பாரதிக்கொரு ‘பா ’ரதம்!

216 views
Skip to first unread message

shylaja

unread,
Sep 10, 2014, 9:33:38 AM9/10/14
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ் வாசல்

செப்டம்பர்11 மகாகவிபாரதியாரின் நினைவுதினம். 
 
 எனக்குவேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் என   ஆரம்பித்து
 
 கனக்கும்செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தமும் வீற்றிருப்பான் பாரதி!

தேசியமும் தெய்வீகமும் தனது கண்களாக பாவித்து விடுதலைக் கனல்மூட்டி தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதியார்.

கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.

அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த பல ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை 4நாட்கள் திருவிழாபோலக்கொண்டாடி வருகிறது சென்னையில் உள்ள வானவில்பண்பாட்டு மையம்.

இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஜதிபல்லக்கில் பாரதியின் சிலையை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விழாவையொட்டி சிறந்த கவிஞர் ஒருவருக்குப் பொற்கிழி வழங்கி சால்வை போர்த்துவார்கள்.

நிறைய‌ க‌விஞ‌ர்க‌ளும் பார‌தி அன்ப‌ர்க‌ளும் இதில்க‌ல‌ந்துகொள்வார்கள்..

ஆண்டுதோறும் பார‌தி திருவிழாந‌ட‌த்தும் வான‌வில்ப‌ண்பாட்டு மைய‌த்தின் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ர‌வி.இவ‌ர் செய்திவாசிப்பாள‌ராயிருந்த‌ ஷோப‌னா அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்.
ஜ‌திப்ப‌ல்ல‌க்கு ஊர்வ‌ல‌ம் ந‌ட‌த்த‌ உங்க‌ளுக்கு எப்ப‌டி எண்ண‌ம் தோன்றிய‌தென‌க்கேட்ட‌போது அவ‌ர் சொன்ன‌து.

:க‌விபார‌தி த‌ன‌து இறுதிக்கால‌த்தில் வ‌றுமையில் வாழ்ந்தார். அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்துக்கு உத‌விகோரி க‌டித‌ம் எழுதும்ப‌டி ஆலோச‌னை சொன்னார்க‌ள்.
இத‌ற்கு பார‌தியின் தன்மான‌ம் இட‌ம்த‌ர‌வில்லை. இருந்தாலும் ந‌ண்ப‌ர்க‌ளின் வ‌ற்புறுத்த‌ல் கார‌ண‌மாய் த‌ன‌து புத்தகங்களை பிரான்சிலும் இங்கிலாந்திலும் அச்சிட்டு வெளியிடப் பொருளுத‌வி கேட்டு சீட்டுக்க‌வி எழுதி அனுப்பினார்.

அந்த‌ க‌விதையில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கு பொற்குவை தந்து ம‌ரியாதை த‌ர‌வேண்டும் என்றும் கூறி இருந்தார். பாரதி தனது வாழ்க்கையில் த‌ன‌க்காக‌க் கேட்ட‌து இது ஒன்றுதான் ஆனால் அவ‌ருக்கு எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்திலிருந்து ப‌திலே வ‌ர‌வில்லை.

என‌வேதான் நாங்க‌ள் பார‌தியின் விருப்ப‌த்தைப்பூர்த்தி செய்ய‌ அவ‌ர‌து பிற‌ந்த‌ நாளில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கில் அவ‌ர‌து சிலையை வைத்து ஊர்வ‌ல‌ம் செய்கிறோம். அவ‌ருக்கு சால்வையும் பொற்குவையும் வ‌ழ‌ங்கிய‌பின் அத‌னை ஒரு மூத்த‌க‌விஞ‌ருக்கு த‌ருகிறோம்: என்றார்.
 
எத்தகைய  அருமையான பணி அல்லவா!
 
மாகவிஞனின்கவிதை பாடுபவர்கள் பாடல்களை  ரசிப்பவர்கள் கவிஞனைப்பற்றி மேலும் நினைத்து  பதிவிடவிரும்புபவர்கள் அனைவரும் ரதம் இழுக்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்!
 
ஜதிபல்லக்கிற்கு நான் ரசித்தது  இந்தக்கவிதையை!

கலைப்பாவை வாணி தலைப்பாய்க்குள் வாழும்
மலைப்பான மாகவி மன்னா -இளைப்பாற
ஏந்துகிறோம் பல்லக்கு ஏறியமர் பாரதி
தாம்திமிதோம் தாள ஜதிக்கு....
 
எழுதியவர்  திரு..கிரேசி மோகன்....
 
அன்புடன்
ஷைலஜா
 
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
 
பாரதியார்.

....

-------------------------------------------------------------------

--
 அன்புடன்
ஷைலஜா
 
தேமொழி

unread,
Sep 10, 2014, 12:43:04 PM9/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

என்ன ஷைலூ இப்படி பா ரதம் என்று திடீர் அறிவிப்பு ...தக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதா?

குழுமத்தில் சிலருக்கு "poemphobia"இருக்கிறதே.   அவர்களுக்கு வேறு வேலை ஏதாவது கொடுத்து கவனத்தை திசை திருப்பவோ...

அல்லது அவர்களது ஆலோசனை தேவை என்று கருத்தரங்கம் ஒன்று கூட்டி தஞ்சை..மதுரை என ஆளைக் கடத்தவோ ஏற்பாடு செய்து விட்டீர்களா?

இல்லாவிட்டால் அவர்களுக்கெல்லாம் கவி அரங்கம் நடக்கும் நாட்களில்  எந்த இழையிலும் கோபம் கோபமாக வருமே.

அப்பாவி பிள்ளைகளாக பாட்டு எழுதபவர்களையும்  ....

அசை படம் அசையாப் படம் என்று தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்களையும் வம்புக்கிழுத்து சண்டை போட்டு குழுமத்தை விட்டு வெளிநடப்பு, பழனிக்கு கால்நடைப் பயணம் என்ற அறிவிப்பெல்லாம் வருமே...

எனக்கு இப்பொழுதே கிலி  தொடங்கிவிட்டது...எதற்கும் அனைவரும் தயாராக ....முன்னெச்சரிக்கையாக போட்டது போட்டபடி ஓடிவிடத் தயாராக இருங்கள்...

ஏதோ என்னால்இயன்ற ஆலோசனை...

..... தேமொழி

PRASATH

unread,
Sep 10, 2014, 2:40:37 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடல் காணொளியாக...

2014-09-10 19:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

PRASATH

unread,
Sep 10, 2014, 2:59:06 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
எனக்கு பிடித்த பாரதியின் வரிகள் தொடர்ந்து வரும் இவ்விழையில்...

கண்ணம்மா - என் குழந்தை

(பராசக்தியை குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)

ராகம் - பைரவி                                                                     தாளம் - ரூபகம்

ஸ ஸ ஸ ஸா ஸா - பபப
தநீத - பதப - பா
பபப - பதப - பமா - கரிஸா
ரிகம - ரிகரி - ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடலாம்.

சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா!
  செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே - உலகில்
  ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா!
  பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
  ஆடி வருந் தேனே!

ஓடி வருகையிலே - கண்ணம்மா!
  உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
  ஆவி தழுவ தடீ!

உச்சி தனை முகர்ந்தால் - கர்வம்
  ஓங்கி வளரு தடீ!
மெச்சியுனை யூரார் புகழ்ந்தால்
  மேனி சிலிர்க்குதடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
  கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
  உன்மத்த மாகு தடீ!

சற்றுன்முகஞ் சிவந்தால் - மனது
  சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
  நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
  உதிரங் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
  என்னுயிர் நின்னதன்றோ?

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
  துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பால் - எனது
  மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைகளெல்லாம் உன்னைப்போல்
  ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே உன்னைநேர்
  ஆகுமோர் தெய்வ முண்டோ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
  வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
  செல்வம் பிறிது முண்டோ?

PRASATH

unread,
Sep 10, 2014, 3:24:19 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
பாரதியின் எழுத்தில் அடுத்து

பாரத தேசம்

ராகம் : புன்னாகவராளி

பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார் துயர்ப் பகைவெல்லு வார்

சரணங்கள்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; அடி
  மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்;எங்கள்
  பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்                           (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
  சேதுவை மேடுறுத்தி விதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
  மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.                         (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
  வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
  எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்        (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
  மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
  நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.                           (பாரத)

சிந்து நதியின்மிசை நிலவினிலே
  சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
  தோணிக ளோட்டிவிளையாடி வருவோம்                         (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
  காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்;
சிங்கமராட்டியர்தம் கவிதை கொண்டு
  சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.                                      (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
  காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
  நல்லியற் கன்னடத்துத் தங்கள் அளிப்போம்                       (பாரத)

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
  பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
  காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்                           (பாரத)

ஆயுதம் செய்வொம் நல்ல காகிதம் செய்வோம்
  ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம்
  உண்மைகள்சொல் வோம் பல வண்மைகள் செய்வோம் (பாரத)

குடைகள்செய் வோம்உழு படைகள் செய்வோம்
  கோணிகள்செய் வோம்;இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
  ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்                        (பாரத)

மந்திரம்கற் போம்வினைத் த‘ன்திரம்கற் போம்
  வானையளப் போம்கடல் மீனையளப் போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
  சந்திதெரு பெருக்கம் சாத்திரம் கற்போம்                               (பாரத)

காவியம்செய் வோம்நல்ல காடுவளர்ப் போம்
  கலைவளர்ப் போம்கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம்நல்ல ஊசிகள்செய் வோம்
  உலகத்தொழி லனைத்து முவந்துசெய் வோம்                     (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
  தமிழ்மகள் சொல்லிய சொல் அமிர்தமென்போம்
நீதிநெறியி னின்று பிறர்க்கு தவும்
  நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்                                   ( பாரத)

PRASATH

unread,
Sep 10, 2014, 3:37:16 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே - அதை
  நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி - எனைச்
  சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ, - இந்த
  மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
  சுமையென வாழ்ந்திட புரிகுவையோ
விசையுறு பந்தினைப் போல - உள்ளம்
  வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
  நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும் - சிவ
  சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் - இவை
  அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?

coral shree

unread,
Sep 10, 2014, 8:26:45 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்

பவள சங்கரி

bha

லட்சியமே சுவாசமாகimages (3)
கொண்ட
கொள்கையே வேதமாக
விடுதலைப்புள்ளின் விவேகத்தோடு

பாவலரின் உள்ளச் சிம்மாசனத்தில்
சம்மனமிட்டு
வெற்றிமுரசை பாரெங்கும் பரவவிட்டு
பித்தம் கொள்ளச்செய்யும் புத்தனவன்!

நதி வெள்ளப் பிரவாகத்தின் 
மதிவெல்ல
மாதவம் மனதிலேகி விதிவெள்ளம்images (5)
சூரையாடும் சூதைவென்ற சித்தனவன்!

காக்கை குருவி எங்கள் சாதியென
இனமறியா
இன்பவூற்றை இயல்பாய்ச்சொல்லி
களியாட்டம் போடச்செய்த ஞானியவன்!

மனிதநேயமெனும் தூரிகையால்
வண்ணங்கொண்டு
வானளாவத் தீட்டியவவைகள்
தீதின்றி திண்ணமாய் இன்றும்

உச்சிமீது வானிடிந்து வீழந்தபோதும்
அச்சமின்றி
துச்சமென சுடரையேந்தி வலிமையை
ஏழ்மையிலும் ஒளிரச்செய்த மாவீரன்!

அமரப்பொழுதிலும் அரியணையைத்
துறக்காதimages (4)
ஒளிக்கனலாய் மின்னும் கண்ணோடு
புவியனைத்தையும் மண்டியிடவைத்தவன்!

பரிதிக் கிரணங்களாய் பாரினை
ஒளியூட்டி
அடிமைத்தளையை சுட்டெரித்து
சோதிவடிவாய் சுடர்வோனே!!

நன்றி : வல்லமை

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

coral shree

unread,
Sep 10, 2014, 8:30:21 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
அன்பின் ஷைலு,

பாரதியின் நினைவைப் போற்றும் அருமையான கட்டுரைக்கு வாழ்த்துகள்.. இப்போதைக்கு ஒரு கவிதை போட்டிருக்கிறேன். இன்று என் குருவும், மாமனாருமான ஐயாவிற்கு வடாந்திர திதி... பூஜையெல்லாம் முடித்துவிட்டு விரைவில் வருகிறேன். இன்னும் சொல்ல இருப்பது போல்தான் இருக்கிறது... 

நன்றி.

அன்புடன்
பவளா

2014-09-10 9:33 GMT-04:00 shylaja <shyl...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Sep 10, 2014, 9:11:36 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
நன்றி  பவ்ழா  இதோ இப்போதுதான் நானும் கணீணீப்பக்கம் வந்திருக்கேன் வாசிச்சிட்டுவரேன்

shylaja

unread,
Sep 10, 2014, 9:25:27 PM9/10/14
to vallamai, mintamil
2014-09-10 22:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

என்ன ஷைலூ இப்படி பா ரதம் என்று திடீர் அறிவிப்பு ...தக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதா?>>>
 
முன் அறிவிப்பு மடல் உங்களுக்கு வரலை என தெரிகிறது  தக்க ஏற்பாடா எதுக்கு எல்லாரும்  நம் மேல் அன்பு கொண்டவர்கள்தானே!

குழுமத்தில் சிலருக்கு "poemphobia"இருக்கிறதே.   அவர்களுக்கு வேறு வேலை ஏதாவது கொடுத்து கவனத்தை திசை திருப்பவோ...

அல்லது அவர்களது ஆலோசனை தேவை என்று கருத்தரங்கம் ஒன்று கூட்டி தஞ்சை..மதுரை என ஆளைக் கடத்தவோ ஏற்பாடு செய்து விட்டீர்களா?

இல்லாவிட்டால் அவர்களுக்கெல்லாம் கவி அரங்கம் நடக்கும் நாட்களில்  எந்த இழையிலும் கோபம் கோபமாக வருமே.

அப்பாவி பிள்ளைகளாக பாட்டு எழுதபவர்களையும்  ....

அசை படம் அசையாப் படம் என்று தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்களையும் வம்புக்கிழுத்து சண்டை போட்டு குழுமத்தை விட்டு வெளிநடப்பு, பழனிக்கு கால்நடைப் பயணம் என்ற அறிவிப்பெல்லாம் வருமே...

எனக்கு இப்பொழுதே கிலி  தொடங்கிவிட்டது...எதற்கும் அனைவரும் தயாராக ....முன்னெச்சரிக்கையாக போட்டது போட்டபடி ஓடிவிடத் தயாராக இருங்கள்...

ஏதோ என்னால்இயன்ற ஆலோசனை...>>>
 
குறும்புதான் ரொம்ப தேமொழி..:)  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா
 
shylaja

unread,
Sep 10, 2014, 9:29:34 PM9/10/14
to mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ் வாசல்
பத்ரி சேஷாத்ரி முதலில்வருகிறார் என நினைக்கிறேன்  கேட்டுவிட்டு மறுபடி கருத்திடுகிறேன் ஸார் மிக்க நன்றி

2014-09-10 23:41 GMT+05:30 ஜி.ஸன்தானம் <gmsan...@gmail.com>:

இந்த பாரதி நினைவு தினத்தில் அவரைப்பற்றிய ஒரு அருமையான உரையை இங்கே கேட்டு மகிழவும்: -
உரையாற்றுபவர் பாரதியைத் தன் உற்றவனாக கருதிப் பேசுவதைப் போலிருக்கிறது.

https://www.youtube.com/watch

பாரதி நினைவுகள் என்றும் புதியவை, இனியவை.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா
 
shylaja

unread,
Sep 10, 2014, 9:30:23 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு ப்ரசாத்து என் மகளை தூங்கவைக்க பாடிக்கொண்டே இருப்பேன்  அப்போ:)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா
 
shylaja

unread,
Sep 10, 2014, 9:35:16 PM9/10/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
பாரதிக்கான் அஞ்சலிக்கவிதை உங்கள் கவிதைவரிகள்போலவே சோதிவடிவான சுடராக ஒளிர்கிறது பவழா.

shylaja

unread,
Sep 10, 2014, 9:45:31 PM9/10/14
to தமிழ் வாசல், vallamai, பண்புடன், mintamil, தமிழ் சிறகுகள்
உலகமாம் அரங்கம் தன்னில்
    உயர்ந்ததோர்  இடத்தைப்பெற்றான்
கலகத்தை  ஒழித்துக்கட்ட
  காட்டாற்று வெள்ளம்போன்ற 
புலமை மிகு கவிதை தந்தான்
  புவியோர்கள் போற்ற வாழ்ந்தான் 
குலமகளாம் தமிழ் அன்னைதன்னை 
 குலவிளக்காய் ஒளிரவைத்தான். 

கடுகினில்  காரம்போல 
  கருத்தினை நாளும் தந்தான் 
விடுதலைவேட்கைதன்னை
 வாரியே வழங்கிய வள்ளல் 
திடுமென முடித்துக்கொண்டான்
  தன்னுடைய வாழ்க்கைதன்னை 
அடுக்குமா என்றெ சொல்லி
  அழுதிட்டாள் தமிழாம் அன்னை .

சாதிமத பேதம் தன்னை
  சாட்டையால் அடித்துப்போட்டான் 
நீதிமுறை செழிக்க நல்ல
  நிலையமாய்  விளங்கிவிட்டான் 
ஆதிபராசக்தி தன்னை
    தமிழன்னையாகக்கண்டான்
பாதிநாள் வாழ்வில் பாரத
    விடுதலைக்காய் பா செய்தான். 

பாட்டுக்கொருபாரதி  என்ற
   பாங்கான சொல்லைப்பெற்றான்
நாட்டினுக்குள்ளெ நல்ல
   நயமிகுகவிதை தந்தான் 
காட்டிடைத்தீயே  போலே 
   கவிகளை நாளும் தந்தான்
சீட்டுக்கவி எழுதி 
   சிறப்பினை பெற்றே விட்டான் .

வெள்ளையரை ஒழித்துக்கட்ட 
   வீரமான பாட்டைச் சொன்னான் 
கொள்ளையாய் அழகு கொஞ்சும்
   குழந்தையர் உள்ளம் எல்லாம் 
தெள்ளுதமிழ்ப்பாப்பா பாட்டால் 
   தெளிவாக விளங்க வைத்தான் 
துள்ளிவரும் அச்சம் தன்னை
    தூசாகப்பறக்கவைத்தான் .

நேசமிகு பெண்மைக்காக 
   நெய்திட்ட கவிதை எல்லாம் 
பாரத  நாட்டுமக்கள்
    பலருமே  அறிந்திடல் வேண்டும்  
பாசமிகு பெண்குழந்தைகள்  இன்று
   படும்பாடு அவலம் அவலம்  !
தேசமது உயரவேண்டுமெனில்
    தேவைப்பெண்குழந்தைக்குப்பாதுகாப்பு! 

ஷைலஜா.

Megala Ramamourty

unread,
Sep 10, 2014, 11:32:36 PM9/10/14
to மின்தமிழ், vallamai

கவிராசனுக்கோர் பாமாலை!

அடிமை யிருளது அகன்றிட

 அக்கினிக் குஞ்சென வந்தவன்!                  

மடமை எனும்களை அழித்திட

 அறிவுக் கோடரி யானவன்!

சுதந்திர தேவிதன் துயிலெழப்

 பள்ளி யெழுச்சியைப் பாடினான்!

மதத்தின் பெயரினால் சண்டைகள்

 செய்பவர் தம்மையே சாடினான்!

கண்ணனைக் காதலி ஆக்கியே

 கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!

எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே

 என்று உரைத்தநல் பாமகன்!

ஆணும் பெண்ணுமே நிகரென

 வீர முழக்கத்தை எழுப்பினான்!

நாணும் அச்சமும் நாய்கட்கே

 நங்கையர்க் கெதற்கென வினவினான்!

பாங்காய்ச் சத்திரம் கட்டியே

 அன்னம் இடுவதைக் காட்டிலும்

ஆங்கோர் ஏழைக் குழந்தைக்கு

 அறிவு கொளுத்துதல் உயர்வென்றான்!

பழைய பெருமைகள் பேசியே

 பயனில் வாழ்க்கை வாழ்வதா? - தமிழா

புதியன படைத்திடப் புறப்படு

 என்றே கர்ச்சித்த கவிச்சிங்கம்!

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே

 பா’ரதம் ஓட்டிய பாவலன்!

நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற

 பாரதம் கண்டமா கவியிவன்!

வாழ்க அந்த வரகவியின் புகழ் காலங்களை வென்று!

(பேராசிரியரே! ’வெள்ளிப் பனிமலையின்’ எனத் தொடங்கும் பாடலை எனக்காகப் போடவும்; கேட்டுவிட்டுத் தூங்கப் போகிறேன்) :-)

அன்புடன்,

மேகலா

2014-09-10 23:08 GMT-04:00 shylaja <shyl...@gmail.com>:
,,//............அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி பகல் இரண்டு மணியுடன் வேலை நிறுத்தப்படுகிறதால் ஏற்பட்ட சமாச்சாரங்கள் இன்று மித்திரனில் பிரசுரமாகமாட்டா//
 
இதைவிட மாகவிஞனுக்கு உன்னத அஞ்சலி வேறேதாக இருக்கமுடியும்? காலனைக்காலால் உதைக்கிறேன் வாடா என அழைத்த அமரகவிஞனை எடுத்துக்கொண்டுபோன எமன் கொடியவன் தான் சந்தேகமென்ன? அவர்தம் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தன் வறுமையிலும் அவரை நன்கு கவனித்துப்பேணி்ய கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் பாரதிபக்தி பற்றி  சில வரிகள்  பின்னர் எழுத அவா.
நன்றி புரபசர் ஜீ  பாயுமொளிப்பாட்டுக்கு  எம் எல் வி வழக்கம்போல என்னை ரொம்பவே வசீகரிக்கிறார் என்னகுரல் அது  அப்படியே காந்தமாய் இழுக்கக் குரலால்தான் முடியுமோ!

2014-09-11 8:19 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

//எனக்காக  பாரதியின் பாயுமொளி நீ எனக்குப்பாடலைக்கொடுங்க புரபசர் ஜீ //

Raga: vasantha Bairavi?

https://www.youtube.com/watch?v=0iyqMTNqvzg

======================================================
1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு நாளில் பாரதியார் ஈரோடு சென்றார்; ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தில் இருந்த வாசகசாலை ஆண்டு விழாவில் 'மனிதனுக்கு மரணமில்லை' என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார்;
=====================================================================================
1921 செப்டம்பர் 12 திங்கட்கிழமை (துன்மதி வருடம், ஆவணி மாதம் 2
8
ஆம் தேதிய சுதேசமித்திரனில் 6ஆம் பக்கம், ‘நகரச் செய்திகள்’ பத்தியில், கடைசிச் செய்தியாக இது வெளிவந்துள்ளது:

“தென்னாட்டுக் கவிசிரேஷ்டர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி மரணம்

ஒரு வாரமாக ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி தேகநோய் கொண்டு திருவல்லிக்கேணியில் அசௌக்கியமாயிருந்து, திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம்மண்ணுலகைவிட்டு விண்ணுலகமடைந்தார். அவர் இறந்த செய்தி தெரிந்தவுடன் ஸ்ரீமான்களான புதுச்சேரி ஸ்ரீநிவாசாச்சாரியார், திருமலாச்சாரியார், ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா, சின்னஸ்வாமி, நெல்லையப்பர், நீலகண்டன் முதலான பலர் வந்தனர். செய்ய வேண்டிய காரியங்களுக்கு ஆரம்பஞ்செய்து தகனக் கிரியையும் நடந்தது. ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா முதலானவர்கள் பிரேதத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு சென்று, ஆங்கு, தகனத்திற்குச் சற்று முன்னர் ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார், கிருஷ்ணசாமி சர்மா, இராமச்சந்திர அய்யர் இவர்கள் தமிழில் பேசிய பிறகு, சுரேந்திர நாத ஆர்யா தெலுங்கில் பேசினார். பாரதியார் இயற்றிய கீதங்கள் பாடின பிறகு தீ மூட்டப்பட்டது. பாரதியார் ஆவி நற்கதியடையும்படி எல்லோராலும் பிரார்த்திக்கப்பட்டது”.
 
 நன்றி: ரா.அ.பத்மநாபனின் சித்திர பாரதி
அதே நாள் ‘சுதேசமித்திரன்’ தனது இரண்டாம் தலையங்கத்தில் எழுதியதிலிருந்து சில வரிகள்:

“மக்கள் வாழ்வு நீர்மேல் குமிழிபோலும்! தமிழ்நாடு போற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை நேற்றிரவு துறந்து விண்ணவருக்கு விருந்தாகி விட்டார் என்ற செய்தியை அறிவிக்க நமது மனம் பதறுகிறது. சில தினங்களாக  நோயினால் வருந்திக் கொண்டிருந்த அவரை மறுபடியும் ஸ்தூல சரீரத்தில் பார்க்கப் போகிறதில்லை என்று நாம் நினைக்கவில்லை. திங்கட்கிழமையன்று ‘மித்திரன்’ வேலைக்கு வந்து விடுவதாகச் சில தினங்களுக்கு முன் சொல்லி யனுப்பிய அவர் திங்கட்கிழமையன்று சாம்பலாகி விட்டது என்ன கொடுமை!  39 வயதுக்குள் தமது கவித்திறமையாலும் தேசபக்தியாலும் தமிழ் நாட்டை வசப்படுத்தி விட்ட இச் சிறு பிள்ளையின் பிரிவை தமிழ் நாடு எப்படி சகிக்குமோ அறியோம். அன்பே உருவெடுத்தாற்போன்று விளங்கிய அவரைப் பிரிந்து அவரது மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் எப்படிப் போருத்திருபாரோ கொடிய எமனுக்குத்தான் தெரியும். ............அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி பகல் இரண்டு மணியுடன் வேலை நிறுத்தப்படுகிறதால் ஏற்பட்ட சமாச்சாரங்கள் இன்று மித்திரனில் பிரசுரமாகமாட்டா.”

2014-09-11 6:57 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
எனக்காக  பாரதியின் பாயுமொளி நீ எனக்குப்பாடலைக்கொடுங்க புரபசர் ஜீ ப்ளீஸ்!(தூசின்னாலும் ஏசின்னு புகழ்ந்த என் மடலையெல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?:) 

2014-09-10 23:06 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
வியூகம் வகுக்கும் மதியூகம் பாராட்டுக்குரியதே ஆனாலும் பொது மன்றில் மறைமுக உள்குத்து வேலைகளைச் செய்யும்போது எல்லாரையும் தன்னைத்தான் சொல்கிறார்களோ என்ற தேவையில்லாத கவலைக்கு ஆளாக்கக் கூடாது

இங்கு குறிப்பிட்டுள்ள அடையாளங்களில் பல எனக்குப் பொருந்துவதுபோல் ஒரு பட்சி சொல்லுவது எனக்குக் கேட்கிறது

//குழுமத்தில் சிலருக்கு "poemphobia"இருக்கிறதே.   அவர்களுக்கு வேறு வேலை ஏதாவது கொடுத்து கவனத்தை திசை திருப்பவோ...//

ரதம் வல்லமையில் ஓடும்போது நான் அந்தப்பக்கமே தலைவச்சுக்கூடப் படுக்கமாட்டேன் என்று உறுதி கூறமுடியும்.  நடந்தது என்ன யார் வில்லங்கம் வளர்த்தினார்கள் என்பதெல்லாம் வல்லமை மடலாடலில் பார்த்து எனக்கு மனநோய் உள்ளதா என்று முடிவெடுக்கவும்.  அண்ணா கண்ணன் இளரத்தம் கொதித்தால் நியாயம் உங்களைப்போல் முதியவருக்கு ஏன் இந்த வேகம் என்று கேட்டதை அமெரிக்காவில் முதியவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு அப்புறம் முடிவு செய்யவும்.

//
அவர்களுக்கெல்லாம் கவி அரங்கம் நடக்கும் நாட்களில்  எந்த இழையிலும் கோபம் கோபமாக வருமே.//

அப்பூடி ..யா 
ரதம் ஓட்டுவது என்ற பெயரில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு நிகராக கூட்டம் கூடி கேலியும் கிண்டலும் செய்தபின்னரும் கோபம் வராமல் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது.  அளவுக்கு மீறிச் சென்றதை அறிந்து விவேகமுள்ளவர்கள் பின் வாங்கினார்கள்.  சிலர் போனால் போகட்டும் போடா என்று பாடிவிட்டுப் போனார்கள் என்பதுதான் உண்மை.

//அப்பாவி பிள்ளைகளாக பாட்டு எழுதபவர்களையும்  ....//

அவரை நான் ஒன்றும் சொல்லவில்லை யாதொன்றும் கேட்கவில்லை,  அவராகவே நீங்கள் இங்கு வந்து தொல்லை தராமல் ஒதுங்கிப் போங்கள்.  இந்த இழியில் உங்களுக்கு வேஎலை இல்லை என்று சொல்லி பின்னர் வானமே இடிந்து இழுந்தாலும் தன் நிலையிலிருந்து மாறப்போவதில்லை வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார்.  அப்புறம் நான் என்ன செய்ய முடியும்?

//அசை படம் அசையாப் படம் என்று தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்களையும் வம்புக்கிழுத்து சண்டை போட்டு குழுமத்தை விட்டு வெளிநடப்பு, பழனிக்கு கால்நடைப் பயணம் என்ற அறிவிப்பெல்லாம் வருமே//

அவர் என் ஆளுமையை நான் சில பெண்களின் கருப்பு வெளுப்புப் படங்களைப் போட்டு சில பெண்களின் கவனத்தைக் கவரும் கேவலமான வேலையைச் செய்பவன் என்று வார்த்தைகளை மறைத்து எழுதிக் காட்டினார் என்பது உங்களுக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.  அவர் நகைச் சுவைக்காக எழுதியிருக்கலாம் ஆனால் அது என் ஆளுமையை அதுவும் என்னிடம் உரிமையுடன் என் வயது வரம்பைக் கடந்தும் இழையாடியவர்களை ஒரு தவறான வெளிச்சத்தில் காட்டினால் அதை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்

மொத்தத்தில் உங்களுக்கு என்னைப்பற்றித் தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான் என்று விளக்கியிருக்கிறீர்கள் நன்றி பல

வல்லமையைப் பொருத்தமட்டில் நான் எதுவும் எழுதவோ சொல்லவோ போவதில்லை.  மின் தமிழில் இருக்கவா அல்லது போகவா என்று கேட்டதற்கு அவர்கள் போகவேண்டாம் இருங்கள் எப்போதும்போல் எழுதுங்கள் என்று சொன்னதால் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.  நீங்கள் இரண்டு மடலாடல் குழுவிலும் நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர். எந்தக்  காரணத்துக்காகவும் அந்த உயரிய நிலையில் இருந்து சரிந்துவிடாதீர்கள்

இப்போதும் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து பாரதியார் கிறித்துவக் கல்லூரி மாணவர்களிடம் பொதுக்கூட்டத்தில் பேசியதையும் அவருடைய சென்னை வாழ்வின் தொடக்ககாலத் தீவிர வாத அரசியல் பற்றியும் தேடிக்கொண்டிருக்கிறேன்.  நீதிக்கட்சியைச் சேர்ந்த பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த எம் முன்னோர்களுடன் பல விவாதங்களை பாரதியார் மேற்கொண்டிருந்தார்.  அதுபற்றி எம் முன்னோர்களிம் மூன்றாம் தலைமுறையில் என்பது அகவை கடந்த உறவுகளிடம் தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன்

பாரதிக்கு மரியாதை செலுத்த எல்லாருக்கும் ஆர்வமும் ஆவலும் இருக்கலாம் ஆனால் அது தனி மனித சுதந்திரத்தையும் சுய மரியாதையும் பாதிக்காத அளவில் நடத்தலாம்.

இவ்வளவு விவகாரம் இருக்கும் என்பதை அறியாமல் அவசரப்பட்டு மின் தமிழில் பின்னூட்டம் இடுவதற்கு முன் ஒரு எச்சரிக்கை மணி அடிந்த்தற்கு ஆயிரம்கோடி நன்றிகள்

நானே பழனிக்காரன் நான் ஏன் பழனிக்குப் பாத யாத்திரை போக வேண்டும் புரியலடா சாமி

மதஎசுஇந்திரன்

2014-09-10 22:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா
 
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
 
பாரதியார்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா
 
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
 
பாரதியார்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Sep 10, 2014, 11:39:26 PM9/10/14
to vallamai, மின்தமிழ்
2014-09-11 9:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

கவிராசனுக்கோர் பாமாலை!

அடிமை யிருளது அகன்றிட

 அக்கினிக் குஞ்சென வந்தவன்!                  

மடமை எனும்களை அழித்திட

 அறிவுக் கோடரி யானவன்!<<>>அறிவுக்கோடரி ! ரசித்தேன்.

சுதந்திர தேவிதன் துயிலெழப்

 பள்ளி யெழுச்சியைப் பாடினான்!

மதத்தின் பெயரினால் சண்டைகள்

 செய்பவர் தம்மையே சாடினான்!

கண்ணனைக் காதலி ஆக்கியே

 கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!

எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே

 என்று உரைத்தநல் பாமகன்!

ஆணும் பெண்ணுமே நிகரென

 வீர முழக்கத்தை எழுப்பினான்!

நாணும் அச்சமும் நாய்கட்கே

 நங்கையர்க் கெதற்கென வினவினான்!>>>>ஆமாம்  பாரதியே நமக்காய் உரக்ககுரல்கொடுத்தவன்!

பாங்காய்ச் சத்திரம் கட்டியே

 அன்னம் இடுவதைக் காட்டிலும்

ஆங்கோர் ஏழைக் குழந்தைக்கு

 அறிவு கொளுத்துதல் உயர்வென்றான்!>>அறிவுகொளூத்துதல் ஆஹா! என்ன ஒரு வீரியச்சொல் மேகலா!

பழைய பெருமைகள் பேசியே

 பயனில் வாழ்க்கை வாழ்வதா? - தமிழா

புதியன படைத்திடப் புறப்படு

 என்றே கர்ச்சித்த கவிச்சிங்கம்!>>>>சிங்கம்தான்  பாரதி. அவன் பாடல்கள் அனைத்தும் கர்ஜனைதான் அழகாய்  எடுத்துரைத்தீர்கள் .

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே

 பா’ரதம் ஓட்டிய பாவலன்!

நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற

 பாரதம் கண்டமா கவியிவன்!>>>>>>ஒவ்வொருவரியும் முழக்கம் மேகலா அருமை!

வாழ்க அந்த வரகவியின் புகழ் காலங்களை வென்று!

(பேராசிரியரே! ’வெள்ளிப் பனிமலையின்’ எனத் தொடங்கும் பாடலை எனக்காகப் போடவும்; கேட்டுவிட்டுத் தூங்கப் போகிறேன்) :-)

அன்புடன்,

மேகலா

Megala Ramamourty

unread,
Sep 10, 2014, 11:53:50 PM9/10/14
to மின்தமிழ், vallamai
பாராட்டுக்கு நன்றி ஷைலு!

அன்புடன்,
மேகலா

2014-09-10 23:44 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
நெசமாவா என்னையா கேக்குறீங்க.  நீங்களே பாடிக்கிட்டே தூங்கலாம்.  அப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் என்னமோ எனக்கொரு வாய்ப்புக் கொடுக்க நேயர் விருப்பம் கேட்டிருப்பீங்கபோல
மதஎசுஇந்திரன்

2014-09-11 9:02 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

Ravi Subramanian

unread,
Sep 11, 2014, 1:00:28 AM9/11/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ் வாசல்

வணக்கம்,வாழியநலம்

செப்டம்பர் 11 : மஹாகவிக்கு என் ஓவிய அஞ்சலி

மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்

உலைப்பாகை ஊற்றியது போலே என்றும்

      ஒளிர்கின்ற விழிச்சுடர்கள், அதற்கு மேலே

தலைப்பாகை கம்பீரம், தரைகா ணாத

       தருக்கோடு வான்நோக்கும் மீசை, நாட்டைக்

குலைப்பார்கை ஒடித்தெறியத் துடித் தெழுந்த

          குமுறல்கள் ஊற்றெடுக்கும் நெஞ்சம்; அந்தக்

கலைப்பாவை தவமிருந்து பெற்றுத் தந்த

            கவிச் செல்வம் பாரதியின் கழலே போற்றி!

கடவுளிடம் வரம்கேட்டபோதும் கூடக்

       கைகட்டிக்கேட்காத தன்மானத்தன்

இடர்களையும், தடைகளையும் இமைப்போதில் தன்

        இடர்களையும் கவிதைகளால் தகர்க்க வல்லான்

சுடர்கின்ற சொற்களுக்குச் சொந்தக் காரன்

         ஸ்வரங்களிலே கவிதொடுத்த பாட்டுக் காரன்

மடமைகளும், பழமைகளும் மலிந்த நாட்டை

           மலர்வனமாய் மாற்றவந்த தோட்டக் காரன்

அரசியலோ, அறிவியலோ, ஆன்மீகத்தின்

        அடிவேரோ, அயல்மொழியில் கவிஞர் செய்த

அரியபல இலக்கியமோ ஏதானாலும்

         அவன் தொட்டுப் பார்க்காத களமே இல்லை!

விரல்தடவி வாணியவள் மீட்டிப் பாடும்

         வீணையவன்; கண்ணன் கைக் குழலும் ஆவான்!

வரகவியாய் வந்துதித்த ஸுப்ரஹ் மண்ய

           பாரதியின் பாதமலர் போற்றி! போற்றி!

சு.ரவி

Bharathy

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Su.Ravi
+91 9922446887

Sent from Gmail Mobile

Dhivakar

unread,
Sep 11, 2014, 1:22:51 AM9/11/14
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
என்னுடைய பங்கு: பழங்கஞ்சிதான் இது.. ஆனால் என்றுமே ஆறாத கஞ்சி.. ஏற்கனவே போட்டதுதானே இது என்று முதலில் நினைத்தேன்.. ஆனால் லஜ்ஜைநாயகி பா-ரதம், பாரதம், சாரதி என்றெல்லாம் எழுதியவுடன் இதுதான் நினைவுக்கும் உடனே வந்தது. பாரதி நினைவுநாளில் இது கூட நினைவுக்கு வரவில்லையென்றால் எப்படி? பாரதியின் பிரிவு துக்கம், பாரதியின் பிறப்பு சுகம்.. இந்தக் கட்டுரையும் சுகதுக்கத்தை சமானமாகக் கொண்டதுதான்..

தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி 

1980 ஆரம்பங்களில் பாரதி விழாவை விஜயவாடாவில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுவோம். பேச்சுப்போட்டி, பாடல் போட்டி, கட்டுரைப் போட்டி என பரிசுப் போட்டிகள் உண்டென்பதால் நிறையவே தமிழன்பர்கள் கலந்துகொள்வர். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியென்பதாலும் தமிழ்ப்பள்ளி இருப்பதாலும் மாணவ மாணவியர், இளைஞர்கள், இளைஞிகள் (!) என கலகலவென இருக்கும் காலகட்டம்.

நண்பன் மணியின் மனைவி, பெயர் ராணி, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கம்யூனிஸ்ட் தலைவரின் பெண். இவனைக் கல்யாணம் கட்டிக் கொண்டபின் பாவம், கம்யூனிஸ்ட் கொள்கைகள் எல்லாம் தானாகவே கழன்றுகொண்டன என்பது என்னவோ வாஸ்தவம்தான். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் ராணியின் சாதாரண தமிழ்ப்பேச்சு மேடைப் பேச்சை விட கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அவர் பிறந்து வளர்ந்த போராட்ட சூழ்நிலையும் விவசாயிகளின் கஷ்டம், கூலி தர மறுக்கும் முதலாளி வர்க்கத்தை எப்போதும் எதிர்த்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கூக்குரல்களும் எனப் பழகிவிட்டதாலோ என்னவோ ராணிக்கு மகாகவி பாரதி மேல் அவ்வளவாக பிடிப்பு இல்லை என்றே சொல்லலாம். பாரதியும் அவன் மீசையையும் புத்தகங்களில் பார்த்தது மட்டுமே அவருக்கு நினைவு இருந்தது என்றும் சொல்லலாம்.

என் இன்னொரு நண்பன் பாபு வுக்கு இரண்டு தங்கைகள். ஒரு தங்கை மெத்தப்படித்தவர் சாமு. இன்னொரு தங்கை தேவி சுமார் படிப்புதான். படித்த தங்கையோ சரித்திரத்திலும் நாவன்மையிலும் மிகப் புலமை பெற்றவர். பேசுவதில் இடம் பொருள் ஏவல் பார்ப்பவர். பாரதியின் பாடல்களில் தீவிர விருப்பம். பாடல்களை மனப்பாடங்களாகவே கரை கண்டவர். கல்வி ஞானம் அந்த இளம் வயதிலேயே அதிகம்.

சரி, விவரத்துக்கு வருவோம். நானும் சாமுவும் எங்களுக்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்து கொண்டோம். நான் மணியின் மனைவி ராணிக்கு பேச்சுப் போட்டிக்காக எழுதிக்கொடுக்கவேண்டியது. சாமு, தன் அக்கா தேவிக்காக எழுதவேண்டும். இருவரும் முறையாக மனப்பாடம் செய்து அந்தப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். முதல் பரிசை யார் வாங்குகிறார்கள் என்பதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாமே.. – இப்படி சாமு சொன்னவுடன் சந்தோஷமாகவே ஒப்புக் கொண்டேன். இந்த மூவருமே என்னை அண்ணா என்று அன்புடன் அழைக்கும் அன்புத் தங்கைகள்தான் இருந்தாலும் போட்டி என வந்துவிட்டால் அண்ணனாவது தங்கையாவது.. பார்த்துவிடுவோம் ஒரு கை..

இந்தப் போட்டி இன்னொரு பிரிவினையையும் தானாகவே ஏற்படுத்திவிட்டது. இங்கு இருக்கும் நண்பர் குழாம் கூட சாமு பக்கம், என்னுடைய பக்கம் என இரண்டாகப் பிரிந்தது. ஏறத்தாழ எதிரிகள் போல பாவனை செய்துகொண்டு அவரவர் திறமைகளில் கவனம் செய்ய ஆரம்பித்தோம். இந்த தேவி எனக்கு ஒரு செல்லத் தங்கை போலத்தான். ஒரு வருடம் முன்பு நாங்கள் போட்ட நாடகம் ஒன்றில் தேவிக்கு ஒரு பாத்திரம் கொடுத்து. கஷ்டப்பட்டு ‘நடிக்க’ வைத்தோம். ஆனால் தேவிக்கு ஒரு குறை என்னவென்றால் மனதில் மனப்பாடம் செய்து மேடையில் பேசுவது நிஜமாகவே கஷ்டம். ஆனால் ராணி அப்படியல்ல. எளிதில் எதனையும் கிரகித்துக் கொண்டு அட்டகாசமாக கையையும் காலையும் வீசிக்கொண்டே நீதிபதிகளைக் கவரும் வகையில் பேசிவிடுவதில் வல்லவர். இந்த இரண்டு விஷயங்களையும் பூர்த்தியாக அறிந்தவன் என்பதால் எனக்கு ஒரு அலட்சியம்தான். எப்படியும் ராணிக்குதான் முடிசூட்டுவிழா எனபதில் நானும் என் பக்க நண்பர்களும் மிகவும் நம்பிக்கை இருந்ததாலும் என்னுடைய பேச்சுக்கட்டுரை கூட ‘ஏதோ கொஞ்சம் சுமாராகவே’ இருக்கும் என்ற நம்பிக்கையும் கூட அந்த அலட்சியத்துக்குக் காரணம். சுமாரான கட்டுரை+அட்டகாசமான கை கால் அசைத்து சபையோரை கம்பீரமாகப் பார்த்து பேசுதல் = முதல் பரிசு, இது என் கணக்கு.

போட்டி நாளன்று மேடையில் முதல் வரிசையில் ராணி பெயர் இருந்ததால் நாங்கள் முதலில் எதிர்பார்த்தபடியே பாரதியைப் பற்றி பேசி சபையை கலகலப்பாக்கினார். ஆனால் ஏனைய பேச்சாளர்கள் அவ்வளவு சுகமில்லை என்பது ஜட்ஜுகள் தூக்க நிலைமையிலே இருந்ததிலேயே புரிந்தது. இன்னும் இரண்டு மூன்று பேர்கள்தான், தேவியும் பேசிவிடுவார். பிறகு நினைத்ததுபோல முதல் பரிசு ராணிக்குதான் என்ற நினைப்பில் அலட்சியமாக இருக்கும்போது தேவி பேசவந்ததும்தான் தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தோம்.

தேவியின் பேச்சை முதலிலேயே கேட்டிருந்தால் அல்லது ரிகர்ஸல் போல எங்களுக்கு முன்னமேயே காண்பித்திருந்தால் நான் இந்த சவாலுக்கே ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன் என்று சட்டென ஒரு நினைப்பு அப்போது வந்தது. நமது அலட்சியம் நம்மைக் கவிழ்த்து விட்டது போலத்தான் தேவி பேச ஆரம்பித்ததும் உணரத் தலைப்பட்டேன்.

ஆனால் சாமு, தான் நிஜமாகவே வல்லவர் என்பதை தன் எழுத்தில் காண்பித்துவிடுவார் என்பதை நான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி என்று முதல் வரியிலேயே நிறுத்தி நிதானமாக ஒரு ஹை-டெக் தமிழைக் கொடுத்து விவேகானந்தர் போல கையைக் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்து, தலையை நிமிர்த்தி பேசி சபையை கலகலப்பாக்கி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் நீதிபதிகளையும் சட்டென எழுப்பி சீட்டின் நுனியில் உட்கார்த்தி வைப்பார் எனக் கனவிலும் நான் நினைக்க வில்லை. காரணம் இந்த சகோதரிகள் இருவரும் கதவை சாத்திக் கொண்டு ரிகர்ஸல் செய்தவர்கள். ஒரு அறையில் யாருக்கும் கேட்காத அளவில் ‘குசகுச’வென மூத்தவளுக்கு நிதானமாக பாடம் நடத்தி சொல்லியவர் சாமு. ஆனால் நானோ எல்லோர் முன்னிலையிலும் ராணியை அழைத்து வைத்து ரிகர்சல் கொடுத்து போட்டி நாளுக்கு முன்பேயே எதிரி கேம்புக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்ததால் நண்பர்கள் எல்லோருமே ராணி பேசும் அழகில் ’மதி’ மயங்கி இருந்திருந்தனர்.

ஆனால் போட்டி நாளன்று தேவி மேடையேறி வார்த்தை ஜாலத்தால் தமிழ் பேசி அந்தக் கொஞ்சும் தமிழால் பாரதியைப் போற்றி இந்த சபையையும் இப்படி மயக்குவார் என்பதைத் துளியும் எதிர்பார்க்கவில்லதான். ஐய்யயோ இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான், மறு பேச்சு பேசாமலேயே முதல் பரிசு தேவிக்குதான்.. என்ன செய்வது.. அடக்கடவுளே.. போச்சு.. நம் மரியாதை.. மானம் எல்லாம் என்ற சமயத்தில்தான் அந்த தேவியே அபயக் கரம் போல கை கொடுத்தார். இன்னும் மூன்று நான்கு வரிகளைப் பேசிவிட்டால் ஐந்து நிமிஷம் முடிந்துவிடும், அவர் பேச்சும் முடிந்துவிடும் என்ற சமயத்தில்தான் தேவியின் ’இயற்கையான மறதி’ அவருக்கு ’சட்டென’ நினைவுக்கு வர அவ்வளவு நேரம் சரளமாகப் பேசிக் கொண்டிருதவர் அடுத்து என்ன ’சொல்’ பேசவேண்டுமென்பதை மறந்துவிட்டு அப்படியே ஒரு நிமிஷம் நின்றார். அவ்வளவுதான் நமது பக்க நண்பர்கள் ‘ஓஓ’ என்று கோஷமிட அடுத்த இன்னொரு நிமிடத்தில் மேஜை மணி ‘டங்’ என அடிக்கக் கண்ணீருடன் கீழே வந்தார்.

முதல் பரிசு ராணிக்கே, இரண்டாவது ஆறுதல் பரிசு தேவி என நீதிபதிகள் அறிவிக்க ‘ஓ’ என்று மறுபடியும் கூட்டத்தில் கோஷம். ‘Bபோங்காட்டம்’ (தப்பாட்டம்) என்று கமெண்ட் கொடுத்து அக்காவுடன் சாமு பரிசைப் பிடுங்காத குறையாக ஜட்ஜிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனார்கள்.

பிறகு எல்லாம் சரியாகப் போய்விட்டது என்பதும், நண்பர்கள் முன்னிலையில் சாமுவின் எழுத்தை நான் சிலாகித்துப் பேசியதால் அந்த அன்புத்தங்கையும் நெகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டதும் வேறு விஷயங்கள்தான். சாமு தற்சமயம் அலிகார் பல்கலைக்கழகத்தில் சரித்திர விரிவுரையாளராக இருக்கிறார்.

பிற்காலங்களில் இங்கு விழாக்களில் பேச சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாரதி என்றாலே நான் அன்றிலிருந்து ’பா ரதத்தால் பாரதத்தை ஓட்டிய சாரதி’ என்றே எங்கும் ஆரம்பித்ததும் வேறு விஷயம்தான். இதை சாமுவிடம் அடிக்கடி நினைவுபடுத்தும்போதெல்லாம் ‘எங்கே அண்ணா, இப்போதெல்லாம் பாரதியைப் பற்றி உங்கள் ஒருவரோடு மட்டுமே பேசமுடிகிறது’ என்கிறார்.

சாமுவின் ஆதங்கத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. எந்த இருவருக்கு நாங்கள் இருவரும் எழுதிக்கொடுத்துப் பேச வைத்தோமே, அந்த இருவரும் தற்சமயம் உயிருடன் இல்லை என்பதும் ஒரு வருத்ததுக்குரிய விஷயம்தானே..

திவாகர்

2014-09-10 19:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

--

shylaja

unread,
Sep 11, 2014, 1:35:04 AM9/11/14
to தமிழ் வாசல், vallamai, mintamil, தமிழ் சிறகுகள்

2014-09-11 10:52 GMT+05:30 Dhivakar <venkdh...@gmail.com>:
என்னுடைய பங்கு: பழங்கஞ்சிதான் இது.. ஆனால் என்றுமே ஆறாத கஞ்சி..>>ஆனாலும் கஞ்சிக்கு மிஞ்சி வேறெதுமில்லை!
 
ஏற்கனவே போட்டதுதானே இது என்று முதலில் நினைத்தேன்.. ஆனால் லஜ்ஜைநாயகி பா-ரதம், பாரதம், சாரதி என்றெல்லாம் எழுதியவுடன் இதுதான் நினைவுக்கும் உடனே வந்தது. பாரதி நினைவுநாளில் இது கூட நினைவுக்கு வரவில்லையென்றால் எப்படி? பாரதியின் பிரிவு துக்கம், பாரதியின் பிறப்பு சுகம்.. இந்தக் கட்டுரையும் சுகதுக்கத்தை சமானமாகக் கொண்டதுதான்..>>நன்றி மிக  பாரதியை நினைப்பதே முக்கியம் அந்த வகையில் உங்க பதிவுக்கு நல்வரவு!

தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி 

1980 ஆரம்பங்களில் பாரதி விழாவை விஜயவாடாவில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுவோம். பேச்சுப்போட்டி, பாடல் போட்டி, கட்டுரைப் போட்டி என பரிசுப் போட்டிகள் உண்டென்பதால் நிறையவே தமிழன்பர்கள் கலந்துகொள்வர். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியென்பதாலும் தமிழ்ப்பள்ளி இருப்பதாலும் மாணவ மாணவியர், இளைஞர்கள், இளைஞிகள் (!) என கலகலவென இருக்கும் காலகட்டம்.

நண்பன் மணியின் மனைவி, பெயர் ராணி, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கம்யூனிஸ்ட் தலைவரின் பெண். இவனைக் கல்யாணம் கட்டிக் கொண்டபின் பாவம், கம்யூனிஸ்ட் கொள்கைகள் எல்லாம் தானாகவே கழன்றுகொண்டன என்பது என்னவோ வாஸ்தவம்தான். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் ராணியின் சாதாரண தமிழ்ப்பேச்சு மேடைப் பேச்சை விட கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அவர் பிறந்து வளர்ந்த போராட்ட சூழ்நிலையும் விவசாயிகளின் கஷ்டம், கூலி தர மறுக்கும் முதலாளி வர்க்கத்தை எப்போதும் எதிர்த்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கூக்குரல்களும் எனப் பழகிவிட்டதாலோ என்னவோ ராணிக்கு மகாகவி பாரதி மேல் அவ்வளவாக பிடிப்பு இல்லை என்றே சொல்லலாம். பாரதியும் அவன் மீசையையும் புத்தகங்களில் பார்த்தது மட்டுமே அவருக்கு நினைவு இருந்தது என்றும் சொல்லலாம்.

என் இன்னொரு நண்பன் பாபு வுக்கு இரண்டு தங்கைகள். ஒரு தங்கை மெத்தப்படித்தவர் சாமு. இன்னொரு தங்கை தேவி சுமார் படிப்புதான். படித்த தங்கையோ சரித்திரத்திலும் நாவன்மையிலும் மிகப் புலமை பெற்றவர். பேசுவதில் இடம் பொருள் ஏவல் பார்ப்பவர். பாரதியின் பாடல்களில் தீவிர விருப்பம். பாடல்களை மனப்பாடங்களாகவே கரை கண்டவர். கல்வி ஞானம் அந்த இளம் வயதிலேயே அதிகம்.

சரி, விவரத்துக்கு வருவோம். நானும் சாமுவும் எங்களுக்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்து கொண்டோம். நான் மணியின் மனைவி ராணிக்கு பேச்சுப் போட்டிக்காக எழுதிக்கொடுக்கவேண்டியது. சாமு, தன் அக்கா தேவிக்காக எழுதவேண்டும். இருவரும் முறையாக மனப்பாடம் செய்து அந்தப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும். முதல் பரிசை யார் வாங்குகிறார்கள் என்பதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளலாமே.. – இப்படி சாமு சொன்னவுடன் சந்தோஷமாகவே ஒப்புக் கொண்டேன். இந்த மூவருமே என்னை அண்ணா என்று அன்புடன் அழைக்கும் அன்புத் தங்கைகள்தான் இருந்தாலும் போட்டி என வந்துவிட்டால் அண்ணனாவது தங்கையாவது.. பார்த்துவிடுவோம் ஒரு கை..

இந்தப் போட்டி இன்னொரு பிரிவினையையும் தானாகவே ஏற்படுத்திவிட்டது. இங்கு இருக்கும் நண்பர் குழாம் கூட சாமு பக்கம், என்னுடைய பக்கம் என இரண்டாகப் பிரிந்தது. ஏறத்தாழ எதிரிகள் போல பாவனை செய்துகொண்டு அவரவர் திறமைகளில் கவனம் செய்ய ஆரம்பித்தோம். இந்த தேவி எனக்கு ஒரு செல்லத் தங்கை போலத்தான். ஒரு வருடம் முன்பு நாங்கள் போட்ட நாடகம் ஒன்றில் தேவிக்கு ஒரு பாத்திரம் கொடுத்து. கஷ்டப்பட்டு ‘நடிக்க’ வைத்தோம். ஆனால் தேவிக்கு ஒரு குறை என்னவென்றால் மனதில் மனப்பாடம் செய்து மேடையில் பேசுவது நிஜமாகவே கஷ்டம். ஆனால் ராணி அப்படியல்ல. எளிதில் எதனையும் கிரகித்துக் கொண்டு அட்டகாசமாக கையையும் காலையும் வீசிக்கொண்டே நீதிபதிகளைக் கவரும் வகையில் பேசிவிடுவதில் வல்லவர். இந்த இரண்டு விஷயங்களையும் பூர்த்தியாக அறிந்தவன் என்பதால் எனக்கு ஒரு அலட்சியம்தான். எப்படியும் ராணிக்குதான் முடிசூட்டுவிழா எனபதில் நானும் என் பக்க நண்பர்களும் மிகவும் நம்பிக்கை இருந்ததாலும் என்னுடைய பேச்சுக்கட்டுரை கூட ‘ஏதோ கொஞ்சம் சுமாராகவே’ இருக்கும் என்ற நம்பிக்கையும் கூட அந்த அலட்சியத்துக்குக் காரணம். சுமாரான கட்டுரை+அட்டகாசமான கை கால் அசைத்து சபையோரை கம்பீரமாகப் பார்த்து பேசுதல் = முதல் பரிசு, இது என் கணக்கு.

போட்டி நாளன்று மேடையில் முதல் வரிசையில் ராணி பெயர் இருந்ததால் நாங்கள் முதலில் எதிர்பார்த்தபடியே பாரதியைப் பற்றி பேசி சபையை கலகலப்பாக்கினார். ஆனால் ஏனைய பேச்சாளர்கள் அவ்வளவு சுகமில்லை என்பது ஜட்ஜுகள் தூக்க நிலைமையிலே இருந்ததிலேயே புரிந்தது. இன்னும் இரண்டு மூன்று பேர்கள்தான், தேவியும் பேசிவிடுவார். பிறகு நினைத்ததுபோல முதல் பரிசு ராணிக்குதான் என்ற நினைப்பில் அலட்சியமாக இருக்கும்போது தேவி பேசவந்ததும்தான் தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தோம்.

தேவியின் பேச்சை முதலிலேயே கேட்டிருந்தால் அல்லது ரிகர்ஸல் போல எங்களுக்கு முன்னமேயே காண்பித்திருந்தால் நான் இந்த சவாலுக்கே ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன் என்று சட்டென ஒரு நினைப்பு அப்போது வந்தது. நமது அலட்சியம் நம்மைக் கவிழ்த்து விட்டது போலத்தான் தேவி பேச ஆரம்பித்ததும் உணரத் தலைப்பட்டேன்.

ஆனால் சாமு, தான் நிஜமாகவே வல்லவர் என்பதை தன் எழுத்தில் காண்பித்துவிடுவார் என்பதை நான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தன் பா ரதத்தால் பாரதத்தையே ஓட்டிய சாரதி பாரதி என்று முதல் வரியிலேயே நிறுத்தி நிதானமாக ஒரு ஹை-டெக் தமிழைக் கொடுத்து விவேகானந்தர் போல கையைக் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்து, தலையை நிமிர்த்தி பேசி சபையை கலகலப்பாக்கி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் நீதிபதிகளையும் சட்டென எழுப்பி சீட்டின் நுனியில் உட்கார்த்தி வைப்பார் எனக் கனவிலும் நான் நினைக்க வில்லை. காரணம் இந்த சகோதரிகள் இருவரும் கதவை சாத்திக் கொண்டு ரிகர்ஸல் செய்தவர்கள். ஒரு அறையில் யாருக்கும் கேட்காத அளவில் ‘குசகுச’வென மூத்தவளுக்கு நிதானமாக பாடம் நடத்தி சொல்லியவர் சாமு. ஆனால் நானோ எல்லோர் முன்னிலையிலும் ராணியை அழைத்து வைத்து ரிகர்சல் கொடுத்து போட்டி நாளுக்கு முன்பேயே எதிரி கேம்புக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்ததால் நண்பர்கள் எல்லோருமே ராணி பேசும் அழகில் ’மதி’ மயங்கி இருந்திருந்தனர்.

ஆனால் போட்டி நாளன்று தேவி மேடையேறி வார்த்தை ஜாலத்தால் தமிழ் பேசி அந்தக் கொஞ்சும் தமிழால் பாரதியைப் போற்றி இந்த சபையையும் இப்படி மயக்குவார் என்பதைத் துளியும் எதிர்பார்க்கவில்லதான். ஐய்யயோ இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான், மறு பேச்சு பேசாமலேயே முதல் பரிசு தேவிக்குதான்.. என்ன செய்வது.. அடக்கடவுளே.. போச்சு.. நம் மரியாதை.. மானம் எல்லாம் என்ற சமயத்தில்தான் அந்த தேவியே அபயக் கரம் போல கை கொடுத்தார். இன்னும் மூன்று நான்கு வரிகளைப் பேசிவிட்டால் ஐந்து நிமிஷம் முடிந்துவிடும், அவர் பேச்சும் முடிந்துவிடும் என்ற சமயத்தில்தான் தேவியின் ’இயற்கையான மறதி’ அவருக்கு ’சட்டென’ நினைவுக்கு வர அவ்வளவு நேரம் சரளமாகப் பேசிக் கொண்டிருதவர் அடுத்து என்ன ’சொல்’ பேசவேண்டுமென்பதை மறந்துவிட்டு அப்படியே ஒரு நிமிஷம் நின்றார். அவ்வளவுதான் நமது பக்க நண்பர்கள் ‘ஓஓ’ என்று கோஷமிட அடுத்த இன்னொரு நிமிடத்தில் மேஜை மணி ‘டங்’ என அடிக்கக் கண்ணீருடன் கீழே வந்தார்.

முதல் பரிசு ராணிக்கே, இரண்டாவது ஆறுதல் பரிசு தேவி என நீதிபதிகள் அறிவிக்க ‘ஓ’ என்று மறுபடியும் கூட்டத்தில் கோஷம். ‘Bபோங்காட்டம்’ (தப்பாட்டம்) என்று கமெண்ட் கொடுத்து அக்காவுடன் சாமு பரிசைப் பிடுங்காத குறையாக ஜட்ஜிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனார்கள்.

பிறகு எல்லாம் சரியாகப் போய்விட்டது என்பதும், நண்பர்கள் முன்னிலையில் சாமுவின் எழுத்தை நான் சிலாகித்துப் பேசியதால் அந்த அன்புத்தங்கையும் நெகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டதும் வேறு விஷயங்கள்தான். சாமு தற்சமயம் அலிகார் பல்கலைக்கழகத்தில் சரித்திர விரிவுரையாளராக இருக்கிறார்.

பிற்காலங்களில் இங்கு விழாக்களில் பேச சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாரதி என்றாலே நான் அன்றிலிருந்து ’பா ரதத்தால் பாரதத்தை ஓட்டிய சாரதி’ என்றே எங்கும் ஆரம்பித்ததும் வேறு விஷயம்தான். இதை சாமுவிடம் அடிக்கடி நினைவுபடுத்தும்போதெல்லாம் ‘எங்கே அண்ணா, இப்போதெல்லாம் பாரதியைப் பற்றி உங்கள் ஒருவரோடு மட்டுமே பேசமுடிகிறது’ என்கிறார்.

சாமுவின் ஆதங்கத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. எந்த இருவருக்கு நாங்கள் இருவரும் எழுதிக்கொடுத்துப் பேச வைத்தோமே, அந்த இருவரும் தற்சமயம் உயிருடன் இல்லை என்பதும் ஒரு வருத்ததுக்குரிய விஷயம்தானே..>>டச்சிங்.   நன்கு விவரமாய் அருமையாய் எழுதிட்டீங்க திவாகர்

திவாகர்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 2:21:37 AM9/11/14
to மின்தமிழ், வல்லமை, Shylaja Narayan, தமிழ் சிறகுகள்
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!

சாட்டையா வந்து நின்னு சாடுதய்யா ஒம் பாட்டு!
வேட்டைக்கு வந்து நின்ன வெள்ளையன வெரட்டிருச்சு!
கோட்டைக்கு ராசாவா பொறந்தாலும்  ஒசத்தியில்ல‌!
பாட்டுக்கு  ராசா நீ!..பறிகொடுத்து நின்னோமே!

தாவாரம் வந்து நின்னா தாங்காத பாவமுன்னு
ஏவாரம் பேசுனத எதுத்து கேட்டு அரவணைச்ச‌
பூவாரம் சூட்டி ஒரு பொழுதேனும் பார்க்கலையே!
சேதாரம் வந்துருச்சே  பாவி சனம் எங்க போவோம்!

முண்டாசு கட்டிக்கிட்டு முறுக்கி வுட்ட மீசையோட‌
கண்டாலே கோடி சனம் கவலையெல்லாம் மறந்திருமே!
கொண்டாடும் நாளிருக்கு கோமகனே ஒன்னக் காணோம்!
துண்டான மனசெல்லாம் துயரச் சும அழுத்துதய்யா!.

குயிலுங் கிளியு வந்து கூடி நின்னு அழுவுதய்யா!
குருவியுங் காக்கையு இனமென்னு புலம்புதய்யா!
அருவி போல ஒம் பாட்டு!.. அத வுடவும் ஒம் பேச்சு!.
ஒரு தொணையா நீயிருந்த ஒன்ன வுட்டு இருப்பதெங்கே!.

வாழுகிற நாள் முழுசும் வறுமையில துடிச்சதென்ன‌!
பாழுமிந்த ஒலகம் ஒன்ன தள்ளி வச்சு பார்த்ததென்ன‌!
ஆழமான சமுத்திரத்த போலழுதோம் கேக்கலையோ!
கோழ (ழை) கூட‌ வீரனாக குரல் கொடுத்த மகராசா!.

தங்கு தடை இல்லாம கவித‌ சொன்ன கோமகன‌
கங்கு வந்து சுட்டதென்ன கலங்கி நாங்க‌ நிற்பதென்ன‌!
தங்க ராசா ஒங்கதய முடிச்சமுன்னு எமனிருக்கான்!
எங்க குலம் உள்ளவர எங்க நெஞ்சில் நீயிருப்ப!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-11 10:35 GMT+05:30 radius.consultancy <radius.co...@gmail.com>:
​ 
​         
​                  
​           
​       
​   
​    
​  
​  
​     
​        
​  
​            

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 2:23:39 AM9/11/14
to மின்தமிழ், வல்லமை, தமிழ் சிறகுகள், Shylaja Narayan
இதுவும் உள்ளத்தை உருக்கும் பாடல்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-11 11:51 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​          

shylaja

unread,
Sep 11, 2014, 2:51:55 AM9/11/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், வல்லமை, தமிழ் சிறகுகள்
2014-09-11 11:51 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!>>>> கூரான வார்த்த..ஆஹா பாரு இது ரொம்ப ஜோரு!

சாட்டையா வந்து நின்னு சாடுதய்யா ஒம் பாட்டு!
வேட்டைக்கு வந்து நின்ன வெள்ளையன வெரட்டிருச்சு!
கோட்டைக்கு ராசாவா பொறந்தாலும்  ஒசத்தியில்ல‌!
பாட்டுக்கு  ராசா நீ!..பறிகொடுத்து நின்னோமே!<<<< அதானே  பாட்டுக்கு ராசா நீ!

தாவாரம் வந்து நின்னா தாங்காத பாவமுன்னு
ஏவாரம் பேசுனத எதுத்து கேட்டு அரவணைச்ச‌
பூவாரம் சூட்டி ஒரு பொழுதேனும் பார்க்கலையே!
சேதாரம் வந்துருச்சே  பாவி சனம் எங்க போவோம்!>>>>>> அய்யோ மனசைப்போட்டு உலுக்குதே.

முண்டாசு கட்டிக்கிட்டு முறுக்கி வுட்ட மீசையோட‌
கண்டாலே கோடி சனம் கவலையெல்லாம் மறந்திருமே!
கொண்டாடும் நாளிருக்கு கோமகனே ஒன்னக் காணோம்!
துண்டான மனசெல்லாம் துயரச் சும அழுத்துதய்யா!.<<<<< நினைவுநாளில்  ரொம்பவே அழுத்துதையா

குயிலுங் கிளியு வந்து கூடி நின்னு அழுவுதய்யா!
குருவியுங் காக்கையு இனமென்னு புலம்புதய்யா!
அருவி போல ஒம் பாட்டு!.. அத வுடவும் ஒம் பேச்சு!.
ஒரு தொணையா நீயிருந்த ஒன்ன வுட்டு இருப்பதெங்கே!.<<<<நீ விட்ட தமிழே துணை ஐயா

வாழுகிற நாள் முழுசும் வறுமையில துடிச்சதென்ன‌!
பாழுமிந்த ஒலகம் ஒன்ன தள்ளி வச்சு பார்த்ததென்ன‌!
ஆழமான சமுத்திரத்த போலழுதோம் கேக்கலையோ!
கோழ (ழை) கூட‌ வீரனாக குரல் கொடுத்த மகராசா!.>>>> சிம்மக்குரல் அல்லவா!

தங்கு தடை இல்லாம கவித‌ சொன்ன கோமகன‌
கங்கு வந்து சுட்டதென்ன கலங்கி நாங்க‌ நிற்பதென்ன‌!
தங்க ராசா ஒங்கதய முடிச்சமுன்னு எமனிருக்கான்!
எங்க குலம் உள்ளவர எங்க நெஞ்சில் நீயிருப்ப!>>>கண்டிப்பா பாரதி இருப்பாரு பாரு  பாமரன் பார்வையிலான  எதார்த்தவரிகள்  

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-11 10:35 GMT+05:30 radius.consultancy <radius.co...@gmail.com>:
​ 
​         
​                  
​           
​       
​   
​    
​  
​  
​     
​        
​  
​            

PRASATH

unread,
Sep 11, 2014, 4:05:19 AM9/11/14
to tamizhs...@googlegroups.com, மின்தமிழ், வல்லமை
வாவ்... அமேசிங் ரைட் அப்...

Fakhrudeen Ibnu Hamdun

unread,
Sep 11, 2014, 4:39:00 AM9/11/14
to தமிழ் சிறகுகள், vallamai, பண்புடன்
ஆறுகுளம் ஏரியென்று ஆயிரமே இருந்தாலும்
ஆழிகளோ அதிகமில்லை அதிலும்நீ பேராழி
சீறியொரு பேரலையில் செய்திட்டாய் பிரளயமே
சிந்தனையைச் சீர்திருத்தச் செய்திட்ட பாவகைகள்
வீரியமும் வித்தகமும் விளைத்திட்ட தமிழ்வயல்கள்
உணர்வுற்றோம் உள்ளபடி உன்பாட்டால் எம்பாட்டே.
கூறுகிறோம் நன்றிதனை குறிப்புடனே இன்றைக்கும்
கொடுத்திட்ட மருந்துகளும் குறைவின்றி தேவையுண்டே.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

"The more we learn the more we realize how little we know."

அதிகமாய் கற்க அதிகமும் (உ)ணர்வோம்
அதிகுறைவாம் பெற்ற அறிவு

ஜீவ்ஸ்

unread,
Sep 11, 2014, 5:52:06 AM9/11/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, thamiz...@googlegroups.com
வணக்கம். 

இந்த தினத்தில் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை நானும் பிரசாத்தும் வெண்பா வடிவில் கொண்டு வரலாம் என ஒரு எண்ணம் கொண்டுள்ளோம். 

ஏற்கனவே சில எழுதி வைத்திருந்தாலும் அதை செவ்வனே செப்பனிட்டு சரியான வடிவில் கொண்டுவர வேண்டும்.  அனைவரின் ஆசியும் வழிகாட்டுதலுடன் இதை செய்ய இயலும் என்ற நம்பிக்கையுடன் இதை இன்று ஆரம்பிக்க இருக்கிறோம். 

நன்றி.
ஐயப்பன்

coral shree

unread,
Sep 11, 2014, 5:57:39 AM9/11/14
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்
அன்பினிய சகோ. ஜீவ்ஸ்,

மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள். தொடருங்கள். காத்திருக்கிறோம். 

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.

shylaja

unread,
Sep 11, 2014, 6:51:41 AM9/11/14
to vallamai, tamizhs...@googlegroups.com, மின்தமிழ்
பிரசாத்து அழகா தமிழ்ல சொலல்க்கூடாதா இதை?!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Sep 11, 2014, 6:53:20 AM9/11/14
to vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
இப்னு! சீறியொரு பேரலையில் என்கிற வரியில் பாரதியின் பிரளய வரிகளை உணரமுடிகிறது  சிறியகவிதை எனினும் சீரிய கவிதை.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
shylaja

unread,
Sep 11, 2014, 6:54:05 AM9/11/14
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள், பண்புடன்
வாழ்த்துகள் ஆசிகள் இருவருக்கும்   தொடர்க   பொலிக பொலிக!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா
 
Kaviri Maindhan

unread,
Sep 11, 2014, 6:55:31 AM9/11/14
to vallamai, மின்தமிழ்

மரணத்தை வென்ற மாகவி

(கவியரசு கண்ணதாசன் கவிதை)

ஆசைதனக் கொருகாணி நிலமென்று 

  அற்புத பாட்டிசைத்தான் - அன்று 

ஆற்றிவற்றவர் தம்மிடையே - தமிழ் 

  ஆனந்தக் கூத்தடித்தான்!

மீசைத்துடித்திட மேனிகொதித்திட 

  வீரக்கனல் வடித்தான் - கவி 

வேந்தன் உலகத்து மா கவிவாணரை 

  வெல்லும்தமிழ் கொடுத்தான்!

தந்தையர் நாடென்ற பேச்சில்ஒரு 

  சக்தி பிறக்குதென்றான் - அவன் 

சாப்பிடும் சோறுக்கு வைக்காமல் - கவிச் 

  சந்ததி வைத்துச் சென்றான்!

சிந்தையிலும் ரத்தத்திலும் இந்த 

  தேசத்தில் பாசம் வைத்தான் - அட 

தீயொருபக்கமும் தேனொருபக்கமும் 

  தீட்டிக் கொடுத்துவிட்டான்!

சந்திரசூரியர் உள்ளவரையிலும்  

  சாவினை வென்று விட்டான் - ஒரு 

சரித்திரப் பாட்டில் பாரத தேசத்தின் 

  தாய்மையை வளர்த்துவிட்டான்!

இந்திரா தேவரும் காலில்விழும்படி 

  என்னென்ன பாடிவிட்டான் - அவன் 

இன்று நடப்பதை அன்று சொன்னான் - புவி 

  ஏற்றமுரைத்து விட்டான்!

(கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்)

பாகம் 1 & 2 நூலில் இருந்து சில பகுதிகள் 

நன்றி - கவியரசர் மின்னஞ்சல் 1889

11.09.2014

2014-09-11 14:51 GMT+04:00 shylaja <shyl...@gmail.com>:
பிரசாத்து அழகா தமிழ்ல சொலல்க்கூடாதா இதை?!
2014-09-11 13:34 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
வாவ்... அமேசிங் ரைட் அப்...
2014-09-11 11:51 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
 
அன்புடன்
ஷைலஜா
 
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி,
 
பாரதியார்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

shylaja

unread,
Sep 11, 2014, 6:58:04 AM9/11/14
to vallamai, மின்தமிழ்
தனிமடலில் விசாலம் மேடம் அனுப்பிய கவிதை இது...
 
பல்லவி                                  ராகம்  சங்கராபரணம்   தாளம்   ஆதி   
 
பாமாலை நமக்கு தந்த பாரதி  வாழ்க,
பூமாலை மணம் கமிழும்    பாக்களும் வாழ்க,
பாரதியார் பாடலகளைப் படித்துப் பாரடி 
பூக்களிலே தேனூரும்  ரசித்து பாரடி ,,,
பாரதியார்  ,,,,கவிஞர் பாரதியார் ....புலவர்   பாரதியார் .....பாடல்களை படித்துப் பாரடி.......
 
அ பல்லவி ........
 
கொள்ளை அழகு  கண்ணனாம்  
பல வேடம் பூண்டு   வந்து ,
எத்தனை  வேலை  செய்கிறான் டி .....
எந்தன்   நிலையில்  நானுமில்லை ,,{பாரதியார்,,,,,,}
 
சரணம்  1
பத்தினியார்  பாஞ்சாலி சபதமே  
பாடினாலே நெஞ்செல்லாம்   குமுறுமே ,,
பக்தி பாட்டு ,வீரப்பாட்டு ,குயில் பாட்டு  ,தேசப்பாட்டு ,
மல்லிகைப்போல உதிர்ந்தனவே  
மணமும் இங்கே கமிழ்ந்தனவே   {பாரதியார்,,,}
 
சரணம் 2 
 
பாப்பா பாட்டில் நானும்  ஒரு  குழந்தை ஆனேனே !
கண்ணன் பாட்டில்  நானும்  ஒரு  ராதையானேனே,
வெண்ணைத் திருடும்  கண்ணபிரான்  ,
வேலைக்காரனாக  வந்தான் ,
பஞ்சபூதப் பாட்டுக்களும்  ,
என்னை  மயக்கி விட்டனவே {பாமாலை நமக்குத் தந்த  பாரதி வாழ்க ,,,,,,,,,}

விசாலம் ராமன்
{நான் ஒரு பாட்டுப்போட்டிக்கு அனுப்பித்து பரிசும் பெற்ற பாடல் இந்த ரதத்தில் ஏற்றுகிறேன் ) என்று  குறிப்பிட்டிருக்கிறார் விசாலம்.

shylaja

unread,
Sep 11, 2014, 7:03:15 AM9/11/14
to vallamai, மின்தமிழ்
எளிமையான வரிகளில் இதயத்தைத்தொட  கவியரசால்தான் முடியும் சிறப்பாக உள்ளது  காவிரிமைந்தன் அவர்களே!

2014-09-11 16:25 GMT+05:30 Kaviri Maindhan <kavir...@gmail.com>:

shylaja

unread,
Sep 11, 2014, 7:11:07 AM9/11/14
to vallamai, மின்தமிழ்
ஜெய்ஸ்ரீ சங்கர்  தனது இந்தக்கவிதையை ரதமேற்றச்சொல்லி இருக்கிறார்.
இந்த வையம் செழித்திட
கனவு கண்டார் அவர்

பாரத சுதந்திரத்

தாகம் கொண்டார்

பெண் விடுதலை
வேண்டு மென்றார் -

செய்வோம் தருவோம்
வருவோம் பெறுவோம்

என்றும் ஓமென்று
அல்லாது வேறில்லை

நின்றார்..நிமிர்ந்தார்
சிரித்தார் சிலிர்த்தார்..

வில்லென மீசையும்
அம்பெனப் பார்வையும்

இலக்கே நெற்றிக்கு வட்டப்
பொட்டாகக் கொண்டு...

யாவர்க்கும் வீரத்தை
அங்கிருந்து பகர்ந்தார். 

அறிவை இயக்கியவர் 

அள்ளித்தந்த பாடல்கள்

புவியில் இலக்கிலாமல்
நெஞ்சங்களில் வலம்வர

காணி நிலம் கேட்ட உமக்கு
இக்கோளமே உரிமையாக 

மனத்தால் சுமக்கும்
ரதங்களைப்  பாரேன் பாரதி...

மலர்மனப் பெண்டிர்
மகிழ் மணப்பூச் சொரிந்து

நீ அன்பு செய்து அருளிய
பாடல்கள் அனைத்தும்

ஆழப் கற்று இன்னும்
மனம் கரைந்து நீயும்

எங்களுடன் இணையத்தில்

வாழ்திருக்கக் கூடாதா..?

ஏக்க மூச்சுகள் பெருகிச் சிதற
எதைச் சொல்லாமல் விட்டாய்..?

சொல்லிச் சென்ற அத்தனையும்
உனக்கே சமர்ப்பணமாகி

நிந்தன் சொப்பனங்கள்
உன்னோடு உறங்கிடாமல்

ஏற்றி வைத்த விளக்காக
சென்றதினி மீளாது என

ஞான விளக்கேற்றினாலும்
இன்று புதிதாய்ப் பிறந்தாய்

என நித்தம் உம்மை
தமிழால் வாழ்த்த

எங்கெங்கும் காணினும்
நீ கண்ட சக்தியே உருவெடுக்க

நீ விதைத்த எண்ண வித்துக்கள்
வீரத்தை  ரசவாதமாக்கி

வெற்றிகள் குவிந்து கொள்ளும்
புதுமை ஆரணங்குக் குழுமி

இழுக்கும் பரவச ரதத்தில்
பெருமிதத்தில் நீவிர் ...!

உமைக்கண்ட ஆனந்தத்தில்
கண்ணீர்  கண்களுடன்.......!

ஜெயஸ்ரீ ஷங்கர்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 9:40:38 AM9/11/14
to தமிழ் சிறகுகள், மின்தமிழ், வல்லமை
நன்றி!.. நன்றி!.. பிரசாத்ஜி.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 11, 2014, 9:43:05 AM9/11/14
to வல்லமை, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
 ஆசானே!.. அருமையான தகவல்!..ஆவலாக இருக்கிறேன் படிக்க!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

Megala Ramamourty

unread,
Sep 11, 2014, 11:43:09 AM9/11/14
to மின்தமிழ், vallamai
காலம் வென்ற ஞால கவி!

பாரதிர் பாடல்களால் பாரையே அசைத்ததனால்
பாரதிப் பட்டமுனைத் தேடியே வந்ததையா!
கலைவாணி அருளுனக்குக் கடலளவு இருந்ததனால்
மலைக்கவைக்கும் மாகவிகள் மன்பதைக்கு அளித்திட்டாய்!

தேடிச் சோறுண்டு சிறுகதைகள் பேசுவோரைச்
சாடிச் சென்றவன்நீ சரித்திரத்தில் நின்றவன்நீ!
பாரதக் கதையான பாஞ்சாலி சபதமெங்கள்
பாரதக்(இந்திய) கதையுமென்றே சூசகமாய்ச் சொல்லிவைத்தாய்!

சித்தனாய் வந்தவனே சித்தாந்தம் சொன்னவனே
பித்தனென்று உனையுலகம் ஏசியதும் முறைதானோ?
எத்தனைக் கவிகள்இனி இத்தரையில் வந்தாலும்
வித்தகக் கவியுன்னை வெல்லுவார் எவருண்டு?

நீடு துயில்நீக்க நிலவாக வந்தவனே
வீடு பேறுன்னை விரைவாக அழைத்ததுவோ???
பாடிப் பறந்தகுயில் பார்நீங்கிச் சென்றதுவே
வாடி நிற்கும்எமை வாழ்விக்க வருவாயா?

அறிவுச் சுடராலே அகிலத்தில் ஒளிதந்தாய்
வெறுமை எமைச்சூழ விடைபெற்றுச் சென்றனையே! - உன்
தூல உடலெம்மை நீங்கியே சென்றிடினும்
ஞாலம் வென்றவுந்தன் நற்கவிகள் வாழுமென்றும்!

(’ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர் வாராதுபோல் வந்த மாமணியைத் தோற்போமோ? என்று
அடிமை நாட்டின் அவல நிலை குறித்தும், சுதந்திரத்தின் அருமை குறித்தும் செப்பினானே அந்த சிந்துக்குத் தந்தை....இவ்வடிகள் அப்படியே அவனுக்கும் பொருந்துதல் காண்க. பாரதி போன்றோரும் ஆயிரம் ஆண்டுகட்கு ஓர் முறையே தோன்றும் யுக புருஷர்கள்தாம்; அவ்வருந்தவப் புதல்வனை நாம் தோற்றது நம் அன்னைத் தமிழுக்குப் பேரிழப்பே!)

Megala Ramamourty

unread,
Sep 11, 2014, 11:48:36 AM9/11/14
to மின்தமிழ், vallamai
தம்பி பிரசாத்துக்கு ஓர் வேண்டுகோள்!

வெண்பா இயற்றுவதில்
   ஈடில்லா என்னினிய
நண்பா உன்னிடத்தில்
  வைக்கின்றேன் வேண்டுகோள்!
பாவாலே பாரினிலோர் - (ராஜ)
  பாட்டையிட்ட பாரதிக்குன்
நாவாலே இசைத்திடுக
 வெண்பாக் கவியொன்று!

அன்புடன்,
அக்கா (மேகலா)

Innamburan S.Soundararajan

unread,
Sep 11, 2014, 11:49:44 AM9/11/14
to vall...@googlegroups.com
வாழுமென்றும்! என்று ஆசி பல கூறினாலும்,
ஆழமாக உன் கவிதைகளை படித்து இருந்தாலும்,
பாழாய் போன தமிழ் கற்பிக்கும் முறை தவறினாலும்,
கீழாய் போய் தவிக்காமல் துணிவு மேற்கொள்.

--

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

coral shree

unread,
Sep 11, 2014, 12:43:49 PM9/11/14
to vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
அனைவரின் படைப்புகளும் நன்றாக வந்துள்ளது. பாரதியின், பா ரதம் சிறப்பாக வலம் வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.

PRASATH

unread,
Sep 11, 2014, 2:05:45 PM9/11/14
to vallamai, மின்தமிழ்
அக்காவின் வெண்டுகோளுக்கிணங்க,

படித்தவர்க்கு மட்டுமன்றி பாமரர்க்கும் பாடல்
படித்தவரில் பாரதிபோல் யார்.

பாரதிரப் பாபுனையும் பாவலர் தம்மிலே
பாரதம் தந்திட்ட பாரதிபோல் யாரும்
வருங்காலம் பாட்டில் வடித்த;கதை உண்டோ
தருவீர் பதிலிதற்கு தான்.

Megala Ramamourty

unread,
Sep 11, 2014, 5:17:37 PM9/11/14
to மின்தமிழ், vallamai
அக்காவின் வேண்டுதலை
  அன்புடனே ஏற்றிட்டுப்
’பக்கா’வாய்க் கவிவடித்த  :-)
   பாசமிகு தம்பியே...!!

நன்றிகள் பலவுனக்கு
  நாவினிக்கச் செப்பிடுவேன்
என்றும் விளங்கிடுவாய்
 வெண்பாவில் வித்தகனாய்!! 

அன்புடன்,
மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Sep 12, 2014, 3:29:22 AM9/12/14
to vallamai, மின்தமிழ்
அமர்க்களம் மேகலா  ..கொஞ்சம் ஊர்சுற்றல் ஆகவே கவிதைபார்த்து கருத்து சொலல்தாமதமாகிட்டது!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Sep 12, 2014, 3:31:03 AM9/12/14
to vallamai, மின்தமிழ்
பாரதிபோல  பாரில் இதுவரை இல்லை ப்ரசாத்து   கவிதை சிறப்பாக இருக்கு  ஆமா எங்கே  பாஞ்சாலி(சபதம்)?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages