உ
கண்டாங்கிபட்டி அருள்மிகு புலிக்கரை ஐயனார் துணை
மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் துணை
மதுரை அருள்மிகு திருஆப்புடையார் துணை
முன்தோன்றிய மூத்தகுடி
அறிவியல் அறிஞர்கள், ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினான் எனவும், பின்னர் அவன் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றான் என்வும் கூறுகின்றனர். சிந்துசமவெளி நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கின்றனர்.
ஆனால் தமிழர் தங்களது நாகரிகத்தைக்,
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி“
என்று பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழைப் போற்றுவோரும், தமிழைத் தூற்ற நினைப்போரும் இந்தப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல்வரிகளையே பெரிதும் எடுத்தாள்கின்றனர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே மதுரையில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் தமிழரின் தற்பெருமைகளையும், இப்பெருமைகளை மேல்நாட்டார் ஏற்க இயலாத நிலையையும் காண்போம்.
1) தமிழரின் பெருமைகள்
பண்டைய மனிதர்கள் பேசிய மொழிகளுள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ள மொழி தமிழாகும். தமிழுக்குச் செம்மொழிக்கான தகுதிகள் எனக் கூறப்படும் தொன்மை, தனித்தன்மை, பொதுப்பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத்தன்மை, பண்பாடு, இலக்கிய வளம், உயர்சிந்தனை அனைத்தும் உள்ளன. தமிழின் மொழிவளத்தை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய நடுவண் அரசும் தமிழைச் செம்மொழி என அறிவித்துச் சிறப்புச் செய்துள்ளது.
தமிழ்ச் சங்கம்
எல்லா மொழிகளும் எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கூறுகின்றன. ஆனால் தமிழின் தொன்மையான நூலாக விளங்கும் தொல்காப்பியமோ எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல்லாது பொருளுக்கும் இலக்கணம் கூறுகிறது.
பதின்மூன்றாம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன், பிரெஞ்சுமொழியைப் பேணிப் பாதுகாக்க 1525-ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக் கழகத்தை ஏற்படுத்தினான். ஆனால் பண்டைய தமிழர், தமிழை வளமையானதொரு மொழியாக மாற்றியமைக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்கங்களை நிறுவியுள்ளனர். அகம்-புறம் பற்றிய தொகை நூல்களில் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினர்களாயிருந்த புலவர்களின் பாடல்களே இடம் பெற்றுள்ளன. இதனால் தமிழ்ச் சங்கத்தின் பழமையையும் பெருமையையும் நன்கு புலனாகிறது.
மொழிவளம்
சுமேரிய மொழியானது பண்டைத் தமிழ்மொழியே என்று திரு.கி.லோகநாதன் அவர்கள் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலமாக நிருவி வருகிறார். ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டில் உள்ள பழங்குடிகள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஆசுத்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் பேச்சு மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. கொரியமொழியின் சிறப்புடைச் சொற்கள் சில தமிழ்ச் சொற்களாக உள்ளன. இலக்கியத் தரமிக்க சங்க காலப் புறநானூற்றுப் பாடல்கள் கிரக்க வீரயுகப் பாடல்களோடு ஒப்பிடத்தக்கனவாக உள்ளன.
கல்வெட்டுகள்
உலகில் கிடைக்கப்பெற்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற் பழமையான கல்வெட்டுகள் பல தமிழ் மொழியில் உள்ளன. இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டுக்களுள், 60,000க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவானவையே.
2) தமிழின் தொன்மையை ஏற்கமுடியாத நிலை
உலக அறிஞர்கள், குறிப்பாக மேல்நாட்டு அறிஞர்கள், எந்த வரலாற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. கண்டிப்பான நெறிமுறைகளின்படியும், விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்று, அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துத்தான் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் வலுயுறுத்துகின்றனர். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி“ என்பது போன்ற தமிழ்ச் சங்கப் புலவர்களின் கூற்றுகள் யாவும் தற்பெருமையான சொற்களாகவே இந்த அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இச்சொற்களை மெய்ப்பிக்கத் தகுந்த சான்றாதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளன. எனவே கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஆப்பிரிக்காவில்தான் ஆதிமனிதன் தோன்றினான் என்கின்றனர் அறிஞர்கள்.
ஆப்பிரிக்காவும் இசுரேலும்
ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமா சேப்பியன் என்ற இன மனிதர் சுமார் 60,000 – 40,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கிப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று மேலைநாட்டு அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆனால், சமீபத்தில் இசுரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), சுமார் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடற் படிமங்களைக் கண்டெடுத்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில்தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்பிரிக்கா எனவும் மேலைநாட்டு அறிஞர்களால் கூறப்பட்டு வந்த நிலையில், இசுரேல் நாட்டு விஞ்ஞானிகளின் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன்மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இசுரேல் நாட்டில் கிடைத்தது போன்று, தமிழ்நாட்டிலும் மண்தோன்றாக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் பருப்பொருள் அடையாளமாக அவர்களது எலும்புகளோ அல்லது மட்பாண்டங்களோ கிடைக்கப் பெற்றால் மட்டுமே, தமிழர்களே ஆதிமனிதர்கள் என்பதை அறிவியல் அடிப்படையில் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும்.
“மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரையிலும் இன்று வாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தனர் என்பது எவ்வகையிலும் கீழ்க்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்குக் கூடுகட்டும் அடையாளங்கட்கும், உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாயிருப்பபினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்“ என்கிறார் தேவநேயப் பாவாணர் (தமிழர் வரலாறு - முதல் பாகம், பக்கம் 5-6)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
காளை ஐயா ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வு மாணவர். ஆய்வு நெறிமுறைகளை அறிந்தவர். ஆய்வைத் தொடங்கும் முன் ஒரு வரைவையுடன் கூடிய எல்லையை வகுத்துக் கொண்டு அந்தக் கட்டத்தூள் இயங்க வேண்டும் என்பது நெறிமுறை. வரலாற்று ஆய்வில் காலகட்டம் மிகவும் இன்றியமையாதது. ஆய்வுகள் மூலம் தொன்மங்களையும் புன்சிவுகளையும் தரவின் உதவியில்லாமல் நிறுவ இயலாதுஇந்த அடிப்படையில் பார்த்தால் மூத்தகுடி என்பதை நிறுவ தமிழ் வளங்களை மட்டும் பயன்படுத்துவது அவசியம். தற்சமயம் நம்மின்டம் உள்ள சரித்திர ஆவணங்கள் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாகவே உள்ளது. இந்தப் பின்னணியில் தமிழ்க்குடியை மூத்தகுடி என்று எவ்வாறு நிறுவுவது?வவ

redOrbit Staff & Wire Reports – Your Universe Online
Modern humans did not leave Africa prior to the massive eruption of Sumatra´s volcano Mount Toba 74,000 years ago, according to a new study appearing in the journal Proceedings of the National Academy of Sciences.
Rather, Professor Martin Richards of the University of Huddersfield and colleagues have concluded that genetic evidence supports the belief that they departed for Asia approximately 60,000 years ago. Their findings refute a recent theory which had suggested that there was archaeological evidence establishing the presence of people in the southern part of the continent prior to the super-eruption, the university said in a statement.
Previous research completed by Richards used mitochondrial DNA evidence to show that anatomically modern men and women departed from Africa via a “southern coastal route” from the Horn and through Arabia some 14,000 years after the eruption of Mount Toba. Since then, however, archaeologists working in India say they had discovered evidence that humans had lived there far earlier — perhaps up to 120,000 years ago.
Those claims were made after the archaeologists discovered stone tools beneath a layer of Toba ash in 2007. In a rebuttal to those claims, Richards, University of Cambridge archaeologist Sir Paul Mellars, and others found additional genetic evidence to support Richards´ previous conclusion.
“One of the things we didn´t have in 2005 was very much evidence from India in the way of mitochondrial sequences. Now, with a lot of people doing sequencing and depositing material in databases there are about 1,000 sequences from India,” Mellars explained.
By using modern mitochondrial DNA and working backwards, Richards and his colleagues were able to make more exact estimates as to when exactly people set foot on the Indian continent. That genetic information, combined with additional evidence and research, led them to conclude that the dispersal from Africa and the settlement in India could have happened no earlier than 60,000 years ago.
“We also argue that close archaeological similarities between African and Indian stone-tool technologies after 70,000 years ago, as well as features such as beads and engravings, suggest that the slightly later Indian material had an African source,” Richards added. “There were people in India before the Toba eruption, because there are stone tools there, but they could have been Neanderthals — or some other pre-modern population.”
The recently-published research is “an unusually strong scientific put-down,” said Lewis Smith of the Daily Mail. He added that the research done by Richards´ team essentially declares that the pre-eruption settlement theory is “worthless,” and that the researchers wrote that they found “no evidence, either genetic or archaeological, for a very early modern human colonization of South Asia, before the Toba eruption.”
சுமேரு மொழி தொல்தமிழ் என்ற எனது கருத்துக்களை எடுத்தியம்பி உள்ளீர். ஆனால் வடமொழி சுமேருத் தமிழின் திரிபாக ஆகவே பாரரத மொழிகள் பல இப்படி இருக்கலாம் என்று கருதற்கு இடம் உண்டு என்றாவது கூறியிருக்கலாம்நின்னா காளை அவர்களேஇக்கட்ட்டுரையை படித்து மகிழ்ந்தேன். ஓர் LOGIC இருக்கின்றது, ஆதாரத்தோடு சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும் என்ற எணணம் இழையோடுகின்றது
ஆயினும் முதன் முறையாக (யான் அறிந்த வரையில்) தமிழர்களின் தொன்மையைப் பற்றி அறிவுப் பூர்வமான ஓர் கட்டுரையைப் படைத்டுள்ளீர்,எனது வாழ்த்துக்கள்
2013/9/13 bala subramani <sunke...@gmail.com>
புவியை சுற்றி உள்ள நீர் விலக என்ற வரியை சேர்த்து பார்த்தால் பொருள் விளங்கும்தமிழகத்தில் நான்கு இனத்தவர் கூடி வாழ்ந்ததாகப் பல வரலாற்றாசிரியர்கள் பட்டியலிட்டுள்ளனர்1. மலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினர் - தோடர் படகர் வேடர்2. கடல்வழியாக மேற்குப் பகுதியில் பாரசிக நாட்டில் ஆற்றுக்கரையில் வாழ்ந்து விவசாயத்தைக் காற்றௌப் புலம்பெயர்ந்தவர்கள் - வேளாளர், வேளிர்3. இந்தியாவின் வடமேற்கு வடகிழக்கிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் - வேத விபன்னர்கள் அந்தணர்4. கிழக்குப் பகுதியிலிருந்து கடல்வழியே வந்த நாகர்கள்- போர்க்குணம் மிக்க கடலோடிகள். நகரத்தார் வரலாறுபற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் நாகர் வழியில் வந்தவர்கள் என்ற குறிப்புள்ளதுஇதில் யார் மூத்தகுடி என்பதில் வரலாற்று ஆய்வாளர்கள் தீர்வான ஒரு முடிவை அடைய இயலவில்லை. பாலு அவர்கள் குறிப்பிடுவதுபோல் ஆமைவழிப்பாதை கிழக்குக் கரையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் உருவான அடிப்படையில் பார்த்தால் இந்த நாகர்களே வீரத்திலும் போர்க்கருவிகளை உருவாக்குவதிலும் வல்லவர்கள் என்ற அனுமானத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளதுஇனி ஆய்வாளர் காளை ஐயாதான் இந்த அனுமானம் பற்றிய கருத்துக் கூறவேண்டும்ஆராய்ச்சிக் குஞ்சு--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தாங்கள் குறிப்பிடுவது பாராசீக நாடல்ல, அது சுமேரியாவாக இருக்க வேண்டும் அங்குதான் வேளாண்மை தோன்றி பெரிதும் வளர்க்கப்பட்டது. வேளிர் என்ற சொல்லின் தோற்றமும் ஏண்> வேண் > வேள் என்றே இருக்கின்ற்து. இங்கு ஏண் என்ற சொல் சுமேருத் தமிழில் ' en" என்று மிகப் பரவலாக வருகின்ற ஓர் சொல்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
தங்களின் மேலான பார்வைக்காக
தமிழர்களின் வரலாறு கி.மு என்ற காலத்தில் இருந்து தொடங்கப்படவேண்டும். கி.பி எட்டாம் நூற்றாண்டு என்ற கால அளவீட்டைத் தாண்டி தமிழுக்கும் சங்கதத்துக்கும் மூல மொழி ஒன்று இருந்திருக்கவேண்டும் என்ற அடிப்படையில் பார்க்கவேண்டும் அந்தணர்களும் வேளிர்களும் சுமேரியாவில் இருந்து வந்திருக்கக் கூடும் தமிழ் மொழியில் வழக்கில் இல்லாத சொற்களைச் சுட்டும் தொல்காப்பியர் சூத்திரத்துக்கும் சுமேருவுக்கும் தொடர்புள்ளதா போன்ற ஆய்வு வினாக்களுக்கு விடைகாண இந்த 1914-ல் எஸ்.கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய குறிப்பு தங்களுக்கு உதவக் கூடும்
வவ
உலகன்மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய ஓர் கருத்தாக இங்கு இதனை பதிவு செய்கின்றேன்வேளிர்கள் எனப்படும் வேளாளர்கள் சங்கத்தமிழ் பண்பாட்டினை வளர்த்தவர்கள் , அது சுமேருத் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சி என்றும் தெரிகின்றது. ஆயினும் வட எழுத்துக்கள் என்ப்படுபவை சுமேருத் தமிழில் இருக்க அது தொல்காப்பியரால் ஒதுக்கப்படுதல், வேளிர்களோடு கலந்துவிட்ட பெருங் குடியினராகிய நாகர்களின் தாக்கமாக இருக்கலாம. பல தமிழ் குடிமக்களுக்கு ஜ, ஷ போன்றவை வாயில் வராத ஒலியன்கள்மிக்க நன்றிஆய்வாளர்களைடையே தமிழர்களின் தோற்றம் பற்றி ஓர் உடன்பாடு வருவதைக் கண்டு மகிழ்ச்சி, இதனால் இன்னொரு விசயத்தையும் இங்கு கருதவேண்டும்
2013/9/14 K. Loganathan <k.ula...@gmail.com>தாங்கள் குறிப்பிடுவது பாராசீக நாடல்ல, அது சுமேரியாவாக இருக்க வேண்டும் அங்குதான் வேளாண்மை தோன்றி பெரிதும் வளர்க்கப்பட்டது. வேளிர் என்ற சொல்லின் தோற்றமும் ஏண்> வேண் > வேள் என்றே இருக்கின்ற்து. இங்கு ஏண் என்ற சொல் சுமேருத் தமிழில் ' en" என்று மிகப் பரவலாக வருகின்ற ஓர் சொல்நீங்கள் சொல்லும் விதமாகச் சுமேரியாவாக இருக்கலாம். ஒரு சமகாலப் பேராசிரியர் என்னிடம் கூறும்போது இன்றைய பெயரில் ஈரான் ஈராக் என்ற இரு நாடுகளில் டைக்ர்ஸ் யூப்ரடிஸ் நதிக்கரையில் இன்றூம் கருப்பு நிறத்தவ்ரும் கோதுமை நிறத்தவரும் வாழ்வதாகக் குறிப்பிட்டார்நான் பெர்சியா என்று சொன்னது நீங்கள் குறிப்பிடும் நதிக்கரையை ஒட்டிய இடங்களேவவ
தொல்காப்பியன் பிராமணன்.கபிலன் பிராமணன்.இன்னும் தமிழ்ச்சங்க செய்யுள் எல்லாம் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டுப்போகட்டும்.ஆராய்ச்சிக்குஞ்சு அவர்களே.கூமுட்டையில் இருந்து குஞ்சு பொரித்த உங்கள் விஷயங்களில் விஷயங்களை விட "விஷமத்தனங்களே"அதிகம் உளது.ஆனால் வேதம் ஒலித்தவன் தமிழன்.அதற்கு வரிவடிவம் தந்தவனும் தமிழனே.வால்மீகி வியாஸன் கிருஷ்ணன் ராமன் போன்றவர்கள் திராவிட குலமே.பரராசன் என்னும் பரதவர் குலம் தமிழரின் நெய்தல் நிலத்து பரதவனே.இது தான் பாரதகண்டம் தோன்ற அடிப்படையானது.சிந்துவெளி (சிந்தி என்ற தமிழ்ச்சொல்லின் வேரில் இருந்து சிந்தனை சித்தர் என்ற மக்கள் ஆண்ட வெளியே சிந்து வெளி.இவர்களின் ஆழ்னிலை யோக முத்திரைகள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகிறது.யாக்கை என்பது ஆக்கை ஆகும்.யானை என்பது ஆனை ஆகும்.யாறும் ஆறும் ஒன்றே.அது போல் ஓகம் என்பது யோகம் ஆயிற்று.ஓகம் என்பது ஒடுக்கம் ஒருக்கம் ஆகும்.யோகம் என்பதும் உடல் உள்ளம் உயிர் எண்ணம் எல்லாம் ஒருங்குவதே ஆகும்.வேய் என்பது புல்,மற்றும் மூங்கில் என்ற தமிழ்ச்சொல் ஆகும்.வேய்ங்குழல் மூலம் இசைத்து ஒலிகள் தோற்றுவித்ததே வேய்தம் ஆயிற்று.மாடுகள் மேய்க்கும் தமிழ்ச்சிறுவர்களின்பாட்டுகளே ரிக் வேதம் ஆயிற்று.ஆராய்ச்சிக்குஞ்சு அவர்களுக்கு இது போதுமா?வேத ஸ்லோகங்களில் புதைந்திருக்கும் தமிழ் ஒலிப்புகள் பற்றி அடுத்து ஒரு நீண்ட ஆராய்ச்சி காத்திருக்கிறது.தொல்காப்பியர் முழுமை பெற்ற தமிழ் ஒலிப்பை நிறை மொழி என்றும்,அரைகுறை ஒலிப்புகளில் மறைந்திருக்கும் மொழியை மறை மொழி என்றார்.அதுவே வடமொழி வடிவங்கள்.வல்லின மெல்லினங்களுக்கு குறில் நெடில் என்று ஒன்று இரண்டு மாத்திரைகள்குறித்திருப்பது போல் ஷ ஹ க்ஷ போன்ற எழுத்துக்களுக்கும் அரை கால் அரைக்கால் மத்திரைகள் குறித்திருப்பார்."வடவெழுத்து ஒரீஇ"யில் இத்தகையபொருள்கோள்களும் நாம் கொள்ளலாம்.சாங்கிய தத்துவம் சொன்ன கபிலனும்குறிஞ்சித்திணை செய்யுள்கள் படைத்த கபிலனும் தொல்காப்பியர் சொன்ன வடவெழுத்து ஒரீஇ மொழி இலக்கணத்தை உருவாக்கி இலக்கியம் படைத்த அந்தணர்கள்.அந்தணர் என்போர் அறவோர்.மற்றெவருக்கும் செந்தணமை பூண்டு ஒழுகுவோர்.தமிழ் அந்தணர்கள் சமஸ்கிருத பரோஹிதர்களைவிட உயர்ந்தவர்கள். சமஸ்கிருதம் என்றால் மனிதர்களால் தொகுத்து செய்யப்பட்டது என்று தானே பொருள்.தானே தோன்றியிருந்தால் "சுயம்பூகிருதம்"என்று தானேஅழைக்கப்பட்டிருக்கும்.ஆகவே சிந்துவெளித்தமிழே சமஸ்கிருதத்திற்கு முன்பு தோன்றிய மொழி என்பதில் ஐயமில்லை.ஐந்திறங்களில் (ஐந்திணை இயல்புகளில் சிறந்து விளங்கிய "ஐந்திறன் எனும் இந்திறனே (இந்திரனே)வேதஒலிப்புகளை அந்த வந்தேறிகளுக்கு புகட்டினான்.காலப்போக்கில் தமிழ் இனத்துக்கு அவனை பகையாளி யாக்கிக்கொண்டார்கள்."வால்கா முதல் கங்கை"வரை எனும் ராகுல் சாங்க்ருத்தியாயனின் வரலாற்று நாவல் ரிக் வேதத்தில் கொப்பளிக்கும் குரோதத்தையும் பகைவெறியையும் நன்கு காட்டுகிறது.தமிழர்கள் இயற்றிய ரிக் வேதம் தமிழர்களுக்கு எதிராக புகைகக்குமாறு திருத்தப்பட்டது."அக்னிம் ஈளேம் ப்ரோஹிதம்"என்று அது ஆரம்பிப்பது சிந்து இன "ஈழவனை"க்குறிப்பதாகும்.===================================================ருத்ரா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இங்கு தமிழர் யாருக்கும் வெட்கம் இல்லையா?==================================================ருத்ராதொல்காப்பியனை ஜமதக்கினி ரிஷி என்பதும் தமிழ் சமஸ்கிருதம் எச்சில் துப்பி ஜனித்தது போல் பழைய நூல் ஒன்றை ஸ்கேன் பண்ணி போட்டு தமிழை கேவலப்படுத்துவதும் எந்த நியாயத்தில் சேரும்? ஆத்திகம் போற்றிய தமிழ் இன்று இன்னும் வந்தேறிகளின் இரைச்சல் மொழிக் குப்பையில் வீசப்படுவதும் தான் இன்றைய நிலைமை.சிவன் தான் தமிழைப்படைத்தான் என்று தேவாரம் திருவாசகம் எல்லாம் மணக்க மணக்க சொல்லிவிட்டு தமிழை புதைகுழிக்கு அனுப்புவதற்கு புரியாத மொழியிலேயே சிவனுக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்று புரியாமலேயே கூப்பாடு போடும் கூட்டம் தான் வெட்கி தலை சாய்க்கவேண்டும். இப்படியும் ஆராய்ச்சி செய்யலாம் என்று தமிழ் தான் வேத ஒலிகளுக்கு வரிவடிவம் கொடுத்தது என்று நான் எழுதியத்தில் ஏன் இந்ததமிழர்களுக்கு கோபம் கொப்பளிக்கிறது என்று புரியவில்லை?விஷமத்தனத்தைவிஷமத்தனம் என்று சொன்னால் கோபம் கொள்வானேன்.வியாஸன் எனும் மாபெரும் மேதையே வேத வேதாந்தங்களுக்குக் காரணம் ஆனவன்.அவன் ஒரு திராவிடன் (தமிழன்)என்று எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டு கூறியிருக்கிறார்கள்.அதன் அடிப்படையில் நான் இழையிட்டேன்.தமிழன் வீட்டிலும் தெருவிலும் நாட்டிலும் நாக்கிலும் நெஞ்சிலும் தமிழனாய் இருந்தால் இத்தனை சினம் கொள்ள மாட்டானே!தன் வீட்டுக்குள் ரகசியமாய் தமிழை வேள்விக்குச்சிகளாய் வேள்வியில் எரித்து சாம்பல் ஆக்குபவர்கள் தான் தமிழ் கேவலமாய் பிறந்தது என்று ஜம்தக்கினியையும் த்ருணதக்கின முனியையும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.தெனாலிராமன் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்"எழுதிய கதை தெரியும் அல்லவா?அது போல் "அமாத்ரு ம்லேச்ச பாஷார்த்த சோம பானம்" அருந்தியவர்களின்குரல்களையும் தள்ளிவிடவேண்டியது தான்.இதையாரையும் புண்படுத்த எழுதவில்லை.தமிழைப்புண்படுத்துபவர்களை பண்படுத்தும் நோக்கத்தில் மட்டுமே எழுதப்பட்டது.அன்புடன் ருத்ரா
On Wednesday, September 11, 2013 5:48:29 AM UTC-7, kalai wrote:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தொல்காப்பியனை ஜமதக்கினி ரிஷி என்பதும் தமிழ் சமஸ்கிருதம் எச்சில் துப்பி ஜனித்தது போல் பழைய நூல் ஒன்றை ஸ்கேன் பண்ணி போட்டு தமிழை கேவலப்படுத்துவதும் எந்த நியாயத்தில் சேரும்?
//1. இதை நான் ஸ்கேன் பண்ணிப் போட்டேன் என்ற கருத்து சரியல்ல.இது இணையத்தில் இன்டெர்னெத் ஆர்கைவ்ஸ் எம்ற கருவூலத்தில் எண்ணிம வடிவில் உள்ள நூல்அந்த நூல் தமிழர்களின் வரலாறு பற்ரி ஆய்பவர்களுக்கு ஒரு ஆதார நூல் எழுதப்பட்ட ஆண்டு 1914. அதில் அவர் தொல்காப்பியர் பற்றி எழுதும்போது குறிப்பிட்டதை ஆய்வு மாணவர் திரு.காளை ஐயா அவர்களுக்கு சுட்டிக்காட்டும் முகத்தன் இடப்பட்ட பின்னூட்டம். எனவே இதை விஷமத்தனம் என்று கருத்தில் கொள்ள வேண்டாம். //காளை அய்யா அவர்கள் தமிழன் மூத்த குடி என்பதையும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய பெருமையை உடையவன் என்று நிறுவ கட்டுரை துவக்கியவருக்கும் உங்கள் லிங்கும் ஸ்கேனும் அவருக்கு எப்படி உதவும்?ஏய்யா உனக்கு வேற வேல இல்லையா?ஆனானப்பட்ட தொல்காப்பியரே இங்கு ஜமதக்கினி ரிஷி தான்.அப்படியிருக்க உம்ம ஆராய்ச்சியையெல்லாம் மூட்டை கட்டி வையும் என்று விஷமத்தனமாக சொல்வதைத்தவிர அது வேறு என்ன வாக இருக்க முடியும்?
ஆத்திகம் போற்றிய தமிழ் இன்று இன்னும் வந்தேறிகளின் இரைச்சல் மொழிக் குப்பையில் வீசப்படுவதும் தான் இன்றைய நிலைமை
//வந்தேறிகள் என்று யாரைச் சொல்வது? இரைச்சல் மொழி என்று எதைச் சொல்வது? ஆத்திகம் போற்றிய தமிழைக் குப்பையில் வீசியது யார்?.//தெரியாத மாதிரி பாசாங்கு செய்வதில் பயனில்லை.ஆத்திகம் பேசிய தமிழை குப்பையில் வீசியது நாத்திகர்கள் என்று அவர் திசைதிருப்ப நினைத்தால் அது அரசியல். அப்படிப்பார்த்தால் வேதம் பற்றிய பிரம்மசூத்திர வாத பிரதிவாதங்களில் ந்யாய வைசேஷிக வாதிகளும் (விஞ்ஞான பூர்வ சிந்தனை முறை)சாங்க்ய் யோகிகளும் (இயற்கையியல் வரிசை முறை வாதிகளும் ஆழ்நிலை சிந்தனை வாதிகளும்)நாத்திகர்களாக அறிவிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப் படுகிறார்கள்.
சிவன் தான் தமிழைப்படைத்தான் என்று தேவாரம் திருவாசகம் எல்லாம் மணக்க மணக்க சொல்லிவிட்டு தமிழை புதைகுழிக்கு அனுப்புவதற்கு புரியாத மொழியிலேயே சிவனுக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்று புரியாமலேயே கூப்பாடு போடும் கூட்டம் தான் வெட்கி தலை சாய்க்கவேண்டும்.
//சிவன்தான் தமிழைப் படைத்தான் என்றால் (அவனுக்குப் . புரியாத மொழியா) அப்புறம் தமிழைப் புதை குழிக்கு அனுப்பியது எவ்வாறு என்ற கேள்விகளுக்கு என்னால் விடைகூற இயலாது ஏனெனில் இந்த அரசியலில் நான் தலையிடுவதில்லை. இங்கே பேசப்படும் கருத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக நான் கருதவில்லை//சரி சம்பந்தமில்லாது சபைக்கு வரவேண்டாம் தான்.இருப்பினும் தமிழை எவ்வளவுக்கு எவ்வளவு கீழ்த்தரமாக்கி கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தும் வேதமொழிக்காரர்களை நான் கேவலப்படுத்தியதாக வெக்கி தலை சாய்க்க வேண்டும் என்று சொன்ன அந்த பெரியாரும் புரிந்து கொள்ளவேண்டும் என்று தான் இதனை எழுதினேன்.
இப்படியும் ஆராய்ச்சி செய்யலாம் என்று தமிழ் தான் வேத ஒலிகளுக்கு வரிவடிவம் கொடுத்தது என்று நான் எழுதியத்தில் ஏன் இந்ததமிழர்களுக்கு கோபம் கொப்பளிக்கிறது என்று புரியவில்லை?
//புரியவில்லை என்று சொன்ன பிறகு நான் சொல்ல ஏதுமில்லை?//தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து கொள்ளடா என்ற நாமக்கல் கவிஞருக்கும் "நாமம்"போட்டுவிடும் நம் தமிழர்களை வைத்துக்கொண்டுஎன்ன செய்வது?
விஷமத்தனத்தை விஷமத்தனம் என்று சொன்னால் கோபம் கொள்வானேன்.
//விஷ்மத்தனம் என்று நீங்கள் எத்தனைமுறை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்? கூமுட்டை என்றும் கூறிக்கொள்ளலாம? எனெனில் உங்கள் தமிழ் அதை அனுமதிக்கிறது? அப்படிச் சொன்னால்தானே தமிழ் வளரும்?//இந்த இடத்தில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டிய இடத்தில் தான் இருக்கிறேன்.உங்கள் தமிழ் என் தமிழ் என்றெல்லாம் இல்லை.இது நம் தமிழ்.நம் தமிழ் நம்மாலேயே சிதைக்கப்படுகிறது என்ற கருத்தோட்டம் உங்களிடம் தோன்றியிருக்குமானால் அதற்கு நான் உங்களோடு உடன் படுகிறேன்.ஆம் நாம் இன்னும் விழிப்புணர்வு கொள்ளவேண்டும்.
வியாஸன் எனும் மாபெரும் மேதையே வேத வேதாந்தங்களுக்குக் காரணம் ஆனவன்.அவன் ஒரு திராவிடன் (தமிழன்)என்று எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டு கூறியிருக்கிறார்கள்.
//இது எனக்குத் தெரியவில்லை. அந்த ஆய்வுக் கட்டுரைகளைப் பற்றிய குறிப்பை இங்கே கொடுத்தால் எல்லாரும் படித்துப் பயனடையலாம்.//இணைய தளங்களில் படித்திருக்கிறேன்."ஜமதக்கினி"விஷயத்தையெல்லாம் தேடிப்பிடித்துப்போடும் உங்களுக்கும் இது தெரிந்திருக்கும் என நினைத்து விட்டேன்.அதன் அடிப்படையில் நான் இழையிட்டேன்.தமிழன் வீட்டிலும் தெருவிலும் நாட்டிலும் நாக்கிலும் நெஞ்சிலும் தமிழனாய் இருந்தால் இத்தனை சினம் கொள்ள மாட்டானே!தன் வீட்டுக்குள் ரகசியமாய் தமிழை வேள்விக்குச்சிகளாய் வேள்வியில் எரித்து சாம்பல் ஆக்குபவர்கள் தான் தமிழ் கேவலமாய் பிறந்தது என்று ஜமதக்கினியையும் த்ருணதக்கின முனியையும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.//நீங்கள் எழுதுஇயதைப் படித்தால் நான் தமிழன் இல்லையோ என்ற அச்சம் எழுகிறது? எனக்குத் தமிழும் சரியாக வராது. தப்பும் தவறாக எழுதுபவன்? என்னை என்ன செய்யலாம் என்று ஒரு பரிந்துரை ஐயா அவர்கள் அளிக்கவும்? நாடு கடத்திவிடலாமா? அல்லது கழுமரம் சுண்ணாம்புக் காளவாயில் போட்டுவிடலாமா? முடிந்தால் அதற்குமுன் கொஞ்சம பரமசிவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவர்தான் மொழிகளை எல்லாம் படைத்தவர்//இப்படியெல்லாம் எழுதினால் எப்படி? அது என்னையே கழு மரத்திலும் சுண்ணாம்புக்காளவாயிலும் போட்டது போல் தான் நான் உணர்கிறேன்.வேதனைப்படுகிறேன்.தயவு செய்து என் வருத்தங்களை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.அந்தக்காலத்தில் "தேவ துவேஷம், ராஜ துவேஷம், பிராமாணத்துவேஷம்"எல்லாவற்றுக்கும் கழுவும் சுண்ணாம்புக்காளவாயும் தண்டனை தரக்காத்திருக்கும்.இப்போது அறிவு சுதந்திரத்தினால் நாத்திகம் பல்கலைக்கழக பாடமாகி விட்டது.அதனால் நாத்திகர்களும் தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துக்காட்ட அந்த பரமசிவனையே அவன் கழுத்தில் போட்ட பாம்பையே துண்டு போல் பாவித்து "அந்த துண்டை பிடித்து "இழுத்துக்கேட்கிறார்கள்.//வேத வியாசர் ஒரு ரிஷி (அந்தணர் அல்ல) ஒரு மீனவப்பெண்ணுக்குப் பிறந்தவர் கருப்பாய் இருந்தவர் என்பதால் அவர் தமிழன் திராவிடன் என்று ஐயா ஏற்ருக்கொள்ளும்போது ஜமதக்னி என்ற இன்னொரு ரிஷியின் வழியில் வந்தவர் என்று சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குமுன் ஒரு தமிழறிஞர் எழுதியதில் நீங்கள் குற்றம் காண்பது ஏன் என்றூ புரியவில்லை. ஒருவேளை இவர்கள் தமிழுக்கு எதிரிகள் என்று பரமசிவனார் உங்களுக்கு கனவில் வந்துசொன்னாரோ//////// //// //////தொல்காப்பியரை ஒரு ரிஷியாக சித்தரித்தவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் வந்த"தமிழறிஞர்"என்று எப்படி சொல்ல முடியும்? இதற்கு தான் நம் நாட்டில் நதி மூலம் ரிஷி மூலம் கேட்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இருப்பினும் தொல்காப்பியரை சமஸ்கிருத ரிஷியாக (ஒரு வாதத்திற்காகவோ அல்லது அவர் ஆராய்ச்சிப்படி உண்மையாகவே இருக்குமானால்)ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொண்டால் வியாஸனை வேத ஒலிப்புகளுக்கு கிரந்த (பிராமி எனும் திராவிட எழுத்து முறையை தந்ததற்காக வியாஸரை அந்த தமிழறிஞர் தமிழர் என ஒத்துக்கொள்ள்வாரா?அது சாத்தியமில்லை.நம் புராணங்களையெல்லாம் பாருங்கள்.தாழ்ந்த சாதியில் பிறந்து அக்குழந்தை ஒரு பெரிய புலவர் ஆகியிருந்தால் அது ஒரு பிராமணருக்குப்பிறந்து அது ஒரு கூடையில் போடப்பட்டு ஆற்றில் மிதந்து அந்த தாழ்ந்த சாதியாருக்கு தான் கிடைத்து அது வளர்க்கப்படும்.திருவள்ளுவர் அவ்வையார் எல்லாம் இப்படி பிறந்ததாகத்தானேபுராணங்கள் கூறுகின்றன.அப்படி ஒரு ரிஷியாக பிறந்தவர் தான் தொல்காப்பியர்என்று உங்களுக்கும் அதே பரமசிவர் தான் கனவில் வந்து சொல்லுவார்.
தெனாலிராமன் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்"எழுதிய கதை தெரியும் அல்லவா?
//தெரியாது//////அது ஒன்றுமில்லை சமஸ்கிருத பண்டிதர்களை முட்டாள்கள் ஆக்கிய தெனாலிராமனின் கிண்டல் காவியம்.
அது போல் "அமாத்ரு ம்லேச்ச பாஷார்த்த சோம பானம்" அருந்தியவர்களின் குரல்களையும் தள்ளிவிடவேண்டியது தான்.
//தெரியாது கருத்து இல்லை////இதுவும் தடால் அடி ஸ்லோகங்கள் தான்.//தமிழுக்கு வக்காலத்துப்போடவும் தமிழுக்காகக்ப் போராடவும் தமிழைப் பழிப்பவர்களைப் பொலிபோடவும் உங்களுக்கு யார் லைசென்ஸ் கொடுத்தார்கள் என்று சொன்னால அடியேனும் மனுப்போட்டு உங்க மாதிரியே விஷ்மே இல்லாத நல்ல முட்டியாக ஆகிவிடுவேன். அப்புறம் என்னால் தமிழுக்கும் உங்களுக்கும் பிரச்சினை இல்லையே//தமிழுக்கு வக்காலத்துப்போடவும் தமிழுக்காகக்ப் போராடவும் தமிழைப் பழிப்பவர்களைப் பொலிபோடவும் தமிழர்களுக்கு வந்தேறி மொழிக்கூச்சல்களாலைசென்ஸ் தரும்? அந்த மனுஸ்ம்ருதிக்காரர்களிடம் நீங்கள் மனுப்போட்டால்அதுவே "தமிழனாயிருந்தும்" விஷ்யமே இல்லாத முட்டியாய் ஆவதில் தான் போய் முடியும்.தமிழனுக்கு தமிழனே பிரச்னை ஆவது என்பதும் இது தான்.பண்பாளரும் மதிப்புக்குரிய தமிழ்வித்தகருமான திரு வ.வ அவர்களுக்குஎன்றும் சிரம் தாழ்த்தும் மரியாதைகளுடன்ருத்ரா (இ.பரமசிவன்)
On Wednesday, September 11, 2013 5:48:29 AM UTC-7, kalai wrote:
--
நல்லதொரு கட்டுரை. நிறைய தகவல்கள். தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறோம். பகிர்விற்கு நன்றி.
வணக்கம்.2013/9/14 coral shree <cor...@gmail.com>நல்லதொரு கட்டுரை. நிறைய தகவல்கள். தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறோம். பகிர்விற்கு நன்றி.தங்களது அன்பிற்கு நன்றி.இப்போது நான் எழுதியுள்ளதெல்லாம் ஒரு தொடக்கஉரை (preamble ) மட்டுமே. இன்னும் இழையின் தலைப்பு தொடர்பாக நிறையவே எழுத வேண்டியுள்ளது.
விரைவில் தொடர்ந்து எழுதுகிறேன்.அன்பன்கி.காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நல்ல கட்டுரை. எளிமையான சொற்களில் எழுதுகிறீர்கள் காளை ஐயா. தொடருங்கள்.
சிறு யோசனை சொல்லலாமா?
கட்டுரையில் முக்கியமான கருத்துக்களுக்கு சான்றுக் காட்டி எழுதுங்கள்! பிறர் வாக்கியங்களையோ, வரலாற்று ஆவணங்களையோ
தரவுக் காட்டி எழுதினீர்கள் என்றால் இன்னும் சிறக்கும்.
உ
கண்டாங்கிபட்டி அருள்மிகு புலிக்கரை ஐயனார் துணை
மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் துணை
மதுரை அருள்மிகு திருஆப்புடையார் துணை
முன்தோன்றிய மூத்தகுடி
அறிவியல் அறிஞர்கள், ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினான் எனவும், பின்னர் அவன் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றான் என்வும் கூறுகின்றனர். சிந்துசமவெளி நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கின்றனர்.
ஆனால் தமிழர் தங்களது நாகரிகத்தைக்,
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி“
என்று பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழைப் போற்றுவோரும், தமிழைத் தூற்ற நினைப்போரும் இந்தப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல்வரிகளையே பெரிதும் எடுத்தாள்கின்றனர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே மதுரையில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் தமிழரின் தற்பெருமைகளையும், இப்பெருமைகளை மேல்நாட்டார் ஏற்க இயலாத நிலையையும் காண்போம்.
1) தமிழரின் பெருமைகள்
பண்டைய மனிதர்கள் பேசிய மொழிகளுள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ள மொழி தமிழாகும். தமிழுக்குச் செம்மொழிக்கான தகுதிகள் எனக் கூறப்படும் தொன்மை, தனித்தன்மை, பொதுப்பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத்தன்மை, பண்பாடு, இலக்கிய வளம், உயர்சிந்தனை அனைத்தும் உள்ளன. தமிழின் மொழிவளத்தை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய நடுவண் அரசும் தமிழைச் செம்மொழி என அறிவித்துச் சிறப்புச் செய்துள்ளது.
தமிழ்ச் சங்கம்
எல்லா மொழிகளும் எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கூறுகின்றன. ஆனால் தமிழின் தொன்மையான நூலாக விளங்கும் தொல்காப்பியமோ எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல்லாது பொருளுக்கும் இலக்கணம் கூறுகிறது.
பதின்மூன்றாம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன், பிரெஞ்சுமொழியைப் பேணிப் பாதுகாக்க 1525-ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக் கழகத்தை ஏற்படுத்தினான். ஆனால் பண்டைய தமிழர், தமிழை வளமையானதொரு மொழியாக மாற்றியமைக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்கங்களை நிறுவியுள்ளனர். அகம்-புறம் பற்றிய தொகை நூல்களில் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினர்களாயிருந்த புலவர்களின் பாடல்களே இடம் பெற்றுள்ளன. இதனால் தமிழ்ச் சங்கத்தின் பழமையையும் பெருமையையும் நன்கு புலனாகிறது.
மொழிவளம்
சுமேரிய மொழியானது பண்டைத் தமிழ்மொழியே என்று திரு.கி.லோகநாதன் அவர்கள் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலமாக நிருவி வருகிறார். ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டில் உள்ள பழங்குடிகள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஆசுத்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் பேச்சு மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. கொரியமொழியின் சிறப்புடைச் சொற்கள் சில தமிழ்ச் சொற்களாக உள்ளன. இலக்கியத் தரமிக்க சங்க காலப் புறநானூற்றுப் பாடல்கள் கிரக்க வீரயுகப் பாடல்களோடு ஒப்பிடத்தக்கனவாக உள்ளன.
கல்வெட்டுகள்
உலகில் கிடைக்கப்பெற்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற் பழமையான கல்வெட்டுகள் பல தமிழ் மொழியில் உள்ளன. இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டுக்களுள், 60,000க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவானவையே.
2) தமிழின் தொன்மையை ஏற்கமுடியாத நிலை
உலக அறிஞர்கள், குறிப்பாக மேல்நாட்டு அறிஞர்கள், எந்த வரலாற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. கண்டிப்பான நெறிமுறைகளின்படியும், விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்று, அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துத்தான் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் வலுயுறுத்துகின்றனர். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி“ என்பது போன்ற தமிழ்ச் சங்கப் புலவர்களின் கூற்றுகள் யாவும் தற்பெருமையான சொற்களாகவே இந்த அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இச்சொற்களை மெய்ப்பிக்கத் தகுந்த சான்றாதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளன. எனவே கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஆப்பிரிக்காவில்தான் ஆதிமனிதன் தோன்றினான் என்கின்றனர் அறிஞர்கள்.
ஆப்பிரிக்காவும் இசுரேலும்
ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமா சேப்பியன் என்ற இன மனிதர் சுமார் 60,000 – 40,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கிப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று மேலைநாட்டு அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆனால், சமீபத்தில் இசுரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), சுமார் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடற் படிமங்களைக் கண்டெடுத்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில்தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்பிரிக்கா எனவும் மேலைநாட்டு அறிஞர்களால் கூறப்பட்டு வந்த நிலையில், இசுரேல் நாட்டு விஞ்ஞானிகளின் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன்மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இசுரேல் நாட்டில் கிடைத்தது போன்று, தமிழ்நாட்டிலும் மண்தோன்றாக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் பருப்பொருள் அடையாளமாக அவர்களது எலும்புகளோ அல்லது மட்பாண்டங்களோ கிடைக்கப் பெற்றால் மட்டுமே, தமிழர்களே ஆதிமனிதர்கள் என்பதை அறிவியல் அடிப்படையில் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும்.
“மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரையிலும் இன்று வாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தனர் என்பது எவ்வகையிலும் கீழ்க்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்குக் கூடுகட்டும் அடையாளங்கட்கும், உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாயிருப்பபினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்“ என்கிறார் தேவநேயப் பாவாணர் (தமிழர் வரலாறு - முதல் பாகம், பக்கம் 5-6)
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி“
என்று பெருமையுடன் சங்ககாலப் புறப்பொருள் வெண்பாமாலை கூறிட, இதற்கான சான்றாதரங்கள் ஏதுமில்லாததால் இக்கருத்தினை ஏற்கமுடியாதென இன்றைய அறிஞர்கள் கூறிட, புறப்பொருள் வெண்பாமாலையை அறிவியில் அடிப்படையில் நிருவுவதற்கான பருப்பொருளைத் தேடும் இந்த ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம்பகுதி தொடர்கிறது. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே....“ என்று உள்ளதால், கல் என்றால் என்ன? அது தோன்றிய காலம் யாது? மண் என்றால் என்ன? மண்தோன்றிய காலம் யாது? என்பன இங்கே தொகுத்துக் கூறப்படுகின்றன.
கல்லும் மண்ணும்
நாம் வாழும் பூமியானது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்தோன்றியது என்கின்றனர் பாறையியல் (Petrology) அறிஞர்கள். பூமியில் மேலுள்ள பாறைகளைத் 1)தீப்பாறை, 2)உருமாறிய பாறை, 3)படிவுப் பாறை என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். பாறை அடுக்குகளின் அமைப்பு, கூட்டுப்பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பாறைகள் தோன்றிய காலத்தைக் கணக்கிடுகின்றனர்.
கருங்கல் :

படம் நன்றி www.naturalstonegranite.com
கருங்கலானது புவிப்பரப்புக்கு மேலே பரவலாகக் காணப்படும் தீப்பாறை வகைகளுள் ஒன்றாகும். இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சில இடங்களில் கிடைக்கும் இவ்வகைப் பாறைகள் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி உள்ளது. கருங்கற்களின் வேதியியல் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம். இவ்வகைப்பாறைகள் பூமி தோன்றிய காலத்திலேயே அதாவது சுமார் 4.0 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளன எனக் கணக்கிடுகின்றனர்.

மதுரைக்கு வடக்கே உள்ள யானைமலை (படம் நன்றி www.trekearth.com)
மதுரைக்குத் தெற்கே உள்ள திருப்பரங்குன்றமலையும், மதுரைக்கு வடக்கே உள்ள யானைமலையும் இவ்வாறான கருங்கற் பாறைகளால் ஆனவை. மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில் மலையின் அடிவாரம் கருங்கற் பாறைகளால் ஆனது. எனவே இந்த மலைகள் சுமார் 4.0 பில்லியன் (4,00,00,00,000)ஆண்டுகளுக்கு முன் பூமி குளிர்ச்சியடையும் காலத்தில் தோன்றியவை ஆகும்.
களிப்பாறை (shale) : களிப்பாறை என்பது மெல்லிய களிமண் துண்டுகளும், குவார்ட்சு, கேல்சைட்டு போன்ற பிற கனிமங்களின் சிறு துண்டுகளும் சேர்ந்து இறுகி உருவான ஒருவகையான படிவுப்பாறை (sedimentary rock) ஆகும். இதில் களிமண்ணும் பிற கனிமங்களும் வெவ்வேறு அளவினதாகக் கலந்து இருக்கும். களிப்பாறை பல சன்னமான இணை அடுக்குகள் அல்லது பாளங்களின் தொகுப்பாய், இடையில் விரிசல் கொண்டனவாய் இருக்கும். இவ்வடுக்குகளின் திண்மம் ஒரு செ.மீ அளவிற்கு இருக்கும். களிமண் துகள்களின் இணை அடுக்குகளின் பண்பின் காரணமாக இப்பாறைகள் சன்னமான இணை அடுக்குகளாய் உடையும் தன்மை உடையனவாக இருக்கும். இப்பாறைகளில் கலந்திருக்கும் பிற கனிமங்கள், தாதுக்கள் இவற்றைப் பொருத்துக் களிப்பாறைகள் வெவ்வேறு நிறத்தைப் பெரும். இவ்வாறு களிமண் பாறையாக மாறிடக் குறைந்தது சுமார் 10 மில்லியன் (10,00,000) ஆண்டுகளாகும்.

களிப்பாறை (படம் நன்றி www. shale ucrtoday.ucr.edu)

படிமம்பாறை (படம் நன்றி www.sedimentary rock .edu.pe.ca)
மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில்மலையின் உட் பகுதியானது கடினமான கருங்கற்பாறைகளால் ஆனதாக இருக்கும். அந்த மலையின் மேற் பகுதியானது களிப்பாறையால் ஒரு போர்வைபோல் போற்றப்பட்டிருப்பதைக் காணலாம். அழகர்கோயில் மலையில் மேலே உள்ள பழமுதிர்சோலை யாண்டவர் கோயில் உள்ள இடத்திலும், அருள்மிகு தீர்த்தக்கரை இராக்கச்சி அம்மன் கோயில் உள்ள இடத்திலும் இம்மாதிரியான களிப்பாறைகளைக் காணலாம். எனவே அழகர்கோயில் மலையின் அடிப்பகுதி உருவாகி 4.0 பில்லியன் ஆண்டுகளும், அதன் மேற்பகுதி உருவாகி 10.0 மில்லியன் ஆண்டுகளும் ஆகியுள்ளன எனலாம்.

மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில் மலை (படம் நன்றி www.tamilhindu.com )
மண்ணும் மணலும்
மண் என்றால் அது களிமண்ணைக் குறிக்கும்.
மண் அல்லாதது (மண் - அல் = மணல்) மணல் ஆகும்.
மணல் என்பது, உடைந்த பாறைத் துண்டுகளையும் கனிமத் துணிக்கைகளையும் கொண்ட, இயற்கையில் கிடைக்கும் மணியுருவான பொருள் ஆகும். நிலவியலாளர்களின் வரைவிலக்கணப்படி மணல் துணிக்கைகள் 0.0625 மில்லிமீட்டர் தொடக்கம் 2 மில்லிமீட்டர்கள் வரையான விட்டங்களைக் கொண்டவை. நிலவியலில் மணலுக்கு அடுத்துக் குறைவான அளவுள்ள துணிக்கைகளைக் கொண்டது வண்டல் ஆகும். வண்டல் துணிக்கைகளின் அளவு 0.0625 மிமீக்குக் கீழ் 0.004 மிமீ வரை என வரையறுக்கப்படுகின்றது.
இந்திய மண்ணை, அதன் வளத்தன்மையின் அடிப்படையில் செம்மண், மணற்பாங்கான மண், மணற்குறு மண், குறு மண், களி மண், கரிசல்மண், செம்புறை மண், வண்டல் மண் அல்லது அடை மண் என எட்டுவகையாகப் பிரிக்கின்றனர்.
மண்மலைகள் : மதுரையின் தெற்கே உள்ள பசுமலையும், திருப்பரங்குன்றத்தில் உள்ள கூடுதட்டிப்பரம்புமலையும், மதுரையின் மேற்கே உள்ள நாகமலையும் மண்மலைகளாகக் காட்சியளிக்கின்றன.
நாகமலை : மதுரையின் மேற்கே உள்ள நாகமலை, மதுரையின் தெற்கே உள்ள பசுமலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள கூடுதட்டிப் பரம்பு மலை இவைகள் மண்மலைகளாகும். இவற்றின் உள்ளே களிப்பாறைகள் இருக்கின்றன. இவற்றின் மேலே மணல் படிந்துள்ளன. இம்மலைகளின் உள்ளே களிப்பாறைகள் படிந்துள்ளதால் இம்மலைகள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளன என அறியலாம்.

மதுரையின் மேற்கே உள்ள நாகமலை (படத்தில் தொலைவில் நீண்டு தெரியும் மண் மலையே நாகமலையாகும்)படம் நன்றி kaveri.org

திருப்பரங்குன்றம் கூடுதட்டிப்பரம்பு மலை (படம் நன்றி www.skyscrapercity.com)
வேறுபாடு : மண்ணிலிருந்து, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம்,இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறது. பாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது பாறைகளின் வேதியல் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. இதனால் கல்லிலிருந்துதான் மணல் தோன்றியது என்பதை அறிவியல் அடிப்படையில் நிருவ முடியவில்லை.
1) அழகர்கோயில்மலையின் மேற்பகுதியில் களிப்பாறைகள் உருவாகக் காரணமான களிமண் எப்படி அங்கே வந்தது?
2) அருகே பெரிய மலைகள் ஏதும் இல்லாதபோது, நாகமலை, பசுமலை, கூடுதட்டிப் பரம்பு மலை என்ற மிகப்பெரிய மண்மலைகள் எவ்வாறு தோன்றின?
3) கல்லிலிருந்துதான் மணல் தோன்றியது என்றால், கல்மலைகளில் உள்ள வேதிப்பொருளும் அந்த மலைகளின் அருகில் உள்ள மண்ணில் உள்ள வேதிப்பொருளும் ஏன் பெருமளவில் வேறுபடுகின்றன?
உ
கண்டாங்கிபட்டி அருள்மிகு புலிக்கரை ஐயனார் துணை
மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் துணை
மதுரை அருள்மிகு திருஆப்புடையார் துணை
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி துணைஅழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் துணைஅருள்மிகு பழமுதிர் சோலையாண்டவர் துணைஅழகர்கோயில் அருள்மிகு இராக்கச்சியம்மன் துணை
முன்தோன்றிய மூத்தகுடி
அறிவியல் அறிஞர்கள், ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினான் எனவும், பின்னர் அவன் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றான் என்வும் கூறுகின்றனர். சிந்துசமவெளி நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கின்றனர்.
ஆனால் தமிழர் தங்களது நாகரிகத்தைக்,
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி“
என்று பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழைப் போற்றுவோரும், தமிழைத் தூற்ற நினைப்போரும் இந்தப் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல்வரிகளையே பெரிதும் எடுத்தாள்கின்றனர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே மதுரையில் மக்கள் வாழ்ந்துள்ளனரா? என்பதை அறிவியல் அடிப்படையில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் தமிழரின் தற்பெருமைகளையும், இப்பெருமைகளை மேல்நாட்டார் ஏற்க இயலாத நிலையையும் காண்போம்.
1) தமிழரின் பெருமைகள்
பண்டைய மனிதர்கள் பேசிய மொழிகளுள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ள மொழி தமிழாகும். தமிழுக்குச் செம்மொழிக்கான தகுதிகள் எனக் கூறப்படும் தொன்மை, தனித்தன்மை, பொதுப்பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத்தன்மை, பண்பாடு, இலக்கிய வளம், உயர்சிந்தனை அனைத்தும் உள்ளன. தமிழின் மொழிவளத்தை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய நடுவண் அரசும் தமிழைச் செம்மொழி என அறிவித்துச் சிறப்புச் செய்துள்ளது.
தமிழ்ச் சங்கம்
எல்லா மொழிகளும் எழுத்திற்கும் சொல்லிற்கும் மட்டுமே இலக்கணம் கூறுகின்றன. ஆனால் தமிழின் தொன்மையான நூலாக விளங்கும் தொல்காப்பியமோ எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல்லாது பொருளுக்கும் இலக்கணம் கூறுகிறது.
பதின்மூன்றாம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன், பிரெஞ்சுமொழியைப் பேணிப் பாதுகாக்க 1525-ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக் கழகத்தை ஏற்படுத்தினான். ஆனால் பண்டைய தமிழர், தமிழை வளமையானதொரு மொழியாக மாற்றியமைக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்கங்களை நிறுவியுள்ளனர். அகம்-புறம் பற்றிய தொகை நூல்களில் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினர்களாயிருந்த புலவர்களின் பாடல்களே இடம் பெற்றுள்ளன. இதனால் தமிழ்ச் சங்கத்தின் பழமையையும் பெருமையையும் நன்கு புலனாகிறது.
மொழிவளம்
சுமேரிய மொழியானது பண்டைத் தமிழ்மொழியே என்று திரு.கி.லோகநாதன் அவர்கள் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலமாக நிருவி வருகிறார். ஆப்பிரிக்க நாடான கேமரூன் நாட்டில் உள்ள பழங்குடிகள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஆசுத்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் பேச்சு மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. கொரியமொழியின் சிறப்புடைச் சொற்கள் சில தமிழ்ச் சொற்களாக உள்ளன. இலக்கியத் தரமிக்க சங்க காலப் புறநானூற்றுப் பாடல்கள் கிரக்க வீரயுகப் பாடல்களோடு ஒப்பிடத்தக்கனவாக உள்ளன.
கல்வெட்டுகள்
உலகில் கிடைக்கப்பெற்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற் பழமையான கல்வெட்டுகள் பல தமிழ் மொழியில் உள்ளன. இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டுக்களுள், 60,000க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவானவையே.
2) தமிழின் தொன்மையை ஏற்கமுடியாத நிலை
உலக அறிஞர்கள், குறிப்பாக மேல்நாட்டு அறிஞர்கள், எந்த வரலாற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. கண்டிப்பான நெறிமுறைகளின்படியும், விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்று, அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துத்தான் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் வலுயுறுத்துகின்றனர். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி“ என்பது போன்ற தமிழ்ச் சங்கப் புலவர்களின் கூற்றுகள் யாவும் தற்பெருமையான சொற்களாகவே இந்த அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இச்சொற்களை மெய்ப்பிக்கத் தகுந்த சான்றாதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளன. எனவே கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஆப்பிரிக்காவில்தான் ஆதிமனிதன் தோன்றினான் என்கின்றனர் அறிஞர்கள்.
ஆப்பிரிக்காவும் இசுரேலும்
ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமா சேப்பியன் என்ற இன மனிதர் சுமார் 60,000 – 40,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கிப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று மேலைநாட்டு அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆனால், சமீபத்தில் இசுரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), சுமார் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடற் படிமங்களைக் கண்டெடுத்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில்தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்பிரிக்கா எனவும் மேலைநாட்டு அறிஞர்களால் கூறப்பட்டு வந்த நிலையில், இசுரேல் நாட்டு விஞ்ஞானிகளின் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன்மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இசுரேல் நாட்டில் கிடைத்தது போன்று, தமிழ்நாட்டிலும் மண்தோன்றாக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் பருப்பொருள் அடையாளமாக அவர்களது எலும்புகளோ அல்லது மட்பாண்டங்களோ கிடைக்கப் பெற்றால் மட்டுமே, தமிழர்களே ஆதிமனிதர்கள் என்பதை அறிவியல் அடிப்படையில் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும்.
“மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரையிலும் இன்று வாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தனர் என்பது எவ்வகையிலும் கீழ்க்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்குக் கூடுகட்டும் அடையாளங்கட்கும், உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாக இருப்பபினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்“ என்கிறார் தேவநேயப் பாவாணர் (தமிழர் வரலாறு - முதல் பாகம், பக்கம் 5-6)
இரண்டாம் பகுதி“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி“
என்று பெருமையுடன் சங்ககாலப் புறப்பொருள் வெண்பாமாலை கூறிட, இதற்கான சான்றாதரங்கள் ஏதுமில்லாததால் இக்கருத்தினை ஏற்கமுடியாதென இன்றைய அறிஞர்கள் கூறிட, புறப்பொருள் வெண்பாமாலையை அறிவியில் அடிப்படையில் நிருவுவதற்கான பருப்பொருளைத் தேடும் இந்த ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம்பகுதி தொடர்கிறது. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே....“ என்று உள்ளதால், கல் என்றால் என்ன? அது தோன்றிய காலம் யாது? மண் என்றால் என்ன? மண்தோன்றிய காலம் யாது? என்பன இங்கே தொகுத்துக் கூறப்படுகின்றன.
கல்லும் மண்ணும்
நாம் வாழும் பூமியானது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்தோன்றியது என்கின்றனர் பாறையியல் (Petrology) அறிஞர்கள். பூமியில் மேலுள்ள பாறைகளைத் 1)தீப்பாறை, 2)உருமாறிய பாறை, 3)படிவுப் பாறை என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். பாறை அடுக்குகளின் அமைப்பு, கூட்டுப்பொருள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பாறைகள் தோன்றிய காலத்தைக் கணக்கிடுகின்றனர்.
கருங்கல் :
படம் நன்றி www.naturalstonegranite.com
கருங்கலானது புவிப்பரப்புக்கு மேலே பரவலாகக் காணப்படும் தீப்பாறை வகைகளுள் ஒன்றாகும். இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சில இடங்களில் கிடைக்கும் இவ்வகைப் பாறைகள் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி உள்ளது. கருங்கற்களின் வேதியியல் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம். இவ்வகைப்பாறைகள் பூமி தோன்றிய காலத்திலேயே அதாவது சுமார் 4.0 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளன எனக் கணக்கிடுகின்றனர்.
மதுரைக்குத் தெற்கே உள்ள திருப்பரங்குன்றம் (படம் நன்றி www.maduraiwelcome.com)
மதுரைக்கு வடக்கே உள்ள யானைமலை (படம் நன்றி www.trekearth.com)
மதுரைக்குத் தெற்கே உள்ள திருப்பரங்குன்றமலையும், மதுரைக்கு வடக்கே உள்ள யானைமலையும் இவ்வாறான கருங்கற் பாறைகளால் ஆனவை. மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில் மலையின் அடிவாரம் கருங்கற் பாறைகளால் ஆனது. எனவே இந்த மலைகள் சுமார் 4.0 பில்லியன் (4,00,00,00,000)ஆண்டுகளுக்கு முன் பூமி குளிர்ச்சியடையும் காலத்தில் தோன்றியவை ஆகும்.
களிப்பாறை (shale) : களிப்பாறை என்பது மெல்லிய களிமண் துண்டுகளும், குவார்ட்சு, கேல்சைட்டு போன்ற பிற கனிமங்களின் சிறு துண்டுகளும் சேர்ந்து இறுகி உருவான ஒருவகையான படிவுப்பாறை (sedimentary rock) ஆகும். இதில் களிமண்ணும் பிற கனிமங்களும் வெவ்வேறு அளவினதாகக் கலந்து இருக்கும். களிப்பாறை பல சன்னமான இணை அடுக்குகள் அல்லது பாளங்களின் தொகுப்பாய், இடையில் விரிசல் கொண்டனவாய் இருக்கும். இவ்வடுக்குகளின் திண்மம் ஒரு செ.மீ அளவிற்கு இருக்கும். களிமண் துகள்களின் இணை அடுக்குகளின் பண்பின் காரணமாக இப்பாறைகள் சன்னமான இணை அடுக்குகளாய் உடையும் தன்மை உடையனவாக இருக்கும். இப்பாறைகளில் கலந்திருக்கும் பிற கனிமங்கள், தாதுக்கள் இவற்றைப் பொருத்துக் களிப்பாறைகள் வெவ்வேறு நிறத்தைப் பெரும். இவ்வாறு களிமண்ணானது பாறையாக மாறிடக் குறைந்தது சுமார் 10 மில்லியன் (10,00,000) ஆண்டுகளாகும்.
களிப்பாறை (படம் நன்றி www. shale ucrtoday.ucr.edu)
படிமம்பாறை (படம் நன்றி www.sedimentary rock .edu.pe.ca)
மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில்மலையின் மேற் பகுதியானது களிப்பாறையால் ஒரு போர்வைபோல் போற்றப்பட்டிருப்பதைக் காணலாம். அழகர்கோயில் மலையில் உள்ள பழமுதிர்சோலை யாண்டவர் கோயில் உள்ள இடத்திலும், அருள்மிகு தீர்த்தக்கரை இராக்கச்சி அம்மன் கோயில் உள்ள இடத்திலும் இம்மாதிரியான களிப்பாறைகளைக் காணலாம். எனவே அழகர்கோயில் மலையின் அடிப்பகுதி உருவாகி 4.0 பில்லியன் ஆண்டுகளும், அதன் மேற்பகுதி உருவாகி 10.0 மில்லியன் ஆண்டுகளும் மேலாகியுள்ளது எனலாம்.
மதுரையின் வடக்கே உள்ள அழகர்கோயில் மலை (படம் நன்றி www.tamilhindu.com )
மண்ணும் மணலும்
மண் என்றால் அது களிமண்ணைக் குறிக்கும்.
மண் அல்லாதது (மண் - அல் = மணல்) மணல் ஆகும்.
மணல் என்பது, உடைந்த பாறைத் துண்டுகளையும் கனிமத் துணிக்கைகளையும் கொண்ட, இயற்கையில் கிடைக்கும் மணியுருவான பொருள் ஆகும். நிலவியலாளர்களின் வரைவிலக்கணப்படி மணல் துணிக்கைகள் 0.0625 மில்லிமீட்டர் தொடக்கம் 2 மில்லிமீட்டர்கள் வரையான விட்டங்களைக் கொண்டவை. நிலவியலில் மணலுக்கு அடுத்துக் குறைவான அளவுள்ள துணிக்கைகளைக் கொண்டது வண்டல் ஆகும். வண்டல் துணிக்கைகளின் அளவு 0.0625 மிமீக்குக் கீழ் 0.004 மிமீ வரை என வரையறுக்கப்படுகின்றது.
இந்திய மண்ணை, அதன் வளத்தன்மையின் அடிப்படையில் செம்மண், மணற்பாங்கான மண், மணற்குறு மண், குறு மண், களி மண், கரிசல்மண், செம்புறை மண், வண்டல் மண் அல்லது அடை மண் என எட்டுவகையாகப் பிரிக்கின்றனர்.
மண்மலைகள் : மதுரையின் தெற்கே உள்ள பசுமலையும், திருப்பரங்குன்றத்தில் உள்ள கூடுதட்டிப்பரம்புமலையும், மதுரையின் மேற்கே உள்ள நாகமலையும் மண்மலைகளாகக் காட்சியளிக்கின்றன.
நாகமலை : மதுரையின் மேற்கே உள்ள நாகமலை, மதுரையின் தெற்கே உள்ள பசுமலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள கூடுதட்டிப் பரம்பு மலை இவைகள் மண்மலைகளாகும். இவற்றின் உள்ளே களிப்பாறைகள் இருக்கின்றன. இவற்றின் மேலே மணல் படிந்துள்ளன. இம்மலைகளின் உள்ளே களிப்பாறைகள் படிந்துள்ளதால் இம்மலைகள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளன என அறியலாம்.
மதுரையின் மேற்கே உள்ள நாகமலை (படத்தில் தொலைவில் நீண்டு தெரியும் மண் மலையே நாகமலையாகும்)படம் நன்றி kaveri.org
திருப்பரங்குன்றம் கூடுதட்டிப்பரம்பு மலை (படம் நன்றி www.skyscrapercity.com)
வேறுபாடு : மண்ணிலிருந்து, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம்,இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறது. பாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது பாறைகளின் வேதியல் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. இதனால் கல்லிலிருந்துதான் மணல் தோன்றியது என்பதை அறிவியல் அடிப்படையில் நிருவ முடியவில்லை.
1) அருகே பெரிய மலைகள் ஏதும் இல்லாதபோது, நாகமலை, பசுமலை, கூடுதட்டிப் பரம்பு மலை என்ற மிகப்பெரிய மண்மலைகள் எவ்வாறு தோன்றின?
3) கருங்கற்கல்லில் இருந்துதான் மணல் தோன்றியது என்றால், கல்மலைகளில் உள்ள வேதிப்பொருளும் இந்த மண் மலைகளின் உள்ள வேதிப்பொருளும் ஏன் பெருமளவில் வேறுபடுகின்றன?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
என் விளக்கம்: கல் எனும் சொல் தோன்றி மண் எனும் சொல் தோன்றாத மொழி வளரும் காலத்தே தோன்றியவர் என கொள்ளலாம்
தமிழில் ககரத்தில் தோன்றிய சொற்கள்தான் அதிகம். அதனல் கல் எனும் ககரத்தின் அடிப்படையில் தோன்றிய சொல் மண் எனும் சொல்லை விட மூத்ததாக இருக்கும்.
ஆதிமனிதன் கல்லைத்தான் முதன் முதலில் பயன்படுத்தி இருக்கிறான் என்பதற்காகத்தானே கற்காலம் என்கிறோம்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மவுனமாக இந்த இழையை நான் படித்து வருகிறேன், புலனடக்கத்துடன். காளைராஜனுடைய பீடிகையே இத்தனை திசைமாறி சுனாமிகளை உருவாக்குமானால், அவருடைய ஆய்வு என்ன பாடுபடும் என்ற அச்சம் மேலோங்கியது.
அதனால் தான் இரண்டாவது பகுதிக்குக் காத்திருந்தேன். கட்டுரையின் நோக்கம் பாராட்டுக்கு உரியது.
'கண்டிப்பான நெறிமுறைகளின்படியும், விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்று, அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துத்தான் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் வலுயுறுத்துகின்றனர்.' என்பதும் நியாயம் தானே.
கல் தோன்றி, மண் தோன்றும் முன் குடி தோன்றுவது இலக்கிய சுவை அளித்தாலும், சாத்தியக்கூறு கேள்விக்குறியே.
குறை காண்பது என் இலக்கு இல்லை என்பதால், பொதுப்படையாக சொல்லப்பட்ட விஷயங்களை நான் சாடவில்லை. மூன்று விஷயங்களை மட்டும் சொல்லி தப்பித்துக்கொள்கிறேன்.
1. தொல்காப்பியம் மட்டும் தான் பொருள் இலக்கணம் கூறுகிறது என்பது சரியல்ல. வடமொழி/கிரேக்கம்/அரபி இலக்கணங்களை நோக்கவும்.
2. கல்வெட்டுக்கள்: கிட்டத்தட்ட 60 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வரைந்த சித்திரங்களை பற்றி எழுதியிருக்கிறேன், மின் தமிழில்.3. திரு.லோகநாதன் அவர்களுக்கு Winwood Reade :The Martyrdom of Man என்ற நூலை பற்றி பல மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன் இணையதளத்தில் கிடைக்கும் அந்த பழமையான நூல் இங்கு மிகவும் உதவும்.
காளைராஜனுக்கு என் வாழ்த்துக்கள்,
//Gal> கள் : அஃறினைப் பன்மை
இதற்குச் சான்றாக எனக்குக் கிடைத்தது ஒரே ஒரு சொல். அச்சொல் ‘kingal” அதாவது கண்கள்’ என்பது.
Sunerian Temple Hymns 1
10.
kin-gal kin ki-du u nu-dib-be ( The great . . . the . .
the beautiful place, light enters not)
Ta. kaNkaL kaaNkidu uu naa tiiyppee ( For eyes to see light did not brighten
it.)
கண்கள் காண்கிடு ஊ நா தீப்பே
இந்த ‘கள்’ விகுதிப் பற்றி டாகடர் சக்திவேல் இவ்வாறு கூறுவர்
The first is ‘gal/ kaL’ as the plural marker of non-person objects and which is attested in CaGkam Tamil as well. Dr S. Saktiveel in his Tamiz Mozi VarlaaRu (1984) gives the following occurrences ( p.151-152)
>>கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
--
சிவங்கை மாவட்டம் பிரான்மலையைக் கடல் வவ்விய காட்சி....
.
--
கடல் பொங்கி குமரி அழிந்தது என்று கொள்ள இயலாது. கடல் பொங்குவது ஆழிப்பேரலைகளால் நிகழ்ந்தது என்றால் அது கடற்கரையில் இருந்து சில கல் தொலைவுக்கு மட்டுமே அழிவு ஏற்படுத்தும்.
புவி வெம்மையுறல் போன்ற காரணங்களால் கடல் மட்டமே உயர்ந்து நிலத்தை அகப்படுத்தினால் மக்கள் புலம் பெயரவேண்டும். அதுதான் குமரியில் நிகழ்ந்து இருக்கணும்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2013/11/23 தேமொழி <them...@yahoo.com>
திரு. காளைராசன் உங்கள் ஆய்வில் இடை புகுந்து குட்டையைக் குழப்ப விரும்பாவிட்டலும் ..

.வேந்தர் கோணத்தில் நடந்த ஆய்வுகளும் உள்ளன என்று தெரிவித்துக் கொள்ள விருப்பமுண்டு.
Evidence Noah's Biblical Flood Happened, Says Robert BallardDec. 10, 2012By JENNA MILLMAN, BRYAN TAYLOR and LAUREN EFFRON"We went in there to look for the flood," he said. "Not just a slow moving, advancing rise of sea level, but a really big flood that then stayed... The land that went under stayed under."Four hundred feet below the surface, they unearthed an ancient shoreline, proof to Ballard that a catastrophic event did happen in the Black Sea. By carbon dating shells found along the shoreline, Ballard said he believes they have established a timeline for that catastrophic event, which he estimates happened around 5,000 BC. Some experts believe this was around the time when Noah's flood could have occurred.இது போலவே துவாரகை கடலுக்குள் போனது பற்றியும் படித்த ஞாபகம்...... தேமொழி
--