திரைக்கதம்ப​ம்: திரை குறுக்கெழு​த்துப் புதிர் - 19 விடைகள்

14 views
Skip to first unread message

ராமராவ்

unread,
Mar 5, 2015, 5:51:15 AM3/5/15
to vaarthai_...@googlegroups.com, kurukkum...@googlegroups.com

வணக்கம் நண்பர்களே,

திரை குறுக்கெழுத்துப் புதிர் -  19 க்கு பல நண்பர்கள்  சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள்.  விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

1.   பவளமணி பிரகாசம்     

2.   ராமச்சந்திரன் வைத்தியநாதன்         

3.   நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்

4.  முத்து சுப்ரமண்யம்

5.   K.R.சந்தானம் 

6.   ராமையா நாராயணன்  

7.   பாலாஜி

8.   மாதவ் மூர்த்தி 

9.   நாகமணி ஆனந்தம்    

10.  சாந்தி நாராயணன்

11.  பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்      

12.  தமிழ்       

13.  ஸ்ரீதரன் துரைவேலு  

14.  சௌதாமினி சுப்பிரமணியம்         

15.   சுரேஷ் பாபு

            

விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

வழக்கமாய் விடைகள் அனுப்பும் பல நண்பர்கள்  நினைவூட்டியபின்னும் ஏனோ விடைகளை அனுப்பவில்லை. அதிக நண்பர்கள் பங்கேற்று விடைகளை அனுப்பினால் நான் மிகவும் மகிழ்வேன்.

சில நண்பர்கள் திரை குறுக்கெழுத்துப் புதிர் பற்றிய தங்கள் கருத்துக்களையும், எந்தெந்த குறிப்புகள் மிகவும் பிடித்திருந்தன என்பதையும் எழுதியனுப்பியிருந்தார்கள். அவர்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் வெளியிட்டிருக்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் நன்றி. 
எனக்கு மிகவும் பிடித்த குறிப்புகள் :
6. தழும்பு சுரண்டி எடுத்தவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி (4) 

5. நன்கு கடித்து குதறி குத்துவிட்டான் கூத்தாடி (4) 

10. பிறந்த வீட்டில் தலையணை இன்றி இருக்க ஆசை (3) 



விடைகளில் சந்தேகம் இருந்தாலோ அல்லது  விடைகள் திரைப்படங்களின் தலைப்புகளாக உள்ளனவா என்று சரிபார்க்க வேண்டுமென்றாலோ    http://www.inbaminge.com/t/   சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்குமாறு சொல்லியிருந்தேன். அல்லது google ல் சென்றும் சரிபார்க்கலாம்.  சந்தேகம் எழுகையில், கண்டிப்பாக சரிபார்த்தால், தவறான விடைகளை அனுப்புவதை தவிர்க்கலாம்.   

விடைகளும் விளக்கங்களும்:

குறுக்காக:

1. ஆண் வாரிசு உண்டு என்று உள்ளங்கையில் காட்டும் மீன்வடிவக் கோடு (5) - மச்சரேகை 
     மீன்வடிவக் கோடு = மச்சரேகை ( ஆண் வாரிசு உண்டு என காட்டுவது)

4. முதலில் தோன்றி நடுவில் பாழான நண்பா! (2) - தோழா 
    தோ (முதலில் தோன்றிய) + ழா (நடுவில் பாழான) = தோழா (நண்பா)
 
6. தழும்பு சுரண்டி எடுத்தவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி (4) - எத்தன் 
    எடுத்தவன் - வடு (தழும்பு) = எத்தன் (ஏமாற்றுப் பேர்வழி)

7. சக்கையின்றி சவடால் அடிக்க துள்ளுவது கொடுஞ்செயல் (4) - அடாவடி 
     சவடால் + அடிக்க - சக்கல் (சக்கை) = வடா அடி = அடாவடி (கொடுஞ்செயல்)

9. ஆயுதம் இன்றி கிருஸ்தவ ஆலயத்து அன்னை வணங்கும் தாய்ப்பசு? (5) - மாதாகோமாதா 
     மாதாகோவில் (கிருஸ்தவ ஆலயம்) - வில் (ஆயுதம் = மாதாகோ + மாதா (அன்னை) = மாதாகோமாதா (தாய்ப்பசு)
  
12. நேர்மையுள்ள காசு? (4) = நாணயம் 
       நாணயம் = நேர்மை = காசு

14. உட்கார வந்தவன் கடைசியில் சாகமாட்டான் (4) - அமரன் 
       அமர (உட்கார) + ன் (கடைசியில் வந்தவன்) = அமரன் (சாகாதவன்)

16. விலாங்கு மீன் படை? (2) - சேனா 
       சேனா = படை = விலாங்கு மீன்

17. பாலைவனத்தில் பொய்த்தோற்றம்? (3,2) - கானல் நீர் 
      கானல் நீர் ( பொய்த்தோற்றம்)

நெடுக்காக:


2. சுயமரியாதை இழந்து கலங்கி சன்மானம் தந்த மாமன் சந்திரன் (5) - சந்தமாமா 
     சன்மானம் +தந்த - தன்மானம் (சுயமரியாதை) = சந்த + மாமா (மாமன்) = சந்தமாமா (சந்திரன்)
 
3. முதலும் முடிவுமாய் கையேந்தி நின்ற குற்றவாளி (2) - கைதி 
    கையேந்தி = (முதல் = கை; முடிவு = தி) = கைதி (குற்றவாளி)

4. இரண்டாவதாக கட்டிய பொன்வளை உள்ளே வெடிமருந்துச்சுருள் (3) - தோட்டா 
    இரண்டாவதாக கட்டிய = ட் + தோடா (பொன்வளை) = தோட்டா (வெடிமருந்துச்சுருள்)
   
5. நன்கு கடித்து குதறி குத்துவிட்டான் கூத்தாடி (4) - நடிகன் 
    நன்கு + கடித்து - குத்து = நன் கடி = நடிகன் (கூத்தாடி)
 
7. மகளிர் விளையாட்டை முடிக்காத தாய் (3) - அம்மா 
    அம்மானை (மகளிர் விளையாட்டு) - னை (முடிக்காத) =  அம்மா 
   
8. மத்தியில் நாங்கள் திரும்பிய எங்கள் தேசம் (4) - நம்நாடு 
    நடு (மத்தி)  + ம்நா [திரும்பிய நாம் (நாங்கள்)] = நம்நாடு 
  
10. பிறந்த வீட்டில் தலையணை இன்றி இருக்க ஆசை (3) - தாகம் 
      தாயகம் (பிறந்த வீடு) - ய (தலை ணை) = தாகம் =  ஆசை 

11. காமராஜ் மரணத்தால் அரைகுறையாய் கட்டப்பட்ட மாளிகை (5) - தாஜ்மகால் 
      காமஜ் தால் (அரைகுறையாய்) = தாஜ்மகால் 

13. முதியவனாய் விட்டுவிட்டு கலக்கத்தில் ஓடும் ஆறு (3) - யமுனா 
      முதினாய் (விட்டுவிட்டு) = முயனா = யமுனா 

15. எங்குமே காணாத பெண்ணின் பெயர் (2) - மேகா
       எங்குமே காணாத  
   
திரை குறுக்கெழுத்துப் புதிர் – 20 மார்ச்  மாதம் ந்தேதி (நாளை) வெளியாகும்.
நன்றியுடன்,

ராமராவ்

Reply all
Reply to author
Forward
0 new messages