தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் 

7 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Aug 28, 2025, 3:57:55 AM (8 days ago) Aug 28
to

குடியிருப்பு பகுதிகளில்  பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் 


தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டத்தில்   நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரிந்தது. பக்கத்தில் நிழலாக தெரியாததை மாணவர்கள்,பொதுமக்கள்  ஆச்சரியத்துடன் பார்த்தனர். விடுமுறை  காலமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

                                தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்த்து அதன் அறிவியல் விவரங்களை தெளிவாக எடுத்து கூறினார்கள் தங்களை சுற்றியுள்ள பெற்றோர்களுக்கும் ,பொதுமக்களுக்கும்,உறவினர்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கி கூறினார்கள்.நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் முத்துலெட்சுமி , முத்துமீனாள்   ஆகியோர்  மாணவர்களுக்கு கொடுத்த தகவலில், ‘‘பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும்.சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்கு சமமாக மாறும் போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும் . அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும்.  இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் அன்று  நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது’’

                  இதனை கருத்தில் கொண்டு  மாணவிகள் ரித்திகா, நந்தனா, லேகாஸ்ரீ,ஸ்டெபி,     ஆகியோர் தங்கள் வீடுகளின் அருகில் நிழல் இல்லாத நாளை உருளை வடிவ பொருளை வைத்து செய்து பார்த்தனர்.தங்களின் நிழல் தங்களுக்கு தெரியாததை கண்டு ஆச்சிர்யப்பட்டனர்.தங்களுடன் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் எடுத்து கூறினார்கள்.தங்களின் பெற்றோர்களுக்கும்,பொதுமக்களுக்கும் இதனை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நிழல் இல்லாத நாளை தங்களின் வீடுகளில் இருந்து உருளை வடிவ பொருளை கொண்டு செய்து பார்த்தனர். பொதுமக்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கினார்கள்.

பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் - வீடியோ 

https://www.youtube.com/watch?v=-xZcYml5Z9k

https://www.youtube.com/watch?v=3rsLMX5z6_w

IMG-20250827-WA0053.jpg
IMG-20250827-WA0077.jpg
IMG-20250827-WA0048.jpg
IMG-20250827-WA0044.jpg
IMG-20250827-WA0050.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages