வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - P2

12 views
Skip to first unread message

Vallalar Groups

unread,
Mar 17, 2025, 3:25:01 PMMar 17
to Vallalar Groups

எல்லா அண்டங்களையும் ,
எல்லா உலகங்களையும் ,
எல்லா உயிர்களையும் ,
எல்லா பொருள்களையும் ,


மற்ற எல்லாவற்றையும்
தோற்றுவித்தும் ,
விளக்கம் செய்வித்தும் ,
துரிசு நீக்கு வித்தும் ,
பக்குவம் வருவித்தும் ,
பலன் தருவித்தும்


எங்கும் பூரனராகி விளங்குகின்ற ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் ,
அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்யின் ,
"அக்கடவுள் திருவருள்" நமது கருந்த்தின் கண் வெளிப்பட்டு விளங்கும் என்றும்,
அத திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி , மூப்பு, பயம் , துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து,

 எக்காலத்தும் ,
எவ்விடத்தும் ,
எவ்விதத்தும் ,
எவ்வளவும்
தடை படாத பேரின்ப சித்தி பேரு வாழ்வை அடைதல் கூடும் என்றும் ,

எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மை பட உணர்த்தி அருள பெற்றோம்.
 அவ்வுணர்ச்சியை பெற்றது தொடங்கி ,

  • கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம் ?
  • கடவுள் திருவருள் விளக்கம் எந்நாள் அடைவோம் ?
  • மரணம் , பிணி , மூப்பு முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும் ?
  • என்றும் அறியாத பேரின்ப சித்தி எக்காலம் கிடைக்கும் ?

என்று எண்ணி- எண்ணி , வழி துறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே...

web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallala...@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Green and White Modern Background Your Story.png
Reply all
Reply to author
Forward
0 new messages