ஃபெட்னா நிறுவனர்களில் ஒருவர் தணி கே. சேரன்,
ம. பெ. தூரன் (தூரன் குலத்தார் - தமிழிசை வளர்த்தவர், கலைக்களஞ்சியம் ஆசிரியர்). அவரது ஊர், உறவினர் ராஜ், இழவுக்குப் போயிருக்கிறேன்.
அவரது மகள் (தாய்: பிரெஞ்சு நாட்டுப் பெண். அவரது அண்ணனும் ராஜும் க்ளாஸ்மேட்ஸ், சிகாகோவில்) செலின் கவுண்டரை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரானா டாஸ்க் ஃபோர்ஸில் நியமித்துள்ளார். செனினின் தந்தை, சாந்திகியர்ஸ் பி. சுப்பிரமணியன்
பற்றி எழுத ஆவல். பார்ப்போம்.
NG

N. Ganesan

unread,
Dec 16, 2020, 10:18:27 AM12/16/20
to vallamai, housto...@googlegroups.com
ரோஜா முத்தையா நூலகத்தின் அடித்தளம் சங்கரலிங்கத்தால் அமைக்கப்பட்டது!

ரோஜா முத்தையா நூலகத்தின் நூலகர் சுந்தரின் பேட்டியை வாசித்தேன் (‘வங்கத்திலிருந்து வருகிறார்கள்; இங்கிருப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை’, ‘இந்து தமிழ்’ ஆகஸ்ட்-14). அதில் நூலகர் சுந்தர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்: “1994-ல் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. அப்போது, நாங்கள் கைகளில்தான் புத்தகங்களைப் பட்டியலிட்டு வந்தோம். பிறகு, கணினிகள் மெல்ல மெல்ல ஊடுருவ, நாங்கள் கணினிக்கு மாறினோம்.”

இது உண்மை அல்ல; இப்படிக் கூறுவது ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் முதல் இயக்குநரும், நூலகத் துறையில் நீண்ட பயிற்சி பெற்று, கணினிவழி நூற்பட்டியலைத் தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்தவருமான ப.சங்கரலிங்கத்தின் பங்கை இருட்டடிப்புச் செய்வதாகும். இந்நூலகத்தின் ஆரம்பகட்டப் பணிகளில் சங்கரலிங்கத்துடன் இணைந்து செயலாற்றியவன் என்னும் முறையில் என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும்.

1990-1991-லேயே சங்கரலிங்கம் கணினியைப் பயன்படுத்தி இந்திய மொழி ஆவணங்களுக்கு நூற்பட்டியல் தயாரிக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தார். இப்படிச் செய்வற்கான வாய்ப்பு புதுவை பிரெஞ்சு நிறுவனம் மூலம் அவருக்குக் கிட்டியது. தன் நூலகத்தில் இருந்த இந்திய மொழி ஆவணங்களுக்குக் கணினிவழி நூற்பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை சங்கரலிங்கத்துக்கும் அவருடன் பணியாற்றிய பேராசிரியர் கே.எஸ்.ராகவனுக்கும் இந்த நிறுவனம் அளித்தது. இந்தத் திட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகத் துறையிலிருந்து செயல்பட்டது.

ரோஜா முத்தையாவின் புத்தகச் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட சிகாகோ பல்கலைக்கழகத்தின் சார்பாக ஜேம்ஸ் நை, டிசம்பர் 1992-ல் சென்னைக்கு வந்தார். அவர் நோக்கம் தமிழ்நாட்டில் எந்த நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பொறுப்பை ஏற்பது என்று தெரிந்துகொள்ள முயல்வது. ‘மொழி அறக்கட்டளை’யுடன் தொடர்புகொண்டிருந்த ஏ.கே.ராமானுஜன், நை என்னைச் சந்திக்க வேண்டும் என்று யோசனை சொல்லியிருந்தார். ஆகவே, நை என்னுடன் பேசினார். அப்போது அவரிடம் சங்கரலிங்கத்தின் முயற்சிகளைக் குறிப்பிட்டு, நை சங்கரலிங்கத்தின் திட்டப் பணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் சொன்னதன்பேரில் டிசம்பர் 11-ம் தேதி நாள் முழுவதும் சங்கரலிங்கத்துடன் கழித்து, அவருடைய கணினிவழி நூற்பட்டியல் பணிகளை நை கேட்டறிந்தார். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் நூலகத் துறையில் சங்கரலிங்கம் ஒருவர்தான் இந்த முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர்.

இந்தச் சந்திப்புதான் சிகாகோ பல்கலைக்கழகம் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தை நிறுவ வேண்டும் என்ற முடிவுக்குக் காரணமாக அமைந்தது. சங்கரலிங்கம் ‘மொழி அறக்கட்டளை’யின் அறங்காவலர்களில் ஒருவராக இருந்தார். சங்கரலிங்கம் கடுமையான உழைப்பாளி. தன் துறையில் புதிய அறிவைப் பெற, இரவும் பகலும் உழைப்பார். இந்தக் கடின உழைப்பின் விளைவாகத்தான் 1996 இறுதியிலேயே ரோஜா முத்தையா நூலகத்தில் இருந்த அனைத்துப் புத்தகங்களுக்கும் கணினிவழி நூற்பட்டியல் தயாராகிவிட்டிருந்தது. கணினிப் பயன்பாட்டினாலேயே அவர் இதைச் சாதிக்க முடிந்தது. 1994-ல் கையால் நூற்பட்டியல் தயாரிக்க வேண்டியிருந்தால், 1996-ல் இந்தச் சாதனை சாத்தியப்பட்டிருக்குமா?

ஆக, 1994-ல் நூலகம் சென்னைக்கு வந்த உடனேயே கணினிவழி நூற்பட்டியல் வேலையும் தொடங்கிவிட்டது. அப்போது நூலகத்தின் பணியில் சுந்தர் சேர்ந்திருக்கவில்லை!

- ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், அகராதியியலாளர், பதிப்பாளர் -

க்ரியா பதிப்பகம்.

தொடர்புக்கு: creapub...@gmail.com

https://www.hindutamil.in/news/opinion/columns/137789--1.html
Reply all
Reply to author
Forward
0 new messages