ஸ்மார்ட் சிட்டி மதுரை- அலப்பரைகளும் அலங்கோலங்களும்

3 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jun 21, 2026, 9:03:20 PM (2 days ago) Jun 21
to vallamai

ஒரு மதுரைக்காரர் பதிவு எல்லா மாநகர மக்களையும் கவரும் அழகு ...

சிரிக்காமல் இருக்க முடியாது. கடைசியாக வருத்தப்படாமலும் இருக்க முடியவில்லை. 

/// மதுரைக்காரனாக இருந்தால் தான் சில டிசைன் களை ஆதரிக்கவும் முடியும், லந்து கொடுக்கவும் முடியும். 

உதாரணத்திற்கு மதுரைக்குப் பாலங்கள்'லாம் தேவை தான். ஆனா அதையும் நாங்க வம்பிழுப்போம். 

காளவாசல்ல ஒரு பாலம் இருக்கு. எதுக்கு கட்டுனாய்ங்கனு கேட்டா, கூட்டமா இருக்குல அப்பு ம்பாய்ங்க.. ட்ராஃபிக் இருக்குறது கிழக்கலருந்து மேற்க.
இவைங்க கட்டி நீட்டியிருக்குறது வடக்கலருந்து தெக்க... இஞ்சினியரு ப்ளூ பிரிண்ட் போட்டுட்டு N - S போடுறப்ப பேப்பர திருப்பி வச்சு கையெழுத்து வாங்கிட்டாய்ங்க போல..

அடுத்ததா ஒரு பாலம் கோரிப்பாளையம் இண்டு இடுக்குல கட்டிட்டு இருக்காய்ங்க. பாலம் ஆரம்பிக்கிறது அமெரிக்கன் காலேஜ் கிட்ட... போய்ச் சேருற இடம் பழைய மேம்பாலத்துல.. இடைல ஒரு வாய்க்கால வெட்டிவிட்ட கணக்கா வலது பக்கமா ஒரு பாலம் போகுது.செல்லூருக்காம்.
அதோட ப்ளூபிரிண்ட்ட தொலச்சுட்டானுகளானு தெரியல..இல்ல எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்கனு தெரியலயா னு தெரியல... அந்தப் பாலம் கோரிப்பாளையத்துல இருந்து பொசுக்குனு செல்லூர் பக்கம் இறங்கிருச்சு..இவனுக ஒரு கிலோமீட்டர் தள்ளி ரோட்ட அகலப்படுத்தி, ரெண்டாக்கி, நடுல பள்ளமாக்கி, ஒரு பக்கம் தார போட்டு இன்னொரு பக்கம் அப்படியே னு கதற கதற கற்பழிச்சு வச்சுருக்காய்ங்க. 

இதே மாதிரி ஒரு பாலம் அண்ணா நகர் அப்போலோ ஹாஸ்பிடல் ட்ட கட்டுனானுக...அது சரி காலேஜ் பள்ளிக்கூட டைம் விட்டா அந்த சிக்னல்ல பஸ் நிண்டுச்சனா மதுரை சிவகங்கை ரோட்டுல இருந்து சிவகங்கை வர நிக்குமே..பாலம் வந்தா சரித்தான்னு இருந்துச்சு.

பாலம் கட்டிட்டு இருந்தப்ப அண்ணா பஸ் ஸ்டாண்டுல இருந்து பால்பண்ணை சிவகங்கை ரோட்டுக்கு வரப்ப ரோட்ட அகலப்படுத்தி, கார்னர்ல இருந்த ஹாஸ்பிட்டல இடிச்சு, அந்த ரோட்டு ஓரத்த ஃபுல்லா வழிச்சானுக...ஒரு வேள பாலத்த பெருசா கட்டுறானுகளோனு பாத்தா, அது அப்போலோ சிக்னல தாண்டுனதும் படுத்துருச்சு. அப்புறம் ஏன்டா இங்க இருந்து ஒரு கிலோமீட்டர் தாண்டி ரோட்டலாம் வழிச்சி வச்சிருக்கீங்க...

இதுல பால்பண்ணைகிட்ட ஒரு சிக்னல் இருந்துச்சு. அங்க ஒரு போலிஸ போட்டு அவர் லொட்டு லொட்டுனு சிக்னல அமுக்கனுமானு ஒரு ரவுண்டானா கட்டிவிட்டா அதுபாட்டுக்க போகும்லனு யாரோ ஐடியா கொடுக்க ஒரு ரவுண்டானா போட்டுவிட்டானுக.. அதுவரைக்கும் அந்த இடம் பெரிய இடமாருந்துச்சு. இவனுக ரவுண்ட் கட்டுனதும் சிறுசாயிருச்சு... இதுல சிக்னல் இருந்தப்ப அதுபாட்டுக்க போய்ட்டு இருந்த வண்டிலாம் ரவுண்டானா கட்டுனதும் பாக்கனுமே... நேரா போய் வலது பக்கம் திரும்புறவன் இடப்பக்கமே வரான், இடப்பக்கம் போகவேண்டியவன், வலப்பக்கம் போறான். பூராப்பயலும் ரவுண்டானாக்கிட்ட வண்டியோட கோர்த்து நிண்டுக்கிட்டு கண்ணாலேயே பேசிட்டு இருக்கானுக..காதலுக்கு மரியாதை படத்துல முத சீன்ல ஒரு புக்க எடுக்க வேண்டி விசயும் சாலினியும் பாக்குங்க.... பாக்க ஏழாம் நம்பர் பஸ் இங்க நிக்குமானு நம்மட்ட அட்ரஸ் கேக்க வர வெளியூர்க்காரன் மாதிரியே பாப்பாய்ங்க... கேட்டா ரொமேன்ஸாம்...அப்படி கண்லயே பேசிட்டு ரவுண்டானாவே களை கட்டுது...

இதவிட மதுரைக்கு வெளியே விரகனூர் கிட்ட ஒரு ரவுண்டானாவ மிரட்டி விட்டுருக்கானுக. 

நல்ல முகூர்த்தம் டைம்ல ஏதோ சாலை மறியல் மாதிரி முட்டிட்டு நிக்கிறானுக... தெப்பக்குளத்துல இருந்து ரவுண்டானாக்கு வந்தா இடப்பக்கம் மாட்டுத்தாவணி, நேரா பழைய திருப்புவனம் வழியா ராம்னாட் போற வழி. அங்க ஒரு இராமநாதபுரம் வழினு போர்ட் இருக்கும். ரவுண்டானால கீழ் தெற்க திரும்ப அங்க ஒரு வழி இருக்கும் , அங்கயும் இராமநாதபுரம் வழினு இருக்கும் அது பை பாஸ், அப்புறம் ரவுண்டானால இன்னும் கீழ் தெற்கக்கும் மேற்கக்கும் நடுல(4th exit) ஒரு பை பாஸ் இருக்கும் , அது தூத்துக்குடி திருநெல்வேலி பைபாஸ்.. புதுசா வரவனுக்கு வழி சொல்ல கூகுளே குழம்பிரும் அங்க. 

ஒருவாட்டி தூத்துக்குடி பைபாஸ்'ல வேலம்மாள் பக்கத்து ஐடா ஸ்கடர்ல ஒரு கல்யாணம். கிளம்பிவந்தா தெப்பக்குளம் தாண்டுனதுல இருந்து ட்ராஃபிக். ஏதோ ஆக்சிடண்ட் போல; இந்தா போயிரும்னு நிண்டா கால்மணி நேரமா ட்ராஃபிக். ரவுண்டானா நெருங்க.. நெருங்க..; போலிஸ் நடுல நிக்கிது.. போலிஸ்க்கு வேலை குறையனும்னு தாம்யா ரவுண்டானா போட்டுருக்காய்ங்க...

என் முன்னாடி போன கார்க்காரன போலிஸ் ஏதோ கேட்க; அந்தாளு ஏதோ சொல்ல இடப்பக்கமா மாட்டுத்தாவணி பக்கம் போகச்சொல்லிட்டார். எனக்கு என்னடானா அடேய் மாட்டுத்தாவணி போக ஏம்லே இவ்ளோ நேரம் இங்க ட்ராஃபிக்ல நிக்க.... லூசுப்பயலேனு திட்டிட்டு ரொம்ப பெருமையா போக போலிஸ்காரர் என்னைய நிப்பாட்டி எங்க போகுறீங்கனு கேட்க, தூத்துக்குடி பைபாஸ்னு சொல்லவரதுக்குள்ள...நீங்க எங்க போகனாலும் இடப்பக்கம் திரும்பி யூ டர்ன் போட்டு அப்புறம் வாங்கனு சொல்லிட்டார். அதாவது சூர்யவம்சம் படத்துல சொல்வாய்ங்கள... புளியங்குடி போயிட்டு அப்புறமா பொள்ளாச்சி...அது கணக்கா..

அங்க நிக்கிது ஊர்பட்ட சனம். கல்யாணத்துக்கு போறதா பேறுகாலத்துக்கு போறதாடா.... இது பரவால

இராமநாதபுரம் திருப்புவனம் வழியா மதுரை நுழையுறவன மறுபடியும் இராமநாதபுரம் பைபாஸ்ல ஏத்தி யூ டர்ன் போட்டு வானு அனுப்பிட்டு இருந்தானுக...

எனக்குத் தெரிஞ்சு மதுரைல ஒரு ரவுண்டானா இருக்கு. அதுபாட்டுக்க எதுக்கு இருக்குனே தெரியலனா அது ஆரப்பாளையம் ரவுண்டானா தான். அந்தப் பக்கம் போனா தெரியும்... அந்த ரவுண்டானா சுத்தி ஒரு இருபது பேரி கார்டாவது வச்சிருப்பாய்ங்க.. எதுக்கு தெரியுமா...எல்லாரும் ரவுண்டானாவ சுத்திப்போங்கடானு சொல்லத்தான். ஏன்னா அங்கத்தான் ரவுண்டானாவ பாக்காம தாவுறதுலாம். 

கடைசியா பதிவ முடிக்கிறப்ப ஒரு ச்சூ..சொல்லிட்டு போவோம் . மதுரைல இருக்குற எல்லா ரவுண்டானா கிட்டயும் போய் நிண்டா ஏர்டெல் நெட் கணக்கா சுத்திட்டே நிக்க வேண்டியது தானே தவிர நகர்றதுக்கு வழியில்ல.....

பழனிக்குமார்

https://www.facebook.com/share/p/1DJLjNG2wx/

பதிவிற்குப் பிறகு நடந்திருக்கும் விமர்சனங்களும் ஜோக்குகளும் (comments) படிக்க வேண்டியது மிக மிக அவசியம். அதில் தான் பல்வேறு தமிழக மாநகரப் பாலங்கள் ஒரு ஒப்பீட்டுப் பார்வையாகக் (comparative study) கிடைக்கின்றன. 
பதிவைக் காட்டிலும் ஒரே 'சிப்பாணி' தான் போங்க (Madurai slang)...

சக 
Reply all
Reply to author
Forward
0 new messages