பச்சோந்தி
தேவைக்கு ஏற்ப கட்சி மாறுபவரை பச்சோந்தி என்பார்கள். அவர்களைப் பற்றி பேச எனக்கு ஒன்றும் இல்லை. அல்ப (?) பிராணி ஒன்றைப் பற்றிதான் இங்கு சொல்லப் போகிறேன்
ஓந்தியிலோர் ஓந்தி பச்சோந்தி
பார்க்க அழகு இவ்வோந்தி
ஆச்சரியங்கள் பல கொண்ட ஓந்தி
காணக் கிடைக்கும் மனச் சாந்தி
(படம் பிடித்தது க.சு.கிருஷ்ணன்)
(படம் ந.க.)
ஓணான், பல்லி, பாம்பு இனத்தைச் சேர்ந்த பச்சோந்தி ஒரு வினோதப் பிராணி. இதைப் பற்றிய சில தகவல்கள் இதோ. புத்தகத்தில் படித்தவை அல்ல. நேரில் கண்டறிந்தவை.
பச்சோந்தி நிறம் மாறும் என்பது உண்மை. ஆனால் நினைத்தபடி எல்லாம் அது இருக்கும் சுற்றுப் புரத்திற்கேப்ப நிறம் மாறும் என்பது தவறு. சாதாரணமாக பச்சை நிறத்திலே சில சிறு கருப்புக் கட்டங்களுடன் காணப்படும் இது கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை நல்ல பச்சை நிறத்திலிருந்து, கரும் பச்சையாகவொ அல்லது வெளிர் பச்சையாகவோ மாறுகிறது. அதன் மீதுள்ள கருப்பு புள்ளிகளோ கட்டங்களோ சற்றே மாறுகின்றன.
பச்சோந்திகளிடம் பல வியக்கத் தக்க விஷயங்கள் உள்ளன. அவை வருமாறு.
உருவத்தில் ஓணான் மாதிரித் தோன்றினாலும் இது ஓணான் போல வேகமாக ஓடக்கூடிய ஒன்றல்ல. முன்னும் பின்னுமாக ஆடி ஆடி நிதானமாக ஒரு ஒரு அடியாக காலை முன் வைத்து நகரும். அதே சமயத்தில் எதிரிகளிடம் இருந்து உயிர் தப்பிட வேண்டுமெனின் வேகமாக ஓடும் சக்தியும் கொண்டதிது.
பச்சோந்திக்கு முதல் எதிரி காகம். பச்சோந்தியைக் கண்டால் விடாது. கொன்று தின்றுவிடும். காகத்திடம் இருந்து தப்புவதற்குத் தான் இவை இருக்கும் தாவரங்களின் பச்சை நிறத்தையே இதற்கும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான்.
பச்சோந்தியின் கண்கள் இரெண்டும் தனித் தனியே இயங்கக் கூடியவை. ஒரு கண் முன்புரம் பார்க்கும் போது மற்றொன்றால் அது பின் புரம் பார்க்கும். அவ்வாறு பார்ப்பதை மாற்றிக் கொண்டே இருக்கும். கண்கள் ஒரு உருண்டையான தோல் பைக்குள் இருக்கும் ஒரு மில்லிமீடர் அளவிலான் சிறு ஓட்டை கொண்டதாக. கண்களைத் தனித் தனியாக எல்லாப் பக்கமும் சுற்ற வல்லது பச்சோந்தி.
பச்சோந்தியின் வால் அதற்கு ஐந்தாவது கால். ஒரு குச்சியில் இருந்து மற்றொன்றுக்குத் தாவும் போது முதலில் உடலை கவிழ்த்து வைத்த ஆங்கில எழுத்து ‘யூ’ போன்று வளைத்துக் கொண்டு முன்னங் கால்களைக் கொண்டு புதிய குச்சியைப் பிடிக்கப் பார்க்கும். எட்டவில்லை என்றால் முதுகை நிமிர்த்தி உடலை நீட்டி முன்னே உள்ள குச்சியைப் பிடிக்கப் பார்க்கும். அப்போதும் எட்ட வில்லை என்றால் தனது வாலை இருக்கும் குச்சியில் விஷ்ணுச் சக்கரம் போன்று சுருட்டிக் கொண்டு நான்கு கால்களையும் விட்டுவிட்டு எட்டிப் பார்க்கும். மீண்டும் எட்ட முடிய வில்லையா? விஷ்ணுச் சக்கரத்தினை மெதுவாகப் பிரித்து குச்சியை எட்டிப் பிடிக்கப் பார்க்கும். அப்பொதுகூட எட்ட வில்லையா? பேசாமல் வாலை மீண்டும் விஷ்னணுச் சக்கரமாக சுருட்டி உடலை பின்னே இழுத்து வந்த வழியெ திரும்பி விடும்.
பச்சோந்தியின் நாக்கு கிட்டத் தட்ட அதன் உடல் நீளத்திற்கே ஆனது. வேண்டும்போது நீட்டி முன்பக்கமாக சாட்டை போல வேளியே மின்னல் வேகத்தில் தள்ளி பசை கொண்ட நுனி நாக்கால் அதற்கு மிகவும் பிடித்த உணவான ஈ மற்றும் சிறு புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். நாக்கு ஒட்டிக் கொண்டிருப்பதும் அடி வாயில் அல்ல. நுனி வாயில்.
பச்சோந்தியின் முன்னங் கால்களில் வெளிப்புறம் இரெண்டும் உட்புறம் மூன்றுமாக ஊள்ள நகங்கள் பின்னங் கால்களில் வெளிப் புறம் மூன்றும் உட்புறம் இரெண்டுமாக இருக்கும்.
இப்படிப் பல வியக்கத் தக்க விநோதங்களை பச்சோந்திக்கு அதன் வாழ்க்கைக்கேற்ப அளித்திருக்கிறான் ஆண்டவன்.
பச்சோந்தி நல்ல பாம்பு போன்று விஷம்கொண்டது என்பர் சிலர். இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. கொல்லப்படவிருந்த ஒரு பச்சோந்தியை காப்பாற்றும் பொருட்டு அதன் வாய்க்குள் என் விரலை விட்டிருக்கிறேன். அதுவும் நன்றாகக் கடித்தது. ஆனால் இன்றும் நான் உயிருடன் தான் இருக்கிறேன். அந்தப் பச்சோந்தியும் அன்று பிழைத்தது.
(ஆமை வேகத்தில் நகரும் பச்சோந்தி அசுர வேகத்தில் ஓடுது)
(படம் எடுத்தது ந.க.)
பச்சோந்தி என்றால் பச்சையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வேறு நிறங்களிலும் இருக்கலாம். அடுத்து வரும் படங்களைப் பாருங்கள்.
விஷ்ணுச் சக்கர வாலையும் கால் விரல்களையும் கண் அமைப்பினையும் பாருங்கள்
இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள். இறைவனை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.
( கடைசீ இரண்டு வண்ணப் படங்கள் கூகிளார் உபயம்)
நடராஜன் கல்பட்டு
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
2000 வருடத்துக்கு முந்தைய கிரேக்கப் பாடல் ஓந்தியின் வண்ணங்களைக் கொண்டு நீதிக்கதை சொல்கிறது. வெள்ளகால் ப. சுப்பிரமணியமுதலியார் இதனைத் தமிழில் கோம்பிவிருத்தம் என மொழிபெயர்த்துள்ளார். அதில் யார் பாடியது என இல்லை. ஜேம்ஸ் மெர்ரிக் என்னும் 18-ஆம் நூற்றாண்டு கவிஞர் (கிரேக்க அறிஞர், ஆக்ஸ்போர்ட்) ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 1897-ல் வெ.ப.சு. தமிழில் எழுதினார். பின்னர் டிகேசி உரையும் இருக்கிறது (1931). மெர்ரிக்கின் கோம்பிக் கவிதை (கிரேக்க மூலத்தில் இருந்து) தேடிக் கண்டேன்:
http://www.bartleby.com/380/poem/421.html
அச்சானபோதே பாராட்டப்பெற்றது. “Mr. Merrick is best known to general readers by his amusing little poem entitled The Chameleon.” இன்றைய தமிழில் வரவேண்டும்.
>உருவத்தில் ஓணான் மாதிரித் தோன்றினாலும் இது ஓணான் போல வேகமாக
> ஓடக்கூடிய ஒன்றல்ல. முன்னும் பின்னுமாக ஆடி ஆடி நிதானமாக ஒரு ஒரு அடியாக
> காலை முன் வைத்து நகரும். அதே சமயத்தில் எதிரிகளிடம் இருந்து உயிர் தப்பிட
> வேண்டுமெனின் வேகமாக ஓடும் சக்தியும் கொண்டதிது.
தூங்கிசை வண்ணத்துக்கு உவமை (யாப்பருங்கலம்): ‘‘முதுபிடி நடந்தாற்போலவும், கோம்பி நடந்தாற் போலவும், நாரை நடந்தாற் போலவும் வரும். அவை ஒருபுடை ஒப்பினால் தூங்கிசை வண்ணம் எனக் கொள்க."
>பச்சோந்தி நிறம் மாறும் என்பது உண்மை. ஆனால் நினைத்தபடி எல்லாம் அது இருக்கும்
> சுற்றுப் புரத்திற்கேப்ப நிறம் மாறும் என்பது தவறு. சாதாரணமாக பச்சை நிறத்திலே சில
> சிறு கருப்புக் கட்டங்களுடன் காணப்படும் இது கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை நல்ல
> பச்சை நிறத்திலிருந்து, கரும் பச்சையாகவொ அல்லது வெளிர் பச்சையாகவோ
>மாறுகிறது. அதன் மீதுள்ள கருப்பு புள்ளிகளோ கட்டங்களோ சற்றே மாறுகின்றன.
ஓந்தி < கோம்பி. ஓத்தி <கோத்தி. ஓதி என்பது சங்கத் தமிழிலேயே வந்துவிட்டது. கோம்பிகளில் representative species பச்சை ஓணான் தான். இது சிவப்பாக மாறுவதில்லை என்பது முக்கியச் செய்தி. ஓந்தியின் அதிசயமான நாக்கின் திறத்தால் இந்த ஊரும் பிராணியின் தமிழ்ப்பெயர் வருகிறது.
நா. கணேசன்
The Chameleon |
By James Merrick (1720–1769) |
|
ஓந்தி < கோம்பி. ஓத்தி <கோத்தி. ஓதி என்பது சங்கத் தமிழிலேயே வந்துவிட்டது. கோம்பிகளில் representative species பச்சை ஓணான் தான். இது சிவப்பாக மாறுவதில்லை என்பது முக்கியச் செய்தி. ஓந்தியின் அதிசயமான நாக்கின் திறத்தால் இந்த ஊரும் பிராணியின் தமிழ்ப்பெயர் வருகிறது.
பச்சோந்தி
கண்டார் ஒருவர் பச்சோந்தி
கொண்டார் காதல் அதன் மேல் விரும்பி
கண்டவரிட மெல்லாம் சொன்னார்
கண்டேன் நான் இன்றொரு வினோதப் பிராணி
கொண்டதது கிளிப் பச்சை நிறம்
அண்டத்தின் அதிசம் அது என்றார்
உண்டதற்குக் கண்கள் இரண்டு
தனித் தனியே திருப்பிடும் சக்தி கொண்டது
சாட்டையென ஓர் நாக்கு
போட்டிடும் அது கொண்டு மரண அடி ஈக்கு
மூன்றும் இரண்டுமாய் ஒட்டிய விரல்கள் அதற்கு
கொண்டதது நீண்ட வால்
அதற்கது ஐந்தாம் கால்
சுருட்டியே அதை மாலவன் சக்கரம் போல்
பற்றியே கிளைதனை அது
எட்டிப் பிடிக்க முயலுது
முற்றிலுமாய் உடலை நீட்டி
எட்டாத தூரத்தில் இருக்கும் கிளை ஒன்றை
எட்டவில்லை எனின்
மெல்லப் பிரித்திடுது சுருட்டிய வாலை
பெருக்கிட உடல் நீளம்
அப்போதும் எட்ட வில்லை யெனின்
சுருட்டியே மீண்டும் வாலை
இழுத்திடுது உடலை முன் இருந்த கிளைக்கே
கண்டுள்ளேன் நானும் அந்தப் பிராணி
கொண்டதில்லை அது பச்சை நிறம்
கொண்டதது கரும் பச்சைக் கட்டம்
கதை கேட்ட ஒருவர் சொன்னார்
இல்லை பச்சை நிறமது
இல்லை இல்லை கரும் பச்சைக் கட்டமது
சென்றார் இருவரும்
கண்டிட நியாயம்
மூன்றாம் மனிதரிடம்
சொன்னார் அவர் கண்டிருக்கிறேன்
அப் பிராணியை நானுந்தான்
இல்லை யதன் நிறம் பச்சையயோ
கரும் பச்சைக் கட்டமோ
இரத்தச் சிவப்பு நிறம்
கொண்டதது என்றாரவர்
இல்லை பச்சை நிறம் கொண்டதது
இல்லை இல்லை கரும் பச்சைக் கட்டம்
இல்லை யில்லை இல்லை சிவப்பது
சண்டை வலுத்திட மூவருக்கும்
மண்டை உடைந்து அவர்க்கு
மாறியது அவர் சட்டை நிறம் சிவப்பாய்
மாறிடும் பச்சோந்தியின் நிறம் போலது
(இன்று நா. கணேசன் அவர்கள் அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக் என்ற ஆங்கிலக் கவிஞரின் “பச்சோந்தி” கவிதையினைத் தழுவி எழுதியது.)
(பச்சோந்தி படம் கல்பட்டு க.சு.கிருஷ்ணன்)
10-06-2016 நடராஜன் கல்பட்டு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பச்சோந்தி
கண்டார் ஒருவர் பச்சோந்தி
Kalpattu wrote:> http://www.bartleby.com/380/poem/421.html
(இன்று நா. கணேசன் அவர்கள் அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக் என்ற ஆங்கிலக் கவிஞரின் “பச்சோந்தி” கவிதையினைத் தழுவி எழுதியது.)உங்கள் தழுவலைப் படித்தேன். ஆனால், மெர்ரிக்கின் கவிதை சண்டையில் முடிவதில்லை.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
2016-06-10 12:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:Kalpattu wrote:> http://www.bartleby.com/380/poem/421.html
(இன்று நா. கணேசன் அவர்கள் அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக் என்ற ஆங்கிலக் கவிஞரின் “பச்சோந்தி” கவிதையினைத் தழுவி எழுதியது.)உங்கள் தழுவலைப் படித்தேன். ஆனால், மெர்ரிக்கின் கவிதை சண்டையில் முடிவதில்லை.தழுவல் என்று சொன்னது தவறு. அன்பர் நா கணேசன் இன்று அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக்கின் "கெமேலியன்" என்ற ஆங்கிலக் கவிதை என்னை இந்த "பச்சோந்தி" யை எழுத வைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும் நான்.தவறினை சுட்டிக் காட்டியதற்கு நன்றி நா.கணேசன் அவர்களே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள். இறைவனை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.
பச்சோந்தி சிவப்பு ஆவதில்லை. ஆனால் பச்சோந்தி வகையிலே சிவப்பு நிறம் கலந்த ஓந்திகள் இருக்கின்றனவே? கீழுள்ளதைப் பாருங்கள்.
2016-06-10 7:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ஓந்தி < கோம்பி. ஓத்தி <கோத்தி. ஓதி என்பது சங்கத் தமிழிலேயே வந்துவிட்டது. கோம்பிகளில் representative species பச்சை ஓணான் தான். இது சிவப்பாக மாறுவதில்லை என்பது முக்கியச் செய்தி. ஓந்தியின் அதிசயமான நாக்கின் திறத்தால் இந்த ஊரும் பிராணியின் தமிழ்ப்பெயர் வருகிறது.
பச்சை ஓணான் வேறு. பச்சோந்தி வேறு. முன்னது எப்போதுமே பச்சையாக இருக்கும். நிறம் மாறாது. இரண்டையுமே நான் பார்த்து ரசித்திருக்கிறேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.