சும்மாயிரு
சும்மாயிரு நீ
சொருக்கமே காண்பாய்
சொல்கிறார் பெரியவர் ஒருவர்
அம்மா இருந்த போதே
சும்மா இருந்த தில்லை நான்
மனையாள் வந்த பின் முடியுமா அது
காலையில் எழுந்ததும்
காப்பி போட வேண்டும்
தந்திடல் வேண்டுமதை படுக்கையில் அவளுக்கு
வந்திடுமாம் அப்போது தான் சுறு சுறுப்பு
வென்னீர் போட்டே
தண்ணீர் கலந்ததனுடன்
மிதமான சூட்டில்
குளியலறையில் வைத்திட வேண்டும்
அவள் குளித்தது வரு முன்னே
நறுக்கிடல் வேண்டும் அன்றைய காய் கறி
நான் குளிக்கு முன்னே
துவைத்திடல் வேண்டும் அன்றைய
துணி மூட்டை
துவைத்தால் மட்டும் போதுமா
உலர்த்துவது யார் அவை
அதுவும் நானே
பல முறை உலுக்கிய பின்
மெல்ல எழுந்திருப்பான் செல்லப் பிள்ளை
பள்ளிக் கவனை தயார்
செய்திடல் வேண்டும்
அலுவலகம் சென்று திரும்பும் போதே
அள்ளி வர வேண்டும்
அடுத்த நாள் சமையலுக்குக் காய் கறி
உடலுக்கு நல்லதாம் அன்று வந்த காய்
சும்மா இருப்பதாமே சும்மா
அம்மா ஆகாலது என்னால்
காட்டினேன் எழுதியே இதை
என் பிழை திருத்துனரிடம்
கேட்கிறாள் அவள் கேள்வி
எனக்கல்லவா பொருந்தும் இவை அனைத்தும்
பொய் ஏன் சொல்கிறீர் கூசாமல் என்று
07-09-2016 நடராஜன் கல்பட்
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே