வள்ளலாரை இழிவு படுத்துபவர்கள்/அவதூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை

59 views
Skip to first unread message

Karthikeyan J

unread,
Nov 4, 2022, 1:05:52 PM11/4/22
to Vallalar Groups
மரியாதைக்குரிய முதல்வர் அவர்களுக்கு,

வள்ளற்பெருமான் எந்த வித கருவியாலும் மரணம் ஏற்படக்கூடாது என இறைவனை கேட்கிறார்.?

இறைவன் அழியாத தேகத்தை வள்ளற்பெருமானாருக்கு கொடுக்கிறார்.அதற்கும் மேலாக இறைவன் தன்னுடைய அருள்ஆட்சியை,
வள்ளலாரிடம் கொடுத்து அருள்அரசு செய்க என்பதை கீழ்கண்ட ஆதாரங்கள் உள்ளன

காற்றாலே புவியாலே ககனமத னாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய்அளிக்க வேண்டும்என்றேன் விரைந்தளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே


6203
அருட்சோதி ஆனேன்  என்று அறையப்பா முரசு 
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு 
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு 
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு

மாண்புமிகு. முதல்வர் அவர்களின் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் வள்ளலார் புகழ் பரவ,வள்ளலார் 200 நிகழ்வுகள் அற்புதமாக அனைத்து இடங்களிலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடந்து வருகின்றன.


இதற்கு மாறாக சிலர் ,
வள்ளலார் பெயரை இழிவு படுத்தும் விதமாக, 
வள்ளலாரை பற்றி முழு புரிதல் இல்லாமலும்,
எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல்
தி.க வை சார்ந்த பேராசிரியர் என்று சொல்லி கொள்ளும் வே.அரசு, வள்ளலார் படுகொலை/தற்கொலை செய்யப்பட்டார் என வள்ளலாரை இழிவு படுத்துகிறார்.இது வள்ளலார் அடியார்கள் அனைவரின் மனத்தையும் புண்படுத்தும் செயலாக உள்ளது.

தாங்கள், இவரையும், இவர்கள் போன்ற யாவரும் வள்ளலாரை பற்றி  தெரியாமல் இழிவு படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பு..வள்ளலார் மரணம் இல்லாப் பெருவாழ்வு அடைந்ததற்கு ,ஆதாரமான பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இப்படிக்கு
கார்த்திகேயன்
Vallalar Groups
Bangalore.
8971233966


quote_1667573951875.jpg
quote_1667574408075.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages