உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
“உன்னெ ஒண்ணு கேப்பேன். உண்மை சொல்லொணூம் நீ.”
“என்ன கேக்கப் போறே நீ இப்போ? கேளு கேளு. சொல்றேன் நான் எனக்குத் தெரிஞ்ச உண்மெயெ.”
“ஒன்னெ ஒண்ணுக்கும் ஒதவாதவன்னு மூலேலெ ஒக்காத்தி வெச்சிருக்கா ஒன் மருமவ. எதுக்கு நீ வீட்டுலெ நடக்குற ஒவ்வொரு விஷயத்திலெயும் ஒன் மூக்கெ நுழைக்கிறே?”
“என்ன செய்ய. கண்ணுகு எதுத்தாப்புளெ தப்பு நடந்தா அதெத் தட்டிக் கேக்காமெ எப்படி இருக்கிறதாம்?”
“நானுந்தான் இருக்கேன் இங்க. நான் உன்னெப் போலவா நடந்துக்கறேன், ஒண்ணொண்ணுலெயும் மூக்கெ நொழெச்சிக் கிட்டு?”
“என்ன செய்ய? எனக்கு ஆண்டவன் மூக்கெ கொஞ்சம் நீள்மாவே வெச்சிருக்கானே.”
“எனக்குந்தான் ஆண்டவன் மூக்கெ நீளமா வெச்சிருக்கான். நான் என்ன ஒன்னெ மாதிரியா வீட்டுலெ நடக்குற ஒவ்வொரு விஷயத்துலெயும் தலையிடறேன்?”
“ஏன் பேச மாட்டே? கண்ணாடிக்கு அந்தப் பக்கம் நீ ஒக்காந்து இருக்கே சொகமா. அதுனாலெ தான் நீ எதுலெயும் ஒன் மூக்கெ நொழைக்கறது இல்லே.”
(ஒருவர் படம் இணையத்தில் கண்டது. மற்றவர் படம் அதன் பிம்பம்.)
16-08-2016 நடராஜன் கல்பட்
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே