கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
பாத்தீங்களா அமெரிக்காவுலெ கிரிக்கெட்டு
கேட்டாரு அடுத்த ஊட்டு அண்ணாச்சி
கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
ஊரெங்கும் ஒரே பேச்சு
கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
பேசாட்டி நீ கிரிக்கெட்டு
குத்திப் புடுவாங்க முத்திரையெ
நீ சுத்த வெத்து வேட்டு
கோவாலு கேட்டாரு
கோவிந்த சாமி கிட்டெ
போவாமா நாமுந்தான்
பாத்திடவே கிரிக்கெட்டு
தலையாட்டி பொம்மெ போல
தலையாட்டி சொன்னாரு
கோவிந்த சாமி ஆமாம் ஆமாம்
பாக்கோணும் நாமுந்தான் கிரிக்கெட்டு
போயி நின்னாங்க ரெண்டு பேரும்
தொலைக் காட்சி பொட்டி விக்குற கடெ முன்னே
ஓடி வந்தே வீசினான் பந்தெ ஒருத்தன்
ஓங்கி அதெ அடிச்சான் மட்டையால இன்னொருத்தன்
ஓடியே போயி அதெத் தடுக்கப் பாத்தான் மூணாவது ஆளு
பாக்கப் புடிக்காதோ பிறத்தியாரு சந்தோசத்தெ அவனாலெ
ஒசரப் போன பந்தெ
ஓடிப் போயி புடிக்க இன்னொருத்தன்
ஒசரத் தூக்கினான்
ஒத்த வெரலெ வெள்ளெக் கோட்டுக் காரன்
கேட்டாரு கோவிந்த சாமி கேள்வி ஒண்ணு
கோவாலு அண்ணங் கிட்டெ
அண்ணே அண்ணே அவசரமா வந்திடிச்சா
அந்த ஆளுக்கு ஒண்ணுக்குன்னே
பக்கத்துலெ நின்னிருந்தவங்க
பலமா சிரிக்க இதெக் கேட்டு
மெல்ல நடந்தாங்க வீட்டெப் பாத்து
கோவாலும் கோவிந்த சாமியுந்தான்
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே