கண்டு புடிச்சேன் நான் கண்டு புடிச்சேன்
கண்டு புடிச்சேன் நான் கண்டு புடிச்சேன்
புத்தகம் ஒண்ணு படிச்சே கண்டு புடிச்சேன்
குண்டு செய்யும் முறை யதையே
கண்டு புடிச்சேன்
செய்யும் போதே வெடிச்சிடுமாம்
செஞ்சாக்க தப்பேதும்
செய்யுறவங்க உசிரையுந்தான்
மெய்யாலும் குடிச்சிடுமாம்
குண்டுங்க பல
செஞ்சு முடிச்சேன்
பத்திரமா நான்
செஞ்சு முடிச்சேன்
கண்டவங்க கண்ணுலெ பட்டிடாமெ
அண்டா ஒண்ணுலெ போட்டே
குண்டுங்களெ மூடி வெச்சேன்
பத்திரமா நான் மூடி வெச்சேன்
களுகுக்கு மூக்குலெ வேக்குமாம்
எங்கூட்டு வாண்டுக்கு எங்கெ வேக்குமோ
பள்ளூடத்த்லேந்து வந்த பயமவன்
பறப்பானே நேரா அண்டாப் பக்கம்
கண்ணன் வரணுமே சின்னக் கால் பதிச்சே
பண்ணி வெச்ச முறுக்கு சீடெ
படைக்கணுமே அவனுக்கு முந்தி
தின்னணுமே அப்பால தானே நாம
கண்டு புடிச்சேன் நான் கண்டு புடிச்சேன்
அதுக்குந்தான் வளியொண்ணு கண்டு புடிச்சேன்
ரெண்டு பகுதியா குண்டுங்களெ
செஞ்சு வெச்சேன்
ஒரு பாதி கண்ணனுக்கு
மறு பாதி எங்கூட்டு சின்னவனுக்கு
முறுக்குந்தான் சுத்தி வெச்சேன்
நான் சுத்தி வெச்சேன்
கேப்பானே தப்பாமெ
கிறுக்குப்பய மவன்
நறுக்குனு கடிக்க
முறுக்குந்தான் கேப்பானே
(படம் நான் பிடித்தது அல்ல.)
25-08-2016 நடராஜன் கல்பட்
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே