சுய போதினி
கனவு காண் கனவு காண்
நித்திரையில் காணும் கனவை அல்ல
நித்திரை போக்கிடும் கனவினைக் காண்
என்றார் மா மேதை அப்துல் கலாம்
உடல் விட்டு வெளியேறி
உற்றுப் பார் உன்னையே நீ
கற்றிடுவாய் பலவும்
வெற்றுக் குடம் என நினைத்த
உனைப் பற்றி நீ
என்ன இல்லை உன்னுள்ளே
இல்லையா ரசனை
ரசித்திட அழகினை
இல்லையா திறமை
வடித்திட வரிகளில் அவ் வழகினை
இறைவன் தந்தார் ஐம்புலன்
கண்டு களிக்கப் பலவும்
உண்டு படுத்து உருண்டால் போதாது
கண்டு களித்தவை வரிந்திடு வரிகளில் நீ
கண்டு அதைக் கொள்வார் பிறர்
உள்ளத்துள் மகிழ்ச்சி
வாழ்ந்தால் யான் கண்ட இன்பம் இவ் வையகம் பெறுக என
வாழ்த்திடுவார் உனை யுன் வரிகள் படிப்போர்
வான் புகழ் எய்திடுவாய் நீயும் ஒரு நாள்
20-08-2016 நடராஜன் கல்பட்
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே