On Wednesday, October 16, 2013 5:34:53 AM UTC-7, DEV RAJ wrote:
On Wednesday, 16 October 2013 17:37:12 UTC+5:30, வம்பாண்டி wrote:
கி.மு. 300 முதல் கி.பி 200 வரை உள்ள காலம் classical period என்ற சங்க காலத்தைக் குறிப்பிடும் காலம்
இதிலேயே கருத்து வேற்றுமை உள்ளது ஐயா
சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300)
கி.பி ஏழாம் நூற்றாண்டுவரை என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
களப்பிரர் காலமும் சங்ககாலத்தில் சேர்ந்து விட்டது.
தொல்காப்பியர், திருவள்ளுவர், திருமூலர், மாணிக்க வாசகர் இவர்களின் காலமும்
உறுதியாக்கப்படவில்லை.
பொதுவில் தேவர்களுக்கான ஆலயங்கள் இருந்துள்ளன என்பதற்குத்தான்
அகத்திணையியல் நூற்பாவை முன்வைத்தேன். அது அஜெண்டா என
ஓரங்கட்டப்பட்டது
தேவ்
சங்க இலக்கியம் பற்றி குழப்பங்களை ஏற்படுத்த இன்றைய அஜெண்டாக்கள்
பயன்படுவதைப் பார்க்கிறோம். இது பற்றி அண்மையில் தமிழ்ப் பேராசிரியர்கள்
விரிவாக விளக்கியிருந்தனர்.
வீட்டுவிலக்குப் பெண்களை சங்க காலத்தில் தீட்டு (மலையாளத்தில் தீண்டம்) என
ஒதுக்கிவைக்கும் செயல். இதைக் குறித்துப் பாடுகிற சங்கப் பாடல்
புறநானூற்றிலே உள்ளது. இந்தியா முழுமையும் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன,
முக்கியமாக திராவிட மொழிபேசும் மக்களுடன் ஒப்பிடலாம். இந்தப் பாடலை
தமிழறிஞர்கள் அருமையாக விளக்கியுள்ளனர்.
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
5 தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே.
ஆனால், அஜெண்டாக்களுக்கு ஒத்துவராத இதுபோன்ற பாடல்களை
என்ன செய்வது எனத் தெரிவதில்லை சிலருக்கு. அதனால், புலை
என்றால் பொலி என்று எழுதி வருவதைத் தமிழறிந்த பேராசிரியர்கள்
பார்த்து நகைக்கின்றனர். காலத்தால் நிற்காத புலை = பொலி போன்றவற்றின்
ஆதரவு இன்றைய அஜெண்டாக்கள், தமிழ் இந்தியாவின் சமூக அமைப்பை
2000 ஆண்டுகளுக்கு முன்னர் அறிந்துகொள்ள உதவாதவை என்று
சம்ஸ்கிருத, ப்ராகிருத, த்ராவிட, செந்தமிழ் பேராசிரியர்கள் பலரும்
புரிந்துகொண்டுவிட்டனர்.
புலை- என்னும் சொல் தமிழிலும், பிற த்ராவிட மொழிகளிலும் அரத்தம்
என்னும் பொருளுடையது. உடற்கழிவு ரத்தம் கொண்ட சீலை போன்றன
தீட்டாகக் கருதப்பட்டன. இதனால் ஏகாலியரை புலைத்தி என்றழைக்கும்
பெயர்ச்சொல் தமிழர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கிறது. இக் கருத்து
வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரஜகீ, ரஜகன் என்று வருகிறது.
புலையன், புலைத்தி என்னும் சொற்கள் மிக ஆழமான வரலாறுடையவை.
புலை- என்ற சொல் வீட்டுவிலக்கு இரத்தம் என்று பல திராவிட மொழிகளில்
உள்ளது, அவ்வாட்சிக்கு வேராக இயங்கும் புலை தரும் சொற்கள் புலவு/புலா(ல்).
புலவு உண்ணும் விலங்கு புலி என அறிவீர்கள். இன்று இந்தியாவில் சாதிக் கொடுமைகள்
இல்லை என்பதை பத்திரிகைகளில் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். கிரேக்க நாட்டில்
அடிமைகள் இருந்தனர், எத்தனையோ உன்னதங்களும் இருந்தன. அதுபோல், எத்தனையோ
உயர்ச்சிகளை கொண்ட இந்தியாவில் சாதி ஒரு கூறாக 3500 ஆண்டுகளாய் உள்ளது
என்பதைக் காட்டும் பாய்ண்ட்டர்ஸ் தருவது வடமொழி, சங்க இலக்கியங்கள்.
தற்கால அஜெண்டாவுக்காக, புலை என்றால் பொலி என்பதற்கு ஆதரவு காட்டவேண்டுமா?
காந்தி, பெரியார், அம்பேத்கார், பாரதி, பாரதிதாசன், கம்யூன்ஸ்ட்ஸ் (உ-ம்: இந்து ராம்),
தலித் கட்சிகள் பல (உ-ம்: திமுகவின் விடுதலைச் சிறுத்தைகள்), ...
போன்ற பலர் இன்று இந்தியாவின் சாதிகளை ஒழித்துவருகின்றனர்.
புகழ்மிக்க அமெரிக்காவின் பல்கலைக்கழகப் பேருரை - பேரா. Donald Lopez பௌத்தத்தின்
பேராசிரியர் ஒருநூலை வாங்கினேன், சென்ற வாரஇறுதியில். Scientific Buddha என்பது
நூல் தலைப்பு. புடகம்/புண்டரிகம் புள்- என்னும் வேர் தரும் சொல் என்றும்
‘ஓம் மணிபத்மே ஹூம்’ என்னும் பொதிகை அவலோகிதன் பற்றியும், தாமரைக்கண்ணன்
என்று இந்திரனை வள்ளுவர் பாடக் காரண விளக்கமும் பேரா. லோப்பஸ் ஐயா
போன்றோர் நூல்களாலே தான் எனக்கு விளக்கமாகின்றன. பல பௌத்த/சமண நூல்கள்
அழிக்கப்பட்டுவிட்டதால் சுமார் 10 மொழிகள் அறிந்த பேராசிரியர்கள் ஆய்வுகளால்
இந்தியாவின் வரலாற்றை அணுகவேண்டியுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில்
பௌத்தம் பரவிவருகிறது. ஆனால், அந்த பௌத்தத்திற்கும் பழைய பௌத்தத்துக்கும்
எந்தத் தொடர்புமில்ல்லை என்பதே ஸ்யண்டிஃபிக் புத்தர் என்னும் நூலின் மையக்கரு,
புத்தர் எத்தனையோ அவதாரம் எடுத்தார். இது 21-ஆம் நூற்றாண்டின் அவதாரம்! என்கிறார்
பேராசிரியர். அதுபோல்தான், அஜெண்டாகாரர்கள் புலைத்தி, கலம் தொடா மகளிர்
பற்றிச் சொல்வதாகும். ஆனால், தமிழின் பேராசிரியர்கள் கூறுவதையும் கணக்கிலெடுத்தால்
சங்கத் தமிழும், அது சுட்டும் சமூகமும் புரிந்துகொள்ளலாம்.
2000+ ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மற்றும் இந்திய சமூக அமைப்பைக்
காண மூல நூல்கள் - சங்கம், வடமொழி ஒப்பீட்டாய்வுகள் அவசியம்.
இதை இன்றைய அஜென்டாக்காரர்கள் சொல்வதுபோல் படித்தால் நியூ யார்க் டைம்ஸ்
ஆகும். பழைய இந்தியாவின் சமூக அமைப்பும், பழக்கவழக்கங்களும் புரியாமல்
மறைக்கப்பட்டுவிடும். உம்: அணு, அணங்கன்/அனங்கன் என்னும் சொற்கள்
சங்கத் தமிழின் அணங்குக் கோட்பாடு, அணுங்கு/அழுங்கு (Indian Pangolin) போன்றவை
காட்டும் இந்தியாவின் பண்டைச் சரிதம் முக்கியம். ஆழ்- > ஆணி இருக்குவேதத்திலேயே
இத் தமிழ்ச் சொல் இருக்கிறது. அதுபோல், தமிழர் இன்றும் அழுங்கு அணுங்கு என்னும்
விலங்குப் பெயர் சொல்கின்றனர், ஆழ்வார் என்ற சொல் புத்தருக்கும், தீர்த்தங்கரருக்கும்
முதலில் அவர்கள் யோகு, தியானத்தில் ஆழ்பவர்கள் ஆனதால் கல்வெட்டுக்களில்
வருகிறது. தியானமூர்த்தி தக்ஷிணாமூர்த்திக்கு ஆழ்வார் என்கிறது தேவாரம்.
சில நூற்றாண்டுகள் சென்றபின் விஷ்ணு/கிருஷ்ணன் பக்தியில் ஆழ்வாரை
ஆழ்வார்கள் என்றே போற்றுகிறது ஸ்ரீவைஷ்ணவம். ஆள்தல், ஆழ்தல் இரண்டும்
வேறுபட்ட மூலச்சொற்கள். ஆழ்-தல் ஆண்டி (கொத்தாண்டி - அவலோகிதன்,
கவராண்டி - வச்சிரபாணி, மாயாண்டி - விஷ்ணு, பேயாண்டி - சிவன்,
விருமாண்டி - தியானத்தில் உள்ள வேத பிரமா). ஆண்டாள் < கிருஷ்ணனில் ஆழ்பவள்.
ஆழ்வார் என்ற சொல் ஆள்தல் என்பதில் இருந்து உருவானதன்று என்று தமிழ்
வரலாற்றை, கலைவரலாறை பார்த்தால் தெரியும்.
பேரா. Donald Lopz, Scientific Buddha நூல் ஞாபகம் வந்தது. முனைவர் ழான்-லுக் செவியார்
திருவள்ளுவன் இலக்குவனாரின் கட்டுரையின் தொடக்கம் பற்றி எழுதியிருந்ததை
இன்று படிக்கும்போது. இன்றைய அஜென்டாக்கள் சங்க இலக்கியங்களின் பொருளை
உணராமல் செய்கின்றன. ஆனால், தமிழின் பேராசிரியர்கள் விளக்கி எழுதி வருவதால்
பொருள் விளங்கிவிடும் என நினைக்கிறேன்:
[Begin Quote]
Dear iraamaki,
thank you.
This post (for which you give the link) seems to be identical
with the article which came out
in issue 19 of மணற்கேணி
(dated July -- August 2013).
I see on pages 55-61 of my copy of the journal
the same title,
புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்லன்
the same first sentence
"சங்க இலக்கியங்களில் செருகப்பெற்றுள்ள சாதியாண்மைக் கருத்துகளை அறிந்து செம்மையாக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு உள்ளது."
and the same last sentence
"தமிழ் நெறிக்கேற்பத் தமிழ் இலக்கியப் புரிதலுணர்வை வளர்க்க வேண்டும்."
[End Quote]
This makes me remind the book that I'm currently reading by Prof. Donald Lopez, Scientific Buddha.