Re: [MinTamil] Re: சிலப்பதிகாரம் காட்டும் மதுரை

9 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 18, 2019, 7:33:25 AM10/18/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kanmani tamil
On Thu, Oct 17, 2019 at 7:35 PM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்  அம்மா
நீடூழி வாழ்க.  
அன்புடன்
ப.பாண்டியராஜா

பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அம்மா. நூறாயுளோடு நலம்பெற வாழ்க.

சோழநாட்டுக்காரரான நீங்கள் (கும்பகோணம்), மதுரையில் பயின்றவர்.
உங்களை நினைத்தால் சம்பந்தர் தேவாரம் நினைவிற்கு வருகிறது.
மதுரைப் பட்டர்கள் - தங்கம் பட்டர், ராஜரத்தினம் பட்டர் - நாங்கள்
செல்லும்போது தமிழ் அர்ச்சனை, அதன் பின்னர் இதுபோன்ற பாடல்கள்
பாடுவர். அண்மையில் அவர்கள் மகன், மாணிக்கசுந்தர குருக்கள்
சீகாழி சிவசிதம்பரத்தை அழைத்துச் சென்றபோது பாடினார்.
சீகாழி நான் கேட்ட பாடல்கள் சில பாடினார்: சின்னஞ்சிறு பெண் போலே ...

மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,வரிவளைக் கைம்மட மானி,
பங்கயச் செல்வி, பாண்டிமா தேவி பணிசெய்து நாள் தொறும் பரவப்,
பொங்கு அழல் உருவன், பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி,
அங்கயல் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
  
நீங்கள் தமிழ் வானில் (1) ஓர் அரிய பறவை. எத்தனையோ பேராசிரியர்கள் லக்ஷக்கணக்கில்
சம்பளம் எனினும், தாம் கண்டதை ஒருவரி கூட முழு வாழ்க்கையிலும் பதிவு 
செய்யமாட்டார்கள். கேட்ட கேள்விக்கு உடன் பதிலும், ஆய்வு நுட்பங்களும்
அளிக்கும் கட்டுரைகளும் இன்னும் நீண்ட காலம் எழுதுங்கள். தமிழன்னை
மகிழ்வாள். 

கல்விக்கண் திறந்த காமராஜ் நாடாரைப் பார்த்த நிகழ்வு ஒன்று பற்றி
எழுதினீர்கள். பழைய போட்டோ வீடில் இருந்து வந்தது - வாட்ஸப்பில்.
ஆவடிக் காங்கிரஸ். கோவை அய்யாமுத்து எங்கள் உறவினர்.
வரவேற்பு, உணவு கமிட்டிகளின் தலைவர். அய்யாமுத்துவை பெரியார்
சினிமாவில் பார்த்திருக்கலாம். பெரியாரும், அவரும் வைக்கம் போகும்
நிகழ்ச்சி. பெரியாரைப்பற்றி இன்று வரும் பல கட்டுரைகள்
“எனது நினைவுகள்” நூலிலே காணலாம். காமராஜர், என் பெரியப்பா,
அம்புஜத்தம்மாள். எப். வி. அருள், ... உள்ள அரிய படம். நேரு அப்போது
தமிழர்களின் ஹீரோ.  சென்னை மாநாட்டுக்கு சென்னை வந்து
இறங்குகிறார்.

அன்புடன்,
நா. கணேசன்

(1) வட இந்தியாவில் காயம் என்ற சொல்லை விண்ணுக்கு வழக்கில் இருந்தது போலும்.
கதிர் காயும் அண்டம் = காயம்.  இச்சொல்லை, விண் என்ற பொருளில் புறநானூறு
போன்ற நூல்களில் காண்கிறோம். காயா என்பதும் விண்ணின் நிறமுள்ள மலர்கள்
கொண்ட மரம், கண்ணபிரானின் நிறம் காசாம்பூ. ஆ-காசம் என்ற வடசொல் இதனாற்
பிறந்த சொல். 
    "விண்" என்னுஞ் சொல். (தொல்.)
    305. விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின்
    உண்மையு முரித்தே அத்தென் சாரியை
    செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை

    இது செய்யுளுள் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தது.

    இ-ள்: விண் என வரூஉங் காயப் பெயர்வயின்-விண்ணென்று சொல்லவருகிற ஆகாயத்தை உணரநின்ற பெயர்க்கண், அத்து என் சாரியை மிகுதலும் உரித்து-அத்தென்னுஞ் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து, செய்யுள் மருங்கில் தொழில் வருகாலை-செய்யுளிடத்துத் தொழிற்சொல் வருங் காலத்து; எ-று

    எ-டு: "விண்ணத்துக்கொட்கும் வண்ணத்தமரர்" "விண்ணத்துக் கொட்கும் விரைசெல்லூர்தியோய்" எனவும் , "விண்குத்து நீள்வரைவெற்பகளைபவோ" (நாலடி-226) எனவும் வரும். விண்ணென்னுங் குறிப்பினை நீக்குதற்குக் காயமென்றார்.

    விண்வத்துக்கொட்கும் என உடம்படுமெய் புணர்ந்து நிற்றலுங் கொள்க. அதிகார வல்லெழுத்தன்மையிற் சாரியை வல்லெழுத்துக் கொடுக்க.1 (10) 
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0516_02.html

On Thursday, October 17, 2019 at 7:10:00 AM UTC-7, kanmanitamilskc wrote:
வாழ்த்து கூறிய கண்டன் சார், காளைராசன் ஐயா, சுபா மூவருக்கும் நன்றி.
சக 

On Thu, Oct 17, 2019 at 3:47 PM Suba <ksuba...@gmail.com> wrote:

On Thu, Oct 17, 2019 at 10:38 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
/// the cunning and foxy "aryans" changed the name even before silapathikaram was written?
rnk///

கண்டன் சார் , please don't write like this .
நான் கண்டுகொள்ளாமல் போகும் திறம் படைத்தவள் இல்லை.
இந்த மாதிரி எழுதுவதை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இல்லை.
ஏதோ .... என் வயோதிகப் பொழுதை சிலரோடு மடலாடிக் கழித்துக் கொண்டு இருக்கிறேன்.
இந்தமாதிரி எழுதுபவர்களிடமிருந்து என்றும் சற்று விலகியே இருப்பேன்.
எனக்கு அந்த நாகரிகம் பிடிபடுவதில்லை.
வகுப்பாக இருந்தால் முகத்துக்கு நேரே....... சமநிலை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம். 

என்னமோ !  என்னை உருவாக்கிய ஆசிரியர்கள் இப்படி ஒரு குறையுடன் என்னை உருவாக்கி விட்டார்கள் .
பிறந்தநாளும் அதுவுமா இன்று ஆரோக்கியமாய் இல்லை. 
என் படபடப்பு அடங்கிய பிறகு உங்களுக்கு பதில் போடுகிறேன்.
சக  

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.🌺 

உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். அது மிக முக்கியம்.

சுபா
 
On Thu, Oct 17, 2019 at 1:24 PM nkantan r <rnka...@gmail.com> wrote:
 actually i wanted to raise this question on madhirai and madhurai; if it was known as madhirai all through sangam period, then certainly in silapathikaram time it was called madhurai? as the name of this section is madhurai.

so the cunning and foxy "aryans" changed the name even before silapathikaram was written?

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/56a4afc7-5235-4f0a-8784-b2eb47c7b4d5%40googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuvPin0ooTsz1QHk8gE5%2Bdy6PA9cSpwisdTjcgJ8sm1LQ%40mail.gmail.com.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2B7UAUXca1UL4QKD5cs20LCpDqN_VVxrDjx_ZqyvGsqJwQ3uZA%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/efe5a58f-4ada-45d3-b892-0ea87bb7a6f8%40googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 18, 2019, 10:30:20 AM10/18/19
to mintamil, vallamai
திரு. நூ.த.லோ.சு.ஐயா அவர்கள்,
முனைவர் திரு. கணேசன் அவர்கள்,
திரு. இரவி அண்ணாசாமி அவர்கள் 
                                                                   அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி.
சக  

On Fri, Oct 18, 2019 at 5:20 PM Ravi Annaswamy <ravi.an...@gmail.com> wrote:
மிக அற்புதமான கட்டுரை அம்மா

உங்கள் குரலில் கேட்டு மகிழ அவா

பிறந்த நாள் வாழ்த்தும் வ்ணக்கமும்

ரவி

Sent from my iPhone

N. Ganesan

unread,
Oct 19, 2019, 8:08:44 AM10/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
> இவற்றில் மதுரை இருக்கிறதா? இல்லையா? தெரியவில்லை 
> சக 

எல்லா இலக்கியங்களிலும் மதுரை தான். மதிரை இல்லை.

திருவாசகம், பெரும்பற்றப்புலியூர் நம்பி  இயற்றிய திருவிளையாடல், பரஞ்சோதி முனிவரினது, ...
ஏராளமாக மதுரை உண்டு. கல்லாடத்திலும் என நினைக்கிறேன்.

புகழ்பெற்ற திருவாசகப் பாடல் நினைவுக்கு வருகிறது: பண்சுமந்த ...
லால்குடி சாமிநாதன்: https://www.youtube.com/watch?v=bGawVIwOFJ8
பொன் சுந்தரலிங்கம்: https://www.youtube.com/watch?v=Ezj10boEWl0

புட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல்:
 
NG

On Sat, Oct 19, 2019 at 12:04 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///சிலப்பதிகாரம் சொல்வது மதிரையா? மதுரையா? சங்கப்பாடல்கள் -சிலப்பதிகாரம் இரண்டுக்கும் இடைபட்டக்கால நூல்களெவை? அங்கு மதிரையா மதுரையா?
rnk
மதுரையோ,,மதிரையோ இந்த ' த'
Thaவா? dha வா? உச்சரிப்பு விதிகள் உளவா?  ///

தமிழ் மக்கள் வாய்மொழியில் இரண்டு உயிர்களுக்கு நடுவில்  இடம்பெறும் / த்  /  'dh' என்று தான் உச்சரிக்கப்படும். 
தமிழைப் பொறுத்தவரை அது ஒரு allophone = மாற்றொலி; அதாவது ஒலி மாறுபட்டாலும் பொருள் மாற்றம் இருக்காது.
இது மொழியியல் கொள்கைகளில் ஒன்று. (உலகத்து மொழிகளுக்கெல்லாம் பொதுவான கொள்கை; தனிப்பட்ட கொள்கை அன்று.) 

வடமொழியின் தன்மை வேறு. அங்கே / th ,dh / இரண்டும் ஒலியன்கள் (ஒலி மாறினால் பொருள் மாறுபடும்.)
இது தமிழ், வடமொழி இரண்டிற்கும் இடையே ஆன அடிப்படை வேறுபாடு  

சிலப்பதிகாரம் சொல்வது 'மதுரை' 
சங்கப் பாடல்களில் நான் மதுரை மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.
இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமந்திரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள் தோன்றி உள்ளன.(கருத்து வேறுபாடுகள் உண்டு.)
இவற்றில் மதுரை இருக்கிறதா? இல்லையா? தெரியவில்லை 
சக 

On Sat, Oct 19, 2019 at 3:16 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
சரி.
விஷயத்திற்கு வருவோம்.

சிலப்பதிகாரம் சொல்வது மதிரையா? மதுரையா? சங்கப்பாடல்கள் -சிலப்பதிகாரம் இரண்டுக்கும் இடைபட்டக்கால நூல்களெவை? அங்கு மதிரையா மதுரையா?
rnk

மதுரையோ,,மதிரையோ இந்த ' த'
Thaவா? dha வா? உச்சரிப்பு விதிகள் உளவா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 19, 2019, 8:54:44 AM10/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sat, Oct 19, 2019 at 7:08 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> இவற்றில் மதுரை இருக்கிறதா? இல்லையா? தெரியவில்லை 
> சக 

எல்லா இலக்கியங்களிலும் மதுரை தான். மதிரை இல்லை.

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
     பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
     கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
     புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்   

kanmani tamil

unread,
Oct 19, 2019, 10:21:09 AM10/19/19
to vallamai
///actually i wanted to raise this question on madhirai and madhurai; ///  n.kantan r wrote 2 days ago.

முத்தொள்ளாயிரத்தை மறந்து விட்டேன் கண்டன் சார் .
அது சங்க இலக்கியத்திற்கும், சிலப்பதிகாரத்திற்கு இடைப்பட்ட இலக்கியம்.....அதிலும் 'மதுரை' தான்.
பிராமிக் கல்வெட்டுகளிலும், பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களிலும் காணப்படும் 'மத்திரை' அக்கால மக்களின் பேச்சு வழக்கு என்று கருதுகிறேன். ஏனென்றால் கல்வெட்டுக்கள் பல பேச்சுவழக்குச் சொற்களை எடுத்தாள்வது கல்வெட்டுக்களில் காணக் கிடைக்கிறது.
சக   

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf7TGZ7DYieKpLjPEkDsdrsvnqosEiSeqfEv5CAg%3DCEOg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 19, 2019, 11:32:34 AM10/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
இன்னொரு புகழ்மிக்க பாடல்: மதுரை என்கிறது.
சீவைணவர் திருமணங்களில் பாடப்பெறும் வாரணமாயிரம் எனும் பத்தில்:
கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்  

பாடியவர் (ஆண்டாள்? பெரியாழ்வார் என்றார் ராஜாஜி) மதிரை என எழுதி,
பின்னர் திருத்தப்பட்டதா (எதுகை நோகுக)? இல்லை மதுரை என்றே பாடினாரா?
- தெரியாது.
 
திருமங்கை ஆழ்வார் பாசுரம்:
 
1526மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்-உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே             (10)

---------------

மதுரையிலே தமிழ்ச் சங்கம் இருந்தது. அங்கே தருமிக்கு உதவினார் சொக்கன்
(திருவிளையாடற்புராணம், ஏபிஎன் சினிமா). இதனை அப்பர் தேவாரத்தில் காண்கிறோம்.
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண்நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!  

சங்கம் = தொகை எனத் தமிழ்ப்படுத்துகிறார் அப்பர். 
மேலும், மூன்று இடங்களில் தேவாரம் “மதுரை” என்ற சொல்லை ஆள்கிறது.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Oct 19, 2019, 2:55:03 PM10/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
I haven't come to the original question posed by RNK. will do that later.
--------

நந்திக் கலம்பகம்: http://www.chennailibrary.com/kalambagam/nandhikalambagam.html
யானை மறம் கண்டோ ர் கூற்று
தரவு கொச்சகக் கலிப்பா

அதிர்குரல மணிநெடுந்தேர் அவனிநா ரணன்களிற்றின்
கதிரொளிய வெண்மருப்புக் கனவயிரம் செறிந்ததால்
மதுரைகொலோ வடுபுலிக்கோன் நகரிகொலோ மாளிகை சாய்ந்து
எதிரெதிரே கெடநின்ற தெவ்வூர் கொல் அறியோமால். 14  

எதுகை நோக்குக.
வாரணமாயிரம் பாடலை ஒப்பிட்டாலும், மதிரை மதுரை எனப் பிற்காலத்தில் 
திருத்தப்பட்டதாகத் தெரிகிறது.

--------

இன்னொன்று: மதுரையில் வாழ்ந்த ஏராளமான புலவர்கள் என்று சங்கப்புலவர்கள்
பலர் பெயர் காண்கிறோம். மதிரை என்று இருந்து மதுரை எனக் காலப்போக்கில்
ஏடுபெயர்ப்போரால் மாறி இருக்க்லமாம். அதேபோல, சேரர் தலைநகர் வஞ்சி
என ஆசிரியர்கள் பெயர் முன்னால் இருந்து, பிற்காலத்தில் கருவூர் என மாறியிருக்கலாம்.

கிரையர்ஸன் என நினைக்கிறேன். அவர் வேதமும் இவ்வாறே காலப்போக்கில்
மாறியிருக்கும் என்றார். காஷ்மீர இலக்கியத்தை ஒப்பிட்டு. ஆனால், வேதவியல் 
நிபுணர்கள் விட்சல் போன்றோர் அதை மறுப்பர். “வேதம் மாறாதது” என்பர்.
கிரையர்ஸனும் சரியாக இருக்கக்கூடும். தேடிக் கிடைத்தால் தருவேன்.

More later,
NG

On Sat, Oct 19, 2019 at 10:43 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பாடபேதம் ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா? 
சக 
கைபேசியிலிருந்து. ...

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 19, 2019, 3:06:43 PM10/19/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
கண்மணி அவர்களே,

சிலப்பதிகாரத்தில் மதுரை என்ற சொல் ஏராளமாக இருக்கிறது.
ஆனால், அகவல் அடிகளில் மேலோ கீழோ -இ எதுகை உள்ளது.
எனவே, மதிரை என இருந்து மதுரை ஆனது போலும்.

எதுகை < எதிகை; குதுரெ (கன்னடம்) < குதிரை [1], ... போல மதுரை < மதிரை.
மதிராந்தகன் என்ற காசுகளைப் படித்து நாகசாமி சொல்லியது நினைவுக்கு
வருகிறது.

முத்தொள்ளாயிரம் நூலில் ஒரு இடத்தில் மதுரை என வருகிறது. அது இருக்கலாம்.

---------

மா. ராஜமாணிக்கனார் ஏரகம் பற்றி ஆய்ந்ததாகத் தெரியலை.
அவர் சொல்லும் கர்நாடகாவை விடத் திருச்செங்கோடு = ஏரகம் (திருமுருகு)
என மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களின்
1964-ஆம் ஆண்டுக் கட்டுரை அளித்துள்ளேன்.

N. Ganesan

unread,
Oct 19, 2019, 4:33:02 PM10/19/19
to மின்தமிழ், vallamai
On Thu, Oct 17, 2019 at 2:54 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
 actually i wanted to raise this question on madhirai and madhurai; if it was known as madhirai all through sangam period, then certainly in silapathikaram time it was called madhurai? as the name of this section is madhurai.

so the cunning and foxy "aryans" changed the name even before silapathikaram was written?

rnk

இதற்கெல்லாம் ஒரு ஜாதி காரணம் என்பது பிழையாய்விடும்.

படிகை > படுகை (உப்புப்படுகை), எதிகை > எதுகை, குதிரை > குதுரெ (கன்னடம்), .... போல,
மதிரை > மதுரை என ஆகிவிட்டது. பல ஜாதியாரும் சேர்ந்து செய்த மிக மெல்லிசான காலமாற்றம்.
பல நூற்றாண்டு எடுத்திருக்கும். நமக்குக் கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள் (மதிராந்தகன் காசு
எனப் படித்த நாகசாமி) ... கிடைப்பதால் மதிரை ஒரிஜினல் > மதுரை என தெரிகிறது.

4 ஆண்டு முன்னர் நான் எழுதிய மடல்:
மதில்/மதிர் “wall" என்ற அடிப்படையில் மதிரை “walled city" யாமை > யமுனை நதிக்கரையிலும்,
வேளிர் இரும்பு, குதிரை, நெல் வேளாண்மை தென்னாடு அடைந்த போது அதே பெயரில் மதிரை
என்றும் அமைத்தனர். மதிரை என்னும் பெயர் 1500 ஆண்டுகள் கல்வெட்டுகளில் தொடர்ச்சியாய் உளது.
மதிரை மதுரை ஆனது போல், எதிர்கை என்னும் ப்ராசஸ் தரும் பலன் ஆகிய எதிகை இன்று எதுகை
என அழைக்கப்படுகிறது.
 
Not just in 2015, I have told this many years before: have to search in CTamil, Indology etc.,

NG

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages