இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு

84 views
Skip to first unread message

Vallalar Groups

unread,
Feb 17, 2021, 5:13:45 AM2/17/21
to Vallalar Groups



  பசித்திரு! தனித்திரு!  விழித்திரு! 

அருட்பெருஞ்ஜோதி   !         அருட்பெருஞ்ஜோதி !தனிப்பெருங்கருணை !அருட்பெருஞ்ஜோதி !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கொல்லா விரதம் குவலயம் எல்லாம் 
ஓங்குக !

கல்லோடு ஆயினும் சொல்லி அழு.

ஒரு சிலர் பக்தி, கோயில், பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறார்கள்...

ஆனால் இன்னும் சிலர், "சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறார்கள்."

எது சரி..????

ஒரு முறை ஶ்ரீ ஆதிசங்கரர், ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்த போது, அவரைக் கண்ட விவசாயி ஒருவன் இதே கேள்வியைக் கேட்டான்.

ஆதிசங்கரர் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்து போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றார்...

அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனை மரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான்.

சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தார். 

அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார்.

அதற்கு அவன், "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லணும்?" என்றான்.

" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்து விட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?" என கேட்டார்...

"மரப் பாலத்தை கடக்கிற போது, திடீர்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி!"

"உன் கேள்விக்கும் அது தான்பா விடை! அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால் தான், பத்திரமான இடத்தை அடைய முடியும்.
ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, கடவுளின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றார் ஆதிசங்கரர்...

நாம் வழி படவும், வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவர் வேண்டும்.

எனவே தான் "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" என்பது முன்னோர்கள் வாக்கு..

ஒரு கையில் கடவுள்!
மறு கையில் கடமை! 
இப்படி இருப்பவர்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை...

பசி என்று வருவோர்க்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பசிப்பிணி போக்கி வந்தால் கடவுள் கூட அங்கே காரியப் படுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை 

எனவே பசி என்று வருவோர்க்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் 

ஆன்மநேய அ.இளவரசன் 
ஜமீன் பல்லாவரம் சென்னை 
Reply all
Reply to author
Forward
0 new messages