கண்ணீர் விடுகிறார்கள் கபாலியும் நண்பர்களும்
“அண்ணே என்னாண்ணே கன்னத்துலெ கையெ வெச்சுக் கிட்டு சோகமா ஊட்டு வாசலுலெ குந்தி இருக்கீங்க?” கேட்கிறான் மாரி.
“சோகமில்லாமெ பின்ன சந்தோசமாவாடா இருக்க முடியும் நான்? என் சொந்த அப்பா இல்லேன்னாலும் நான் பொறக்கக் காரணமா இருந்தவரு அவருடா. போயிட்டாருடா அவரு.”
“என்னாண்ணே சொல்ல வறீங்க? கொஞ்சம் அசிங்க…..”
“சீ கஸ்மாலம் கஸ்மாலம். “மழலைகள்” மாத இதழுங்களுலெ நான் ஒரு தொடர் கதா நாயகனாப் பொறக்க அவரு காரணம்னு சொல்ல வந்தேண்டா.”
“சும்மா இருங்கடா. அண்ணனே சோகமா இருக்காரு, கண்ணுலெ வர தண்ணியெ அப்பொப்பொ தொடச்சிக் கிட்டு. குறுக்க எதுவும் பேசாம இருங்கடா. அண்ணனெ பேச உடுங்கடா.” இது தம்பிகளில் மூத்தவனான கோவாலு.
கம்மிய தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பிக்கிறான் கபாலி,
“ஒரு வாட்டி ‘ஊருக்கு ஒரு தமிழான்னு’ கல்பட்டாரு எளுதினாரு. அதெப் படிச்ச ஆகிரா சாரு உளுந்து உளுந்து சிரிச்சூட்டு, இந்த சென்னை சிகாரத் தமிளுலேயே ஒரு தொடரு எளுதுங்களேன்னு கேட்டுக் கிட்டாராம். அப்பாலிக்கா தாண்டா நாம அஞ்சு பேரும் பொறந்தோம். கல்பட்டாரு நம்ம வெச்சு காமெடி பண்ணிக் கிட்டு இருந்தாரு. ஒவ்வொரு வாட்டியும் தோத்துக் கிட்டு இருந்த நமக்கு தமிள்நாடு அரசு பதக்கமும் வாங்கித் தந்தாரு. அத்தோட சுபம் போட இருந்தாரு கல்பட்டாரு. உடுவாரா ஆகிரா சாரு. ;தொடருங்க தொடருங்கன்னு கேட்டாரு ஆகிரா சாரு. நாம இன்னிக்கி சர்க்காரு ஊளியருங்களா காட்டு இலாகாவுலெ வேலெ பாக்குறோம்னா அதுக்குக் காரணமே அந்த ஆகிரா சாருதானேடா. அவரு ரெண்டு நாளு முன்னெ திடீல்னு போயிட்டாருன்னா அளுகெ வருமா வராதாடா?”
“ஆமாண்ணே ஆமாண்ணே” என்கின்றனர், கோவாலு, குண்டு மணி, பாண்டி, மாரி ஆகிய நால்வரும் தங்கள் கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்தபடி.
19-08-2016 நடராஜன் கல்பட்
யற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே