வடலூர் சத்திய ஞான சபை பாவனா கடவுள் விளக்கமா ?அல்லது உண்மை கடவுள் இயற்கை விளக்கமா ?

40 views
Skip to first unread message

Vallalar Groups

unread,
Sep 4, 2019, 8:03:27 PM9/4/19
to Vallalar Groups
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 *🙏🌺வடலூர் சத்திய ஞான சபை பாவனா கடவுள் விளக்கமா ?அல்லது உண்மை கடவுள் இயற்கை விளக்கமா ?🌺🙏*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🔥👏

வடலூர் சத்திய ஞான சபை திருக்கோயிலில் உண்மையிலேயே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒருமை திருநடனம் புரிகின்றார்களா ? அல்லது வள்ளல் பெருமான் தமது அகத்தில் கண்ட சத்திய ஞான சபை அகஅனுபவத்தை தத்துவமாக விளக்குவதற்காக வடலூரில் சபையை கட்டினார்களா என்பது பலருக்கும்,
 
குறிப்பாக நமது சன்மார்க்க சங்கத்துக்குரிய சில அன்பர்களே ஞான சபை என்பது வள்ளல் பெருமான் அகத்தில் கண்ட அனுபவ விளக்கமே அன்றி வேறில்லை ஆகலில்,
 வடலூர் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை என்று தாங்களும் சன்மார்க்கத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதுமட்டுமன்றி மற்றவர்களுக்கும் இதே கருத்தை வழங்கிய வண்ணம் இருக்கின்றார்கள் அவர்களுக்காகவும்,

 மற்றும் புதியதாக சன்மார்க்கத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கும் இளைய  தலைமுறைகளுக்கும் சன்மார்க்கத்தில் தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நமது பெருமானே அருட்பாவிலும் உரைநடையிலும் கொடுத்துள்ள சில விளக்கங்களை கொண்டே இங்கு நாம் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக இந்த பதிவை இங்கே திருவருள் சம்மதத்துடன் பதிவு செய்கின்றேன். 🌺👏

தயவுகூர்ந்து அன்பர்கள் சுத்த சன்மார்க்க தெளிவுபெறவேண்டும் என்பதற்காகவும் நாம் பெற்றுக் கொண்டால்தான் எதிர்கால சந்ததிகளுக்கு நம்மால் சன்மார்க்கம் பற்றிய தெளிவை அவர்களுக்கு கொடுக்க இயலும் என்பதற்காகவும்  இங்கு தங்கள் அனைவருடன் இந்த பதிவை நான் பகிர்ந்து கொள்கின்றேன்🌻🌺👏

முதலில் திருவருட்பா உரைநடை பகுதியிலிருந்து இதற்குரிய ஆதாரத்தை காண்போம்.
 *பக்கம் 548 தலைப்பு சத்திய ஞானசபை விளம்பரம்* 
இந்த தலைப்பில் *பக்கம் 549 கடைசி பாராவில்* 

பல்வேறு சமயங்களிலும், பல்வேறு மதங்களிலும், பல்வேறு மார்க்கங்களிலும், பலவேறு லட்சியங்களை கொண்டு ஜீவர்கள் நெடும் காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து  வீண் போகின்றார்கள்.

இனி இச்ஜீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ,
உண்மைஅறிவு ,
உண்மை அன்பு, உண்மை இரக்கம், முதலிய சுப குணங்களைப்  பெற்று நற்செய்கை உடையவராய் எல்லா சமயங்களுக்கும் ,
எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, 
பெருஞ் சுகத்தையும், பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு,

 *மேற்குறித்த உண்மை கடவுள் தானே திருவுள்ளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றாம் என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார்கள்.*🌻🌸🌹
 
*அடுத்து பக்கம் 463 பேருபதேசம் என்ற தலைப்பில் , பக்கம் 465 இரண்டாவது பாராவில்*
 
*தற்போது ஆண்டவர் வரப்போகின்றது சத்தியம்தான், நம்மவர்களின் திரை நீங்க போகின்றதும்  சத்தியம்தான் , நீங்கள் எல்லவரும் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளுகின்றதும் சத்தியம்தான்* என்று பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இப்பூவுலகத்திற்கு வர இருப்பதை சத்தியம் செய்து சொல்வதுடன் நீங்களெல்லாம் அதற்குரிய பக்குவத்தோடும் முயற்சியோடும் ஒழுக்கத்தோடும் இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றார்கள். 

ஆண்டவர் வந்தவுடன் நமது பக்குவத்திற்கும் தரத்திற்கும் தக்கவாறு நமது திரைகளை விலக்கி அருள்வார்கள்  என்று பெருமான் கூறுகின்றார்கள்🌺🌹🌸

 *அடுத்து உரைநடை பகுதி பக்கம் 547 சன்மார்க்க பெரும்பதி வருகை என்ற தலைப்பில்* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முதன்முதலாக இவ்வுலகத்திற்கு வரஇருப்பதை எப்படி விளக்குகிறார்கள் பாருங்கள்.

முதல் பாரா எட்டாவது வரியில்  ,
 *அடுத்த 29 மாதத்திற்கு மேல் இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன்பு சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்  மூர்த்திகள் கடவுளர் தேவர்                      அடியார்                     யோகி                       ஞானி முதலானவர்களின் ஒருவரும் அல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் எல்லா தேவர்களும் எல்லா கடவுளரும் எல்லாத் தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களை குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இவ்வுலகிற்கு முதன்முதலாக வர இருப்பதை பெருமான் இங்கே குறிப்பிடுகின்றார்கள்.🌺🌻🌸👏*

 *அடுத்து பக்கம் 577 சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சத்திய விண்ணப்பம் என்ற தலைப்பில்* சன்மார்க்க சங்கத்தின் சார்பில் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றார்கள் .
அந்த விண்ணப்பத்தில் சத்திய ஞான சபையை பற்றி பெருமான் எவ்வாறு விளங்குகின்றார்கள் என்பதை பாருங்கள் .

 *உத்தர ஞான சித்திபுரம் என்றும், உத்தர ஞானசிதம்பரம் என்றும் , திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்க சிறப்பு பெயர்களும் பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புகளும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியினிடத்தே* 

 *இயற்கை விளக்கம்  நிறைவாகியுள்ள ஓர்சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவருவை தரித்து, இயற்கை இன்பம் நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்லத் தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம் .* 

என்று வடலூர் சத்திய ஞான சபையில் *இயற்கை விளக்கமாகிய* ஆண்டவரது பூரண அருள் நிறைந்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *இயற்கை உண்மை* திருவுருவை தரித்தும் உலகத்து உயிர்கள் எல்லாம் துன்பம் துயரம் நீங்கி இன்பம் அடையும் பொருட்டு *இயற்கை இன்பம்* நிறைவாகி  *சத்து சித்து ஆனந்த சொரூபமாய் ,        மெய் அறிவு ஆனந்த விளக்கத்துடன்* வடலூர் சத்திய ஞான சபையிலிருந்து திருநடம் செய்வதை இங்கே பெருமான் தெளிவாக விளக்குகின்றார்கள்🙏🌹

இன்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் சத்திய ஞான சபையில் வந்தமர்ந்து திருநடம் செய்வதற்கான நிறைய விளக்கங்கள் திருவருட்பா உரை நடையில் இருந்த போதும், இத்துடன் உரைநடை பகுதியிலிருந்து கண்ட விளக்கத்தை நிறுத்திக்கொண்டு திருவருட்பா ஆறாம் திருமுறையில் பெருமான் பாடலாக கொடுத்துள்ளவற்றைக் தற்போது காண்போம்.

 *திருவருட்பா ஆறாம் திருமுறை 105 புனித குலம் பெறுமாறு புகலல் என்ற தலைப்பில் ஒன்பதாவது பாடலில்*

 *எனது மெய்ப்பொருளாம் தனித் தந்தை இத்தருணம் தனிலே செய்அகத்தே வளர்ஞான சித்தி புரம் தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இதுதானே.*

என்று,
 *மெய்ப்பொருளாகிய தனி தந்தை இத்தருணத்தில் செய்அகத்தே என்றால் செய் என்பது செய்யப்பட்ட அல்லது உண்டாக்கப்பட்ட என்றும் அகம் என்பது பூமி என்ற பொருளிலும்  பூமியில் உண்டாக்கப் பட்டுள்ள வளர் ஞானசித்திபுரமாம் வடலூர் சத்தியஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இத்தருணம் இங்கே சித்தாடல் புரிகின்றார்கள் இது சத்தியம் என்றும் மெய்மை என்றும் பெருமான் தெளிவாக கூறுகின்றார்கள்🌻🌺🌹*

 அடுத்து *ஆறாம் திருமுறை பக்கம் 185 திருநட புகழ்ச்சி என்ற தலைப்பில் இரண்டாவது பாடலில்*
 பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே *தோரணமே விளங்கு சித்தி புரத்தினும் என்உளத்தும் சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியே* . என்று கூறுகின்றார்கள்.

  தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் என்றால் அலங்கரிக்கப்பட்ட சித்திபுரத்திலும், எனது உளமாகிய சுத்த அறிவு என்னும் பூரண பொது வெளியாகிய அம்பலத்திலும் சுத்த நடம்புரிகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்று பெருமான் பொற்சபை சிற்சபை நடத்தை இங்கே விளக்கி கூறுகின்றார்கள் .🌺🌻🌹
 *அடுத்து ஆறாம் திருமுறை பக்கம் 208 திருப்பள்ளி எழுச்சி என்ற தலைப்பில் பத்தாவது பாடலில்,* 

 *அலங்கரிக்கின்றோம் ஓர்திருச்சபை அதிலே அமர்ந்து அருள்ஜோதி கொண்டு அடிச்சிறியோமை வலம்பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் என்று குறிப்பிடுகின்றார்கள்* .

மேலே,
 உரைநடைப் பகுதியில் இந்த உலகவர்களெல்லாம் இதற்கு முன்பு பல்வேறு சமயங்களிலும் மதங்களிலும் மார்க்கங்களிலும் உழன்று இறந்து இறந்து விரைந்து விரைந்து வீண் போயினர் ஆகலில் ,
இனியும் வீண் போகாத வண்ணம் திருவுளச் சம்மதம்கொண்டு சுத்த சன்மார்க்க  பெருநெறி ஒழுக்கம் விளங்கவும் ஜீவர்களெல்லாம்  இறவா நிலையை அடையக்கூடிய  சாகாக் கல்வியை பயின்று  அருள் வாழ்வு வாழ்ந்திட ஒரு சத்திய ஞான சபையை இவ்வுலகில் அமைப்பதற்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆணை இட்டதாக பெருமான் கூறினார்கள்.
 
அதன்படியே இந்த பாடலில் அலங்கரிக்கின்றோம் ஒரு திருச்சபை அதிலே  அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வந்து அமர்ந்து தன்னையும் இவ்வுலகவர்களையும் இறவாத நிலையில் வாழ்வித்திட வேண்டும் என்று வேண்டுகின்றார்கள் என்பதை கண்டு அறிவோம்🌺🌹🌻

 *அடுத்து திருமுறை  பக்கம் 223 சன்மார்க்க நிலை என்ற தலைப்பில் முதல் பாடலில்*

 *சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொள் அருள்  சத்திவிழா நீடித்து தழைத்து ஓங்க எத்திசையில் உள்ளவரும் வந்தே உவகைஉறுக மதத் துள்ளல் ஒழிக தொலைந்து என்று குறிப்பிடுகின்றார்கள்* 
 அதாவது உத்தர ஞான சித்திபுரமாம் வடலூர் சத்திய ஞான சபையில் அருள்சக்தி நிறைந்து நாளும் தழைத்து ஓங்கிட ,
எல்லா திசைகளிலிருந்தும் ஜீவர்கள் வந்து தரிசித்து மகிழ்ந்து கொண்டாடவும் இதுவரை இருந்த மதத்துள்ளல்கள் எல்லாம் ஒழிந்து தொலைந்து போகவும் சமரச சன்மார்க்கம் தோன்றியுள்ளது என்று சன்மார்க்க நெறிதனை பெருமான் விளக்குகின்றார்கள்.🌻🌹🌺

 *அடுத்து ஆறாம் திருமுறை பக்கம் 259 உத்தர ஞான சிதம்பர மாலை என்ற தலைப்பில் உள்ள* அனைத்து பாடல்களுமே வடலூர் சத்திய ஞான சபை பெருமைதனை புகழ்கின்ற பாடல்களாகவே அமைந்துள்ளன அதில் குறிப்பாக *ஆறாவது பாடலில் ,* 

 *எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல சித்தாடல் செய்கின்றது      எல்லா உலகும் செழிக்கவைத்தது இத்தாரணிக்கு அணியாயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே.* 
என்று பெருமான் குறிப்பிடுகின்றார்கள்.

அதாவது எல்லாவற்றிலும் சிறந்தது தனக்கு அருளை ஈந்தது, எல்லாமும் வல்ல சித்தாடல் செய்கின்றது, எல்லா உலகமும் செழிக்க வைத்தது ,
 *இந்த பூவுலகத்திற்கு அணிகலன்* போன்று அலங்காரத்துடன் வானவரெல்லாம் வணங்கி தொழுவதற்கு உகந்தது ,
எவ்வுலகில் இறந்தவர்களையும் எழுப்புவது வடலூர் சத்திய ஞானசபையாம்  என்று,

 இந்த பூவுலகிற்கு அணிகலன் போன்று அலங்காரமாய் விளங்கி சித்தாடல் புரிந்து கொண்டிருப்பது வடலூர் சத்தியஞானசபை என்று பெருமான் வடலூர் சத்திய ஞான சபையின் பெருமைதனை விளக்குகின்றார்கள்.🌺🌹🌻

 *உரைநடைப் பகுதியில் பக்கம் 550 ல் சத்திய ஞானசபை பற்றிய விளம்பரம்* ஒன்றை பெருமான்    25 :11 :1872ம் ஆண்டு வெளியிடுகின்றார்கள். 

அதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய ஆணையினால் வடலூரில் சத்திய ஞான சபை நிறுவப்பட்டு அதில் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து சித்திகள் எல்லாம் விளங்க திருவிளையாடல் செய்யயிருப்பதையும் தெரிவித்து ஜுவர்கள் அனைவரையும் இத்தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்க பெறுவீர்களாயில் தாங்கள் அனைவரும் கருதிய கருதிய வண்ணம் பெற்றுக் களிப்பு அடைவதும் அன்றி ,* 
 *இறந்தவர் உயிர்பெற்று எழுதல்,மூப்பினர்  இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களை கண்டு பெருமை அடைவீர்கள்* 

என்று 
பெருமான் *சத்திய ஞான சபை திருத்தலத்திற்கு அனைவரும் வந்து வந்து தரிசனம் செய்வீர்* 
தங்கள் வினைகளைப் போக்கி அருள் பெற்று வாழ்வீர்களாக என்று நம் அனைவரையும் அழைக்கின்றார்கள்.🌻🌹🌺👏
 
மேற்கண்ட இவ்வளவு விளக்கங்களும் வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி வண்ணமாய் இருந்துகொண்டு பூரண அருள் இயற்கை விளக்கத்துடன் நிறைந்து விளங்கி இவ்வுலகமெல்லாம் இன்பம் அடையும் பொருட்டு ஒருமை திருநடனத்தை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை  வள்ளற்பெருமான் தெளிவாக  திருவருட்பா உரைநடை வாயிலாகவும் ,
 ஆறாம் திருமுறை  வாயிலாகவும் தெளிவுபெற விளக்கியுள்ளார்கள். 

இதற்கும் மேலாக வடலூர் சத்தியஞான சபை என்பது ,
வள்ளல் பெருமான் தனது அகத்தில் கண்ட சத்திய ஞான சபை அனுபவத்தை விளக்குவற்காக  புறத்திலே பாவனையாக அமைத்துள்ளார்கள் என்று கூறுவது அறியாமை என்பதேயாகும்.

அதுமட்டுமல்ல அது சன்மார்க்க விருத்திக்கு தடையாகவும் அமையும் என்பதை தயவுடன் அறிதல் வேண்டும்.

ஆகவே,
 *வடலூர் சத்திய ஞான சபை பாவனா கடவுள் விளக்கம் அல்ல இயற்கை  உண்மை  மெய்ப்பொருளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்       இவ்வுலக மெல்லாம் இன்பம் அடையும் பொருட்டே இப்பூவுலகில்       பார்த்திலகமென ( பூமித்தாய்க்கு நெற்றித் திலகமாக) வடலூர் சத்திய ஞான சபையில் இருந்துகொண்டு ஆனந்த ஒருமை திருநடனம் செய்கின்ற  ,          சத்திய ஞான ஆன்மத் திருக்கோயில் என்பதை சத்தியமாக அறிவோம்🌺🌻🌹🙏* 
...தயவான நன்றிகள் 🙏
....வள்ளல் மலரடி போற்றி போற்றி 🙏
....பெருமான் துணையில்🙏
.... வள்ளல் அடிமை🙏
...... வடலூர் இரமேஷ்.
Reply all
Reply to author
Forward
0 new messages