என் ஐயம் ..... காவிரிக்குமுதன்முதல் கல்லணை கட்டிய கரிகால் சோழன் .......... ஆதாரம் ?

15 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jul 14, 2017, 4:17:45 PM7/14/17
to தமிழ் மன்றம், thamizayam, vallamai, mintamil, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Banukumar Rajendran, muthum...@gmail.com, Seshadri Sridharan, SivaKumar, Raji M
என் ஐயம் .....

காவிரிக்குமுதன்முதல் கல்லணை கட்டிய கரிகால் சோழன் ..........

ஆதாரம் ?

அன்புள்ள மின் தமிழ் // சிங்கனெஞ்சன்// புவியியல் மேலாளர்//அவர்கட்கு 

தமிழக போலி வரலாற்றாளர்கள் தன மனதிற்க்கு வந்ததை அறிவிற்குப்
பொ ருந்தாத உளறல் புராணக்கதை ஆசிரியர்கள் போல் சில நேரம் வாந்தி எடுத்து விடுகின்றனர் எவனோ சொன்னதை பின் வருவோர் ஆட்டுக்கூட்டம் போல்  கீறல் விழுந்த இசைத்தட்டுபோல் அறிவினை சிறிதும் பயன் கொள்ளமல் சித்தத்தை அடகு வைத்துவிட்டு  வேதாந்திகளாய்  நடந்து கொள்வர் 

தஞ்சைக்குச் சென்றால் விமானத்தில் நிழல் கீழே  விழாது என 90 சதம்  பேர் 
இன்றும் சொல்லுவதில்லையா? என்னே மடத்தனம் இதைவிட அவர்களை திருத்த முயலாமல் நமக்கென்ன என செல்லும் தன்னலமே உருவான சோம்பேறிகள்  மற்றவர்களின் செயலிலேயே வாழ்வின் தேவைகளை
பெறும்  தளுக்குக்  காரர்கள் தான்  இந்த சமூகத்திற்கு சுமை  

கரிகாசோழன்  ( கரிகால் சோழன் அல்ல - புள்ளி வேண்டுமிடத்தில் இட்டுக்கொள்ள வேண்டும் எனும் நியதியில் பிழையாக கொள்ளப்பட்டு  வருகின்றது எனபது என் கருத்து ) தன தலை நகரம் உறையூரில் அடிக்கடி காவியின் வெள்ளத்தால் அரிப்புண்டு அவன் மனை பாழாகியதால் மண்ணாலான கரையை கல்லால் அணைத்தான் இதனை குறித்தொறதாம்  கரிகால சோழன் (காவிரியின் கரைக்கு)   கல்லணைக்
  கட்டினான் என்றனர் 

அ ணை என்றால் அணைத்தல் அவ்வளவே  (தலை அ ணை) ஒருவரை ஒருவர் வாழ்த்துச் சொல்ல அணைத்தல் என்பன காண்க )  

மேலும் ஒன்று பலர் ஓர் சொல்லினை பயன் கொள்ளும்போது பொறுப்புடன் பயன் கொள்ளாமல் எதோ தோராயமாக இப்படியும் இருக்கட்டும் என புரியாமையாலும் அறியாமையாலும் பலபோது கள்ளத்தனத்தாலும் பலவாக்கி  விடுகின்றனர் அதனில் ஒன்று இந்த அணை என்பது 
ஏரி  குளம் குட்டை கண்மாய்  இவற்றின் கரை களை  கல்லினால் அணைப்பது தேவையாகி விட்டதால் அணைக்கரை என்றனர் 
பின் அணைக்கரைப் போ ல் தோன்றும் ஓர் அமைப்பு நீரிணைத் தேக்க பயன் பட்டபோது அதுவே அணையெனவும் விளி க்க  ப்பட்டு பின் ஓடும் நீர்வழியின் முன்பு  குறு க்காக   காட்டப்படும் எப்போது மேலெழுந்து வழியும் தேக்கும் நீருக்கும்  பயனாகி உள்ளது 

பாருங்கள் மேட்டூரில்  உள்ளது  அ ணை  என்றால் திருச்சியில் உள்ளது ம் அணையாகுமா 

ஆங்கிலேயர்கள் DAM  எனபது வேறு BARRAGE  வேறு எனத்தான் குறிப்பர் 
முதலதி ல் நீர் பலநாள்  தேங்கி நின்று வேண்டியபோது வழிய விடப்படும் 

ஆ னால் Barrage   ல் நீ ர் தேங்காது பல்வேறு கால்களாக தடுக்கும் அமைப்பு கொண்டு ஓடும் நீர் அளவினை மாற்றி கால் மாறி விடுவார் அவ்வளவே 

யாரோ இத்தனையும் அ ணை என்ற வுடன் கள்ளத்தனம் மிக்க வர்   காவிரிகரைக்கு அணைக்கட்டினமை பழம் குறிப்புகளாக உள்ளதை இ ணைத்து கரி காலன் கல்லணைக்கட்டடினான் என  வீண் பெருமைத னை பரப்பினர் இது நாகரீக மற்ற உலக வரலாற்றுக் கள்ளத்தனம் 

இப்போதுள்ள அமைப்பு முன்பும் பழமையானதொன்று இருந்திருக்கலாம் நான்கைந்து நூற்ராண்டுகளுக்கு முன்பு யாரோ அமைத்திருக்கலாம் அல்லது சோழ மன்னர்கள் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் அன்றி 2000 ஆண்டு பழமை எனபது முட்டாள்தனம் சிறியஅ  மைப்புகளான வீடோ கோயில்களோ கிட்டவில்லை அப்படி இருக்க ஓர் மிக அகனற தோர்  அமைப்பு கட்டி இருக்க வாய்ப்பில்லை  கரைக்கு கட்டிய கல்லணைகளே காணவில்லை 

அருவி என தூய தமிழ் சொல் இருக்க நீர் வீழ்ச்சி என ஆங்கிலத்திலிருந்து கொணர்ந்து தமிழினை வளமற்ற மொழிக்கு வளம் சேர்க்கின்றனாராம் 
மேட்டூர் அ ணை காட்டியவுடன் கட்டியதற்கு  சத்திய மூர்த்தி நீர்த்தேக்கம் வீடூர் நீர்த்தேக்கம் என்றனர் பின் வந்தோர் பொறுப்பிலில்லாமல் மீண்டும் அ ணை என அழைக்க முயல்கின்றனர்  

ஓர் வரியில் சொலவதனால் இக்காலத்து வழங்கும் திரிந்த பொருளினை முற்காலத்து சொல்லிற்கு இணைத்து விடுவதுதான் பெரும் பி ழை 

சில பாடல்களே கிட்டியுள்ள தகடூர் யாத்திரை எனும்  மிகப்பழம் நூலில் நீ ர்ச்சிறை எனும் சொல் பயனில் முன்பே உள்ளது என்ன பொருள்  பொருத்தம் காண்க (பாடலில் ஓர் வீரம் வலிமை  மிக்கவன் நீர்ச் சிறைபோல் எதிரில் வரும் படைகளை தடுத்து கசிய விடாமல் நிறுத்தி நிற்கின்றானாம் )

மறந்தேன் 
அந்த மூவருலா  வரிகள் தேடினேன் கிட்டவில்லை அதனில் சோழமன்னன் பரம்பரைச்  சிறப்பு 
பேசப்படும் வரிகளில் கல்லணை    குறிக்கப்பட்டுள்ளது  சிறப்பாக கரை எனும் சொல்  உள்ளதாக நினைவு 

மேலும் 
கரி கால ன் எனும் சொல்லிற்கே புரட்டுப் புராணக் கதைகளை நீக்கும் 
பொருள் தன்னை சரியாக்க கொள்ளலாம் பின் ஓர் மடலில் 




நூ த லோ சு
மயிலை

2017-07-14 21:10 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
இழையின் போக்கை மாற்ற விரும்பவில்லை ......என்றாலும் என் ஐயம் .....

காவிரிக்குமுதன்முதல் கல்லணை கட்டிய கரிகால் சோழன் ..........

ஆதாரம் ?

2017-07-14 20:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Wednesday, July 12, 2017 at 10:31:18 PM UTC-7, Suresh Kumar wrote:
மின் தமிழ் அறிஞர்களுக்கு வணக்கம் .

சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில் ஏதுனும் இன்றும் தமிழகத்தில்  உள்ளதா ?


இதற்கு வெளிநாட்டார் குறிப்புகளும் பார்க்க வேண்டும். உ-ம்: கிரேக்க, ரோம யவனாசிரியர்கள்
கன்யாகுமரி, மதுரை போன்ற ஊர்களின் திருவிழாக்களைப் பாடியுள்ளனர்.

இந்தியாவின் முதல் சுற்றுலா நூல். கண்டவியூக சூத்திரம். கி.பி. முதல் நூற்றாண்டிலேயே
சீன மொழிபெயர்ப்பு ஆன நூல். கி.மு. முதல் நூற்றாண்டாக இருக்கலாம். 54 கலியாணமித்திரர்
என்னும் வாழ்க்கையில் பலதொழில் மாந்தரிடம் சுதனன் என்னும் வணிக இளைஞன் ஞானம்
பெறுகிறான். https://en.wikipedia.org/wiki/Gandavyuha
மஹாயான பௌத்ததில் முக்கியமான நூல் இது. கண்டவியூகத்தை மாடலாக வைத்துத்தான்
மகாகவி காளிதாசர் (குப்த்ர் காலம், 5-ஆம் நூற்றாண்டு) ரகுவம்சம் என்ற ராமனின் பாரத திக்விஜயம்
பற்றிப் பாடியுள்ளார் (காளிதாசரிலும் தமிழ்நாட்டு சில ஊர்களின் குறிப்புகள் உண்டு.)

கண்டவியூகம் என இக்குழுவில் தேடிப் பார்த்தால் பல செய்திகள் கிடைக்கும்.
தமிழ்நாட்டின் முக்கியமான சமய ஸ்தலங்களைக் குறிப்பிடும் சங்ககால
பௌத்த நூல் கண்டவியூகம். 10 இடங்கள் இருக்கலாம்.

காவிரி ஆற்றுக்கு சோழர் ஆளுமை எப்பொழுதும் உண்டு. காவிரி வற்றினால், தடுக்கப்பெற்றால்
திருச்சி, தஞ்சை (தண்செய்) டெல்ட்டா விளைச்சல் காய்ந்து கருகிவிடும். எனவே, காவிரிக்கு
முதன்முதல் கல்லணை கட்டிய கரிகால் சோழன் பெயரால் ‘கரிகால் சோழப் பேராறு’ என்றே
பெயர் கல்வெட்டுக்களில் காண்கிறோம். காவிரியின் உற்பத்தியில் இருந்து திருச்சிவரை
சங்க காலத்தில் கொங்குநாடு. இப்பகுதிகளை கண்டவியூகத்தில் பாடுவதுபோல்,
சோழரின் புகார்க் காண்டத்தில் சிலப்பதிகாரத்தில் பாடியுள்ளார். தலைக்காவேரியில் உள்ள
தீர்த்தங்கள், நான் மறைகள் ஓதி இடையறாமல் வேள்விப்புகை எழுவதை இளங்கோ
அடிகள் குறித்துள்ளார்.
 
கொல்லிமலையில் வசீகரிக்கும் ஒரு அணங்கு வாழ்ந்ததை பல பாடல்களில் சங்க
இலக்கியம் பதிவுசெய்கிறது. இவளுக்கு வசுமித்ரா எனப் பெயர்கொடுத்து
கொல்லிமலை வர்ணனை கண்டவியூஹத்தில்.

கண்டவ்யூஹத்தில் இன்னோர் இடம்: தென் பொதியில் மலை. அங்கே தான்
அவலோகிதேசுவரர் என்னும் போதி சத்துவர் வாழிடம் என்கிறது.
உ-ம்: திபெத் சீனாவிடம் அடிமைப்படாதவரை தலாய் லாமா துறவிகள் தான் ராஜா அங்கே.
தலாய் லாமா அவலோகிதனின் அவதாரம் என்பது திபெத்தியர் கொள்கை.
எனவே, தலாய் லாமா அரண்மணி பொதாலா எனப் படுகிறது.
பொதாலா தமிழின் பொதியில் என்ற சொல்லின் திரிபு.  
கொரியாவில், ஜப்பானில், சீனாவில் பொதியில் அவலோகிதனின் (Kuan Yin, Kanon) வழிபாடு மிகுதி.

சாத்தன் என்னும் வடசொல்லை பாசண்டச் சாத்தன் என்று ஆள்கிறார் இளங்கோ அடிகள். பலவகையாக வளர்ந்துவந்த
எல்லா சமயங்களும் தங்களுடையவன் என்று கொண்டாடியவன் இந்தச் சாத்தன். அதனால் தான் பாசண்டி என்ற சொல்லைப்
பயன்படுத்துகிறார் அடிகள். “உலகியற்றியான்” என்று சாத்தனை பிரமதேவ யக்‌ஷனாக கர்நாடகாவில் ஜைநர்களும்,
பிறரும் கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட யக்‌ஷனை சமண மரபில் “உலகியற்றியான்” என்கிறார் வள்ளுவரும்.
அடிப்படையில் இது பாசண்ட சாத்தன் தான். வடபுலத்தில் இருந்து தெற்கே வந்து இரும்பும், குதிரையும்,
நெல் வேளாண்மையும் அறிமுகம் செய்யும் வேளிர்கள், அவர்களின் குறியீடு ஐயனார்/சாத்தன். சாத்தனுக்கு
இன்றும் சைவ உணவே படையல். ஐயனார் வடிவம் பிற்காலத்தில் அவலோகித போதிசத்வருக்கும்,
தக்கிணாமூர்த்திக்கும் (சைவம்) ஏற்படுவதை விரிவாக 20 ஆண்டுமுன் கட்டுரை எழுதியுள்ளேன்:

பத்மபாணி, தட்சிணாமூர்த்தி வழிபாடு:

பிற பின்!
நா. கணேசன்

தமிழ் நாட்டில் உள்ள தேவாரம் பாடிய தலங்கள் மற்றும் திவ்விய தேச தலங்களில் எந்த கோயில் காலத்தில் அடிப்படையில் மிகப்பழமையானது ?

சமண பாழிகளில் மிகத்தொன்மையான கல்வெட்டு கொண்ட இடம் எது ?

இன்றும் நிலைத்திருக்கும் தமிழ்நாட்டின் தொண்மையான சமய வழிபாட்டின் கோயில் தேடும் முயற்சி 


சுரேஷ் குமார் .
தென்கொரியா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages